ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Empty பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள்

Post by மீனு Sun Oct 18, 2009 11:12 pm

First topic message reminder :

பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Windows-vista-internet-explorer-iconகம்ப்யூட்டர் பயன்பாட்டில் அன்றாடம் நாம் பயந்து கொண்டு தான் இருக்கிறோம். இன்டர்நெட் இணைப்பில் இருந்தால் நம்மை அறியாமலேயே ஏதாவது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் வந்துவிடுமோ என்ற அச்சம். ஏதாவது புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் அதனுடன் சேர்ந்து வரும் புரோகிராம் கம்ப்யூட்டரைக் கெடுத்துவிடுமோ என்ற பயம். இதற்காக இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் புதிய அப்ளிகேஷன் தொகுப்பு இல்லாமல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியுமா? முடியாது.

இருந்தாலும் இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எந்தவித அச்சமும் இன்றி செயல்படவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு சில டூல்ஸ் புரோகிராம்களை கம்ப்யூட்டரில் பதிந்து தொடர்ந்து சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட படி இருக்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

1. ஆன்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

2. ஆன்டி ஸ்பைவேர்: ஒன்று அல்லது இரண்டு ஆன்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆன்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.

3. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இது தரப்படுகிறது. மற்றவர்கள் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.

4. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆன்டி வைரஸ் புரோகிராமும்.

பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Internet_1
5. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது.

6. ரௌட்டர் இல்லாமல் பிராட்பேண்ட் கனெக்ஷன் வைத்துக் கொள்ளக் கூடாது. அது வயர்டு அல்லது வயர்லெஸ் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

7. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆன்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

8. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும். ஆட்டோ ரன் நிறுத்த எக்ஸ்பி சிஸ்டத்தில் கை வைக்க வேண்டும். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.

9. விண்டோஸ் இயக்கத்தின் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மேல் ஒரு கண் இருக்க வேண்டும்.

10. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்

11. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயலவில்லை என்றால் http://www.passpub.com/ என்ற தளத்தை அணுகவும்.

12. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

13. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

14. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் அதனை சிறிய அளவில் மாற்றிக் கொள்ளலாம்.
பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Internet-marketing

15. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.

16.பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

18. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

19. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள்.

20. ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.

21. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர்களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என எஸ் சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

22. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அது ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.

23. முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிகள் நம் வேலையைஇன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களையும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் ஆன்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்துவிடுவதால் அத்தொகுப்புகளை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

24. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும். இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ்தொகுப்பில் தரப்பட்டுள்ளன.
பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Ist2_5186446-website-internet-icon-spam-email
25. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

26. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.

27. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும்
10minutemail.com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் ஈ-மெயில் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

28. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக் கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.

29. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

30. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.


createSummaryAndThumb("summary3909027729572765064");


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Empty Re: பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள்

Post by ராஜா Mon Oct 19, 2009 10:52 pm

mathans wrote:Kraja29
ச்சே... எல்லோரும் சொல்லுராங்கலேன்னு நாமளும் ஒரு கருத்து சொல்லலாம்ன்னு பார்த்தா , விட மாட்டேன்குரான்களே ..


அப்படின்னா நீங்கள் என்ன கருத்து கந்த சாமியோ ???????

இதுக்கு தான் நான் வாய தொறக்குறது இல்லை ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Empty Re: பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள்

Post by mathans Mon Oct 19, 2009 11:05 pm

என்ன தலை கோபமா???
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Empty Re: பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள்

Post by மீனு Mon Oct 19, 2009 11:11 pm

mathans wrote:வயதில் அவர் அண்ணா தானே செல்லம்
கோபிப்பின்களோ என்றுதான் அவரை அழைத்தேன் இப்போ அது தேவை இல்லை
இப்போ நானே சொல்லுறேன் மீனு செல்லம் ஓகே

யாரை எல்லாம் ரொம்ப பிடிக்குமோ அவங்களை செல்லம்,குட்டி என்று குப்பிடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்
கண்டிப்பா இப்படி நான் ஆண்களை குப்பிட்டா நல்ல இருக்காது மீனு
ஆனா இப்படி பெண்கள் குப்பிடலாம் ஆண்களை.
ஆமா மீனு ரொம்ப பிடிச்சவன்களை நீங்கள் எப்படி அன்
பா

கூப்பிடுவிங்க???
குண்டா என்று அழைப்பேன் ..மதன்..என்ன டா குண்டா ....
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Empty Re: பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள்

Post by மீனு Mon Oct 19, 2009 11:12 pm

mathans wrote:Kraja29 சரி..... சரி போதும் வறுத்தது.. அப்புறம் தீஞ்சிட போகுது பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 677196


அது நீங்க சொல்லக் குடாது தலை!!!
மீனு செல்லம் தான் சொல்லணும் என்ன செல்லம் நான் சொல்லுறது சரிதானே!!!!!?????



ஒன்னும் புரியல


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Empty Re: பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள்

Post by மீனு Mon Oct 19, 2009 11:12 pm

நீங்க சொல்றது சரியே செல்ல குண்டா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Empty Re: பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள்

Post by mathans Tue Oct 20, 2009 3:55 am

ஐயோ!
மீனு செல்லம் நான் குண்டான்னு எனக்கு தெரியாது ஆனா நான் 74 KG. நீ செல்ல குண்டான்னு கூப்பிடுறாதா இருந்த கூப்பிடு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைடா.

நான் அடிக்கடி உனது நாடு வாறனான் அடுத்த முறை வரும் போது நேரில் பார்க்கும் போது தெரியும்தானே யார் குண்டுன்னு. அப்போ நீ குண்டா இருந்தா
செல்லக்குண்டம்மான்னு நான் கூப்பிடுறேன் சரியா???
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள் - Page 2 Empty Re: பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கு 30 ஆலோசனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum