புதிய பதிவுகள்
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
31 Posts - 48%
heezulia
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
1 Post - 2%
mini
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
1 Post - 2%
balki1949
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
388 Posts - 58%
heezulia
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
20 Posts - 3%
prajai
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
4 Posts - 1%
mini
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_m10அரு உருவ கொளஞ்சி குமரன்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரு உருவ கொளஞ்சி குமரன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2015 1:06 pm

அரு உருவ கொளஞ்சி குமரன்! L3PL0mfiR2mqpLvi4SWN+kolanji
-
அரு உருவ கொளஞ்சி குமரன்! N7FEVCkgT9mehMLOARCr+kolanji1
-
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள
மணவாள நல்லூரில் முருகப்பெருமான் பிற
திருக்கோயில்களிலிருந்து மாறுபட்டு உருவமின்றி
அரூபமாகத் திருமேனி கொண்டு “கொளஞ்சியப்பர்’
என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார்.

நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையில் முருகன்
விரும்பி உரையும் இடங்களைப் பட்டியலிட்டு கூறுமிடத்து
தன் அடையாளமாக நடப்பட்ட கல் நிற்கும் இடத்திலும்
முருகன் வீற்றிருப்பான் என்கின்றார். இவ்வாறு ஒரு கல்லில்
ஆவேசித்து (ஆபிர்வித்து) நிற்கும் முருகனின்
தொன்மையான நிலைக்கு கந்துடை நிலை என்று கூறுவார்கள்.

மேலும் கந்து என்ற சொல்லுக்கு தண்டாயுதம் கொண்டவன்
என்ற பொருளும் உண்டு. இனி கொளஞ்சியப்பர் கோயில்
கொண்ட வரலாற்றினைக் காண்போம்:


பல ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலத்திலிருந்து சுமார்
2 கி.மீ. தொலைவில் உள்ள மணவாள நல்லூர்ப்பகுதி காட்டுச்
செடிகளும், மரங்களும் முக்கியமாகக் கொளஞ்சி செடிகள்
மண்டி புதராக இருந்ததாம். காட்டுப்பகுதியில் மேயச்சென்ற
பசு மாடு ஒன்று செடிகளுக்குள் மறைந்திருந்த பலிபீட உருவில்
இருந்த ஒரு கல்லின் மீது பால் சொரிவதை வழக்கமாய்
கொண்டிருந்ததாம். இதைக்கண்ணுற்ற மக்கள் இந்த பீடத்தைப்
புனிதமானதாகக் கருதி முருகன்தான் அதில் ஆபிர்வித்துள்ளான்
என உணர்ந்து வழிபட்டு வரலாயினர்.

அவர்கள் அவ்வாறு கருதியதற்கு ஒரு காரணமும் உண்டு.
விருத்தாசலபுராண வரலாற்றில், இப்பகுதிக்கு தலயாத்திரையாக
வந்த சுந்தரர் திருமுதுகுன்றம் என்று அழைக்கப்படும் இத்தல
இறைவனை பாடாமல் சென்றாராம். இறைவன் திருவுளக்
குறிப்பறிந்த முருகன் ஒரு வேட்டுவக் குமரனாக சுந்தரரை
எதிர்சென்று அவரது பொன்னையும், பொருளையும் கவர்ந்து
கொண்டு திருமுதுகுன்றம் வந்து பெற்றுக் கொள்ளுமாறு
பணித்தாராம். தன் தவற்றினை உணர்ந்த சுந்தரரும்
விருத்தாசல இறைவனை தரிசித்து பாடிச் சென்றாராம்.

அவ்வாறு வேட்டுவக் குமரனாக வந்த முருகனே காவல்
தெய்வமாக
விருத்தாசலத்தின் நாற்புறங்களிலும் கோயில் கொண்டு
அமர்ந்தான் என்றும், அதில் மேற்கு திசையில் வீற்றிருப்பவர்
கொளஞ்சியப்பர் எனவும் செவிவழி செய்திகள் கூறுகின்றன.

ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் அழகுற அமைந்துள்ள இந்த
ஆலயத்தில் கருவறையில் பீடத்திருமேனிக் கொண்டு
கொளஞ்சியப்பர் அருள்புரிகின்றார். பீடத்தின் கீழ் முருகனது
சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையாகிவுள்ளது.
அபிஷேக, ஆராதனைகள் யாவும் பீட வடிவில் உள்ள முருகனுக்கே.

இதைத் தவிர பெரிய உருவில் சித்தி விநாயகர் தனிச் சந்நிதி
கொண்டுள்ளார். இடும்பன், கடம்பன் சந்நிதிகளும், முனியப்பர்,
வீரனார் சந்நிதிகளும் ஆலயத்தில் நாம் தரிசனம் செய்யும் இதர
தெய்வமூர்த்தங்கள். கொளஞ்சி மரம் தல விருட்சமாகத்
திகழ்கின்றது.

இத்திருக்கோயிலிலில் அருள்மிகு கொளஞ்சியப்பர்
நீதிபதியாகவும், வைத்தியராகவும் அருள்பாலித்துவருகிறார்.
எழுத்து மூலம் பிராது செலுத்தி 90 நாட்களுக்குள் அது நிறைவேறி
பிராதை திரும்பப்பெறும் அதிசயத்தினை இன்றளவும் கண்
கூடாகக் காணலாம். இவ்வழிபாடு இத்திருக்கோயிலின் மிக
முக்கியப் பிரார்த்தனையாகும்.

முனியப்பர் சந்நிதியில் நடக்கும் இந்த பிரார்த்தனைக்கு
விதிமுறைகளும், பிரத்யேகக் கட்டணங்களும் உண்டு.
அருள்கருணையோடு மறக்கருணையும் நல்கும் இந்த முருகன்
சந்நிதியில் பூஜித்து வழங்கும் வேப்பெண்ணெயினை பக்தர்கள்
உடம்பில் பூசியும், அருந்தியும் பூரணகுணமடைந்து செல்வதும்
இத்திருக்கோயிலின் முக்கிய மகிமையாகும்.
இப்பகுதி மக்களில் பெரும்பாலோருக்கு இந்த முருகன்தான்
குல தெய்வமாகும்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ்
இயங்கிவரும் இத்திருக்கோயிலில் பால்குடம் எடுத்தல்,
காவடி எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல், மாவிளக்கு இடுதல்,
குழந்தைகளுக்கு காதணி அணிவித்தல், முடி காணிக்கை என்று
ரு முருகன் ஆலயத்திற்கு உரிய அனைத்து வைபவங்களும்,
முக்கிய விசேஷ தினங்களும் முறையாக நடத்தப்படுகின்றது.

ஆண்டுதோறும் வைகாசித் திங்கள் வசந்த உற்சவம்
அதிவிமரிசையாக நடைபெறும். வரும் ஆடிக்கிருத்திகை
நன்னாளில் இத்திருத்தலத்திற்குச் சென்று அன்று நடைபெறும்
சிறப்பு அபிஷேக வழிபாட்டில் பங்கேற்று

அருணகிரி நாதரின்,

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய்க் குகனே

என்ற கந்தரநுபூதிப் பாடலைப்பாடி பேரானந்தப் பெறுவாழ்வு
பெறுவோம்.

———————————————–

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 3:48 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை...........இது நான் நெட் இல் படித்தது புன்னகை


தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்) பகுதிக்கு வந்தார். இங்குள்ள பழமலைநாதர் கோயிலில் சிவபெருமான், விருத்தாம்பிகையுடன் அருள் செய்கிறார். “விருத்தம்” என்றால் “பழமை” என்று பொருள். இந்த ஊர், கோயில் எல்லாமே மிகப்பழமை வாய்ந்தவை. பல யுகம் கண்ட கோயில் என்பதால், வாலிப வயதினரான சுந்தரருக்கு இத்தலத்து இறைவனையும், அம்பிகையையும் பாடுவதற்கு தனக்கு தகுதியில்லை எனக்கருதி, அவர்களை வணங்கிவிட்டு, பாடாமல் சென்று விட்டார். சுந்தரரின் பாடல்கள் என்றால் இறைவனுக்கு மிகவும் விருப்பம்.

அம்பாளுக்கும் அதே விருப்பம் இருந்தது. உடனே சிவன், முருகனை அழைத்தார். முருகன் வேடுவ வடிவம் எடுத்து, சுந்தரரிடம் சென்று, அவரிடமிருந்த பொன்னையும் பொருளையும் அபகரித்தார். இறைப்பணிக்கான பொருளை தன்னிடம் திருப்பித்தந்து விடு என சுந்தரர் வேடுவனிடம் கெஞ்சவே, அதை திருமுதுகுன்றத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.

இறைவன் செயலால் இப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொண்ட சுந்தரர், திருமுதுகுன்றம் வந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, பாடல் பாடி, இழந்ததை பெற்று சென்றார். சுந்தரரை வழிமறித்து வேடுவராக வந்த முருகப்பெருமானே திருமுதுகுன்றத்தின் மேற்கே சுயம்புமூர்த்தியாக தோன்றி சுந்தரருக்கு அருள்பாலிக்கிறார். முருகன் தோன்றிய இடத்தில் “குளஞ்சி” எனப்படும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் இவர் “குளஞ்சியப்பர்” எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் “கொளஞ்சியப்பர்” என திரிந்தது.

சுவாமி சுயம்பு மூர்த்தி என்ற பெருமை பெற்றவர். உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படா அருவத்திருமேனியினரும் அல்லர். உருவமும் – அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்ட ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார். 3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலிபீடப் பிரதிஷ்டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன.

வேப்பெண்ணெயை பக்தர்கள் வாங்கிக் கொண்டு போய் கொளஞ்சியப்பர் சந்நிதியில் வழங்க அர்ச்சகர் அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபாடாற்றி, ஐயன் அருள் மருந்தாகிய விபூதியைச் சிறிது அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார். தீட்டுத் தடங்கல் இல்லாது நீராடித் தூய்மையாக இருந்து இவ்வெண்ணெயை பெற்றுத் தடவினால் தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகி விடுகின்றன.

ஆறாத புண்கள் கட்டிகள் முதுகுப்பக்க பிளவைகள் முதலிய நோய்களுக்கும் மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக்கட்டிகளுக்கும் கொளஞ்சியப்பர் அருள் கலந்த இவ்வெண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது. இவ்வெண்ணெய் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது.

பிறந்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்குப் பெயரிடுதல், சட்டை நகை போடுதல் இங்கு ரொம்பவும் விசேசம். குழந்தை பிறந்ததிலிருந்து இங்கு வரும்வரைக்கும் குழந்தைக்கு சட்டை போட மாட்டார்கள்; பொட்டு கூட வைக்க மாட்டார்கள். இந்த சந்நிதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு, பொட்டு வைக்கிறார்கள்.

நன்றி சித்தன் .காம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 3:50 pm

மாதந்தோறும் கார்த்திகை நாளன்று சிறப்பான அபிசேக ஆராதனைகள் நிகழ்ந்து வருகின்றன. சந்தனத்தால் செய்து வைக்கப்பெற்றுள்ள முருகன் திருவுருவத்தைப் பீடத்தின் மேல் நிறுவி, கிரீடம் அணிவித்து உருவத்திருமேனியில் கொளஞ்சியப்பரை அலங்கரித்து வழிபடுகின்றனர். ஆடிக்கிருத்திகை சிறப்பாக நடைபெறும். அன்றும் ஏராளமான காவடிகள் வரும்.

ஐப்பசித் திங்கள் கந்தர்சஷ்டி ஆறு நாட்களும் கொளஞ்சியப்பர் ஆறுவகையில் அலங்கரிக்கப்படுகிறார். இலட்சார்ச்சனை நடைபெறும். ஏராளமான திருமணங்களும் இங்கே நடைபெறுகின்றன. தை வெள்ளி, ஆடிவெள்ளிகளில் மாவிளக்கு இட்டு வழிபடும் பழக்கம் உள்ளது. பிரார்த்தனை:

தம்குறை முடிக்க வேண்டி, பிராது கட்டுதல் என்ற நேர்த்தி கடன் இங்கே மிகவும் புதுமையாக உள்ளது. பொருள் களவு போய்விட்டலோ, கொடுத்த கடன் திரும்பாவிட்டாலோ, பிறர் தம்மை வஞ்சித்து விட்டலோ, கடும் நோயால் அவதி உற்றாலோ, குடும்பப் பிரச்சினைகளால் வாடினாலோ, மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் தடைபட்டாலோ, வேலை கிடைக்காது, வறுமை உற்றாலோ, வேறு யாதொன்று வேண்டி நின்றாலோ, யாவற்றையும் இங்கே பிராது கட்டி விண்ணப்பித்துக் கொள்ளலாம். பிராது வாசகத்தை ஒரு வெள்ளைத் தாளில் கீழ்க்கண்டவாறு எழுதவேண்டும்.

மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு….. என ஆரம்பித்து தான் எந்த ஊரிலிருந்து வருகிறேன் என்றும், தன்னுடைய கோரிக்கை இன்ன என்றும் தெளிவாக எழுதி கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுத்தால் அவர் அதை கொளஞ்சியப்பர் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து பின்பு விபூதி பொட்டலம் ஆக்கி தருவார்.

அதை சிறுநூலால் கட்டி முனியப்பர் சந்நிதியில் இருக்கும் வேலில் கட்டித் தொங்க விட்டுவிட்டு விடைபெறலாம். இப்படி வேண்டிக்கொண்ட 90 நாட்களில் பிராது கட்டியவரின் எண்ணம் ஈடேறும். எந்த ஊரிலிருந்து வருகிறோமோ, அங்கிருந்து கிலோ மீட்டருக்கு 10 காசு வீதம் படிப்பணம் கட்டி வழிபட வேண்டும்.

கோரிக்கை நிறைவேறினால் இந்த தேதியில் நான் வந்து வைத்த கோரிக்கை நிறைவேறியதால் அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என ராஜினாமா கட்டணம் செலுத்தி நேர்த்திகடனை செலுத்தலாம்.

(ஜெயலலிதா வழக்கிலிருந்து வெளியே வரவேண்டும் என்று பெண் அமைச்சர் ஒருவர் இப்படி செய்தார் புன்னகை)

கோரிக்கைகள்:

குழந்தை வரம், கடன் தொல்லை, திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம், வேலை மாறுதல், குடும்ப கஷ்டம், பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

ஆடு மாடு கோழி தானம், எடைக்கு எடை நாணயம் வழங்கல், முடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், ஆகியவை இங்கு விசேசம். பங்குனி உத்திரத்திற்கு காவடி எடுத்தல் இங்கு விசேசம். உடலெங்கும் அலகு குத்தி வருதல் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.

பரு முதலியன நீங்கப்பெற்றவர்கள் வெள்ளியில் பரு உருண்டை செலுத்துகின்றனர். வெள்ளியில் கண்ணடக்கம், மனிதர் கை, கால், வயிறு, மார்பு வடிவில் செய்யப்பெற்ற வெள்ளி உடல் உறுப்புகள், தொட்டிலில் கிடக்கும் குழந்தை வடிவங்கள் யாவும் நேர்த்திகடன்களாக செலுத்தப்படுகின்றன.

கருவறை பின்பக்கம் வேப்பமரம் மற்றும் அரச மரங்களில் குழந்தை உறங்குவது போல் ஒரு கல் வைத்துச் சிறு ஏணைகள் கட்டித் தொங்க விட்டுப் பிள்ளை வரம் வேண்டுதலும் உண்டு. தொட்டில் கட்டுதல், பூஜைமணி வாங்கி வைத்தல், விளக்குகள் வாங்கி வழங்குதல் ஆகிவற்றையும் பக்தர்கள் செய்கின்றனர்.

நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், மணிலா, உளுந்து, பயிறு கொள்ளு, நவதானியங்கள், மஞ்சள், முந்திரி, கனிவகைகள், பலா, வாழை, மா அனைத்து வகைக் காய்கறிகள், பசுமாடுகள், காளைகள், எருமை, கன்றுகள், ஆடுகள், கோழிகள் என பக்தர்கள் நேர்த்திகடன்களாக செலுத்துகின்றனர். வசதியுள்ள பக்தர்கள் தாமே உணவு தயாரித்து படையல் இட்டு நைவேதனம் செய்து மற்றவர்களுக்கும் அன்னதானமும் வழங்குகிறார்கள்.

இருப்பிடம் :

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : விருத்தாச்சலம் – 2 கி.மீ. கடலூர் – 40 கி.மீ. உளுந்தூர்பேட்டை – 25 கி.மீ. சிதம்பரம் – 45 கி.மீ பஸ்வசதி : விருத்தாச்சலம் – சேலம் சாலையில் விருத்தாச்சலத்திலிருந்து மிக அருகில் (2 கி.மீ) தொலைவில் மணவாளநல்லூர் உள்ளது. விருத்தாச்சலத்திலிருந்து நகர பேருந்து வசதி உள்ளது.

நன்றி சித்தன் .காம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 3:50 pm

அரு உருவ கொளஞ்சி குமரன்! MZz6rCGITPK21FMpWh8N+LRG_20150807104738075427

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. கடலுõர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், இன்று (7ம் தேதி) துவங்கி, 17ம் தேதி முடிகிறது. இதையொட்டி, இன்று காலை விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, ஆழத்து விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் பல்லக்கில் எழுந்தருள காலை 7:15க்கு மேல் 9:00 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் விருத்தாம்பிகை அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

தினசரி காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த கிளி வாகனம், பூத, யானை, கமலம், வெள்ளி அன்னம், குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.

முக்கிய நிகழ்வாக வரும் 15ம் தேதி காலை 7:00க்கு மேல் 8:30க்குள் தேரோட்டம், 16ம் தேதி ஸ்படிக பல்லக்கில் விருத்தாம்பிகை அம்மன் வீதியுலா, 17ம் தேதி அதிகாலை 5:00க்கு மேல் 6:30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 1:44 am

கொளஞ்சியப்பர் கோவிலுக்கு நான் சென்று இருக்கிறேன் ....
//இத்திருக்கோயிலிலில் அருள்மிகு கொளஞ்சியப்பர்
நீதிபதியாகவும், வைத்தியராகவும் அருள்பாலித்துவருகிறார்.
எழுத்து மூலம் பிராது செலுத்தி 90 நாட்களுக்குள் அது நிறைவேறி
பிராதை திரும்பப்பெறும் அதிசயத்தினை இன்றளவும் கண்
கூடாகக் காணலாம். இவ்வழிபாடு இத்திருக்கோயிலின் மிக
முக்கியப் பிரார்த்தனையாகும்.
//
மிகவும் உண்மை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2015 11:30 pm

shobana sahas wrote:கொளஞ்சியப்பர் கோவிலுக்கு நான் சென்று இருக்கிறேன் ....
//இத்திருக்கோயிலிலில் அருள்மிகு கொளஞ்சியப்பர்
நீதிபதியாகவும், வைத்தியராகவும் அருள்பாலித்துவருகிறார்.
எழுத்து மூலம் பிராது செலுத்தி 90 நாட்களுக்குள் அது நிறைவேறி
பிராதை திரும்பப்பெறும் அதிசயத்தினை இன்றளவும் கண்
கூடாகக் காணலாம். இவ்வழிபாடு இத்திருக்கோயிலின் மிக
முக்கியப் பிரார்த்தனையாகும்.
//
மிகவும் உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1157095

நான் போனது இல்லை ஷோபனா, ஆனால் போகணும் என்கிற எண்ணம் இருக்கு புன்னகை...பார்ப்போம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக