புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_m10நாளும் ஒரு தகவல் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு தகவல்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 21, 2013 9:07 pm

First topic message reminder :

நாளும் ஒரு தகவல் - Page 3 542410_139383786221154_1303990847_n

காரூன்

மூஸா
அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும்
செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது.

நிச்சயமாக,
காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது
அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக்
கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு
கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்:
“நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு)
ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

“மேலும்,
அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்;
எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து
விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை
செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ்
குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).

(அதற்கு
அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான்
கொடுக்கப்பட்டிருக்கிறேன்!”. இவனுக்கு முன் இவனை விட மிக்க
வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து
வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ்
அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள்
செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட
மாட்டார்கள்.

அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன்
தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர்
விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்பட்டதைப் போன்று
நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று
கூறினார்கள்.

கல்வி ஞானம் பெற்றவர்களே “உங்களுக்கென்ன கேடு! ஈமான்
கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட
மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய
மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே, நாம் காரூனையும் அவன்
வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி
செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக்
கொள்ளவும் முடியவில்லை.

முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை
விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான்
நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்;
அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்)
அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய
மாட்டார்கள்” என்று கூறினார்கள். அல்குர்ஆன் 28:76-82

கெய்ரோவிலிருந்து 150 கிலோமீட்டர் தென்மேற்க்கில் கஸர காரூன் என்ற இடத்தில் தான் அவனுடைய ஆலயம் உள்ளது.

காரூனின் ஆலயம்

காரூனின் கிணறு

காரூனின் ஏரி என இப்பொழுதும் அழைக்கபடுகின்ற ஏரி.

காரூனும் அவனுடைய சுற்றத்தார்களும் புதைந்துபோன இடம்.

நன்றி முகநூல்.

நாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Tநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Oநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Aநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Eநாளும் ஒரு தகவல் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 14, 2013 12:06 am

பெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம்

"நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள் பார்வையை கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும் அன்றி, தங்கள் தேகத்தில் வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர. தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்." (திருக்குர்ஆன் 24:31)

மேலே உள்ள இந்த கட்டளை ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கொடுக்கக்கூடிய கண்ணியம் அல்ல, மாறாக பெண்ணினத்திற்கே அல்லாஹ் வழங்கிய கண்ணியம் ஆகும்.

ஏனென்றால் இறைவன் மனித இனத்தை படைத்து, அதிலும் பெண்ணினத்திற்கு மட்டும் ஹிஜாப் என்னும் ஆடை முறையையும் குறிப்பிட்டு சொல்வதனால் இதனை இறைவன் பெண்களுக்கு வழங்கிய கண்ணியம் என்றே பெண் சமுதாயம் எண்ண வேண்டும்.

ஆனால் அவ்வாறு எண்ணி பெருமை பட வேண்டிய சமுதாயம் அதையே தனக்கு வேலி என்றும் தன்னை அடிமைப் படுத்துகிறது என்றும், தன் சுதந்திரத்திற்கு தடையாக உள்ளது என்றும் எண்ணி தன் இறைவன் தங்களுக்கு அளித்த கண்ணியத்தை தாங்களே பாழாக்கி சிறுமைப்பட்டுக் கொள்வதையும் பார்க்கின்றோம்.

சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் அவரது ஆதரவாளர்களும் 'பர்தா' பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது, பிரான்ஸ் கலாச்சாரத்திற்கு வேறுபடுகிறது என்று பர்தாவுக்கு எதிரான விவாதத்தில் ஈடுபட்டு சர்சைக்குள்ளாயினர்.

பிரான்சின் கலாச்சாரத்திற்கு வேறுபடுகிறது என்று வருத்தப்பட்டு புலம்பியவர்களின் கலாச்சாரத்தை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால்.....

யார் யாருடனும் பேசலாம், பழகலாம், உறவு வைத்துக் கொள்ளலாம், உறவை முறிக்கலாம். அவர்கள் தங்கள் மேலாடையையும் கீழாடையையும் குறைத்துக் கொள்வது தான் தங்கள் கலாச்சாரம் என்று எண்ணி பெருமை பேசி தங்கள் கற்பையும், வாழ்வையும் சீரழித்து வாழ்க்கையையும் சீரழித்து இருளில் வாழ்கின்றனர்.

இரவையே பகலாக்கக் கூடிய வெளிச்சத்தில் ஹோட்டல்களில் (டிஸ்கொதேக்) ஆடிப்பாடி திரியக் கூடிய அனைத்து மங்கைகளும் உண்மையில் வாழ்வது இருளில் தான்.

இப்படி பெருமை பட்ட(?) கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியத்தை விமர்சிப்பதற்கு எள்ளளவும் ஏன் நுனியளவும் கூட அருகதை கிடையாது.

இந்த கலாச்சாரத்தை தான் மேற்கத்திய கலாச்சாரம், சமுதாய முன்னேற்றம், பெண்களின் சுதந்திரம் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

National Domestic Violence Survey - தனது ஆய்வில் அமெரிக்காவில் 1 வருடத்தில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் 1 நாளில் மட்டும் 3 பெண்கள் தங்கள் காதலன் / கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள்(?) 1970 களில் போராடிப் பெற்ற அனைத்து பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே போராட்டம், ஆர்ப்பாட்டம், எதுவுமின்றி பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

அதை ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக பல அல்ல ஒரு உதாரணம், ஒரு பெண்ணின் உயிர்த் தியாகம். இந்த உயிர்த் தியாகம் மேற்கத்திய வர்க்கத்திற்கு ஒரு கசையடியாக விழுந்துள்ளதை பத்திரிகைகள் படம் போட்டு காட்டியது.

ஜெர்மனியில் வாழ்ந்து வந்த தம்பதிகள் உக்காஸ் (பொறியாளர்), செர்பினி (மருந்தாளர் துறையில் பட்டப் படிப்பு முடித்தவர்). இவர்களுக்கு 3 வயதான முஸ்தபா என்ற மகனும் உண்டு.

2008 ஆம் ஆண்டு செர்பினி தன் மகன் முஸ்தபாவுடன் சிறுவர் பூங்காவுக்கு சென்று அங்கு நீந்துவதற்கு அலெக்ஸ் என்ற 28 வயது இளைஞரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அலெக்ஸ் செர்பினியைப் பார்த்து தீவிரவாதி, விபச்சாரி, என்று தூற்றியுள்ளான். செர்பினி இஸ்லாமிய முறையில் ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணம்.

தன்னையும் தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற செர்பினி வழக்காடு மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஜூலை 1 ம் தேதி விசாரணைக்கு வந்தது.

வழக்கில் அலெக்ஸ் 780 யூரோ பணத்தை அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது நீதி மன்றம். உடனே அலெக்ஸ் திடீரெனப் பாய்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி மூன்று மாத கர்பிணியான செர்பினியின் வயிற்றில் 18 முறை குத்தினான். நீதிமன்றத்தின் நடுவே இந்த கோரச் சம்பவம் நடந்தேறியது.

அலெஸை சுட்டுத் தள்ள வேண்டிய போலீசாரோ காப்பாற்ற வந்த உக்காஸ் மீது துப்பாகியால் சுட்டனர். உயிருக்கு போராடிய உக்காஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அப்பாவித் தாயான செர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றிலிருந்த 3 மாதக் கருவும் உயிர் துறந்தது. 3 வயது சிறுவன் முஸ்தபாவிற்கு தன் கண் முன்னேயே தன்னுடைய தாய் உயிர் துறப்பதை காணும் அவலம் ஏற்பட்டது.

மறவா அல் செர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6 ம் தேதி அவரது சொந்த ஊரான எகிப்தின் அலெஸ்ஸான்டிரியா நகரில் நடைபெற்றது.

ஹிஜாபிற்காக ஷஹீதான செர்பினி போராட வேண்டும் என்ற குணம் படைத்தவர்.

இறைவன் பெண்ணினத்திற்கு அளித்த சலுகையோ, உரிமையோ அல்ல இந்த ஹிஜாப், மாறாக இது ஒரு கண்ணியம்.

அந்த கண்ணியத்தை பெண்ணினம் பேண வேண்டும், அதை உணர வேண்டும். அது மட்டுமல்ல ஹிஜாபிற்காக செர்பினி போன்ற ஒரு பெண் அல்ல பல பெண்கள் போராடிக் கொண்டும் அதன் மூலம் இரு உலகிலும் வெற்றிப் பெற்றுக் கொண்டும் தான் உள்ளனர். இந்த போராட்டம் இனி வரும் காலங்களிலும் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு சமுதாயமாக நம் சமுதாயத்தை மாற்றுவோம். நாமும் மாறுவோம். வெற்றி பெறுவோம்.

அல்லாஹ் வழங்கிய கண்ணியத்தை பேணி காப்போம்.

உம்மு ஷஹீதா ஆலிமா
முஸ்லிம் பெண்கள்

நாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Tநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Oநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Aநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Eநாளும் ஒரு தகவல் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 14, 2013 11:30 am

இஸ்லாம் அனைத்திலுமே கவனம் செலுத்தியுள்ளது.

நல்ல கட்டுரை.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 14, 2013 12:15 pm

நல்ல பகிர்வு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 14, 2013 2:42 pm

றினா wrote:இஸ்லாம் அனைத்திலுமே கவனம் செலுத்தியுள்ளது.

நல்ல கட்டுரை.

மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி

நாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Tநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Oநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Aநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Eநாளும் ஒரு தகவல் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Mar 14, 2013 2:43 pm

mbalasaravanan wrote:நல்ல பகிர்வு

கருத்திற்கு நன்றி அண்ணா

நாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Tநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Oநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Aநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Eநாளும் ஒரு தகவல் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 16, 2013 12:03 am

விரிவடையும் பிரபஞ்சம்

“மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்” (51:47)

நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.

நம் விழிகளில் வியப்பை தேக்கி வைக்கும் இந்த அழகிய விண்மீன் கூட்டங்கள் எந்தவித ஒழுங்கமைப்பும் , கட்டுப்கோப்பும் இன்றி வானில் சிதறிக் கிடப்பதில்லை. அவை கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, கீழ்படிந்து இயங்கி வருகின்றன.

எல்லையில்லாமல் அகண்டு விரிந்துக் கிடக்கும் இந்த அண்டவெளி வெற்றிடத்தில், நட்சத்திரங்கள் ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றன. சிறிய, பெரிய குழுக்கள் பலவற்றை உள்ளடக்கி இருக்கும் இந்த விண்மீன் குழுக்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு தொடர்புக் கொண்டவை. ஒன்று மற்றொன்றை தன்பால் ஈர்த்துக் கொண்டும், மற்றவற்றால் ஈர்க்கப்பட்டும், இணங்கி இணைந்து இயங்குகின்றன.

“………the total number of stars in the universe is probably something like the total number of grains of sand on all the seashores of the world. Such is the littleness of our home in space when measured up against the total substance of the universe.” “உலகில் உள்ள எல்லா கடற்கரைகளிலும் எவ்வளவு மணற் துகள்கள் நிறைந்து உள்ளனவோ, அதைப் போன்றதொரு தொகை கொண்டதாகவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் யாவும் திகழ்கின்றன.

இப்பேரண்டத்தில் பொதிந்துக் கிடக்கும் பொருட்கள் அனைத்துடனும் நாம் நமது புவி எனும் வீட்டை கொஞ்சம் அளந்து பார்ப்போமெனில், அது இந்த வின்வெளியில் ஓர் அற்பத் தூசாகவே காட்சி தரும்.” ஒரு Galaxy யில் மட்டும் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதாம். நாம் ஆகாயத்தில் காணும் விண்மீன் கூட்டத்தை பால்வீதி Milky Way என்கின்றனர். இந்த 10,000 கோடி நட்சத்திரங்களில் மின்னி மிளிரும் ஒரு நட்சத்திரம் தான் நமது சூரியன். Miky Way, Galaxy அடுத்துள்ள கேலக்ஸிக்கு பெயர் அண்ரோமிடா கேலக்ஸி என்று பெயர். இந்த கேலக்ஸியில் மட்டும் 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன.

ஒரு விண்மீன் குழுவில் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளது போல் இந்த பேரண்டத்தில் 10,000 கோடி Galaxy கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நட்சத்திரக் கூட்டங்கள் ஒன்றை விட்டு மற்றொன்று எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் ஓடுகின்றன.
سَنُرِيْهِمْ اَيَتِنَافِىالآْفَاقِ وَفيِْ اَنْفُسِهمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقَُّ اَوَلَمْ يَكْفِ بِربِّكَ اَنَّهُ عَلَىَكُلِّ شَيْءٍ شَهِيْدٌ “நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை பிரபஞ்சத்தின் பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்கு காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?” (41:53)
வியப்பும் மலைப்பும் தோன்ற விரிந்து காணப்படும் இந்த அற்புதமான பேரண்டத்தை அளித்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதை இன்றைய அறிவியல் தெளிவாக்குகின்றன.

Thanks To Dr. ஜாக்கிர் நாயக்

நாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Tநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Oநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Aநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Eநாளும் ஒரு தகவல் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 16, 2013 12:04 am

“திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள் ஒரு கப்பல்” ”பூமியே!உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்” எனவும் கூறப்பட்டது .(திருக்குர்ஆன் 11:44.) இதில் சான்று உள்ளது.அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை” (திருக்குர்ஆன்26:121.).“
அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்.இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்” (திருக்குர்ஆன் 29:15.)” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம்.அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “.

(திருக்குர்ஆன்54:13-15.)
இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது.இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலைதான் ஜூதி மலை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருமலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளது.1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம் திகதி யன்று கிழக்குத் துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது.இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன. 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன்1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது. ‘அக்கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்திருக்கிறோம் ; சிந்திப்பவர் உண்டா?’என்று கூறி, சமீபத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்ட இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்துள்ளது .திருக்குர்ஆன்,“இறைவனின் வேதம்”என்பதற்கு இது சான்றாகவுள்ளது.இந்த சம்பவங்கள் மூலம் இஸ்லாம் எவ்வாறான மார்க்கம் என்றும் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம் என்றும் அறிய முடிகிறது.

நாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Tநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Oநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Aநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Eநாளும் ஒரு தகவல் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 16, 2013 1:52 pm

நல்ல பகிர்வு மகிழ்ச்சி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:03 am

செல்வந்தர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் செலவழிக்காமல், நன்றி செலுத்தாமல் மென்மேலும் செல்வத்தை சேர்த்துக் கொண்டிருப்பதையும், ஏழைகள், இறைவன் தனக்கு கொடுத்ததை கொண்டு சந்தோசமடையாமல், பொறுமை அற்றவர்களாக இருப்பதையும் காண முடிகிறது. இரண்டு நிலைகளிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்களிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.

அனைவரும் இறைவனின் அருட்கொடைகளை பெற்றுக் கொள்கிறோம். ஆனால் அதிகமானோர், தேவையுடையவர்களைப்பற்றி கவலை கொள்ளாமல், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சந்தோசப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர். தன்னிடம் பணம் உள்ளது என்ற அகந்தையின் காரணமாக, பிறரை இகழ்ச்சியுடன் பார்க்கின்றனர். இறைவன் இதுபோன்ற மதிகெட்ட முஃமின்களை இந்த வசனத்திலே எச்சரிக்கை செய்கிறான்.

“ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்” (அல்-குர்ஆன் 63:9,10)

அதே போல, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில், தொடர்ந்து ஈகை குணத்துக்கு ஆதரவாகவும் கஞ்சத்தனத்துக்கு எதிராகவும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்கள் என்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.

தினமும் காலையில் வேலைகளுக்குச் செல்பவர்களுக்கு ஒரு விஷயத்தை நபி அவர்கள் ஞாபகப்படுத்துகிறார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
“மக்கள் காலையில் வேலைகளுக்குச் செல்லும் போது, இரண்டு மலக்குகள் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கி, பெருந்தன்மையுடன் செலவழிப்பவர்களுக்கு அதிகமான ஊதியத்தையும், கஞ்சத்தனம் புரிபவர்களுக்கு நஷ்டத்தையும் தந்தருள்வாயாக என்றும் பிரார்த்திப்பார்கள்”

“ஹதீஸ் குத்ஸியில் இறைவன் என் அடியார்களே தேவையுடையவர்களுக்கு செலவு செய்யுங்கள் நான் உங்களுக்கு அதிகமாக தருவதற்கு தகுதியுடையவன்” என்று சொல்வதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். மேலும் நபியவர்கள், அவ்வாறு செலவழிக்கும்போது நியாயமான முறையில் சம்பாதித்ததில் இருந்து செலவழிப்பதயும் வலியுறுத்தி உள்ளார்கள்.

மேலும், செல்வந்தர்கள், ஏழைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு அழகிய முன்மாதிரியாக உள்ளார்கள். நபியவர்கள் செல்வந்தராக இருந்தபோது இறைவனுக்கு நன்றி கூறுபவராகவரும், ஏழையாக துன்பத்தில் இருந்தபோது பொறுமையையும் கையாண்டார்கள். நபியவர்கள் இளமையாக இருந்தபோது, தன்னுடைய செல்வம் மிகுந்த மனைவியின் வாணிக வியாபாரம் மூலம் செல்வத்தை ஈட்டினார்கள். பிறகு போர்களின்போது அதிகமான் வெற்றிபொருள் கிடைத்தது. ஆனால், இவை அனைத்தையும் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தேவையுடையவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். அவர்களுடைய மனைவிகளும் நபியவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றியே வாழ்ந்தார்கள்.

செல்வந்தராக இருந்த அதே நேரத்தில், தன்னுடைய வீட்டில் பல நாட்கள் உணவு சமைக்கப்படாத நிலையில் பேரீத்தம் பழத்தையும் தண்ணீரையும் குடித்து பொறுமையை கடைபிடித்தார்கள். கடைசி காலத்தில்,தன்னிடமுள்ள ஒரு தங்கககாசை பற்றி அதிக கவலை அடைந்தார்கள். அதை உரியவர்களிடம் சேர்க்கும் வரை அவர்கள் சஞ்சலப்பட்டார்கள். இந்த காசு என்னிடம் இருக்கும் நிலையில் நான் மரணித்தால் என் இறைவனை எப்படி நான் சந்திப்பேன் என்று கூறினார்கள்.

செல்வமிக்கவர்களை ஈகை குணம் உடையரகளாகவும், குறைவாக உள்ளவர்களை பொருமையை மேற்கள்பவர்களாகவும் இறைவன் ஆக்கி அருள்வானாக.

Jazzakallah - Tamilmuslim

நாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Tநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Oநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Aநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Eநாளும் ஒரு தகவல் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 18, 2013 12:04 am

1. இஸ்லாமிய மார்க்கம் – தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.

மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் – மாமிச உண்ணிகளான சிங்கம் – புலி – சிறுத்தை போன்ற விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம். அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு – மாடு – ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் – அமைதியானதும் – பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான நாங்கள் – அமைதியான பிராணிகளான – ஆடு – மாடு – ஒட்டகம் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் அமைதியை விரும்புகிறவர்களாக – இருக்கின்றோம்.

2. அருள் மறை குர்ஆனும் – நபிகளாரின் பொன்மொழியும் – கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது.

‘(நபியாகிய) அவர் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்..’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 07 – ஸுரத்துல் அஃராப் – 157வது வசனம்)

‘மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 59 – ஸுரத்துல் ஹஷ்ர் – 7வது வசனம்)

சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் – சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொள்ள – நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும்.

3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்தி:

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி – ஸஹீஹுல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸுனன் இப்னு மாஜா (ஹதீஸ் எண் – 3232 முதல் 3234 வரை) போன்ற ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.

அ. மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும் உடைய காட்டு விலங்குகளான – சிங்கம் புலி நாய் ஓநாய் போன்றவைகள்.
ஆ. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி பெருச்சாலி அணில் போன்றவைகள்
இ. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற பிராணிகள்
ஈ. கூரிய அலகுகளையும் – கால் நகங்களையும் உடைய கழுகு பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள் உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகள் ஆகும்.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

நாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Tநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Uநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Oநாளும் ஒரு தகவல் - Page 3 Hநாளும் ஒரு தகவல் - Page 3 Aநாளும் ஒரு தகவல் - Page 3 Mநாளும் ஒரு தகவல் - Page 3 Eநாளும் ஒரு தகவல் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக