புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
53 Posts - 42%
heezulia
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
304 Posts - 50%
heezulia
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
21 Posts - 3%
prajai
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முந்தி இருப்பச் செயல் Poll_c10முந்தி இருப்பச் செயல் Poll_m10முந்தி இருப்பச் செயல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முந்தி இருப்பச் செயல்


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Wed Jan 30, 2013 1:42 pm

முந்தி இருப்பச் செயல்
(சிறுகதை)

அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பின் இறுதியில் ஒரு ஜிப்பாக்கார நிருபர்; கேட்ட கேள்வி புகைப்படக் கலைஞர் கோபிநாத்தை சற்று தடுமாற வைத்தது.

கோபிநாத்…காமிராவைப் பேச வைப்பதோடு மட்டுமல்லாது ஆட வைக்க…பாட வைக்க அதிர வைக்க…உருக வைக்க….ஏன்?…அழ வைக்கக் கூடத் தெரிந்த வித்தகர். அவர் எடுத்த புகைப் படங்களில் பல கவிதைகள்…பல காவியங்கள். அகில இந்திய அளவில் தன் புகைப்படத் திறமையைக் காட்டிவிட்டு தற்போது அகில உலக அளவிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தியாவின் இணையற்ற சொத்து அவர். வீட்டு அலமாரிகள் அவர் பெற்ற பரிசுக் கேடயங்களால் நிறைமாத கா;ப்பிணியாய்!….விருதுகள் அவர் வீட்டு வாசலில் வரிசையில் நின்று 'எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்…எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனக் கெஞ்சிக் கொண்டிருக்க பல ஏற்கனவே அவர் தோளில் ஏறி அமர்ந்து விட்டிருந்தன.

'சார்…நீங்க பெரிய உலகப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞரா இருக்கலாம்…ஏற்கனவே பல முறை உலக அளவிலான புகைப்படப் போட்டிகளி;ல் பல பரிசுகளை வென்றிருக்கலாம்…மறுக்கலை….ஆனா அதுக்காக 'அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்கப் போற உலக அளவிலான போட்டியிலும் நான்தான் முதல் பரிசை வெல்வேன்” னு நீங்க ஆணித்தரமாச் சொல்லுறதை உங்க 'தன்னம்பிக்கை”ன்னு எடுத்துக்கவா?…இல்லை…உங்களோட 'தலைக்கனம்”ன்னு எடுத்துக்கவா?”

சில நிமிடங்கள் ஒரு இறுக்கமான அமைதி அந்தச் சூழ்நிலையை கெட்டியாக ஆக்கிரமி;க்கத் துவங்கிய வேளையில் கோபிநாத்தின உடன் அமர்ந்திருந்த அவரது மகள் சவிதா அதை உடைத்தாள்.

'அதாவது…'இந்த முறையும் அந்தப் போட்டியில் வென்று நம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்” என்பதைத்தான் அவர் ஆர்வ மிகுதியால் அப்படிச் சொல்றார்”

அவசரமாய் அவளைக் கையமர்த்திய கோபிநாத் முகத்தில் ஒரு கடுமையடன் 'யோவ்…'தலைக்கனம்'ன்னே எழுதிக்கய்யா… டோண்ட் கேர்…நான் ஜெயிக்கறேன்…ஜெயிச்சுக் காட்டறேன்”

அவரது கோபப் பேச்சு அந்த ஜிப்பா நிருபர் முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பை உற்பத்தி செய்ய அந்தக் குறுஞ்சிரிப்பு கோபிநாத்தின் மனதில் ஏகமாய் எhpச்சலை உற்பத்தி செய்தது.

'நீ எந்தப் பத்திரிக்கை?”

'பிற்பகல்”

'உன் பத்திரிக்கைல இதை 'சவால்”ன்னே போடு…'முதல் பரிசை வென்றே தீருவதாய் கோபிநாத் சவால்”ன்னு போடு”

'சரி…வெல்லலைன்னா?” ஜிப்பா நிருபரின் பதில் கேள்வியில் ஒரு எள்ளல் தெரிய

'யோவ்…வெல்லலைன்னா…நான் தற்கொலை செஞ்சுக்கப் போறதாப் போடுய்யா”

'டா…டீ…” அலறினாள் சவிதா.

கோபிநாத்தின் அந்த அதிரடி பதிலில் மொத்தப் பத்திரிக்கையாளர்களும் ஆடிப் போயினர்.

'சார்…எதுக்கு சார் இப்படி எமோஷன் ஆகறீங்க?” யாரோ ஒரு சாது நிருபர் சொல்ல,

'இது எமோஷன் இல்ல மேன்….என்னை நானே உரசிக்கற உரைகல்….அவருக்கு மட்டுமல்ல…எல்லா பத்திரிக்கைக்காரங்களுக்கும் சொல்றேன் எல்லோரும் அவங்கவங்க பத்திரிக்கைல போடுங்க…'முதல் பரிசு வாங்கலைன்னா கோபிநாத் தற்கொலை செய்து கொள்வார்”ன்னு”

'டாடி..” சவிதா அவரைச் சாந்தப் படுத்த முயன்றாள்.

அவரோ அவளைச் சிறிதும் சட்டை செய்யாமல் தன் சவாலைப் பதிவு செய்வதிலேயே தீவிரமாயிருந்தார்.

'அப்படின்னா நாங்க எல்லோரும் எங்க பத்திரிக்கைல இந்த சவால் குறித்த அறிவி;ப்பை வெளியிடலாம்….அப்படித்தானே மிஸ்டா; கோபிநாத்?” நிருபர்கள் கோரஸாய்க் கேட்க

'தாராளமா…” நெஞ்சை நிமிர்த்தியபடி சொன்னவர் 'விருட்”டென எழுந்து அதே வேகத்தில் அங்கிருந்து சென்றார்.

கலவர முகத்துடன் சவிதா அவரைப் பின் தொடர்ந்து ஓட தங்கள் பத்திரிக்கை வாய்க்கு நல்ல அவல் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் நிருபர்கள் தங்களுக்குள் 'கச..கச” வென்று பேசியபடி வெளியேறினர்.

அன்றிலிருந்து தன் காமிரா கண்களால் வெளி உலகை ஒவ்வொரு அங்குலமா அளக்க ஆரம்பித்தார். காணும் ஒவ்வொரு காட்சியையும்…ஒவ்வொரு மனிதரையும்…ஒவ்வொரு இடத்தையும் வித்தியாசமான கோணத்தில்….வித்தியாசமான வடிவத்தில் காமிராவிற்குள் அடைத்து வைத்தார். உணவை மறந்து உறக்கத்தை மறந்து பரிசுப் போட்டிக்கான புகைப்படத்தைத் தேடி கன்னித்தீவு சிந்துபாத்தாய் அவர் அலைவது அவரது மகள் சவிதாவிற்கு அதீத வருத்தத்தைக் கொடுத்தது.

'டாடி…இப்படி ராத்திரி பகல்ன்னு பார்க்காம அலைஞ்சு திரிஞ்சு உடம்பைக் கெடுத்துக்கறீங்களே…இது தேவையா டாடி?”

'என்ன இப்படிக் கேட்டுட்டே?…இட்ஸ் எ சேலனஞ்…நான் ஜெயிச்சாகணும்…ஏன்னா இது என் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம்”

'அப்படின்னா அன்னிக்கு நீங்க விட்ட சவால் சீரியஸான சவாலா டாடி?” பய முலாம் பூசி வந்தன அவள் வார்த்தைகள.;

'நோ பேபி…பயப்படாதே…நான் ஜெயிச்சிடுவேன்” கட்டை விரலைத் தூக்கிக் காட்டிப் புன்னகைத்தார்.

அவரது புன்னகையும் தன்னம்பிக்கைப் பேச்சும் அவளுக்கு ஒரு பெருமிதத்தைக் கொடுத்தாலும் இன்னதென்று புரியாதா ஒரு அச்சப் பந்து அடி வயிற்றில் அசைந்து கொண்டேயிருந்தது.
***


இரண்டுக்கு இரண்டு அடி அளவிலிருந்த மெலிதான தங்க பிரேமிடப்பட்ட அந்தப் புகைப்படத்தை சுவற்றில் சாய்த்து நிறுத்தி வைத்து சற்றுத் தள்ளி நின்று அதை ஊன்றி ரசித்த கோபிநாத் 'வாவ்…எக்ஸலண்ட்…நிச்சயம் இது முதல் பரிசைத் தட்டிடும்” தனக்குத் தானே கூறிக் கொண்டார்.

'என்ன டாடி…மொபைலை சைலண்ட்ல போட்டு வெச்சிருக்கீங்களா?..ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டே இருக்கேன்…” சொல்லியபடியே அறைக்குள் நுழைந்த சவிதா அந்தப் புகைப் படத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு முகத்தைச் சுளித்தாள்.

'என்னம்மா பார்க்கிறே?…இதுதான் அமெரிக்காவுல நடக்கற உலகப் புகைப்படப் போட்டில முதல் பரிசை வெல்லப் போற புகைப்படம்” என்றார; முகத்தில் பூரிப்புடன்.

நிதானமாக அவரை ஏறிட்டுப் பார்த்தவள் 'அதெப்படி அவ்வளவு உறுதியாச் சொல்லறீங்க?…எனக்கென்னமோ அப்படித் தெரியலையே”

'நோ…உனக்குப் புரியலைன்னு சொல்லு ஒத்துக்கறேன்….இந்தப் புகைப்படத்தில் உள்ள தொழில் நுட்பம்….இதனுhடே இழையோடித் தொpயும் கலை நுணுக்கம்….வித்தியாசமான லைட்டிங் எஃபெட்.... அhpதான கோணம்….எதுவுமே உன் புத்திக்கு எட்டலை…அதான் வெறுமனே மேலோட்டமா பார்த்திட்டுச் சொல்லுறே…”

அவளோ இட வலமாயத் தலையை ஆட்டியபடியே அப்படத்தை மறுபடியும் பார்த்தாள்.

'ஓ.கே…நானே சொல்றேன் கேட்டுக்க…இதுல இருக்கற இந்தச் சிறுவன்…இந்தியாவோட மிக..மிக மோசமான…ஒரு சேரிப் பகுதியில்….சாக்கடைக்கு நடுவில்…குப்பைத் தொட்டிகளின் நெருக்கத்தில் …பன்றிகளோட வாழ்ந்திட்டிருக்கறவன்…..வறுமையின் ஒட்டு மொத்த வாரிசு! அவனோட டிரவுசரின் பின் பக்கக் கிழிசலை நல்லாப் பாரு..அது என்ன தோற்றத்துல இருக்கு?” சவிதாவைப் பார்த்துக் கேட்டார்.

அவள் விழிக்க,

'அடடே…என்னம்மா இது கூடப் புரியலையா உனக்கு?…அந்தக் கிழிசல் இந்திய மேப் வடிவத்துல இருப்பது உனக்கு நிஜமாத் தொpயலையா?”

புகைப்படத்தை நெருங்கிச் சென்று பார்த்துவிட்டு 'அட..ஆமாம்” என்றாள்.

'அதுவே என்னவொரு நுட்பம் தொpயுமா?....கான்செப்டை அதுவே சொல்லும்!….அடுத்தது….இப்படியொரு கிழிசல் டிரவுசரைப் போட்டுக்கிட்டு…ஒட்டிப் போன வயிறோட…எலும்புகள் தொpயும் நெஞ்சுக் கூட்டோட இருக்கும் இச்சிறுவன் குப்பைத் தொட்டியிலிருந்து தனக்குக் கிடைத்த ரொட்டித் துண்டை தான் சாப்பிடாமல் தன் அருகில் நின்று கை நீட்டும் அச்சிறுமிக்குத் தருகிறான்…அதன் காரணமா அவன் முகத்தில் கொப்பளித்து நிற்கிற சந்தோஷம்…மகிழ்ச்சி…இதெல்லாம் தொpயவே இல்லையா உன் பார்வைக்கு?”

'ம்ஹூம்…தொpயலை டாடி”

'ஓ…புவர் கேர்ள்….உனக்கு இன்னும் ரசனை என்னும் நுண்ணறிவு முளைக்கவே இல்லை…உன்னைப் பார்க்க எனக்கு பாவமாயிருக்கு” அவர் சிரித்தபடி சொல்லி மகளைச் சீண்ட,

'டாடி…நான் ஒண்ணு சொல்வேன் கேட்பீங்களா? ம்…ம்…இந்தப் போட்டோ வேணாம் டாடி….இதை நீங்க அனுப்பாதீங்க டாடி”

'ஏய்…உனக்கென்ன பைத்தியமா?…இப்பத்தானே இந்தப் படத்தோட சிறப்பம்சங்களைச் சொன்னேன்…?”

'அதெல்லாம் ஓ.கே.டாடி….வந்து…”

'ஓ…புரியது…புரியது….எங்கே இந்தப் படத்தை அனுப்பி….இது தோற்றுப் போய்…எனக்கு பரிசு கிடைக்காமப் போய்….நான் தற்கொலை செய்து கொள்வேனோ…ன்னு பயப்படறே…அதானே?…கலைப்படாதே….என்னோட இந்தப் போட்டோ நிச்சயம் என் உயிரைக் காப்பாற்றும்…” நம்பிக்கை நங்கூரம் பாய்ச்;சி நின்றது அவர் பேச்சில;.;

'உங்க உயிரைக் காப்பாத்திடும்…ஆனா….”

'ஆனா…?”

'நம்ம தேசத்தோட மானம்…மரியாதை…கௌரவம்….அத்தனையையும் சாகடிச்சிடும்” சவிதாவின் குரலில் கடுமை இருந்தது.

அவர்; நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவளைக் கூர்ந்து நோக்க

'ஆமாம் டாடி…இந்தியாவோட ரொம்ப மோசமான…ரொம்ப பின் தங்கிய நிலையில் இருக்கற ஒரு சோpப் பகுதியையும்…அங்க வாழுற ஒரு ஓட்டை டிரவுசர் பையனையும் புகைப்படம் எடுத்து அமெரிக்கப் போட்டிக்கு அனுப்பிச்சு 'இதுதான் எங்க நாட்டோட நிலைமை…உலகத்திலுள்ள மற்ற நாடுகளெல்லாம் ஜெட் வேகத்தில் முன்னேறிட்டிருக்கற இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலும் நாங்க இன்னும் முன்னேறாம….அப்படியே கற்கால மனிதனாட்டம்தான் இருக்கோம்”ன்னு உலகம் பூராவும் பறை சாற்றப் போறீங்களா?…வேண்டாம் டாடி….இதுக்கு பதிலா நம்ம நாட்டோட உண்மையான வளர்ச்சியை….பெருமையை…கலாச்சாரத்தை….காட்டுற மாதிரியான ஒரு புகைப்படத்தை எடுத்து …அதை அனுப்புங்க டாடி!...நாம மத்த நாடுகளுக்கு எந்த சளைத்தவர்கள் இல்லை டாடி..ப்ளீஸ்…” கெஞ்சினாள்.

அவரோ மறுப்பாய்த் தலையாட்டியபடி அங்கிருந்து நகர ஓடி வந்து வழி மறித்தாள் 'டாடி…நீங்க சொன்ன கலை அம்சங்களை நானும் ரசிச்சேன்….இல்லைங்கலே…ஆனா…என் தாய் நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தற அந்தக் கலை அம்சங்களை என்னால் கலை அம்சங்களாவே ஏற்றுக் கொள்ள முடியலை டாடி…..நீங்களே உங்க மனசைத் தொட்டு சொல்லுங்க டாடி…நம்ம நாடு எதுல முன்னேறாம இருக்கு?…வெகு விரைவிலேயே வல்லரசாகப் போகுது டாடி…அதனால…அதனால…அந்தப் போட்டோவ நீங்க அனுப்பக் கூடாது டாடி.”

'அப்படின்னா…ஏதோ ஒரு ஏனோதானோ போட்டோவை அனுப்பிச்சு….போட்டில தோத்து…என்னை உயிரை விடச் சொல்றியா?” அவர் அவ்வாறு கேட்டதில் மனம் நொந்து போன சவிதா பாய்ந்து வந்து அவர் வாயைப் பொத்தினாள்.

வலுக்கட்டாயமாய் அதை விலக்கியவர் 'அப்ப நீயே முடிவு பண்ணிச் சொல்லு….'தாய் நாடா?..தந்தை உயிரா?”ன்னு”

'அய்யோ…டாடி…எனக்கு ரெண்டுமே முக்கியம் டாடி…”

'பட்….எனக்கு பாpசுதான் முக்கியம்….ஸோ…என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை….நான் அந்தப் புகைப் படத்தைத்தான் அனுப்பப் போறேன்…” ஆணித்தரமாய்ச் சொல்லி விட்டுச் சென்றவரைக் கண்ணீருடன் பார்த்தபடி நின்றாள.;

***
நாற்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு தன் வீட்டு வாசலில் மொத்தமாய் வந்திறங்கிய மீடியா ஆட்களை குழப்பத்துடன் பார்த்தார் கோபிநாத.;

'சார்…ரியலி யூ ஆh; கிரேட் சார்”

'சொன்னபடி சாதிச்சுட்டீங்க சார்”

'சவால்ல ஜெயிச்சு…இனி புகைப்படக் கலைல உங்களை மிஞ்ச ஒருத்தரும் இல்லைன்னு நிருபிச்சுட்டீங்க சார்”

திக்குமுக்காட வைத்த கை குலுக்கல்களும்….பாராட்டுக்களும் ஓரளவிற்கு விஷயத்தை யூகிக்க வைக்க 'ஆஹா…என் புகைப்படம் வென்று விட்டது….என் உயிர் காப்பாற்றப்பட்டு விட்டது”

சட்டென முன் வந்து நின்ற அதே ஜிப்பாக்கார நிருபர் 'ஸாரி சார்…அன்னிக்கு நான் உங்களை..”

'இட்ஸ் ஓ.கே…இட்ஸ் ஓ.கே…சொல்லப் போனா மிஸ்டர்…ஜிப்பா…நீதான்யா எனக்கு கிரியாஊக்கியே” என்றார் கோபிநாத் சிரித்தபடி.

'சார்…பரிசு பெற்ற அந்தப் புகைப்படம் எந்தச் சூழ்நிலையில்….எப்படி எடுக்கப்பட்டது என்பதையும்….அதில் என்னென்ன உட்கருத்துக்கள்….என்னென்ன உத்திகள் இருக்கு என்பதையும் எங்கள் பத்திரிக்கை வாசகர்களுக்காக நீங்க கண்டிப்பா சொல்லியே ஆகணும் சார்” பெண் நிருபர் ஒருத்தி ஒயிலாய்க் கேட்டாள்.

'ஓ.எஸ்…தாராளமா…” என்ற கோபிநாத் அப்புகைப்படத்தின் பிரதியை எடுத்து வர வேண்டி அறை நோக்கித் திரும்ப

'இதோ என்கிட்ட இருக்கு சார் அந்தப் போட்டோவோட காப்பி…” இணைய தளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட போட்டோ நகலை ஜிப்பாக்காரர் நீட்டினார்.

'வெரி குட்” என்றபடி அதைக் கை நீட்டி வாங்கிய கோபிநாத் திருப்பி அதை முழுதாய்ப் பார்த்ததும் ஆக்ரோஷமானார்.

'நோ…நோ….நான் அனுப்பிய புகைப்படம் இதுவல்ல….சம் திங் ராங்”

'என்ன சார; சொல்றீங்க…இது உங்க புகைப்படம் அல்லவா”

'இதுவும் நான் எடுத்த புகைப்படம்தான்….பட்…போட்டிக்கு அனுப்பியது வேறொரு புகைப்படம்…எங்கியோ குழப்பம் நடந்திருக்கு” கோபத்தில் அவரது சிவந்த முகம் மேலும் சிவப்பாகி விகாரமாய்த் தோற்றமளித்தது.

உள்ளறையிலிருந்து மொத்தத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சவிதா இனியும் அந்த உண்மையைச் சொல்லாமல் விட்டால் நிலைமை மேலும் விபாPதமாகிவிடும் என்பதை உணர்ந்து அறையிலிருந்து வெளிப்பட்டாள். 'டாடி…என்னைய மன்னிச்சிடுங்க டாடி…நான்தான் உங்களுக்குத் தொpயாம அந்த புகைப்படத்தை மாற்றி வைத்தேன்…” நடுங்கும் குரலில் சொன்னாள்.

'ஓ…மை…காட்……ஏம்மா…ஏன் இப்படிச் செஞ்சே?…”

தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் சம்பாஷனையின் பின்புலம் விளங்காத நிருபர்கள் குழப்பத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர்.

'டாடி…எப்படியோ நீங்க எடுத்த புகைப்படம்தானே ஜெயிச்சிருக்கு…? அப்புறமென்ன?”

'மேடம்…நாங்கெல்லாம் இங்க என்ன நடக்குதுன்னே புரியாம தலையைப் பியச்சுக்கறோம்….ப்ளீஸ்…எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்…” புதிய செய்திகளுக்காகவே அலையும் ஒரு நிருபர் ஆவலோடு இடை புகுந்து கேட்க

மெலிதாய்ச் சிரித்த சவிதா சொன்னாள்.

பொறுமையாய் அனைத்தையும் கேட்டு முடித்த அந்த மீடியாக்காரர்கள் அனைவரும் தங்கள் காமிராவை கோபிநாத்திடமிருந்து விலக்கி சவிதாவின் மீது நிலைப்படுத்தினர்.

'மேடம்….உண்மையைச் சொல்லனும்னா..நீங்கதான் மேடம் இன்னிக்கு வி.ஐ.பி. போட்டில முதல் பாpசு வாங;கி உங்கப்பா இந்த நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கலாம்….ஆனா நம்ம நாட்டோட பேருக்கும்…பாராம்பாpயப் புகழுக்கும் துளியும் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக….உங்கப்பாவோட உயிரையே பணயம் வைக்கிற மாதிரியான ஒரு காரியத்தை நீங்க ரொம்பத் துணிச்சலா செஞ்சிருக்கீங்க…ஒரு பொpய ரிஸ்க்கை நம்பிக்கையோட…மனத்திடத்தோட எடுத்திருக்கீங்க…அதுல வெற்றியும் பெற்றிருக்கீங்க…யூ ஆர; க்ரேட்…” ஜிப்பாக்காரர் அடுக்கிக் கொண்டே போனார்.

'தந்தையோட உயிர்…..தாய் நாட்டோட பெயர்…ன்னு இரண்டுக்கும் நடுவுல தவியாய்த் தவிச்சிருக்கீங்க மேடம் நீங்க…அதை நினைச்சுப் பார்க்கிற போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது மேடம்…” பெண்கள் பத்திரிக்கையின் பிரதான நிருபர் ஒருவர் பிரமாதமாய்ச் சிலாகித்தார்.

'மிஸ்டர்.கோபிநாத் சார்…உங்ககிட்ட ஒரு கேள்வி…நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது…”

'நோ பிராப்ளம்…” தோள்களைக் குலுக்கியபடி சொன்னார் கோபிநாத்.

'ஒரு வேளை…நீங்க பாpசு வாங்காமப் போயிருந்தா?….”

'நான் சொன்னதைச் செய்வேன்”

'விருட்” டென நிமிர்ந்து நடுக்கமாய்த் தந்தையைப் பார்த்தாள் சவிதா. அவர் தலையை மேலும் கீழுமாய் ஆட்டி தன் எண்ணத்தின் உறுதியைக் காட்டினார்.

'மேடம்…இப்ப உங்ககிட்ட ஒரு கேள்வி….ஒரு வேளை நீங்க புகைப்படத்தை மாற்றி வெச்ச காரணத்தாலேயே உங்க தந்தைக்குப் பாpசு கிடைக்காமப் போயி…அவரும் அவர் சொன்னபடி செஞசிருந்தா….?”

சில நிமிடங்கள் அமைதி காத்த சவிதா 'முதலில் தாய் நாட்டை ஒரு களங்கத்திலிருந்து காப்பாற்றி விட்டோம்னு சந்தோஷப்படுவேன்….பிறகு….தந்தையின் இழப்பிற்கு காரணமாகி விட்டோமேன்னு வருத்தப்படுவேன்….மொத்தத்தில் 'இழந்தது தந்தையை…காப்பாற்றியது தாயை”..ன்னு நெனச்சு மனசைத் தேத்திக்குவேன்” என்றாள்.

அவளது அந்த பதிலில் நெகிழ்ந்து போன கோபிநாத் தன் மகளின் தேசப்பற்றில் ஒரு பாதி கூட தனக்கு இல்லாமல் போய் விட்டதற்காய் வருந்தி சட்டென அவளை நெருங்கி வந்து தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்





















ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 30, 2013 3:50 pm

சில நிமிடங்கள் அமைதி காத்த சவிதா 'முதலில் தாய் நாட்டை ஒரு களங்கத்திலிருந்து காப்பாற்றி விட்டோம்னு சந்தோஷப்படுவேன்….பிறகு….தந்தையின் இழப்பிற்கு காரணமாகி விட்டோமேன்னு வருத்தப்படுவேன்….மொத்தத்தில் 'இழந்தது தந்தையை…காப்பாற்றியது தாயை”..ன்னு நெனச்சு மனசைத் தேத்திக்குவேன்” என்றாள்.
அருமையான தெசப்பற்றுக்கதை நண்பரே..,ஆரம்ப பத்திகளில் நீங்கள் வார்த்தைகளை கையாண்டிருக்கும் விதம் நிச்சயம் நீங்கள் ஒரு கைதேர்ந்த கதாசிரியர் என்பதை நிருபித்துள்ளது.தொடருங்கள்.ஜெய் ஹிந்த்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக