ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்

+2
ராஜா
GOPIBRTE
6 posters

Go down

ஈகரை ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்

Post by GOPIBRTE Wed Feb 20, 2013 6:23 am

தனது உயிரை துச்சமாக மதித்து, ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் சுகந்தனின் சேவையைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வீரதீரச் செயல் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சித்திரை ஒன்றாம் தேதி அன்று, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே உள்ள காங்கயம் பாளையத்தில், வழக்கத்திற்கு மாறாக சற்றே ஆக்ரோஷத்துடன் காவிரியாறு ஓடிக்கொண்டிருந்தது. அன்று தமிழ்ப்புத்தாண்டு என்பதால், அந்த ஆற்றின் நடுவே உள்ள நட்டாத்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள கிராமப் பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்தது. அக்கோயிலுக்கு நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த கிருத்திகா, தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அவர் கோயிலுக்கு உள்ளே செல்வதற்கு முன் காவிரியாற்றில் இறங்கி கை, கால்களை கழுவ முனைந்தார். அவருடன் அவரது அம்மா பூங்கொடி, அவரது தங்கை ஷோபனா, அவரது தந்தை செந்தில் குமார் ஆகியோரும் ஆற்றில் இறங்கினர். ஆற்றுத் தண்ணீரில், கால் முட்டியளவு ஆழத்திற்குள் இறங்கிய கிருத்திகா, ஆற்றை நோக்கி அடுத்த அடி எடுத்து வைக்க, அந்த இடம் ஆழமானதாக இருக்கவே, கால் தவறி உள்ளே மூழ்க ஆரம்பித்தார்.

அக்கா தண்ணீரில் மூழ்குகிறாள் என்பதைக் கண்ட ஷோபனா ஆற்றில் இறங்க, அவரைத் தொடர்ந்து அவளது அம்மா பூங்கொடியும் கதறியபடி ஆற்றில் இறங்குகிறார். மக்கள் கூட்டம் ‘ஹே’ எனக் கூக்குரலிட, இருவரையும் தாவிப்பிடித்து ஆற்றின் கரையில் விட்டு விட்டு, தனது மூத்த மகளைப் பார்க்கிறார் செந்தில்குமார். அவரைக் காணோம். சுற்றியிருந்த மக்கள் கூட்டம் வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மகளைக் காப்பாற்ற செந்தில் குமார், ஆற்றில் குதித்தார். “ஐய்யய்யோ” என மக்கள் கூட்டம் கூச்சலிடுகிறது.

அவருக்கு முன், ஆற்றில் அம்பெனப் பாய்ந்தான் ஒரு சிறுவன். ஆற்று மணல் சரிவால், ஆழத்தில் சிக்கிக் கொண்ட அப்பெண்ணை, தேடிப்பிடித்து தண்ணீருக்கு மேலே தூக்கி வந்தான்.

ஆற்று மணலில் சிக்கிக்கொண்ட கிருத்திகாவிற்கு வயது 16. உயிரைத் துச்சமென மதித்து ஆற்றில் குதித்த சிறுவனின் பெயர் சுகந்தன். வயது 13.மொடக்குறிச்சி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 9-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இச்சம்பவம் குறித்து கிருத்திகாவிடம் கேட்டதற்கு, “கோயிலுக்கு எங்க குடும்பத்தோட போனேன். கை,கால் கழுவிட்டு கோயிலுக்கு உள்ளே போகலாம்னு ஆத்துல இறங்கினேன். கால் முட்டி அளவுக்கு ஆழம் இருந்துச்”. சரி, இன்னும் கொஞ்சம் உள்ளே போயி கழுவலாம்னு காலை எடுத்து வச்சேன். அது மிகவும் ஆழமாக இருந்தது எனக்குத் தெரியவில்லை. அங்கே இருந்த மணல் சரிந்து ஆழத்திற்குள் மூழ்கி விட்டேன். எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் ஆற்றிற்குள் மூழ்கியதும் மயக்கமடைந்து விட்டேன்” என்றார்.

இவரையடுத்து, இவரது அம்மா பூங்கொடி தொடர்ந்தார்: “என் மூத்த பொண்ணு தண்ணிக்குள்ள போனதும், என் சின்னப் பொண்ணு ‘ஐயோ...அக்கா!’ன்னு சொல்லிக்கிட்டே அவளும் ஆத்துக்குள்ள இறங்கிட்டா. நானும் ‘ ஐயோ... என் பொண்ணு தண்ணிக்குள்ள மூழ்கிடுச்சி. காப்பாத்துங்க, எம்புள்ளைய காப்பாத்துங்க’ன்னு கத்திக்கிட்டே ஆத்துக்குள்ள போனேன். ஊரே வேடிக்கை மட்டும்தான் பார்த்துச்”. யாரும் காப்பாத்த வரல” என்று திகைப்பு கலந்த குரலோடு சொல்லி நிறுத்தினார்.

அதைத்தொடர்ந்து அவரது தந்தை செந்தில் குமார் தொடர்ந்தார். “என் புள்ளைங்களுக்கும், என் மனைவிக்கும் நீச்சல் தெரியாதுங்க. எனக்கு ஓரளவுக்குதான் நீச்சல் தெரியும். பெரிய பொண்ணு தண்ணிக்குள்ள போனதுமே, என் சின்னப் பொண்ணும் என் சம்சாரமும் தண்ணிக்குள்ள தடதடன்னு இறங்கிட்டாங்க. அவங்கள காப்பாத்தி கரையேத்திட்டு, திரும்பிப் பார்க்கிறேன். என் பெரிய பொண்ணைக் காணோம். அவளும் மேலே வந்திருப்பான்னு பார்த்தேன். எம்புள்ளையக் காணோம். உடனே தண்ணிக்குள்ள குதிச்சுப் பார்த்தேன். எனக்கு முன்ன ஒரு பையன் குதிச்சு, எம்புள்ளைய மேலே தூக்கி வந்தான். நானும் அவனுமா சேர்ந்து கரைக்கு தூக்கியாந்தோம்.

அப்ப என் பிள்ளையோட கண்ணு நிலைகுத்திப் போச்சு. தண்ணி குடிச்சிருக்காளோன்னு வயித்த அழுத்திப் பார்த்தேன். தண்ணி ஏதும் குடிக்கல. மூச்சு ஏதும் இல்ல. அவ வாய்க்குள்ள என் வாயை வச்சு ஊதினேன். என் பொண்ணு அதன் பிறகு சற்று மூச்சு விட்டா. உடனே அங்க இருந்த கோயில் தர்மகர்த்தா ரெண்டு பேரும் அவங்க வண்டியில வச்சு, பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு கொண்டுட்டுப் போனாங்க. பின்னாடியே நாங்களும் போனோம். அங்கே கிருத்திகாவிற்கு முதலுதவி செய்து, அவளை காப்பாற்றிய மருத்துவர்கள், ‘ஆற்றில் மூழ்கிய ஐந்து நிமிடங்களுக்குள் உங்கள் மகளை வெளியே கொண்டு வந்து விட்டீர்கள். அதனால, பிழைக்க வைக்க முடிஞ்சது. இன்னும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால், உங்கள் மகளை நீங்க பார்த்திருக்க முடியாது’ என்றனர். அப்போதுதான் ‘எம்பொண்ணைக் காப்பாத்தின அந்தப் புள்ளை நீடூழி வாழ வேண்டும்’ என கண்ணீர்ப் பெருக்குடன் நினைத்தேன். அன்று மாலை, அந்தச் சிறுவனே எங்கள் வீடு தேடி வந்தான். வந்ததும் ‘அக்கா நல்லா இருக்காங்களா?’ என்று கேட்டான். ‘நல்லா இருக்காங்க... நீ யாரு தம்பி?’ என்று கேட்டேன். ‘நான்தான் அந்த அக்காவை தண்ணியிலருந்து மேல தூக்கி வந்தேன்’ என்றான். மனம் நெகிழ்ச்சியாயிடுச்சு. ‘தம்பி! நீ எம்பொண்ண தூக்கி வரல... காப்பாத்திக் கொடுத்திருக்கப்பா!’ என நன்றிப் பெருக்குடன் கூறினேன்” என்றார். “அந்தத் தம்பி மட்டும் இல்லன்னா, இன்னிக்கு எம் பொண்ணு இருந்திருக்க மாட்டா” என உணர்ச்சிப் பெருக்கோடு கூறினார் கிருத்திகாவின் தாய் பூங்கொடி.

சிறுவன் சுகந்தனின் வீர தீரச் செயல் குறித்து பள்ளி ஆசிரியர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து, வீர தீரச் செயலுக்கான தேசிய விருது பெற, சுகந்தன் தேர்வு செய்யப்பட்டு தில்லிக்கு வரவழைக்கப்பட்டான்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அவனுக்கு விருது வழங்கி கௌரவித்தார். குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது குறித்து ஊரிலும் பள்ளியிலும் ஒரே மகிழ்ச்சி வெள்ளம். தில்லி சென்று திரும்பிய சுகந்தன், ஊர் திரும்பிய அன்றே அவனிடம் தொடர்புகொண்டு பேசினோம். “நான், எங்க அப்பா, அம்மா, தங்கச்சி எல்லோரும் அன்னைக்கு கோயிலுக்கு வந்திருந்தோம். எங்க அப்பா, அம்மா, தங்கச்சி எல்லோரும் கோயிலுக்குப் போயிகிட்டிருந்தாங்க. நான் ஆத்துல இருக்கிற பாறையில நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு ஐயோ! என் மகளை காப்பாத்துங்கன்னு குரல் வந்துச்சு. பார்த்தா... ஒரு அக்கா ஆத்துத் தண்ணியில மூழ்கிக்கிட்டிருந்தாங்க. அடுத்த நிமிஷமே ஆத்துல குதிச்சிட்டேன். தண்ணிக்குள்ளே கண் விழிச்சுப் பார்த்தேன். அப்போ, அந்த அக்கா மயக்கமான நிலையில உள்ளே மூழ்கியபடி கிடந்தாங்க. தலைமுடியை பிடிச்”, தூக்கிக்கிட்டு மேலே வந்தேன். அந்த அக்காவோட அப்பா வந்தாரு. ரெண்டு பேரும் சேர்ந்து கரைக்குக் கொண்டு போனோம். அப்புறமா அந்த அக்கா வீட்டுக்குப் போனேன். அவங்க நல்லா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அப்புறம் என் வீட்டுக்கு போயிட்டேன்” என்றான்.

இவனது தந்தை ஈஸ்வரனிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, “எங்க ஊரு எம். வேலம்பாளையம்ங்க. அங்க இருந்து நட்டாத்தீஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்தோட வந்திருந்தோம்ங்க. அப்ப பார்த்து, எம்பையன் ஆத்துல நின்னுக்கிட்டிருந்தான். நாங்க கோயிலுக்கு சாமி கும்பிடப் போயிருந்தோம். அப்பத்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கு. ‘ஓர் உசிரக் காப்பாத்திருக்கியே... உன்னை என்ன சொல்லி பாராட்டறதுப்பா!’ என பிரமிச்சுப் போனேன். அவன் படிக்கிற பள்ளிக்கூடத்து வாத்தியார்கள் மூலமா, அவனை தேசிய விருதுக்குப் பரிந்துரை பண்ணினாங்க. ஜனாதிபதி கையால எம்பையன் விருது வாங்கனதைப் பார்த்துட்டு, கண்ணுல தண்ணி வந்துருச்சுங்க” என்றார்.

படித்து, என்னவாக விரும்புகிறாய் என்று ”கந்தனிடம் கேட்டதற்கு, “ நான் நல்லா படிச்சு, ஓர் ஆர்மி ஆபீஸரா வரணும்னு ஆசைப் படறேன்” என்று கூறினான்.

GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

Back to top Go down

ஈகரை Re: ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்

Post by ராஜா Wed Feb 20, 2013 10:51 am

சூப்பருங்க உன்னை போல இளம் தலைமுறை உருவாக வேண்டும் நமது இந்தியாவில் என்று மனம் ஏங்குகிறது தம்பி.

உன் எண்ணம்,ஆசை,கனவு எல்லாம் நிறைவேற ஆண்டவன் அருளும் தகுந்த நேரத்தில் பெரியவர்கள் தயவும் உனக்கு கிட்டும்,வாழ்த்துகள். நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்

Post by ஜாஹீதாபானு Wed Feb 20, 2013 12:19 pm

ஆர்மி ஆஃபிசராக வர வாழ்த்துகள் சுகந்தன் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்

Post by chinnavan Wed Feb 20, 2013 1:07 pm

அருமையான பையன் வாழ்த்துக்கள்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்

Post by Muthumohamed Wed Feb 20, 2013 1:22 pm

நல்ல கடமை உணர்ச்சியுள்ள மாணவன் மிக்க நன்றி அன்பு மலர்



 ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் M ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் U ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் T ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் H ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் U ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் M ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் O ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் H ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் A ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் M ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் E ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்

Post by DERAR BABU Wed Feb 20, 2013 3:55 pm

வாழ்க சுகந்தன் , வாழ்த்துக்கள் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஆற்றில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய மொடக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum