ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:17

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Today at 0:15

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 23:07

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 22:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:55

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 22:36

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:19

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:01

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:55

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat 7 Sep 2024 - 22:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 7 Sep 2024 - 21:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat 7 Sep 2024 - 21:17

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 7 Sep 2024 - 20:31

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 7 Sep 2024 - 20:20

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 7 Sep 2024 - 20:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 7 Sep 2024 - 17:58

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 7 Sep 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat 7 Sep 2024 - 14:47

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 10:24

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 10:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 6 Sep 2024 - 22:46

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri 6 Sep 2024 - 5:59

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri 6 Sep 2024 - 5:53

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri 6 Sep 2024 - 5:52

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri 6 Sep 2024 - 5:49

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed 4 Sep 2024 - 22:15

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed 4 Sep 2024 - 22:14

» வேல் மாறல்.
by Renukakumar Tue 3 Sep 2024 - 13:33

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:36

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:35

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:33

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:32

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:31

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:29

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:27

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:26

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:24

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:23

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 11:20

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Mon 2 Sep 2024 - 0:36

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun 1 Sep 2024 - 19:30

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun 1 Sep 2024 - 16:16

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun 1 Sep 2024 - 15:55

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun 1 Sep 2024 - 15:54

Top posting users this week
mruthun
மன உறுதியை பறைசாற்றும் முல்லைப் பெரியாறு அணை... ஜெ சொன்ன குட்டிக்கதை Poll_c10மன உறுதியை பறைசாற்றும் முல்லைப் பெரியாறு அணை... ஜெ சொன்ன குட்டிக்கதை Poll_m10மன உறுதியை பறைசாற்றும் முல்லைப் பெரியாறு அணை... ஜெ சொன்ன குட்டிக்கதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன உறுதியை பறைசாற்றும் முல்லைப் பெரியாறு அணை... ஜெ சொன்ன குட்டிக்கதை

Go down

மன உறுதியை பறைசாற்றும் முல்லைப் பெரியாறு அணை... ஜெ சொன்ன குட்டிக்கதை Empty மன உறுதியை பறைசாற்றும் முல்லைப் பெரியாறு அணை... ஜெ சொன்ன குட்டிக்கதை

Post by Powenraj Tue 15 Jan 2013 - 23:11

தேனி: சோதனைகளை சமாளிப்பதற்கு மன உறுதி அவசியம் அதைத்தான் முல்லைப் பெரியாறு அணை பறைசாற்றுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குட்டிக்கதை ஒன்றின்மூலம் விளக்கியுள்ளார். கூடலூர் லோயர் கேம் பகுதியில் பென்னிகுவிக் மணிமண்டபத்தை திறந்து வைத்து அவர் குட்டிக்கதை ஒன்றை கூறினார்.
:-
திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தாயார் தன் மகளைப் பார்த்து, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்மகள்.
:-
இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்துவைத்தார். சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது.ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார்.
:-
அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை.இருந்தாலும் அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களைகீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார். காபியையும்ஒரு கோப்பையிலே ஊற்றினார். மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா? என்று கேட்டார் தாயார். அதற்கு அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி என்று கூறினாள் மகள்.
:-
சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு? என்று கேட்டார் தாயார். தொட்டுப் பார்த்து, ரொம்ப மென்மையாக இருக்கு என்று கூறினாள் மகள்.முட்டையைத் தொட்டுப்பார்த்து எப்படியிருக்கு என்று சொல் என்று கூறினார் தாயார்.
:-
கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று சொன்னாள் மகள். அடுத்தபடியாக காப்பியை எடுத்து குடி என்றார் தாயார்.காபியை குடித்துவிட்டு, ரொம்ப சுவையாக இருக்கிறது என்று கூறினாள் மகள். எதற்கு இந்த வேடிக்கை? என்று தாயிடம் கேட்டாள் மகள்.
:-
அதற்கு பதில் அளித்த தாய், மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில்தான் கொதிக்க வைத்தோம். ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடையஇயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது.
:-
இந்த முட்டைக்குள்ளேதிரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது. காப்பியைப் பார். அதுஅந்த தண்ணீரையே சுவை மிக்க பானமாக மாற்றிவிட்டது.
மகளே, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது இப்படி கொதிக்க வைக்கிற மாதிரிதான். இதை நாம் எந்த ரூபத்தில் சந்திக்கப் போகிறோம்என்பதில்தான் விஷயமேஇருக்கிறது என்று கூறினார் தாய். உடனே மகள் முகத்தில் தெளிவு பிறந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டாள். கவலை மறந்து போய்விட்டது. பறந்து போய்விட்டது. முகத்தில் தெளிவு பிறந்தது.
:-
எந்த நிலைமையையும் சந்திப்பதற்கு, சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். இதைத்தான் முல்லைப் பெரியாறு அணை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது என்றார் முதல்வர் ஜெயலலிதா.
:-
தட்ஸ்தமிழ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum