புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_m10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10 
366 Posts - 49%
heezulia
அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_m10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_m10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_m10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_m10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10 
25 Posts - 3%
prajai
அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_m10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_m10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_m10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_m10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_m10அதிகாலை சேவலை எழுப்பு…  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலை சேவலை எழுப்பு…


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 01, 2013 8:02 pm

அதிகாலை சேவலை எழுப்பு…
அதிகாலை சேவலை எழுப்பு…  Images

“வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை”

என்கிறது ஆசாரக்கோவை. அதாவது அதிகாலை துயில் எழுந்து தான் அன்று என்னென்ன அறங்கள் செய்யப்போகிறோம் அதற்கு எப்படி பொருள் சேர்க்கப் போகிறோம் என்று சிந்தித்து பின் தந்தை தாய் இருவரையும் வணங்கி அந்நாளைத் தொடங்குவது நம் முந்தையோர் கண்ட முறை என்று ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் கூறுகிறார். நம் தமிழ் இலக்கியங்களிலும் திருப்பள்ளியெழுச்சி என்று இலக்கிய வகை இருக்கின்றது. திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரண்டும் அதிகாலை எழுவதையும் தோழியர்களையும் இறைவனையும் எழுப்புவதையும் நன்னீராடி இறைவனைத் தொழும் பாவை நோன்பினையும் பாடுபொருள்களாகக் கொண்டது. இது போல எழுப்பும் பாடல்கள் அல்லது பாசுரங்களை வடவர்கள் சுப்ரபாதம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். திருமதி எம்.எஸ்.சுப்பலட்சுமி என்றால் நம் காதுகளில் ஏழுமலையானின் வெங்கடேச சுப்ரபாதம் தாமாக ஒலிக்கக் காண்கிறோம்.

அதிகாலையில் எழுந்து, குளித்து சூரிய உதயத்திற்காக காத்திருங்கள். சூரிய உதயத்தின் போது உங்கள் மனதில் தோன்றும் வார்த்தைகளை சொல்லுங்கள். எதுவும் தோன்றவில்லையா? அமைதியாக சூரிய உதய அழகை ரசித்திடுங்கள். சுலோகங்கள், பக்திப்பாடல்கள் மட்டுமே சொல்லவேண்டும் என்ற நிர்பந்தம் எதுவுமில்லை. அக்கணத்தில் உங்களுள் தோன்றுவதைச் செய்திடுங்கள். அது சகமனிதனுக்கு சொல்லும் காலை வணக்கமோ, கைகூப்பி வணங்குவதோ, கீழே அமர்ந்து நிலத்தைத் தொடுவதோ, ஆடுவதோ, பாடுவதோ, சூரியனுடன் உறையாடுவதோ அல்லது சூரியன் சொல்வதைக் கேட்பதோ, இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படிச் செய்யவேண்டும், அப்படிச் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடாதீர்கள். அவ்வாறு செய்வதால் அக்கணத்தில் தோன்றக்கூடிய புதிய எண்ணங்கள் தடைபடலாம். இவ்வாறு தினமும் செய்வதால் உங்களுள்ளே மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திடக் காண்பீர்கள். ஒவ்வொரு நாளும் உற்சாகமளிக்கக் கூடிய பல வகையான எண்ணங்கள் உங்களுள்ளே தோன்றிடக் காண்பீர்கள்.
சொற்பொழிவுகள், பக்தி இலக்கியங்களே அன்றி,

”அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்”

“புத்தம் புது காலை, பொன்னிற வேளை”

என்று திரைப்படப் பாடல்களும் அதிகாலையின் அனுராகத்தைப் பாடத் தவறவில்லை. இவயெல்லாம் கதிரவன் வருமுன் விழித்தெழும் சீரிய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலையில் செய்யும் வழிபாட்டுக்கும் வேள்விகளுக்கும் முழுத்தம் (நேரம் காலம்} பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பர். இவையெல்லாம் அதிகாலையின் சிறப்பை உணர்த்தும்.

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறான். வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது. உதயம் என்பதே ஆரம்பம் அல்லது வளர்ச்சி என்னும் பொருளே உருவகமாகக் கொள்ளலாகிறது.

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆண்கள் எப்படி உறங்கி விழித்தாலும், குடும்பத்தின் குத்து விளக்காக ஒளிவீசும் பெண்கள் அதிகாலையில் எழுந்து, குளித்துத் தலையில் துண்டுடனும் கையில் காபியுடனும் கணவனை எழுப்புவது அல்லது தூபக்காலை கையிலேந்தி சாம்பராணி புகையை இல்லம் முழுதும் காட்டும் பெண்கள் மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பே இருந்து வந்தது ஆண்களிடம். பெரும்பான்மையான பெண்களும் தாம் அவ்வாறு இருப்பதையே விரும்பினர். இப்போது எல்லாம் கேள்விக்குறியாகிப் போய்விட்டது. கதிரவன் உச்சிக்கு வரும்போதும் குளிரூட்டப் பெற்ற அறையின் ஜன்னல்களின் திரைச்சீலை ஒளியை உள்ளே விட மறுத்து விடுகின்றது. வாழ்க்கையிலும்தான்.

தொழில் யுகமாக மாறிய இக்காலத்தில் பகல் இரவு எது என்று பிரித்தறியாத அளவுக்கு வேலைகள் எல்லா நேரங்களிலும் செய்யப் பெறுகின்றன. சூரியன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் அவனது பணி மின்சாரத்திடம் மாற்றி விடப்படுகிறது. சூரியனுக்குப் பகல் ஷிப்ட் மின்சாரத்திற்கு இரவு ஷிப்ட் என்று ஆகிப்போனதால் மனிதனும் ஷிப்ட் டியூட்டி பார்க்க வேண்டியுள்ளது. அதிலும் முக்கியமாக கணினியில் பணி புரிவோர் அதாவது தொலைத் தொடர்புத் துறையில் (ஐ.டி} அங்கெங்கெனாதபடி பரவி விட்ட பின் பகல் இரவு வேறுபாடு இல்லாது போயிற்று என்று கூறினால் சாலப்பொருந்தும்.

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகிப் போன இக்காலத்தில் நைட் ஷிப்ட் பார்க்க பெண்களும் தயங்குவதில்லை. தயங்கவும் முடியாது. முக்கியமாக ஐ.டி. துறையில் இருப்போருக்கு இந்த ஷிப்ட் முறையும் கைகொடுப்பதில்லை. கையில் எடுத்த ஒரு ப்ராஜக்ட் முடியும் வரை மூன்று நான்கு ஐந்து.. என்று போய் ஒரு வாரம் கூட உறங்காமல் இருக்கும் பணியாளர்களையும் பார்க்க முடிகிறது. உரிய நேரத்தில் உறக்கம் இல்லை. தேவையான அளவு உறக்கமும் இருப்பதில்லை. அதனால் தான் இளம் வயதிலேயே ஊதிப் பருத்து நோயாளிகளாக மாறிவிடுகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது. அவர்கள் சொல்வாக்கு மற்றும் அதிக ஆயுளுடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை நம் முன்னோர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்த விந்தையை எப்படி கூறுவது. அவர்களின் உடலியல் நுட்பத்தை எப்படி பாராட்டுவது. நாம் நம் கையில் இருக்கும் தீபத்தைத் தூக்கி எறிந்து விட்டு இந்த ஆராய்ச்சியை இப்போது நடத்திய இங்கிலாந்தைப் பாராட்டுகிறோம். இருக்கட்டும். ஆய்வு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அதிக வேலையை சோர்வின்றி செய்தனர்.

அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர். எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளைத் தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு பிரிவினரின் வேறுபாட்டை பாரதிதாசன் குடும்ப விளக்கிலும் இருண்ட வீட்டிலும் அழகாகப் படம் பிடிப்பார்.
கருநிற மேகத்தின் ஆழத்தில் இருந்து நெட்டி முறித்துக் கொண்டு மெல்ல மெல்ல எழுந்து வரும் அந்தச் கதிர்க் குழந்தையின் உதயம், அழகான அமைதி, பறவைகள் கொஞ்சும் மொழி, பறக்கும் இனிய காட்சி என்று இவற்றை ரசிக்க பழகிக்கொண்டால் அதிகாலை அனுபவம் அழகான அனுபவமாக இருக்கும்.

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை,
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.

பாரதிதாசனின் இந்த வர்ணனையைப் பார்த்த பின்னுமா பத்து மணி வரை உறக்கம்.

பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குநின்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளியெழுந்தருளாயே!

என்று உறங்கிக்கொண்டிருந்த பாரதத்தைத் தன் கவிதைக் கரங்களால் தட்டி எழுப்பி விழிக்கச் சொன்னான் அந்த எழுச்சிக் கவி பாரதி. அவன் எழுப்பியது பாரத மணித்திரு நாட்டின் சோம்பேறிகளாகிய நம்மைத்தான். இத்தனை எழுச்சிக் கவிதைகளை யாத்த அவன் ஒரு தாலாட்டுப் பாடல் கூட பாடாததற்குப் பாரத்தத்தின் குழந்தைகளாகிய நம்மிடம் சோம்பேறித்தனம் வந்துவிடக்கூடாது என்னும் நோக்கமே காரணமாக இருந்துள்ளது.

நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தோம். இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க, மடமையில் இருந்து விடுதலை பெற அதிகாலையிலேயே விழித்தெழுவோம். இரவில் சீக்கிரம் படுத்து அதிகாலையில் எழுந்து புத்துணர்ச்சியுடன் வெற்றிப் பாதையில் பயணிப்போம்….. வாருங்கள்….


(இது பெண்மணி மாத இதழில் வெளியான என் கட்டுரை. நன்றி பெண்மணி)





அதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Tஅதிகாலை சேவலை எழுப்பு…  Hஅதிகாலை சேவலை எழுப்பு…  Iஅதிகாலை சேவலை எழுப்பு…  Rஅதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Empty
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Feb 01, 2013 8:59 pm

மிக அருமை அக்கா .இவ்வளவு இருக்கா.............. அதிகாலையில்.. புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Feb 02, 2013 4:31 am

நல்ல அறிவுரை....அதனால் தான் இந்த அதிகாலை பின்னுட்டம் சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 11:55 am

பகிர்வுக்கு நன்றி அக்கா... அருமையிருக்கு

நான் 5.30 மணிக்கு எழுந்து நமாஸ் பண்ணிட்டு சாப்பாடு செய்து பசங்களை அனுப்பிட்டு திரும்பவும் 8 மணிக்கு தூங்கி எழுந்து தான் ஆபிஸ் வரேன் இது சரியா .... என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 02, 2013 11:58 am

கே. பாலா wrote:நல்ல அறிவுரை....அதனால் தான் இந்த அதிகாலை பின்னுட்டம் சூப்பருங்க

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் நீங்க தூங்குவிங்களா மாட்டிங்களா அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 15, 2013 10:45 pm

கரூர் கவியன்பன் wrote:மிக அருமை அக்கா .இவ்வளவு இருக்கா.............. அதிகாலையில்.. புன்னகை
நன்றி கவி.. நன்றி



அதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Tஅதிகாலை சேவலை எழுப்பு…  Hஅதிகாலை சேவலை எழுப்பு…  Iஅதிகாலை சேவலை எழுப்பு…  Rஅதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 15, 2013 10:46 pm

கே. பாலா wrote:நல்ல அறிவுரை....அதனால் தான் இந்த அதிகாலை பின்னுட்டம் சூப்பருங்க
அதிகாலைப் பின்னூட்டத்திற்கு வழக்கம் போலத் தாமதமான நன்றி நவிலல். மன்னிக்க. நன்றி பாலா. அன்பு மலர்



அதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Tஅதிகாலை சேவலை எழுப்பு…  Hஅதிகாலை சேவலை எழுப்பு…  Iஅதிகாலை சேவலை எழுப்பு…  Rஅதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 15, 2013 10:47 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா... அருமையிருக்கு

நான் 5.30 மணிக்கு எழுந்து நமாஸ் பண்ணிட்டு சாப்பாடு செய்து பசங்களை அனுப்பிட்டு திரும்பவும் 8 மணிக்கு தூங்கி எழுந்து தான் ஆபிஸ் வரேன் இது சரியா .... என்ன கொடுமை சார் இது
திரும்பவும் 8 மணிக்குத் தூங்குவீங்களா? வருமா? சரி சரியில்லை என்று எதுவும் இல்லை. அவரவர்க்கு எது தோதோ அதுதான். நன்றி பானு நன்றி



அதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Tஅதிகாலை சேவலை எழுப்பு…  Hஅதிகாலை சேவலை எழுப்பு…  Iஅதிகாலை சேவலை எழுப்பு…  Rஅதிகாலை சேவலை எழுப்பு…  Aஅதிகாலை சேவலை எழுப்பு…  Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 15, 2013 11:59 pm

சீக்கிரம் படுக்க சொல்லி அதிகாலை எழுந்திரிக்க சொல்றீங்க - நட்ட நடு ராத்திரியில் இதை படிச்சு பின்னூட்டம் தர என்னை யாரு திருத்த போறாங்களோ? புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 16, 2013 12:05 am

யினியவன் wrote:சீக்கிரம் படுக்க சொல்லி அதிகாலை எழுந்திரிக்க சொல்றீங்க - நட்ட நடு ராத்திரியில் இதை படிச்சு பின்னூட்டம் தர என்னை யாரு திருத்த போறாங்களோ? புன்னகை

இப்படியே இருந்தால் அதிகாலை சேவல் நாம தான் எழுப்பனும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக