Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார்
4 posters
Page 1 of 1
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார்
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பல ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இவையெல்லாம் மேல்தட்டு மக்கள், படித்த மக்கள், அதிலும் நகர்ப்புறமக்களுக்கு மட்டுமே தெரியும் அளவில், புரியும்அளவில் இருந்தது. பாமர மக்களும், ஏழை-எளிய மக்களும், குறிப்பாக கிராமப்புற மக்களும் இவற்றையெல்லாம் அறிய வாய்ப்பு இல்லாமல், அறிய விரும்பாமல் யாருக்கோ வந்த விதி என்று, தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், எனக்கு அது கவலையில்லை என்ற உணர்வுதான் அந்தகாலங்களில் இருந்தது. காலப்போக்கில் கல்வி வளர்ச்சியின் தாக்கத்தால், ஒவ்வொரு வீட்டிலும் கல்வியறிவு பெற்றவர்கள் உருவானார்கள்.மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்பட்டது.
-
அதுமட்டுமல்லாமல், கீழ்மட்டத்தில் உள்ள ஊழல்,அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால், ஊழலின் வலியை அவனால் உணர முடிந்தது. தன்னை பாதிக்கும் ஊழலில் இருந்து தனக்கு சம்பந்தமில்லாத பெரிய இடத்து ஊழல்வரை அவனால் பேசப்பட்டது, உணரப்பட்டது.அதன் தாக்கம் அவனால் தேர்தல்களிலும் முத்திரையாக பதிக்கப்பட்டது. குறிப்பாக, சமீபகாலங்களில் அதிலும், காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆதர்ஷ் வீட்டுவசதிசங்க ஊழல் என்று படிப்படியாக ஊழல் புகார்கள் வந்தது, நாடு முழுவதிலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. மக்களும் முன்புபோல் இல்லை. ஏதோ லஞ்சத்தை கொடுத்தோம், நமதுவேலை முடிந்தது என்று மனநிறைவு கொண்டிருந்த காலம்போய், இப்போது எனது வேலையை முடிக்க லஞ்சத்தை வாங்கிவிட்டுத்தானே முடித்தார்கள் என்ற வெறுப்பு உணர்வு ஆழமாக மக்கள் மனதில் பதிய தொடங்கிவிட்டது. அதனால்தான் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே என்ற காந்தியவாதி வடக்கே ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை தொடங்கியபோது, பெரிய கூட்டம் அவருக்கு பின்னால் அணி வகுத்தது. டெல்லியில் ஜந்தர் மந்தரில் அவர் உண்ணாவிரதம் தொடங்கிய நேரத்தில், பேரணியிலும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அங்கே அவருக்கு பின்னால் கூட்டம் கூடியது என்றால், நாட்டின் கடைக்கோடி கன்னியாகுமரி வரையில் அவருக்கு ஆதரவான அலை வீசியது. இதற்கு காரணம், அவருக்கு ஆதரவு என்பது அல்ல. ஊழலுக்கு எதிராக மக்கள் மனதில் இருந்த ஆத்திரம்தான் அவரது ஆதரவு அலையாக மாறியது.
-
ஏதோ ஒரு பெரிய மாற்றம் அவரால் ஏற்பட்டுவிடும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அதை பொய்க்கும் வகையில், அவரிடமிருந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனியாக பிரிந்து, அவரும் எந்த அரசியல் உலகத்தை எதிர்த்தாரோ, அந்த அரசியல்உலகின் ஜோதியில் இரண்டற கலந்துவிட்டார். பெரிய பெரிய ஊழல்களை இவர் பகிரங்கப்படுத்தப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், காற்றுப்போய்க்கொண்டிருந்த பலூன் போல, அவர் கூறிய புகார்கள் ஒவ்வொன்றாக உயிர் இல்லாமல் போகத்தொடங்கியது.
-
அவ்வளவுதான் இவர்கள் கதையோ என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும்நேரத்தில், அன்னா ஹசாரே இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருக்கிறார். ஜன்தந்த்ர மோர்ச்சா என்ற பெயரில் அவர் இப்போது புதிதாக ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். நாட்டில்ஒரு பெரிய மாற்றம் கொண்டுவர போராடுவோம். ஆனால், தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார். தனதுஅமைப்பின் முக்கிய குறிக்கோள், நாட்டில் உள்ளபல பிரச்சினைகளை வலுவான சட்டங்களின் மூலம் தீர்வு செய்து, ஜனநாயக முறைகளுக்கு அரண் அமைக்க பொதுமக்களை திரட்டி, வலியுறுத்துவேன் என்று கூறியிருக்கிறார்.
-
இதுமட்டுமல்லாமல், வெளிப்படையான நிர்வாகம், சி.பி.ஐ.யை வலுப்படுத்துவது, கிராமங்களை நிர்வாகப்பிரிவாக ஆக்குவது, கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம்,வேலைவாய்ப்பு, விவசாயிகளின் உரிமைகள், ஏழைகளுக்கு இலவச கியாஸ், புதிய மக்கள் நல்வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு, வரி, இளைஞர் நலனுக்கு புதிய கொள்கைகள் வகுத்தல், வெளிநாட்டில் முதலீடு செய்துள்ள கறுப்பு பணத்தை மீண்டும் கொண்டுவருதல், கலப்படத்துக்கு ஆயுள் தண்டனை என்று எல்லோரும் மீட்டும் ராகத்தையே புதிதாக மீட்டியிருக்கிறார். இதெல்லாம், எல்லா அரசியல் கட்சிகளும் பாடும் வழக்கமான பல்லவிதான். இதையே மீண்டும் இவரும் பாடினால், அந்த ராகம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது போகபோகத்தான் தெரியும். தன் கொள்கையை சொல்லிவிட்டார். அதை நிறைவேற்ற எந்த பாதையில், எந்த வாகனத்தில் செல்லப்போகிறார் என்பதை அவர் சொன்னால்தான் மக்களுக்கு தெரியும். மொத்தத்தில், இந்த இன்னிங்சில் அவரது ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
-
தினந்தந்தி

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார்
முதலில் வந்தபொழுது நிறைய நம்பிக்கை இருந்தது - விடிவு பிறக்க வாய்ப்பு இருக்குன்னு.
இப்ப இருக்கான்னு கேட்டா - அது மிகப்பெரிய கேள்விக்குறியே???
இப்ப இருக்கான்னு கேட்டா - அது மிகப்பெரிய கேள்விக்குறியே???
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார்
யினியவன் wrote:முதலில் வந்தபொழுது நிறைய நம்பிக்கை இருந்தது - விடிவு பிறக்க வாய்ப்பு இருக்குன்னு.இப்ப இருக்கான்னு கேட்டா - அது மிகப்பெரிய கேள்விக்குறியே???
என்னதான் தலைமை பொறுப்பில் இருப்பவர் நேர்மையா இருந்தாலும் அடுத்த நிலையில் இருப்பவர்களின் பேராசைக்கும் துரோகத்திற்கும் இலக்காகும் போது இது போன்ற அமைப்புகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
Re: இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார்
இவர் ஒரு நேர்மையான முன்னாள் ராணுவ வீரர் இவர் தனது கிராமத்தை மிக சிறந்த கிரமாமாக மாற்றி விட்டார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Similar topics
» ஆர்.பி.கே:இரண்டாவது மனு
» இரண்டாவது உலக மகாயுத்தம்
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» இரண்டாவது புதிர்
» இரண்டாவது வாழ்க்கை!
» இரண்டாவது உலக மகாயுத்தம்
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» இரண்டாவது புதிர்
» இரண்டாவது வாழ்க்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum