ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:11

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பினோர் கெடுவதில்லை.....இது நான்கு மறை தீர்ப்பு.

Go down

ஈகரை நம்பினோர் கெடுவதில்லை.....இது நான்கு மறை தீர்ப்பு.

Post by கார்த்தி Mon 11 Feb 2013 - 16:11


நம்பினோர் கெடுவதில்லை.....இது நான்கு மறை தீர்ப்பு. 62238590

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள்.
அவள் பெரியவாளை "அப்பா" என்றுதான் அழைப்பாள். தினமும்
ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள்.பெரியவா
"ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசு
கிடைக்குமே!" என்பார். "காசு பெரிசா சாமி! உன் தலையில்
அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்"என்பாள்.
பூக்காரி.

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால்
யாரும் எழுப்பக் கூடாது.ஆனால், இந்தக் காமாட்சி மட்டும்
விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம்.ஏனெனில்,
பெரியவாளே அவளிடம், " நீ உன் வியாபாரத்தை முடித்துக்
கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக்
கூடாது!" என்று கட்டளை இட்டிருந்தார்.அவளது பிழைப்பை
தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?


ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ்
கேட்டுச் சொல்லச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தார். வேதாந்த
தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும்,உலக நடப்பையும் தெரிந்து
கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த
பிறகு படுக்கப் போக நாழி ஆகிவிடும்.அன்று, புதுக்கோட்டையிலிருந்து
"ஜானா" என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை
செய்து கொண்டு வந்திருந்தாள்.. அதைக் காலை முதல் பெரியவா
கழற்றவேயில்லை. படுக்கைக்குப் போகு முன் கொட்டகை சென்று,
தேகசுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார்.அப்போது நியூஸ்
படிக்கும் நாகராஜன்,"இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும்
நான்தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவர் பாதுகையே
இல்லை!" என்று கழட்டுவதற்குக் காத்திருந்தார். பெரியவா பாதுகையைக்
கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். பூக்காரியும் நானும் அங்கு
போய் நமஸ்காரம் பண்ணினோம். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம்,
"இது உனக்குத்தான், எடுத்துக்கோ!" என்றார்.

"நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!" என்று
நாகராஜன் குறையோடு திரும்பினார். அப்படிப்பட்ட அன்புக்கு
அந்த ஏழைப்பூக்காரி பாத்திரமாயிருந்தாள். எத்தனையோ பேர்
அவளிடம் லட்ச ரூபாய் தரோம்,இந்தப் பாதுகையைக் கொடு
என்றனர்.அவள் அசையவேயில்லை. பெரியவா அவளுக்கு இந்த
உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச்
செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி,வண்டியாக
கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால்
அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா
இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது
பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.அவர் மறைவுக்குப்
பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது.
"அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன்
அனுப்புவாயா!" என்று புலம்பினாள்.கூடையை வைத்துக்கொண்டு
உட்கார்ந்திவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து
ஒரு சம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள்
கூடையில் விழுந்தது.சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட
பதில் சொல்லக்கூடிய சாமியை, "போயிடுத்து,போயிடுத்து"னு
யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும்
சொல்லுவாள்.

இது போல் பல நிகழ்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான்
இருக்கின்றன.பிரத்தியட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான்
வருகிறார்.

நம்பினோர் கெடுவதில்லை.....இது நான்கு மறை தீர்ப்பு.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த சமயம்.
பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில் மகா பெரியவா
அமர்ந்திருந்தார்.

அந்தச் சமயம் வெய்யலின் கொடுமையைத் தாங்காமல்
வயதான ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து
தன் வளையல் பெட்டியை ஒர் ஓரமாக இறக்கி
வைத்துவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்தான். அவருடைய
சோர்ந்த முகம் மகானின் கண்களில் பட்டது. மடத்து
ஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியை தன் அருகே
அழைத்து வரச் செய்தார். மெதுவாக வியாபாரியை
விசாரித்தார்.

"உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி
நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?"
போன்ற விவரங்களைக் கேட்டார்.

வளையல் வியாபாரி அதே ஊரைச் சேர்ந்தவர்தான்.
தன்னுடன் வயதான தனது தாயாரும்,மனைவி
மற்றும் நான்கு குழந்தைகள் தனக்கு இருக்கிறார்கள்
என்றும், கடந்த ஆறு மாத காலமாக வியாபாரம்
மிகவும் மந்தமாக இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாக
இருக்கிறது என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச்
சொன்னார்.

அப்போது மகாப் பெரியவாள், "இந்த வளையல்
வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் ஏற்றுக்
கொள்ள வேண்டும்" என்று சொன்னவர்,அதற்கேற்ற
விளக்கமும் தந்தார்.

"இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும் எல்லா
வளையல்களையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு
வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும்
கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி
அவர்களுக்குக் கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப்
புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!"
என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல்
எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து
வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார்.
அதற்கு காரணமும் சொல்கிறார்.

வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி காலியாக
இருக்கவே கூடாது.அந்த வளையல்களை அவன்
வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்.

பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக வேஷ்டி,
புடவைகளைக் கொடுத்து அவருக்கு சாப்பாடும் போட்டு
அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.

இன்னொன்றும் சொன்னார்.

"இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும் நிச்சயம்
குறைந்திருக்கும் இல்லையா?"

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத
விதமாக உதவியைச் செய்து விடுகிறார் மகான் என்று
அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் பெண்களுக்கும்
வளையல்கள் வழங்கப்பட்டன. அதுவும் மகானின் கையால்
தொட்டுக் கொடுத்த வளையல்கள். அந்த பாக்கியம்
எல்லோருக்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டுமே!


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -


ஸ்ரீ மஹா பெரியவா அருள்வாக்கு :-

" ஈஸ்வரரின் ஆபிஸ் பெரிது. நேரடி தொடர்பு கொள்வது கடினம். ஆனால் குருவின் ஆபீஸோ சிறியது. எளிதாக நேரடி தொடர்பு கிடைத்துவிடும். சீடனுக்காக ஈஸ்வரரிடம் வாதாடி அனுக்கிரஹங்களை பெற்று தந்துவிடுவார். எல்லா சொந்தங்களையும் விட பரம கருணையோடு நம்மை காப்பாற்றுவார். எனவே குரு மூலமாக ஈஸ்வரனை அடைவது எளிது ".


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum