ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெளனம் என்னும் மந்திர மொழி!

2 posters

Go down

ஈகரை மெளனம் என்னும் மந்திர மொழி!

Post by Powenraj Tue Jan 22, 2013 12:57 pm

ஒரு விவசாயியின் கைக்கடிகரம், அவன் மாட்டுத்தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தொலைந்து விட்டது.
அங்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் தேடித் தர சொன்னான். பரிசு கொடுப்பதாகவும் கூறினான்.
-
சிறுவர்கள் சிறிது நேரம் தேடினார் கிடைக்க வில்லை.விவசாயியிடம் வந்து அதைச் சொன்னார்கள். அவர்களில் ஒரு
சிறுவன், “அய்யா எனக்கு இன்னொரு முறை வாய்ப்பு தருவீர்களா?” என்று கேட்டான்.
-
“சரி போய்த் தேடு” என்றான் விவசாயி.சற்று நேரத்திற்கெல்லாம் சிறுவன் ஒரு கைக் கடியாரத்துடன் திரும்பினான்.
“மற்றவர்களுக்குக் கிடைக்காத போது உனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?” என்று. கேட்டான் விவசாயி.
-
சிறுவன் சொன்னான், “மாட்டுத் தொழுவத்தில் சிறிது நேரம் நான் எந்த ஒரு சப்தமும் செய்திடாது மௌனமாகஇருந்தேன். அப்போது கடியாரத்தின் ‘டிக் டிக்’ சத்தம் எனக்குக் கேட்டது” என்று.
-
மௌனத்திற்கு என்ன ஒரு பலம் பார்த்தீர்களா? நீங்களும் தினமும் சில நிமிஷங்கள் மௌனமாக இருக்கப் பழகினால்,மனோ பலம் அடைவீர்கள்…
-
வார்த்தைகள் இல்லாத புத்தகம் மெளனம். ஆனால் வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மெளனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மெளனம் என்பது இருட்டு. எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மெளனம் என்பதுமூடி. இதை தயாரித்து விட்டால், எல்லா உணர்ச்சிகளையும் பூட்டி வைக்கலாம். மெளனம் என்பது போதி மரம். இதுவரை சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மெளனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
-
மெளனம் என்பது வரம். நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும்மெளனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்.
உலகிலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். எங்கோ, எப்போதோ படித்த இதயத்தை வருடிய வரிகள். அதனால்தான் நாம் பேச ஆரம்பித்தால், மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரியில் பேசுகிறோம். பல நேரங்களில் நாம் யாரிடம்பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், எந்த இடத்தில் பேசுகிறோம் என்பதைக் கூட சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை நாம் பேச வேண்டும் என்பது மட்டுமே நமக்கு இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு, மெüனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகின்றான்.
-
நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை, ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால்சில நேரங்களில் வருத்தப்படுவோம். அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது.பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.
-
மெளனத்தின் வெளிப்பாடு பல. கல்யாணப் பெண்ணின் மெளனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மெளனிக்கிறான். துன்பத்தின்உச்சியில் மெளனமே பேசுகிறது. மெளனம் இறைவனின் மொழி. “”சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே ” என்று முருகன்,
அருணகிரி நாதருக்கு உபதேசித்த மந்திர மொழி மெளனம். அமைதி வேறு, மெளனம் வேறு. போருக்குப் பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மெளனம் உள்ளிருந்து வருவது. மெளனம்வார்த்தைகளற்ற நிலை. எண்ணங்கள் அற்ற நிலை. ஓம் என்ற பிரணவத்தின் பொருள், அறிவாக உள்ள இறைவனை, உயிராக உணர்கிற மனிதன், பேரின்ப நிலையாகிய மெளனத்தில் ஆழ்கிறான் என்பதே.
-
இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை. வாழ்க்கை ஓடிக் கொண்டிருக் கிறது. வாரம் ஒருமுறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி, மன அமைதி, மகிழ்ச்சி. இது மெளன தவத்தால் கிடைக்கும்.
-
மெளனத் தவம் செய்பவன் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக் கதவுகள் மூடி, அகக் கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாத பொழுது, அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது குறை, நிறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறுமையாக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால் கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று, தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: மெளனம் என்னும் மந்திர மொழி!

Post by ஹர்ஷித் Tue Jan 22, 2013 1:02 pm

வார்த்தைகள் இல்லாத புத்தகம் மெளனம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை, ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால்சில நேரங்களில் வருத்தப்படுவோம்.
சூப்பருங்க

எந்த தளத்திலிருந்து எடுத்து பதிவிடீர்கள் என்பதை குறிப்பிடவும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: மெளனம் என்னும் மந்திர மொழி!

Post by Powenraj Tue Jan 22, 2013 1:06 pm

“”தன்னை அறிந்து, இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீசொல்ல வேண்டும் வெண்ணிலாவே”என்ற வள்ளலாரின் பாடல் அவன்காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே அவன் இறைவனது பேராற்றலையும் பேரறிவையும் பெறுகிறான். சாதனைகள் கை கூடுகிறது. அவன்மனம் நிறைகிறது.
-
மெளன நோன்பு இரு வகை. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்துகொண்டு, அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனத்தையும் உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றி பெறும்.
-
இரண்டாவது ஆன்ம தூய்மைக்காககுடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும்.
மேலும் இந்த மெளனம் பற்றி யோகி வேதாத்திரி மகரிஷி கூறுவதைப் பாருங்களேன்!
-
மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில்மேம்பாடு வரும்.
-
இவைகளை எல்லாம் அனுபவத்தில்நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது,உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.
-
ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாகஇருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.
-
எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?
நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.
-
அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள்அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதைஅழைத்துச் செல்லும்.
தகவலில் உதவி :; டாக்டர் பி.கி.சிவராமன், தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர்
-
நன்றி ஆந்தை ரிப்ரோட்டர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: மெளனம் என்னும் மந்திர மொழி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum