ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 9 of 84 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 46 ... 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by mohu Tue Mar 26, 2013 1:08 pm

அருமையான விளக்கம் அய்யா, அனைத்து தமிழர்களுக்கும் கிடைத்த நல்ல வாய்ப்பு, பயன்படுத்தி கொள்ளுங்கள் .
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by mohu Wed Mar 27, 2013 9:14 am

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் , சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம் , இந்த வேறுபாடு எவ்வாறு வருகின்றது. இதை தெளிவுப்படுதவும் .
நன்றி .
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (55)

Post by Dr.S.Soundarapandian Fri Mar 29, 2013 2:50 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (55)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘அவருக்குத் தந்த விருது ’
‘அவருக்கு வந்த கடிதம்’
‘அவரிடம் ஒருவர் வந்தார் ’
‘ அவருக்கு அரசு உதவித் தொகை தந்தது ’
‘என்னிடம் புத்தகம் கொடுத்தான் ’
‘ உன்னிடம் பூமாலை கொடுத்தாள் ’
‘அவளிடம் ஒருவன் வந்தான் ’
‘உன்னிடம் வழக்கறிஞர் சென்றார் ’

-இந்தத் தொடர்களை இன்று எல்லோரும் வழக்கமாக எழுதுகிறோம் !

ஆனால் ,இந்தத் தொடர்கள் யாவுமே பிழையானவை !

நான் சொல்லவில்லை !

தொல்காப்பியர் கூறுகிறார் ! :-


I . “அவற்றுள்
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த ” (கிளவியாக்கம் 29)

II . “ ஏனை இரண்டும் ஏனை இடத்த ” (கிளவியாக்கம் 30)

இவற்றை விளக்குவோம் !

I . ‘தருசொல் ’ – ஒரு பொருளைத் தருதலைக் குறிக்கும் சொல் .

தந்தான் , தருகிறான் , தருவான் – இவை தருசொற்கள் !

‘வருசொல் ’ – ஒருவரோ ஒன்றோ வருவதைக் குறிக்கும் சொல் !

வந்தான் , வருகிறான் , வருவான் – இவை வருசொற்கள் !

தருசொல்லானாலும் , வருசொல்லானாலும் இவை இரண்டுமே தன்மை (First person)இடத்தும் ,முன்னிலை (Second person)இடத்தும் மட்டுமே வரவேண்டும் ; படர்க்கைக்குச் (Thirdperson)செல்லக் கூடாது !

இந்த விதியினைப் பயன்படுத்தி வருமாறு தொடர்களை எழுதவேண்டும் ! :-

1. ‘என்னிடம் விளக்கைக் கொடுத்தான்’ ×
‘என்னிடம் விளக்கைத் தந்தான் ’ √

2 . ‘என்னிடம் பேச வருவான் ’ √
‘என்னிடம் பேசச் செல்வான் ’ ×

3 . ‘ உங்களிடம் கேட்கப் போவான் ’ ×
‘ உங்களிடம் கேட்க வருவான் ’ √

4 . ‘ உன்னிடம் காசு கொடுப்பான் ’ ×
‘ உன்னிடம் காசு தருவான் ’ √

II . இரண்டாம் நூற்பாவில் , ‘ஏனை இரண்டும்’ என்று தொல்காப்பியர் குறித்தவை , ‘செலவு’ம் , ‘கொடை’யும் ஆகும் !

இதனைச் ,

“செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ விடத்தும் உரிய என்ப ” !

- என்ற நூற்பாவால் அறிகிறோம் !

1 . ‘செலவு’ - செல்லுதல் .
சென்றான் , செல்கிறான் , செல்வான் – என்பவை செலவைக் குறித்தவை !

2 . ‘கொடை ’ – கொடுத்தல் .
கொடுத்தான் , கொடுக்கிறான் , கொடுப்பான் – இவை கொடை குறித்தவை !

செல்லுதலையும் கொடுத்தலையும் படர்க்கை இடத்தில்தான் கூறவேண்டும் என்பது தொல்காப்பியர் விதி !

இவ் விதிப்படி , வருமாறு தொடர்கள் அமைய வேண்டும் ! :-

1. . ‘அவளிடம் ஒருவன் வந்தான் ’ ×
‘ அவளிடம் ஒருவன் சென்றான்’ √

2 . ‘அவனுக்குப் பாலைத் தந்தாள்’ ×
‘அவனுக்குப் பாலைக் கொடுத்தாள்’√

3 . ‘எனக்குப் பால் கொடுத்தாள்’ ×
‘எனக்குப் பல் தந்தாள்’ √

4 . ‘அவரிடம் அவள் சென்றாள்’ √
‘அவரிடம் அவள் வந்தாள்’ ×

மேலே கண்ட இரு விதிகளும் அற்புதமானவை ! தமிழின் சிறப்பைக் காட்ட வல்லவை ! நல்ல காரண காரியத் தொடர்பு (Logic) பெற்றவை !

ஆனால் தமிழறிஞர்கள் இந்தத் தெளிவைக் கைவிட்டுவிட்டார்கள் !

எப்போது கைவிடப்பட்டன ?

நன்னூலார் காலத்திற்கு (கி.பி. 1300) முன்பே , நாம் மேலே பார்த்த தொல்காப்பிய விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன !

இதற்குக் கீழ்வரும் நன்னூல் நூற்பா சான்று ! :-

“தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை” (நன்னூல் 381)

இனிமேலாவது மேலைத் தொல்காப்பிய விதிகளை நாம் பின்பற்றலாம் என்பதே எனது கருத்து !

தமிழ் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் இதனைச் செவிமடுக்க வேண்டும் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (56)

Post by Dr.S.Soundarapandian Sat Mar 30, 2013 2:34 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (56)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

வண்ணச் சினைச் சொல் ’ – என்பது , தொல்காப்பியர் காட்டும் ஒரு புதிய இலக்கணக் கலைச் சொல் ( Grammatical technical term) !

‘முரசுக் கால் யானை’ – இஃது ஒரு வண்ணச் சினைச் சொல் !

இதற்குத் தொல்காப்பிய நூற்பா ! :-

“அடைசினை முதலென முறைமூன்றும் மயங்காமை
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்” ! (கிளவியாக்கம் 26)

மேல் எடுத்துக் காட்டில் ‘

‘முரசு ’ – அடை (Adjective)
‘கால்’ – சினை (உறுப்பு)
‘யானை’ – முதல் (உறுப்பைக் கொண்டுள்ள உடல் ; முதன்மைச் சொல் ; Head word)

‘முரசுக் கால் ’ – இதுவே வண்ணச் சினைச் சொல் !

‘முரசு’ என்பதில் வண்ணம் எங்கே உள்ளது என்கிறீர்களா ?

‘வண்ணம் ’ எனத் தொல்காப்பியர் கூறியது நிறத்தை மட்டும் அல்ல !

வண்ணம் – குணம் ; பண்பு ; வகை

‘அவ் வண்ணமே கோரும் ’ ; ‘நல்ல வண்ணம் வாழலாம்’ ; ‘கை வண்ணம் அங்குக் கண்டேன்’ – ஆகிய தொடர்களில் ‘வண்ணம்’ என்பதற்கு இப் பொருள்கள் உள்ளதைக் காணலாம் !

நிறத்தைக் குறிக்கும் சொல்லும் அடையாக வரலாம் ; வேறு பண்புளைக் குறிக்கும் சொற்களும் அடையாக வரலாம் !

கருங் குருவி – நிறம் அடையாக வந்தது .
சிட்டுக் குருவி – சிறுமைப் பண்பு அடையாக வந்தது .

‘முரசுக் கால் யானை’யில் வந்துள்ளது போன்றே அடை , சினை , முதல் மூன்றும் இதே வரிசையில் வரவேண்டும் என்பதே தொல்காப்பியர் விதி !

இந்த முறையை ( Sequence ) மாற்றினால் அது பிழை ! :-

யானைக் கால் முரசு ×
கால் முரசு யானை ×
முரசு யானைக் கால் ×

சங்கப் புலவர்களின் பெயர்களை ஆராய்ந்தால் , தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வண்ணச் சினைச் சொற்கள் தமிழில் நிரம்ப இருந்தமையை அறியலாம் ! :-

பெருந் தலைச் சாத்தனார்
தாமப் பல் கண்ணனார் (தாமப் பல் - ஒழுங்கான வரிசைப் பல்)
குண்டு கட் பாலியாதனார்
கடுந் தோட் கரவீரன்
நெடும் பல் இயத்தை
நெடுங் கழுத்துப் பரணர்
நரை முடி நெட்டையார்

- இப் புலவர்கள் பெயர்களில் வண்ணச் சினைச் சொல் பயின்றுள்ளமையைக் காணலாம் !

இன்றும் கிராமங்களில் கேலியாக ,

ஆந்தைக் கண் மீனா
திக்கு வாய் மணி
சட்டி மண்டை பாலு
கோணக் காலி ராமாயி

- என்றெல்லாம் வண்ணச் சினைச் சொற்களைப் பயன்படுத்தக் காணலாம் !

இதனால் தொல்காப்பியர் விதிகள் கற்பனை உலகுக்கானவை அல்ல ; உண்மைத் தமிழ் உலகுக்கே என்பதை உணரலாம் !

மேலே நாம் கண்ட புலவர் பெயர்களின் ஈற்றில் , ‘ஆர்’ விகுதி வந்துள்ளதல்லவா ? இதனை மரியாதைப் பன்மை விகுதி அல்லது மதிப்புப் பன்மை விகுதி (Honorific suffix) என்பர் !

இத்தகைய மதிப்புப் பன்மை வரலாமே அல்லாமல் , பன்மைப் பொருள்பட ஒருமைப் பெயரை எழுதக் கூடாது ! :-

நக்கீரர் படைத்தார் √
நக்கீரர் படைத்தனர் ×
நக்கீரர் படைத்தார்கள் ×

ஔவையார் படினார் √
ஔவையார் பாடினார்கள் ×
ஔவையார் பாடினர் ×


குதிரை ஓடிற்று √
குதிரை ஓடின ×
குதிரையார் ஓடினார் √

குருவி பறந்தது √
குருவி பறந்தன ×
குருவியார் பறந்தார் ×

இதற்குத் தொல்காப்பியர் விதி ! :-

“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கினாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கின் சொல்லா றல்ல” ! (கிளவியாக்கம் 27)

இதில் , “உயர்வுக்காக ,வழக்கில் , ஒருமையைப் பன்மையாகப் பேசுகிறார்கள் ; நான் அறிவேன் ! ஆனால் , இஃது இலக்கணப்படி தவறு !” என்ற தொல்காப்பியர் குரல் ஒலிக்கிறதல்லவா ?

அதை நாம் காது கொடுத்துக் கேட்டால் என்ன ?

=============


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (54)

Post by Dr.S.Soundarapandian Sat Mar 30, 2013 2:57 pm

மோகு அவர்களுக்கு நன்றி ! நல்ல கேள்வி !
இரும்பு , இருப்பு என்றும் கரும்பு, கருப்பு என்றும் விகாரப்பட்டு வருவது போலவே, முதலில் சிலம்பு, சிலப்பு என விகாரப்பட்டு நிற்கிறது ! அதன் பின் , சிலப்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் ஆகிறது ! இங்கே விதி- “ உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் “ என்பதாகும் .
சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம் என்பதில் , சிலம்பு எந்த விகாரமும் அடையாமல் அப்படியே நிற்கிறது ; அதன் பின் மேலை இலக்கண விதிப்படிச் சிலம்பாட்டம் ஆகிறது !
நாமிருவரும் சிறிது நேரம் தமிழ்ச் சிலம்பாட்டம் ஆடியதில் மகிழ்ச்சிதானே ?
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by mohu Sat Mar 30, 2013 7:57 pm

மிக்க நன்றி அய்யா.
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (57)

Post by Dr.S.Soundarapandian Sun Mar 31, 2013 7:34 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (57)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘ன் ’ஐ ஈற்றெழுத்தாகக் கொள்ளும் சொல் ‘னகர ஈற்றுச் சொல் ’எனப்படும் .

னகர ஈற்றுச் சொற்கள் பிற சொற்களுடன் எப்படிச் சேரும் (புணரும்) என்பதற்கு மட்டும் தொல்காப்பியர் 25 நூற்பாக்களைச் செலவிட்டுள்ளார் !

I

“னகார இறுதி வல்லெழுத்து இயையின்
றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே” ! (புள்ளி மயங்கியல் 37)

அஃதாவது , வேற்றுமைப் புணர்ச்சிகளில் , ‘ன்’ஈறு , ‘ற்’ ஆகும் ! :-
தன் + குறிப்பு = தற்குறிப்பு √
தன் + குறிப்பு = தன்குறிப்பு ×

பொன் + குடம் = பொற்குடம் √
பொன் + குடம் = பொன்குடம் ×

இந்த வகைப் புணர்ச்சிகளுக்கு , மேல் நூற்பாவில் இரு நிபந்தனைகளைப் போட்டுள்ளதைக் கவனியுங்கள் !


ஒன்று – வல்லெழுத்து வருமொழி முதலில் வரவேண்டும் !
மற்றொன்று – வேற்றுமைப் புணர்ச்சியாக இருக்கவேண்டும் !


II

அடுத்துத் தொல்காப்பியர் , மன், சின் , ஆன், ஈன், பின் , முன், வினை , எச்சச் சொல் ஆகியன எப்படிப் புணரும் என்று ஓதுகிறார் !:-

“மன்னும் சின்னும் ஆனும் ஈனும்
பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்” ! (புள்ளி மயங்கியல் 38)

அஃதாவது , ‘மன்’ முதலியன , முன் நூற்பாவில் கூறியபடி , றகரமாகும் !

இங்கும் முன் நூற்பாவில் கூறிய அந்த இரு நிபந்தனைகளை மறவாதீர் !:-

அது மன் + கொண்கன் = அதுமற் கொண்கன் √
பூண்டிசின் + கடையும் = பூண்டிசிற் கடையும் √
ஆன் + கொண்டான் = ஆற் கொண்டான் √
ஈன் + கொண்டான் = ஈற் கொண்டான் √
பின் + செல் = பிற் செல் √
பின் + செல் = பிற் செல் √
முன் + காணும் = முற் காணும் √
வரின் + கொடுப்பார் = வரிற் கொடுப்பார் √

‘மன்’, ‘சின்’ ஆகிய அசைச் சொற்களுக்கும் , ‘ஆன்’ , ‘ஈன்’ ஆகிய இடைச் சொற்களுக்கும் , எடுத்துக் காட்டுகள் இளம்பூரணர் தந்தவாறு மேலே தரப்பட்டுள்ளன .

III

‘வயின்’ எனும் னகர ஈற்று, இடப்பொருள் உணர்த்தும் ஏழாம் வேற்றுமை உருபானது அகரச் சுட்டோடும் , எகர வினாப் பெயரோடும் வரும்போது , புணரும் ஆற்றை வருமாறு கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

“சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும்
அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப” (புள்ளி மயங்கியல் 39)

இதன்படி ,

அவ் வயின் + கொண்டான் = அவ்வயிற் கொண்டான்
இவ் வயின் + கொண்டான் = இவ்வயிற் கொண்டான்
எவ்வயின் + கொண்டான் = எவ்வயிற் கொண்டான்

என வரும் !

இங்கும் முன் பார்த்த அந்த இரு நிபந்தனைகளை மறக்கக் கூடாது !

IV

ஆனால் , ‘குயின்’ எனும் சொல்லுக்கு விதி விலக்கு உண்டு என்கிறார் தொல்காப்பியர் ! :-

“குயினென் கிளவி இயற்கை ஆகும்” (புள்ளி மயங்கியல் 40)
குயின் + செலவு = குயின் செலவு √
குயின் + செலவு = குயிற் செலவு ×

‘குயிற் செலவு’ என ஏன் வராது எனில் , ‘குயில் + செலவு’ என்று பிரிக்க நேரிட்டுப் பொருள் குழப்பம் நேரிடும் ! பொருள் குழப்பத்தைத் தவிர்ப்பதே இலக்கணத்தின் தலையாய நோக்கம் !

(குயின் - மேகம்)

இங்கும் அவ்விரு நிபந்தனைகளும் உண்டு !

V
இன்னொரு விதி விலக்கு !

‘எகின்’ என்ற னகர ஈற்றுச் சொல் , ‘அம்’ சாரியை பெற்றுப் புணருமே அல்லாது , றகரமாகத் திரியாது !

எகின் + கோடு = எகிற் கோடு ×
எகின் + கோடு = எகினம் கோடு √
எகின் + பட்டை = எகிற் பட்டை ×
எகின் +பட்டை = எகினம் பட்டை √


(எகின் என்பது ஒரு மரமாகும்)

இங்கும் அந்த இரு நிபந்தனைகள் வரும் !

VI
விதி விலக்கிற்கு , விலக்கு !

மரத்தைக் குறிக்காத ‘எகின்’ எனும் சொல் , அகரச் சாரியை பெற்றுப் புணரும் !:-
எகின் = கால் = எகினக் கால் √
எகின் + கால் = எகிற் கால் ×

இங்கும் அவ்விரு நிபந்தனைகள் உட்படும் !

இந்தச் சொல்லைப் பொறுத்தவரை , நிபந்தனைகளுக்குள்ளும் ஒரு விதி விலக்கைத் தருகிறார் இளம்பூரணர் !

எகின் + கால் = எகினங் கால் √
எகின் +யாப்பு = எகின யாப்பு √
(இங்கே ,எகின் – அன்னப் பறவை)

VII

னகர ஈற்றுச் சாதிப் பெயர்கள் இயல்பாய்ப் புணரும் !

எயின் + குடி = எயின் குடி √

(எயின் குடி – வேட்டுவக் குடி)

எயின் குடி – இருபெயரொட்டுப் பண்புத் தொகை ; அல்வழிப் புணர்ச்சி . (வேற்றுமைத் தொகை தவிர ,ஏனைய தொகைகள் யாவும் அல்வழிப் புணர்ச்சியே .)

VIII
‘மீன்’ எனும் , ‘ன்’ ஈற்றுச் சொல் எப்படிப் புணரும் ?
மீன் + கண் = மீன் கண் √
மீன் + கண் = மீற் கண் √

மீன் + தலை = மீன் தலை √
மீன் + தலை + மீற்றலை √

இங்கும் அவ்விரு நிபந்தனைகள் வரும் !

இப் புணர்ச்சிகளுக்கு விதி :-

“மீனென் கிளவி வல்லெழுத்து உறழ்வே” (புள்ளி மயங்கியல் 44)

IX

தேன் – இனிப்பானது ! ஆனால் இது புணரும் வகையோ மிகச் சுவையானது ! :-

தேன் + குடம் = தேன் குடம் √
தேன் + குடம் = தேக் குடம் √
தேன் குடம் = தேங்குடம் √
தேன் + பானை = தேன் பானை √
தேன் +பானை = தேப் பானை √
தேன் + பானை = தேம் பானை √
தேன் + நுனி = தேன் நுனி √
தேன் + நுனி = தே நுனி √
தேன் + இறால் = தேனிறால் √
தேன் + இறால் = தேத் திறால் √

இவற்றுக்கு விதிகள் !:-

“தேனென் கிளவி வல்லெழுத் தியையின்
மேனிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்
ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்தே
வல்லெழுத்து மிகினு மான மில்லை” (புள்ளி மயங்கியல் 45)

“மெல்லெழுத்து மிகினு மான மில்லை” (,, 46)

“மெல்லெழுத்து இயையின் இறுதியோடு உறழும்” (,, 47)

“இறால் தோற்றம் இயற்கை யாகும்” (,, 48)

“ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்தே” (’’ 49)

பழங் காலத்தில் தமிழர்கள் , 5000 ஆண்டுகளுக்கும் முன்பு ,பல மாவட்டங்களில் , தேன் எடுத்து வாழ்ந்தார்கள் ! இதனால் அவர்தம் வழக்காறுகளுக்கு (Dialects) ஏற்ப , மேற் கண்டவாறு , சொற்புணர்ச்சிகளில் வேறுபாடுகள் வந்ததில் வியப்பில்லை !

இலக்கணப் புலவர்களின் காவலையும் மீறி , மேற்கண்ட ‘தேன்’ புணர்ச்சி , எளிய மக்கள் வாயிலாக வந்துள்ளன!
தொல்காப்பியர் காலத்திற்கும்(கி.மு.1000) ,இளம்பூரணர் காலத்திற்கும் (கி.பி.1100) மிகுந்த இடைவெளி உள்ளது ! எனவேதான் ,இடைப்பட்ட தமிழ் வழர்ச்சி காரணமாக, இளம்பூரணர் முதலானோர் தம் உரைக்கண் பலவித விதிவிலக்குகளை ஏற்படுத்தி உரை கூறியுள்ளனர் என்பதை மேலை ஆய்வின் மூலம் உணர்கிறோம் !

===============


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (58)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 06, 2013 11:17 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (58)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
I
புணரியலின் முதல் நூற்பா :-

“மூன்றுதலை யிட்ட முப்பதிற்று எழுத்தின்
இரண்டுதலை யிட்ட முதலாகு இருபஃது
அறுநான்கு ஈற்றொடு நெறிநின்று இயலும்
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
மெய்யே உயிரென்று ஆயீ ரியல” ! (புணரியல் 1)

1 . மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்து – 3 +30 = 33

3 - யாவை ?

குற்றியலுகரம் , குற்றியலிகரம் , ஆய்தம் - 3

30 – யாவை ?

உயிர் எழுத்துகள் - 12
மெய் எழுத்துகள் - 18
-----
30
------

2 . இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது = 2+ 20 = 22

உயிர் எழுத்துகள் - 12
மெய் எழுத்துகள் - 10

-----
22
------

மெய் எழுத்துகள் 18 அல்லவா? இங்கே எப்படிப் 10 ?

எப்படி என்றால் , க் , ச் , த் , ந் , ப் , ம் , வ் , ய் , ஞ் , ங் = 10

இந்தப் பத்து மெய்களே உயிர்மெய் வடிவில் மொழிக்கு (சொல்லுக்கு) முதல் இடத்தில் வரும் ! ஏனைய வாரா !

அஃதாவது , இந்த 22 எழுத்துகளே மொழிக்கு முதலில் வரும் !

(3) அறுநான்கு ஈற்றொடு நெறிநின்று இயலும் = 6 × 4 = 24 எழுத்துகள்.

உயிர் - 12
மெய் - 11
குற்றியலுகரம் 1
------
24
------

மெய் 11க்குக் கணக்கு – ஞ் , ண், ந் , ம் , ன் , ய் , ர் , ல் ,வ் ,ழ் ,ள் .

இந்த 24 எழுத்துகளே சொல்லின் ஈற்றில் வரும் !

மேல் நூற்பாப்படி , நாம் கண்ட இந்தக் கணக்குப்படிதான் எந்தச் சொல்லுக்கும் முதலிலும் இறுதியிலும், எழுத்துகள் இடம்பெறும் !

பகடை - மொழி முதல் எழுத்து , ப் ; மொழி இறுதி எழுத்து , ஐ

மகிழ்வு – மொழி முதல் எழுத்து , ம் ; மொழி ஈற்று எழுத்து , உ (முற்றியலுகரம்)

மஞ்சு - மொழி முதல் எழுத்து , ம் ; மொழி இறுதி எழுத்து , உ (குற்றிய லுகரம்)

றிலங்கு × (மொழி முதலில் ‘ற் ’ வராது)

சரக் × (மொழி ஈற்றில் ‘ க் ’ வராது)

இவ்வாறே நாம் எல்லா எழுத்துகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம் !

புணரியலின் முதல் நூற்பா நாம் பார்த்தது !
இரு சொற்கள் புணருவதற்கு முன்பாக ஒவ்வொரு சொல்லின் முதலிலும் ஈற்றிலும் எந்த எழுத்துகள்தாம் வரும் என்ற வினாவிற்கு முதலில் விடை கூறியுள்ளார் தொல்காப்பியர் !
என்னே படிப்பியலின் ஓர் ஒழுங்குமுறை (Systematic study) !
II
அடுத்து ,
“அவற்றுள்
மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் ” (புணரியல் 2)
என்றார் !

‘மெய்’ என்றாலே புள்ளி உள்ள எழுத்துதானே ? அதற்கு ஏன் நூற்பா ?

- நல்ல கேள்வி !

கரம் – இங்கு மொழி முதலில் ‘க்’ வந்துள்ளது ; ஆனால் புள்ளி பெறவில்லை !
ம் - இங்கு மொழி ஈற்றில் ‘ம்’ வந்துளது ; ஆனால் புள்ளி பெற்றுளது !

எனவேதான் , மொழி ஈற்றிலே மெய் வந்தால் மட்டும் அவை புள்ளியோடு காணப்படும் என்றார் தொல்காப்பியர் !

III
பின்பு ,
“குற்றிய லுகரமும் அற்றென மொழிப” (புணரியல் 3)
என்றார் அவர் !

அஃதாவது , மொழி இறுதிக்கண் நிற்கும் குற்றியலுகரமும் , மெய்யெழுத்தைப் போலவே , புள்ளி பெறும் !

ஆம்! தொல்காப்பியர் காலத்திற்கும் முன்பு ‘வரகு’ என்று எழுதினால் , ஈறு குற்றியலுகரமாக இருப்பதால் , அதன் மீது ஒரு புள்ளி (Dot) இட்டுள்ளனர் ! தொல்காப்பியர் காலத்திலேயே அப் பழக்கம் மறைந்துவிட்டது ! ; அதனால்தான் , ‘அற்றென மொழிப ’ என்றார் !

இதற்குச் சான்று யாதெனில் , மலையாளத்தில் அண்மைக் காலம் வரையில் குற்றியலுகரத்தின் மீது ஒரு பிறைக்குறி இடுவது வழக்கமாக இருந்ததே !

மேலும் , குற்றியலுகர ஈற்றெழுத்து , தான் ஏறிய மெய்யின் தன்மைப்படிதான் சொற் புணர்ச்சிகள் நிகழும் !

பஞ்சு + இடு = பஞ்சிடு

இங்கே குற்றியலுகர ஈறான உகரம் மறைந்து , தான் ஏறிய ‘ச்’ஐக் கொண்டுதான் புணர்ச்சியில் ஈடுபட்டு, ச் + இ = சி ஆகியுள்ளது !

இதனைத்தான் நன்னூல் , “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” என்றது !

IV
சொல்லின் ஈற்றில் உயிர்மெய் வந்தால் அதைப் புணர்ச்சிகளில் எப்படிக் கணக்கிடுவது ?

இதற்கு ,
“உயிர்மெய் ஈறும் உயிரீற்று இயற்றே” (புணரியல் 4)
என்று விதி கூறுகிறார் !

அஃதாவது , ‘உயிர்மெய்’ சொல்லின் ஈறானால் , அது உயிர்போல நின்றுதான் புணரும் !

‘சில’ - இதன் ஈற்றில் உயிர்மெய் எழுத்து வரினும் , புணர்ச்சிகளில் ‘அ’ எனும் உயிர்தான் ஈடுபடும் !

சில + ஆனது = சிலவானது

இங்கு , ‘ல’விலுள்ள ‘அ’தான் வருமொழியோடு புணர்ந்து , வகர உடம்படு மெய்யை ஏற்படுத்திச் ‘சிலவானது’ என்று ஆகியுள்ளது !

V

தமிழ்ப் புணர்ச்சி நுட்பங்கள் நம்மை அயர வைப்பன !

ஏன் இத்தனை நுட்பங்கள் ?

காரணம் உள்ளது !

தமிழ்த் தொடர்கள் தொடர்ந்து செல்லக்கூடியவை !

ஓலை எழுத்துகளை நீங்கள் பார்த்தால் இந்த உண்மை விளங்கும் !

ஓலைகளில் ஓரிடத்தில் எழுத ஆரம்பித்தால் , கடைசிவரை எழுதிக்கொண்டே போவார்கள் ! எங்கே சொற்களைப் பிரித்துப் படிக்கவேண்டும் என்பது ஓலை படிக்கத் தெரிந்தவர்களுக்கே தெரியும் ! 34 ஆண்டுகளாகஓலைச் சுவடி ஆய்வில் ஈடுபட்டுவருபவன் என்ற முறையில் இதனை என்னால் கூறமுடியும் !

நம் பேச்சை உற்றுக் கேளுங்கள் !

‘பொருள்களெல்லாவற்றிற்கும்’
‘ஆயிரத்துத்தொண்ணூற்றைந்து’
‘தொட்டதற்கெல்லாமா?’
‘நீக்குப்போக்குடன்கூடிய’
‘நெளிவுசுளிவுள்ளவன்’
‘பாழுங்கிணற்றில்’

- என்று சொற்கள் சேர்ந்து சேர்ந்து வரும் ! மொழி இயல்பு (Nature of language) இது !

எனவேதான் புணர்ச்சிக்குத் (Coalescence of words) தமிழில் சிறப்பிடம் !

==============
[b]


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (59)

Post by Dr.S.Soundarapandian Sat Apr 06, 2013 1:28 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (59)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

சொற்கள் ஒன்றோடொன்று புணரும்போது என்ன வகைகளில் (Types) புணருகின்றன என வரையறுத்துள்ளார் தொல்காப்பியர்! :-

1 . உயிரில் முடியும் சொல் + உயிரில் தொடங்கும் சொல்
(உயிர் + உயிர்)

2 . உயிரில் முடியும் சொல் + மெய்யில் தொடங்கும் சொல்
(உயிர் + மெய்)

3 . மெய்யில் முடியும் சொல் + உயிரில் தொடங்கும் சொல்
(மெய் + உயிர்)

4 . மெய்யில் முடியும் சொல் + மெய்யில் தொடங்கும் சொல்
(மெய் + மெய்)

தமிழில் நாம் ஒரு சொல்லை எடுத்து
எந்தச் சொல்லோடு பொருதினாலும் இந்த நான்கு வகைகளில்தான் அடங்கும் !

இதுதான் பழந்தமிழ்க் கல்விமுறை (Ancient Tamil education)யின் தனிச் சிறப்பு !

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழர்கள் பெற்ற அறிவு நுட்பங்களை வகுத்துச் சுருக்கி , அடுத்த தலைமுறைகளைப் பற்றிக் கவலைப்பட்டு , நம் முன்னோர்கள் எப்படிக் கல்வி இயலை (Educational system) வகுத்துள்ளனர் பாருங்கள்!

இஃது உலகுக்கே தமிழர்கள் அளித்த நன்கொடை (Contribution of Tamils to world community) !

மேலே நாம் பார்த்த ஆய்வுக்கு அடிப்படை தந்த நூற்பா ! :-

“உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்
உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியுமென்று
இவ்வென அறியக் கிளக்குங் காலை
நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்று
ஆயீ ரியல புணர்நிலைச் சுட்டே” (புணரியல் 5)

இன்று நாம் ‘நிலைமொழி ’ , ‘வருமொழி’ என்று கூறுவதைத் தொல்காப்பியர் , ‘நிறுத்த சொல்’ , ‘குறித்துவரு கிளவி’ என்று பேசியுள்ளதை நோக்கலாம் !

தொல்காப்பியர் விதி கூறிய நூற்பாவிலிருந்தே அவர் கருத்தை நாம் சரிபார்க்கலாம் ! :-

உயிர் + இறு = உயிரிறு
(மெய் + உயிர்)

சொல் + முன் = சொல்முன்
(மெய் + மெய்)

அறிய + கிளக்கும் = அறியக் கிளக்கும்
(உயிர் + மெய்)

கிளவி + என்று = கிளவியென்று
(உயிர் + உயிர்)

நான்கு வகைகள் சரியாயிற்றா ?
=========


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by mohu Sat Apr 06, 2013 5:17 pm

அருமை சூப்பருங்க
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 9 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 84 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 46 ... 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum