ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

Top posting users this month
ayyasamy ram
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Poll_c10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Poll_m10வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

+13
ஹர்ஷித்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
சதாசிவம்
Guna Tamil
Aathira
Ahanya
DERAR BABU
balakarthik
ராஜா
ஜாஹீதாபானு
யினியவன்
அகல்
17 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Empty வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Post by அகல் Sun 20 Jan 2013 - 17:00

First topic message reminder :

வணக்கம் ..!

பெண்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் மட்டுமே கவனித்துக்கொண்ட காலம் மாறி, இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சாமாளிக்க, தேவைகளை சீராக நிறைவேற்றிக்கொள்ள கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் பெண்களும் வேலைக்குச் செல்வது ஒரு தேவையாக மாறிவிட்டது என்றே கூறலாம்.

இவ்வாறாக வேலைக்குப்போய் பழகிய பெண்கள், குழந்தை பிறந்து வெகுசில மாதங்களிலேயே தங்கள் குழந்தையை DAY CARE CENTRE அல்லது வேலைக்காரியிடம் விட்டுவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அப்படி சில மாதங்களே நிறைவு பெற்ற தன் குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற ஒரு பெண்ணால், அவள் குழந்தைக்கு நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் உங்கள் முன் நிறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். வாருங்கள் பார்ப்போம்.

நடந்தது என்ன ..?

நான் ஹைதராபாத்தில் வேலைபார்த்து வருவது எனது வலைப்பூவை படித்துவரும் பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த சம்பவம் நடந்த இடமும் ஹைதராபாத் தான். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னோடு வேலைபார்க்கும் ஒரு பெண் எனது தோழி. அவளது தோழியே அந்த குழந்தையின் தாய்.

அந்த பெண், தனது குழந்தை பிறந்து சில மாதங்களில் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். காலை அலுவலகம் செல்லும்முன் குழந்தையை வேலைக்காரியிடம் தங்கள் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன் தொலைபேசியில் வேலைக்காரியிடம் தொடர்புகொண்டு வீட்டிற்கு வருவதாக சொல்வது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

ஒருநாள் அந்த பெண்ணிற்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், அலுவலகத்தில் இருந்து வெகு சீக்கிரம் கிளம்பி இருக்கிறாள். இந்தமுறை வீட்டிற்கு வரும்முன் வேலைக்காரிக்கு தகவல் சொல்லப்படவில்லை. அதனால் அந்த பெண் வருவதை வேலைக்காரியும் அறிந்திருக்கவில்லை. அவள் வீட்டை அடைந்தாள். வீடு திறக்கப்பட்டது. வேலைகாரி மிகுந்த பயத்துடன் நிதானம் இழந்தவளாய் தெரிகிறாள்.

வீட்டில் வேலைக்காரி மட்டுமே இருக்கிறாள். குழந்தையைக் காணவில்லை. அதிர்ச்சியுற்ற தாய், வேலைக்காரியிடம் குழந்தை எங்கே என்று பதற்றத்துடன் கேட்கிறாள். அவளோ பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருக்கிறாள். அந்த தாயிக்கு பயத்துடன் சேர்ந்து சந்தேகமும் வலுக்கவே, வேலைக்காரியை வீட்டின் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, தனது கணவருக்கு தகவல் சொல்கிறாள். கணவனும் வீட்டை அடைகிறார். அவரிடமும் வேலைக்காரி சொல்ல மறுக்கிறாள். காவல் துறைக்கு தகவல் பறக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் வந்து அவளை மிரட்டிக்கேட்டபின் இவ்வாறு சொல்கிறாள். "குழந்தையை தின வாடகைக்காக பிச்சை எடுக்க அனுப்பிவிட்டேன். தினமும் குழந்தையின் தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற பிறகு பிச்சைக்காக வாடகைக்கு வாக்குவோர் வந்து குழந்தையை எடுத்துச் செல்வார்கள். பிறகு, மாலை அவர்கள் அலுவலகத்தில் இருந்து கிளம்பும்முன் குழந்தையை வந்து விட்டுச் செல்வார்கள் என்று கூரியுள்ளாள். மிகுந்த அதிர்சிக்குபிறகு குழந்தை மீட்கப்படுகிறது.

இருபோன்ற போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்ன ..?

1. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை சில பெண்களை குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குபோக நிர்பந்திக்கிறது.

2. சில குடும்பங்களில், தங்கள் பொருளாதார நிலையைக் காப்பாற்றிக்கொள்ள கணவன்மார்களே மனைவியை வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கிறார்கள். ஆனால் அதன் எண்ணிக்கை மிக மிக சொற்பமாகவே இருக்கும்.

3. தனியார் துறையில் வேலைபார்க்கும் சில பெண்கள் அதிகப்படியான சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். அது வருவது திடீரென நின்றதும், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தனது குழந்தையின் சூழ்நிலையை பெரிதாக பொருட்படுத்தாமல் உடனடியாக வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள்.

4. அரசு துறையில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு சில மதங்களே பிரசவ விடுப்பு இருப்பதால், அது முடிந்தபின் வேறு வழியின்றி வேலையை விட மனமில்லாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள்.

5. இன்றைய கால சூழ்நிலையில், எவ்வளவு அன்பாக கணவன் மனைவி இருந்தாலும், கணவனின் சம்பாத்யத்தில் தனக்கு பொருட்களை வாங்கிக் கொள்வதை ஒரு அடிமைத்தனமாகவோ அல்லது தனது தேவைகளுக்காக எப்போதும் மற்றவரை சார்ந்து வாழும் சூழலிலே உள்ளதாகவோ பல பெண்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தின் விளைவாக அவர்கள் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குச் சென்று தங்களது தேவைகளை யாரையும் சாராமல் பூர்த்தி செய்துகொள்ள முற்படுகிறார்கள்.

6. தனது சொந்தம் அல்லது நண்பர்கள் வட்டாரத்தில் சில பெண்கள் கைநிறைய சம்பளத்துடன் வேலைக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முன், குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதை பல பெண்கள் மரியாதை குறைவாக கருதுகிறார்கள். அதன் விளைவாக வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள்.

7. அதீத ஆசை, கணவன் மனைவிக்கிடையேயான பொறாமை குணங்கள் என்பன ஒரு சில காரணியாகவும் விளங்குகின்றன.

பெண்களின் பார்வைக்கு

பெண் - உலகின் மிக உன்னதமான படைப்பு. தாய்மை - ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் மிகப்பெரிய பட்டம், வெகுமதி, பிறவிப்பலன். ஆனால் இத்தனை அழகான உணர்வுகளையும் வெகுமதியையும் இன்று அனைத்துப் பெண்களும் உணர்கிறார்களா என்றால், பதில் அழிப்பது சற்று கடினம் தான்.

இந்த கட்டுரையில் சொன்ன அனுபவத்தில் எனக்கு சற்றும் புரியாத விடயம் ஒன்று உள்ளது. அந்த குழந்தையை தினமும் வேலைக்காரி பிச்சை எடுக்க அனுப்பி இருக்கிறாள். பிச்சை ஏ.சி அறையில் எடுக்கப்போவதில்லை. அவர்கள் சரியான உணவு கொடுக்கப்போவதில்லை. இப்படியான சூழலில், குழந்தையின் உடல் நிலை கண்டிப்பாக நலிந்திருக்கும், மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதை, பெற்ற தாயால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியாமல் போகும் என்பதை கடும் கோபம் கலந்த கேள்வியாக வைக்கிறேன்.

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குப்போகும் பெண்களை எதற்காக இவ்வளவு விரைவில் வேலைக்குப் போகிறீர்கள் என்றுகேட்டால், "என் குழந்தைக்கு வேண்டியைதை வாங்கித்தந்து நல்ல உடல் நலத்துடன் சிறப்பாக வளர்க்க வேண்டும்" என்பதே பெரும்பாலான பெண்களின் பதிலாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒரு அடிப்படையை மறந்து விடுகிறார்கள். நீங்கள் விலையேதும் கொடுக்காமல் தரும் தாய்ப்பால், உங்கள் உடலின் சூட்டோடு அரவணைத்துக் கொள்ளும் அன்பை விட, ஓடி ஓடி சேர்க்கும் பணம் அவர்களை ஒரு விதத்திலும் உயர்த்தி விடப்போவதில்லை.

ஆரம்ப கட்டத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பாலே குழந்தையின் மூளை, உடல் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உன்னத மருந்து என்பதை அறியாமல், குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் அழகை பாதுகாக்க தாய்ப்பால் தரமறுப்பது அபத்தம் (அதற்கு திருமணம் செய்யாமல் குழந்தையை பெற்றெடுக்காமலே, அழகை பாதுகாத்துக் கொள்ளலாமே !).

இன்றைய காலகட்டத்தில் சில பெண்கள் சிந்திப்பது, குழந்தையை நாங்கள் மட்டும்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமா .? ஏன் ஆண்கள் பார்த்துக்கொள்ளக் கூடாதா ..? என்ற கோணத்தில். இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால், ஆம் ஆண்களால் முடியாது. விடியவிடிய கண்விழித்து விழுந்து விழுந்து கவனித்து அன்பைக்கொட்டினாலும், ஒரு தகப்பனால் ஒரு தாயின் இடத்தை பூர்த்தி செய்வது அத்தனை எளிதன்று.

பெண்களும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்று போராட்டங்கள் மூலம் பலர் நிரூபிக்க முற்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள். ஆனால், சில விடயங்கள் பெண்களால் மட்டுமே செய்யமுடியும். சில விடயங்கள் ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். இது இயற்கையின் நியதி. அப்படி செய்வதே அழகு.

ஆகையால் எந்த ஒரு சமாளிக்க இயலாத பிரச்னையாக இருந்தாலும், ஒரு சில வருடங்களாவது உங்கள் அரவணைப்பின் வளர்வதே குழந்தைக்கும் குடும்பத்திற்கும் நலம்.

இந்த சம்பவம் தாய்மார்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என நம்புகிறேன். ஆகையால் அனைவரும் அறிந்துகொள்ள சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

மீண்டும் சந்திப்போம். நன்றி ..!

Original source: http://kakkaisirakinile.blogspot.in/2013/01/blog-post_6338.html

அன்புடன்,
அகல்.


Last edited by அகல் on Sun 20 Jan 2013 - 20:18; edited 1 time in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Empty Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Post by சதாசிவம் Mon 21 Jan 2013 - 12:14

சென்ற தலைமுறையில் தாய்மார்கள் இருந்தார்கள், அடுத்த தலைமுறையில் குழந்தை பெரும் பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

இன்றைய பெண்கள் குழந்தை நலத்தை விட, பெறுவதற்கு முன்னும் பெற்ற பிறகு தங்கள் உடலை பத்திரமாக பார்த்துக் கொள்வதை விரும்புகின்றனர். பல பெண்களுக்கு சமையல், குழந்தை வளர்ப்பு தெரியவில்லை.

கைநிறைய காசு சம்பாதிக்க கணவன் வெளிநாடு வேலைக்கு தனியே செல்ல வேண்டாம், அதைவிட அவர் என்னுடன் இருப்பதைத் தான் விரும்புகிறேன் என்று சொல்லும் பெண்கள், குழந்தைகளை நிலையை யோசிப்பதில்லை .


சதாசிவம்
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Empty Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Post by மஞ்சுபாஷிணி Mon 21 Jan 2013 - 18:00

பயங்கரமாக இருக்கிறது....

வேதனையான விஷயம்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Empty Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Post by பாலாஜி Mon 21 Jan 2013 - 18:06

இப்படியெல்லாம் கூட நடக்குமா அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Empty Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Post by ஹர்ஷித் Mon 21 Jan 2013 - 18:10

நல்லதொரு விழிப்புனர்வுக்கட்டுரை அகல்...,
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் மட்டுமல்ல அவர்களை வேலைக்கு செல்ல நிர்பந்திக்கும் தகப்பன்மார்களும் அவசியம் படிக்க வேண்டும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Empty Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Post by jagasathya Mon 25 Mar 2013 - 16:08

இன்றைய சுழலில் இதை விட கொடுமை இர்ருக்குமா? ஒரு குழந்தைக்கு கொடுமை செய்ய எப்படி மனம் வருக்கிறது ?? மனிதன் (பொதுவாக ஆண் பெண் ) மனம், செயல் எல்லாம் பணம், தன்னலம் இவற்றில் மட்டுமே இர்ருக்கிறது... இதன்னாலே இதுபோல் செயல்கள் மனிதப்பிமானம் இல்லாமல் நடக்கிறது... ஆனால் நானும் பணிக்கு செல்ல்பவளே என் மகளை என் தாய் பராமரிக்கிறார் அப்படி இர்ருந்தும் என் மகள் ஏதேனும் ரகளை செய்து அழுது கொண்டிருந்தால் அல்லது அவலுக்கு ஏதேனும் இடையூர் என்ற்றல் நான் என் மனத்தால் அதை உணர்க்கிறேன் என் அம்மா இதைத்தான் தாய்பாசம் என்று சொல்ல்வது எனக்கு சொல்லிருக்காங்க........... பட்........ இவங்க குழந்த நாள் பூர படும் வேதன்னைய உணர முடியாத தாயா?? பத்து மாதம் படும் கஷ்டமெல்லாம் பாப்பாவோட ரோஜா இதழ் போன்ற முகத்தை பார்த்தவுடன் காணாமல் போய்டும் ஆன்னால் பாப்பாவுக்கு ஒரு கஷ்டம்ன்ன இதயமே நிக்கறமாதிரி இர்ருக்கு.. கண்ணிருடன் உங்கள் ஜகாசத்யனாராயண் :வணக்கம்: [i]


கள்ளம், கபடம் வேண்டாம் ! சிறு குழந்தையை போல...


ஜகாசத்யநாராயணன் சிப்பு வருது சிரிப்பு அன்பு மலர் ஜாலி
jagasathya
jagasathya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/03/2013

Back to top Go down

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Empty Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Post by mbalasaravanan Mon 25 Mar 2013 - 18:31

வேதனையான விஷயம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Empty Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Post by raja sekar.v Mon 25 Mar 2013 - 22:41

நீங்கள் விலையேதும் கொடுக்காமல் தரும் தாய்ப்பால், உங்கள் உடலின் சூட்டோடு அரவணைத்துக் கொள்ளும் அன்பை விட, ஓடி ஓடி சேர்க்கும் பணம் அவர்களை ஒரு விதத்திலும் உயர்த்தி விடப்போவதில்லை.
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 15/03/2013

Back to top Go down

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Empty Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Post by விநாயகாசெந்தில் Mon 25 Mar 2013 - 22:56

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் ! - Page 4 Empty Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum