ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

+3
ராஜா
யினியவன்
Muthumohamed
7 posters

Go down

ஈகரை ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Post by Muthumohamed Sun Feb 10, 2013 9:30 am

ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!
(ஞாயிறு, 10 பிப்ரவரி 2013)

ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டைவேடம் போடுகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

8-2-2013 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என்றும், அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டதோடு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது, அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக, மத்திய அரசு வாக்களிக்க வேண்டுமென்று பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாகவும், முதலில் அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், தனது தொடர் வலியுறுத்தல் காரணமாக அந்தத் தீர்மானத்தை ஆதரித்தது என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் இதே முதலமைச்சர் ஜெயலலிதா தான்; 16-4-2002 அன்று, அ.தி.மு.க. ஆட்சியிலே, இதே தமிழகச் சட்டப் பேரவையிலே இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:-

இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும், இந்திய மண்ணில் காலூன்றுவது ஒரு போதும் ஏற்கப்பட மாட்டாது, அனுமதிக்கப்பட மாட்டாது.

பிரபாகரனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடைமுறைப்படியும், அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரபாகரனை அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதி மன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் தமிழக சட்ட மன்றப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

ஸ்ரீலங்கா அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரகாரனை பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதி யோடு, இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது. இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் ஜெயலலிதாதான்!

அது மாத்திரமல்ல; 17-1-2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது, இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை” என்றே மத்திய அரசுக்கு அப்போது வக்காலத்து வாங்கினார்.

4-11-2007இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்த போது ஒரு இரங்கல் கவிதையை நான் எழுதினேன் என்பதற்காக ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தவர் தான் ஜெயலலிதா.

இதையெல்லாம் ஈழத் தமிழர்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு நேற்று, 8-2-2013 அன்று சட்டப் பேரவையில் ஜெயலலிதா ஈழத் தமிழர்களிடம் தான் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன்னைக் காட்டிக்கொள்கிறார். இதில் இருந்து அவரது உண்மை உருவத்தை, ஈழத் தமிழர்களும், இங்குள்ள தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

அறிந்து கொள்வோம்



ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Mஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Uஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Tஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Hஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Uஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Mஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Oஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Hஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Aஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Mஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Eஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Post by யினியவன் Sun Feb 10, 2013 10:08 am

ஈழத் தமிழர்கள் வாழ்க்கையை அரசியலாக ஆக்கி அதில் குளிர் காய நினைத்து நடிப்பதில் நீங்கள் இருவருமே கில்லாடிகள் / நடிகர்கள் - நீங்க நம்பியார்ன்னா அம்மா அவங்க பெண் வேடமிட்ட நம்பியார் - உங்களை நம்பி யாரும் இல்லாம போறவரைக்கும் நடிங்க, நடிங்க நடிச்சுகிட்டே இருங்க...


Last edited by யினியவன் on Sun Feb 10, 2013 11:22 am; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Post by Muthumohamed Sun Feb 10, 2013 10:21 am

யினியவன் wrote:ஈழத் தமிழர்கள் வாழ்க்கையை அரசியலாக ஆகி அதில் குளிர் காய நினைத்து நடிப்பதில் நீங்கள் இருவருமே கில்லாடிகள் / நடிகர்கள் - நீங்க நம்பியார்ன்னா அம்மா அவங்க பெண் வேடமிட்ட நம்பியார் - உங்களை நம்பி யாரும் இல்லாம போறவரைக்கும் நடிங்க, நடிங்க நடிச்சுகிட்டே இருங்க...

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க இனியவரே



ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Mஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Uஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Tஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Hஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Uஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Mஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Oஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Hஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Aஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Mஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! Eஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Post by ராஜா Sun Feb 10, 2013 2:19 pm

அந்தம்மா இரட்டை வேடமென்றால் , நீ போட்டது /போடுவது எல்லாம் எத்தனை வேடமென்றே கணக்கில் அடங்காதே. என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Post by Priya Tharsni Sun Feb 10, 2013 2:27 pm

ராஜா wrote:அந்தம்மா இரட்டை வேடமென்றால் , நீ போட்டது /போடுவது எல்லாம் எத்தனை வேடமென்றே கணக்கில் அடங்காதே. என்ன கொடுமை சார் இது
ஓரக்கண் பார்வை சிரிப்பு
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஈகரை Re: ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Post by கரூர் கவியன்பன் Sun Feb 10, 2013 4:11 pm

அய்யா கொஞ்சம் மெதுவா பேசுங்க....... இது அவங்களுக்கு மட்டுமல்ல இவங்களுக்கும் தான்னு மக்கள் சத்தமா பேசுறாங்க புன்னகை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Post by ராஜு சரவணன் Sun Feb 10, 2013 6:38 pm

அய்யாவிற்கு நிறையவே நாபக மறதி, நீங்கள் பழசை மறந்ததுபோல் வேடம் போடலாம்
ஆனால் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அது வடு என்றும் மறையாது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Post by பாலாஜி Sun Feb 10, 2013 6:54 pm

இருவரும் போடுவது இரட்டை வேடம் தான் . ஆனால் அதிலும் முதல் இடத்தில் இருப்பது கருணாநிதிதான் .

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைவெளியில் நீங்க நடத்திய உண்ணாவிரத நாடகம் ,வேடம் நாங்க மறக்கவில்லை .

இது போல நிறைய ....




Last edited by பாலாஜி on Sun Feb 10, 2013 6:54 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூவரின் தூக்கு விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம்: தமிழருவி மணியன்
» “அம்மா” அனுமதித்தால்தான் நடைப்பயணம்! சீமானின் இரட்டை வேடம்!
» இரட்டை வேடம் போடும் கருணாநிதி : பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
» இலங்கை தமிழர்களுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டியவர் நானல்ல, ஜெயலலிதாதான்
» விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum