புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
44 Posts - 41%
heezulia
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
5 Posts - 5%
prajai
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
3 Posts - 3%
Raji@123
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
2 Posts - 2%
Barushree
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
21 Posts - 5%
prajai
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேசிப் பயனில்லை... Poll_c10பேசிப் பயனில்லை... Poll_m10பேசிப் பயனில்லை... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசிப் பயனில்லை...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 28, 2013 8:26 am

ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் (என்சிடிசி) ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் தொடர்ந்து பேசிவருகிறார். மும்பைத் தாக்குதல் நடந்த நாள் முதல்இதைத்தான் மத்திய உள்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
-
தீவிரவாதத் தடுப்பு தேசிய மையம் அமைக்கும்போது, மாநிலக் காவல்துறைக்கு எந்தவித அறிவிப்போ, அனுமதியோ இல்லாமல், இந்த அமைப்பு செயல்படும், சிலரை கைதுசெய்யும் என்கின்ற நடைமுறைகள் மாநில உரிமைகளில் தலையிடுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மத்திய அரசு உடனடியாக மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களது அச்சத்தைப் போக்கியிருக்க வேண்டும். மாநில உரிமைகளில் தலையிடாத வகையில், மாநிலக் காவல்துறையையும் தங்களுடன்சேர்த்துக்கொண்டு செயல்படுவது குறித்தும் உறுதி அளித்திருந்தால், இந்தத் தீவிரவாதத் தடுப்பு தேசிய மையம் உடனடியாக அமலுக்கு வந்திருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பேசப்படும் ஒன்றாக இருந்திருக்காது. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால்தான் இன்று மீண்டும் இதைப் பேச வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளது.
-
தீவிரவாதத் தடுப்பு தேசிய மையம் அவசியம் என்பது ஒருபுறம் இருக்க, மத்திய உளவுத் துறையில் இதற்கான ஆட்கள் பற்றாக்குறை பெரும் இடையூறாக இருக்கிறது என்பது இன்னொரு நெருடலான விவகாரம்.
ஆண்டுதோறும் வெறும் 600 பேர் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். இவர்களும், ஏறக்குறைய ஓய்வுபெறும் அலுவலர், ஊழியர்களின் இடங்களைப் பூர்த்தி செய்பவராகவே இருக்கின்றனர். கடந்த ஐந்துஆண்டுகளில் மத்திய உளவுத் துறையின் மனிதஆற்றல் 5 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது.
-
குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் இவர்களால் புலனாய்வுகளை முழுமையாகச் செய்ய முடியவில்லை. உளவு பார்க்க முடிவதில்லை. கிடைக்கும் துப்புகளைச் சரிபார்க்கவும், உறுதிப்படுத்தவும்கூட மனிதஆற்றல் போதவில்லை. குறிப்பாக கணினி மூலம் பரிமாறப்படும் ரகசியங்களைப் பிரித்துப் படித்துப் புரிந்துகொள்ளும் வல்லுநர்களும் குறைவாக இருக்கிறார்கள். உளவுத் துறை இவ்வாறு செயல்பட்டுக்கொண்டிருந்தால் தீவிரவாதத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைப்பது எப்படி?
-
அப்சல் குரு தூக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் முக்கிய இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று, ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்புக்கு முன்பாக, பிப்ரவரி 16-ஆம் தேதியே தகவல் கிடைக்கிறது. அதன் பிறகு பிப்ரவரி 18, 19 தேதிகளிலும் தகவல் கிடைக்கிறது. இதில் சில ஊர்கள் மட்டுமே பட்டியலிடப்படுகிறது. குறிப்பாக எந்த ஊர் என்பது குறித்தத் தகவல் உளவுத் துறைக்குக் கிடைக்கவில்லை.
-
மும்பை, பெங்களூர், ஹைதராபாத், புதுதில்லி என்று நகரங்களைப் பட்டியலிட்டு, பொதுவான தகவல்களை மட்டுமே மாநில அரசுக்குச் சொல்லி எச்சரித்துவிட்டு, மாநில அரசு இந்த குண்டுவெடிப்பைத் தடுக்கத்தவறிவிட்டது என்று குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இந்தத் தாக்குதலை நடத்தக்கூடிய அமைப்பு எது என்றுகூட ஊகிக்க முடியாத நிலையில்தான் நமது உளவுத் துறை இருந்துள்ளது.
ஹைதராபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திலும்கூட, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலத்திலேயே மத்தியப் புலனாய்வு அமைப்புக்கும், மாநிலக் காவல்துறைக்கும் இருந்த இடைவெளி அப்பட்டமாகத் தெரிந்தது.
இத்தகைய நிலை அமெரிக்காவில் இல்லை என்பதையும், ஆகவேதான் அங்கேஇரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு வேறு எந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களும் நடக்கவில்லை என்பதையும் மீண்டும் ஒருமுறை மத்திய அரசு எண்ணிப்பார்க்க வேண்டும்.
-
மத்திய உளவுத் துறைக்கு உடனடித் தேவை, உலக அளவிலான தொடர்புகள், தேவையான மனிதஆற்றல், தகவல்களைப் பெறுவதற்கான தாராள நிதிஒதுக்கீடு ஆகியவைதான். மாநிலக் காவல்துறையினரையும் இணைத்துக்கொண்டு, மாநில உரிமைகளையும் மதித்துச் செயல்பட்டால், அதிக துப்புகள் கிடைக்கவும், தீவிரவாதத் தாக்குதலைத் தடுக்கவும் முடியும்.
இந்திய உளவுத் துறையில், ஆள்பற்றாக்குறையுடன், நமது உளவுத்துறையினரும் மற்றவர்களுக்கு விலை போகாதபடி கண்காணிப்பதும்கூட மிகமிக அவசியம்.
கடந்த ஆண்டு, உளவுத்துறையின் ஒரு பிரிவான "ரா' அமைப்பில் பணியாற்றி ஓய்வுபெற்ற அமர் பூஷண் எழுதிய "எஸ்கேப் டு நோவேர்' என்ற புதினம், உளவுத் துறையில் உள்ள அரசியல் தலையீடு, பதவிஉயர்வில் முறைகேடு, பயிற்சிக்காக வெளிநாடு அனுப்புவதில் பாரபட்சம், வெளிநாடுகளுக்கு நம் தகவலைத் தருகிற"கோடாரிக்காம்பு'களின் நடவடிக்கை, துப்பு சொல்பவர்களைக் கவரவும் ஊக்கப்படுத்தவும் செலவிடுவதற்காக, கணக்கு காட்ட அவசியமில்லாதபடி கொடுக்கப்படும் பணம் எவ்வாறு, உளவுத் துறை அதிகாரிகளின் உல்லாசச் செலவுக்குப் போகிறது என்பதையெல்லாம்கூட இந்தப் புதினம் அம்பலப்படுத்தியது.
-
இந்தக் கதையில் இடம்பெறும் உண்மையான கதாபாத்திரங்கள் யார் என்பது பற்றி ஊடகங்களில் விவாதம்கூட நடந்தது. ஆனால் விரைவிலேயே மறக்கப்பட்டுவிட்டது.
உளவுத் துறையை மேம்படுத்தாமல், குண்டுவெடிப்புகளைத் தடுத்து நிறுத்துவது இயலாது. நினைப்பிருந்தால் போதுமா? முனைப்பு இல்லையே, என் செய்ய?
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக