புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 76 of 84 •
Page 76 of 84 • 1 ... 39 ... 75, 76, 77 ... 80 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

தொடத் தொடத் தொல்காப்பியம் (502)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பெயரியலில் , தமிழ்ச் சொற்களின் இயல்புகளை முதல் ஐந்து நூற்பாக்களில் சொன்னபின், பெயர்ச்சொல்லின் இலக்கணத்தை இரு நூற்பாக்களில் (பெ.நூ. 6,7) ஓதுகிறார் தொல்காப்பியர்!:
அவற்றுள்
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும்
அம்மூ வுருபின தோன்றலாறே (பெயரியல் 6)
அவற்றுள் – பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நால்வகைச் சொற்களில் ,
பெயர் எனப் படுபவை தெரியுங் காலை – பெயர்ச்சொல்லை மட்டும் ஆராயுங்கால்,
உயர்திணைக்கு உரிமையும் – அவை, உயர்திணைக்கு உரியன எனவும்,
அஃறிணைக்கு உரிமையும் - அஃறிணைக்கு உரியன எனவும்,
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் – இவ்விரு திணைகளுக்கும் பொதுவானவை எனவும்,
அம்மூ வுருபின தோன்றல் ஆறே – மூன்று வடிவுகளைப் பெற்றுள்ளன.
ஆண், பெண், தாய், தந்தை - உயர்திணைப் பெயர்கள்
ஆடு, கோழி, புலி, நிலம் , நீர் - அஃறிணைப் பெயர்கள்
தாய் சிரித்தாள் – இதில் ‘தாய்’ உயர்திணைப் பெயர்
தாய் ஓடிற்று – இதில் ‘தாய்’ அஃறிணைப் பெயர்(தாயாக இருக்கும் விலங்கைக் குறித்தது)
இவ்வாறு , ஒரே சொல் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தி வந்தால் அச் சொல் ‘விரவுச் சொல்’ ! இங்கே ‘தாய்’ , விரவுப் பெயர்ச்சொல்.
பெயர்ச்சொல் இலக்கணமாகத் தொல்காப்பியர் அடுத்துப் பகர்வது:
இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர்வயி னான (பெயரியல் 7)
பெயர்வயின் ஆன - பெயர்ச் சொற்களுள்
உரியவை - பொருந்துவனவே
இருதிணைப் பிரிந்த – இரண்டு திணைகளாக உள்ள
ஐம்பாற் கிளவிக்கும் – ஐந்து பாற்களைச் சேர்ந்த சொற்களில்
உரிய – சேரும்!
கீழ்வரும் ஆதித்தர் பட்டியல் ஒரு தெளிவைத் தருகிறது:
“திணை பால்களை அறிவிப்பன விகுதிகள்.
அவன் – ன் – உயர்திணை ஆண்பால்
அவள் – ள் - உயர்திணைப் பெண்பால்
அவர் – ர் - உயர்திணைப் பலர்பால்
அது – து - அஃறிணை ஒன்றன்பால்
அவை – வை ¬– அஃறிணைப் பலர்பால் ”
சரி!
அப்படியானால், எல்லாப் பெயர்ச் சொற்களையுமே விகுதியை வைத்து, இவ்வாறு பட்டியல் போட்டுவிட முடியுமா? ஆண்பாற் பெயர்ச்சொல், ஒன்றன்பாற் பெயர்ச்சொல் என்றெல்லாம் திணை , பாற்களைப் பிரித்துவிட முடியுமா?
முடியாது என்கிறார் தொல்காப்பியர்!
இதைச் சொல்வதுதான் மேல் நூற்பா (பெ.7)!
சிவலிங்கனார் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் இதனை நாம் மேலும் காண்போம்.
‘அவன்’ என்ற உயர்திணை ஆண்பாற் பெயர்ச்சொல்லின் ஈறு ‘ன்’ என்பதை மேலே கண்டோம்; ஆனால் எல்லா ‘ன்’ ஈற்றுப் பெயர்ச் சொற்களுமே உயர்திணை ஆண்பாற் சொற்களல்ல! ‘குயின்’ , ‘அழன்’ போன்ற ‘ன்’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள், அஃறிணை ஒன்றன்பாற் பெயர்ச் சொற்களாகத்தானே இருக்கின்றன?
‘நங்கை’ என்பது ‘ஐ’ ஈறு பெற்ற உயர்திணைப் பெண்பாற் பெயர்ச்சொல். ஆனால் எல்லா ‘ஐ’ ஈற்றுப் பெயர்ச் சொற்களுமே உயர்திணைப் பெண்பாற் சொற்களல்ல! ‘விடலை’ என்பது ‘ஐ’ ஈறு பெற்றிருந்தாலும்,இஃது ஆண்பால் உயர்திணைப் பெயர்ச்சொல் அல்லவா?
எனவேதான் , சேனாவரையர் விளக்கியபடி, இன்ன பாற்கு உரித்தெனப் பெயர்ச் சொற்களை ஈற்றெழுத்தை வைத்துக் கூறிவிடமுடியாது!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (503)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது, தொல்காப்பியர் உயர்திணைப் பெயர்ச்சொற்களின் பட்டியலை வரிசையாக ஐந்து நூற்பாக்களில் ( 8 - 12) கூற உள்ளார்!
அவ்வழி
அவன்இவன் உவனென வரூஉம் பெயரும்
அவள்இவள் உவளென வரூஉம் பெயரும்
அவர்இவர் உவரென வரூஉம் பெயரும்
யான்யாம் நாமென வரூஉம் பெயரும்
யாவன் யாவள் யாவ ரென்னும்
ஆவயின் மூன்றோடு அப்பதி னைந்தும்
பாலறி வந்த உயர்திணைப் பெயரே (பெயரியல் 8)
உயர்திணை , அஃறிணை , விரவுத்திணை எனும் மூன்று திணைகளில் , உயர்திணையில் வரக்கூடிய பெயர்ச் சொற்கள் கீழ்வரும் பதினைந்து என்கிறது நூற்பா!:
1 . அவன்
2 . இவன்
3 . உவன்
4 . அவள்
5 . இவள்
6 . உவள்
7 . அவர்
8 . இவர்
9 . உவர்
10 . யான்
11 . யாம்
12 . நாம்
13 . யாவன்
14 . யாவள்
15 .யாவர்
முதலில் இந்தப் பதினைந்தும் பெயர்ச்சொற்கள் (Nouns) என்பதை அறிதல் வேண்டும்!
பிறகு, இவை யாவும் உயர்திணைச் சொற்களே(Nouns of high-class) என்பதையும் காணவேண்டும்!
இவற்றில், அவன், இவன் , உவன், யாவன் ஆகியன ஆண்பாற் சொற்கள்; அவள், இவள் , உவள், யாவள் ஆகியன பெண்பாற் சொற்கள்; அவர் , இவர் , உவர், யாவர் ஆகியன பலர்பாற் சொற்கள்.
எஞ்சியன – யான் , யாம் , நாம்.
இவை என்ன பால்?
சிவலிங்கனாரின் கருத்து விடை தருகிறது! :
“ஒருமை பன்மைகளை ஒருமைப்பால், பன்மைப்பால் என விளக்குவராதலின், இங்கு ஒருமைப்பால் என்ற கருத்தில் ‘யான்’ சேரும்; யாம் , நாம் என்பன பன்மைப்பால் எனப்படும்.”
இப்போது, தொல்காப்பியரின் பதினைந்து உயர்திணைப் பெயர்ச்சொற்களுக்கும் கணக்கு சரியாயிற்றா?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (504)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இன்ன பால் என்று தெரிவிக்கக்கூடிய உயர்திணைப் பெயர்ச்சொற்கள் 15ஐ முன் நுற்பாவில் (பெ.8) கண்டோம்!
தொடர்ந்து, தொல்காப்பியர் அடுத்த நூற்பாவில், பாலைத் தெரிவிக்கும் இன்னொரு 15 உயர்திணைப் பெயர்ச்சொற்களைப் பட்டியலிடுகிறார்!:
ஆண்மை யடுத்த மகனென் கிளவியும்
பெண்மை யடுத்த மகளென் கிளவியும்
பெண்மை யடுத்த இகர இறுதியும்
நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்
முறைமை சுட்டா மகனு மகளும்
மாந்தர் மக்க ளென்னும் பெயரும்
ஆடூஉ மகடூஉ ஆயிரு கிளவியும்
சுட்டுமுத லாகிய அன்னும் ஆனும்
அவைமுத லாகிய பெண்டென் கிளவியும்
ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ
அப்பதி னைந்தும் அவற்றோ ரன்ன (பெயரியல் 9)
இந் நூற்பாவில், தொல்காப்பியர் குறிக்கும் 15 பால் காட்டும் உயர்திணைப் பெயர்ச்சொற்களை வருமாறு எழுதலாம்!:
1 . ஆண்மகன் ( ‘ஆண்மை அடுத்த மகன் என் கிளவி’)
2 . பெண்மகள் ( ‘பெண்மை அடுத்த மகள் என் கிளவி’)
3 . பெண்டாட்டி ( ‘பெண்மை அடுத்த இகர இறுதி’)
4 . நம்பி ( ‘ ‘நம்’ ஊர்ந்து வரூஉம் இகரம்’)
5 . நங்கை ( ‘ ‘நம்’ ஊர்ந்து வரூஉம் ஐகாரம்’)
6 . மகன் ( ‘ முறைமை சுட்டா மகன்’)
7 . மகள் ( ‘ முறைமை சுட்டா மகள்’)
8 . மாந்தர்
9 . மக்கள்
10 . ஆடூஉ
11 . மகடூஉ
12 . அவ்வாளன் ; இவ்வாளன்; உவ்வாளன் (சுட்டு முதலாகிய ‘அன்’ ; அ,இ, உ எனும் மூன்று சுட்டுகளுக்கும் மூன்று எடுத்துக்காட்டுகளைக் காணக; இவற்றின் ஈறுகள் ‘அன்’னில் முடிவதை நோக்குக)
13 . அம்மாட்டான்; இம்மாட்டான்; உம்மாட்டான் (சுட்டு முதலாகிய ‘ஆன்’ ; அ,இ, உ எனும் மூன்று சுட்டுகளுக்கும் மூன்று எடுத்துக்காட்டுகளைக் காண்க; இவற்றின் ஈறுகள் ‘ஆன்’என்பதில் முடிவதை நோக்குக)
14 . அப்பெண்டு; இப்பெண்டு; உப்பெண்டு ( ‘அவை முதலாகிய பெண்டென் கிளவி’; ‘அவை’ – அ, இ, உ என்ற சுட்டெழுத்துகள் ; மூன்று எடுத்துக்காட்டுகளுமே ‘பெண்டு’ என்பதை ஈற்றில் கொண்டவை)
15 . பொன்னன்னான்; பொன்னன்னாள்; பொன்னன்னார் ( ‘ஒப்பொடு வரூஉம் கிளவி’; பொன்னன்னான்= பொன்+அன்னான்; பொன் போன்றவன்; ஆண்பால், பெண்பால் , பலர்பால் என்ற மூன்றுபாற்களுக்கும் மூன்று எடுத்துக்காட்டுகளும் பொருந்துவதை நோக்குக)
இப் பதினைந்தும், ஆண்பால் , பெண்பால், பலர்பால் என்ற மூன்றில் ஏதாவது ஒரு பாலை உணர்த்துவன.
ஆணிற் சிறந்தவனையே ‘ஆண்மகன்’ எனக் கூறுவது இன்றைய மரபு; ஆனால் தொல்காப்பியர் காலத்தில் பொதுவாக ‘மனிதன்’ (man) என்ற பொருளில் இப் பெயர்ச்சொல் ஆளப்பட்டுள்ளது!
‘அவ்வாளன்’ , ‘அம்மாட்டான்’ என்றெல்லாம் கூறும் மரபு இப்போது இல்லை! இவை தொல்காப்பியர் காலத்தவை!
தொல்காப்பியம் புலப்படுத்தும் மொழி இரகசியங்கள் இவை (Language secrets revealed in Tolkappiyam)!
‘முறைமை சுட்டா மகனும் மகளும்’ – பொதுப் பெயர்களான ‘மகன்’ , ‘மகள்’ என்பனவற்றை ‘யாருக்கு மகன்?’ , ‘யாருக்கு மகள்?’ என்று கேட்கக் கூடாது! ‘செல்வமகன்’ என்றால் செல்வத்துக்கு அவன் பிள்ளையா? முறைமை – உறவுமுறை.
மாந்தர் – ஆடவர் (male persons)
மக்கள் – மனித இனம் (human beings)
ஆடூஉ – ஆண்
மகடூஉ- பெண்

தொடத் தொடத் தொல்காப்பியம் (505)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பால் காட்டும் உயர்திணைப் பெயர்ச்சொற்களில் , தொல்காப்பியர் இப்போது மூன்றாவது பட்டியலை வெளியிடுகிறார்! :
எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை யடுத்த மகனென் கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர் (பெயரியல் 10)
இந் நூற்பாப்படி, கீழ் வருவன பால்காட்டும் உயர்திணைப் பெயர்ச்சொற்கள்:
1 . எல்லாரும் (உயர்திணைப் பலர்பால் காட்டியது)
2 . எல்லீரும் (உயர்திணைப் பலர்பால் காட்டியது)
3 . பெண்மகன் (உயர்திணைப் பெண்பால் காட்டியது)
‘எல்லாரும்’ என்பது , படர்க்கை இடத்தில் வந்துள்ளது; ‘எல்லீரும்’ என்பது முன்னிலை இடத்தில் பயின்றுள்ளது; ‘பெண்மகன்’ என்பது பால் திரிந்து வந்துள்ளது! இந்தக் காரணத்தால்தான் இவை தனிப்பட்டியலாகத் தரப்பட்டுள்ளது! இது சேனாவரையரின் உரை நுட்பம் ஆகும்! (Commentary nuance of Senavaraiyar).
‘பெண்மகன்’ என்ற பெயர்ச்சொல் குழப்பம் தருவது! ‘பெண்’ எனச் சொல்லிவிட்டு, ‘மகன்’ என்ற ஆண்பாற் சொல்லை எப்படி ஒட்டியுள்ளனர்?
‘பசங்கள் கால்சட்டை அணிகிறார்கள்’ – இதில், ‘பசங்கள்’ என்பது, ‘பையன்கள்’ என்பதன் திரிபாகும்! ‘பையன்கள்’ , ‘பசங்கள்’ இரண்டுமே ஆண்பாற் சொற்கள்தாம்; ஆனால், ‘ பொம்பளப் பசங்கள் நிறைய வேலைக்குப் போகிறார்கள்’என்ற தொடரும் நம்மிடம் உண்டல்லவா? இது விளங்கினால்தான் , ‘பெண்மகன்’ புதிரும் விளங்கும்!
சேனாவரையர் , ‘பெண்மகன்’ பற்றிச் சிந்தித்துள்ளார்! :
“புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் ‘பெண்மகன்’ என்று வழங்குப.”
பேதை – 1 முதல் 8 வயதுவரை உள்ள பெண்.
ஐந்து வயதுக்கு மேல் உள்ள வயதில்தான் பெண் குழந்தைகள் வீட்டுக்கு வெளியில் சென்று விளையாடுவார்கள்! இந்த வயதுக்காரர்களைத்தான் மாறோக்கத்தார் ‘இன்றும்’ ‘பெண்மகன்’ எனக் குறிப்பதாகச் சேனாவரையர் எழுதுகிறார்!
மாறோக்கத்தார் யார்?
தூத்துக்குடி மாவட்டத்துச் சிரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள கொற்கை என்ற ஊர்தான் ‘மாறோக்கம்’ !
‘மாறோக்கத்து நப்பசலையார்’ என்று ஒரு சங்கப் புலவர் உள்ளார்! அவரும் இந்த ஊர்க்காரர் ஆகலாம்!
‘இன்றும்’ எனச் சேனாவரையர் சொன்னது , கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் காலக் கட்டம் என்பதை அறிதல் வேண்டும்! ‘இப்போது கொற்கையில் யாரும் ‘பெண்மகன்’ என்று கூறுவதில்லையே? எனக் கேட்காதீர்கள்!

தொடத் தொடத் தொல்காப்பியம் (506)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பால் காட்டும் உயர்திணைப் பெயர்ச்சொற்களின் நான்காவது பட்டியலை வெளியிடுகிறார் தொல்காப்பியர்!:
நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றிவ ரென்னும் எண்ணியற் பெயரோடு
அன்றி யனைத்தும் அவற்றியல் பினவே (பெயரியல் 11)
இந் நூற்பாவில் கூறப்பட்டுள்ள பால்காட்டும் உயர்திணைப் பெயர்ச்சொற்களை, உரையாசிரியர்களை அடியொட்டி, வருமாறு குறிக்கலாம்!:
1 . நிலப்பெயர் – அருவாளன்; சோழியன்
2 . குடிப்பெயர் – மலையமான் ; சேரமான்
3 . குழுவின் பெயர் – அவையத்தார் ; அத்திகோசத்தார்
4 . வினைப்பெயர் – தச்சர் ; கொல்லர்
5 . உடைப்பெயர் – அம்பர் கிழான் ; சேர்ப்பன்
6 . பண்புகொள் பெயர் – கரியான் ; செய்யான்
7 . பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயர் – தந்தையர்; தாயர்
8 . பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயர் – பெருங்காலர்; பெருத்தோளர்
9 . பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயர் – வேட்டுவர் ; ஆயர்
10 . கூடிவரு வழகின் ஆடியற் பெயர் – பட்டி புத்திரர் ; கங்கை மாத்திரர்
11 . இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர் – ஒருவர்; மூவர்
எடுத்துக்காட்டுப் பெயர்ச்சொற்களுக்கு விளக்கம் தேவை!
கீழ் வருமாறு அவற்றைக் காணலாம்!:
1 . ‘அருவாளன்; சோழியன்’
அருவாளன் – அருவா நாட்டுக்காரன் , அருவாளன்
‘அருவா நாடு’ என்பது, பழைய தென்னார்க்காடு வட ஆர்க்காடு மாவட்டங்களும் செங்கற்பட்டு மாவட்டப் பகுதிகளும் ஆகும் .
சோழியன் - சோழநாட்டுக்காரன்
சோழியச் செட்டியார் – சோழநாட்டுச் செட்டியார்
குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்தோரை அந் நிலத்தைச் சுட்டிக் கூறும் மரபு தமிழ் மரபு!
இதுபோன்ற பல மரபுகளுக்குத் தமிழரே முன்னோடிகள் என்பதை நாம் உலகுக்குச் சொல்லத் தவறியுள்ளோம்!
விளைவு?
ஆங்கிலக் கலைக்களஞ்சியங்களில் , ‘அது முதலில் இத்தாலியில் தோன்றியது! இது முதலில் எகிப்தில் உண்டானது!’ என்றெல்லாம் தீட்டிவிடுகிறார்கள்! பிறகு நாமும் , ஆழ்ந்த ஆய்வு இல்லாததால், அவற்றையே நம் பிள்ளைகளுக்கும் போதிக்கிறோம்!
2 . ‘ மலையமான் ; சேரமான்’
’மலையமான்கள்’ என்றே தனிப் பரம்பரை உள்ளது; ‘மலையமான் திருமுடிக்காரி’ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்!
இதைப்போன்றே சேரர்களின் பரம்பரையில் வந்ததால் , அவன் ‘சேரமான்’; ‘சேரன்’ என்பதும் ‘சேரமான்’ என்பதும் இனப்பொருளில் ஒன்றே!
3 . ‘அவையத்தார் ; அத்திகோசத்தார்’
அவை – சபை
குறிப்பிட்ட சபையில் உறுப்பினர்களாக உள்ளோரே ‘அவையத்தார்’ !
‘அத்திகோசத்தார்’ – யானை மீது ஏற்றக்கூடிய அளவுக்குச் செல்வம் படைத்தோர் என்பது பொருள். சிவலிங்கனார் இதனை உரைக்கின்றார்.
அத்தி – யானை
4 . ‘தச்சர் ; கொல்லர்’
தச்சு வினை செய்வதால் அவர்கள் ‘தச்சர்கள்’!
கொல்லு வினை செய்வதால் அவர்கள் ‘கொல்லர்கள்’!
வினை – தொழில்
5 . ‘ அம்பர் கிழான் ; பேரூர் கிழான் ’
அம்பர் – திருவாரூர் மாவட்டத்தில் அரிசில் ஆற்றங் கரையில் அமைந்துள்ள ஓர் ஊர்.
அம்பர் எனும் ஊருக்கு உரிமை உடையவன் அம்பர் கிழான்.
சேர்ப்பன் – நெய்தல் நிலத்துத் தலைமகன்
கிழான் – உரிமை உடையவன்
6 . ‘கரியான் ; செய்யான்’
கரியான் – கருமை நிறம் கொண்டவன்
செய்யான் – சிவப்பு நிறம் கொண்டவன்
‘பண்பு’ , இங்கே நிறப் பண்பு.
7 . ‘தந்தையர்; தாயர்’
தந்தை – ஒருமை ; தந்தையர் – பன்மை
தாய் – ஒருமை ; தாயர் – பன்மை
முறை – உறவு முறை
8 . ‘பெருங்காலர்; பெருத்தோளர்’
கால் பெரிதாகக் கொண்டோன் – பெருங்காலன்
கால் பெரிதாகக் கொண்டோர் – பெருங்காலர்
தோள் பெரிதாகக் கொண்டோன் – பெருந்தோளன்
தோள் பெரிதாகக் கொண்டோர் – பெருந்தோளர்
சினை – இங்கே உடல் உறுப்பு
9 . ‘வேட்டுவர் ; ஆயர்’
சிறப்பாகக் குறிஞ்சி நிலத்திற்கே உரியவர் வேட்டுவர்; குறிஞ்சித் திணை இங்கே சுட்டப்படுதல் காண்க.
திணை – நிலம்
சிறப்பாக முல்லை நிலத்திற்கே உரியவர் ஆயர்; முல்லைத் திணை இங்கே சுட்டப்படுதல் காண்க.
10 . ‘பட்டி புத்திரர் ; கங்கை மாத்திரர்’
மு.சண்முகம் பிள்ளை இப் பெயர்ச்சொற்களை விளக்கியுள்ளார். அந்த அடிப்படையில் நாம் வருமாறு மேல் விளக்கம் தரலாம்!:
பட்டி – விக்கிரமாதித்தனுக்கு அமைச்சர் ; பட்டியின் மகன் – பட்டி புத்திரன்; இப் பெயர் பலரைக் குறிக்கும்போது – பட்டி புத்திரர்.
பட்டி , மதியூகம் உடையவர்; ஆதலால் , மதிநுட்பம் வாய்ந்த ஒரு தொகுப்பாரைப் (team) ‘பட்டிபுத்திரர்’ என்று இடுகுறியாகப் பெயரிட்டுளனர்! ‘இவர் அரிச்சந்திரன் வீட்டுப் பிள்ளை!’ என்று இன்றும் கேலியாகச் சொல்வதை நோக்குக.
கங்கை மாத்திரர் – கங்கை நீரை அளவிடும் அளவுக்கு ஆற்றல் உள்ளவர்கள் .
விளையாடும் இரு குழுவினர் , ஒரு குழுவுக்கு ஒரு பெயரை இட்டுக்கொள்ளும் மரபு பழந்தமிழ் மரபு!
அந்த மரபுதான் உலகம் முழுதும் பரவியது! அந்த மரபுதான் இன்றுவரை தொடர்கிறது! ஆனால் தமிழர்கள்தாம் இதனை இன்றுவரை அறியவில்லை!
கூடி விளையாடும் மாந்தர், தங்களுக்கென இட்டுக்கொள்ளும் பெயரே ‘ கூடிவரு வழகின் ஆடியற் பெயர் ’
ஆடு + இயல் = ஆடியல்
ஆடியல் + பெயர்= ஆடியற் பெயர்
11 . ‘ஒருவர்; மூவர்’
‘இத்தனைபேர்’ என்று சுட்டும் பெயர்ச்சொல்லே ‘இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர்’!
இன்றிவர் – இத்துணையர் (நச்சர் உரை)
‘நாயன்மார் அறுபத்து மூவர்’ என்றால் , இதில் ‘அறுபத்து மூவர்’ , பால்காட்டும் உயர்திணைப் பெயரே! என்ன பால்? பன்மைப்பால்! ( ‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த’ – பெயரியல் 12இல் இதற்கு விதி உள்ளது!)
சரி!
பால் காட்டும் உயர்திணைப் பெயர்ச்சொற்கள் என்று நான்கு பட்டியல்களைப் பார்த்துவிட்டோம்!
இவ்வளவுதானா ? இன்னும் இத்தகைய பெயர்ச்சொற்கள் இருக்கின்றனவா?
இப்படி வினா வரும் என்று தெரிந்துதான் தொல்காப்பியர் ‘புறனடை’யாக ஒரு நூற்பாவை எழுதி முடிக்கிறார்!:
அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே (பெயரியல் 12)
இதுவரை நாம் கண்ட இந்த நான்கு பட்டியற் பெயர்ச்சொற்களைப் போன்று , பன்மை, ஒருமை காட்டக்கூடிய எல்லா உயர்திணை சுட்டும் பெயர்களும் உயர்திணைப் பால் காட்டும் பெயர்ச்சொற்களே!
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் – ஏனாதி ; காவுதி ; எட்டி
ஏனாதி – சேனாதிபதி
காவுதி – உழவரிற் சிறந்தோன்
எட்டி – வணிகர் பெறும் பட்டம்
இவை தவிர,
1 . பிறன்
2 . பிறள்
3 . பிறர்
4 . மற்றையான்
5 . மற்றையாள்
6 . மற்றையார்
ஆகியனவும் பால் காட்டும் உயர்திணைப் பெயர்ச்சொற்களே என்கிறார் சேனாவரையர்!

தொடத் தொடத் தொல்காப்பியம் (507)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பெயரியலில் , உயர்திணைப் பெயர்ச்சொற்களை விவரித்த தொல்காப்பியர், அடுத்து அஃறிணைப் பெயர்ச்சொற்களை (non-class nouns) எடுத்துக்கொள்கிறார்!
உயர்திணைப் பெயர்ச்சொற்களுக்கு ஐந்து நூற்பாக்களை ஒதுக்கியது போன்றே, அஃறிணைப் பெயர்ச்சொற்களுக்கும் ஐந்து (நூ. 13 - 17) நூற்பாக்களை ஒதுக்குகிறார்! இதில்தான் தொல்காப்பிய அமைப்பழகு (Finesse of the Structure of Tholkappiyam) புலனாகிறது!
முதற்கண், 15 அஃறிணைப் பெயர்ச்சொற்களைப் பட்டியலிடுகிறார்!:
அதுஇது உதுவென வரூஉம் பெயரும்
அவைமுத லாகிய ஆய்தப் பெயரும்
அவைஇவை உவையென வரூஉம் பெயரும்
அவைமுத லாகிய வகரப் பெயரும்
யாதுயா யாவை என்னும் பெயரும்
ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
பாலறி வந்த அஃறிணைப் பெயரே (பெயரியல் 13)
மேலைப் பதினைந்து அஃறிணைப் பெயர்ச்சொற்கள் :-
1. அது
2. இது
3. உது
4. அஃது
5. இஃது
6. உஃது
7. அவை
8. இவை
9. உவை
10. அவ்
11. இவ்
12. உவ்
13. யாது
14. யா
15. யாவை
நச்சர் விளக்கத்தின்படி,
சுட்டுமுதற் பெயர்கள் - அது, இது, உது
ஆஃதத்தொடர்க் குற்றியலுகர ஈற்றுப் பெயர்கள் – அஃது, இஃது, உஃது (குற்றுகரம் ஏறிய
எழுத்திற்கு முன்பு ஆய்தம் இருப்பதைக் காண்க)
சுட்டுமுதற் பெயர்கள் – அவை, இவை, உவை
வகர ஈற்றுப் பெயர்கள் – அவ், இவ், உவ்
வினாப் பெயர்கள் – யாது, யா, யாவை
எனப் பிரிக்கலாம்!
மேல் நூற்பா ஈற்றடியான , ‘பாலறி வந்த அஃறிணைப் பெயரே’ என்பதற்கு நான் விளக்கம் கூறவேண்டும்!
கல்லாடனார் , ‘பால்’ என்ற சொல்லை ‘ஒருமை, பன்மைப் பால்’ என விளக்குகிறார்!
அதன்படி,
அது – ஒருமைப் பால்
அவை – பன்மைப் பால்
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (508)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பதினைந்து அஃறிணைப் பெயர்ச்சொற்களைப் பட்டியலாகத் தந்த தொல்காப்பியர், இப்போது இன்னொரு அஃறிணைப் பெயர்ச்சொற் பட்டியலையும் நீட்டுகிறர்! :-
பல்ல பலசில என்னும் பெயரும்
உள்ள வில்ல என்னும் பெயரும்
வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும்
இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்
ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட
அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன (பெயரியல் 14)
இதன்படிக், கீழ் ஒன்பதும் அஃறிணைப் பெயர்ச்சொற்கள்! :-
1.பல்ல
2. பல
3. சில
4. உள்ள
5. இல்ல
6. வினைப்பெயர்க் கிளவி
7. பண்புகொள் பெயர்
8. எண்ணுக்குறிப் பெயர்
9. ஒப்பினாகிய பெயர்நிலை
இவற்றில்,
‘வினைப்பெயர்க் கிளவி’ = வினையாலணையும் பெயர்.
இதற்கு, வருவது; செல்வது - என்ற இரு எடுத்துக்காட்டுகளைத் தந்தவர் சேனாவரையர்.
‘வருவது வரட்டும்’, ‘செல்வது செல்லட்டும்’, ‘வருவதைக் கட்டிவை’ , ‘செல்வதை விட்டுவிடு’– இவற்றில் ‘வருவது’, ‘செல்வது’ என்பன அஃறிணை வினையாலணையும் பெயர்ச்சொற்களாக நிற்கின்றன.
‘பண்புகொள் பெயர்’ - இதற்கு உரையாசிரியர்கள் , ‘கரியது’ , ‘செய்யது , ‘காரி’ , ‘வெள்ளை’ ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகத் தந்துளர். இந்த நான்கு சொற்களும் நிறப் பண்புகளைக்குறிக்கும் அஃறிணைப் பெயர்ச்சொற்கள்!
‘இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயர்’ - இதற்கு உரையாசிரியர்கள், இருவகை நுணுக்கங்களைக் காண்கின்றனர்!:
1. எண்ணப்பட்ட பொருள்மேல் வருவது
2. எண்ணின்மேல் வருவது
1. வீடு ஒன்று ; மாடுகள் ஐந்து ; மரங்கள் பத்து.
- இவற்றில் வரும் ‘ஒன்று’ , ‘ஐந்து’, ‘பத்து’ ஆகியன ‘எண்ணப்பட்ட பொருட்கள் மீது’ வந்தன; எத்தனை வீடுகள், எத்தனை மாடுகள், எத்தனை மரங்கள் என எண்ணப்பட்டுள்ளன அல்லவா?
2 . ஒன்று , ஐந்து , பத்து’
- இந்த எண்கள், வெறும் எண்கள் மட்டுமே; ஆதலால், இவை ‘எண்ணின் மேல் ’ வந்தவை எனப்படுகின்றன.
‘ஒப்பினாகிய பெயர்’- ஒப்புப் பொருளைக் குறிக்கும் அஃறிணைப் பெயர்ச்சொற்கள்.
இதற்கு உரையாசிரியர்கள், ‘பொன்னன்னது’, ‘பொன்னன்னவை’ , ‘பொன் போல்வது’, ‘பொன்னனையது’, ‘பொன்னன்ன’, ‘யானைப் போலி’ என்று எடுத்துக்காட்டுகள் வரைந்துளர்.
இங்கே ஓர் ஐயம்!
‘பொன் அன்னது’ என்பதில், எது ‘ஒப்பினாகிய பெயர்’? இரு சொற்களுமே சேர்ந்து ஒப்பினாகிய பெயரா? ஒவ்வொன்றும் ஒப்பினாகிய பெயரா? உரைகளை எத்தனை முறை படித்தாலும் விடை கிடைக்கவில்லை!
‘பொன் அன்னது’ என்பதில் ‘பொன்’ ஒரு தனிப் பெயர்ச்சொல்; இதிலே ஒப்பு எதுவுமில்லை; ‘அன்னது’ என்பதில்தான் ஒப்புமைப் பொருள் உள்ளது. அன்னது = போன்றது. பொன்னன்னது = பொன் போன்றது.
ஆகவே, ‘அன்னது’, ‘அன்னவை’ , ‘அனையது’, ‘அன்ன’, ‘ போல்வது’, ‘ போலி’ ஆகியனவே தொல்காப்பியம் கூறவந்த அஃறிணைப் பெயர்ச்சொற்கள்! போலி = போன்றது.
அஃறிணைப் பெயர்ச்சொற்கள் என்று முதலில் 15ஐக் கூறிய தொல்காப்பியர், பிறகு ஒன்பதைத் தனியாக் கூறுவானேன்?
இதற்குச் சேனாவரையர் விடை கூற முற்படுகிறார்:
“முன்னயவை போலப் பல்ல முதலாயின வழக்கின்கட் பயின்று வாராமையின், வேறு கூறினார். பல, சில என்பன பயின்றவாயினும் பல்ல, இல்ல , உள்ள என்பனவற்றோடு ஒப்புமையுடையவாகலின் , இவற்றொடு கூறினார்.”

தொடத் தொடத் தொல்காப்பியம் (509 )
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘குதிரை’ – இஃது ஓர் அஃறிணைப் பெயர்ச்சொல்தான்;ஆனால் ‘குதிரைகள்’ என்று பன்மையில் வரும்போது, ‘கள்’ விகுதி சேர்கிறது; இதைப் பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ளாரா?
கூறியுள்ளார்!:-
கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி யுடைய பலவறி சொற்கே (பெயரியல் 15)
இதன் பொருள் - ‘கள்’ எனும் ஈற்றோடு பொருந்தும் அஃறிணை இயற்பெயர்ச் சொற்கள், பன்மையைக் குறிக்கும்!
வரும் சேனாவரையர் உரை மேலும் விளக்கம் தரும்!:
“அஃறிணை இயற்பெயர் ஆவன ஆ, நாய், குதிரை, கழுதை , தெங்கு, பலா, அலை , கடல், என்னும் தொடக்கத்துச் சாதிப்பெயர். ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலின் இயற்பெயர் என்றார். இவை கள்ளென்னும் ஈற்றவாய் ஆக்கள் , குதிரைகள் என நின்றவழிப் பன்மை விளக்கலின் பலவறிசொல் ஆயினவாறு கண்டுகொள்க.”
‘சாதிப்பெயர்’ என்றதும் , ‘அட அப்போ நம்ப சாதி அதில் உள்ளதா?’ என்று தேடாதீர்!
சாதி – உயிர் இனம்.
‘அவன் மரம் வெட்டினான்’ – இதில்,
‘மரம்’ என்றால் , இது ஒரு மரத்தைக் குறிகிறதா? பல மரங்களைக் குறிக்கிறதா?
ஐயம் வருகிறதல்லவா?
இதற்குத்தான் ‘கள்’ விகுதி தேவை என்பது!
இதுதான் நூற்பாவின் தேவையும்!
அஃறிணைப் பெயர்ச்சொற்கள் பகுதியில் இந் நூற்பா இடம் பெற்றிருப்பதால், ‘கள்’ விகுதி அஃறிணைப் பெயர்ச்சொற்களுக்கு மட்டுமே வரும் என்ற கருத்தைக் கொண்டனர் உரையாசிரியர்கள்!
உண்மையில் , இந்த நூற்பாவில் , தொல்காப்பியர் , ‘கள்’ விகுதி அஃறிணைப் பெயர்ச்சொற்களுக்கு மட்டுமே வரும்’ என்று கூறவில்லை! ‘உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே’ (கிளவியாக்கம் நூ.1) என்ற நூற்பாவில் தொல்காப்பியரே ‘கள்’ளை உயர்திணைக்குப் பயன்படுத்தியுள்ளார்!
ஆயினும், பாடல்களில், சில உயர்திணைப் பெயர்கள் ’கள்’ பெற்று வந்துள்ளதை எடுத்துக்காட்டி, ‘அங்கே கள் என்பது இசை நிறைக்கவந்தது!’ என்று ஒரு புது விளக்கத்தைத் தருகிறார்!
நச்சர் காட்டிய இடங்கள் :
‘வேந்தர்கட் காயினும்’ (யாப். விரு.67 உரை மேற்கோள்)
‘பிறந்தவர்கள் எல்லாம்’ (சீவக. 2622)
‘கற்றனங்கள் யாமுமுடன்’ (சீவக. 1795)
‘எங்கள் வினையால்’ (சீவக. 1793)
ஆனால், இந்த எடுத்துக்காட்டுகள் பிற்காலத்தவை என்பதை நான் இங்கே குறிக்கவேண்டும்!
அப்படியே முற்காலத்து வழக்காக , உயர்திணையில் , தனித்துக், ‘கள்’ விகுதி பன்மைக்கு வந்தால்?
‘என்ன செய்வது? ‘கடிசொல் இல்லைக் காலத்துப் படினே’ (எச்சவியல் 56) என்பதில் அடக்கிக்கொள்ள வேண்டியதுதான்!’ என்பதுபோல நச்சர் விடை உள்ளது!

- GuestGuest
1..-..509
நன்றி சதாசிவம் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 76 of 84 • 1 ... 39 ... 75, 76, 77 ... 80 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 76 of 84