ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

Top posting users this week
viyasan
வேண்டாம் இந்தத் தடை! Poll_c10வேண்டாம் இந்தத் தடை! Poll_m10வேண்டாம் இந்தத் தடை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் இந்தத் தடை!

5 posters

Go down

ஈகரை வேண்டாம் இந்தத் தடை!

Post by Powenraj Thu Jan 31, 2013 9:25 am

தமிழகத்தைத் தவிர எல்லா மாநிலங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படம், தமிழ்நாட்டில் மட்டும் பிரச்னைக்குரியதாகக் கருதப்படுகிறது என்றால், பிரச்னை படத்தில் இல்லை என்பது தெளிவு.
-
""ஏற்கெனவே, எங்களை ஏதோ தேச விரோதிகள் போலப் பார்க்கிறார்கள். திரைப்படங்களிலும் தொடர்ந்து எங்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும்போது, அதனால் நாங்கள் எதிர்கொள்ளும் தர்மசங்கடங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை'' என்கிற முஸ்லிம் சமுதாயத்தினரின் கூற்றில் நியாயம் இருந்தாலும், ஒரு கலைஞனின் கருத்து சுதந்திரத்தை எப்படித் தடுக்க முடியும் என்கிற கேள்விக்கு முன்னால் அது அடிபட்டுவிடுகிறது.
-
"விஸ்வரூபம்' திரைப்படத்தில் இடம்பெறும்தீவிரவாதக் கதாபாத்திரங்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்பதுதான்இந்த எதிர்ப்புக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்னால் தீவிரவாதக் கதாபாத்திரங்களை வைத்து வெளியான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் என்ன? ஒரு முதல்வரை ஊழல்வாதியாக, சாதிப்பிரச்னையைத் தூண்டுபவராக சித்திரித்த"முதல்வன்' திரைப்படம், தமிழக முதலமைச்சரை கேலி செய்வதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஒரு மாநிலத்தின் ஆளுநர் தீவிரவாதிகளுடன் சேர்ந்து குண்டுவைப்பதாக "காதலன்' படம் வந்தது. அரசு எதிர்க்கவில்லை. அப்படி இருக்கும்போது,"விஸ்வரூபம்' மட்டும் என்ன பாவம் செய்தது, இத்தனை எதிர்ப்புகளை எதிர்கொள்ள?
-
பொற்கொல்லன் கதாபாத்திரம் தங்கள் சமுதாயத்தினரின் மனதைப் புண்படுத்துவதாக வழக்கு தொடுத்து, சிலப்பதிகாரம் பாடத்திட்டத்தில் இடம்பெறக்கூடாது என்று ஒரு சமூகம் கோரும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? நாயர் கதைகள், முல்லாவின் முட்டாள்தனம், சர்தார்ஜி ஜோக்ஸ் எல்லாவற்றையும் ஓர் இனத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அவற்றுக்கெல்லாம் போராட்டம் நடத்தி, அவை நீக்கப்பட வேண்டும் என்று கோரினால், சமுதாயத்தில் கலை, இலக்கியமே இல்லாதாகிவிடும்.
-
இந்த விஷயத்தில் அண்டை மாநிலமான கேரளத்தையும், மலையாளத் திரைப்படங்களையும் நாம் பாராட்ட வேண்டும். கிறிஸ்தவர்களே கிறித்துவர்களைக் கிண்டல் செய்து படமெடுகிறார்கள். முஸ்லிம் குடும்பங்களை மையமாக வைத்து, கேரள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையை நையாண்டி செய்துகூடத் திரைப்படங்கள்எடுக்கப்படுகின்றன.
-
நாயர், திருமேனி என்றெல்லாம் ஜாதிப் பெயர்களைக் கதாபாத்திரங்களுக்குச் சூட்டுகிறார்கள். அங்கே ஜாதிகள் உண்டு. ஜாதியம் இல்லை. அதுதான் கருத்து சுதந்திரம் என்பது!
கலை, வாழ்க்கையின் பிரதிபலிப்பு. விஸ்வரூபம் திரைப்படம் பிரதிபலிப்பது ஆப்கானிஸ்தாôனியத் தீவிரவாதிகளை. தீவிரவாதப் பயிற்சிகள் பாகிஸ்தானில் அளிக்கப்படுவதாக படத்தில் காட்சி இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டில் நடப்பதாக இல்லை.
-
ஒரு கதாபாத்திரம் தமிழ் வசனம் பேசுவதை நியாயப்படுத்துவதற்காக, அவர் தமிழகத்தில் தங்கியிருந்தபோது தமிழ் படித்தேன் என்று சொன்னால், அது தமிழக முஸ்லிம்கள் அவருக்கு ஆதரவு அளித்ததாகக் கருதுவது சரியல்ல. ஆப்கானிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு ராமகிருஷ்ணன், க்விங் லீ, கிறிஸ்டோபர் மார்லோ என்றா பெயர் வைக்க முடியும்? படத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுபவர்கள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு பதில், அவர்கள் ஆப்கானிஸ்தானியர்கள், தலிபான்கள் என்று பார்ப்பதுதானே சரி.
-
இனி, நீதிமன்றம், தீர்ப்பு என்பதற்கு வருவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு"அராக்ஷன்' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நிராகரித்த உச்சநீதிமன்றத்தீர்ப்பு தெளிவாகவே இந்தப் பிரச்னையை அணுகியிருக்கிறது. திரைப்படத் தணிக்கைக் குழுவால் பொதுமக்கள் பார்வைக்கு உகந்தது என்று தீர்மானிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கிய திரைப்படத்தைத் தடை செய்ய முடியாது, கூடாது என்று அந்தத் தீர்ப்பு கூறுகிறது.ஒரு திரைப்படத்தை வெளியிடுவது சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் என்று அரசு கூற முடியாது என்கிறது அந்தத் தீர்ப்பு.
அதற்கு முன்னால் 07.12.1987இல் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற "ஒரே ஒரு கிராமத்திலே' திரைப்படத்திற்கு இதேபோலத்தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்கில் மார்ச் 30, 1989இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதைவிடத் தெளிவாகவே இருக்கிறது.""எதிர்ப்பு, போராட்டம், பேரணி என்றெல்லாம் காரணம் காட்டி, கருத்து சுதந்திரத்தைத் தடுக்கவோ ஒடுக்கவோ கூடாது என்றும், அந்த எதிர்ப்புகளை எதிர்கொள்ளப் பாதுகாப்பு அளிப்பதுதான் அரசின் கடமை என்றும் நீதியரசகர்கள் கே.ஜே. ஷெட்டி, கே.என். சிங், குல்தீப் சிங் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெளிவாகவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
-
தமிழக இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் அல்ல என்றும் தேசாபிமானிகள் என்றும் உணர்த்தும் வகையில் திரைப்படங்கள் எடுப்பதை விட்டுவிட்டு, ஆப்கானிஸ்தானிய தலிபான்கள்பற்றிய கதைக் கருவுடன் எடுக்கப்பட்ட "விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு இஸ்லாமியஅன்பர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது நியாயமே அல்ல. உலக அரங்கில் தமிழ்த் திரைப்படங்களுக்கு மரியாதைஏற்படுத்திக் கொடுக்க முயலும் ஒரு நல்ல கலைஞன் அழிந்துவிடக் கூடாது. அவனதுகருத்து சுதந்திரமும், படைப்பாற்றலும் முடங்கிவிடக் கூடாது.
"விஸ்வரூபம்' திரைப்படத்தைத் தடை செய்வதோ, வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதோ, அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் மதத் தீவிரவாதம்"விஸ்வரூபம்' எடுக்க வழிகோலிவிடும். வேண்டாம் இந்தத் தடை...!
-
தினமணி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: வேண்டாம் இந்தத் தடை!

Post by ராஜா Thu Jan 31, 2013 11:18 am

வழக்கம் போல தினமணியின் தலையங்கள் அருமை. தெளிவாக சொல்லியுள்ளார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: வேண்டாம் இந்தத் தடை!

Post by பாலாஜி Thu Jan 31, 2013 11:22 am

அருமையான தலையங்கம் . உரைக்க வேண்டியவர்களுக்கு உரைத்தால் சரி. பாவம் அம்மணி இதற்கான விலையை அவர் தந்தே ஆகவேண்டும்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: வேண்டாம் இந்தத் தடை!

Post by யினியவன் Thu Jan 31, 2013 11:54 am

அம்மாவின் செய்கையை கண்டுகொள்ளாமல் தமிழக முஸ்லிம் மக்கள் அமைதி காத்தால் - அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய அவப் பெயரை உண்டு பண்ணும்.

அம்மாவின் அரசியல் குண்டர்கள் பரவலாக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அதை தமிழக முஸ்லிம்களின் எதிர்ப்பாக சித்தரித்து களங்கத்தை உண்டு பண்ணி விடுவார்கள்.

தமிழக முஸ்லிம் மக்களே - அம்மாவின் வலையில் வீழ்ந்துவிடாமல் சுதாரித்து எழுங்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: வேண்டாம் இந்தத் தடை!

Post by கரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 3:28 pm

யினியவன் wrote:அம்மாவின் செய்கையை கண்டுகொள்ளாமல் தமிழக முஸ்லிம் மக்கள் அமைதி காத்தால் - அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய அவப் பெயரை உண்டு பண்ணும்.

அம்மாவின் அரசியல் குண்டர்கள் பரவலாக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அதை தமிழக முஸ்லிம்களின் எதிர்ப்பாக சித்தரித்து களங்கத்தை உண்டு பண்ணி விடுவார்கள்.

தமிழக முஸ்லிம் மக்களே - அம்மாவின் வலையில் வீழ்ந்துவிடாமல் சுதாரித்து எழுங்கள்.
உண்மைதான் அண்ணா இதன் விளைவு எப்படி இருக்குமென்றால் நம் இஸ்லாமிய சகோதரர்களை தேவையற்ற பிரட்சினைக்காக இவர்களே வெறுப்புடன் பார்க்கும் நிலையை உண்டு பண்ணி விடுவார்களே என நான் பயப்படுகிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: வேண்டாம் இந்தத் தடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum