புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றியாளன்


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Mon Feb 11, 2013 9:15 am

வெற்றியாளன்
(சிறுகதை)

ரயிலில் தன் எதிரில் அமர்ந்திருந்தவருடன் என் கணவர் பேசிக் கொண்டே வர நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தபடியே பயணித்துக் கொண்டிருந்தேன்.

அந்த எதிர் இருக்கை நபர் தான் எழுதிய ஒரு கவிதை நூலை எடுத்து என் கணவரிடம் தர கவிதைக்கும் தனக்கும் காத தூரம் என்பதை காட்டிக் கொள்ள விரும்பாத என் கணவர் அப்புத்தகத்தை நாசூக்காக என்னிடம் தள்ளினார். 'த பாரு கனகு…சாரு கவிதை நூலெல்லாம் வெளியிட்டிருக்கார்..”

புன்னகையுடன் வாங்கிப் புரட்ட ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க என் விழிகள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்தன. என்னை மாபெரும் பிரமிப்பில் ஆழ்த்தின அப்புத்தகத்திலிருந்த பல கவிதை வரிகள். அவைளை கவிதை வரிகள் என்று கூடச் சொல்லக் கூடாது… கனல் கங்குகள்..சாட்டைச் சுழற்றல்கள்.

'வாவ்…ரியலி கிரேட்…” என் மனம் என்னையும் மீறி அவரைப் பாராட்ட ஆரம்பித்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு,

'சார்…நீங்க பத்திரிக்கைகளெல்லாம் படிக்கற பழக்கமுண்டா?..”

அந்த நபர் கேட்க. என் கணவர் இட, வலமாயத் தலையாட்டினார்.

'மேடம்…நீங்க?”

'ம்…லெண்டிங் லைப்ரரில கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளுமே வாங்கிடறேன்”

'வான் மதி…படிக்கறீங்களா?”

'ம..ரெகுலரா படிச்சிட்டிருக்கேன்…ஏன் கேட்கறீங்க?”

'அதுல வர்ற 'தீக்கொழுந்தில் பனித்துளிகள்' தொடர்கதை?”

'தொடர்ந்து படிச்சிட்டிருக்கேன்…அற்புதமான கதை…ஆழமான பல நல்ல கருத்துக்களை ரொம்ப யதார்த்தமா…படு இயல்பா சொல்லுற விதம்…எப்படா அடுத்த வாரம் வரும்ன்னு ஏங்க வைக்கும்”

'சரி…அதை எழுதறது யார்ன்னு தொpயுமா?”

'தெரியுமே…அனலேந்தின்னு ஒருத்தர்…”

'அந்த அனலேந்தி வேற யாருமில்லை….அடியேன்தான்…கதைக்கா அந்தப் புனை பெயர்..”

'நீங்க…கவிதை மட்டும்தானே…?”

'கவிதை மட்டுமல்ல…கதையும் எழுதுவேன்…என்னோட பல நாவல்கள் மாநில அளவுல…தேசிய அளவுல பரிசுகளை வாங்கியிருக்கே…”

எனக்கு அந்த நபர் மீது அபரிமிதமான மரியாதை ஏற்பட்டது. 'ஆஹா…எவ்வளவு ஒரு அற்புதமான படைப்பாளி…”

என் மனமாற்றத்தை என் முக மாற்றத்தில் கண்டுபிடித்து விட்ட என் கணவர் சோகத்தில் ஆழ்ந்தார். 'ஒருவேளை நான் கொஞ்சம் ஓவரா ரீஆக்ட் பண்ணிட்டேனோ?”

அந்தச் சூழ்நிலையை மாற்ற விரும்பிய என் கணவர் 'சார் சென்னைக்கு என்ன விஷயமா?” கேட்க,

'அது….வேறொன்றுமில்லை…'சன்-டிவி”ல…வர்ற பொங்கலுக்கு ஒளிபரப்ப சிறப்புப் பட்டிமன்றம் ஒண்ணு ஷூட் பண்றாங்க…அதுக்குத்தான் போய்ட்டிருக்கேன்…”

'பார்வையாளராகவா?” அப்பாவித்தனமாய்க் கேட்டார் என் கணவர்.

மெலிதாய் முறுவலித்த அந்த நபர் 'நடுவரே நான்தான்…”

'என்னது நடுவரா?…ஓ…நீங்க பேச்சாளரும் கூடவா?”

'நல்லாக் கேட்டீங்க போங்க….போன தீபாவளியன்னைக்குக்கு 'முல்லை டிவி”லே பட்டிமன்றம் பார்க்கலையா நீங்க?”

எனக்கு லேசாய் ஞாபகம் வர 'கரெக்ட்…கரெக்ட்…நான் பார்த்தேன்..இப்ப ஞாபகம் வருது உங்க முகம்…”

'முழு பட்டிமன்றமும் கேட்டீங்களா?…எப்படியிருந்தது?”

'அருமையாயிருந்தது சார்…வழக்கமா இந்த மாதிரி பட்டிமன்றங்கள்ல உப்புச் சப்பில்லாத ஒரு அபத்தமான தலைப்பை எடுத்துக்கிட்டு…சம்மந்தா சம்மந்தமில்லாம….கோணங்கித்தனமான நகைச்சுவைகளைக் கொட்டி ஒரு வித எரிச்சலைத்தான் மூட்டுவாங்க…ஆனா…நீங்க ஒரு நல்ல முக்கியமான சமுதாயப் பிரச்சினையை எடுத்துக்கிட்டு…அதை அக்கு வேறு ஆணி வேறாப் பிரிச்சு…பார்க்கிறவங்களுக்கு ஒரு விழிப்பணர்வையே ஏற்படுத்தினீங்க சார்…”

என் கணவர் முகம் போன போக்கு எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த, இனி மேல் பேசினால் வம்பு என்பதை உணர்ந்து கொண்டு வாயை இறுகச் சாத்திக் கொண்டேன்.

ஆனாலும் என் சிந்தனை ஓட்டத்தை என்னால தடுத்து நிறுத்த முழயவில்லை. சிந்திந்து சிந்தித்து..இறுதியில் என் உள் மனம அந்த நபரை சிகரத்தின் உச்சியில் கொண்டு போய் அமர வைத்து அழகு பார்த்தது. கவிஞர்…கதாசிரியர்…பட்டிமன்றப் பேச்சாளர்…என எல்லாத் துறையிலும் வெற்றிக் கொடி நாட்ட எப்படி இவரால் மட்டும் முடியுது?…இதெல்லாம் வாங்கி வந்த வரமா?...இல்லை…வழக்கத்தில்…வாசிப்பில்…உழைப்பில்…ஊக்கத்தில் வந்து சேர்ந்த திறமைகளா?…பொறந்தா இந்த மாதிரி ஒரு வெற்றியாளனா….சாதனையாளனா….பொறக்கணும்…ஹூம்…இவரை புருஷனாய்ப் பெற்றவள் குடுத்து வைத்தவள்…பின்னே.. ஒரு அறிவு ஜீவியோட சம்சாரம்ன்னா சாதாரணமா?”

ஒரு நீண்ட அமைதிக்குப் பின் என் கணவர; அந்த நபரிடம் கேட்டார் 'சாரோட குடும்பத்தைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே…”

அதற்கு பதிலேதும் சொல்லாமல் எங்கோ பார்த்தபடி அமர;ந்திருந்த அந்த நபரை வலிய இழுத்து மீண்டும் கேட்டார் 'சொல்லுங்க சார் ..உங்க சம்சாரம் எப்படி…உங்க எழுத்துக்களை..ரசிப்பவரா?….விமர்சிப்பவரா….?”

'வேண்டாங்க…என் குடும்பத்தைப் பத்தியோ…என் மனைவியைப் பத்தியோ பேசாதீங்க….ப்ளீஸ்” அந்த நபர் ஆணிததரமாய்ச் சொல்ல,

என் கணவர் முகம் பிரகாசமானது.

'அதெப்படி…உங்களைப் பத்தி விலாவாரியாச் சொன்னீங்க…கேட்டோம்…அது மாதிரி உங்க மனைவி மக்களைப் பத்திச் சொல்ல வேண்டாமா?” என் கணவர் விடாப்பிடியாய்க் கேட்டார்.

'எனக்கு மனைவி…மகன்…மகள்…எல்லோருமே இருக்காங்க….ஆனா…” அவர் தயங்கி நிறுத்த,

'ஆனா….?”

'அவங்க யாரும் என் கூட இல்லை…”

'ஏன்?” என் கணவர் தொடர்ந்து குடைந்தது எனக்கே ஒரு மாதிரி இங்கிதமின்மையாய்த் தெரிந்தது.

'அது…அது ஏன்னா….அவங்களுக்கும் எனக்கு ஒத்து வரலை…மனைவியை டைவர்ஸ் பண்ணிட்டேன்…”

'மகனும் மகளும் அம்மாகூடவே போயிட்டாங்க..அப்படித்தானே?”

'ஆமாம்….அதுகளுக்கும் என் கூட இருக்கப் பிடிக்கலை…”

மேலும் ஏதோ கேட்க என் கணவர் வாயெடுக்க,

'போதும் சார்…இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க” சட்டென்று அவர் அந்தப் பேச்சைத் துண்டித்தார்.

ஒரு கவிஞா;…ஒரு எழுத்தாளர்…ஒரு மேடைப் பேச்சாளர்.என எல்லாத்திலேயும் வெற்றியடைஞ்ச இந்த மனுஷனால தன் மனைவிக்கு ஒரு நல்ல…வேண்டாம்…அட்லீஸ்ட் சராசரிக் கணவனா…குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா..வெற்றியடைய முடியாதப்ப..அந்த மாபெரும் வெற்றிகளினால் என்ன பிரயோஜனம்?

என் மனத்தில் உயரத்தில் இருந்த அந்த நபர் ஒரு விநாடியில் சடாரென விழுந்து அதலபாதாளத்திற்குச் சென்று விட அவர் முகத்தை ஊடுருவிப் பார்த்தேன். ஒரு வித ஆணவமும்…அகம்பாவமும் நிரந்தரமாகவே ஒட்டிக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது. 'அடப் போடா…நீ இலக்கியத்துல எத்தனை உயரத்திற்குப் போனாலும…எத்தனையோ வெற்றிகளையும் விருதுகளையும் வாங்கிக குவிச்சாலும்…ஆழ்ந்து பார்த்தால் அவையெல்லாம் தோல்விகளே!…ஏன்னா…நீ வாழ்க்கைல தோற்றவன்…வாழ்க்கையையே தொலைத்தவன்…ஒரு சாதாரணன்…சாமான்யன் ஜெயிக்கற யதார்த்தங்களிலேயே நீ தோற்றுப் போகும் போது உன் தலைக்கு சூட்டப்படற எல்லா மகுடங்களுமே வெறும் மண்சட்டிகளே…”

என் கணவரை நோக்கினேன் அவர் என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். புருவத்தை உயர்த்தி 'என்ன?” கேட்டேன்.

'ஒண்ணுமில்லை…” என்றார்.

எனக்கு ஒரு நல்ல கணவனா…என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தகப்பனா…என்னோட பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மருமகனா இருக்கற இவரை விடவா இந்த இலக்கியவாதி…'ஏங்க…சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்கதாங்க உண்மையான வெற்றியாளர்.” மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

(முற்றும்)






பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 11, 2013 12:14 pm

நல்ல கதை ...

நீ வாழ்க்கைல தோற்றவன்…வாழ்க்கையையே தொலைத்தவன்…ஒரு சாதாரணன்…சாமான்யன் ஜெயிக்கற யதார்த்தங்களிலேயே நீ தோற்றுப் போகும் போது உன் தலைக்கு சூட்டப்படற எல்லா மகுடங்களுமே வெறும் மண்சட்டிகளே…”

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 11, 2013 12:14 pm

நல்ல கதை ...

நீ வாழ்க்கைல தோற்றவன்…வாழ்க்கையையே தொலைத்தவன்…ஒரு சாதாரணன்…சாமான்யன் ஜெயிக்கற யதார்த்தங்களிலேயே நீ தோற்றுப் போகும் போது உன் தலைக்கு சூட்டப்படற எல்லா மகுடங்களுமே வெறும் மண்சட்டிகளே…”

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Mon Feb 11, 2013 12:27 pm

அருமையிருக்கு சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 11, 2013 12:59 pm

என்னதான் பல விருதுகளும் பட்டங்களும் வாங்கினாலும் குடும்பம் இல்லை என்றால் என்ன செய்வது




வெற்றியாளன் Mவெற்றியாளன் Uவெற்றியாளன் Tவெற்றியாளன் Hவெற்றியாளன் Uவெற்றியாளன் Mவெற்றியாளன் Oவெற்றியாளன் Hவெற்றியாளன் Aவெற்றியாளன் Mவெற்றியாளன் Eவெற்றியாளன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 11, 2013 6:42 pm

என் மனமாற்றத்தை என் முக மாற்றத்தில் கண்டுபிடித்து விட்ட என் கணவர் சோகத்தில் ஆழ்ந்தார். 'ஒருவேளை நான் கொஞ்சம் ஓவரா ரீஆக்ட் பண்ணிட்டேனோ?”

என் மனமாற்றத்தை என் முக மாற்றத்தில் கண்டுபிடித்து விட்ட என் கணவர் சோகத்தில் ஆழ்ந்தார். 'ஒருவேளை நான் கொஞ்சம் ஓவரா ரீஆக்ட் பண்ணிட்டேனோ?”
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எனக்கு ஒரு நல்ல கணவனா…என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தகப்பனா…என்னோட பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மருமகனா இருக்கற இவரை விடவா இந்த இலக்கியவாதி…'ஏங்க…சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்கதாங்க உண்மையான வெற்றியாளர்.” மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.
சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 11, 2013 9:30 pm

யார் வெற்றியாளன் என்று தெளிவாக சொல்லிட்டிங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 11, 2013 10:09 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தோற்றதுக்கு அவரின் ஆணவம் அகம்பாவம் தான் காரணமா இருக்கனுமா?

வேறு காரணங்களுக்காக குடும்பம் இவரை உதறிவிட்டு போயிருந்தாலும் அவரின் மன நிலை அந்த தோல்வியை எதிர்கொள்ள இறுகி இருக்கலாமே!!!

பார்வைகள் பலவிதம்.....




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக