ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் உலகப் போர்

Go down

முதல் உலகப்  போர் Empty முதல் உலகப் போர்

Post by suran Fri Feb 15, 2013 7:47 am

முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப்பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன.
1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.
இரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலிலும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர் மூழ்கிக் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி, நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள் டாங்கிப் படைகளை அதிகமாகப் பயன்படுத்தின.
போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷியாவில், புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யூனிச அரசு உதயமாகியது. 1917ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இருந்து விலகிக் கொண்டது. இந்தப் போரில், ஜெர்மனி படைகள் விஷ வாயுவை பயன்படுத்தின.
போர்க்களத்திற்கு வரும் ஜெர்மனி வீரர்கள் முகமூடி அணிந்திருப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் குதிரை வண்டிகளில் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும்.
எதிரிப்படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். அவற்றிலிருந்து விஷ வாயு வெளியேறும். அதைச் சுவாசிக்கும் எதிரிப்படையினர் மயங்கி விழுந்து மரணம் அடைவார்கள்.
போரில் விஷப்புகையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. ஆனால் அதை மீறி ஜெர்மனி விஷப் புகையை பயன்படுத்தியது. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. முடிவில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஜெர்மனியை நோக்கி விரைந்தன.
இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். மக்களை அடக்க, ராணுவத்தை கெய்சர் ஏவினார். உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி படைகள், சொந்த மக்களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டது. நேச நாடுகளின் படைகள், ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11-ந்தேதி நுழைந்தன.
இந்தப் பெரும் படைகளின் தாக்குதலை, ஜெர்மனி படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடிதுறந்தார். ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். சேதம் 1,561 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் 2 கோடிப்பேர் மாண்டனர்.
யுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் இழந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919 ஜுன் 28ந் தேதி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது.
போரில் பங்கு கொண்ட நேச நாடுகளுக்கு ஜெர்மனி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று. ஜெர்மனியின் வளமான பகுதிகள் சிலவற்றை பிரான்ஸ் கைப்பற்றிக் கொண்டது. சிதறியது ஆஸ்திரியா நாடு, பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடாகும். போருக்குப்பிறகு, ஆஸ்திரியா நாடு துண்டு துண்டாகச் சிதறியது.
யூகோஸ்லேவியா, போலந்து, செக்கசு லோவக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாயின.
மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் மூளக்கூடாது என்று உலக நாடுகள் கருதின. அதற்காக "சர்வதேச சங்கம்" ஒன்று நிறுவப்பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன.
ஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா அச்சங்கத்தில் கடைசிவரை சேரவில்லை.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பலியான மக்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தொட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிரியா அதிபர் ப ஷர் அல்-அசாத் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் கடந்தஇரு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ராணுவத்தை ஏவி போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்க சிரியா அதிபர் முயன்று வருகிறார். போராட்டக்காரர்களும் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

இதனால், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கூட பரவலாக துப்பாக்கி சண்டை, பீரங்கி தாக்குதல் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இத்தாக்குதல்களில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்து இருக்கிறார்கள்.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போர் குறித்து கடந்த மாதம் கருத்து தெரிவித்த ஐ.நா. மனித உரிமை சபையின் தலைவர் நவநீதம் பிள்ளை, 'சிரியா போரில் இதுவரை 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாத நிலையில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையான விலையாக தங்களது உயிர்களை இழந்து வருவது பெருகியுள்ளது."
என்று பேசியுள்ளார்.
சொந்த நாட்டு மக்களை கொன்று குவிப்பதில் ராஜபக்சேக்கு அருகில் பசார் வந்து விடுவார்.முதல் உலகப்  போர் Xroa130129268
suran
suran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum