ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

+3
Muthumohamed
அசுரன்
Powenraj
7 posters

Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by Powenraj Thu Jan 17, 2013 7:27 pm

வணக்கம்
கண்டிப்பாய் இதை நான் எழுதவில்லை.ஆனாலும் படிக்கசுகமாய் இருந்ததால் இதை அப்படியே கொடுக்கிறேன்.
அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான்.
:-
அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். ''வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். நீ கொண்டுவந்த சிந்தசைஸர்ல என்னவோ பிரச்னை. என்னன்னு பாரேன்'' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர்.
:-
சிறுவன் திலீப் அந்தக் கருவியின் பாகங்களைத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் அழகாக
பிரிக்கிறான். எதையோ சரிசெய்து ஒன்று சேர்க்கிறான். சில நிமிடங்களில் அது மீண்டும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
:
அர்ஜுனன் மாஸ்டர் அவனை அன்புடன் அணைத்துக்கொள்கிறார்... ''கில்லாடிடா நீ!'' திலீப்பின் கண்கள் கலங்கியிருக்க, அவரும் மனம் கலங்குகிறார்.
:-
''என்ன திலீப், அப்பா ஞாபகம் வந்திடுச்சா..?'' என்பவர், பெருமூச்சுவிடுகிறார். ''என்ன செய்றது... விதின்னுதான் சொல்லணும். சாகிற வயசா மனுஷனுக்கு? இப்பவும் உன் அப்பா இங்கேயே இருக்கிற மாதிரிதான் தோணுது திலீப்''என்பவர், சிறுவனின் கைகளில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறார்.
:-
யூனிவோக்ஸ், கிளாவியோலின் போன்ற மின் இசைக் கருவிகளைவாடகைக்கு விட்டதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகை அது.
`திலீப் அந்தப் பணத்தில் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்டுகளும் பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அம்மாவிடம் மிச்சப் பணத்தைக் கொடுக்கிறான். அவனைப் பார்க்கப் பார்க்க,அம்மாவின் மனம் நெகிழ்கிறது. 'சின்னப் பையன் மேல குடும்பப் பாரம்விழுந்துவிட்டதே! படிக்க வேண்டிய பையனை இப்படி ரிக்கார்டிங் தியேட்டர்களுக்கு அனுப்புகிறோமே' என்கிற வருத்தம்.
:-
ஆனால், சிறுவன் திலீப்பின்கண்களில் மின்னிய விவரிக்க இயலாத ஒளியைக் கண்டபோது, அவன் சரியான பாதையில்தான் போகிறான் என்று அந்தத் தாயின் மனதுக்குப் புரிந்தது.
திலீப் பொதுவாக வீட்டில் யாருடனும் கலகலப்பாகப் பேச மாட்டான். வீடெங்கும் இறைந்துகிடக்கும் இசைக் கருவிகளும், இசைப்பதிவு இயந்திரங்களும்தான் அவனுக்குப் பிடித்த உலகம்.தன் அறைக்குச் சென்று அவற்றை வாசிப்பதிலும் பிரித்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பதும்தான் அவனுடைய விருப்பமான ஒரே விளையாட்டு.
:-
மற்றபடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, சினிமா, அரட்டை போன்ற வேறு பொழுதுபோக்குகள்..? ம்ஹூம்... எதுவும் இல்லை.
திலீப் தன் அறைக்குச் சென்று ஹார்மோனியத்தில் ஒரு பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது அவனுடைய அப்பா இசையமைத்த ''பெத்லஹேமில் ராவில்...'' என்கிற பிரபல மலையாளப் படப் பாட்டின் மெட்டு.
:-
அவன் வாசிப்பதைக் கேட்கும் அம்மா, தன் கணவரே நேரில் வந்ததைப் போல் மெய்ம்மறந்துபோகிறார். அந்த மெட்டில் அவன் சில மாற்றங்களையும் செய்து மிக இனிமையாக வாசிப்பதைக் கேட்கும்போது அந்தத் தாய்க்குச் சிலிர்க்கிறது.ஓடி வந்து தன் மகனை நெஞ்சார அணைத்துக்கொள்கிறார். அவர்கண்களில் கண்ணீர் வழிகிறது. ''நீ வாசிக்கிறதைக் கேக்கும்போது சந்தோஷமா இருக்குப்பா... ஆனா, கொஞ்சம்பயமாவும் இருக்கு.
:-
''பயமா... ஏம்மா?'' ''உங்கப்பா ரொம்ப திறமைசாலிப்பா. எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க வேண்டியவரு. இந்த உலகம்தான் அவரைக் கடைசி வரை புரிஞ்சுக்கலை. இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இருக்கிற திறமை எனக்குத் தெரியுது.
ஆனா, உலகம் புரிஞ்சுக்குமான்னு பயமா இருக்கு'' என்கிறார் வாழ்க்கையின் பல பிரச்னைகளைப் போராட்டத்துடன் கடந்து வந்த அந்தப் பாசமிகு அம்மா.
:-
உலகம் அந்தச் சிறுவனைப் புரிந்துகொண்டது.
இருகரம் நீட்டி அந்த இளம் இசை மேதையை வரவேற்கக் காத்திருந்தது.
அவனுக்கான பிரகாசமான எதிர்கால வெற்றிப் பாதை ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது.
நான்கு வயதிலேயே பெற்றோர்களால் பியானோ வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் திலீப், விரைவில் பள்ளிப் படிப்பைவிடப் போகிறான்.
:-
தனராஜ் மாஸ்டரிடம் இசை கற்று, லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று, மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டம் பெறப்போகிறான்.
ரூட்ஸ், நெமிஸிஸ் அவின்யூ, மாஜிக் போன்ற சென்னை ஆங்கில இசைக் குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப் போகிறது.
:-
இன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற மாபெரும் இசைஅமைப்பாளர்களுக்கு கீ-போர்டு பிளேயராகவும், சில சமயங்களில் இசை கோப்பாளராகவும் பணியாற்றப்போகிறான்.
:-
அவனுடைய திறமை விக்கு விநாயக் ராம், குன்னக்குடிவைத்தியநாதன், ஜாகிர் ஹுசேன் போன்றவர்களுடன் சேர்த்துவைக்கப்போகிறது.
அவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான்.
அதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைப்பான்.
:-
'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடெக் ரிகார்டிங் ஸ்டுடியோவைக் கட்டுவான்.
அங்கேதான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான்.
'ரோஜா' என்கிற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும்.
அந்த இசையமைப்பு இந்தியத் திரை இசையின் ஸ்டைலையே மாற்றி அமைக்கும்.
முதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான்.
சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.
:-
திலீப் என்கிற இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக்கனவானாக மாறுவார்.
'ரோஜா'வில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக்கனவு ஆஸ்கர் விருதையும் கடந்து செல்லும்.
( ஆச்சரியம் .. ஆனால் உண்மை )
இளையராஜா திலீபின் அப்பாவிடம் கீபோர்டு வாசித்தார். திலீப் ஏ.ஆர்.ரஹ்மான் ஆனபின் இளையராஜாவிடம் கீபோர்டு வாசித்தார், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர்ராஜா ஏ.ஆர் ரஹ்மானிடம் கீ போர்டு வாசித்தார்.
:-
நன்றி உண்மையுடன்...


Last edited by Powenraj on Fri Jan 18, 2013 5:39 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பில் எழத்துபிழை நீக்க)
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty Re: தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by அசுரன் Thu Jan 17, 2013 8:08 pm

சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty Re: தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by Muthumohamed Thu Jan 17, 2013 10:57 pm

மிக்க நன்றி பவுன் ராஜ்



தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Mதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Uதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Tதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Hதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Uதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Mதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Oதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Hதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Aதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Mதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Eதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty Re: தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by அப்துல் Fri Jan 18, 2013 7:16 am

நல்ல அறியாத தகவலை தந்தமைக்கு நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty Re: தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by ச. சந்திரசேகரன் Fri Jan 18, 2013 11:31 am

"சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்."

நல்ல பகிர்வு. ஆனால் பெயர் மாற்றம் ஏன் என தெளிவாக விளக்கப்படாதது ஏனோ?


தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty Re: தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by ஜாஹீதாபானு Fri Jan 18, 2013 1:58 pm

ச. சந்திரசேகரன் wrote:"சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்."

நல்ல பகிர்வு. ஆனால் பெயர் மாற்றம் ஏன் என தெளிவாக விளக்கப்படாதது ஏனோ?

எனக்கும் இதே சந்தேகம் தான் சியர்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty Re: தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by ரா.ரா3275 Fri Jan 18, 2013 2:14 pm

பள்ளிவாசல் ஒன்றுக்கு சென்றதையும் அங்கிருந்த ஒரு வாப்பா ரெஹ்மான் குடும்பத்துக்கு வழி காட்டியதையும் சொல்லவில்லையே...அதன் பின்னர்தான் அவர்கள் குடும்பம் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர்...அதிலிருந்துதான் பெயர் மாற்றமும்...

வடபழனி-கோயம்பேடு 100அடி சாலையில் எம்.எம்.டி.ஏ. பச நிறுத்தம் அருகே வசந்தம் அபார்ட்மெண்டில் இருக்கும் ஓம் உலகநாதன் என்ற ஜோதிடர் இன்றும் மிகப் பெரிய போர்டு வைத்திருக்கிறார்...தான்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை திலீப்குமாருக்கு வைத்தவர் என்று...


தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... 224747944

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Rதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Aதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Emptyதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Rதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty Re: தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by ஜாஹீதாபானு Fri Jan 18, 2013 2:30 pm

ரா.ரா3275 wrote:பள்ளிவாசல் ஒன்றுக்கு சென்றதையும் அங்கிருந்த ஒரு வாப்பா ரெஹ்மான் குடும்பத்துக்கு வழி காட்டியதையும் சொல்லவில்லையே...அதன் பின்னர்தான் அவர்கள் குடும்பம் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர்...அதிலிருந்துதான் பெயர் மாற்றமும்...

வடபழனி-கோயம்பேடு 100அடி சாலையில் எம்.எம்.டி.ஏ. பச நிறுத்தம் அருகே வசந்தம் அபார்ட்மெண்டில் இருக்கும் ஓம் உலகநாதன் என்ற ஜோதிடர் இன்றும் மிகப் பெரிய போர்டு வைத்திருக்கிறார்...தான்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை திலீப்குமாருக்கு வைத்தவர் என்று...

தகவலுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty Re: தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by ரா.ரா3275 Fri Jan 18, 2013 2:33 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:பள்ளிவாசல் ஒன்றுக்கு சென்றதையும் அங்கிருந்த ஒரு வாப்பா ரெஹ்மான் குடும்பத்துக்கு வழி காட்டியதையும் சொல்லவில்லையே...அதன் பின்னர்தான் அவர்கள் குடும்பம் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர்...அதிலிருந்துதான் பெயர் மாற்றமும்...

வடபழனி-கோயம்பேடு 100அடி சாலையில் எம்.எம்.டி.ஏ. பச நிறுத்தம் அருகே வசந்தம் அபார்ட்மெண்டில் இருக்கும் ஓம் உலகநாதன் என்ற ஜோதிடர் இன்றும் மிகப் பெரிய போர்டு வைத்திருக்கிறார்...தான்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை திலீப்குமாருக்கு வைத்தவர் என்று...

தகவலுக்கு நன்றி

நன்றி


தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... 224747944

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Rதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Aதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Emptyதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Rதீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty Re: தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by ச. சந்திரசேகரன் Mon Jan 21, 2013 5:20 am

ரா.ரா3275 wrote:பள்ளிவாசல் ஒன்றுக்கு சென்றதையும் அங்கிருந்த ஒரு வாப்பா ரெஹ்மான் குடும்பத்துக்கு வழி காட்டியதையும் சொல்லவில்லையே...அதன் பின்னர்தான் அவர்கள் குடும்பம் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர்...அதிலிருந்துதான் பெயர் மாற்றமும்...

வடபழனி-கோயம்பேடு 100அடி சாலையில் எம்.எம்.டி.ஏ. பச நிறுத்தம் அருகே வசந்தம் அபார்ட்மெண்டில் இருக்கும் ஓம் உலகநாதன் என்ற ஜோதிடர் இன்றும் மிகப் பெரிய போர்டு வைத்திருக்கிறார்...தான்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை திலீப்குமாருக்கு வைத்தவர் என்று...
மனதை அரித்த கேள்விக்கு விடை கண்டேன். நன்றிகள் ராரா.


தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை... Empty Re: தீலிப் ஏ.ஆர்.ரஹ்மான்ஆன கதை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum