ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவன்தான் மனிதன்

2 posters

Go down

இவன்தான் மனிதன் Empty இவன்தான் மனிதன்

Post by mukildina@gmail.com Fri Feb 01, 2013 3:44 pm

இவன்தான் மனிதன்
(சிறுகதை)

கடவுளுக்குக் கொடுப்பதை நிறுத்தி விட்டு
துன்பப்படுபவர்களுக்குக் கொடு
அவர்களுக்கு நீ கடவுளாகத் தெரிவாய்!
-அன்னை.தெரசா-
***

குடிசைக்கு வெளியே தன் ஹைதர் காலத்து சைக்கிளைத் துடைத்துக் கொண்டிருந்த அங்கமுத்துவின் அருகில் வந்து குழைந்தாள் அவன் மனைவி சரோஜினி.

'என்னடி…என்ன சமாச்சாரம்?..நீ குழையறதைப் பாத்தா எதுக்கோ அடி போடுறேன்னு நல்லாத் தெரியுது…என்னன்னு சொல்லித் தொலை…”

'வந்துங்க தெனமும்….பழையதையும்..கீரைத் துவையலையுமே தின்னு தின்னு சலிச்சுப் போன கொழந்தைக இன்னிக்கு பூரிக் கிழங்கு வேணுமின்னு கேக்குதுக…”

'விருட்”டென்று நிமிர்ந்தவன் 'என்னது…பூரிக்கெழங்கா?…ஏய்..அது செய்யணும்னா…பூரி மாவு வாங்கணும்….உருளைக் கெழங்கு வாங்கணும்…எண்ணை வாங்கணும்….எங்க இருக்கு அதுக்குப் பணம்?”

'அதான் அந்த உண்டியல்ல முக்கால் வாசி நெறைஞ்சிருக்கல்ல… அதிலிருந்து…”

'ச்சே….அந்தப் பேச்சே ஆகாது….அது சாமி கோயிலுக்குப் போறதுக்குன்னு போட்டுட்டு வர்ற காசு…”

'அட..அது எல்லாத்தையுமா எடுக்கச் சொல்றேன்…கொஞ்சமா எடுத்தா என்ன?”

'ம்ஹூம்…அது சாமி காசு…தொடப்படாது..அவ்வளவுதான்..” கறாராய்ச் சொன்னவனைக் கோபமாய்ப் பார்த்து முனகியபடியே குடிசைக்குள் சென்றாள் சரோஜினி.

அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

'ஏங்க..கொழந்தை ஜூரத்துல அனத்திட்டுக் கெடக்கு…டவனாஸ்பத்திரிக்கு இட்டுட்டுப் போலாம்ங்க”

'அடடா…இப்பக் கைவசம் காசில்லையே” தாடியை 'வரட்..வரட்” டென்று சொறிந்தவன் 'சரி…கொழந்தையத் தூக்கிட்டுக் கௌம்பு…நம்ப வைத்தியர்கிட்டக் கொண்டு போய்க் காட்டுவோம்…அவரு ஜூரத்துக்கு ஏதாச்சும் பச்சிலைச் சாறு தருவாரு”

'வேண்டாங்க..அந்த உண்டியல்ல இருந்து கொஞ்சம் பணம் எடுத்திட்டுப் போயி டவனாஸ்பத்திரியிலேயே காட்டலாம்ங்க”

'ஏய்…நீ என்ன எப்பப் பார்த்தாலும் அந்த உண்டியல் மேலேயே குறியா இருக்கே…நான்தான் சொல்றேனே…அது சாமி கோயிலுக்குப் போறதுக்குன்னு சேர;க்கற காசுன்னு…அதைத் தொடப்படாது…புரிஞ்சுக்க”

அதற்கு மேல் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாத சரோஜினி குழந்தையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டாள் வைத்தியர் வீட்டுக்கு.

நான்கு நாட்களுக்குப் பிறகு,

'அப்பா…எங்க இஸ்கூல்ல பொருட்காட்சிக்குக் கூட்டிட்டுப் போறாங்க….அதுக்கு இருபத்தஞ்சு ரூபா கொண்டாரச் சொன்னாங்க” மூத்தவன் கோரிக்கை வைக்க,

'அடப் போடா இவனே!…அந்தப் பொருட்காட்சி சனியனெல்லாம் பணக்காரப் பயலுவளுக்குத்தான்…நம்ம மாதிரி ஏழைப்பட்டவங்களுக்கல்ல…”

பையன் கண்ணைக் கசக்க அம்மாக்காரி வந்தாள் அவனுக்கு ஆதரவாய்.

'அந்த உண்டியல்ல இருந்து கொஞ்சம் காசை எடுத்தாத்தான் என்னவாம்?”

'பார்ரா….எத்தனை தடவ சொன்னாலும் திரும்பத் திரும்ப அதையே கேக்குறதை!….ஏய்…அது சாமி கோயிலுக்குடி….எடுக்கப்படாதுடி”

அன்று ஞாயிற்றுக் கிழமை.

குடிசைக்கு வெளியே அமர்ந்து பீடியை உறிஞ்சிக் கொண்டிருந்த அங்கமுத்து சற்றுத் தொலைவில் ஒரு வயதான பெண்மணி மிகவும் சிரமப்பட்டு தள்ளாடித் தள்ளாடி நடந்து வருவதைப் பார்த்து நெற்றி சுருக்கி யோசித்தான். 'யாரு இந்தம்மா,”

அவன் குடிசைக்கு அருகில் வந்ததும் அப்பெண்மணி சட்டென்று மயக்கம் போட்டு விழ பாய்ந்தோடினான் அங்கமுத்து.

அவசர அவசரமாய் அவள் முகத்தில் நீர் தெளித்து உசுப்பினான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அப்பெண் லேசாய்க் கண் விழிக்க கேட்டான். 'தாயி…ஆரு தாயி நீ?…இங்க வந்து மயக்கம் போட்டு விழறியே என்னாச்சு தாயி உனக்கு?”

அவளோ பதிலேதும் சொல்லாமல் 'பசி…பசி” என்று பிதற்றினாள்.

'என்ன தாயி வயிறு பசிக்குதா?”

அவள் மேலும் கீழுமாய்த் தலையாட்ட,

'ஏய்…சரோஜினி….உள்ளார போயி சாப்பிட ஏதாச்சும் கொண்டாடி..”

அவள் நகராமல் நின்ற இடத்திலேயே நின்று கைகளைப் பிசைந்தாள்.

'ஏண்டி..நிக்கறே?..வீட்டுல ஒண்ணுமில்லையா?”

'ஆமாங்க இப்பத்தான் பாத்திரத்தையெல்லாம் கழுவிக் கவுத்து வெச்சுட்டு வர;றேன்”

'அட என்ன புள்ள நீ?” என்று சலித்துக் கொண்டவன் வேடிக்கை பார்க்கக் கூடியிருந்தவர்கள் பக்கம் திரும்பி 'ஏங்க…யாராச்சும் வீட்ல இருந்து கொஞ்சம் சாப்பாடு கொண்டு வாங்களேன்…பாவம்…இந்தம்மா பசியாலதான் மயங்கி விழுந்திருக்கு…” என்றான்.

அவன் அப்படிக் கேட்ட மறுநிமிடம் அந்த இடம் காலியானது. வேடிக்கை பார;க்க நின்று கொண்டிருந்தவர்கள் 'அய்ய…இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்கிற பாணியில் ஆளுக்கொரு திசையில் பறந்தனர்;

'பசி…பசி” அப்பெண் இன்னும் முனகிக் கொண்டிருந்தாள்.

அதைக் காணச் சகியாத அங்கமுத்து 'ஏய்…சரோஜினி…உடனே போய் அடுப்பைப் பத்த வெச்சு ஏதாச்சும் பண்ணுடி”

'என்ன பண்ண முடியம்?…களிதான் கிண்ட முடியும்!….இப்ப அதுக்கும் வழி இல்ல…ஏன்னா அடுப்புப் பத்த வைக்க சுள்ளி வெறகு வேற இல்லை…போய்ப் பொறுக்கிட்டு வந்துதான் பத்த வைக்கணும்”

'அய்யய்யோ…அது வரைக்கும் தாங்காதே”

'யோவ்..நாச்சாயி மெஸ்ஸூல சூடா சாப்பாடு ரெடியாயிருக்கும்…போயி ஒண்ணு வாங்கிட்டு வந்து குடுப்பியா…அத விட்டுட்டு சும்மா உக்காந்து யோசனை பண்ணிட்டே இருக்கியே” சைக்கிளில் கடந்து போன ஒருவன் வண்டியைக் கூட நிறுத்தாமல் போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போனான்.

'அதுவுஞ் செரிதான்…ஆனா அதுக்கும் காசு வேணுமே” டிரவுசரைக் குடைந்தான். ஒரே ஒரு ரூபாய் சிக்கியது.

'ஏண்டி…சரோஜினி…உங்கிட்ட ஏதாச்சும் பணமிருக்கா?”

உதட்டைப் பிதுக்கினாள் அவள்.

சட்டென்று யோசனை வர ஓடிச் சென்று அந்த உண்டியலைக் குலுக்கி விழுந்த சில்லரைகளைப் பொறுக்கி இருபது ரூபாய் சேர்ந்ததும் நாச்சாயி மெஸ்ஸை நோக்கிப் பறந்தான. அங்கமுத்து.

அவன் வாங்கி வந்து தந்த சாப்பாட்டை வெறி கொண்டவள் போல உண்டு முடித்த அப்பெண் புத்துணர்ச்சி பெற்றவளாய் எழுந்து நின்றாள்.

அவளையுமறியாமல் அவள் கைகள் அங்கமுத்துவை வணங்கின.

'என்ன தாயி…என்னையப் போயி கும்பிட்டுக்கிட்டு நானென்ன சாமியா?” சங்கோஜத்துடன் சொன்னான்.

'ராசா….நீ மனுசன்தான்…சாதாரண…ஏழை மனுசன்தான்….ஆனா பசியால மயங்கி விழுந்த எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க யாருக்குமே மனசு வராதப்ப…உனக்கு வந்திச்சே?…அப்பவே நீ சாமி ஆயிட்டேப்பா…உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டாத் தப்பில்லைப்பா”

நெகிழ்ந்து போய் சிலையாய் நின்றவனிடம்,

'ராசா…உன்னோட நல்ல மனசுக்கு நீயும்…உன் சம்சாரமும்…உன் கொழந்தைகளும்…நூறு வருஷம் எந்தக் குறையுமில்லாம இருப்பீங்கய்யா” சொல்லி விட்டுத் திரும்பி நடந்தவளை நிறுத்தினான் அங்கமுத்து

'தாயி…உடனே போகாட்டித்தான் என்ன? கொஞ்சம் ஆற…அமர ஓய்வெடுத்துட்டுப் போலாமே”

'இல்லப்பா…நான் வர்றேன்”

மீண்டுமொரு முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அவள் கிளம்ப,

புல்லரித்துப் போனான் அங்கமுத்து. 'உண்டியல்ல சேர்த்து வெச்ச காசை எடுத்துட்டுக் கோயிலுக்குப் போயி சாமியை நான் கும்பிடணும்னு நெனச்சேன்…ஆனா அந்தக் காசு என்னையே சாமியாக்கி மத்தவங்க என்னையக் கும்பிடும்படி பண்ணிடுச்சே”

ஒரு கோவிலுக்குச் சென்று கடவுளைத் தரிசித்துப் பெறும் ஆன்மிக திருப்தியை அப்பெண்மணியின் வாழ்த்திலேயே பெற்று விட்டதாய் உணர்ந்த அங்கமுத்து, மனைவியின் பக்கம் திரும்பி,

'சரோஜினி…பசங்களுக்கு இன்னிக்கு பூரி கிழங்கு பண்ணிடு…என்ன?” என்றான்.

அவள் விநோதமாய்ப் பார்க்க,

மூத்தவனை அருகில் அழைத்து 'பொருட்காட்சிக்கு பணம் நாளைக்குக் கொண்டு போய்க் குடுத்துடு…என்ன?” என்றான்.

'அதெல்லாம் சரி…பணம்…?” சரோஜினி இழுக்க,

பதிலேதும் பேசாமல் குறுஞ்சிரிப்புடன் சென்று அந்த உண்டியலை எடுத்தான்.

உடைத்தான்.

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்





mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Back to top Go down

இவன்தான் மனிதன் Empty Re: இவன்தான் மனிதன்

Post by பூவன் Fri Feb 01, 2013 8:23 pm

உண்டியல்ல சேர்த்து வெச்ச காசை எடுத்துட்டுக் கோயிலுக்குப் போயி சாமியை நான் கும்பிடணும்னு நெனச்சேன்…ஆனா அந்தக் காசு என்னையே சாமியாக்கி மத்தவங்க என்னையக் கும்பிடும்படி பண்ணிடுச்சே”

கதையின் தாக்கம் அருமை நண்பரே , சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum