ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 83 of 84 Previous  1 ... 43 ... 82, 83, 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (563)

Post by Dr.S.Soundarapandian Fri Jul 23, 2021 11:12 am

[b]தொடத் தொடத் தொல்காப்பியம் (563) [b]
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளுடன் , அடுத்த நூற்பாவைக் காணத் தொடங்கலாம்!

1 . ‘யாவன் தவஞ் செய்தான் , அவன் சுவர்க்கம் புகும்’

- இத் தொடரில், ‘செய்தான்’ என்ற வினை முற்றுக்கு ஏற்பப்,’புகுந்தான்’ என்ற வினைமுற்று முடிபே வந்திருக்கவேண்டும்! ஆனால், ’புகும்’ என்ற நிகழ்கால வினைமுற்று வந்துள்ளது. ( ‘செய்யும்’ எனும் வாய்பாட்டில் நிகழ்கால வினைமுற்று வரும் என முன்பே நாம் பார்த்துள்ளோம் ) .
இங்கே வினைமுதல் – தவஞ் செய்தான்

3 . ‘தாயைக் கொன்றான் நிரயம் புகும்’ (நிரயம் – நரகம்)
- இங்கும், ‘கொன்றான்’ என்பதற் கேற்பப், ‘புகுந்தான்’ என்றே வந்திருக்கவேண்டும்; ஆனால் , ‘புகும்’ எனும் நிகழ்கால முற்று வந்துள்ளது.

இவ்வாறு, அதீதச்(extreme) செயற்கள் பற்றித் தொடர் வரும்போது, அச் செயலைச் செய்தவன்(வினைமுதல்), நிகழ்காலத்தில் பயனுறுவதுபோலத் தொடர் முடிவதுண்டு என்பதே மேலை விளக்கத்தின் கருத்து.
‘அதீதச் செயல்’ எனப் பார்த்தோமல்லவா? இதையே தொல்காப்பியர் ‘மிக்கது’என்றார். அஃதாவது, தீவிரமான அறம் அல்லது மிக மோசமான கெடுதிச் செயல்.
நூற்பா:
“மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி
அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வ தில்வழி நிகழுங் காலத்து
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே” (வினையியல் 45)

‘மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி’ – மேலை எடுத்துக்காட்டில், ‘தவம் செய்தான்’ எனும் வினையை சுட்டி
‘அப்பண்பு குறித்த’ – சுவர்க்கம் புகும் பயன் குறித்த
‘ வினைமுதற் கிளவி’ – தவம் செய்தவன்
‘செய்வதில் இல்வழி’ - மேல் எடுத்துக்காட்டில், ‘தவம் செய்தவன்’ என்றுதான் தொடரின் தொடக்கத்தில் இருக்கிறதே ஒழிய , அச் செயல்லின் முடிவு இல்ல; முடிவு பிறகே தொடர்ந்தது; இதனைத்தான் ’செய்வது இல்வழி ’ , தெரிவிக்கிறது.
‘நிகழுங் காலத்து,
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே’ – மேலை நமது எடுத்துக்காட்டில் , ’புகும்’ என்ற நிகழ்கால முற்றுடன் முடிந்ததுபோலத் தொடர் முடியும்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளில், ‘தவம் செய்தான்’ , ‘தாயைக் கொன்றான்’ என இறந்தகாலத்தில் தொடர்கள் தொடங்கியதைப் படித்தோம்; இப்படி , இறந்தகாலத்தில்தான் அதீதச் செயல்கள் வரவேண்டுமா?

‘இல்லை’ என்கிறார் சேனாவரையர்!

வினைமுதலின் செயலானது எதிர்காலத்திலும் வரலாம் என்று எடுத்துக்காட்டுடன் விளக்குகிறார் சேனாவரையர்:
“தவம் செய்யிற் சுவர்க்கம் புகுவன்” என எதிர்காலத்தாற் சொல்லப்படுவதனை , நிகழ்காலத்தாற் சொல்வது வழுவாயினும் அமைக என வழு அமைதியாம்.”
தவம் செய்யில் – தவம் செய்தால் (எதிர்காலம் சுட்டுவதைக் கவனிக்க)
புகுவன் – ‘செய்யும்’ எனும் வாய்பாட்டில் அமைந்த நிகழ்கால வினைமுற்று.
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (564)

Post by Dr.S.Soundarapandian Fri Jul 23, 2021 8:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (564)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தந்தை, ‘நீ படிக்க வேண்டும்’ என்று மகனிடம் கூறுகிறார்.
‘நீ படிக்க வேண்டும்’- மகனைப் பார்த்துப் பிறன் (தந்தை) சொல்வதால், இது ‘பிறன் பால் தொடர்’.

தந்தையிடம், ‘நான் படிக்க வேண்டும்’ என்று மகன் கூறுகிறான்.
‘நான் படிக்க வேண்டும்’- மகன் தன்னைக் குறித்துச் சொல்வதால், இது ‘தன் பால் தொடர்’.
மேல் இரு தொடர்களும் தெளிவாக உள்ளன.
‘படிக்க வேண்டும்’ – இத் தொடர் தன்பாலில் உள்ளதா, பிறன் பாலில் உள்ளதா?
கூற முடியாது! மயக்கம் உள்ளது!
‘ படிக்க வேண்டும்’ – மகன் தந்தையிடம் சொன்னால், இது ‘தன் பால் தொடர்’.
தந்தை, மகனிடம் சொன்னால், ‘பிறன் பால்’ தொடர்!

கீழ் நூற்பா இதற்காகவே :
“இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி
இருவயி னிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும்” (வினையியல் 46)

‘இருவயி னிலையும் பொருட்டா கும்மே’
- இரு வகைகளிலும் பொருள் கொள்ளலாம்.

சேனாவரையரின் உரை :
“ ‘ஓதல் வேண்டும்’ என்ற , ‘வேண்டும்’ என்பது, ஓதற்கு வினைமுத லாயினாற்கும், , அவன் ஓதலை விரும்பும் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டு கொள்க! ”
ஓதற்கு - படிப்பதற்கு
வினைமுத லாயினான் – படிக்க விரும்பும் மகன்.

நச்சர், கல்லாடனார் ஆகியோர் , ‘சாத்தன் ஓதல் வேண்டும்’ என்ற தொடரால் மேல் நூற்பாவை விளக்குகின்றனர்!
அவர்தம் விளக்கப்படி,
தன் பால் தொடரானால் , வேண்டும் – வேண்டிக்கொள்ளும்; விரும்பும். விரும்புபவன் – மகன். சாத்தனானவன் தான் ஓதுதலை விரும்புகிறான்.
பிறன் பால் தொடரானால் , வேண்டும் – செய்ய வேண்டும்;செய்ய விரும்பும். விரும்புபவர் – தந்தை. எதைத் தந்தை விரும்புகிறார்? சாத்தன் ஓதுதலை. இங்கு,‘சாத்தனோதல்’ , ஒருசொல் நீர்மைத்து.

நூற்பாவில் , ‘வேண்டும்’ என்று மட்டும் இல்லாது ‘இதுசெயல் வேண்டும்’ என்றுள்ளதைக் கவனியுங்கள்!
‘வேண்டும்’ என்று மட்டும் இருந்தால், அது துணைவினை (Auxiliary verb)ஆகிவிடும்!
‘வரவேண்டும்’, ‘ போகவேண்டும்’, ‘கொடுக்கவேண்டும்’ – இவற்றில் வரும் ‘வேண்டும்’ , துணைவினை.
ஆனால், தொல்காப்பியம் சொல்வது,வினைமுற்று (Finite verb). ‘இது செயல் வேண்டும்’! ‘ஆடுதல் வேண்டும்’ , ‘ஏறுதல் வேண்டும்’ , ‘போரிட வேண்டும்’ என்றாங்கு பயின்று வரவேண்டும்!
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (565)

Post by Dr.S.Soundarapandian Sat Jul 24, 2021 12:01 pm

[b]தொடத் தொடத் தொல்காப்பியம் (565) [b]
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


‘நான் உன்னைத் திட்டினேனோ? ’ – இத் தொடரில் உள்ள ‘திட்டினேனோ’ என்பது, ‘வினாவுடை வினைச் சொல்’; இதற்குத் , ‘திட்டவில்லை’ என்ற எதிர்மறைப் பொருள் உண்டு!

‘நான் உன்னைத் திட்டினேனா? ’ – இத் தொடரில் உள்ள ‘திட்டினேனா?’ என்பது, ‘வினாவுடை வினைச் சொல்’; இதற்குத் , ‘திட்டவில்லை’ என்ற எதிர்மறைப் பொருள் உண்டு!

‘நான் உன்னைத் திட்டினேனே? ’ – இத் தொடரில் உள்ள ‘திட்டினேனே’ என்பது, ‘வினாவுடை வினைச் சொல்’; இதற்குத் , ‘திட்டவில்லை’ என்ற எதிர்மறைப் பொருள் உண்டு!

மேல்வந்த ‘திட்டினேனோ’ , ‘திட்டினேனா’, ‘திட்டினேனே’ ஆகியவற்றை உச்சரித்துப் பார்த்தால், அவை கடிந்துகொண்டு வருதலை உணரலாம்! இதைத்தான் தொல்காப்பியர் ‘வன்புற வரூஉம்’ என்றார்!
வன்புற வருதல் – கடிந்துகொள்வதாக வருதல்
‘திட்டினேனோ’ , ‘திட்டினேனா’, ‘திட்டினேனே’ – இம் மூன்று வினாவுடை வினைச்சொற்களின் ஈறுகளைப் பாருங்கள்; ‘ஓ’, ‘ஆ’, ‘ஏ’ ஆகியன. இவையே வினாப்பொருள் பயப்பவை. இதனால்தான், சேனாவரையர், “வினாவாவன ஆ, ஏ, ஓ” என்றார்.

இவ் விளக்கத்தின் அடிப்படையில் கீழ்வரும் நூற்பாவைப் பாருங்கள் :

“வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்
எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையும் உடைத்தே (வினையியல் 47)”

‘எதிர்மறுத் துணர்த்துதற்கு’ – எதிர்மறைப் பொருள் தருவதற்கு

‘திட்டினேனே’ என்ற எடுத்துக்காட்டைப் பார்த்தோமல்லவா?
இதே எடுத்துக்காட்டை ‘வைதேனே’ என்ற சொல் மூலம் விளக்கியவர் சேனாவரையர்; அவர் ஒரு சிறு நாடகத்தையே நம் கண்முன் கொண்டுவருகிறார்! :

“ கதத்தானாகக் களியானாக ஒருவன் தெருளாது, ஒருவனை வைதால், அவன் தெருண்டக்கால், வையப்பட்டான் ‘நீ யென்னை வைதாய்’ என்றவழித், தான் வைததை யுணராமையான் ‘வைதேனே?’ யென்னும்; ஆண்டவ் வினாவொடு வந்த வினைச்சொல் ‘வைதிலே’ னென்னு மெதிர்மறைப் பொருள்பட வந்தவாறு கண்டுகொள்க. ”
கதத்தான் – சினத்தான்
களியான் – குடியால் மதி மயங்கியான்
தெருளாது – அறியாது
தெருண்டக்கால் – அறிய வந்தபோது

ஒருவன் குடித்துவிட்டுச் சினத்துடன், ஒருவனைத் திட்டிவிடுகிறான்! திட்டு வாங்கியவன், ‘நீ என்னைத் திட்டினாய்’ என்று சொன்னபோது, புத்தி தெளிந்த நிலையில், ‘நான் திட்டினேனே?’ என்று , எதிர்மறைப் பொருள் தொனிக்குமாறு விடை கூறுகிறான்.

இவ்வாறு , உரையாசிரியர்கள் காட்டும் நாடகக் காட்சிகள் ஆங்காங்கே உள்ளன!
தொல்காப்பிய உரையாசிரியர் தரும் நாடகக் காட்சிகள் (Dramatic Scenes in Tholkappiyam Commentaries) என்பதே ஓர் ஆய்வுத் தலைப்புதான் (Research Topic) !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by T.N.Balasubramanian Sat Jul 24, 2021 4:14 pm

ஒருவன் குடித்துவிட்டுச் சினத்துடன், ஒருவனைத் திட்டிவிடுகிறான்! திட்டு வாங்கியவன், ‘நீ என்னைத் திட்டினாய்’ என்று சொன்னபோது, புத்தி தெளிந்த நிலையில், ‘நான் திட்டினேனே?’ என்று , எதிர்மறைப் பொருள் தொனிக்குமாறு விடை கூறுகிறான்.

இந்திய குடிமகன்களுக்கு தொல்காப்பியர் மொழியில் ஒரு உதாரணம். அருமையிருக்கு

[You must be registered and logged in to see this link.]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Sat Jul 24, 2021 7:30 pm

நன்றி இரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (566)

Post by Dr.S.Soundarapandian Sat Jul 24, 2021 7:36 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (566)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஆபத்தான இந்த மலைப் பாதையில் பேருந்தில் போகிறவன் செத்தான்!’ - சொல்கிறார்கள் அல்லவா?

‘பேருந்தில் போகிறவன் ’ என்றதைக் கவனியுங்கள்! ‘சாவான் ’ என எதிர்காலத்தில் கூற வேண்டியதைச், ‘செத்தான்’என இறந்த காலத்து வினையாக அவன் முடிபு கூறுகிறான்! இது தொடருக்குச் சிறப்பையே தரும் என்கிறார் தொல்காப்பியர்!

மேலைத் தொடரையே சிலர் , ‘ஆபத்தான இந்த மலைப் பாதையில் பேருந்தில் போகிறவன் சாகிறான்!’ - என்பர். இங்கேயும், ‘சாவான்’ என எதிர்காலத்தில் கூறக் கூடிய செயலைச், ‘சாகிறான்’ என நிகழ்கால வினைமுடிபாகக் கூறுவதைக் காணலாம்!

இதற்கான இலக்கணம்:

“வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும்
இயற்கையுந் தெளிவுந் கிளக்குங் காலை (வினையியல் 48)

‘வாராக் காலத்து’ – எதிர் காலத்து
‘ இறப்பினும் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும்’ – இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் வந்தால் சிறப்பாகவே இருக்கும்
‘ இயற்கையுந் தெளிவுந் கிளக்குங் காலை’ – தொடரானது, இயற்கை பற்றியோ தெளிவானதாகவோ சொல்லப்படும்போது.

மேலை நமது இரு எடுத்துக்காட்டுத் தொடர்களும் தெளிவைக் கிளப்பன; இயற்கை பற்றியவை அல்ல.

எறும்புகள் தம் முட்டையைக் கொண்டு தெற்றி ஏறும்போது , அதனைப் பார்த்தவன், ‘மழை பெய்யும்’ என எதிகால வினையாகக் கூறாது, ‘மழை பெய்தது’ என்று இறந்தகால வினையாகக் கூறுகிறான்! சிலர் , ‘மழை பெய்கின்றது’ என நிகழ்கால வினையாகக் கூற முற்படுகின்றர்!

- - இந்த எடுத்துக்காட்டானது சேனாவரையர் ,நச்சர் ஆகியோர் கூறியது; இஃது, இயற்கை கிளப்பது!
தெற்றி – திண்ணை; மேடான இடம்
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (567)

Post by Dr.S.Soundarapandian Sun Jul 25, 2021 11:31 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (567)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘இங்கு மாம்பழம் விற்கிறது’ – சொல்வோம்!
ஆனால், மாம்பழமா விற்கிறது? கடைக்காரர்தானே விற்கிறார்?
‘இங்கு மாம்பழம் விற்கப்படுகிறது’ என்றுதானே வரவேண்டும் ?

- இப்படிப்பட்ட வினாவைத் தொல்காப்பியரின் மாணவன் ஒருவன் கேட்டிருக்கவேண்டும்!
அவனுக்கான நூற்பா:
“செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே” (வினையியல் 49)

‘விற்கப்படும் பொருளை விற்றது போலக் கூறுதல் வழக்கில் உள்ளதப்பா ! ஏற்றுக்கொள்ளப்பா !’ என்பதாக உள்ளது தொல்காப்பியரின் விடை!
‘செயப்படு பொருளை’ – மாம்பழம் விற்கப்படுதலை
‘செய்தது போல’ – மாம்பழம் விற்பது போல
‘தொழிற்படக் கிளத்தல்’ – மாம்பழம், அதுவே தன்னை விற்றது போன்ற தொழிலைக் கூறுதல் (வினையை)
‘வழக்கியன் மரபே’ – வழக்கில் இயலும் ஒரு மரபுதான்!

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள்:
1 . இல்லம் மெழுகிற்று
– இதன் பொருள் , ‘வீடு மெழுகப்பட்டது’ ; ஆனால் வீடே எழுந்து வந்து மெழுகும் வேலையைச் செய்தது போலத் தொடர் அமைந்துள்ளது!

2 . சோறு அட்டது
– இதன் பொருள் , ‘சோறு சமைக்கப்பட்டது ’ ; ஆனால் சோறு அதுவாகவே எழுந்து வந்து சமைக்கும் வேலையைச் செய்தது போலத் தொடர் அமைந்துள்ளது!
அட்டது – சமைத்தது

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் :
1 . திண்ணை மெழுகிற்று
நாம் மேலே பார்த்தபடி, இதன் பொருள் , ‘திண்ணை மெழுகப்பட்டது’ ; ஆனால் திண்ணையே எழுந்து வந்து மெழுகும் வேலையைச் செய்தது போலத் தொடர் அமைந்துள்ளது!

2 . கலங் கழீஇயிற்று
– இதன் பொருள் , ‘பாத்திரம் கழுவப்பட்டது’ ; ஆனால் பாத்திரமே எழுந்துவந்து கழுவும் வேலையைச் செய்தது போலத் தொடர் அமைந்துள்ளது!
கலம் – பாத்திரம்

தெய்வச்சிலையாரின் எடுத்துக்காட்டுகள் :
1 . வாள் வெட்டிற்று
இதன் பொருள் , ‘ வாளால் வெட்டப்பட்டது’ ; ஆனால் வாள் அதுவாகவே வந்து வெட்டும் வேலையைச் செய்தது போலத் தொடர் அமைந்துள்ளது!

2 . சுரிகை குத்திற்று
– இதன் பொருள் , ‘சிறு கத்தியால் குத்தப்பட்டது’ ; ஆனால் சிறு கத்தியே நகர்ந்து வந்து குத்தும் வேலையைச் செய்தது போலத் தொடர் அமைந்துள்ளது!
சுரிகை – சிறு கத்தி (knife)

நம் கால வழக்குகளுக்கு வருவோம் !:
1 . வண்டி கழுவியுள்ளது – சொல்கிறோம் அல்லவா?
இதன் பொருள், ‘வண்டி கழுவப்பட்டுள்ளது’ என்பதுதானே? ; ஆனால் வண்டியே எழுந்து வந்து கழுவும் வேலையைச் செய்தது போலத் தொடர் அமைந்துள்ளதை நோக்கலாம்.

2 . பணியாரம் செஞ்சிருக்கு – சொல்வோம்!
இதன் பொருள், ‘பணியாரம் செய்யப்பட்டுள்ளது ’ என்பதுதானே? ; ஆனால் பணியாரமே எழுந்துவந்து அதனைச் செய்யும் வேலையைப் புரிந்தது போலத் தொடர் அமைந்துள்ளது!

இவ்வாறு, செயப்படு பொருளைச் செய்தது போலக் கூறுவதை ‘மரபு’ எனத் தொல்காப்பியர் கூறினாராகத் ,தெய்வச்சிலையார் ‘மரூஉ’ என்கிறார்!
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (568)

Post by Dr.S.Soundarapandian Mon Jul 26, 2021 10:57 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (568)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வினையியலில் கால மயக்கம் பற்றி இப்போது கூறுகிறார்!:

“இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி” (வினையியல் 50)

‘இறப்பே எதிர்வே’ – இறந்த காலமும் எதிர் காலமும்
‘ஆயிரு காலமும்’ – ஆகிய இரண்டு காலங்களும்
‘மயங்குமொழிக் கிளவி’ – தம்முள் ஒன்றொற் கொன்று மாறிவந்து
“சிறப்பத் தோன்றும்” – பொருட் குழப்பமின்றித் தோன்றுவது மரபு.

இளம்பூரணர் எடுத்துக்காட்டு:
1 . யாம் பண்டு விளையாடுவது இக் கா
பண்டு – முற்காலத்தில் ; இறந்த காலத்தைக் குறித்தது
விளையாடுவது – எதிர் காலத்தைக் குறித்தது
கா - சோலை
‘யாம் பண்டு விளையாடியது இக் கா’ என்றுதானே வரவேண்டும்? ஆனால், அப்படி வராது, இறந்த காலத்தோடு எதிர் காலம் மயங்கி வந்துள்ளதைக் கவனிக்க.

சேனாவரையர் எடுத்துக்காட்டு :
1 . இவர் பண்டு இப் பொழிலகத்து விளையாடுவர்
‘இவர் பண்டு இப் பொழிலகத்து விளையாடினார்’ – என்றுதானே வரவேண்டும்?
அப்படி இலாது, இறந்த காலமும் , ‘விளையாடுவர்’ என்ற எதிர் காலமும் இயைந்து வந்துள்ளதை நோக்குவீர்!

2 . நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான் பின், நீ என் செய்குவை?
நாளை – எதிர் காலம் குறித்த சொல்
வந்தான் – இறந்த காலம் குறித்த சொல்
‘நாளை அவன் வாளொடு வெகுண்டு வருவான் பின், நீ என் செய்குவை?’ என்றுதானே தொடர், கால முரண் இன்றி வரவேண்டும்? ஆனால், எதிர் காலமும் இறந்த காலமும் இயைந்து ஒரே தொடரில் வந்துள்ளது.

தற்கால எடுத்துக்காட்டு :

1 . அந்தக் காலத்தில் இங்குதான் படிப்போம்
‘அந்தக் காலத்தில் இங்குதான் படித்தோம்’ என்றல்லவா வரவேண்டும்?
ஆனால், கால மயக்கம் கொண்டு, இறந்த காலத்தோடு ‘படிப்போம்’ என்ற எதிர்காலம் மயங்கிடக் காண்பீர்!

மேலை நூற்பாவில் , ஒரே தொடரில், இறந்த காலமும் எதிர் காலமும் மயங்கி வந்ததைக் காட்டினார் தொல்காப்பியர்! அடுத்த நூற்பாவில், ’ இறந்த காலமும் எதிர் காலமும் மட்டும்தாம் தம்முள் மயங்கும் என நினைத்துவிடாதீர்; மற்ற காலங்களும் மயங்குதல் உண்டு!’ என்கிறார்.

“ஏனைக் காலமும் மயங்குதல் வரையார் ” (வினையியல் 51)

இதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டு :
1 . யாம் பண்டு விளையாடும் கா
‘யாம் பண்டு விளையாடிய கா’ என்றுதானே கால முரண் இல்லாது வரவேண்டும்? ஆனால், இறந்த காலத்தோடு , ‘விளையாடும்’ எனும் நிகழ் காலச் சொல்லோடு இயைந்து வந்துள்ளது!
சேனவரையரின் எடுத்துக்காட்டு :
2 . நாளை வரும்
‘நாளை வருவான்’ என்றே வரவேண்டும்; இங்கோ, ‘நாளை’ எனும் எதிர் காலச் சொல்லோடு, ‘வரும்’ நிகழ்காலச் சொல் மயங்கி வந்துள்ளது!

‘விளையாடும்’ , ‘வரும்’ ஆகியன ‘செய்யும்’ எனும் வாய்பாட்டு நிகழ் காலம் குறித்ததைக் கவனிக்க.

தற்கால எடுத்துக்காட்டுகள் :
1 . நாளை நீ கொடுத்ததை இல்லை என்கிறான்
’நாளை நீ கொடுத்ததை இல்லை என்பான்’ என்றுதான் கால இடர் இன்றி வரவேண்டும் ; ஆனால், ’என்கிறான்’ என்ற நிகழ் காலம், ‘நாளை’ என்ற எதிர் காலத்துடன் இயைந்து வந்துள்ளது!

2 . நான் படிக்கும்போது ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார்
‘படிக்கும் போது’ என்ற நிகழ் காலமும், ‘இருந்தார்’ எனும் இறந்த காலமும் மயங்கி வந்துள்ளதை நோக்குவீர்!

இத்துடன் வினையியல் முடிவடைந்தது.
இதனைத் தொடர்வது இடையியல் !
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty தொல்காப்பிய இலக்கணம் (569)

Post by Dr.S.Soundarapandian Tue Feb 08, 2022 2:05 pm

தொல்காப்பிய இலக்கணம் (569)
      -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
( ‘தொடத் தொடத் தொல்காப்பியம்’ என்ற திரியின் பெயர் என்னால் மாற்றப்படுகிறது; இதே திரி ‘தொல்காப்பிய இலக்கணம்’ என்ற பெயரில் தொடரும் என்பதைக் கனிவுடன் தெரிவித்துகொள்கிறேன்.)

இப்போது இடையியல்!

இடையியலைக் கீழ்வரும் அமைப்பில் (Structure) வரைகிறார் தொல்காப்பியர்:
1 . இடைச் சொற்களின் பொதுவான இலக்கணம்    -         3     (நூ. 1-3)
2 . இடைச் சொற்கள் பலவற்றைத் தனித் தனியாக
   விளக்கும் இடைச்சொற் சிறப்பிலக்கணம் …                 35    (நூ. 4-38)
3 . எண்ணிக் கூற உதவும் என்ணிடைச் சொற்கள் –            5   (நூ. 39-43)
4 .புறனடைச் சூத்திரங்கள் … ..                -          5  ( நூ. 44- 48)
                      ………………………
          மொத்த நூ.                      48
                       ………………………

முதலில், இடைச்சொல்லின் (Particle) இயல்பைத்  தெரிவிக்கும் நூற்பா!:

இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற்  றியலும் தமக்கியல் பிலவே          (இடையியல் 1)

இடையென படுப – இடைச்சொற்கள் எனப்படுபவை,
பெயரொடும் வினையொடும் – பெயர்ச் சொல்லோடும் வினைச் சொல்லோடும்,
நடைபெற்று இயலும் – சேர்ந்து வந்து அமையும்;
தமக்கு இயல்பிலவே – ஆனால், தாமாகத்  தனித்துச் செயற் படா!

(1)முதலில்,  ‘இடை’ என்ற சொல்லின் பொருளைச் சேனாவரையர் கூறுவதைப் பார்ப்போம்:
“மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் ,பெரும்பான்மையும், இடை வருதலின் இடைச்சொல்லாயிற்று”.

சேனாவரையர் கருத்துப்படி-
 ‘அதுகொல் தோழி’ – இங்கு,  ‘அது’ எனும் பெயர்ச்சொல்லுக்கும், ‘தோழி’ என்ற இன்னொரு பெயர்ச்சொல்லுக்கும் நடுவே (இடையே) ‘கொல்’ எனும் இடைச்சொல்  நிற்கிறது.

(2)இரண்டாவதாகத் , தெய்வச்சிலையார் கூறுவதை நோக்குவோம்:

“பெயரும் வினையும்  இடமாக நின்று பொருள் உணர்த்துதலின் இடைச்சொல்லாயிற்று”.

தெய்வச்சிலையார் கருத்துப்படி-

இடமாக – பெயருக்கு முன்னோ பின்னோ எனவும் , வினைக்கு முன்னோ பின்னோ எனவும் பொருள்  கொள்ளவேண்டும்.

(3)மூன்றாவதாகக், கல்லாடனார் சொல்வதைக் கேட்போம்:

“இடைச்சொல் என்னும் பொருண்மை என்னையெனின், பெயர் வினைகள் உணர்த்தும் பொருட்குத் தான் இடமாக நிற்றலான் இடைசொல் லாயிற்று”.

கல்லாடனார் கருத்துப்படி-

அறமே சரி- இங்கு, ‘அறம்’ எனும் பெயர்ச்சொல்லை , அடுத்து நிற்கும் ‘ஏ’ எனும் இடைச்சொல் நன்கு உணர்த்துவதால்- உணர்த்த இடம் தருவதால், ‘ஏ’ , இடைச்சொல் லாயிற்று.

வருவாயோ? – இதில், ‘வருவாய்’ எனும் வினையை அடுத்து, ‘ஓ’ இடைச்சொல் நின்று, பொருளை நன்கு உணர்த்துவதால்,  ‘ஓ’, இடைச்சொல் லாயிற்று.

(4)நான்காவதாகத், திருவாரூர் வைத்தியநாத தேசிகர் தன் இலக்கண விளக்கம் (முதற் பதிப்பு,பிப்.1973) நூலிற் கூறுவது:
“பின்னும் முன்னும் நிற்குமேனும் இடை நிற்றலும், இடை நிற்றல் பெரும்பான்மை யென்பதூஉம் பெறுதற்கு இடைச்சொல்லென்றார்”

இந்நான்கையும்  உட்கொண்டு,
சுருக்கமாக – பெயர் வினைகளுக்கு முன்னும் அல்லது பின்னுமாக  இடம்பெற்று, அச் சொற்களுக்குப் பொருட் சிறப்பைத்  தருவன இடைச்சொல் எனலாம்.

அடுத்ததாகத் , ‘தமக்கு இயல்பிலவே’ எனத் தொல்காப்பியர் கூறியதற்கு, “தமக்கெனப் பொருளின்மை இடைச்சொற்குச் சிறப்பிலக்கணமாம்” என்றொரு சிறு குறிப்பைத் தருகிறார் சேனாவரையர்.

இதனை ஆய்ந்த மோசசு பொன்னையா அவர்கள், “….இடைச்சொற்கள் தனிச் சொற்களாய் வழங்கா என்பதைத் ‘தமக்கியல்பில ’என்றாராக , உரைகாரர் ‘தமக்கெனப் பொருளுடையன வல்ல’ என உரை கூறி மயங்கினர்.” என்கிறார். (நன்னூல் ஆராய்ச்சித் தெளிவுரை-சொல்லதிகாரம்,சீயோன் பதிப்பகம்,பங்கசம் காலனி, மதுரை-9, முதற் பதிப்பு1971,ப.327).
அஃதாவது, இடைச்சொற்களுக்கு என்று பொருள் உண்டு;ஆனால் அவை தனித்து இயங்கா!
இனிப்,  ‘பெயரொடு நடைபெற்றியலும்’ இடைச் சொல்லுக்குச் சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டு-
1 .அதுகொல் தோழி
இதில், ‘அது’ எனும் பெயர்ச்சொல்லின் பின்னே ‘கொல்’ எனும் இடைச்சொல் வந்ததைக் காண்க!

‘வினையொடு நடைபெற்றியலும்’ இடைச் சொல்லுக்குச் சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டு-
2 .வருகதில்
இதில், ‘வருக’ எனும் வினைச்சொல்லின் பின்னே ‘தில்’ எனும் இடைச்சொல் வந்ததைக் காணலாம்!

மேலைக் ‘கொல்’, ‘தில்’ என்ற இடைச்சொற்கள், இவை சார்ந்துவரும் சொல்லினும் வேறாக வந்துள்ளதை நோக்குக.

சேனாவரையர்,  ‘இப்படி வேறாக வருதலோடு, சொல்லுக்கு உறுப்பாகவும் இடைச்சொற்கள் வரும்’ என்கிறார். இதற்கு இவர் தந்த எடுத்துக்காட்டுகள் – உண்டனன் ; உண்டான் ; என்மனார்; என்றிசினோர்;அருங்குரைத்து.
இவற்றை ஆய்வோம்-
1 . உண்டனன்
உண்டனன்=  உண் + ட்+ அன்+அன்
ட் – இறந்தகால  இடைநிலை
அன் – சாரியை
அன் – படர்க்கை ஆண்பால் விகுதி
இங்கே , ‘ட்’, ‘அன்’, ‘அன்’ ஆகிய மூன்றுமே இடைச்சொற்கள்தாம்!இந்த மூன்று இடைச்சொற்களும்  ‘உண்டனன்’ எனும் சொல்லுக்கு உறுப்புகளாகவே வந்துள்ளதை நோக்குக.
2 . உண்டான்
உண்டான்=  உண் + ட்+ ஆன்
ட் – இறந்தகால  இடைநிலை
ஆன் – படர்க்கை ஆண்பால் விகுதி
இங்கே , ‘ட்’, ‘ஆன்’ ஆகிய இரண்டுமே இடைச்சொற்கள்தாம்!இந்த  இரண்டு இடைச்சொற்களும்  ‘உண்டான்’ எனும் சொல்லுக்கு உறுப்புகளாகவே வந்துள்ளதை நோக்குக.
3 . என்மனார்
இங்கே நாம் கொஞ்சம் நின்று விளையாட வேண்டும்!
‘என்மனார்’ என்ற சொல்லை எப்படிப் பிரிப்பது?
இலக்கணிகள் ஏற்கனவே முயன்றுள்ளவற்றை இப்போது காண்போம்:

I .   ‘என்மனார்’ என்பதன் பொருள் யாது? ‘என்ப’தானே? எனவே இதிலுள்ள, ‘என்ப’  ‘ப’, கெட்டு ‘என்’ஆகிறது; பிறகு வருமாறு புணர்கிறது-

என்ப → என் ; என்+மன்+ஆர் (இளம்பூரணர்) (இணையம்-தமிழியல் ஆய்வுகள் 2018)
         ii . என்மனார் = என்+மன்+ஆர்   (சேனாவரையர்)
மன் – எதிர்கால இடைநிலை (சிவஞான போதம்)
ஆர் – படர்க்கைப்  பலர்பால் விகுதி

            iii . என்மனார் = என்+ம்+அன்+ஆர்  (மோ. இசரயேல் முதலியோர்)
ம்- எதிர்கால இடைநிலை
அன் – சாரியை
ஆர் – படர்க்கைப் பலர்பால் விகுதி

          iv . என்மனார் = என்னும் + அன்னார்
என்னும் → என்ம்
என்ம் + அன் + ஆர் = என்மனார் (மா.அய்யாச்சாமி ,1982;மேற்கோள்-இணையம்-தமிழியல் ஆய்வுகள் 2018)
V .  ‘என்னும்’ எனும் வினை முற்றுச் சொல்லை எடுத்துக்கொண்டு, அது முதலில் ‘என்ம்’ ஆவதைக் குறிக்கின்றனர்;பிறகு வருமாறு புணர்வதைக் காட்டுகின்றனர் (இணையம்-தமிழியல் ஆய்வுகள் 2018)
என்னும் → என்ம்; என்ம்+அன்+ஆர் = என்மனார்  
அன்-சாரியை
ஆர் – படர்க்கைப் பலர்பால் விகுதி

மேற் கண்டவற்றுள் ,  ‘மன்’ , ‘ம்’ , ‘அன்’, ‘ஆன்’, ‘ஆர்’ ஆகியவை  சொல்லுக்கு  உள் உறுப்பாக வந்த இடைச்சொற்களே.

மேல் ஐந்தில் (i-v), ஐந்தாம் கருத்து பொருந்துவதாக உள்ளது.

4 . என்றிசினோர்
என்றிசினோர்  - என்று சொல்லுவார்
என்றிசினோர் = என் + ற் + இசின் + ஓர்
என் – வினை அடி
ற் - இறந்தகால இடைநிலை
இசின் – சாரியை
ஓர் - படர்க்கைப் பலர்பால் விகுதி

இவற்றில், ‘ற்’, ‘இசின்’, ‘ஓர்’ ஆகியன சொல்லுக்கு  உள் உறுப்பாக வந்த இடைச்சொற்களே!


5 . அருங்குரைத்து
அருங்குரைத்து – அருமைத்து- அருமையை உடையது
அருங்குரைத்து = அரும் + குரை+த்+ து
அரும் - பகுதி
குரை- அசைநிலை
த் – சந்தி
து- குறிப்பு வினைமுற்று விகுதி
இவற்றில், ‘குரை’, ‘த்’, ‘து’ ஆகியன சொல்லுக்கு  உள் உறுப்பாக வந்த இடைச்சொற்களே!

***


Last edited by Dr.S.Soundarapandian on Tue Feb 08, 2022 2:06 pm; edited 1 time in total (Reason for editing : தொல்காப்பிய இலக்கணம் (569))


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by T.N.Balasubramanian Tue Feb 08, 2022 6:04 pm

இடையிலே தலைப்பை மாற்றி ,
இப்போது இடையியல் உடன் ஆரம்பிக்கிறீர்.

தொடருங்கள் அய்யா.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 83 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 83 of 84 Previous  1 ... 43 ... 82, 83, 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum