புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_m10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10 
366 Posts - 49%
heezulia
அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_m10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_m10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_m10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_m10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10 
25 Posts - 3%
prajai
அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_m10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_m10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_m10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_m10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_m10அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிப்படை பாலிசிகள்..அவசியம் எடுங்க !


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 8:22 am

வாகன விபத்தில் பலி, புயலால் கட்டடம் இடிந்து விழுந்தது, டெங்கு காய்ச்சல் பீதி... இப்படி பல செய்திகளைப் படித்துவிட்டு, அடடா என வருத்தம் கொள்கிறோம். இந்த இடர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், இந்த இடர்களால் ஏற்படும் பொருளாதார பாதிப்பிலிருந்து நம்மை, நம் குடும்பத்தைப் பாதுகாக்க முடியும். ஒவ்வொரு வகையான இடர்களிலிருந்தும் நம்மை காக்க ஒவ்வொரு தனிநபரும் அதற்கேற்ற பிரத்யேக இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக்கொள்வது அவசியம். என்னென்ன பாலிசிகளை எடுத்துக்கொள்வது என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
-
தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி..!
விபத்துகளால் ஏற்படும் இறப்பு, நிரந்தர ஊனம் (கை, கால், கண் பார்வை இழப்பு) தற்காலிக ஊனம் (கை, கால், எலும்பு முறிவு), ஊனம் ஏற்படும் நாட்களில் நமக்குவரும் வருமானம் / சம்பள இழப்பு ஆகியவற்றுக்கு இந்த பாலிசியில் கவரேஜ் கிடைக்கும். விபத்து என்றால் வாகன விபத்து மட்டுமல்ல, நடந்து செல்லும்போது ஏற்படும் விபத்து, மாடிப்படி, குளியல் அறை போன்றவற்றில் வழுக்கி விழுதல், தீக்காயம், நாய் கடித்தல், பாம்பு கடித்தல், ரயில், சாலை மற்றும் விமான விபத்துபோன்ற அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
-
ஆண், பெண் என இரு பாலரும் எந்த வயதினரும் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். இதற்குஎந்தவிதமான மருத்துவப் பரிசோதனையும் கிடையாது. கவரேஜ் தொகை ஒவ்வொரு நபரின்மாதச் சம்பளத்திற்கேற்ப மாறுபடும். அதிகபட்சமாக மாதச் சம்பளத்தில் 72 மடங்கு வரை இந்த இன்ஷூரன்ஸ்கவர் எடுத்துக்கொள்ளலாம். கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகளையும் நாம் திரும்ப பெற முடியும். அனைவரும் வேலைக்குச் சேர்ந்தவுடன் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பாலிசி இது.
-
மருத்துவக் காப்பீடு பாலிசி..!
24 மணி நேரம் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் மருத்துவ செலவுகளை இந்த பாலிசி எடுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இப்பாலிசியை
5 மாத குழந்தை முதல் 70 வயதுநபர்கள் வரை எடுக்கலாம். இதில் இரு வகை உண்டு. ஒன்று, தனிநபர் பாலிசி; இரண்டாவது, ஃபேமிலி ஃப்ளோட்டர்.
தனிநபர் பாலிசியில் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களுக்குத் தனித்தனியே கவரேஜ் இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களுக்கு இருக்கும் கவரேஜ் வரை மருத்துவச் செலவு செய்து கொள்ளலாம்.
-
ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியில் மொத்த கவரேஜ் தொகையை குடும்பத்திலுள்ள யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பாலிசியில் காப்பீடுத் தொகை குறைந்தபட்சமாக
ரூ. 1 லட்சமும், அதிகபட்சமாகரூ.10லட்சம் வரையும் எடுக்கலாம். இளம்வயதில் மருத்துவச் செலவுகள் அதிகம் இருக்காது என்பதால் குறைந்தளவு கவரேஜ் தொகைக்கு எடுத்துக் கொண்டு, பின்னர் குடும்பத்தில் மனைவி, குழந்தைகள் என உறுப்பினர்கள் சேரும்போது எடுக்கலாம். ஒவ்வொரு வருடமும் தவறாமல் கெடுதேதிக்கு முன்பாக பாலிசியைப் புதுப்பிப்பது அவசியம் இல்லையெனில் பாலிசியைத் தொடர்வது தடைபடும்.
-
டேர்ம் இன்ஷூரன்ஸ்..!
குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் எதிர்பாராத இறப்பால், அவரை சார்ந்துள்ள குடும்பம் எந்தவித பொருளாதாரப் பாதிப்பையும் அடையாமல் இருக்க எடுக்கப்படுவதுதான்இந்த இன்ஷூரன்ஸ். டேர்ம் இன்ஷூரன்ஸில் பிரீமியம் குறைவு. ஆனால், கிடைக்கும் கவரேஜ் தொகையோ மிக அதிகம்.
-
டேர்ம் இன்ஷூரன்ஸில் முதிர்வுத் தொகை எதுவும் கிடையாது என்பதால் கவரேஜ் தொகையை முக்கியமாக கவனித்தால் போதும். அந்த வகையில் ஆன்லைன் டேர்ம் பாலிசி எடுப்பது நல்லது. இதில், பிரீமியம் சாதாரணமாகஏஜென்ட் மூலம் எடுக்கும் பாலிசியைவிட 40% முதல் 60% குறைவாகவே இருக்கும். இதனால் நமக்கு குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும்.
-
லோன் கவர் டேர்ம் இன்ஷூரன்ஸ்..!
வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டிவரும் வேளையில், கடன் வாங்கிய நபர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினரால் கடனை கட்ட இயலாது. அவ்வாறு கட்ட இயலவில்லை எனில் வங்கி, வீட்டை எடுத்துக்கொள்ளும். இதை தவிர்ப்பதற்கு கடன் வாங்கும்போது, அந்த கடன் தொகைக்கு இணையாக ஒரு டேர்ம்இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது இதன் மூலம் கிடைக்கும் பணப் பலனை கடன் தொகையை கட்டுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் வீடு குடும்பத்தினருக்குச் சொந்தமாகிவிடும். இதைப்போல,கார் கடன் வாங்கும்போதும் இந்த கடன் கவரேஜ் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம்.
-
தீவிர நோய் பாதிப்பு பாலிசி..!
மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற தீவிர நோய்பாதிப்பு ஒருவருக்கு வந்து, அவர் உயிரோடு இருக்கும்பட்சத்தில் அவரதுவருமானம் ஈட்டக்கூடிய திறன் குறையும்; மருத்துவ செலவும் அதிகரிக்கும். இதிலிருந்து நம்மை காக்கவே இந்த கிரிட்டிக்கல் இல்னஸ்பாலிசி.
-
இதில் மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரக செயல்இழப்பு, இருதய மாற்று சிகிச்சை, பக்கவாதம் போன்ற அதிக செலவு வைக்கும் நோய்களுக்கான பாதிப்புகளுக்கு கவரேஜ் செய்துகொள்ளலாம். பொதுவாக, இளம் வயதில் இதுபோன்ற தீவிரநோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால்ஒரு நபர் தனது நாற்பது வயது பூர்த்தி அடைந்தவுடன் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். அவருடைய குடும்பத்தில் யாருக்காவது இம்மாதிரியான நோய் பாதிப்பு வந்திருந்தால் தனக்கும் அந்த மாதிரி வர வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப இளவயதிலேயே இந்த பாலிசியை எடுத்துக்கொள்வதுநலம்.
-
ஒருவருக்கு ஏதேனும் தீவிர நோய் பாதிப்பு இருக்கிறது என பரிசோதனை செய்தபிறகு, குறைந்தது முப்பது நாட்கள் உயிரோடு இருந்தால் மட்டுமே அவருக்கு சிகிச்சைக்கான இழப்பீடு தொகை கிடைக்கும். இந்த காப்பீடு தொகை மூலம் அவருடைய மருத்துவ செலவுகள்,குடும்பத்திற்கான வருமானம்எல்லாம் செய்து கொள்ளலாம்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 8:27 am

இந்த கிரிட்டிக்கல் இல்னஸ் கவரேஜ் பாலிசியை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது துணை (ரைடர்) பாலிசியாக எடுக்கும் வசதி இருக்கிறது. அதற்கு பிரீமியம் குறைவாக இருக்கும். ஆனால், கவரேஜ் மற்றும் சலுகைகள் குறைவாக இருக்கும். இதற்கு பதில், தனி பாலிசியாக எடுப்பது நல்லது.
-
வீட்டு உரிமையாளர் பாலிசி..!
வீடு, அலுவலகம் கடை போன்ற சொத்துக் களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்கவே இந்த பாலிசி. தீ,இடி, மின்னல், பூகம்பம், புயல், வெள்ளம், தீவிரவாதத் தாக்குதல் கலவரம் போன்ற இடர்களிலிருந்து காப்பதற்கு பாலிசி எடுக்கலாம். இதற்கான பிரீமியம் குறைவே!
இந்த பாலிசிகளை எல்லாம் எடுத்த ஒருவர் எந்த கஷ்டத்துக்கும் அஞ்சி நிற்க வேண்டிய அவசியமே இல்லை.
-
நாணய விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக