ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்தமிழ் இயக்கத் தந்தை

5 posters

Go down

தனித்தமிழ் இயக்கத் தந்தை Empty தனித்தமிழ் இயக்கத் தந்தை

Post by சாமி Wed Feb 06, 2013 11:08 pm

தனித்தமிழ் இயக்கத் தந்தை - (டாக்டர் சி. இலக்குவனார் எழுதியது)

உலகமொழிகளின் தாயாம் தமிழ், ஆரியர் இந்நாட்டுக்கு வருவதன் முன்னர்க் கி.மு.1500க்கு முன்னர் வடாது மனிபடு நெடுவரையிலிருந்து தெனாது உருகெழு குமரிக்கடல் வரையில் இந்நாட்டு மக்களின் ஒரே மொழியாய் வழங்கியது, ஆரியம் இந்நாடிற்கு வந்து தமிழுடன் கலந்த பின்னர் வட இந்திய மொழிகளும் தென்னிந்திய மொழிகளும் தோன்றின.

வட இந்திய மொழிகளில் வடமொழிச்சார்பு மிகுதியாய் இருத்தலினால் வடமொழியில் கிளைமொழிகள் என்று கருதினாலும் அவைகளின் இலக்கண அமைப்புத் தமிழ்ச் சார்புடையதே. தென்னிந்திய மொழிகளாம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலியன வடமொழிக்கலப்பு மிகுதியாகப் பெற்றிராததனால் திராவிட மொழிகள் என்றேவ் அழைக்கப்படுகின்றன.

தொல்காப்பியக் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டு வரை வடவேங்கடம் தென்முலரியிடைத் தமிழ்கூறும் நல்லுலகமாக விளங்கியது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை நற்றமிழ் மொழி தமிழகத்தில் தனியாட்சி புரிந்தது. பின்னர்க் களப்பிரர், பல்லவர் ஆட்சியால் தமிழகத்தில் வடமொழிச் செல்வாக்கு மிகுந்தது. தமிழர்கள் தமிழைப் புறக்கணித்து வடமொழியை விரும்பிக் கற்று அதன் வளத்திற்கும் உயர்வுக்கும் உழைத்தனர். சமய வாழ்வுக்கும் கலை வாழ்வுக்கும் வடமொழி இன்றியமையாதது எனக்கருதினர். வடமொழிப் புலமையே உயர் நாகரிகத்தின் எடுத்துக்காட்டு என உளமார எண்ணினர். தமிழில் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதியும் பேசியும் மணிப்பிரவாள நடையொன்றைத் தோற்றுவித்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டவுடன் ஆங்கிலமே எல்லாத்துறையிலும் ஆட்சி புரிந்தாலும் வடமொழியின் செல்வாக்கும் குறைந்துவிடவில்லை. இந்திய மொழிகள் எல்லாம் வடமொழியின் புதல்விகள் என்ற கொள்கை வலுப்பெறத் தொடங்கியது.
இந்நாட்டில் தம் சமயத்தைப் பரப்ப வந்த கிறித்தவப் பெரியார்கள் இந்நாட்டின் மொழிகளையும் கற்றார்கள். கற்றபின்னர் தமிழின் சிறப்பை அறிந்து தமிழுக்குள்ள ஏற்றத்தை எடுத்து மொழிந்தனர். அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஒன்று எழுதித் தமிழின் தூய்மையை உலகறியச் செய்தார். ஆரியம் தமிழிலிருந்து பல சொற்களைக் கடன் பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டினார். திராவிட மொழிகள் ஆரியத்தின் சிதைவு மொழிகள் அல்ல என்று துணிந்து உரைத்தார். வடமொழியின் துணையின்றி தமிழ் தனித்தியங்கும் என்று நிலைநாட்டினார்.
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தனித்தமிழ் இயக்கத் தந்தை Empty Re: தனித்தமிழ் இயக்கத் தந்தை

Post by பூவன் Wed Feb 06, 2013 11:16 pm

தமிழின் பெருமை பேசும் பதிவு மகிழ்ச்சி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தனித்தமிழ் இயக்கத் தந்தை Empty Re: தனித்தமிழ் இயக்கத் தந்தை

Post by அசுரன் Wed Feb 06, 2013 11:54 pm

ஆம் தமிழால் தனித்து இயங்க முடியும்....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தனித்தமிழ் இயக்கத் தந்தை Empty Re: தனித்தமிழ் இயக்கத் தந்தை

Post by Muthumohamed Wed Feb 06, 2013 11:57 pm

அசுரன் wrote:ஆம் தமிழால் தனித்து இயங்க முடியும்....

இயங்க முடிகிறதே



தனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Uதனித்தமிழ் இயக்கத் தந்தை Tதனித்தமிழ் இயக்கத் தந்தை Hதனித்தமிழ் இயக்கத் தந்தை Uதனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Oதனித்தமிழ் இயக்கத் தந்தை Hதனித்தமிழ் இயக்கத் தந்தை Aதனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Eதனித்தமிழ் இயக்கத் தந்தை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தனித்தமிழ் இயக்கத் தந்தை Empty Re: தனித்தமிழ் இயக்கத் தந்தை

Post by சாமி Thu Feb 07, 2013 9:25 pm

இச்சூழ்நிலையில்தான் மறைமலையடிகள் தமிழின் தூய்மை காக்கத் தோன்றினார். சாமி வேதாச்சலம் என்ற பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். பிற மொழி கலவாத தூய தமிழில் எழுதுவது தமிழரின் கடன் என அறிவுறுத்தினார்.

ஆரியத்திலும் ஆங்கிலத்திலும் அளப்பரும் புலமை பெற்றார். மும்மொழிப் புலமையினால் முத்தமிழின் ஏற்றம் கருதித் தனியொருவராக நின்று போராடினார். அக்காலத்தில் தமிழைப் போற்றுவதென்றால் அவ்வளவு எளிதன்று. இன்று கூட தூயதமிழில் எழுதும், பேசும் தமிழ்ப்புலவர்களைத் தி.க., தி.மு.க என்று பெயர் சூட்டி விடுகின்றனர். அக்காலத்தில் ஆட்சியிலும் பிற துறைகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் ஆரியச் சார்புடையவர்களே. தனித்தமிழ் என்றால் அவ்வாறு கூறுகின்றவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவே முடியாது. பல இடர்ப்பாடுகளுக்கும் ஆளாக வேண்டிவரும்.

பெரியார் மறைமலைஅடிகள் எவற்றுக்கும் அஞ்சாது தமிழ்நலம் நாடிப் பல அரிய கருத்துக்களை வெளியிட்டார்.

தமிழை தூய்மையாகப் போற்ற வேண்டுமென்பது வடமொழியின் வெறுப்பாலன்று; தம் வீட்டுத் தாயைப் போற்ற வேண்டுமென்றால் பிறர் அன்னையர்களை வெறுக்கவேண்டுமென்று கொள்ளுதல் பொருந்துமா? அடிகளார் ஆங்கிலத்தையும் ஆரியத்தையும் வெறுத்தாரல்லர். ஆரிய நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தார். தாம் எழுதிய தமிழ் ஆராய்ச்சி நூல்களுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை எழுதினார். அம்மொழிகளை வெறுப்பின் அவ்வாறு செய்வாரோ?
அடிகளார் இனிய குரலில் அழகாகக் கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல் வன்மை பெற்றவர். சொற்செறிவும் பொருள் தெளிவும் சுவை நலமும் வாய்ந்த உரைநடை நூல்கள் எழுதி வெளியிட்டார். இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் எவரும் போற்ற எழுதினார். மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி என்று மனித இயல் பற்றிய மாண்புறு நூலும் எழுதினார்.

இன்றைய இலக்கியங்களில் தோன்றியுள்ள தமிழ் மறுமலர்ச்சிக்குக் கால்கோள் இட்டவரும் அடிகளாரே. அடிகளின்றேல் தனித்தமிழ் இல்லை./ அடிகளே தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாவார். அவர் வழி நின்று தமிழைக் காத்து வளர்த்தல் நம்மனோர் கடனாகும்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
மறைமலை வழி நிற்போம்;
மாண்புறு தமிழ் காப்போம்.


(டாக்டர் சி. இலக்குவனார் எழுதியது)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தனித்தமிழ் இயக்கத் தந்தை Empty Re: தனித்தமிழ் இயக்கத் தந்தை

Post by சிவா Fri Feb 08, 2013 11:32 am

பகிர்வுக்கு நன்றி சாமி!


தனித்தமிழ் இயக்கத் தந்தை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனித்தமிழ் இயக்கத் தந்தை Empty Re: தனித்தமிழ் இயக்கத் தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum