ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட்

2 posters

Go down

ஈகரை சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட்

Post by Muthumohamed Thu Feb 07, 2013 8:06 pm

மதுரை மாவட்டம் அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி
வழக்கமாய் காலை 9.30 மணிக்கு துவங்கும், ஆனால் 8 மணிக்கே ஒருவரை ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கிறது.
அவர்தான் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கில்பர்ட்(47).

மதுரையில்உள்ள தனது வீட்டில் இருந்து கொண்டுவந்த பாடபுத்தக குறிப்புகள் மற்றும்
மதிய உணவு ஆகியவற்றை கொண்டு போய் தனது மேஜையில் வைத்துவிட்டு வெளியே
வருகிறார்.

அடுத்த ஒரு மணி நேரம் அதாவது பள்ளி திறப்பதற்கு (காலை 9.30)
அரை மணி நேரம் முன்புவரை, அவர் பம்பரமாக சுழன்று செய்யும் வேலைகள்தான் அவர்
பற்றி இந்த கட்டுரை எழுத தூண்டுகோள்.
ஆமாம், கையில் ஒரு விளக்குமாறும்,வாளி நிறைய தண்ணீரும் எடுத்துக் கொண்டு மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்கிறார், பின்னர் வகுப்பறைகளில் குப்பை கூளங்கள் இல்லாமல் பெருக்கி எடுக்கிறார், பள்ளி வளாகத்தில் பேப்பர் எதுவும் இல்லாமல் சுத்தம்
செய்கிறார். இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், பள்ளியின் கழிப்பறை முதல்
வகுப்பறை வரை பளீச்சென சுத்தமாக இருக்கிறது.
கை,கால் முகம் கழுவி தன்னை தலைமையாசிரியர் இருக்கையில் அமர்வதற்கும் பள்ளியின் இதர ஆசிரியர்கள்,மாணவர்கள் வருவதற்கும் நேரம் சரியாக இருக்கிறது.

சுத்தம் சிறிதுமின்றி பல அரசு பள்ளிகள் இருக்கும் போது, இவரது பள்ளி மட்டும் எப்படி இவ்வளவு
சுத்தமாக இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சர்யம், இதற்கு காரணம் தலைமை
ஆசிரியரான கில்பர்ட்தான் என்பதே பலருக்கும் தெரியாது, அது தெரியவும் வேண்டாம் என்கிறார் கில்பர்ட்.

மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவரான கில்பர்ட், என்ன படிப்பது, எப்படி வாழ்க்கையை கொண்டு செல்வது என்பது தெரியாமல் இருந்தபோது முன்பின் தெரியாத பாதர் லூர்துசாமி என்பவர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் இவருக்கு செய்திட்ட உதவியே இவரை ஆசிரியராக்கியது.

எப்போது ஆசிரியரானாரோ அப்போதே கில்பர்ட் ஒரு முடிவு செய்தார். முன்பின்
தெரியாத தனக்கு எப்படி ஒருவர் உதவினாரோ, அதே போல நாமும் பலரது
முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கவேண்டும் என்று. ஆசிரியராக இருந்து கொண்டு
என்ன செய்யமுடியுமோ அதைச் செய்வது என்றும் முடிவு செய்தார்.

தனது சம்பளத்தில் ஒரு பங்கை ஒதுக்கி பொருளாதாரம் காரணமாக பள்ளியில் படிக்க
முடியாமல் நின்ற குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களை செலவு செய்து
படிக்க வைக்கிறார்.

பள்ளி வளாகத்தில் மிட்டாய் விற்கும் மூதாட்டியின் குழந்தைகள் உள்பட்ட வறுமையான குடும்பத்து குழந்தைகளின் மொத்த படிப்பு செலவை
ஏற்றுக் கொண்டு படிக்க வைக்கிறார்.

இவரைப் பொறுத்தவரை எந்த குழந்தையுமே படிக்காமல் இருக்கக்கூடாது. தொடர்ந்து மூன்று நாள் ஒரு மாணவன் வகுப்பிற்கு வராவிட்டால், என்னாச்சோ என்று அந்த மாணவனது வீட்டிற்கு தேடிப்போய் பார்த்து, சம்பந்தபட்ட மாணவன் பிரச்னையை தீர்த்து , வகுப்பிற்கு தொடர்ந்து
வரும்படி பார்த்துக் கொள்வார்.

எப்போதுமே வீட்டில் இருந்து தனக்கு போக மேலும் இரண்டு பேருக்கு சாப்பாடு கொண்டு வருவார், அவசரத்தில் சாப்பாடு கொண்டு வராமல் வந்துவிடும் பிள்ளைகளுக்கு கொண்டுவந்த கூடுதல் சாப்பாடை கொடுத்துவிடுவார். தன்னிடம் கூடுதலாக ஒரு நூறு ரூபாய் இருந்தால் கூட போதும்
உடனே அந்த நூறு ரூபாய்க்கு மிக்சர் போன்ற நொறுக்குத்தீனி வாங்கிவரச்
செய்து , குழந்தைகளிடம் வழங்கி மகிழ்ச்சியடைவார். இவரது வீட்டிற்கு
உறவினர்கள் வாங்கிவரும் இனிப்பு, காரத்தைக் கூட பள்ளிக்கு கொண்டுவந்து
பகிர்ந்து கொள்வார். விசேஷ நாட்களில் வீட்டில் செய்யும் விசேஷ உணவுகளும்
பள்ளி குழந்தைகளுக்குதான்.

வெறும் உணவு மட்டுமின்றி அவ்வப்போது ஜாமெண்ட்ரி பாக்ஸ், பேனா, ஸ்கூல் பேக் போன்றவைகளையும் வாங்கி கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்துவார். மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளார்.

இவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்த போது, இவரே வலிய
போய் தனக்கு ஏதாவது ஒரு சின்ன கிராமத்தில் வேலை போட்டு கொடுங்கள் என்று
கேட்டு அதன்படி கம்மாளபட்டி என்ற கிராம பள்ளிக்குதான் வேலை வாங்கிச்
சென்றார். அதே போல பணிமாறுதல் வரும்போதும் ஏதாவது கிராமத்தில் உள்ள
பள்ளிக்கே மாற்றிக்கொடுங்கள் என்று கேட்டு வாங்கிச் செல்வார். அந்த வகையில்
இப்போது சோழவந்தானை அடுத்துள்ள அய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியில்
தலைமை ஆசிரியராக இருக்கிறார்.

பள்ளிக்கூடத்திற்கு வந்துட்டா அவங்கெல்லாம் நம்ம பிள்ளைங்க, நம்ம பிள்ளைங்க இருக்கிற இந்த இடத்தை கோயில் மாதிரி வைச்சுக்கணும்னு சக ஆசிரியர்களிடம் சொல்லி அவர்களது ஒத்துழைப்போடு பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறார்.

எல்லாம் சரி கழிப்பறையை சுத்தம் செய்வது என்பதை ஒரு சிலர் கேலியாக நினைப்பார்களே என்றதும், "யார்
கேலியாக நினைத்தால் எனக்கென்ன, என் மனசு சொல்கிறது, நான் செய்வது சரிதான்
என்று. அது போதும் பிறகு ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்னுடைய பள்ளி
என்று இல்லை எந்த அரசு ஆரம்பபள்ளியிலும் கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு
என்று தனி சுகாதார பணியாளர் கிடையாது, ஒன்று மாணவர்கள் சுத்தம்
செய்யவேண்டும், அல்லது ஆசிரியர்கள் சுத்தம் செய்யவேண்டும், பெரும்பாலான
பள்ளியில் மாணவர்களை வைத்து சுத்தம் செய்வார்கள் எனக்கு அதில் உடன்பாடு
இல்லை, சக ஆசிரியர்களை, மற்ற வேலைகள் சொல்லலாம் கழிப்பறை சுத்தம்
செய்யுங்கள் என்று சொல்லமுடியாது ஆகவே நானே கழிப்பறை சுத்தம் செய்யும்
பணியில் இறங்கிவிட்டேன், எனக்கு இதில் எந்த தயக்கமும் கிடையாது. மாறாக
நிறைய மனத் திருப்திதான் உண்டாகிறது.' என்கிறார் சாந்தமாக.

பள்ளிக்குழந்தைகள் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களே ஏதாவது விசேஷ காரணம் உண்டா?
என்றபோது ,"எனக்கு ஒரு முறை உடல் நிலை மோசமானபோது பள்ளி குழந்தைகள்தான்
கண்ணீர்விட்டு அழுது பிரார்த்தனை செய்தனர், அவர்களது பிரார்த்தனையால்தான்
நான் இன்று உயிருடன் இருப்பதாக எண்ணுகிறேன். இப்படி உயிர் கொடுத்த
குழந்தைகளுக்கு நான் ஒன்றும் அதிகமாக செய்யவில்லை, என் கடமையையையும்,
கூடுதலாக என் நன்றிக்கடனையும் செலுத்துகிறேன்'' அவ்வளவுதான் என்ற தலைமை
ஆசிரியர் கில்பர்ட் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவரும்கூட, எவ்வளவோ
வற்புறுத்தி கேட்டு கொண்டும் கூட கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற போட்டோ
எடுக்க ஒத்துக் கொள்ளவில்லை, மேலும் இது எனக்கான மனதிருப்திக்காக
செய்கிறேன், ஆகவே பிறர் வாழ்த்த வேண்டும், பாராட்ட வேண்டும் என்று ஒரு
போதும் நினைப்பது கிடையாது, எப்போதுமே மற்றவர்களை முன்விட்டு கடைசி ஆளாக
நிற்பவன் நான் ஆகவே எனது போன் நம்பரும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
உங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையை உங்களுக்கு முன்னால் போக விடுங்கள்
அது போதும் உலகம் அன்பு மயமாகும் என்பதை தனது வேண்டுகோளாக குறிப்பிடும்படி
மெத்த பணிவுடன் கூறிவிடைகொடுத்தார்.

-தினமலர்



சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Mசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Uசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Tசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Hசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Uசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Mசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Oசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Hசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Aசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Mசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் Eசுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட்

Post by கரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 8:07 pm

இப்பதிவு ஏற்கனவே இருக்கிறது முஹமத். புன்னகை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர்
» பள்ளி ஆசிரியரை, தலைமை ஆசிரியர் எரித்து கொன்ற கொடூரம் !
» ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்
» மாமண்டூரில் நடனமாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்
» ஐந்தே நிமிடங்களில் மைதானத்தைச் சுத்தம் செய்யும் தென்னம் மட்டை வண்டி! அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் உருவாக்கம் #CelebrateGovtSchool

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum