ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

3 posters

Go down

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Empty பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

Post by சாமி Sat Feb 16, 2013 5:04 pm

இன்று சினிமாவில் “PUNCH DIALOGUE” என்பது மிகப்பிரபலமான விடயம். நிழல் திரையில்...மேடைகளில்...நமது நடிகர்கள் (மற்றும் அரசியல்வாதிகள்) விடும் “PUNCH DIALOGUE” உச்சகட்ட நகைச்சுவையாக இருக்கும். இதில் சீனியர் ஜூனியர் என்கிற வித்தியாசமே கிடையாது. சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு போட்டியே நமது கதாநாயக “பன்ச் பா(வ்)லா”க்கள்தான்! சரி அவர்களை விடுங்கள். நமக்கு பொழுது போக வேண்டாமா? அதற்கு இந்த “பன்ச் பாலா”க்கள்தான் சரி!

உண்மையான “PUNCH DIALOGUE” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை தூய தமிழில் ‘சொற்குறுதி’ என்று கூறுவார்கள். நமது தமிழ்ச் சமய அருளாளர்கள் தேவர்களையும், அறக்கடவுளையும் (எமதர்மன்) அவர்களது ஏவலாளிகளையும் ஏன் பரம்பொருள் சிவபெருமானிடமே “PUNCH DIALOGUE” பேசியுள்ளார்கள் தெரியுமா?

சொற்குறுதிக்கு அப்பர் எனச் சொல் என பழம்பாடல் ஒன்று உண்டு.
"வாக்குக் கருணகிரி வாதவூரர் கனிவில்
தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு
நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்
சொற்குறுதி அப்ப ரெனச் சொல்."

இந்த திரியில் நமது அருளாளர்களின் “PUNCH DIALOGUE” களை தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Empty Re: பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

Post by சாமி Sat Feb 16, 2013 5:06 pm

1) "கதிரவன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?"

எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், கதிரவன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?

எட்டாம் திருமுறை / மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / திருவெம்பாவை பாடல் 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

(தொடரும்)


Last edited by சாமி on Thu Apr 11, 2013 4:06 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Empty Re: பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

Post by ஆரூரன் Mon Feb 18, 2013 4:32 pm

சாமி wrote:"கதிரவன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?"

சூப்பர் பன்ச் மகிழ்ச்சி
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Empty Re: பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

Post by சாமி Thu Feb 21, 2013 10:58 am

2) வினை என்ன செய்யும் என்னை?

எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன ? தில்லைமாநகரிலே திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாததொர் அடிமைபூண்ட எனக்கு அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யவல்லன அல்ல .

ஐந்தாம் திருமுறை / அப்பர் அருளிய தேவாரம் / 001 கோயில் / பாடல் 01
அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.

(தொடரும்)


Last edited by சாமி on Thu Apr 11, 2013 4:05 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Empty Re: பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

Post by krishnaamma Fri Feb 22, 2013 2:28 pm

கந்தர் அலங்காரம்

நாள் என்செயும் வினைதான் என்செயும்,
எனை நாடிவந்த கோள் என்செயும்,
கொடுங்கூற்று என்செயும்,
குமரேசர் இருதாளும், சிலம்பும், சதங்கையும்,
தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும்,
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே?

இதையும் சொல்லலாம் தானே சாமி ? ரொம்ப நல்ல இருக்கும் உங்கள் திரி இல் குறுக்கிட்டுவிட்டேனா? புன்னகை தவறானால் மன்னியுங்கள் :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Empty Re: பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

Post by சாமி Mon Feb 25, 2013 11:36 am

krishnaamma wrote: நாள் என்செயும் வினைதான் என்செயும்,
எனை நாடிவந்த கோள் என்செயும், கொடுங்கூற்று என்செயும்
,


இதையும் சொல்லலாம் தானே சாமி ?

அருணகிரிநாதரின் வாக்குகள் எல்லாமே 'பஞ்ச்' தானே அம்மா!
பொருத்தமான பதில் அளித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்!
தொடருங்கள்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Empty Re: பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

Post by krishnaamma Mon Feb 25, 2013 1:19 pm

சாமி wrote:
krishnaamma wrote: நாள் என்செயும் வினைதான் என்செயும்,
எனை நாடிவந்த கோள் என்செயும், கொடுங்கூற்று என்செயும்
,


இதையும் சொல்லலாம் தானே சாமி ?

அருணகிரிநாதரின் வாக்குகள் எல்லாமே 'பஞ்ச்' தானே அம்மா!
பொருத்தமான பதில் அளித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்!
தொடருங்கள்.

நன்றி சாமி புன்னகை நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Empty Re: பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

Post by சாமி Thu Apr 11, 2013 4:04 pm

3) உனக்குத்தான் பழி வந்து சேரும்!

செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையுள் தூங்கானைமாடத்து உறையும் எம் புண்ணியனே! `ஐயோ` இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான் என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாவாமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலின் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகள் தோய்ந்த நீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.

பாடல்:
ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் புண்ணியனே.


நான்காம் திருமுறை / அப்பர் அருளிய தேவாரம் / 109 திருத்தூங்கானை மாடம் / பாடல் எண் 02
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Empty Re: பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

Post by சாமி Tue Apr 15, 2014 8:10 am

4) நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை. தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின்.

பாடல்:
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

ஆறாம் திருமுறை / அப்பர் அருளிய தேவாரம்
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி Empty Re: பன்ச் டயலாக் என்கிற சொற்குறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum