ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ்

2 posters

Go down

இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் Empty இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ்

Post by கரூர் கவியன்பன் Thu 24 Jan 2013 - 13:32

அனைத்து சமூதாய பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பை 'அனைத்து சமுதாய பேரியக்கம்' என மாற்றி அடுத்த ஆட்டத்தை துவங்கி விட்டார் ராமதாஸ்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி என மண்டல அளவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம், தற்போது மண்டல அளவை தாண்டி மாவட்ட அளவில் நடக்க, தமிழகம் முழுவதும் சாதித் தீ பரவத் துவங்கியுள்ளது.

கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் என அடுத்தடுத்து மேற்கு மண்டல மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளார் ராமதாஸ். திருப்பூரில் நடந்த கூட்டத்தில் கொ.மு.க. மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமியும் பங்கேற்றார். நாமக்கல், ஈரோடு, திருப்பூர் என கூட்டம் நடந்த இடங்களில் எல்லாம் ராமதாஸ் வருகையை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தலித் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை என பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த 100 கணக்கானோர் கைதாகினர்.

திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பிள்ளைமார் கூட்டமைப்பு சார்பில் பேசிய முருகேசன், ''நான் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவன். எனது ஊர் மதுரை அருகே உள்ள உத்தப்புரம் கிராமம். உத்தப்புரத்தில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பதில்லை என்பதை கூறி, போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அவர்களை தூண்டிவிட்டது. அவர்களின் திட்டம் எல்லாம் எங்கள் சமூக பெண்களை கலப்பு திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். ஊரை விட்டு காலி செய்து 8 நாட்கள் மலையில் தங்கியிருந்தோம். எங்களுக்கு தேவர் சமூகத்தினர் பாதுகாப்பாக இருந்தனர். இன்று வரை அங்கு கலப்பு திருமணம் நடக்கவில்லை. நாங்கள் ஒற்றுமையாக இருந்து அதனை தடுத்தோம். உத்தப்புரம் போல தமிழகம் முழுவதும் நாம் ஒற்றுமையுடன் இருந்து கலப்பு திருமணத்தை தடுக்க வேண்டும்,'' என பேசி அதிர்ச்சி கொடுத்தார்.

கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி பொன்.சுப்பிரமணியன், ''தாழ்த்தப்பட்டவர்களுக்காக பேசுபவர்கள் எல்லாம், நாங்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்துள்ளோம் என்கின்றனர். தலித்தாக இருந்தாலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுடன் தான் அவர்கள் திருமணம் செய்கின்றனர். சேரியில் இருக்கும் பெண்ணை கட்ட அவர்கள் தயாரா அல்லது பெண் கொடுக்கத்தான் அவர்கள் தயாரா?. நமது சமுதாயம் அழிந்து போய் விடும் ஆபத்து உள்ளது.

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொங்கு இளைஞர் பேரவையில் 100க்கணக்கான இளைஞர்கள் பரவி இருக்கிறோம். இரு மாவட்டங்களில் எந்த பி.சி.ஆர். வழக்கிலும் தண்டனை பெறப்படவில்லை என்ற நிலையை கொங்குக்கு ஏற்படுத்தி வைத்துள்ளோம். எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,'' என்றார் ஆவேசமாக.

கூட்டத்தில் பேசிய அகில இந்திய பார்வார்டு பிளாக் திருப்பூர் மாவட்ட செயலாளர் கர்ணன் ''தமிழ்நாட்டில் சமீபகாலமாக சில சாதிகள் வெறி பிடித்து ஆடுகிறது. அவர்களுக்கு பி.சி.ஆர். சட்டம் துணையாக இருக்கிறது. இதில் கட்டாயம் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது நீக்க வேண்டும். தர்மபுரியில் உண்மையில் நடந்தது என்ன?. அவர்கள் வீட்டுக்கு அவர்களே தீ வைத்துக் கொண்டார்கள். வீடு மட்டும் தானே எரிந்தது வேறு என்ன நடந்தது?. தேவர் ஜெயந்தி விழாவில் 10 பேர்களை பெட்ரோல் குண்டு வீசி எரித்து கொன்று விட்டார்கள். இதையெல்லாம் அடக்க வேண்டும் என்றால் அனைத்து சமூகத்தினர் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்,'' என குண்டு போட்டார்.

பார்வார்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவன், ''உத்தப்புரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நடமாடவே கூடாது எனும் அளவில் தலித்துகள் நம்மை கொடுமைப்படுத்தியுள்ளனர். பி.சி.ஆர். சட்டத்தை வைத்துக் கொண்டு, நம் பெண்களை கேலி செய்கிறார்கள். 19 சதவீதம் இருக்கிறவன் சொல்வதை கேட்டு எங்களை அரசு மிரட்டுவதை அனுமதிக்கலாமா?,'' என்றார்.

கூட்டத்தில் பேசிய தேவர் இன ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அரசகுமார், ''தேவர் நாட்டில் கூலி வாங்கியவன் வெட்டும் கொடுமைகளை இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர். அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தியின் போது, கோழைக்கூட்டம் ஒளிந்து நின்று கொன்றதற்கு, இறைவன் கொடுத்த பரிசு தான், தர்மபுரியில் கலவரத்தை ஏற்படுத்தி, ராமதாசை மதுரைக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

தமிழகத்தில் ஒரு அற்புதம் நடக்கிறது. கடந்த மாதம் 2 ஆம் தேதி சென்னையில் துவங்கி அனைத்து சமுதாய கூட்டம் நடத்தப்பட்டு வருவதற்கு பின்னர், வன்கொடுமை வழக்குகள் குறைந்து கொண்டிருக்கிறது. வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய காவல்துறை அஞ்சுகிறது. படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக போகின்றனர். எங்கு பிரச்னை நடந்தாலும், அடித்து உதைத்து விடுவார்கள், கொன்று குவித்து விடுவார்கள் என்ற அச்சம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உருவாகியுள்ளது. அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். அந்த துணிச்சலை உருவாக்கியவர் ராமதாஸ். பொதுவுடமை கட்சியை வளர்க்க விடாதீர்கள். அவர்களுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள். நம் காசை வாங்கி, நம்மை பற்றியே மைக் போட்டு பேசுகிறான். உத்தப்பபுரத்துக்கும், பிருந்தா காரத்துக்கும் என்ன சம்பந்தம்?. தர்மபுரிக்கும், மாயாவதிக்கும் என்ன சம்பந்தம்?. ஆர்ப்பாட்டம் வெற்றி பெறத்தான் அமைதியாக இருக்கிறோம்,'' என பேசி அமர்ந்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய கொ.மு.க. மாநிலத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, ''2009ம் ஆண்டு கருமத்தம்பட்டியில் நடந்த மாநாட்டில் பி.சி.ஆர். சட்டத்தை திருத்த தீர்மானம் நிறைவேற்றினோம். இதுவரை நாம் தனித்தனியாக செய்து கொண்டிருந்தோம். இன்று தான் அனைத்து சமுதாயம் ஒன்றிணைந்து செய்கிறோம்.

தாழ்த்தப்பட்டவர்களிடம் நாம் எங்காவது தகராறுக்கு சென்றிருக்கிறோமா? அவர்கள் தான் தகராறு செய்கிறார்கள். வேண்டுமென்றே அவர்கள் தான் சாதி கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறினால், காவல்துறை வேலையை நாங்கள் செய்வோம்,'' என்றார்.

இறுதியாக பேசிய பாமக தலைவர் ராமதாஸ், ''வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் காதல் திருமணங்களால் நடந்த கொடுமைகளுக்கு எலல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இங்கே கூடியிருக்கிறோம். போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லத போது நமக்கு நாம் தான் பாதுகாப்பை தேடிக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவேன் என்ற தோற்றத்தில் சிலர் சாதி பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலை வந்து விட்டது. 81 சதவீத மக்களை பாதிக்கிற, பகைத்துக் கொள்கிற செயலை அவர்கள் செய்யக்கூடாது. இது மானப்பிரச்னை. நம் பெண்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 32 மாவட்டங்களிலும் அனைத்து சமுதாய பேரியக்கம் துவங்கப்பட வேண்டும். மாவட்டம் தோறும் அலுவலகம் துவங்க வேண்டும். அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நான் என்றும் விடாமல் கொண்டு செல்வேன். இன்னும் 19 மாவட்டங்களில் கூட்டம் நடக்க உள்ளத. பி.சி.ஆர் சட்டத்தை திருத்த டெல்லி வரை சென்று போராடுவோம்,'' என் பேசி முடித்தார்.

இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ். இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ?.

- ஜெ.ரவி
விகடன்


Last edited by கரூர் கவியன்பன் on Thu 24 Jan 2013 - 13:42; edited 1 time in total (Reason for editing : edit)
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ் Empty Re: இப்போதைக்கு இது முடிவதாக இல்லை என உணர்த்தியிருக்கிறார் ராமதாஸ்

Post by ராஜா Thu 24 Jan 2013 - 13:50

விஷயம் ரொம்ப தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது போல தெரிகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum