புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கில்லாப் பயணம்! I_vote_lcapஇலக்கில்லாப் பயணம்! I_voting_barஇலக்கில்லாப் பயணம்! I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
இலக்கில்லாப் பயணம்! I_vote_lcapஇலக்கில்லாப் பயணம்! I_voting_barஇலக்கில்லாப் பயணம்! I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
இலக்கில்லாப் பயணம்! I_vote_lcapஇலக்கில்லாப் பயணம்! I_voting_barஇலக்கில்லாப் பயணம்! I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இலக்கில்லாப் பயணம்! I_vote_lcapஇலக்கில்லாப் பயணம்! I_voting_barஇலக்கில்லாப் பயணம்! I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இலக்கில்லாப் பயணம்! I_vote_lcapஇலக்கில்லாப் பயணம்! I_voting_barஇலக்கில்லாப் பயணம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கில்லாப் பயணம்! I_vote_lcapஇலக்கில்லாப் பயணம்! I_voting_barஇலக்கில்லாப் பயணம்! I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
இலக்கில்லாப் பயணம்! I_vote_lcapஇலக்கில்லாப் பயணம்! I_voting_barஇலக்கில்லாப் பயணம்! I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
இலக்கில்லாப் பயணம்! I_vote_lcapஇலக்கில்லாப் பயணம்! I_voting_barஇலக்கில்லாப் பயணம்! I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இலக்கில்லாப் பயணம்! I_vote_lcapஇலக்கில்லாப் பயணம்! I_voting_barஇலக்கில்லாப் பயணம்! I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இலக்கில்லாப் பயணம்! I_vote_lcapஇலக்கில்லாப் பயணம்! I_voting_barஇலக்கில்லாப் பயணம்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கில்லாப் பயணம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 27, 2013 9:42 am

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் ஒருவரின் பட்ஜெட் என்பதுதான் பவன் குமார் பன்சல் தாக்கல் செய்திருக்கும் ரயில்வே பட்ஜெட்டின் தனிச்சிறப்பு. அதனால்தானோ என்னவோ, ஊடக ஊகங்களுக்கு மாறாக, எந்தவிதக் கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை. முன்பதிவு மற்றும் பயணத்தை ரத்துசெய்தல் போன்ற சேவைக் கட்டணங்கள் உயரும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
சரக்குக் கட்டணத்தில் நீர்ம எரிவாயு (எல்பிஜி) மற்றும் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கான கட்டணத்தில் 5.8 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தக் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டீசல் விலையை அதிகமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளதால், பதிலடியாக இந்தக் கட்டண உயர்வை அவர்களுக்கு மட்டும் உயர்த்தியிருப்பதில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - காரைக்குடி, சென்னை - பழனி, கோவை - மன்னார்குடி, காரைக்குடி - திண்டுக்கல், காரைக்குடி - மதுரை, சென்னை - காரைக்குடி விரைவு ரயில் உள்ளிட்ட 14 புதிய ரயில்கள் கூடுதலாகக் கிடைத்திருக்கின்றன. காரைக்குடிக்குக் கிடைத்திருக்கும் முக்கியத்துவத்துக்குக் காரணம் அது சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இருப்பதாலோ என்னவோ!
சென்னை - பெங்களூர் இடையே"டபுள் டெக்கர்' ரயில் சேவை கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, இன்னும் நடைமுறைக்கு வரவில்லை; சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, ஆவடி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு 18 சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு இந்த ஆண்டும் அமலுக்கு வரவில்லை; பாலக்காட்டில் இருந்து கோவை வழியாக ஈரோட்டுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட முக்கியத் தட மின்சார ரயில் பற்றிய பேச்சே இல்லை; திருநெல்வேலி- தாதர் (மும்பை) இடையே கோவாவழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு, அறிவிப்பாகவே தொடர்கிறது; மதுரை - காச்சிகுடா( ஹைதராபாத்) இடையே திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, காட்பாடி, சித்தூர் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்னும் இயக்கப்படவில்லை; டேராடூன் - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு வழியாக மதுரை வரை இயக்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை; விழுப்புரம் - காட்பாடி இடையே தினமும் மூன்று ஜோடி பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று முந்தையதொரு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை; சென்னை - திண்டுக்கல் இரட்டைப்பாதை திட்டம் போதிய நிதி இல்லாமல் கிடப்பில் உள்ளது; நிறைவேற்றப்படாமல் இத்தனை அறிவிப்புகள் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில்தான் புதிதாக 14 ரயில்கள் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவை எப்போது நிறைவேறுமோ, இவை எப்போது ஓடத் தொடங்குமோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
ரயில்வே பட்ஜெட்டில் பாராட்டக்கூடியது, இணையதளத்தில் முன்பதிவு செய்வோரின் சிக்கலை மனதில்கொண்டு, அதற்கான மாற்றங்களைச் செய்ய முன்வந்திருப்பது. தற்போதையரயில் முன்பதிவுத் திறன் ஒரு நிமிடத்துக்கு 2,000 டிக்கெட் வழங்குதல், 40,000 பேர் தகவல்பெறுதல் என்பதாக இருக்கிறது. இணைய தளத்தில் முன்பதிவு செய்யும் பொதுமக்களுக்கு இந்த இணையமுகவரியில் நுழைவதே கடினமாக இருக்கும் சூழல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரே நேரத்தில் இந்தியா முழுவதிலும் பலரும் இந்த இணையமுகவரிக்குள் புக முயல்வதால் பயணிகள் சலிப்புகொள்ளத் தொடங்கிய நேரத்தில், கணினித்திறன் உயர்த்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு நிமிடத்தில்7,200 டிக்கெட் வழங்குதல், 1,20,000 பேர் தகவல் பெறுதல்சாத்தியமாகும். இது வரவேற்கவேண்டிய அம்சங்களில் ஒன்று.
அதேபோன்று, குறிப்பிட்ட சிலரயில்களில் மட்டுமாகிலும், அடுத்து வரும் ரயில் நிலையம் எதுவென்ற அறிவிப்பும், எந்த நடைமேடைக்கு ரயில் செல்லப் போகிறது என்ற அறிவிப்பும் மின்பலகையில் ஒளிரும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் இரவுப் பயணம் செய்யும் பயணிகள் எந்த நிலையத்தில் ரயில் நிற்கிறது என்பது தெரியாமல் தவிக்கும் நிலைமை மாறும். நல்லதொரு வளர்ச்சி இது.
இந்தியாவில் 31,846 ரயில் கடவுச்சாலைகள் (லெவல் கிராசிங்) உள்ளன. 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 10,927 ரயில் கடவுச்சாலைகளுக்கு பாலம் அல்லது சுரங்கச் சாலை அமைக்கப்படும் என்றாலும் மத்திய அரசு சாலை நிதியத்திலிருந்து வழங்கும் தொகை ஆண்டுக்கு ரூ.1,100 கோடி மட்டுமே என்பது மிகவும் குறைவு என்று அமைச்சர் குறிப்பிட்டிருப்பது நியாயமானது. ரயில்கடவுச் சாலையைப் பயன்படுத்துவோர் வாகனஓட்டிகள்தான். அவர்களதுபயன்பாட்டுக்கு ரயில்வே செலவிட வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. இந்தத் தொகையை மத்திய அரசு உயர்த்தித் தர வேண்டியது அவசியம்.
பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 5.2% அதிகரித்துக்கொண்டே இருப்பதும், குறைந்த கட்டணத்தில் சேவை அளிப்பதாலும், டீசல் விலை மற்றும் மின்கட்டண உயர்வாலும் ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ரயில்வே அரசு நிறுவனம். மக்களுக்குச் சேவை ஆற்றவே இருக்கிறது. சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கவும், அதன் வருவாயைப் பெருக்குவதன் மூலம் மட்டுமே ரயில்வே தனதுமக்கள்சேவையால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய முடியும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் ரயில்வே பட்ஜெட்டில் இல்லை.
2012-13 நிதியாண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட சரக்கு இலக்கு 1,025 மில்லியன் டன்.ஆனால், இதனை தொழில்மந்த நிலையைக் கருதி 1,007 மில்லியன் டன்னாகக் குறைத்துக் கொண்டிருக்கிறது ரயில்வே. இதன் மூலம் ரயில்வேக்கு கிடைக்கக்கூடிய வருவாய் ரூ.85,976 கோடிமட்டுமே. இலக்கைவிட ரூ. 3,363 கோடி குறைந்துவிடுகிறது. எப்படி ஈடுகட்டப் போகிறார்கள் என்பது விளக்கப்படவில்லை.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 27, 2013 9:47 am

சாலை வழியாக தினசரி பார்சல்சர்வீஸ் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துகொண்டிருக்கிறது. சரக்கு ரயிலை வணிக ரீதியில்வெற்றிகரமாக நடத்தவும், அதைத் தனிப்பிரிவாக்கித் திறமையையும் லாபத்தையும் உறுதிப்படுத்தவும் இந்த ரயில்வே பட்ஜெட்டும் தவறிவிட்டது.
தேர்தலுக்கு முன்னால் தாக்கல் செய்யப்படும் எல்லா பட்ஜெட்டுகளையும்போல, பிரச்னைகளுக்குத் தீர்வே காணாமல், கைதட்டல் பெறுவதற்காகவும், யாரையும் கோபப்படுத்தாமல் இருப்பதற்காகவும் தயாரிக்கப்பட்டிருக்கும் ரயில்வே பட்ஜெட் இது!
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக