புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
432 Posts - 48%
heezulia
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
29 Posts - 3%
prajai
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_m10கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை)


   
   
R.SAKTHIVEL
R.SAKTHIVEL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/08/2009

PostR.SAKTHIVEL Sun Oct 25, 2009 6:52 am

சோற்றைப் பிசைந்து வாயருகே கொண்டு சென்றதுமே, குமரவேலுவுக்கு குமட்டி வந்தது. கையிலிருந்த கவளத்தை வட்டிலிலேயே போட்டுவிட்டு வெளியே ஓடினான். வாசலில் அவன் வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டது.
""என்னாச்சுடா கொமரு?'' என்றபடியே நடையோட்டமாக சென்றாள் அஞ்சலை.
இரண்டொரு வாய் சாப்பிட்டிருந்த மாசாணியும், குழப்பத்தோடு தன் கையிலிருந்த கவளத்தை முகர்ந்து பார்த்தான். ஒரு ரூபாய் ரேஷன் அரிசியின் புழுங்கல், குமருவுக்குப் பிடித்தமான மாட்டுக்கறி குழம்பு தான். செத்த மாட்டுக்கறி கூட அல்ல; இளங்கன்று இறைச்சி, விலை கொடுத்து வாங்கியது. சிறுசெலவெல்லாம் போட்டு, மசால் அரைத்து, ஆட்டுக்கறி மாதிரி ஜம்மென்று வைத்திருக் கிறாள் அஞ்சலை.
ஆசையாக பையன் சாப்பிடுவானே என்று பார்த்தால், "ஓய், ஓய்' என்று ஒமட்டி வாந்தியெடுக் கிறானே! சோற்றுக் கையோடு எழுந்துபோய், நிலைப்படியில் நின்று மாசாணியும் பார்த்தான். வேலிப் படலோரமாகக் குத்த வைத்து அமர்ந்து, வாந்தியெடுத்துக் கொண்டிருந்தான் குமரவேல். குனிந்து, ஆதரவாக அவனது முதுகை நீவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலை.



""ஏஞ்சாமீ... தலை வலிக்குதா? காச்சலடிக்குதா? இப்ப வேற எல்லாப் பக்கமும் பன்னிக்காச்சலு பரவீட்டிருக்குதுங்கறாங்கோ...'' என்றபடி, அவனது நெற்றியிலும், கழுத்திலும் புறங்கையால் தொட்டுப் பார்த்தாள். ""காச்சலும் ஒண்ணும் அடிக்கக் காணம்? பித்த வாந்தியா இருக்குமோ, என்னமோ!'' என்று விட்டு, வாசப்பானியிலிருந்து போசியில் நீரெடுத்து, ""இந்தா... வாய் கொப்புளி,'' என்று கொடுத்தாள். அவனும் இரண்டு, மூன்று முறை கொப்பளித்தான்.
"செரி வா! வந்து சாப்புடு.''
""இல்லம்மா... எனக்கு வேண்டாம். சோத்தப் பாத்தாலே வாந்தி, வாந்தியா வந்து வட்டல்ல பீயப் போட்டு வெச்ச மாதிரி இருக்குது.''
திடுக்கிட்டு விட்டான் மாசாணி . வட்டலில் மலத்தைப் போட்டு வைத்திருப்பதாகச் சொன்னால் யாருக்குத் தான் கோபம் வராது? ""ஏன்டா, திங்கற சோத்தப் பாத்தா நரகலாட்ட இருக்குதுங்கற?'' என்று கையை ஓங்க —
மருண்டு பின்வாங்கி கையுயர்த்தித் தற்காத்தபடியே, ""இல்லப்பா... இன்னைக்கு ஸ்கூல்ல கக்கூஸ் கழுவனனுப்பா, ப்ளஷ் நெறக்கா கொத, கொதன்னு நரகலு மொதங்கீட்டிருந்துச்சுப்பா. அப்பவும் வாந்தி வந்துச்சுப்பா. மத்தியானம் சாப்பட்டதெல்லாம் வெளிய வந்துருச்சு. இங்க வந்து சோப்பு போட்டுக் களுவியுங் கூட கையெல்லாம் நரகல் நாத்தம் அடிக்கிறாப்புடியே இருக்குதப்பா...!'' என்றான் குமரவேலு பரிதாபமாக.



மாசாணிக்கும், அஞ்சலைக்கும் வருத்தம் என்பதை விட பெருந் துக்கமாகவே இருந்தது. கழிவிரக்கத்தோடு குமரவேலுவை அரவணைத்தபடி வீட்டுக்குள் கூட்டி வந்தனர்.
""இந்தக் கொடுமை எப்பத்தான் தீருமோ சாமி கடவுளே! நம்ம சனத்துப் புள்ளைகளுக்கு என்னைக்குத்தான் விடிவு வருமோ...!'' என்று ஆற்றாமையுடன் அரற்றினாள் அஞ்சலை.
மொடக்குறிச்சி நடுநிலைப் பள்ளியில் இன்டர்வெல் சமயங்களில் மாணவ, மாணவிகள் சிறுநீர் கழித்து வந்தவுடன், வளவு மாண, மாணவியர் தான் தண்ணீர் சுமந்து வந்து ஊற்றி சிறுநீர் கழிப்பிடத்தை சுத்தப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகுப்பின் ஒரு பிரிவு வளவு மாணாக்கர்கள், அதேபோல ஆசிரியர்கள், ஆசிரியைகள் பயன்படுத்துகிற கழிப்பிடங்களையும் சுத்தப்படுத்த வேண்டும்.
வாரம் ஒருமுறை ஆசிரிய, ஆசிரியைகளின் மலக்கழிப்பிடத்தையும் தேய்த்துக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு நீளக் கைப்பிடியுள்ள ப்ரஷ் கூட கிடையாது. உரிகாய் (தேங்காய்) மட்டை சகுறி (தேங்காய் மஞ்சி) முதலானவற்றால் தான் கழுவ வேண்டியிருக்கும். கை கழுவ சோப்புக் கூட கொடுக்க மாட்டார்கள்; பசங்க பிள்ளைகள் ஏதாவது இலை, தலைகளைப் பிடுங்கி கசக்கிக் கழுவி, அந்த நாற்றத்தைப் போக்கிக் கொள்ள வேண்டியது தான்.
இருந்தாலும், குமரவேலு இவ்வளவு நாள் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது கிடையாது. ஆறாம் வகுப்பு படிக்கிற அவனை இந்த வருடம் தான் அங்கு சேர்த்தியிருக்கிறது. பள்ளிக்கூடம் துவங்கி இப்போது கால் பரீட்சை கூட முடிந்து விட்டது. இவ்வளவு காலம் இல்லாத அளவுக்கு இப்போது என்ன?
அவனிடமே கேட்டனர்.



கடந்த பத்துப் பதினைந்து நாட்களாக ஆசிரிய, ஆசிரியைகளின் மலக் கழிப்பிடம் நிரம்பி மலம் மிதக்கிறதாம். மலக்குழியை சுத்தப்படுத்த வேண்டும் அல்லது வேறு குழி தோண்ட வேண்டும் என்று வளவு மாணவர்கள் சொல்லியிருக்கின்றனர்.
"அதெல்லாம் இப்ப உடனடியா நடக்காது. என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ, தெரியாது. அத க்ளீன் பண்றது உங்க பொறுப்பு...' என்று கட்டளையிட்டிருக்கின்றனர் ஆசிரியர்கள் .
அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப்பகுதி. அண்டை அயல்களில் உள்ள காடு களங்களுக்குச் சென்று வீணான தகர, ப்ளாஸ்டிக் குவளைகளை பெற்று வந்து, மொண்டு கொண்டுபோய் செரங்காட்டில் ஊற்றி, கழிப்பிடத்தை சுத்தப்படுத்தியிருக்கின்றனர். அதன் பாதிப்புதான் இப்போது.
மொடக்குறிச்சி நடுநிலைப் பள்ளியில் வெகு காலமாகவே அந்த ஜாதிய ஆதிக்கம் நடந்து வருகிறது. தலித் மாணவ, மாணவிகள்தான் கழிப்பிடங்களைக் கழுவ வேண்டும். அது மட்டுமல்ல, அங்கு அவர்களுக்கு தனி பெஞ்ச். மேலும், உயர் ஜாதி மாணவ, மாணவிகளை அவர்கள் தொட்டுப் பேசக்கூடாது; தவறி தொட்டு விட்டால், விரல்களில் முட்டு, முட்டியாகப் பிரம்படி.
வளவுக்காரர்கள் எல்லாரையும் போல மாசாணியும் விவசாயக் கூலிப் பணியாளன்தான். பொதுத் தொழிலாக அதைச் செய்தாலும், வளவு ஆண்கள் குலத் தொழிலையும் செய்ய வேண்டுமென்பது ஊர் நிர்பந்தம். ஊரில் கோவில் திருவிழாக்கள், இழவுக் காரியம் என்றால் தப்பட்டை அடிக்கப் போவர். பிணக்குழி தோண்டுவது, பாடை கட்டுவது போன்றவற்றையும் செய்வர்.
முன்பு எடுப்புக் கக்கூசுகளாக இருந்த காலத்தில், மலமள்ளும் தொழிலுக்கும் போவர். தீண்டத் தகாதவர்கள் என உயர் ஜாதிகளால் ஒதுக்கப்படக் காரணமான இந்த இழிதொழில்களிலிருந்து விடுபட்டால் தான் அடுத்த தலைக்கட்டாவது மதிப்பிற்குரிய வாழ்வை அடைய முடியும் என்று பள்ளிக்கு அனுப்பினால், அங்கேயே அவர்கள் மலமள்ள நேர்ந்து விட்டதே! குமருவுக்குப் பிடித்தமான மாட்டிறைச்சி சோற்றை அவனால் ஒரு வாய் கூட உண்ண முடியாமல் ஆகிவிட்டதே என்று மனம் குமைந்தான் மாசாணி.
வாசலில் அஞ்சலையின் முறையீடுகளைக் கேட்டு எந்தக் கடவுள்களும் எட்டிப் பார்க்கவில்லை. அக்கம், பக்கத்து வீடுகளிலுள்ள வளவுவாசிகள் தான் வந்து என்ன, ஏதென விசாரித்தனர். நடந்த சம்பவங்களையும், தன் ஆவலாதிகளையும் சொன்னார்கள். நடுநிலை மாணவ, மாணவிகள் உள்ள அநேக வீடுகளிலும் இதேதான் நிலைமை என்று தெரிய வந்தது.
ஆணியில் மாட்டியிருந்த சட்டையை அணிந்து வெளியே வந்தான் மாசாணி. ""இத இப்புடியே விடக்குடாது; மத்த புள்ளைங்களோட தாய் தகப்பனுகளயும் பாத்துப் பேசிட்டு வாரன். வாடா, கொமரு!'' என்று, குமருவுடன் நடந்தான்.
வளவு பிரமுகர் அய்யாவு வீட்டில் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. வளவு மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர், குடும்பத்தவர்கள் மட்டுமின்றி, வளவுப் பெரியவர்கள், இளைஞர்கள், மற்ற பலரும் கூடியிருந்தனர்.
""இன்னைக்கு, நேத்தாங்க... பத்துப் பன்னெண்டு வருசமா இந்தக் கொடுமை நடக்குது. இதுக்கு ஒரு முடிவு கண்டே ஆகோணும்,'' என்றார் கைப்பையன்.
""இங்க எல்லாப் பக்கமும் .....களோட ஆதிக்கந்தானாச்சு! பள்ளிக்கோடத்து வாத்தியாருக, டீச்சர்கள்லயும் முக்காவாசிப் பேரு அவீகதான். மத்தவீகளும் மேல்சாதிக்காரங்க. எட்மாஸ்டர் வேற நம்ம பஞ்சாயத்துப் பிரசரெண்டோட சகலை! அவிக வெச்சது தான் அங்க சட்டம்.
""குடியானவீகளுக்கு, வளவுக்காரங்க பசக புள்ளைகளப் படிக்க அனுப்பறதே புடிக்காது. மாடு மேய்க்கக்கு பண்ணையத்தாளுகளுக்கு களை வெட்டறக்கு, அறுக்கப் புடிக்கன்னு நம்மாளுக இருந்தாதான் அவுங்களுக்கு சவுரியம்... மத்த சாதிக்காரங்களுக்குக் குடுக்கறதுல பாதிக் கூலி குடுத்தால் போதுமல்ல! அதுக்கு வளயில்லாம படிக்க அனுப்பறாங்களேன்னு கடுப்பு.



""அது மட்டுமில்ல... நம்மாளுக படிச்சு உத்தியோகத்துக்குப் போனா, குடியானவீகளப் பாத்து, "பண்ணாடி'ன்னு கையக் கட்டிட்டு நிக்க மாட்டாங்கல்ல! நம்மாளுக ஏதாவது ஆப்பீசராக் கீது இங்கெயே வந்துட்டா, இவுங்கள, "சார், மேடம்' னெல்லாம் குடியானவீக கூப்பிட வேண்டிவரும். குடியானவீக சாதி கெவுருதி என்னாகறது? அதனாலதான் படிக்கற வளவுக்காரப் பசங்க புள்ளைகள, "மேல் சாதிக்காரங்களோட மல மூத்தரத்த அள்ளிக் கொட்டுனவன் தானடா நீ' யின்னு, கலெக்டராகவே வந்தாலும், "எங்க மல மூத்தரத்த அள்ளிக் கொட்டுனவன்தான்டா நீ'யின்னு கேக்கலாமல்ல!'' என்று விளக்களித்தார் அய்யாவு.
""ஊர்க் குடியானவீக சொன்னாலும், பாடம் சொல்லிக் குடுக்கற வாத்தியாரு, டீச்சருக அதப் பண்ணலாமுங்களா? படிச்சவீக பண்பானவுங்க பண்ற காரியமா இது?'' என்று கேட்டான் மாசாணி.
""படிப்பறிவு இருக்கறவீக பிற்போக்கா நடந்துக்க மாட்டாங்க; தப்புத் தண்டா பண்ண மாட்டாங்கன்னு நாம நெனக்கறம்; ஆனா, நாட்டுல படிச்சவீகதான் நெம்ப வெகரமா எல்லாத் தப்பும் பண்றாங்க, படிச்சவங்க அதிகமானா, சாதி வெறி இருக்காதுன்னு நெனக்கறம்; ஆனா, படிச்சவுங்க பட்டதாரிக, டாக்டர் பட்டம் வாங்குனவுங்கதான் சாதிப் பேரால சங்கம், கட்சின்னு தொடங்கி வெறியாட்டம் போடறாங்க.
""எத்தனை எடத்துல வாத்தியாருக படிக்கற புள்ளைகள, சின்னக் கொளந்தைகன்னு கூட பாக்காம, சின்னா பின்னப்படுத்தியிருக்கறாங்க! அதே மாதிரித்தான் இங்கயும் வாத்தியாரு பசங்களுக்குள்ள சாதி வெறிய மூட்டியுடறாங்க,'' என்ற அய்யாவு, ""யாரும் அதப்பத்தி அங்க போயிக் கேக்கவேயில்லியா?'' என்று கேட்டார்.
""மூணாம் வருசம் போயிருக்கறமுங்க, "எந்த ஊருலயும் இல்லாதபடி இங்க மட்டும் என்னுங்சாமி இப்புடிப் பண்றீங்க?'ன்னு கேக்கப் போனா, "அங்கயே போக வேண்டியது தான்! இங்க வந்து படிக்க வெய்யுங்கன்னு ஆரு உங்கள வெத்தல பாக்கு வெச்சு அளைச்சா? வேண்ணா, இப்பவே "டிசி' வாங்கிட்டுப் போ!'ங்கறாங்க,'' என்றாள் தொளசா.
""நானுந்தான் போன வருசம் எம் பையன் புள்ளைகளக் கூட்டிட்டு நாயங் கேக்கப் போனன்! "என்னுங் பண்ணாடி, எங்க பசக புள்ளைகளுக்கு மட்டும் தனி பெஞ்சி?'ன்னு கேட்டா... "அதது இருக்கற எடத்துலதான் இருக்கோணும்'ங்கறாங்க,'' என்றார் கைப்பையன்.
""நீங்கல்லாம் தனியாப் போயிருப்பீங்க; இல்லாட்டி, ரெண்டு,மூணு பேர் மட்டும் போயிருப்பீங்க. நாளைக்கு எல்லாரும் சேந்து போவாம். அப்பத்தான் செரிவரும்,'' என்றார் அய்யாவு.
கும்பலாகத் திரண்டு வந்திருந்த வளவுக்காரர்களையும், மாணவ, மாணவிகளையும் பார்த்ததுமே தலைமையாசிரியருக்குத் தெரிந்து விட்டது. இந்த விவகாரம் தான் என்று. அத்தனை பேரும் உள்ளே வந்தால் அறையே நாறிவிடும் என்று ப்யூனிடம் நாற்காலியை வெளியே போடச் சொன்னார். வந்தவர்கள் வராந்தாவில் நிற்க, அவர் நாற்காலியில் நாட்டாமை தோரணையில் உட்கார்ந்து கொண்டு, ""என்னப்பா உங்க பஞ்சாயத்து?'' என்று எகத்தாளமாகக் கேட்டார்.
முன்னிலையில் நின்றிருந்த அய்யாவு,
""எங்க வளவுப் பசங்க, புள்ளைக ராத்திரிலிருந்து சாப்படவே இல்லீங் சார். வெடியால கூட வெறும் வகுத்தோடதான் இப்ப வந்திருக்குதுக. சோத்தக் கண்டாலே பள்ளிக்கொடத்துல கக்கூஸ் களுவி அள்ளிக் கொட்டுன நாபகத்துல வாந்தியெடுக்குதுக. அவுங்கள இனிமே கக்கூஸ் களுவச் சொல்லாம இருக்கணுங் சார். தனிப் பெஞ்சும் போடாம இருக்கோணும். அத சொல்றதுக்காகத்தான் வந்தோம்,'' என்றார்.
""பன்னெண்டு வருசமா இவுங்க வந்து சொல்லீட்டிருக்கற அதே விசியத்தத்தான நீயும் வந்து சொல்ற; நானும் அதயே தான் சொள்றன். இங்க இப்புடித்தான். இஷ்டமிருந்தா படிக்க அனுப்பு; இல்லீன்னா, "டிசி' வாங்கிட்டுப் போயிட்டே இரு.''
""நாங்க ஏனுங் சார், "டிசி' வாங்கீட்டுப் போகோணும்? இது கெவுர்மெண்டு ஸ்கூலு,'' என்று ஒரு இளைஞன் வெகுள, ""முந்திரிக்கொட்ட! சும்மார்றா!'' என்று அவனை அடக்கிவிட்டு தொடர்ந்தார் அய்யாவு.
""டிசி வாங்கீட்டு வேற ஸ்கூலுக்குப் போறது பெருசில்லீங்க சார். எங்க வேண்ணாலும் எங்க புள்ளைக படிக்கும்; ஆனா, நீங்கல்லாம் வாத்தியாருக இப்புடி நடந்துக்கறது நாயமாங் சார்? ஊர்ல மத்தவீக சாதி பாக்கறது, தீட்டு. பார்க்கறது, எங்கள ஒதுக்கி வெக்கறதுன்னு இருந்தாலும் பள்ளிக்கொடத்துல நீங்க அதப் பண்லாமாங் சார்? சாதி இல்லீன்னு பசங்களுக்கு பாடம் சொல்லிக் குடுக்கற வாத்தியாரு, டீச்சருகளே சாதிக் கொடுமை பண்ணுணா எப்புடீங்க சார்?''
""நான் வாத்தியாரு அதுவும் ஹெட் மாஸ்டரு! எனக்கு நீ பாடம் சொல்லித் தர்றயா? ஜாதி இல்லீன்னு எவன் சொன்னது? நான் ...ன் நீ... ன்ங்கறது இல்லாமப் போயிருச்சா? ஏட்டுச் சொரக்கா கறிக்காகுமா? ஜாதி இல்லீன்னு பாடத்துல எளுதீருந்தா ஜாதி இல்லாமப் போயிருமா? சக்கரைன்னு பேப்பர்ல எளுதி நக்குனா இனிக்குமா?
""ஜாதி இல்லீன்னு பாடத்துப் இருக்கறத சொல்றயே. உன் பையன் புள்ளைகள பள்ளிக்கொடத்துல சேத்தீல... அப்பொ, ஜாதி மதம் கேட்டு எளுதறமல்ல! நீங்களும் ஜாதி, சர்ட்டிபிக்கட்ட வெச்சுதான் சலுகை இடஒதுக்கிடு, இலவச வீடு வாசல்லர்ந்து ரேஷன் வரைக்கும் வாங்கறீங்க. அதுக்கு மட்டும் உங்களுக்கு ஜாதி வேணும்; மத்ததுக்கு வேண்டாமா?''
அய்யாவு உட்பட அனைவருமே விக்கித்தனர். ஒரு தலைமையாசிரியரே இப்படி பேசினால் என்ன சொல்ல முடியும்?
""ஐயாயிரம், ஆறாயிரம் வருசமா எங்க சமூகம் வருணாசிரமத்தால அடக்கி ஒடுக்கப்பட்டு, அடிப்படை மனித உரிமை கூட இல்லாம இருந்துச்சு. அதுலருந்து நாங்க விடுபடணும். ஒதுக்கீட்டையும், சலுகைகளையும் குடுத்தாவது எங்கள முன்னேத்தணுங்கறதுக்காகத்தானுங்க சார் ஜாதி சர்டிபிகேட். அத வெச்சு நாங்க சொத்து சுகமா சம்பாதிக்கிறோம்? ஏதோ இந்த நூற்றாண்டுலதான் முற்போக்கு சிந்தனையாளர்களோட போராட்டத்துனால எங்க சமூகம் ஓரளவுக்காவது மனித உரிமைகள அடைஞ்சிருக்குது.
""மேல் ஜாதிக்காரங்களோட ஜாதி வெறியும் வர, வர கொறஞ்சுட்டு வருது. ஆனா, நீங்க எதிர்கால சமூகத்த கடந்த காலத்துக்கு கூட்டிட்டு போய்ட்டிருக்கீங்க சார். பன்னெண்டு வருசமா நூத்துக்கணக்கான தலித் மாணவர்களோட மனசுல தாழ்வு மனப்பான்மையையும், மேல் ஜாதி மாணவர்களோட மனசுல ஜாதி வெறியையும் தூண்டிருக்கறீங்க. சமூகத்துக்கு வழிகாட்டியா இருக்க வேண்டிய நீங்க, சமூக சீர்கேட்டாளரா இருந்திருக்கறீங்க. இன்னும் அப்படியே இருக்கறீங்க! ஜாதி கலவரங்கள், மதக் கலவரங்கள், தீவிரவாத குண்டுவெடிப்புகள் - இதுக்கெல்லாம் சமமானது தான் நீங்க செய்யிற காரியம்!'' என்றான் கலியன்.



""பரவால்ல, நல்லாத்தான் பேசற! நீயும் இங்க கக்கூஸ் களுவி படிச்சவதான! அன்னைக்கு ஏன் பேசல?''
""இவுங்ககிட்டயெல்லாம் பேசி புரோஜனம் இல்லீங்க. பாக்கற வளீல பார்த்துக்கலாம். வாங்க,'' என்றான் மாசாணி.
""கலெக்ட்டருகிட்டயே வேண்ணாலும் போங்க ......ரக் கூட புடுங்க முடியாது,'' என்றவர், ""ப்யூன்... சேர எடுத்து உள்ள போடு. ஸ்டாபுக கையெழுத்து போடறக்கு லெட்ஜர எடுத்து வெய்யி,'' என்றபடி எழுந்து கொண்டார்.
அவர் உள்ளே சென்றதும், ""கலெக்ட்டர் வரைக்கும் போகோணுங்கறது கூட இல்ல. போலீஸ் ஸ்டேஷன்ல போயி கம்ப்ளெய்ன்ட் பண்ணுனாலே போதும், பசங்க, புள்ளைகளயும் கூட்டீட்டுப் போலாம். ஜாதிப் பேர சொன்னாங்கன்னாலே கேசு. இங்க இத்தன நடந்திருக்கு. கூண்டோட கோர்ட்டுக்கு இளுத்தர்லாம்,'' என்றான் கலியன்.
""வாங்க, புள்ளைங்களா...'' என்று மாசாணி, எல்லா மாணவ, மாணவிகளையும் அழைக்க, போவதா, வேண்டாமா என்று தயங்கி நின்றனர்.
""கிளாசுக்கு போகலீன்னா வாத்தியாரு, டீச்சருகல்லாம் அடிப்பாங்கன்னு பயந்துக்குதுகளாட்டிருந்தது. அதல்லாம் அப்பறம். இதுக்கு ஒரு முடிவு தெரியற வரைக்கும் உங்களுக்கு பள்ளிக்கொடமே கெடயாது, வாங்க!'' என்று கைப்பையனும் அழைத்தார்.
மாசாணியிடம், ""அப்பா, போலீசுல கேசு குடுக்க வேண்டாம்ப்பா! போலீஸ்காரங்க, வாத்தியாரு, டீச்சருகளயெல்லாம் அடிச்சா பாவம்ப்பா! மாதா, பிதா, குரு தெய்வம்ப்பா!'' என்றான் குமரவேலு.
""அந்த ஒணத்தி அவுங்களுக்கு வேணுண்டா! அது இல்லாததுனாலதான இந்த அக்கரமமெல்லாம் பண்றாங்க. அதுக்கு அந்த மாற பாடம் கத்துக் குடுத்தாத்தான் செரியாகும்.'' ""வேண்டாம், மாசாணி! கொளந்தீக கிளாசுக்கு போகட்டும். அவுங்க படிப்ப கெடுக்க வேண்டாம். நாம வேற வளீய பாத்துக்கலாம்,'' என்று அவர்களை அனுப்பினார் அய்யாவு.
மறுநாள் காலை-
தலைமையாசிரியர் அறை மற்றும் ஆசிரியர் அறையை திறந்த ப்யூன் மூக்கைப் பிடித்துக் கொண்டு பின் வாங்கினான். மிடுக்காக நடந்து வந்த ஆசிரியர்களும், ஸ்டைலாக குடையுடன் வந்த ஆசிரியைகளும் அதிர்ந்து பதறிப் புறமுதுகிட்டனர். இரண்டு அறைகளிலும் குவியல், குவியலாக மலங்கள்.
""நேத்தைக்கு வந்த ...... த்...... கதான் பண்ணியிருக்கறாங்க. ஓட்டைப் பிரிச்சு எறங்கீருப்பானுகளாட்ட இருக்குது. என்ன ஒரு ஏத்தம் பாருங்க அவனுகளுக்கு!'' என்றார் துணை தலைமையாசிரியரான துரைசாமி வாத்தியார்.
வண்டியெடுங்க... போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணுங்க... பிரசிடென்ட் நம்ம எச்.எம்., சகலைதான்! மொதல்ல அவருகிட்ட சொல்லலாம்' என்று ஆசிரியர்களுக்குள் சலசலப்பு. இதற்குள் குடலை புரட்டிக்கொண்டு ஆசிரியைகளில் பலரும், ஆசிரியர்களில் சிலரும் வாந்தியெடுக்க துவங்கி விட்டனர்.
பள்ளி வளாகத்தையே புரட்டிப் போட்டு விடுகிற மாதிரியான அந்த துர்நாற்றத்தை மற்ற மாணவ, மாணவிகள் மட்டும் எப்படி தாங்க முடியும்? வகுப்பு வந்து விட்டவர்களும், வந்து கொண்டிருப்பவர்களும், "ஓய், ஓய்' என்று ஆங்காங்கே வாந்தியெடுக்கலாயினர். பிறகு, நாற்றம் தாக்காதபடி மைதானத்திற்கு சென்று குழுமினர். ""யோவ், ப்யூன்! மொதல்ல அந்த கதவுகள சாத்துய்யா!'' என்று ஆணையிட்டுவிட்டு மரத்தடிப் பக்கம் ஒதுங்கி யோசனையுடன் நின்று கொண்டிருந்தார் தலைமையாசிரியர் .



வளவுக்கார மாணவ, மாணவிகள் தனியாக கொடிக் கம்பத்தருகே கூடி தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டிருப்பது சன்னமாக அவர் காதில் விழுந்தது. ""டேய், வேண்டாம்டா கொமரு! பள்ளிக்கொடத்துல கக்கூஸ், டாய்லெட் களுவச் சொன்னாக் களுவாதீங்க. அடிச்சாலும் செய்யவே செய்யாதீங்கன்னு நம்ம வளவுல சொல்லீருக்கறாங்கல்லடா!'' என்று, மற்றவர்கள் தடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை மீறி, தலைமை ஆசிரியரிடம் வந்து கை கட்டி நின்று, ""சார், நான் வேண்ணா, ரெண்டு ரூமையும் க்ளீன் பண்ணீர்றனுங் சார்,'' என்றான் குமரவேலு. அவர், அவனையே உற்றுப் பார்த்தார். நேற்று ஆசிரியர்களைப் பற்றி போலீசில் புகார் கொடுக்க வேண்டாமென்று தன் தந்தையிடம் மன்றாடி கேட்டுக்கொண்ட குரல் அவனுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று அவருக்கு தோன்றியது. அவனை அருகே அழைத்து ஒன்றும் சொல்லாமல் அவனது தலையை வருடிக் கொடுத்தார். அப்பால் நின்று அதை கவனித்துக் கொண்டிருந்த மற்ற வளவுப் பிள்ளைகளின் விழிகள் வியப்பில் விரிந்தன. மெல்ல ஒவ்வொருவராக நகர்ந்து குமரவேலுவின் பின்னால் வந்து நின்றனர். ""சார், நாங்க எல்லாரும் சேந்து கிளீன் பண்றங் சார்!'' என்றனர்.
தலைமையாசிரியரை நோக்கி வந்து கொண்டிருந்த நடராஜ் வாத்தியார் அதை கேட்டுவிட்டு, ""மொதல்ல அதப் பண்ணுங்க... போங்க... போங்க சீக்கிரம்,'' என்று முடுக்கினார். ""இல்ல... வேண்டாம்,'' தடுத்தார் தலைமையாசிரியர். ""வண்டி வெச்சிருக்கற வாத்தியாருக ரெண்டு, மூணு பேரு போயி, வளவுல இத க்ளீன் பண்றவுங்க இருந்தாக் கூட்டீட்டு வாங்க, அதுக்கு எவ்வளவு பணம் வேணுமோ, அதக் குடுத்தறலாம்ன்னு சொல்லுங்க. ஆங்.... முக்கியமான ஒரு விசியம், அவுங்கதான் இத செஞ்சாங்கன்னு யாரையும் திட்டவோ, அதப்பத்தி கேக்கவோ வேண்டாம்,'' என்று ஆசிரியர்களிடம் உத்தரவிட்டார்.
இன்னமும் கைகட்டி முன்னால் நிற்கும் வளவுப் பிள்ளைகளைப் பார்த்து, ""இனிமே நீங்க கக்கூஸ் க்ளீன் பண்ண வேண்டாம். டாய்லெட்ட சுத்தமா வெச்சுக்கறது எல்லா பசங்களுடைய பொறுப்பு. தனி பெஞ்ச் கெடையாது; கலந்துதான் உக்காரணும். ஒவ்வொரு க்ளாசுக்கும் நானே வந்து உக்கார வெக்கறேன். இத உங்க வீடுகள்லயும் சொல்லிருங்க, செரியா?'' என்றார்.""செரீங் சார்!'' பிள்ளைகள் மகிழ்ச்சியுடன், கோரசாக தலையாட்டினர்.
""செரி... இத க்ளீன் பண்ற வரைக்கும் எல்லாரும் க்ரௌண்டுக்கு போயி வெளையாடுங்க... ஓடுங்க!'' என்றார் முறுவலோடு. பிள்ளைகள், "ஹேய்' என்று உற்சாக கூச்சலிட்டபடி ஓடினர். "எல்லா பிள்ளைகளுமே கடவுளின் குழந்தைகள் தான்...' என்று தனக்குள் சொல்லி கொண்டார் தலைமையாசிரியர் .
***

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 25, 2009 8:49 am

நெஞ்சை நெருடவைத்த கதை.........


நன்றி சக்திவேல்...


...



கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Eegaraitkmkhan
கடவுளின் குழந்தைகள்! (சிறுகதை) Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக