புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
87 Posts - 42%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
3 Posts - 1%
கண்ணன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
1 Post - 0%
மொஹமட்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
87 Posts - 42%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
3 Posts - 1%
கண்ணன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
1 Post - 0%
மொஹமட்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 78 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 78 of 84 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 07, 2021 11:00 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (519)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விரவுப் பெயர்களில் அடுத்ததாகத் ‘தாம்’ என்னும் பெயர் !:

தாமென் கிளவி பன்மைக் குரித்தே  (பெயரியல் 30)

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் –
1 . தாம் வந்தார்  (உயர்திணைப் பன்மை)
2 . தாம் வந்தன  (அஃறிணைப் பன்மை)

கீழ் வரும் எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம்:
1 .  ‘ஐவர் பேசினார்கள் ; தாம் பேசியதே சரி என்றும் வாதிட்டனர்’. இத் தொடரில் வந்துள்ள ‘தாம்’ உயர்திணைப் பன்மையைக் குறித்தல் காண்க.
2  ‘இரு மாடுகள் மேய்ந்தன; தாம் மேய்ந்த இடம் சரியில்லை என்று வேறு இடம் சென்றன’. இத் தொடரில் வந்துள்ள ‘தாம்’ அஃறிணைப் பன்மையைக் குறித்தல் காண்க.

மேல் இரு எடுத்துக்காட்டுகளில், ‘தாம்’ என்ற பெயர்ச்சொல், உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்த வருவதால் , ‘தாம்’என்பதை விரவுப்பெயர் என்கிறோம்!

இதைப் போன்றே ‘தான்’ ! :
தானென் கிளவி ஒருமைக் குரித்தே  (பெயரியல் 31)

சேனவரையரின் எடுத்துக்காட்டுகள் –
1 . தான் வந்தான்  (உயர்திணை ஒருமை)
2 . தான் வந்தது  (அஃறிணை ஒருமை)

கீழ் வரும் எடுத்துக்காட்டுகளை நாம் காட்டலாம்:
1 .  ‘ஒரு மணி நேரம் பேசினான் ; தான் பேசியதே சரி என்றும் வாதிட்டான்’. இத் தொடரில் வந்துள்ள ‘தான்’ உயர்திணை ஒருமையைக் குறித்தல் காண்க.
2  ‘ஒரு மாடு மேய்ந்தது; தான் மேய்ந்த இடம் சரியில்லை என்று வேறு இடம் சென்றது’. இத் தொடரில் வந்துள்ள ‘தான்’ அஃறிணை ஒருமையைக் குறித்தல் தெளிவு.

மேல் இரு எடுத்துக்காட்டுகளில், ‘தான்’ என்ற பெயர்ச்சொல், உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்த வருவதால் , ‘தான்’என்பதை விரவுப்பெயர் என்கிறோம்!
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 08, 2021 9:05 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (520)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விரவுப் பெயர்களில் அடுத்தது , ‘எல்லாம்’!:

எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே (பெயரியல் 32)

அஃதாவது, ‘எல்லாம்’ எனும் விரவுப் பெயரானது உயர்திணை , அஃறிணை ஆகிய இரு திணைகளிலும் பன்மை சுட்டி வரும்.

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள்-
1 . எல்லாம் வந்தேம்
2 . எல்லாம் வந்தீர்
3 . எல்லாம் வந்தார்
4 . எல்லாம் வந்தன

எல்லாம் வந்தேம் – நாங்கள் எல்லோரும் வந்தோம்; ‘எல்லாம்’ , உயர்திணையில் தன்மைப் பன்மையில் வந்துள்ளது.
எல்லாம் வந்தீர் – நீங்கள் எல்லோரும் வந்தீர்கள்; ‘எல்லாம்’ , உயர்திணையில் முன்னிலைப் பன்மையில் வந்துள்ளது.
எல்லாம் வந்தார் - அவர்கள் எல்லோரும் வந்தனர்; ‘எல்லாம்’ , உயர்திணையிற் படர்க்கைப் பன்மையில் வந்துள்ளது.
எல்லாம் வந்தன – அவை எல்லாம் வந்தன ; ‘எல்லாம்’ , அஃறிணையிற் படர்க்கைப் பன்மையில் வந்துள்ளது.
இவ்வாறு உயர்திணைக்கும் அஃறிணைக்குமாக வந்ததால், ‘எல்லாம்’ , விரவுப் பெயர்.

எல்லாம் முடிந்துவிடவில்லை!
‘எல்லாம்’ என்பது பற்றி அடுத்த நூற்பா!:

தன்னு ளுறுத்த பன்மைக் கல்லது
உயர்திணை மருங்கின் ஆக்க மில்லை (பெயரியல் 33)

மேலை எடுத்துக்காட்டுகளில் , ‘எல்லாம் வந்தேம்’, ‘எல்லாம் வந்தீர்’, ‘எல்லாம் வந்தார்’ என்ற மூன்று உயர்திணை எடுத்துக்காட்டுகளில், ‘எல்லாம் வந்தேம்’ என்ற தன்மைப் பன்மை ஆட்சியே சிறப்பானது; மற்றவை சிறப்பானவை அல்ல என்பது மேலை நூற்பாவின் கருத்து.
அஃதாவது, எங்கோ சில இலக்கிய வழக்குகளில் வரலாமே தவிரப் பேச்சு வழக்கில் ‘எல்லாம் வந்தீர்’, ‘எல்லாம் வந்தார்’ முன்னிலை மற்றும் படர்க்கை இடங்களிற் பயிலல் சிறப்பின்று எனக் கூறவந்தார் போலும்!
ஆக்கம் இல்லை – பெருக்கம் இல்லை ; பெரு வழக்காக வருதல் இல்லை; சிறுபான்மை வரலாம்.
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 08, 2021 4:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (521)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த விரவுப்பெயர்கள் – ‘நீயிர்’ , ‘நீ’ :

நீயிர் நீயென வரூஉங் கிளவி
பால்தெரி பிலவே யுடன்மொழிப் பொருள (பெயரியல் 34)

1 . ‘நீயிர் இங்கே அமரலாம்’ என்று ஆண்களைப் பார்த்தும் கூறலாம், பெண்களைப் பார்த்தும் கூறலாம் !
‘நீயிர் வந்தீர்’ என மாடுகளைப் பார்த்தும் கூறலாம் என்பது உரையாசிரியர்தம் கருத்தாக உள்ளது. ‘பால்’ என்று நூற்பாவில் இருந்தாலும் அது திணையையும் குறிக்கும் என்று விளக்கியவர் தெய்வச்சிலையார். ‘பால்’ என்பதற்குத் திணை என்றே பொருள் கொண்டவர் சேனாவரையர்.
உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்துவதால், ‘நீயிர்’ என்ற பெயர்ச்சொல், விரவுப் பெயர்ச்சொல்!
2 . ‘நீ பாடலாம்’ என்று ஆணைப் பார்த்தும் கூறலாம், பெண்ணைப் பார்த்தும் கூறலாம் !
‘நீ வந்தாய்’ என மாட்டைப் பார்த்தும் கூறலாம் என்பது உரையாசிரியர்தம் கருத்தாக உள்ளது.
உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்துவதால், ‘நீ’ என்ற பெயர்ச்சொல், விரவுப் பெயர்ச்சொல்!

தொடர்ந்து தொல்காப்பியர் , ‘ ‘நீ’ என்னும் இந்த விரவுத்திணைப் பெயர்ச்சொல், ஒருமையை மட்டுமே குறிக்கும்’ என்கிறார் :

அவற்றுள்
நீயென் கிளவி யொருமைக் குறித்தே (பெயரியல் 35)

‘நீ தூங்கு’ என ஆணைப் பார்த்தும் கூறலாம், பெண்ணைப் பார்த்தும் கூறலாம்.
‘நீ வந்தாய்’ என மாட்டைப் பார்த்தும் கூறலாம் என்பது சேனாவரையர் உள்ளிட்ட உரையாசிரியர்தம் கருத்தாக உள்ளது. இற்றை நாள் வழக்கில் இஃது இல்லை.

இதன்பின் தொல்காப்பியர் , ‘ ‘நீயிர்’ என்னும் விரவுத்திணைப் பெயர்ச்சொல், பன்மையை மட்டுமே குறிக்கும்’ என்கிறார் :

ஏனைக் கிளவி பன்மைக் குறித்தே (பெயரியல் 34)

நீயிர் வந்தாய் ×
நீயிர் வந்தீர் √

‘நீயிர் வந்தீர்’ என ஆண்களைப் பார்த்தும் கூறலாம், பெண்களைப் பார்த்தும் கூறலாம்.
‘நீயிர் வந்தீர்’ என மாடுகளைப் பார்த்தும் கூறலாம் என்பது உரையாசிரியர்தம் கருத்தாக உள்ளது; நம் வழக்கில் இப்போது இல்லை.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 09, 2021 9:32 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (522)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த விரவுப் பெயர் ‘ஒருவர்’ !:

ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை (பெயரியல் 37)

‘சேலை கட்டிய ஒருவர்’ என்றால், ‘ஒருவர்’ என்பது ஒரு பெண்ணைக் குறிக்கிறது. ‘வேட்டி கட்டிய ஒருவர்’ என்றால் , ‘ஒருவர்’ என்பது ஆணைக் குறிக்கிறது. இவ்வாறு ‘ஒருவர்’ என்பது ஆண்பால், பெண்பால் என்ற இரு பாற்களையும் குறிக்கிறது.
ஆனால் இதே ‘ஒருவர்’ என்பது அஃறிணைக்கும் பொருந்தி வருகிறது ; இதனால்தான் , இது விரவுப் பெயர்.
பேச்சு வழக்கில் , குரங்குகளைச் சுட்டி , ‘இப்போ பார்! இதில் ஒருவர் மாமரத்திலிருந்து வேப்ப மரம் தாவுவார் பார்! ’ என்று கூறுவது இன்றும் உண்டு!

இந்த ‘ஒருவர்’ என்ற விரவுப் பெயரானது, பன்மையைச் சுட்டும் இடமும் உண்டு !:

தன்மை சுட்டின் பன்மைக் கேற்கும் (பெயரியல் 38)

எதன் தன்மை?
‘ஒருவர்’ என்ற சொல்லின் தன்மை!

”ஒருவர் சொல்ற மாதிரி வச்சுக்காதே” – பேசுகிறோம் அல்லவா? இங்கே, ‘ஒருவர்’ என்றதும் ‘அவர் அலைபேசி எண்ணைக் கொடுங்கள்’ என்று கேட்காதீர்! ‘ஒருவர்’ , இங்கே , ‘பலர்’ என்ற பொருளில் வந்துள்ளதைக் கவனிக்க! இதைத்தான் தொல்காப்பியம் எழுதிற்று!

சற்று முன் ‘நீயிர்’ , ‘நீ’ ஆகிய விரவுப் பெயர்கள் பற்றிப் பார்த்தோமல்லவா?
அவைபற்றிய ஒரு நுணுக்கத்தைக் கூறாமல் விட மனதில்லை தொல்காப்பியருக்கு! அதுதான் வரைகிறார்!:

இன்ன பெயரே யிவையெனல் வேண்டின்
முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்த்தல் (பெயரியல் 39)

அஃதாவது, ‘நீயிர்’ , ‘நீ’ , ‘ஒருவர்’ என்ற விரவுப் பெயர்ச்சொற்களானவை தொடர்களிற் பயிலும்போது, ஆண்பாலா, பெண்பாலா,பலர்பாலா, ஒன்றன் பாலா, பலவின் பாலா என்று அவற்றை எப்படி அறிவது?
‘முன்னத்தால் அறிக’ என்கிறார் தொல்காப்பியர்!
முன்னம் – சொல்பவனின் குறிப்பு

சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம் :
1 . ‘நீ சடைப்பின்னிக் கொண்டது சரியில்லை’ என்றால், ‘நீ’ என்பது ஒரு பெண்ணைக் குறித்தல் காண்க!
2 . ‘நீ வைத்துள்ள மீசை நன்றாயில்லை’ என்றால், ‘நீ’ என்பது ஓர் ஆணைக் குறித்தல் காண்க.
3 . ‘நீ கடல்’ என்றால், ‘நீ’ என்பது அஃறிணை ஒன்றன் பாலாகிய கடலைக் குறிக்கிறது. ‘கடலே நீ ஓயாயோ?’ என்றெல்லாம் தொடர்கள் உள்ளன.
4 . ‘ஒருவர் மீசையை முறுக்குகிறார்’ என்றால், ‘ஒருவர்’ , ஆணைக் குறிக்கிறது.
5 . ‘ஒருவர் இரவிக்கையை அணிகிறார்’ என்றால், ‘ஒருவர்’ , பெண்ணைச் சுட்டுகிறது.
6 . ‘நீயிர் உணவுண்டு முடித்துவிட்டீரா?’ என்றால், ‘நீயிர்’ என்பது உயர்திணைப் பலர்பாலைக் குறிக்கிறது.
7 . ‘நீயிர் மேயப் புல் இங்கு இல்லை ’ என மாடுகளை விரட்டும் கிராமத்தார் மொழியில், ‘நீயிர்’ என்பது அஃறிணைப் பலவின் பாலைச் சுட்டுகிறது. ( ‘நீயிர்’ , பலவின்பாலில் வருவது நமக்குப் புதிதாக உள்ளது; ஆனால் உரையாசிரியர்களுக்குப் புதிதில்லை.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 10, 2021 2:18 pm

நன்றி நன்றி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 10, 2021 6:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (523)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘பெண்’ , ‘மகன்’ ஆகியன விரவுப் பெயர்கள் என்று முன்பே (பெயரியல் 25) பார்த்தோம்!
இவ் விரண்டு சொற்களையும் சேர்த்துப் ‘பெண்மகன்’ எனக் கூறும் ஒரு சொல்லும் உள்ளது!
இப் ‘பெண்மகன்’ , ஒரு தொடரில் பெண்ணைச் சுட்டும்போது, அத் தொடர் கொள்ளும் வினையானதும் பெண்ணுக்குரிய வினையாகவே இருக்கவேண்டும்!

பெண்மகன் வந்தான் ×
பெண்மகன் வந்தாள் √

‘பெண்மகன்’ , ஒரு குழப்பமான சொல்தான்!
‘பெண்’ணுக்குரிய வினையாம் ‘வந்தாள்’ பொருந்துமா? ‘மகன்’ என்பதற்குரிய ‘வந்தான்’ பொருந்துமா?
இதற்கு விடையாகவே வருகிறது நூற்பா!:

மகடூஉ மருங்கின் பால்திரி கிளவி
மகடூஉ வியற்கை தொழில்வயி னான (பெயரியல் 40)

மகடூஉ – பெண்
பால்திரி கிளவி – ‘பெண்மகன்’ என்பது போலப், பெண்பாற் சொல்லும் ஆண்பாற் சொல்லுமாகச் சேர்ந்துவரும் சொல்.
மகடூஉ இயற்கை – பெண்பாலுக்கு உரிய
தொழில்வயின் ஆன – வினை கொள்ளும் போது

அடுத்தாற் போல், ‘ஆன்’ , ‘ஆள்’, ‘ஆர்’ , ‘ஆய்’ ஆகிய ஈறுகளைக் கொண்ட விரவுப் பெயர்கள் , பாடலில் , ‘ஓன்’ , ‘ஓள்’ , ‘ஓர்’ , ‘ஓய்’ என மாறுவது உண்டு ; கவனித்துக் கொள்க என்பது போலக் கூறுகிறார் தொல்காப்பியர் :

ஆவோ வாகும் பெயருமா ருளவே
ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே (பெயரியல் 41)

குறுந்தொகை ஏழாம் பாடலில் வரும் சில சொற்களைச் சேனாவரையர் எடுத்துக்காட்டுகிறார்!அவற்றின் விளக்கம்:
1 . வில்லான் – வில்லோன் (ஆன் – ஓன் ஆகியுள்ளது)
2 . தொடியாள் – தொடியோள் (ஆள் – ஓள் ஆகியுள்ளது)
3 . நல்லார் – நல்லோர் (ஆர் – ஓர் ஆகியுள்ளது)
4 . முன்னியார் – முன்னியோர் (ஆர் – ஓர் ஆகியுள்ளது)

மேலைச் சொற்கள் நான்குமே உயர்திணைச் சொற்கள்.
அஃறிணைச் சொற்களுக்கு எந்த எடுத்துக்காட்டையும் எந்த உரையாசிரியரும் தரவில்லை!
தெய்வச்சிலையார் மட்டும் ,“ அஃறிணைப் பொருட்கண்ணும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க” என்று நம்மிடம் விட்டுவிடுகிறார்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 14, 2021 9:46 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (524)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெயரியலின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம்!
இரு நூற்பாக்களே காணப்பட வேண்டியவை!

திணை பற்றிய அவற்றில் முதலாவது:

இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுட் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா
நிலத்துவழி மருங்கின் தோன்ற லான (பெயரியல் 42)

நிலத்துவழி மருங்கின் தோன்றல் ஆன – அந்தந்த நிலத்திற்கு உரியவான,
செய்யுளுட் கிளக்கும் – பாடல்களிற் பயிலும்,
இறைச்சிப் பொருள்வயின் – கருப்பொருள்கள் சார்ந்து வரும் விரவுப் பெயர்கள்,
உயர்திணை சுட்டா – உயர்திணையாக வருதலில்லை.
கருப்பொருள் சார்ந்து வரும் ஒரு விரவுப் பெயரை எடுத்துக்கொள்வோமே!
முதுமகன் !
‘மகன்’ என்று முடிவதாலேயே , இச் சொல் உயர்திணையைக் குறிக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம்! ‘முதுமகன்’ என்றால் சனிக் கிரகத்தையும் குறிக்கும்! இங்கே இது அஃறிணையைக் குறிக்கிறது! உயர்திணையையும் அஃறிணையையும் குறிப்பதால் , ‘முதுமகன்’ , விரவுப் பெயராகிறது!

கருப்பொருள் சார்ந்து வரும் இன்னொரு விரவுப் பெயரை எடுத்துக்கொள்வோமே!
குமரி !
குமரிப் பெண்ணைக் குறிப்பதால் , இச் சொல் உயர்திணையைக் குறிக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம்! ‘குமரி’ என்றால் கற்றாழையையும் குறிக்கும்! இங்கே இது அஃறிணையைக் குறிக்கிறது! உயர்திணையையும் அஃறிணையையும் குறிப்பதால் , ‘குமரி’ , விரவுப் பெயராகிறது!

‘முதுமகன்’ , ‘குமரி’ ஆகியன விரவுப் பெயர்களாக இருப்பினும், பாட்டில் நிலம் தொடர்பாக இவை இடம்பெற்றால், மேற்கண்ட உயர்திணைப் பொருளில் வாரா! இதுதான் தொல்காப்பியம்!

‘காட்டுவழி போகும்போது, குமரி இருந்ததால், சற்று விலகிப் போனாள் ’ என்பது பாடற் பொருளானால், ‘குமரி’ என்பதற்குக் கற்றாழை என்ற பொருளையே கொள்க ! – இதுவே தொல்காப்பியர் ஆணை!

மொழிக் குழப்பம் எப்படியெல்லாம் ஏற்படும் எனச் சிந்தித்து அவற்றுக்கு விடை எழுதி வைத்த நூல்தான் தொல்காப்பியம்!

மேலைக் கருத்துடன் சேர்த்து இன்னொரு கருத்தையும் நவில்கிறார் தொல்காப்பியர்!:

திணையொடு பழகிய பெயரலங் கடையே (பெயரியல் 43)

‘நிலம் சார்ந்த கருப்பொருட் பெயர் விரவுப் பெயரானால் அஃறிணைப் பொருளையே கொள்க’ என்று சொன்னீர்களே, ‘அப்படியானால் , ‘காளை’ என்பதும் விரவுப் பெயர்தான்; இது காளைப் பருவத்து ஆணைக் குறிக்காதா?’ – ஒரு மாணவன் தொல்காப்பியரைக் கேட்டான்!
“நல்ல கேள்வி! திணைக்கே உரியனவாகச் சில பெயர்கள் , காளை , விடலை என்றெல்லாம் விரவுப் பெயர்கள் உள்ளன; இவை வரும்போது , நான் முன் சொன்ன ‘அஃறிணைப் பெயராக மட்டும் கொள்க’ என்ற விதி பொருந்தாது! ” என்று விலக்கை அளிக்கிறார்!

பாலை நிலத்துப் பாட்டாயின் , ‘காளை’ என்பதற்கு உயர்திணைப் பெயரையும் எடுத்துக் கொள்ளலாம்!
மருத நிலத்துப் பாடலாயின், ‘விடலை’ என்பதற்கு உயர்திணைப் பொருளையும் கொள்ளலாம்! ( விடலை – அஃறிணைப் பொருள் , இளநீர்; உயர்திணைப் பொருள், மருத நிலத் தலைவன்)

இத்துடன் ‘பெயரியல்’ முடிந்தது!

பெயரியலை எப்படித் தொல்காப்பியர் செதுக்கியுள்ளார் எனச் சற்றே பார்ப்போம்!:

1 . சொற்களின் இயல்பை விளக்க ஒதுக்கப்பட்ட நூற்பாக்கள் – 5 ( 1 – 5)
2 . பெயர்ச்சொல் என்றால் என்ன என்பதற்கான நூற்பாக்கள் - 2 (6 – 7)
3 . உயர்திணைப் பெயர்கள் பற்றிய நூற்பாக்கள் - 5 (8 – 12)
4 . அஃறிணைப் பெயர்கள் பற்றிய நூற்பாக்கள் - 5 (13 – 17)
5 . விரவுப் பெயர்களை விளக்கும் நூற்பாக்கள் - 26 (18 – 43)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 16, 2021 12:57 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (525)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெயரியலை அடுத்து நாம் பார்க்கப்போவது – வினையியல்!
சொல்லதிகாரத்தில் ஆறாவது இயல் இது.

இதில் முதல் நான்கு நூற்பாக்களில் , வினைச் சொல்லின் பொது இயல்புகளையும் வினையின் தன்மையையும் ஓதுகிறார் தொல்காப்பியர்!

முதலாவது நூற்பா:

வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும் (வினையியல் 1)

‘ஒரு வினைச்சொல் என்று எடுத்துக் கொண்டால் , அது வேற்றுமை உருபை ஏற்காது! ;அடுத்ததாகக், காலத்தை அது தெரிவிக்கும்!’ – இவ்வளவுதான் வினைச்சொல்!

சேனாவரையர் இரு காட்டுகளைத் தருகிறார்:
1 . உண்டான்
2 . கரியன்

உண்டான்:
1 . உண்டானால் ஆவது ஒன்றுமில்லை × (ஆல், உருபு சேர்வதால் பொருளில்லை);
2 . உண்டானுக்கு உணவு கொடு × ( ‘கு’ உருபு சேர்வதால் பொருளில்லை)
3 . அவன் உண்டான் – இதில் , ‘உண்டான்’ , தெளிவாக இறந்த காலம் காட்டுகிறது. ’உண்டான்’ , வினைமுற்று.

கரியன்:
1 . ‘கரியன் ’ என்ற சொல், இயற்பெயரானால் ‘கரியனைக் கூப்பிடுக’ என்பது சரி!
2 . ‘கரியன்’ , குறிப்பு வினையானால், ‘கரியனைக் கூப்பிடுக’ என்பது பிழை! ( ‘ஐ’ வேற்றுமை உருபை ஏற்காது)
3 . ‘கரியன்’ என்பது தெளிவான காலத்தைக் கூறவில்லை; ஆதலால், குறிப்பு வினைமுற்று.
‘உண்டான்’, ‘கரியன்’ என்பது போலத் ‘தின்றான்’ , ‘செய்யன்’ என்ற எடுத்துக்காட்டுகளை நச்சர் தருகிறார்.
தின்றான் – தெளிவான இறந்தகாலம் காட்டுவது; வேற்றுமை உருபை ஏற்காதது.
செய்யான் – தெளிவான காலத்தைத் தெரிவிக்கவில்லை ; வேற்றுமை உருபை ஏற்காதது.

ஆடினாள் , பாடினாள் , வெட்டுகிறாள், சமைக்கிறாள், போவாள் , வருவாள் – வினைமுற்றுகளே!
ஆடினாளுக்குக் கொடு × ( ‘கு’ உருபை ஏற்றதால் தவறு )
ஆடினாள் = தெளிவான இறந்த காலம் சுட்டுகிறது.

பாடினாளை அங்கீகரி × ( ‘ஐ’ உருபை ஏற்றதால் தவறு )
பாடினாள் = தெளிவான இறந்த காலம் சுட்டுகிறது.

வெட்டுகிறாளுக்குக் கொடு × ( ‘கு’ உருபை ஏற்றதால் தவறு )
வெட்டுகிறாள் = தெளிவான நிகழ்காலம் சுட்டுகிறது.

சமைக்கிறாளைத் தடு × ( ‘ஐ’ உருபை ஏற்றதால் தவறு )
சமைக்கிறாள் = தெளிவான நிகழ் காலம் தெரிவிக்கிறது.

போவாளொடு போ × ( ‘ஒடு’ உருபை ஏற்றதால் தவறு )
போவாள் = தெளிவான எதிர்காலம் தெரிவிக்கிறது.

பொன்னன் – இஃது இயற்பெயரானல் , இது குறிப்புவினை ஆகாது; ‘பொன்னை உடையவன்’ என்ற கருத்தில் வரின், இது குறிப்பு வினைமுற்றே!
இக் குறிப்புவினை எவ்வாறு குறிப்பால் காலத்தைக் காட்டுகிறது?
பொன்னன் – ‘முன்பு பொன்னை உடையவனாக இருந்தான்’ என்பது கூறுவான் குறிப்பானால் , இது குறிப்பால் இறந்த காலம் காட்டுவது!
‘இப்போது பொன்னை உடையவனாக இருகிறான்’ என்பது கூறுவான் குறிப்பானால் , இது குறிப்பால் நிகழ்காலம் காட்டுவது!’
‘இனிமேல் பொன்னை உடையவனாக இருப்பான்’ என்பது கூறுவான் குறிப்பானால் , இது குறிப்பால் எதிர்காலம் காட்டுவது!’

மேல் நூற்பாவில் , ‘காலமொடு தோன்றும்’ என்றாரல்லவா? அதே கையோடு அடுத்த நூற்பாவில், ‘காலம்’ எத்தனை என்று தெரிவிக்கிறார்!:

காலந் தாமே மூன்றென மொழிப (வினையியல் 2)

‘காலம்’ மூன்று வகைப்படும் எனச் சொல்லுவார்கள் என்கிறார் தொல்காப்பியர்!

என்னென்ன மூன்று ?
இந்த நூற்பாவில் கூறவில்லையே!
அடுத்த நூற்பாவில் கூறுகிறாரா பார்ப்போம் !
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 16, 2021 8:33 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (526)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வினையியலின் மூன்றாவது நூற்பா!:

இறப்பி னிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும்
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே (வினையியல் 3)

பொருள்: இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்று சொல்லப்படும் மூன்று காலங்களும் குறிப்பு வினைகளுக்கும் பொருந்தும் , உண்மை நிலையுடைய வினைச்சொற்கள் தோன்றும் வழிக்கண் !

முதற்கண் , குறிப்பு வினைகளிற் (Appellative verbs) காலமானது வெளிப்படத் தெரியாது என்ற கருத்தை மேல் நூற்பாவிற் பெறுகிறோம்!

சேனாவரையர், வழக்கமான அவரது ‘உண்டான்’ எடுத்துக்காட்டையே வினைமுற்றுக்குத் தருகிறார்!:
உண்டான் ; உண்ணாநின்றான் ; உண்பான்
1 . உண்டான் – இறந்தகாலம்
2 . உண்ணாநின்றான் – நிகழ்காலம் (இந்நாள் நடையில் , ‘உண்கின்றான்’)
3 . உண்பான் - எதிர்காலம்

வினைக்குறிப்புக்கு , ‘கரியன்’ என்ற சொல்லைக் காட்டுகிறார் சேனாவரையர்.

மூன்று காலங்களும் குறிப்புவினைக்கு எப்படி வரும்? சேனாவரையர் உரைப்படி,
1 . பண்டு கரியன் – ‘கரியன்’ என்ற குறிப்புவினை, இறந்தகாலத்தில் பொருத்திப் பார்க்க இடம் தருகிறது!
2 . இதுபொழுது கரியன் – ‘கரியன்’ என்ற குறிப்புவினை, நிகழ்காலத்தில் பொருத்திப் பார்க்க இடம் தருகிறது! ( ‘இப்பொழுது’ என்பதற்குச் சேனாவரையர் ஆண்ட சொல் ‘இதுபொழுது’!)
3 . நாளைக் கரியன் ஆவான் – ‘கரியன்’ என்ற குறிப்புவினை, எதிர்காலத்தில் பொருத்திப் பார்க்க இடம்தருகிறது!

‘கூந்தலாள்’ என்ற குறிப்பு வினைமுற்றை எடுத்துக்கொள்வோம்!
1 . முன்பு கூந்தலாள் – ‘கூந்தலாள்’ எனும் குறிப்புவினை, இறந்தகாலத்தில் பொருத்திப் பார்க்க இடம் தருகிறது!
2 . இப்பொழுது கூந்தலாள் – ‘கூந்தலாள்’ என்ற குறிப்புவினை, நிகழ்காலத்தில் பொருத்திப் பார்க்க இடம் தருகிறது!
3 . நாளைக் கூந்தலாள் ஆவாள் – ‘கூந்தலாள்’ என்ற குறிப்புவினை, எதிர்காலத்தில் பொருத்திப் பார்க்க இடம்




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 19, 2021 12:00 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (527)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வினையியலில் அடுத்து, வினைச்சொற்களின் வகைகளைக் கூறுகிறார் தொல்காப்பியர்!:

குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே (வினையியல் 4)

என்ன சொல்கிறார்?

குறிப்பாகவோ வெளிப்படையாகவோ காலத்தைச் சுட்டி வரக்கூடிய வினையானது, (1) உயர்திணை வினை,(2) அஃறிணை வினை,(3) இரண்டு திணைக்கும் உரிய வினை என மூன்று வகைப்படும் என்கிறார்!

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம்!:
1 . உண்டான் – உயர்திணை வினை (இறந்தகாலம் காட்டியது)
2 . கரியன் – உயர்திணைக் குறிப்புவினை (தெளிவாகக் காலம் காட்டாதது)
3 .சென்றது – அஃறிணை வினை (இறந்தகாலம் காட்டியது)
4 . செய்யது – அஃறிணைக் குறிப்புவினை (தெளிவாகக் காலம் காட்டாதது) ( ‘சிவப்பானது’
என்பது பொருள்)
5 . வந்தனை – விரவு வினை (இறந்தகாலம் காட்டியது) ( ‘வந்தனை’ என்று ஒரு பெண்ணைப் பார்த்தும் கூறலாம், கன்றைப் பார்த்தும் கூறலாம்!)
6 . வெளியை – விரவுக் குறிப்புவினை (தெளிவாகக் காலம் காட்டாதது)
( ‘வெள்ளையாயுளாய்’ என்பது பொருள்) ( ‘வெளியை’ என்று ஒரு பெண்ணைப் பார்த்தும் கூறலாம், பசுவைப் பார்த்தும் கூறலாம்)
‘வந்தனை’ என்று கன்றைப் பார்த்துக் கூறல், ‘வெளியை’ என்று பசுவைப் பார்த்துக்கூறல் எல்லாம் நம் இற்றை நாள் உரைநடை வழக்கல்ல; செய்யுள் வழக்குப் போலும்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 78 of 84 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக