ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_m10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10 
ayyasamy ram
ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_m10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_m10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10 
VENKUSADAS
ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_m10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10 

Top posting users this month
heezulia
ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_m10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10 
ayyasamy ram
ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_m10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_m10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10 
VENKUSADAS
ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_m10ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ?

+2
balakarthik
அகல்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Empty ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ?

Post by அகல் Sun Jan 27, 2013 4:50 pm

First topic message reminder :

வணக்கம் ..!

விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டிற்கும் தடையை யாவரும் அறிவோம். இந்த படம் இஸ்லாமிற்கு எதிரானது, கமலஹாசன் இந்திய இஸ்லாமியரை தீவிரவாதிகளாகவே காட்டி இருக்கிறார் என்று கமல் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறாக குற்றச்சாட்டுகளைக் கூறுவோர் அனைவரும் படத்தைப் பார்க்கவில்லை. பார்க்காமலே இஸ்லாம் சகோதரர்கள் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் படத்திற்கும் தடையும் கோரியுள்ளனர்.

இதன் பின்னணியில் மதக்கட்சிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பல அரசியல் ஆதாயங்கள் தேடுவதற்காக மதபிரச்சனை உருவாகும் சூழலுக்கு இந்தப் பிரச்சனையை கொண்டுவந்துள்ளனர். இது அரசியல் விளையாட்டு என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அதை புரிந்துகொள்ள மட்டுமே மறுக்கிறோம். கமலஹாசன் இஸ்லாமிற்கு எதிரானவர் என்று சித்தரித்து செய்திகளை வெளியிடும் சமூக வலைதள நண்பர்கள் சில அடிப்படைகளை அறிந்துகொள்ளும் பொருட்டில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Vishwaroopam-Poster

சினிமா வரலாற்றில் சில நிகழ்வுகள்

விஸ்வரூபம் தடையை ஆதரிக்கும்/எதிர்க்கும் முன் தமிழ் சினிமாவின் சில நிகழ்வுகளை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது.

2011 ஆம் ஆண்டு வெளியான "பயணம்" படம் உள்நாட்டு தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். விமானத்திலேயே ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொல்வதாக காட்சி அமைப்பு இருக்கும். எந்த இஸ்லாமிய சகோதரர்களோ, அமைப்போ இந்த படத்திற்கு தடை கோரவில்லை. முக்கியமாக அந்தப் படத்தில் மிகவும் ஆக்ரோசமான உணர்ச்சிமிக்க ஒரு காட்சி படத்தின் கடைசியில் வரும். ஒரு இஸ்லாம் குழந்தை வைத்திருக்கும் பையில், தீவிரவாதி ஒருவன் பரிசுப்பொருள் என்று கூறி வெடிகுண்டை வைத்து அனுப்புவதானா காட்சி அது. குறைந்த பட்சம் அந்த காட்சிக்கு எந்த அமைப்பினரும் தடை கோரவில்லை
விஜயக்காந் படங்களில் பெரும்பாலும் இவ்வாறான காட்சிகளே இருக்கும். அப்போதும் எந்த எதிருப்பும் எழவில்லை.

மனித நேயம், இந்து முஸ்லிம் சகோதரத்துவம் இவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ரோஜா, பாம்பே போன்ற படங்களில் உள்நாட்டு தீவிரவாதம்/மதவாத மோதல்கள் இவற்றைக் காட்டும் பல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. நடந்த உண்மைச் சம்பவம் என்கிற முறையில் பாம்பே படத்தில் வரும் காட்சிகளுக்கும் நாம் தடைகோரவில்லை.

இதைப்போல் தமிழ்நாட்டில் இதற்கு முன் தீவிரவாதத்தை மையப்படுத்தி பல படங்கள் வந்திருக்கிறது. அதற்கு பெரிதாக இஸ்லாம் சகோதரர்கள் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் வெளிநாடான ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஒரு நிகழ்வை மையப்படுத்தி எடுத்த படத்திற்கு தரப்படும் எதிர்ப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது.

கமலஹாசனுக்கு எதிர்ப்புகள் புதிதல்ல என்றாலும், இந்த போக்கை பார்கையில், உலகில் மிகவும் அறியப்பட்ட ஒருவரின் படத்தை தடை செய்து அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாம் சகோதரர்களை சில மதவாத அமைப்புகள் தூண்டிவிடுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. மறுக்கமுடியாத உண்மையும் கூட.

இஸ்லாமியரின் ககோதரன் கமல்

இதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. இஸ்லாம் அமைப்புகள், கட்சிகள் நன்கு அறியும்.

1992 ஆம் ஆண்டு பாபர்மசூதி இடிக்கப்பட்ட போது அதை எதிர்த்து வலுவான குரல் கொடுத்தவர் கமலஹாசன். அன்றைய பிரமதரை சந்தித்து தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தவர்.

இந்து முஸ்லிம் இணக்கமான உறவிற்காக இயங்கும் "ஹர்மனி" என்ற அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து அதற்காக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

தனது "ஹேராம்" படத்திலும் இஸ்லாமியர்களை உயர்த்திக்காட்டியவர். தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்லும் தமிழன் என்பதையெல்லாம் தாண்டி, ஜாதி மதம் இவற்றைக் கடந்த மனிதநேயத்தை மட்டும் நேசிக்கும் உண்மையான மனிதர்.

http://4.bp.blogspot.com/-aOdVQvnTMwk/UQT2oXQKUyI/AAAAAAAABTE/jQTxdGjngdY/s1600/hey-ram.jpg

படத்தின் தளம்

விஸ்வரூபம் படத்தை பார்த்த இஸ்லாம் சகோதரர்கள் முதல் மற்றவர்வரை, படத்தில் இந்திய முஸ்லீம்களை உயர்த்தியே காட்டியுள்ளார் கமல் என்கிறார்கள். படத்தின் பெரும்பாலான பகுதிகளில் அல்லாவைப் பெருமைபடுத்தும் விதமாகவே காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது என்பது அவர்களின் கருத்து.

படத்தின் தளம் அல்கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகள் எப்படி செயல்படுகிறது என்பதுமட்டுமே. அந்த தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் அப்பாவி இஸ்லாமியர்களையே எப்படி கொலைசெய்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். மறுக்கும் பட்சத்தில் அதை மறைக்கவே நினைக்கிறோம் என்று கொள்ளவேண்டும். தாலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்தவரை, ஆப்கானிஸ்தானில் இஸ்லாம் சகோதரிகளுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டது. அடிமையாக வைக்கப்பட்டார்கள் என்றே கூறலாம். தாலிபான்களின் முக்கியமான கட்டளைகளில் ஒன்று "பெண்கள் பள்ளிக்கு செல்லக் கூடாது" என்பது.

ஆட்சி ஆப்கானிஸ்தானில் அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தபிறகு, பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்துவிட்டு 48 பெண் மாணவிகள் உயிர்க்கு போராடிய கதை உலகறியும்.

ஜீன்ஸ், டி ஷர்ட் போட்ட பெண்களை தாலிபான்கள் பாகிஸ்தானில் கொலை செய்துள்ளார்கள். தங்கள் வீட்டு விழாவில் நடனம் ஆடிய 6 கிராமத்து பெண்களையும் கொலை செய்துள்ளனர். இவையாவும் சமீபத்தில் அங்கு நடந்த நிகழ்வுகள் சில உதாரணங்களாக. கொல்லப்பட்டது வேறு மதத்தவறல்ல இஸ்லாமியர்களே.

இஸ்லாம் மதம் தீவிரவாத மதம் அல்ல. எந்த மதமும் தீவிரவாதத்தைப் போதிப்பதில்லை. அதே வேளையில் மேல சொல்லப்பட்ட செயல்களைச் செய்யும் தீவிரவாத அமைப்புகளை பற்றிய உண்மைச் சம்பவத்தை சொல்லும் படத்திற்கு நாம் ஏன் தடை கோரவேண்டும். அந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஏன் தெரிந்துகொள்ள மறுக்கவேண்டும் ? தீவிரவாதத்தை எதிர்த்து குரல்கொடுக்க தயங்கவேண்டும்.

இதுபோன்ற தீவிரவாத செயல்களை வெளியுலகிற்கு தெரியவிடமாட்டோம், தீவிரவாதத்தை ஆதரிப்போம் எனும் போக்கில் சிந்திக்கும் தமிழ், இந்திய இஸ்லாமிய சகோதரர்கள் மட்டும் விஸ்வரூபம் படத்திற்கு தடை கூறலாம். ஆனால் இந்திய, தமிழ் இஸ்லாமியர்கள் என்றும் தீவிரவாதத்தை ஆதரிக்கமாட்டார்கள் என்பதை நன்கு அறிவேன்.

தீவிரவாதத்தை எதிர்ப்போம்

இஸ்லாம் மதத்தவர் மட்டுமல்ல, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு அப்பாவி உயிரை எடுக்கும்பட்சத்தில் அது தீவிரவாத செயலே. இந்த அடிப்படையை நாம் புரிந்துகொண்டு தீவிரவாத செயல்களை எதிர்க்க ஒன்றுபடுவது அவசியமாகிறது. ஒரு சாதிக்காரன் மற்ற சாதிக்காரனைக் கொன்றாலும், ஒரு இந்து இஸ்லாமியரைக் கொன்றாலும், ஒரு இஸ்லாமியர் இந்துவைக் கொன்றாலும், ஒரு இஸ்லாமியரே இஸ்லாமியரைக் கொன்றாலும் அது தீவிரவாதமே.

பாகிஸ்தான் ஆப்கனிஸ்தானில் வசிக்கும் ஒருவன், தீய செயல்களை செய்ய விரும்பாத இந்திய முஸ்லீமையோ ஒரு இந்துவையோ நண்பனாக கருதுவதில்லை. அப்படியிருக்க நமது நாட்டை அழிக்க என்னும் ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பிடம் இருந்து தாய் நாட்டைக் காக்கும் விதத்தில் படமாக்கப்பட்ட ஒரு படத்திற்கு இங்கே நாம் ஏன் தடை விதிக்க வேண்டும் ? இதுவரை அந்நாட்டு தீவிரவாத அமைப்புகள் இந்தியாவின் மீது நடத்திய தாக்குதல்களில் இறந்தது இந்து மட்டுமல்ல. இஸ்லாம் சகோதரனும் தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நம் நாட்டை அழிக்க என்னும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் எவ்வாறு இயங்குகிறது என்று காட்டும் ஒரு படத்தை தடுப்பது நாம் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக ஆகிவிடாதா .? இதை இஸ்லாத்திற்கு எதிரான படம் என்று உணர்ச்சிப்பூர்வமாக பார்க்காமல், தீவிரவதத்திற்கு எதிரான படம் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியமாகிறது. மேலும் இந்து முஸ்லிம் என்று சிந்திக்காமல், இந்தியன் என்ற சிந்தனையுடன் அணுகுவதும் அவசியமாகிறது. இதை நாம் நன்கு உணர வேண்டும்.

http://4.bp.blogspot.com/-q1EAgOKhJNs/UQT24M8rjUI/AAAAAAAABTM/5Vfuwr3MMsU/s1600/11.jpg

"காக்கைச் சிறகினிலே" வலைப்பூவில் பதியும் எந்த ஒரு பதிவும் எந்த மதத்தையும் புண்படுத்தும் படியாக இருக்கக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். காரணம் "மதம் தோன்றும் முன்னே மனிதன் தோன்றிவிட்டான். எனக்கு மனிதம் மட்டும் போதும்". அதேவேளையில், அனைத்து மதத்தினரும் என் சகோதரர்களே. ஒரு சில மதத்தில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளுக்கு அந்த மதமே தவறு என்று நாம் கூற இயலாது. ஏனென்றால் எந்த மதமும் தவறான கொள்கைகளைப் போதிப்பதில்லை. அந்த கொள்கைகளைப் புரிந்துகொள்ளும் விதம் தான் தவறாகிறது. இதுவே எனது எண்ணம், கருத்து.

ஆகையால் இங்கு பின்னூட்டம் (கமெண்ட்) இட விரும்பும் நண்பர்கள், நடுநிலையாக யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி ..!

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/01/blog-post_27.html

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Empty Re: ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ?

Post by அகல் Mon Jan 28, 2013 1:41 am

Halfmoon wrote: குஜராத் இனக்கலவரத்தை, அங்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கமலஹாசனோ, மணிரத்னமோ படமாக எடுத்து தமிழ்நாட்டில் வெளியிடட்டும். முடியுமா?
குஜராத் இனக்கலவரம் வருதத்திர்க்குரியது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் எவரையும் இந்தப்படம் தான் எடுக்க வேண்டும் என நிர்பந்திக்க நமக்கு உரிமையில்லை.. கமலஹாசன் ஏன் குஜராத் கலவரத்தை படமாக்கவில்லை என்று கேட்கும் நாம், இதே கேள்வியை சாருகான், சல்மான்கான், ஆமீர்கானிடம் கேட்டதுண்டா .??


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Empty Re: ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ?

Post by Guest Mon Jan 28, 2013 10:26 am

தெளிவான அலசல் அகல் ... இந்த பிரச்சனை நல்ல படியாக முடிந்து எப்போதும் சகோதர ஒற்றுமை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ... :வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Empty Re: ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ?

Post by அகல் Mon Jan 28, 2013 2:02 pm

ஆம் மதம் என்ற போர்வையைத் தாண்டி என்றும் நமது மக்களிடம் சகோதரத்துவம் தொடரவேண்டும் என்பதே எனது ஆசையும்.. மிக்க நன்றி புரட்சி..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ? - Page 2 Empty Re: ஆப்கான் தீவிரவாத அமைப்பைப் பற்றிய படத்திற்கு, இந்தியாவில் ஏன் தடை ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்
» இந்தியாவில் கொரோனா பற்றிய செய்தி படங்களுக்காக மறைந்த இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது!
» விஸ்வரூபம் படத்திற்கு 2 தேசிய விருதுகள், பரதேசி படத்திற்கு ஒரு தேசிய விருது!
» ஆப்கான் தீவிரவாதியாக நாசர்!
» ஆப்கான் பெண்ணே உனக்கு தலை வணங்குகிறேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum