ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா

+3
ராஜா
அகல்
balakarthik
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா - Page 2 Empty சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா

Post by balakarthik Thu Jan 31, 2013 1:40 pm

First topic message reminder :

ஒரு முதல்வராக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே தனது முன்னுரிமை என்றும், தனக்கு நடிகர் கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 25ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி, படத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர்களின் தடையுத்தரவிற்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், படத்திற்கு மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதனிடையே, சில முஸ்லிம் அமைப்புகள் நேற்று நடிகர் கமலை சந்தித்து பேசினர். அப்போது விஸ்வரூபம் படத்தில் உள்ள சில ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தனக்கும், தனது முஸ்லிம் நண்பர்களுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார். படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டதை வரவேற்ற மற்ற முஸ்லிம் அமைப்புகள், எந்த காட்சிகள் நீக்கப்படவுள்ளன என்பது குறித்து தங்களுடன் ஆலோசிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா, மாநில டி.ஜி.பி., ராமானுஜம், தலைமைச் செயலாளர் ஷீலா பால கிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "கடந்த சில நாட்களாக, விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. எதையும் முறையாக அறிந்து கொள்ளாமல் இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதையடுத்து, இதற்கு விளக்கமளிப்பது எனது கடமை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே எனது முதல் கடமை. இதை சிலர் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தங்களது வேலைகளை செய்ய வேண்டும். விஸ்வரூபத்திற்கு அனுமதி அளித்திருந்தால் வன்முறைகள் ஏற்படும் என உளவுத்துறை அளித்த அறிக்கையின் காரணமாகவே அப்படம் தடை செய்யப்பட்டது. அதை மீறி, அது திரையிடப்பட்டிருந்தால், வன்முறை ஏற்பட்டிருக்கும். தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் வெளியாகும் 524 தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க 31 ஆயிரத்து 440 பேர் தேவை. ஆனால் தமிழகத்தில் உள்ள மொத்த போலீசாரின் எண்ணிக்கையே 91 ஆயிரத்து 807 தான். அசம்பாவிதங்களை தடுப்பது தமிழக அரசின் கடமை. நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே படம் தடை செய்யப்பட்டது. ஜெயா டி.வி., அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த டி.வி.,யில் எனக்கோ, அ.தி.மு.க.,வுக்கு எந்த தொடர்பும் இல்லை. மேலும், கமல் மீது எனக்கு எவ்வித தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. கடந்த 1980ம் ஆண்டுகளில் நடந்ததாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறும் விஷயங்கள் மிகவும் கேலியானது. அப்படி ஒரு கடிதத்தையே நான் எழுதவில்லை. என்னைப் பற்றி தவறான செய்தியை தெரிவித்த கருணாநிதி மீது நடவடிக்கை எடுப்பேன். சினிமா ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் ஒரு படத்திற்கு மாநில அரசு நேரிடையாக தடை விதிக்க முடியும். இதன் அடிப்படையிலேயே டேம் 999 படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.".

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் கமல் ஒரு காட்சியைக் கூட நீக்க தயாராக இல்லை. சமரசத்துக்கும் கமல் முன்வரவில்லை. கமல் பெரிய முதலீட்டில் படம் எடுத்திருந்தாலும், அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். படத்துக்கு அனுமதி அளித்து பெரிய கலவரம் ஏற்பட்டிருந்தால் அப்போதும் மீடியாக்கள் என்னை விமர்சித்திருக்கும். அரசு எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க முடியாது. இருதரப்பும் சுமூகமாக பேசி இப்பிரச்னையை தீர்த்துக் கொள்ள முன்வந்தால், தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நன்றி :- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா - Page 2 Empty Re: சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா

Post by அகல் Thu Jan 31, 2013 2:58 pm

பிரதமரைத் தேர்ந்தெடுப்பது 100 கோடி மக்களே தவிர, கமலஹாசன் இல்லை - ஜெ

#அந்த நூறு கோடியில் கமலும் ஒருவர் என்பதை 30 ஆண்டுகளாக அரசியல் நடத்தும் மாண்புமிகு முதல்வருக்கு தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது.


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா - Page 2 Empty Re: சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா

Post by balakarthik Thu Jan 31, 2013 3:10 pm

அகல் wrote:பிரதமரைத் தேர்ந்தெடுப்பது 100 கோடி மக்களே தவிர, கமலஹாசன் இல்லை - ஜெ

#அந்த நூறு கோடியில் கமலும் ஒருவர் என்பதை 30 ஆண்டுகளாக அரசியல் நடத்தும் மாண்புமிகு முதல்வருக்கு தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது.
அவர் ஓட்டை நாங்கள் அமைச்சர்களை வைத்து போட்டுக்குவோம் - இவன் அம்மாவின் கைபேசி பேட்டரி நல வாரியம் ஓமன் கிளை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா - Page 2 Empty Re: சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா

Post by கே. பாலா Thu Jan 31, 2013 4:52 pm

'வீட்டுக்கே கொண்டாந்து படத்தைக் காட்டறதுக்கு அவரு திட்டம் போட்டாரு. ஆனா இப்படி ஸ்டேட் மாறி போயி படம் பாக்கற மாதிரி ஆயிடுச்சே'

விஸ்வரூபம் தொடர்பாக The Hindu -வில் வெளியான கட்டுரையில் ஒரு ரசிகர்.


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா - Page 2 Empty Re: சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா

Post by மாணிக்கம் நடேசன் Thu Jan 31, 2013 5:29 pm

இன்னும் கொஞ்ச நாள்ல அக்கா ஆட்சிக்கு ஆப்பு வைக்க போராங்க இந்த தமிழ் மக்கள்.
நாடாளுமன்றத்துக்கு அக்காவின் கட்சியில இருந்து ஒருத்தன் கூட நாடாளுமன்றத்துக்கு
போக அனுமதிக்காதீங்க, இப்ப தான் இந்த ஜெயல்லிதாவுக்கு புத்தி வரும். தமிழன் என்ன இளிச்ச வாயன்னு ஜெயா அக்கா நெனைச்சுட்டாளோ?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா - Page 2 Empty Re: சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை: முதல்வர் ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum