புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
3 Posts - 2%
Manimegala
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
28 Posts - 3%
prajai
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
5 Posts - 1%
ayyamperumal
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
குழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_lcapகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_voting_barகுழந்தை இயேசுவுக்கு நவநாள் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை இயேசுவுக்கு நவநாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:43 am

முன்னுரை

தந்தை மகன் உறவிலிருந்து வந்தவர், வாழ்ந்தவர் கிறிஸ்து இயேசு.

இவ்வுறவு வாழ்வில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுப்பவரும் அவரே.

ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவராயினும் மதி பலம், பண பலம், புஜ பலம் எது இருந்தாலும் இல்லாது பேனாலும், இழந்து போனாலும் இறைத் தந்தை முன் யாவரும் குழந்தைகளே.

நாம் குழந்தைக்குரிய உயர் பண்புகளோடு வாழ்ந்து வளர வேண்டும்.

"நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில்
விண்ணரசில் நுழைய மாட்டீர்கள்" என்று பணித்தார் (மத். 18:3)


எவரையும் கவரும் குழந்தைகளின் உயர்பண்புகள்~ கள்ளமில்லா வெள்ளை உள்ளம், கபடமறியா நடைமுறை, அன்புவிழிகளால் காண்போரை தன்பால் ஈர்த்து தன்னை அவரோடு இணைத்துக் கொள்ளும் சார்புடைமை, அடுத்தவர் எப்படி? ஏன் அப்படி? எனும் அக்கரையின் வடிவங்கள், தனக்குத்தானே போதாத நிலையில் நம்பிக்கையில் நடைபயிலும் சிறப்பு. இவ்வரிய இனிய குணங்களில் நாம் குழந்தைகளாய் உருவாக, இயேசுவே, குணமளிக்கும் கொடை வழங்கும் குழந்தையாய் வருகிறார். அவரை காண்போம், அவரை நமதாய் கொள்வோம், அவருக்கு நம்மை கொடுப்போம்: அவர் கொடைகளை கொள்வோம், பிறருடன் குழந்தையுள்ளத்தோடு வாழ்வோம்.

குழந்தையாதல் வான் வீட்டுக்கு உரிமைச் சீட்டு

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:44 am

குழந்தை இயேசு வரலாறு

வரலாற்றின் அடிப்படையில் பிரேகுநகர் குழந்தை இயேசுவின் திருசுரூபம் ஸ்பெயின் அரச குடும்பத்தின் பரம்பரை சொத்து.

போலிக்சேனா லோகோவிட்ஸ் இளவரசிக்கு கலியாணப் பரிசாக வந்தடைந்தது. 1623ல் விதவையான இளவரசி, எஞ்சிய தன் வாழ்நாட்களை பக்தி வழியிலும், பிறர் அன்பு பணியிலும் கழிக்க உறுதிபூண்டாள். அன்று வறுமையில் வாடிய கார்மல்சபை துறவியருக்கு, தானமாக பாலன் இயேசு சுரூபத்தைத் தந்தாள், கொடுக்கும் போது அவள் கூறியது இறைவாக்கென அமைந்து விட்டது: உலகிலேயே மிக மிக உயர்வாக நான் மதித்து, போற்றும் தன்னிகரில்லா தனிப்பெரும் செல்வம் இத்திருச்சுரூபம்.

" குழந்தை இயேசுவை மதித்து மகிமைப்படுத்துங்கள், குறை என்பதே இனி உங்களுக்கு இருக்காது".

நன்றியுடன் அத்திருச் சுரூபத்தைப் பெற்றுக் கொண்ட துறவியர் தங்கள் குரு மாணவரின் ஆசிரமத்தில் வைத்து வழிபட்டு வந்தனர். அம்மடத்தை இறைவன் ஆசீர்வதித்தார். அச்சபையும் ஆன்ம சரீர நலன்களால் நல்ல முன்னேற்றம் கண்டது. உள்ளத்தையும் உடலையும் தொல்லைகள் பல தாக்கிய போதெல்லாம், இத்திருச்சுரூபம் இருந்த சிறுகோவில் அந்தத்துறவியர்க்கெல்லாம் அடைக்கலமும், ஆறுதலும் அளித்து வந்தது. அவர்களுள் பெரும்பக்தராக இருந்தவர் தவத்திரு தந்தை சிரிலஸ். கி.பி.1630 ம் ஆண்டில் முப்பது ஆண்டு கடும்போரின் (Thirty years war) காரணமாக, தூய கார்மேல் சபையின் குரு மாணவரின் ஆசிரமம் முனிக் நகருக்கு மாற்றலாகியது. போர் முடிந்து ஊரைவிட்டுப் பகைவர்கள் வெளியேறிய பின் முனிக் நகரிலிருந்து தந்தை சிரிலஸ் பிரேகு நகர மடத்திற்கு அனுப்பப்பட்டார். அவரும் அங்கு சென்று, ஆரம்பத்திலே வழிபட்டுவந்த அதே சிறுகோவிலிலே குழந்தை இயேசுவின் திருச்சுரூபம் நிறுவச்செய்தார். அச்சமயம் அத்திருச்சுரூபம் உரு சிதைந்து இருப்பதைக்கண்டு கண்ணீர் சிந்தினார்.

சிதைந்திருந்த அந்த சுரூபத்தின் முன் மெய்மறந்து மன்றாடி நின்ற வேளை குரலொன்று அதிசயமாக தெளிவாக அவருக்கு கேட்ட சொற்கள் இவை~

"என் மேல் இரக்கமாயிரு.
நானும் உன் மீது இரக்கம் கொள்வேன்.
என் கைகளை எனக்குக்கொடு
உனக்கு நான் அமைதி அருள்வேன்".

அக்குரலை ஒரு கட்டளையாக ஏற்று செயல்பட முனைந்தார் தந்தை சிரிலஸ். கடும் நோயாளி ஒருவர் சிதைந்திருந்த சுரூபத்தைச் சரிசெய்ய நன்கொடை அளித்தார், ஆனால் துறவியரோ அன்று கேட்ட அந்த அதிசயக் குரலின் திட்டவட்டமான கட்டளைக்கு மாறாக: புத்தம் புதிய சுரூபத்தை வாங்கி கோவிலில் வைத்தார். திடீரென்று விளக்குத் தண்டு ஒன்று அந்த சுரூபத்தின் மேல் விழுந்து சுக்குநூறாக உடைந்தது மல்லாமல், துறவியரும் அதிகமாக நோய்வாய்ப்பட்டு, பொறுப்பிலிருந்தும் விலகி கொண்டார். பழைய தன் திருச்சுரூபத்தை அலட்சியமாக ஒதுக்கிவிட்டது குழந்தை இயேசுவுக்கு பிடிக்கவில்லையென்பது இதனால் புலனாயிற்று.



தந்தை சிரிலசுக்குப் பின் பதவியேற்ற துறவியார், தான் பெற்ற இன்னொரு நன்கொடையைப் பயன்படுத்தி பழைய திருச்சுரூபத்தை சரிசெய்தார். குழந்தை இயேசுவும் தம் மகிழ்ச்சியை ஓர் புதுமையின் வழியாக வெளிப்படுத்தினார். அச்சமயம் அந்நகர மக்களை விழுங்கி வந்த பயங்கரத் தொற்றுநோய் துறவியரையும் தாக்கியது. நோய் நீங்கி மீண்டும் நலமுடன் எழுந்தால் அத்திருச்சுரூபத்தின்முன் ஒன்பது நாட்கள் தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுப்பதாக உறுதிகொண்டார். அதன்படியே, அற்புதமாக அவர் குணமடைந்தார். அவரும் தம் நேர்ச்சைக்கடனை நிறைவேற்றினார். அத்துடன் குழந்தை இயேசுவின் பக்தி வழியாக பொதுமக்களும் பயன்பெற வேண்டுமெனத் தம் மடத்தின் அருகிலிருந்த கோவிலில் சிறப்புமிக்கதொரு தனியிடத்தை அலங்கரித்து, அங்கே இத்திருச்சுரூபத்தை நிறுவினார். அதன்பின் வரங்களும், அருட்கொடைகளும் வழிந்தோடி, புதுமைகள் ப+த்துக்குலுங்கி, பிரேகு நகரெங்கும் இத்திரு சுரூபத்தின் புகழ் பரவியது. குழந்தை இயேசுவின் பக்தியும் வளர்ந்து கொண்டே வந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தம் பக்தகோடிகளுக்கு அவர் ஆற்றிவரும் அற்புதங்களின் காரணமாக குழந்தை இயேசுவின் பக்தி பாரெங்கும் இன்று பரவி நிற்கிறது.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:45 am

நவநாள்

பிதா, சுதன், பரிசுத்தாவியின் பெயராலே
-ஆமென்.
(வருகைப்பா)

அற்புதக் குழந்தை இயேசுவே!
அடியோர் மேல் இரக்கமாயிரும்!
(மும்முறை)


தொடக்கச் செபம்

எங்கள் அருமைக் குழந்தை இயேசுவே! ஃ அடியோரை ஆசீர்வதித்து வரவேற்க கரம் விரித்து காத்திருக்கின்றீர். ஃ செபத்தின் வழியாக ஃ உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவிபுரியும் ஃ நீரே எங்கள் ஆண்டவர் ஃ நீரே எங்கள் மீட்பர் ஃ எங்களைப் பற்றி உமக்கு எவ்வளவோ அக்கரை ஃ எங்கள் மன்றாட்டுக்களை கேட்க எங்களோடு இருக்கின்றீர். ஃ எனவே எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து ஃ எங்கள் கோரிக்கைகளை கருணை கூர்ந்து அளித்தருளும். ஃ வல்லமைமிக்க உமது உதவியைத் ஃ தாழ்ந்த உள்ளத்தோடு இறைஞ்சி கேட்கிறோம் ஃ தந்தையோடும் தூய ஆவியோடும், இறைவனால் ஃ என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் இயேசுவே. - ஆமென்.

விண்ணப்பம், நன்றி அறிக்கை

செபம்

அற்புதக் குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களில் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளும்படி பணிவாக உம்மை இறைஞ்சி வேண்டுகிறோம்.

எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும் நீக்கி, உமது குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப்போற்றுவோமாக. - ஆமென்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:46 am


மன்றாட்டு


பரிவிரக்கமுள்ள தந்தையே! உமது அன்பு திருமகன்ஆண்டவர் இயேசுகிறிஸ்து எங்களுக்கு வேண்டியவையெல்லாம் தம்முடைய பெயராலே உம்மிடம் நம்பிக்கையோடு கேட்குமாறு எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதே நம்பிக்கையோடு இங்கு கூடியிருக்கும் உம் மக்களின் மன்றாட்டுக்களை கேட்டருள உம்மிடம் வேண்டுகிறோம். அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நமது திருத்தந்தைக்காகவும், ஆயர்களுக்காகவும், குருக்களுக்காகவும், துறவியருக்காகவும் வேண்டுவோம்~ திருச்சபையின் வளமைக்கு உதவும் வற்றாத ஊற்றாக இவர்களின் வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. நாங்கள் வேண்டிய வரங்களை பெற்றுக்கொண்ட அனைவருக்காகவும் வேண்டுகிறோம். நன்றிகூறி உம்மை வாழ்த்திப் போற்றும் நல்ல உள்ளத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. நோயாளிகளுக்காகவும், திக்கற்றவர்களுக்காகவும், சோர்ந்திருப்போருக்காகவும் வேண்டுவோம்~ இவர்களுக்கெல்லாம் ஆறுதலின், ஆதரவின் பிறப்பிடமாக தெய்வத் திருக்குழந்தையாகிய நீரே இருக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. யார் யாருக்கு தனிப்பட்ட வரங்கள் தேவையோ அவர்களுக்காக வேண்டுவோம்~ இவர்களின் எளிய விசுவாசத்தை ஆசீர்வதித்து தம் திருவுளப்படி தெய்வத்திருக்குழந்தை, இவர்களின் விண்ணப்பங்களை அளித்தருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

5. குழந்தை இயேசுவின் பக்தர்கள் அனைவருக்காகவும் வேண்டுவோம் : குழந்தை உயிருள்ள விசுவாசத்தை இவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(நம் சொந்த தேவைகளுக்காகவும் உறுதியோடு அமைதியாக செபிப்போம்.)

தந்தையே! உம் திருமகன் குழந்தை இயேசு வழியாக எங்கள் மன்றாட்டுக்களை கேட்டருளியதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம், வாழ்வில் என்றுமே உமது திருவுளத்தை ஏற்று வாழும் வரமருளும்.

நன்றி மன்றாட்டு

வானகத் தந்தையே! எங்கள் மீட்பராம் குழந்தை இயேசுவின் பிறப்பில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். மனுக்குலத்திற்கு
நீர் அருளிய மாபெரும் கொடை அவரே. அவரின் வாழ்வும், மரணமும், உயிர்ப்பும் இவ்வுலகில் எங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் பாதுகாப்பளித்து, மறுவுலகில் முடிவில்லாப் பேரின்பத்தை அளிப்பதாக: எங்கள் ஆண்டவராகிய குழந்தை இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:46 am

நோயாளிகளுக்காக செபம்

எங்கள் தந்தையாகிய இறைவா! பாவத்திலிருந்து எங்களை மீட்கவும், துன்பத்திலிருந்து எங்களை விடுவிக்கவும், உம் திருவுளப்படி ஒரு சிறு குழந்தையாக உம் திருமகன் எங்களிடையே தோன்றினார். எல்லா நோயாளிகளுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். உமது சித்தப்படி இவர்களின் வேதனையை நீக்கி நோயை குணமாக்கியருளும். உமது இரக்கத்தால் உள்ளத்திலும், உடலிலும் இவர்கள் நலம் பெற்று: மீண்டும் உமக்கு நன்றி செலுத்துவார்களாக, தந்தையாகிய உம்மோடும், தூய ஆவியோடும் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய குழந்தை இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.


இரக்கமுள்ள தந்தையே! தம்மை அண்டிவந்த நோயாளிகளின் துயரைக்கண்டு மனமிரங்கி, உம் திருமகன் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து: நோயாளிகளும், அங்கம் குறைந்தவர்களும், தீராத நோயால் துன்புறுவோரும், கனிவான அவரது கரம் தொட்டவுடனே குணம் அடைந்தனர். இங்கே குழுமியிருக்கும் நோயாளிகள் எல்லோரையும் அதே அன்புக்கரத்தால் தொட்டு குணமாக்க வேண்டுமென்று தாழ்ந்த உள்ளத்தோடு உம்மை கேட்கிறோம். உடலிலும், உள்ளத்திலும் முழு நலம் பெற்று மகிழ்வார்களாக: எங்கள் ஆண்டவர் குழந்தை இயேசுவின் பெயரால் உம்மை வேண்டுகிறோம். - ஆமென்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:47 am

ஆசீர் பெறுதல்

சிரம் தாழ்த்தி இறைவனின் ஆசியை இறைஞ்சுவோம் இறைவனின் திருமகன் குழந்தை இயேசு பாவ இருளை அகற்றி மகிழ்ச்சி ஒளியால் நம் உள்ளத்தை நிரப்ப இவ்வுலகத்திற்கு வந்தார். மனுவுருவான வார்த்தையானவர் அமைதியையும், ஆசியையும், அக்களிப்பையும் அளித்து, நம் அனைவரையும் நட்புறவில் ஒன்றாய் இணைப்பாராக.

இறைவனின் ஆவி நம்மை ஒரே குடும்பமாய் இவ்வுலகில் இணைத்து நித்திய பேரின்பத்திற்கு அழைத்துச் செல்வாராக.

ஆற்றலுள்ள குழந்தை இயேசுவுக்கு நவமணிசெபம்

(குறிப்பிட்ட நேரம் துவங்கி மணிக்கு ஒருமுறையாக அடுத்தடுத்து 9 முறை குழந்தைக்குரிய பற்றுதலோடு செபிக்கவும்)

ஓ இயேசுவே! " கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் " என்று மொழிந்தீரே. உமது திருத்தாயார் தூய மரியன்னை பரிந்துரை வழியாக நான் தட்டுகிறேன், தேடுகிறேன், கேட்கிறேன். நான் கோரும் இவ்வரத்தை கொடுத்தருளுமாறு பணிவுடன் கேட்கிறேன்.

ஓ இயேசுவே! " என் பெயரால் நீங்கள் தந்தையைக் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருளுவார்" என மொழிந்தீரே, உமது திருத்தாயார் தூய மரியன்னையின் பரிந்துரையின் வழியாக எனக்கு அவசரமான இந்த மன்றாட்டை அளித்தருளமாறு, உமது பெயரால் தாழ்ந்த உள்ளத்துடன் தந்தையை இறைஞ்சி கேட்கிறேன்.

ஓ இயேசுவே! " விண்ணும் மண்ணும் அழிந்துபோகும் ஆனால் என் சொற்களோ ஒருபோதும் அழியா" என்று மொழிந்தீரே. உமது திருத்தாயார் தூய மரியன்னையின் பரிந்துரை வழியாக என் செபம் கேட்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:48 am

குழந்தை இயேசுவின் செபமாலை

இச்செபமாலையின் அமைப்பு

திருக்குடும்பத்தின் மகிமைக்காக மூன்று கர்த்தர் கற்பித்த செபம்.

நம் மீட்பருடைய குழந்தைப் பருவத்தின் பன்னிரு ஆண்டுகளின் நினைவாக பன்னிரு மங்கள் வார்த்தை செபம்.

தூய திரித்துவத்தின் மகிமைக்காக மூன்று திரித்துவ புகழ் செபம்.

செபிக்கும் முறை

ஒவ்வொரு கர்த்தர் கற்பித்த செபத்திற்கு முன்னால்
" வார்த்தை மனுவுருவானார்:
நம்மிடையே குடிகொண்டார்" என்றும்

ஒவ்வொரு மங்கள வார்த்தை செபத்திற்கு முன்னும் இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றித் தியானிக்க வேணடிய பேருண்மைகள்

1. இறைவனின் மனிதப் பிறப்பு. . .
2. தூய மரியாள் எலிசபெத்தின் சந்திப்பு . . .
3. இயேசுவின் பிறப்பு. . .
4. இடையரின் ஆராதனை . . .
5. விருத்தசேதனம் . . .
6. ஞானிகளின் ஆராதனை . . .
7. இயேசுவின் காணிக்கை . . .
8. எகிப்து நாட்டிற்குப் பயணம். . .
9. எகிப்தில் தங்குதல் . . .
10. எகிப்திலிருந்து திரும்புதல். . .
11. நசரேத்தூரில் வாழ்க்கை . . .
12. மறைநூல் மேதைகளுக்கிடையே இயேசு. . .

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:49 am

செபம்

குழந்தை இயேசுவே! ஒப்பற்ற உமது வல்லமையை வியத்தகு முறையில் வெளிப்படுத்தி, உமது அற்புத திருக்கர ஆசீரால் எங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்புகின்றீர். நம்பிக்கையோடு உம்மைக் கூவியழைக்கும் பக்தர்களின் மன்றாட்டுக்களுக்கு கனிவாய் செவிசாய்த்தருளும். - ஆமென்.

குறிப்பு

இச்சிறு செபமாலைப் பக்தி தமக்கு எவ்வளவு பிரியமானது என்பதை தூய. மார்கரெட் அம்மாளுக்கு அறிவிக்க குழந்தை இயேசு அருள் கூர்ந்தார். இதை பக்தியோடு செபிப்பவர்: கற்பு, தூய்மை என்ற வரங்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர் வாக்களித்துள்ளார்.


பெற்றோரே! உங்கள் பிள்ளைகளின் ஞானஸ்நானத் தூய்மையைக் களங்கமின்றி காப்பாற்ற இப்பக்தி பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். குழந்தை இயேசுவை தங்கள் முன் மாதிரியாகக்கொண்டு அவரை நேசிக்கவும், பின்பற்றவும், இச்செபமாலை பக்தி அவர்களுக்கு சிறந்த தற்காப்பு சாதனம் என்பதை உணரச் செய்யுங்கள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:49 am

குழந்தை இயேசுவுக்குப் புகழ்மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாகக் கேட்டருளும்
வானகத் தந்தையாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகை மீட்ட, மகனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்

அற்புதக் குழந்தையாகிய இயேசுவே -எங்கள் மேல் இரக்கமாயிரும்.
வியத்தகு முறையில் செயல்படும் ஒப்பற்ற வல்லமையுடைய குழந்தை இயேசுவே
எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய குழந்தை இயேசுவே
எங்களுக்கு உதவிட என்றும் விரைந்துவரும் நன்மனமுடைய குழந்தை இயேசுவே
வாழ்க்கையின் முடிவுக்கும், கடைசி கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் குழந்தை இயேசுவே
உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் குழந்தை இயேசுவே
எங்கள் வறுமையை ஒளிக்கும் கொடை வள்ளலாகிய குழந்தை இயேசுவே
துன்புறுவோரைத் தேற்றும் நட்புறவுடைய குழந்தை இயேசுவே
உமது இரக்கத்தால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் குழந்தை இயேசுவே
எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய குழந்தை இயேசுவே...
எங்கள் மேல் இரக்கமாயிரும்.


தீமைகளை எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய குழந்தை இயேசுவே
உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட்கொள்ளும் குழந்தை இயேசுவே
நரகத்தை வெல்லும் திறமையுள்ள குழந்தை இயேசுவே
எங்கள் இதயங்களைக் கவரும் எழில் வதனமுள்ள குழந்தை இயேசுவே
உம் கையில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுள்ள குழந்தை இயேசுவே
ஆர்வமற்ற எங்கள் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் குழந்தை இயேசுவே
எல்லா நன்மைகளாலும் எங்களை நிரப்பும் குழந்தை இயேசுவே
ஆசீரை அளிக்கின்ற அற்புத கரமுள்ள குழந்தை இயேசுவே
பக்தர்களின் உள்ளங்களை மகிழச்செய்யும் இனிய பெயருடைய குழந்தை இயேசுவே
உலகை எல்லாம் நிரப்பும் மாட்சிமையுள்ள குழந்தை இயேசுவே
எங்கள் மேல் இரக்கமாயிரும்

கருணை கூர்ந்து. . . எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே,
கருணை கூர்ந்து. . . எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் இயேசுவே.
எல்லாத் தீமையிலிருந்து . . . எங்களை மீட்டு இரட்சித்தருளும் இயேசுவே.
எல்லாப் பாவத்திலிமிருந்து, அளவற்ற உம் நன்மைக்கு எதிராக எழும் எல்லா அவ நம்பிக்கையிலுமிருந்து
எங்களை மீட்டருளும் இயேசுவே.
அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் எல்லா சந்தேகத்திலுமிருந்து
எங்களை மீட்டருளும் இயேசுவே.
உமது வழிபாட்டில் ஏற்படும் எல்லாக் குறைபாட்டிலுமிருந்து
எங்களை மீட்டருளும் இயேசுவே.
எல்லாத் தீமையிலும், கேட்டிலுமிருந்து
எங்களை மீட்டருளும் இயேசுவே.
உமது கன்னித்தாய் தூய மரியாள், வளர்ப்பு தந்தை தூயசூசையப்பர் இவர்களின் பரிந்துரை வழியாக எங்களை நீர் மன்னிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்
எங்களை மீட்டருளும் இயேசுவே.

உமது திருக்குழந்தைப் பருவத்தின் பால் எங்களுக்குள்ள அன்பையும், பக்தியையும் காத்து வளர்த்திட வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்.
அற்புத உம் திருக்கரம் எங்களை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று
எண்ணற்ற உமது நன்மைகளை நாங்கள் என்றும் மறவாதிருக்க வேண்டுமென்று
உமது திரு இருதய அன்பால் எஙகள் உள்ளங்களை மேன்மேலும் பற்றி எரியச்செய்ய வேண்டுமென்று
நம்பிக்கையோடு உம்மை கூவியழைப்போரின் குரலுக்குக் கனிவாய்ச் செவிமடுக்க வேண்டுமென்று
எங்கள் நாடு அமைதியலே நிலைத்திருக்க அருள்தர வேண்டுமென்று
எல்லாத் தீமையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறோம்.

உமது பக்தியிலே நிலைத்திருக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்

பொதுத்தீர்வை நாளிலே இரக்கத்துடன் எங்களுக்கு தீர்ப்பிட வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்

உமது அற்புத திருச்சுரூபத்திலே எங்களுக்கு ஆறுதலாகவும், அடைக்கலமாகவும் நீர் இருக்க வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்

இறைமகனே, மரிமகனே, இயேசுவே
உம்மை மன்றாடுகிறோம்

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் குழந்தை இயேசுவே.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் குழந்தை இயேசுவே.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் குழந்தை இயேசுவே.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:50 am

செபிப்போமாக

அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த . . . (உறுதியோடு கேட்கும்) வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம்.

எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனைச் சோதனைகளையும் நீக்கி உமது திருக்குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக - ஆமென்.

நன்றி மன்றாட்டு

கனிவு நிறைந்த குழந்தை இயேசுவே | என் மேல் நீர் பொழிந்தருளிய | எல்லா நன்மைகளுக்காகவும் | முழந்தாளிட்டு உமக்கு மனம் நிறைந்த என் நன்றியைச் செலுத்துகிறேன் | உமது இரக்கத்தை நான் எனறும் போற்றிப் புகழ்வேன்| நீர் ஒருவரே என் இறைவன் | என் துணைவன் என்று பறைசாற்றுவேன். | என் நம்பிக்கை எல்லாம் இனி உமது கையிலே தான் | உமது இரக்கத்தையும்| வள்ளன்மையையும் எங்கும் விளம்பரம் செய்வேன். | உமது பேரன்பையும், பெரும் செயல்களையும் எல்லோரும் ஏற்றிப் போற்றுவார்களாக | குழந்தை இயேசுவின் பக்தி மக்கள் உள்ளங்களில் அதிகமதிகமாகப் பரவுவதாக| உமது உதவியை பெற்று மகிழும் அனைவரும் | உமது குழந்தைப் பருவத்திற்கு | என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்களாக: | என்றென்றும் அவர்கள் உம்மைப் போற்றி மகிமைப் படுத்துவார்களாக.


அர்ப்பண மன்றாட்டு

இனிய குழந்தை இயேசுவே! உமது குழந்தைப் பருவத்தின் பேருண்மைகளை வியந்து, உம்மை ஆராதிக்கிறேன். உம்மை அன்புசெய்கிறேன்: உம்மை மகிமைப் படுத்துகிறேன்: என் மீது கொண்ட அன்பால் எனக்காக நீர் ஒரு சிறு குழந்தையாக பிறந்தீர். எனவே உமக்கு நன்றி கூறுகிறேன். அந்த அன்புக்குப் பதில் அன்பாக என்னை முழுவதும் உமக்குக் கையளித்து காணிக்கை ஆக்குகிறேன். இப்பொழுதும், என் வாழ்நாள் முழுவதும் உம் திருக்குழந்தைப் பருவத்தின் புண்ணியங்களை எனக்கு அளிக்குமாறு உம்மை இறைஞ்சிக் கேட்கிறேன். அன்புள்ள இயேசுவே! உமது தாழ்ச்சியையும், பிறப்பையும், கீழ்ப்படிதலையும், எளிமையையும் எனக்குத் தந்தருளும். உம்மை அன்பு செய்யவும், உம்மை பின்பற்றி நடக்கவும், வானகத்தில் உமது தெய்வீகத்தைக் கண்டுகளிக்கவும் உமது அருள் எனக்குத் துணை நிற்பதாக. - ஆமென்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக