ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

Top posting users this week
ayyasamy ram
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
heezulia
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
mohamed nizamudeen
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாமே சுயதம்பட்டம்!

3 posters

Go down

ஈகரை வேண்டாமே சுயதம்பட்டம்!

Post by Powenraj Wed Feb 13, 2013 7:30 pm

மக்கள் வரிப்பணத்தில் போடும் திட்டங்களுக்கு கூட, தங்கள் பெயரை சூட்டிக்கொள்பவர்களைத் தான், இன்றைய உலகில் காண்கிறோம். ஆனால், அக்காலத்தில், தன் செலவில்செய்த தொண்டுக்கு, ஒரு சிவனடியாரின் பெயரை இட்டார் ஒரு அன்பர். அவர் தான் அப்பூதி அடிகள். தஞ்சாவூர் அருகிலுள்ள திங்களூரில் வசித்தவர் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் மீது அன்பு கொண்டவர். அவரை பார்த்ததில்லை என்றாலும், அவரது சிவபக்தியால் ஈர்க்கப்பட்டு, தன் பிள்ளைகளுக்கு கூட மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டியவர்.
-
ஒருசமயம், கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து, அதற்கு திருநாவுக்கரசர் பெயரைச் சூட்டியிருந்தார்.அவ்வழியாக, வெயிலில் களைத்து வந்த மக்கள், தண்ணீர் குடித்து, பந்தலடியில் இளைப்பாறிச் சென்றனர். அவ்வூரில் கைலாசநாதர் கோவில் உள்ளது.ஒருமுறை, திருநாவுக்கரசர்,அந்தத் தலத்தை வழிபடுவதற்காக வந்தார். தன் பெயரில் தண்ணீர் பந்தல், சத்திரங்கள் என இருந்ததைப் பார்த்தார். அப்பூதியடிகள் அவற்றை நிறுவியிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவரைக் காணச் சென்றார்.
-
வந்திருப்பது நாவுக்கரசர்எனத் தெரியாமலே, அப்பூதி அடிகள், அவரை வரவேற்றார். அவரிடம், "ஐயா... தொண்டு செய்யும் உங்கள் பெயரில் தண்ணீர் பந்தல், சத்திரம் அமைக்காமல், யாரோ ஒருவர் பெயரில் வைத்துள்ளீர்களே...ஏன்?' என்று கேட்டார்.
-
இதைக்கேட்டு அப்பூதி அடிகளுக்கு கோபம் வந்துவிட்டது. "பெரியவரே... நாவுக்கரசர் எவ்வளவு பெரிய அடியவர் தெரியுமா? கல்லைக் கட்டி கடலில் இறக்கியும் கூட மிதந்து வந்தவர் அவர்."நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்' என்று, எமனுக்கே சவால் விட்ட சிவப்பழம். அவரது அருமை தெரியாதவராக இருக்கிறீரே... நீங்கள் ஒரு அடியவர் என்பதால் இத்துடன் விட்டேன்...' என்றுஆவேசமாகப் பேசினார்.
-
நாவுக்கரசர் சிரித்தபடியே, "ஐயா... கோபம்வேண்டாம். தாங்கள் குறிப்பிட்ட நாவுக்கரசன் நான் தான்...' என்று பணிவோடு கூறினார். உடனே, நெடுஞ்சாண்கிடையாக காலில்விழுந்து, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார் அப்பூதி அடிகள்.
-
பின், தன் வீட்டில் சாப்பிடுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். நாவுக்கரசரும் சம்மதிக்கவே, அறுசுவை விருந்து தயாரானது. தன் மகன் மூத்த திருநாவுக்கரசுவை, தோட்டத்திற்கு சென்று, இலைஅறுத்து வருமாறு அனுப்பினார். அங்கே அவன் சென்றபோது, பாம்பு தீண்டி இறந்து போனான்.
-
இந்த தகவல், அப்பூதி அடிகளுக்கும், அவரது மனைவிக்கும் தெரிந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. துக்கத்தையும் மறைத்து, நாவுக்கரசருக்கு உணவு பரிமாற தயாராயினர். அப்போது நாவுக்கரசர்,"உங்கள் மூத்த மகன் எங்கே?'என்று கேட்டபோது, உண்மையைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார் அப்பூதி அடிகள்.நாவுக்கரசர் கலங்கி விட்டார். "இறந்த வீட்டில் விருந்தா? உங்கள் கருணைக்கு அளவில்லையா? கொண்டு வாருங்கள் சிறுவனின் உடலை! எல்லாரும்கைலாசநாதர் கோவிலுக்கு செல்வோம்...' என்றார்.
-
சிறுவனின் உடலுடன் எல்லாரும் அங்கு சென்றனர்.ஊரே கூடியிருந்தது."கைலாசநாதரே... தன்னலம் கருதாமல், பிறருக்காக அரும்பணிகள் செய்யும் ஒருவரை, இப்படி சோதிக்கலாமா? அதிலும், எனக்காக இலை கொண்டு வரச்சென்ற நேரத்தில், இப்படி நிகழச்செய்து விட்டாயே...' என்று கூறி, பதிகம் பாடினார். உறங்கி விழித்தது போல் எழுந்தான் மூத்த திருநாவுக்கரசு. ஊரேமகிழ்ந்தது. சில நாட்கள் அங்கு தங்கிய நாவுக்கரசர்,திருப்பழனம் எனும் தலத்துக்குச் சென்று இறைவனை பாடும்போது, அப்பூதி அடிகளின் சிறப்பையும் பாடினார்.
-
அப்பூதி அடிகளின் குருபூஜை, தை சதய நட்சத்திரத்தில் நடக்கும்.சிவாலயங்களில், நாயன்மார் சன்னிதியில் இவர் இருப்பார். சுய தம்பட்டமில்லாமல் தொண்டு செய்த அந்த அடியவருக்கு, அந்நாளில் பூஜை செய்வோம். சுயநலமற்ற தொண்டு செய்ய உறுதி எடுப்போம்.
-
***
தி. செல்லப்பா
வாரமலர்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: வேண்டாமே சுயதம்பட்டம்!

Post by ராஜா Wed Feb 13, 2013 7:34 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி , :வணக்கம்:

தஞ்சாவூர் அருகில் உள்ள திங்களூர் எங்கள் மாவட்டத்தில் உள்ள நவக்ரஹ கோவில்களில் இது சந்திரனுக்கு உரிய கோவில் அமைந்துள்ள இடம்.

அத்துடன் இந்த ஊரில் எவரையும் பாம்பு தீண்டாது என்றும் கேள்விபட்டுள்ளேன். நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: வேண்டாமே சுயதம்பட்டம்!

Post by அசுரன் Wed Feb 13, 2013 10:12 pm

அப்பூதி அடிகள் பற்றி சின்ன வயதில் தமிழ் பாடத்தில் படித்தது... மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: வேண்டாமே சுயதம்பட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum