Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
+13
ஹர்ஷித்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
சதாசிவம்
Guna Tamil
Aathira
Ahanya
DERAR BABU
balakarthik
ராஜா
ஜாஹீதாபானு
யினியவன்
அகல்
17 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
First topic message reminder :
வணக்கம் ..!
பெண்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் மட்டுமே கவனித்துக்கொண்ட காலம் மாறி, இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சாமாளிக்க, தேவைகளை சீராக நிறைவேற்றிக்கொள்ள கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் பெண்களும் வேலைக்குச் செல்வது ஒரு தேவையாக மாறிவிட்டது என்றே கூறலாம்.
இவ்வாறாக வேலைக்குப்போய் பழகிய பெண்கள், குழந்தை பிறந்து வெகுசில மாதங்களிலேயே தங்கள் குழந்தையை DAY CARE CENTRE அல்லது வேலைக்காரியிடம் விட்டுவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அப்படி சில மாதங்களே நிறைவு பெற்ற தன் குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற ஒரு பெண்ணால், அவள் குழந்தைக்கு நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் உங்கள் முன் நிறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். வாருங்கள் பார்ப்போம்.
நடந்தது என்ன ..?
நான் ஹைதராபாத்தில் வேலைபார்த்து வருவது எனது வலைப்பூவை படித்துவரும் பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த சம்பவம் நடந்த இடமும் ஹைதராபாத் தான். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னோடு வேலைபார்க்கும் ஒரு பெண் எனது தோழி. அவளது தோழியே அந்த குழந்தையின் தாய்.
அந்த பெண், தனது குழந்தை பிறந்து சில மாதங்களில் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். காலை அலுவலகம் செல்லும்முன் குழந்தையை வேலைக்காரியிடம் தங்கள் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன் தொலைபேசியில் வேலைக்காரியிடம் தொடர்புகொண்டு வீட்டிற்கு வருவதாக சொல்வது வாடிக்கையாக இருந்திருக்கிறது.
ஒருநாள் அந்த பெண்ணிற்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், அலுவலகத்தில் இருந்து வெகு சீக்கிரம் கிளம்பி இருக்கிறாள். இந்தமுறை வீட்டிற்கு வரும்முன் வேலைக்காரிக்கு தகவல் சொல்லப்படவில்லை. அதனால் அந்த பெண் வருவதை வேலைக்காரியும் அறிந்திருக்கவில்லை. அவள் வீட்டை அடைந்தாள். வீடு திறக்கப்பட்டது. வேலைகாரி மிகுந்த பயத்துடன் நிதானம் இழந்தவளாய் தெரிகிறாள்.
வீட்டில் வேலைக்காரி மட்டுமே இருக்கிறாள். குழந்தையைக் காணவில்லை. அதிர்ச்சியுற்ற தாய், வேலைக்காரியிடம் குழந்தை எங்கே என்று பதற்றத்துடன் கேட்கிறாள். அவளோ பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருக்கிறாள். அந்த தாயிக்கு பயத்துடன் சேர்ந்து சந்தேகமும் வலுக்கவே, வேலைக்காரியை வீட்டின் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, தனது கணவருக்கு தகவல் சொல்கிறாள். கணவனும் வீட்டை அடைகிறார். அவரிடமும் வேலைக்காரி சொல்ல மறுக்கிறாள். காவல் துறைக்கு தகவல் பறக்கிறது.
காவல்துறை அதிகாரிகள் வந்து அவளை மிரட்டிக்கேட்டபின் இவ்வாறு சொல்கிறாள். "குழந்தையை தின வாடகைக்காக பிச்சை எடுக்க அனுப்பிவிட்டேன். தினமும் குழந்தையின் தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற பிறகு பிச்சைக்காக வாடகைக்கு வாக்குவோர் வந்து குழந்தையை எடுத்துச் செல்வார்கள். பிறகு, மாலை அவர்கள் அலுவலகத்தில் இருந்து கிளம்பும்முன் குழந்தையை வந்து விட்டுச் செல்வார்கள் என்று கூரியுள்ளாள். மிகுந்த அதிர்சிக்குபிறகு குழந்தை மீட்கப்படுகிறது.
இருபோன்ற போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்ன ..?
1. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை சில பெண்களை குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குபோக நிர்பந்திக்கிறது.
2. சில குடும்பங்களில், தங்கள் பொருளாதார நிலையைக் காப்பாற்றிக்கொள்ள கணவன்மார்களே மனைவியை வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கிறார்கள். ஆனால் அதன் எண்ணிக்கை மிக மிக சொற்பமாகவே இருக்கும்.
3. தனியார் துறையில் வேலைபார்க்கும் சில பெண்கள் அதிகப்படியான சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். அது வருவது திடீரென நின்றதும், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தனது குழந்தையின் சூழ்நிலையை பெரிதாக பொருட்படுத்தாமல் உடனடியாக வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள்.
4. அரசு துறையில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு சில மதங்களே பிரசவ விடுப்பு இருப்பதால், அது முடிந்தபின் வேறு வழியின்றி வேலையை விட மனமில்லாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள்.
5. இன்றைய கால சூழ்நிலையில், எவ்வளவு அன்பாக கணவன் மனைவி இருந்தாலும், கணவனின் சம்பாத்யத்தில் தனக்கு பொருட்களை வாங்கிக் கொள்வதை ஒரு அடிமைத்தனமாகவோ அல்லது தனது தேவைகளுக்காக எப்போதும் மற்றவரை சார்ந்து வாழும் சூழலிலே உள்ளதாகவோ பல பெண்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தின் விளைவாக அவர்கள் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குச் சென்று தங்களது தேவைகளை யாரையும் சாராமல் பூர்த்தி செய்துகொள்ள முற்படுகிறார்கள்.
6. தனது சொந்தம் அல்லது நண்பர்கள் வட்டாரத்தில் சில பெண்கள் கைநிறைய சம்பளத்துடன் வேலைக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முன், குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதை பல பெண்கள் மரியாதை குறைவாக கருதுகிறார்கள். அதன் விளைவாக வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள்.
7. அதீத ஆசை, கணவன் மனைவிக்கிடையேயான பொறாமை குணங்கள் என்பன ஒரு சில காரணியாகவும் விளங்குகின்றன.
பெண்களின் பார்வைக்கு
பெண் - உலகின் மிக உன்னதமான படைப்பு. தாய்மை - ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் மிகப்பெரிய பட்டம், வெகுமதி, பிறவிப்பலன். ஆனால் இத்தனை அழகான உணர்வுகளையும் வெகுமதியையும் இன்று அனைத்துப் பெண்களும் உணர்கிறார்களா என்றால், பதில் அழிப்பது சற்று கடினம் தான்.
இந்த கட்டுரையில் சொன்ன அனுபவத்தில் எனக்கு சற்றும் புரியாத விடயம் ஒன்று உள்ளது. அந்த குழந்தையை தினமும் வேலைக்காரி பிச்சை எடுக்க அனுப்பி இருக்கிறாள். பிச்சை ஏ.சி அறையில் எடுக்கப்போவதில்லை. அவர்கள் சரியான உணவு கொடுக்கப்போவதில்லை. இப்படியான சூழலில், குழந்தையின் உடல் நிலை கண்டிப்பாக நலிந்திருக்கும், மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதை, பெற்ற தாயால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியாமல் போகும் என்பதை கடும் கோபம் கலந்த கேள்வியாக வைக்கிறேன்.
குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குப்போகும் பெண்களை எதற்காக இவ்வளவு விரைவில் வேலைக்குப் போகிறீர்கள் என்றுகேட்டால், "என் குழந்தைக்கு வேண்டியைதை வாங்கித்தந்து நல்ல உடல் நலத்துடன் சிறப்பாக வளர்க்க வேண்டும்" என்பதே பெரும்பாலான பெண்களின் பதிலாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒரு அடிப்படையை மறந்து விடுகிறார்கள். நீங்கள் விலையேதும் கொடுக்காமல் தரும் தாய்ப்பால், உங்கள் உடலின் சூட்டோடு அரவணைத்துக் கொள்ளும் அன்பை விட, ஓடி ஓடி சேர்க்கும் பணம் அவர்களை ஒரு விதத்திலும் உயர்த்தி விடப்போவதில்லை.
ஆரம்ப கட்டத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பாலே குழந்தையின் மூளை, உடல் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உன்னத மருந்து என்பதை அறியாமல், குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் அழகை பாதுகாக்க தாய்ப்பால் தரமறுப்பது அபத்தம் (அதற்கு திருமணம் செய்யாமல் குழந்தையை பெற்றெடுக்காமலே, அழகை பாதுகாத்துக் கொள்ளலாமே !).
இன்றைய காலகட்டத்தில் சில பெண்கள் சிந்திப்பது, குழந்தையை நாங்கள் மட்டும்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமா .? ஏன் ஆண்கள் பார்த்துக்கொள்ளக் கூடாதா ..? என்ற கோணத்தில். இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால், ஆம் ஆண்களால் முடியாது. விடியவிடிய கண்விழித்து விழுந்து விழுந்து கவனித்து அன்பைக்கொட்டினாலும், ஒரு தகப்பனால் ஒரு தாயின் இடத்தை பூர்த்தி செய்வது அத்தனை எளிதன்று.
பெண்களும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்று போராட்டங்கள் மூலம் பலர் நிரூபிக்க முற்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள். ஆனால், சில விடயங்கள் பெண்களால் மட்டுமே செய்யமுடியும். சில விடயங்கள் ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். இது இயற்கையின் நியதி. அப்படி செய்வதே அழகு.
ஆகையால் எந்த ஒரு சமாளிக்க இயலாத பிரச்னையாக இருந்தாலும், ஒரு சில வருடங்களாவது உங்கள் அரவணைப்பின் வளர்வதே குழந்தைக்கும் குடும்பத்திற்கும் நலம்.
இந்த சம்பவம் தாய்மார்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என நம்புகிறேன். ஆகையால் அனைவரும் அறிந்துகொள்ள சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
மீண்டும் சந்திப்போம். நன்றி ..!
Original source: http://kakkaisirakinile.blogspot.in/2013/01/blog-post_6338.html
அன்புடன்,
அகல்.

Last edited by அகல் on Sun Jan 20, 2013 6:48 pm; edited 1 time in total
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
நினைத்து பார்க்கவே ரெம்ப கஷ்டமாக இருக்கிறது ...
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்......
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
Ahanya wrote:ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்......
அந்த மொதலாளி அம்மா தான் வேலைக்கு போயிடறாங்கல அதான் அவுங்களை அனுப்ப முடியாது பிச்சை எடுக்க அதான் சும்மா இருக்குற குழந்தையை அனுப்பி வச்சிருக்காங்க அகன்யா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
பெற்றவர்களையா? வேலைகாரர்களையா? இல்லை இருவரையுமா?Ahanya wrote:ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்......
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
யினியவன் wrote:பெற்றவர்களையா? வேலைகாரர்களையா? இல்லை இருவரையுமா?Ahanya wrote:ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்......
வேலைக்காரர்கள்தான் அண்ணா......நான் குழந்தையாக இருந்தபோது அம்மா அயல் வீட்டில் விட்டுவிட்டுதான் வேலைக்கு செல்வார்...... முறையாக பராமரித்து இருக்கமாட்டார்கள் தானே அண்ணா.....
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
Ahanya wrote:முறையாக பராமரித்து இருக்கமாட்டார்கள் தானே அண்ணா.....
முறையாக பராமரிக்க நீங்க என்ன பழைய லூனா மோப்பெட்டா இல்ல லாம்பி ஸ்கூட்டரா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
balakarthik wrote:Ahanya wrote:முறையாக பராமரித்து இருக்கமாட்டார்கள் தானே அண்ணா.....
முறையாக பராமரிக்க நீங்க என்ன பழைய லூனா மோப்பெட்டா இல்ல லாம்பி ஸ்கூட்டரா
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
Ahanya wrote:
ஒய் டென்சன் அகன்யா யாராவது உங்களுக்கே ஊசி போட்டுட்டாங்களா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
balakarthik wrote:Ahanya wrote:
ஒய் டென்சன் அகன்யா யாராவது உங்களுக்கே ஊசி போட்டுட்டாங்களா
அப்படியெல்லாம் இல்லை அண்ணா.......
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: வேலைக்காரியிடம் குழந்தை. வேலைக்குச் சென்ற தாய். குழந்தைக்கு நடந்தது என்ன ? அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவம் !
திருட இடம் கொடுப்பவர் இருப்பதால் தான் திருடுகிறார்கள். ஆகையால் இடம் கொடுப்பவரே முதல் குற்றவாளி. அவர்கள் திருத்திக்கொண்டால் திருட வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)
» சேலத்தில் நடந்த உண்மைச் சம்பவம்
» பால்காரியின் மகள்! ஜனாதிபதி யின் மருமகள் ஆன உண்மைச் சம்பவம்!
» மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம் - மஸ்ஊத் அப்துர்ரஊப்
» லாக் டவுன் 2020 - ஒரு கொடூரனிடம் இருந்து நான் உயிர்பிழைத்த கதை (உண்மைச் சம்பவம்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|