ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’

4 posters

Go down

‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  Empty ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’

Post by ராஜா Sun Jan 27, 2013 11:19 am

‘‘விஸ்வரூபம் படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’ என்று முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

வழக்கு

முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக, கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது. இந்த தடையை எதிர்த்து, கமல்ஹாசனின் பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை 28–ந்தேதிக்கு தள்ளி வைத்தார். இன்று (சனிக்கிழமை) படத்தை பார்ப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் அறிக்கை

இந்த நிலையில், முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–‘‘என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். கடந்த சில நாட்களாக ‘விஸ்வரூபம்’ திரைப்பட பிரச்சினைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

இஸ்லாமிய சமூகத்தின் மீது மரியாதை

கமல், எனது 40 ஆண்டு கால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். இந்த திரைப்படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பே, இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததில் இருந்தே இஸ்லாமிய சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.மேலும் கமல்ஹாசன் இந்த படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது, என் மனம் கலங்குகிறது.

பாதிப்பு வராத வகையில்

கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த படத்தை முழுசா தடை செய்யணும் என்ற கருத்தில் இருந்து மாறி, கமல் வந்த பிறகு கலந்து பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன். ஜெய்ஹிந்த்.’’இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  Empty Re: ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’

Post by balakarthik Sun Jan 27, 2013 11:38 am

அப்பாடி இப்பவாவது வாய் திறந்தாரே பாபாஜி : சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க :


ஈகரை தமிழ் களஞ்சியம் ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  Empty Re: ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’

Post by ஹர்ஷித் Sun Jan 27, 2013 12:21 pm

கமல் வந்த பிறகு கலந்து பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து படத்தை வெளியிட
சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  Empty Re: ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’

Post by அருண் Sun Jan 27, 2013 12:26 pm

திரையுலகில் எவ்வளவு பேர் இருக்க ரஜினியும் பாரதி ராஜா வும் மட்டும் தான் கமலுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார்கள்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  Empty Re: ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’

Post by balakarthik Sun Jan 27, 2013 12:27 pm

அருண் wrote:திரையுலகில் எவ்வளவு பேர் இருக்க ரஜினியும் பாரதி ராஜா வும் மட்டும் தான் கமலுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார்கள்.!

பிரகாஷ் ராஜ் கூட ஆதரவா ஏதோ பத்திரிக்கையில பேசி இருந்தாரே அருண்


ஈகரை தமிழ் களஞ்சியம் ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  Empty Re: ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’

Post by அருண் Sun Jan 27, 2013 12:34 pm

balakarthik wrote:
பிரகாஷ் ராஜ் கூட ஆதரவா ஏதோ பத்திரிக்கையில பேசி இருந்தாரே அருண்

அப்படியா பாஸ்.! விஸ்வரூபம் மகா ரூபம் ஆகா ஆகும் போல.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  Empty Re: ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’

Post by balakarthik Sun Jan 27, 2013 12:35 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
புதிய டிரெண்டுகளை உருவாக்குகிறவர்கள் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருப்பது இயற்கையே கமலஹாசனின் இந்த படத்தால் யாருக்கும் கஸ்டம் இருக்காது என்பதே என் நம்பிக்கை. எதிர்க்கிறவர்கள் வெறும் அச்சத்தால்தான் எதிர்க்கிறார்கள் என்பது என் துணிவு. பிரச்சினைகளைச் சந்திக்கும் துணிவை கமலஹாசனுக்குக் கடவுள் அருளட்டும்.

இது நம்ம இசைஞானி இளையராஜா கமலின் கடவுள் நம்பிக்கை பற்றி கேள்வி பதிலில் சொன்னது இங்கே பொருத்தமா இருக்குமுன்னு சொல்லுறேன் அவருக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுளுக்கு அவர் மீது நம்பிக்கை இருக்கிறது
(நன்றி : இசைஞானி - குமுதம் இதழ் ராஜ பவனி கேள்வி பதில்)


ஈகரை தமிழ் களஞ்சியம் ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’  Empty Re: ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினை: முஸ்லிம்களுக்கு, ரஜினிகாந்த் வேண்டுகோள் ‘‘படத்தை வெளியிட உறுதுணையாக இருங்கள்’’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum