Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Today at 11:34 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:58 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 4:23 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 4:16 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 12:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:02 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 10:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:23 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 1:37 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:31 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:25 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:23 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:21 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:30 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:28 pm
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:26 pm
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:24 pm
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:22 pm
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:21 pm
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:20 pm
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:19 pm
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:17 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரத்தில் ஒரு சட்டம்!
3 posters
Page 1 of 1
அவசரத்தில் ஒரு சட்டம்!
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க சட்டத்தையும் தண்டனையையும்கடுமையாக்க வேண்டியது எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்கு அதை வெளிப்படையாகவும், விவாதங்களுக்குப் பிறகும் அமல்படுத்துவது அவசியம். ஆனால் மத்திய அமைச்சரவை, இது தொடர்பான அவசரச் சட்டத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதலும் பெற்றுவிட்டது.
-
அவசரச் சட்டத்தை அமல்படுத்தினாலும் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல்பெற்றாக வேண்டும். இன்னும் இரு வாரங்களில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இந்த சட்டத்தை, அவையின் முதல் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள எந்த எதிர்க்கட்சியும் மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை. நீதியரசர் வர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளின்அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் யாரும் தடையாக இருக்கப் போவதில்லை. பிறகு ஏன் இந்த அவசரம்? எதற்காக இந்த அவசர முடிவு?
-
ஏனென்றால், நீதியரசர் வர்மா கமிஷன் பரிந்துரைத்ததில் பலவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் காரணம். இவர்கள்ஏற்க மறுத்துள்ள அம்சங்களை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காகத்தான் இவ்வாறு அவசரச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
-
பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் தரும் புகார்களைப் பதிவு செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டும், மேலும், சிறப்புப் படை அல்லது காவல்துறையினர் பணிக்காலத்தில் இதுபோன்ற பாலியல் வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி விசாரணை நடத்த வேண்டும், அந்த அராஜக செயலுக்காக அவர்களுக்குத் தலைமை ஏற்றிருந்த அதிகாரி மீதும் வழக்கு தொடுக்க வேண்டும் என்று வர்மா கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், அது குறித்து இந்த அவசரச் சட்டம் மௌனம் காக்கிறது. பாலியல் புகாரில் சிக்கிய அரசியல்வாதிகள் குறித்தும்பேச்சே காணோம்.
-
மணவாழ்வில் ஒரு பெண் சந்திக்க நேரும் பாலியல் வன்முறைக்கும் தண்டனை வழங்க இக்கமிஷன் பரிந்துரை செய்தது. ஆனால், அதுபற்றியும் மத்திய அமைச்சரவை அக்கறை கொள்ளவில்லை. திராவக வீச்சில் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ உதவியை அரசே ஏற்பது குறித்தும் பேச்சே இல்லை.
-
ஆனால், வர்மா கமிஷன் பரிந்துரைக்காத மரண தண்டனையை மத்திய அமைச்சரவை தன்னிச்சையாகப் பரிந்துரைத்துள்ளது.
பாலியல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்து, தில்லி பாலியல் படுகொலைச் சம்பவத்தில் பரவலாக இருந்தபோதிலும், பெண்கள் அமைப்புகள் இதற்கு மாறான கருத்தை முன்வைத்ததால்தான், இந்த தண்டனையைத் தான் பரிந்துரைக்கவில்லை என்று வர்மா கமிஷன் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும்கூட, அரிதினும் அரிதான நேர்வுகளில் மரண தண்டனை அளிப்பதில் நீதிபதியின் விருப்புரிமைக்கு இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது.
-
தில்லி பாலியல் வழக்கில் மிக விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு, மிக விரைவில் குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், இது குறித்து மத்திய அரசு விரைந்து செயல்படுவது மகிழ்ச்சிதான்.ஆனால் அதை முறைப்படி, இரு வாரங்களில் கூடவிருக்கும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உள்படுத்தி சட்டத் திருத்தமாகவே நிறைவேற்றலாமே என்பதுதான் நமது கேள்வி. ஒரு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்போது, முன்தேதியிட்டு அமல்படுத்தவாய்ப்பு உள்ளது. ஆனால் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தமுடியாது. இந்த அவசரச் சட்டம், தற்போது தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் படுகொலை வழக்குக்குப் பொருந்துமா என்றால், பொருந்தாது. அப்படியானால், யாரைக் காப்பாற்ற மத்திய அமைச்சரவை முயல்கிறது?
-
தற்போதைய தில்லி பாலியல் படுகொலை வழக்கில், மக்கள் கோபம் கொண்டிருக்கும் விவகாரம் - 6 பேர் கும்பலில், மிக வெறித்தனமாகஇயங்கி அப்பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கிய நபர் "பதினேழரை வயது சிறுவன்' என்பதால், அவனை சிறார் நீதிமன்றத்தில் விசாரிப்பது பற்றியே! சட்டப்படி அவன் சிறுவனாக இருக்கலாம். ஆனால் அவன் செய்த செயல் சிறுவனுக்கு உரித்தானது அல்ல என்பதுதான் மக்கள் கருத்தாக இருக்கிறது.
-
சிறார் வயது 18 என்பதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்றகோரிக்கையை வர்மா கமிஷன் பரிந்துரைக்க மறுத்துள்ளது.இருப்பினும், அரிதினும் அரிதான நிகழ்வுகளிலும், சிறார் ஈடுபடும் குற்றத்தின் கடுமையை வைத்து அவர்களைப் பொது நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்பதை இந்த அவசரச் சட்டம் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அதை ஏன் மத்திய அரசு செய்யவில்லை?
-
வர்மா கமிஷன் 29 நாள்களில் அறிக்கை கொடுத்தது. அதேபோன்று இவர்களும் விரைந்து செயல்பட்டதாகக் காட்டிக்கொள்ளவும் வேண்டும். அரசு இயந்திரத்தில் அங்கமாக இருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும். ஆகவே கமிஷன் பரிந்துரைத்த சில முக்கியமான பரிந்துரைகளை எடுத்துக்கொள்ளாமல், பரிந்துரைக்கப்படாத மரண தண்டனையை எடுத்துக்கொண்டு, தங்களை அப்பழுக்கில்லாதவர்களாக காட்டிக்கொள்ள நினைக்கிறதுமத்திய அரசு.
-
பிரச்னைகளை விவாதிக்காமல் அமைச்சரவை மட்டுமே முடிவு செய்துள்ள இந்த அவசரச் சட்டம் பலன் அளிக்காது என்றும், இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் பெண்கள் அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனாலும் குடியரசுத் தலைவர் இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.
-அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்த கோலம் போல ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது மத்திய அமைச்சரவை. உளப்பூர்வமான முனைப்புடன் அல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அரசின் குறிக்கோளாக இருக்கும்போது, இந்த அவசரச்சட்டத்தால் முழுப் பயன் பெண்களுக்குக் கிடைக்குமா?எங்கேயோ, ஏதோ இடிக்கிறது!
-
தினமணி

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: அவசரத்தில் ஒரு சட்டம்!
இதையடுத்து இச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு குழு போராட்டம் செய்யும், அதையும் மிகைப்படுத்தி மீடியாக்கள் லாபம் பார்க்கும்..
உடனே அனைத்து இணைய தளங்களிலும் இதன் சாதக பாதகங்கள் விவாதிக்கப்படும், கடைசியில் இந்தியாவின் பெண்களின் நிலைமை அதே நிலையில் தான் இருக்கும்...

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அவசரத்தில் ஒரு சட்டம்!
மிகசரியாக சொல்லியுள்ளீர்கள் சதாசிவம் .....சதாசிவம் wrote:இதையடுத்து இச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு குழு போராட்டம் செய்யும், அதையும் மிகைப்படுத்தி மீடியாக்கள் லாபம் பார்க்கும்..
உடனே அனைத்து இணைய தளங்களிலும் இதன் சாதக பாதகங்கள் விவாதிக்கப்படும், கடைசியில் இந்தியாவின் பெண்களின் நிலைமை அதே நிலையில் தான் இருக்கும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum