புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_m10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_m10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_m10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_m10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_m10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_m10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_m10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_m10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_m10க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள்


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Feb 06, 2013 12:28 pm

கோட்டை முதல் டீக்கடை வரை ஹாட் டாப்பிக்காக இருந்த 'விஸ்வரூபம்’ ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு, அரசின் தடை, நீதிமன்ற முறையீடு, தியேட்டர்கள் மீது தாக்குதல்... எனத் திருப்பங்களைச் சந்தித்து வந்த, 'விஸ்வரூப’ விவகாரத்தில், தமிழக அரசு தலை யிட்ட பிறகு க்ளைமாக்ஸை நெருங்கியது!


சரியாக ஒன்றரை ஆண்டுகள் கழித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா. 'விஸ்வரூபம்’ விவகாரத்தில் அரசின் நியாயங்களைப் புட்டு புட்டு வைத்ததோடு, கமலையும் கருணாநிதியையும் ஒரு பிடி பிடித்தார். 'கமலும் முஸ்லிம் அமைப்புகளும் பேச்சு​வார்த்தை நடத்த, தமிழக அரசு உதவத் தயார்’ என்ற ஜெயலலிதாவின் பேட்டிக்குப் பிறகு, சமாதானப் படலம் தொடங்கியது. 'தமிழக அரசின் முன்னிலையில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கமல் தரப்பு அல்லாமல் கமலே பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தால்தான், விரை வான தீர்வை எட்ட முடியும்’ என்றது முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட் டமைப்பு.

அதன்படி, உள்துறை முதன்மைச் செயலாளர் ராஜகோபால் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை சனிக்கிழமை (2-ம் தேதி) நடந்தது. ராஜ கோபால் அறையில் 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், கமல் மற்றும் அவரது சகோதரர் சந்திர ஹாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட் டமைப்பின் சார்பில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனீஃபா, அப்துல் சமது, ஏ.கே.ரிபாயி, வடபழனி இமாம் தர்வேஷ் ரசாதி, மன்சூர் காஸ்மி, நிஜாமுதீன், முனீர், எஸ்.என்.சிக்கந்தர், ஜலாலுதீன், தெஹ்லான் பாகவீ, பக்ருதீன், உமர்பாரூக், இப்னு சவுது, தமிழ்நாடு தவ் ஹீத் ஜமாத் சார்பில் ரஹ்மத்துல்லா, ஷாதிக் என 20 பேர் பங்கேற்றனர். ஆனால், முக்கியமான ஐந்து பேர் மட்டுமே பேசினர். நான்கு மணி நேரத்துக்கும் மேல் நீண்ட பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? முஸ்லிம் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் தரப்பில் பேசித் திரட்டிய தகவல்கள் இங்கே...


உள்துறைச் செயலாளர் ராஜகோபால், 'எல்லோரும் மனம்விட்டு பேசுங்கள். திறந்த மனதோடு பேசுங்கள்’ என்று, பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்தார். முதலில் பேசிய கமல், ''உ.பி., கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் எல்லாம் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை'' என்று சொல்ல... ''தமிழ்நாட்டில் திரையிடத்தானே தமிழில் படம் எடுத்து இருங்கீங்க... தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் பேசுங்கள். தேவைஇல்லாமல் பேசி நேரத்தை விரயம் ஆக்க வேண்டாம். சப்ஜெக்ட் மாற வேண் டாம்'' என்று கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார் ராஜகோபால். அதைஅடுத்து, தன்னுடைய படத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை கமல் நியாயப்படுத்திப் பேசினாராம்.

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முந்தைய தினம் புரசைவாக்கத்தில் தனியாகக் கூட்டம் நடத்திய முஸ்லிம் கூட்டமைப்பினர், எந்தெந்தக் காட்சி​களை நீக்க வேண்டும் எனப் பட்டியல் தயாரித்தனர். கட்டாயம் நீக்க வேண்டும்; நீக்க வேண்டும்; நீக்கினால் நல்லது... என மூன்று வகையாகக் காட்சிகள் பிரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். முஸ்லிம் கூட்டமைப்பினருக்கு ஜனவரி 21-ம் தேதி கமல் படத்தைக் காட்டியபோது ஆலிம்கள் (மார்க்க அறிஞர்கள்) சிலரும் அதில் இருந்தனர். படத்தில் ஒலித்த அரபி வசனங்களை அவர்கள் குறிப்பு எடுத்து வைத்திருந்தனர்.


'' 'மெல்லிய இதயம் உள்ளோர்க்கு ஒரு எச்சரிக்கை. தினம் உலகச் செய்திகளில் காணும் வன்முறைக் காட்சிகள் சில எம் படத்திலும் கதைக்கேற்ப சித்திரிக்கப்பட்டுள்ளது. திடமனதுடன் காண்க’ என்று படத்தின் ஓப்பனிங்கில் திரையில் காட்டப்படும் வாசகத்துக்கு முன், கமல் திரையில் தோன்றி 'இந்தப் படம் முழுக்க முழுக்கக் கற்பனையானது. யாரையும் எந்தச் சமூகத்தையும் குறிப்பாகக் குறிக்கவில்லை’ என்று சொல்ல வேண்டும்'' என்றனர் முஸ்லிம் பிரதிநிதிகள். ''திரையில் தோன்றி சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். வாய்ப்பு இல்லை எனில் எழுத்துகள் போட்டு, எனது குரலை மட்டும் பதிவு செய்கிறேன்'' என்று கமல் சொன்னதை ஏற்றுக் கொண்டனர்.


''படத்தில் வரும் குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும்'' என்று முதல் கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்தையும் நீக்க ஒப்புக்​கொண்ட கமல், ''குர்-ஆன் வசனம் வரும் இடங்களில் ஒலி இல்லாமல் (மியூட்) செய்து விடுகிறேன்'' என்றார். படத்தில் கமல் கேரக்டர் முஸ்லிமாகத் தெரியவரும் காட்சியில், 'ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்


த​ன் வஃபில்...’ எனத் தொடங்கும் குர்-ஆன் வசனத்தை ஓதுவார். அதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. தலிபான் தலைவர் கேரக்டரான உமர் பேசும் காட்சியில், 'மதுரை​யிலும் கோவையிலும் இரண்டு ஆண்டுகள் இருந்தேன். அதனால், தமிழ் பேசத் தெரியும்’ என்ற வசனத்தையும் நீக்க வேண்டும் என அடுத்த கோரிக்கை வைத்தனர். அதற்கு கமல், ''இந்தி 'விஸ்வரூப’த்தில் ஹைதராபாத், உ.பி என பெயர் வரும். தமிழில் கோவை, மதுரை என வைத்தேன். இதை நீக்குவது படத்துக்கு சரியாக இருக்காது'' என்றார். ஆனால், இதை முஸ்லிம் கூட்டமைப்பினர் ஏற்றுக்​கொள்ளவில்லை. கடைசியில், அந்த வசனத்தை நீக்க ஒப்புக் கொண்டார் கமல்.


படத்தில் தீவிரவாதி ஒருவனின் கழுத்தைக் கொடூரமாக அறுக்கும் காட்சியில் பின்னணியில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது இதற்கு பொருள்) என்ற வாசகம் எழுதப்பட்டு இருக்கும். இந்தக் காட்சியை நீக்க வேண்டும் என்று சொன்னபோது ''காட்சியை நீக்காமல் அந்த வாசகத்தை மட்டும் நீக்கி விடுகிறேன்'' என்றார் கமல். அடுத்து, ஜிஹாத் (புனிதப் போர்), ஜிஹாதி (போராளி) என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் எனப் பேச்சு வந்தது. அதற்கு, ''ஜிஹாதி என்பது உலகம் முழுவதும் சொல்லப்படும் ஒரு வார்த்தைதான். அது இருப்பதில் தவறு இல்லை'' என்றார் கமல். படத்தில் 'ஐந்து லட்சத்தை விட விலை மதிப்பு மிக்கவன் தமிழ் ஜிஹாதி’ என்ற வசனம் வரும். அதை மட்டுமாவது நீக்க வேண்டும் என்று சொன்னதை கமல் ஒப்புக்கொண்டார். ''படத்தில் முக்கியமான இடங்களில் 'அல்லாஹு அக்பர்’ (இறைவன் பெரியவன்) என்ற குரல்கள் வரும். அவை நீக்கப்பட வேண்டும்'' என்பது ஏற்றுக்கொள்ளப் பட்டது.


''படத்தில் வரும் தொழுகைக் காட்சிகள் அனைத்​தும் நீக்கப்பட வேண்டும்'' என்றனர். கமலோ, க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் தொழுகைக் காட்சியை மட்டும் நீக்குவதற்கு விடாப்பிடியாக மறுத்தார். நைஜீரிய இளைஞர் ஒருவர் தொழுகை நடத்திவிட்டு குண்டு வைக்கும் காட்சி மட்டும் பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கப்பட்டு இருக்கிறதாம். தொழுகையில் நின்று சலாம் சொல்லும் வரை அங்குலம் அங்குலமாக எடுக்கப்பட்டு இருக்கும். ''இந்தக் காட்சியை நீக்க எனக்கு கொள்கை அளவில் சம்மதம். ஆனால், படம் முழுவதுமே ஆரோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் காட்சிக்கு மட்டும் பல கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆரோ தொழில்நுட்பம் உலகில் அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும்தான் உண்டு. காட்சியை மாற்ற வேண்டுமானால், நிறைய நாட்கள் தேவை. பணமும் விரயம் ஆகும்'' என்றார் கமல். ''எப்படியாவது நீக்க முயற்சி செய்யுங்கள்'' என்று கேட்டனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். ''அதற்கு வாய்ப்பு இருக்​கிறதா எனப் பார்க்கிறேன்'' எனச் சொல்லி 'போனில் பேசலாமா?’ என அனுமதி கேட்டு, அமெரிக்காவுக்குத் தொடர்பு கொண்டார். கடைசியில் அந்தக் காட்சியை மட்டும் இருக்க சம்மதித்தனர். இந்தக் காட்சிக்காக மட்டுமே முக்கால் மணி நேரத்துக்கும் மேல் பேசி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ''படத்தின் க்ளை மாக்ஸ் காட்சியான இதை நீக்கினால், படத்தின் மொத்த ஹைலைட்ஸே அந்தக் காட்சிதான். படத்தின் கதை சாராம்சமே சிதைந்து போய்விடும்'' என்று கமல் தழுதழுத்தபோது, மொத்தக் கூட்டமும் கொஞ்ச நேரம் நிசப்தம் ஆனது. அந்தச் சூழ்நிலையில் கமல் இன்னும் மனம்விட்டுப் பேசட்டும் என்று அங்கே இருக்க விரும்பாமல், வெளியே வந்து இருக்கிறார் ராஜகோபால்.


பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, ஒப்பந்தம் தயாரிக்​கும் வேலை நடந்து கொண்டு இருந்தது. அதுவரை, உள்துறைச் செயலாளர் அறைக்குப் பக்கத்தில் இருந்த மாநாட்டுக் கூடத்தில் கமலும் முஸ்லிம் பிரதிநிதிகளும் அமர்ந்து இருந்தனர். அப்போது, இருதரப்பினரும் மனம் திறந்து பேசினர். ''வாங்க உரிமையோடு சண்டை போடலாம்'' என்று கமல் ஜாலியாக சொல்லிக் கொண்டே உள்ளே போய் அமர்ந்தார். ''நீங்கள் எப்படி நாட்டைவிட்டு போகலாம் என்று சொன்னீர்கள்?'' என்று முஸ்லிம் பிரதிநிதிகள் கேட்டபோது, ''நான் அப்போதுகூட துபாய்தான் போவேன் என்று சொல்லி இருக்கிறேன்'' என்று பதில் சொன்னார் கமல். ''மும்பையில் காவித் தீவிரவாதம் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம், பச்சை தீவிரவாதம் பற்றி பதில் சொல்லி இருக்கிறீர்கள்'' என்று முஸ்லிம் பிரதிநிதிகள் கேட்டனர். ''நான் பச்சை தீவிரவாதம் பற்றி மட்டும் அல்ல... காக்கி, வெள்ளைத் தீவிரவாதம் பற்றியும் சொன்னேன்'' என்றார் கமல். ''இது முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினர்தான் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்'' என்று சொன்னார். ''இது எப்படி சரியாகும்?'' என்று முஸ்லிம் பிரதிநிதிகள் கேட்டு இருக்கின்றனர். ''பிராமணப் பெண் கேரக்டர் கறி சாப்பிடுவதுபோல காட்சி வருகிறது'' என்று சொல்லி இருக்கிறார் கமல். அப்போது அவர் செல்போன் ஒலிக்க... எடுத்துப் பேசியவர், ''பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்து டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள் என தகவல் வந்து இருக்கிறது'' என்றார். ''அமெரிக்க நியாயத்தைச் சொல்லும் நீங்கள் தலிபான்களின் நியாயத்தையும், அவர்களை அழிக்க முயன்ற ரஷ்யாவையும் தலிபான்களுக்குத் துணைபோன அமெரிக்காவின் வரலாற்றையும் காட்டி இருக்க வேண்டும். அதை ஏன் படத்தில் சொல்லவில்லை?'' என்று கமலிடம் கேட்டபோது, அவர் சரியான பதிலைச் சொல்லவில்லையாம். ''என் அண்ணன் சந்திரஹாசனின் மகள் ஒரு முஸ்லிமைத்தான் காதலித்து மணம் முடித்து இருக்கிறார். அந்த வகையில் முஸ்லிம் மருமகனும் சம்பந்தியும் எங்களுக்கு உண்டு'' என்று கமல் சொன்னாராம்.


பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் தயாரான​போது... ராஜகோபால் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அறைக்குச் சென்று முதல்வரின் செயலாளர்களிடம் போனில் பேசி தகவல்​களைச் சொன்னாராம். இறுதியில் ஒப்பந்தம் ரெடியானது. ஒப்பந்தத்தை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாதான் தயாரித்தார். இரு தரப்பும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததும் ஒருவழியாகப் பிரச்னை தீர்ந்தது!




avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Feb 06, 2013 12:33 pm

க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Resize20130205194443

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 06, 2013 12:45 pm

அம்மா நீங்க புட்டு புட்டு வைக்காமலே
விஸ்வரூபத்தை புட்டுக்க வைக்க நீங்க
செஞ்ச அனைத்தும் தான் எங்களுக்கு
பிட்டு பிட்டா அப்பப்ப தெரிஞ்சிடுச்சே!!!




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 06, 2013 1:31 pm

இந்தப் பிரச்சனை மூலம் அனைவரின் சுயரூபமும் அடையாளம் காணப்பட்டுள்ளது!



க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 06, 2013 2:07 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 06, 2013 2:14 pm

விஸ்வரூபம் தட்டு தடுமாறி வெள்ளித்திரையை தொட போகிறது.! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 06, 2013 2:20 pm

அருண் wrote:விஸ்வரூபம் தட்டு தடுமாறி வெள்ளித்திரையை தொட போகிறது.! சூப்பருங்க
ஆரம்பத்தில் தள்ளாடினாலும் ஸ்டெடியா வந்துடிசே அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் க்ளைமாக்ஸை மட்டும் நீக்க முடியாது! கமலின் 'விஸ்வரூப' பேச்சுவார்த்தைக் காட்சிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக