Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters
Page 67 of 84
Page 67 of 84 • 1 ... 35 ... 66, 67, 68 ... 75 ... 84
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
நன்றி ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தொடத் தொடத் தொல்காப்பியம் (440)
தொடத் தொடத் தொல்காப்பியம் (440)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மா – இஃது ஒரு பெயர்ச்சொல்.
இதற்குக் , குதிரை , விலங்கு, மாமரம் , வண்டு என்றெல்லாம் பல பொருள்கள் உண்டு !
இவ்வாறு , பல பொருள்களைத் தரக்கூடிய சொல்லைப் ‘பல பொருள் ஒரு சொல்’ என்பர் !
தொல்காப்பியர் இத் தகு ‘பல பொருள் ஒரு சொல்’ பற்றி யாத்துள்ள நூற்பா !-
“வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென்று
ஆயிரு வகைய பலபொரு ளொருசொல்” (கிளவி.52)
‘பல பொருள் ஒரு சொல்’ இரு வகைப்படும் ! –
1 . வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
2 . வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல்
1 . வினை வேறு படூஉம் பலபொருள் ஒருசொல் – என்றால் என்ன?
‘மாப் பூத்தது’ - இத் தொடரில், ‘மா’ என்பது மரத்தை மட்டும்தானே குறிக்கிறது? ‘மா’வுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதை முன்பே பார்த்தோம் ! ஆனாலும் , ‘பூத்தது’ என்ற வினை, மாமரத்திற்கே பொருந்துவதால் , ‘மா’ என்பது ’ பலபொரு ளொருசொல்’லாக இருந்தாலும்,
இங்கு மரத்தை மட்டுமே குறிப்பதைக் கவனிக்க!
‘குதிரை பூத்தது’ , ‘விலங்கு பூத்தது’ என்றெல்லாம் வராது என்பதையும் நோக்குக!
‘பூத்தது’ என்ற வினை வேறுபாட்டால் , ‘மா’வுக்குரிய பல பொருள்களிலிருந்து , ‘மரம்’ என்ற ஒரு பொருளை மட்டும் நம்மால் கொள்ள முடிவதால் , ‘மா’வை ‘வினை வேறு படூஉம் பலபொருள் ஒருசொல்’என்கிறோம் !
2 . வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் – என்றால் என்ன?
மீண்டும் ‘மா’வைப் பிடியுங்கள் !
‘மா’வுக்குக் குதிரை , விலங்கு என்றெல்லாம் பொருள்கள் உண்டு எனப் பார்த்தோமல்லவா? இந்த நிலையில் ,
‘மா வீழ்ந்தது’ என்று சொன்னால் , நமக்குக் குழப்பம் வருகிறது !
வீழ்ந்தது , மரமா? குதிரையா?
இங்கே , வினையைக் கொண்டு வேறுபாட்டை நாம் கொள்ள முடியவில்லை !
சற்று முன்பு ‘பூத்தது’ என்ற வினை கொண்டு சொல் வேறுபாட்டைக் கொள்ள முடிந்தது!
ஆனால் , ‘வீழ்ந்தது’ என்ற வினை கொண்டு சொல் வேறுபாட்டை இங்கே கொள்ள முடியவில்லை !
இதனால் , ‘மா வீழ்ந்தது’ என்ற தொடரைப் பொறுத்தவரையில் , ‘மா , வினை வேறுபடாப் பலபொருள் ஒரு சொல் !
தொடரை வைத்துத்தான் , ஒரு சொல்லானது ‘வினை வேறுபடும் பல பொருள் ஒரு சொல்’ , ‘வினை வேறுபடாத பல பொருள் ஒரு சொல்’ எனத் தீர்மானிக்க இயலும் !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
அருமையான விளக்கம் ஐயா..
"ஆ" என்பதும் இந்த வகையில் சேருமா?
"ஆ" என்பதும் இந்த வகையில் சேருமா?
[You must be registered and logged in to see this image.] | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ [You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.] |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
நன்றி ஹரிப்ரசாத் அவர்களே !
‘ஆ’ என்பதும் இந்த வரிசையில் சேரும் !
ஏனெனில் ,
ஆ = பசு ; பெண் எருமை , பெண் மான் , விதம் (manner) !
‘ஆ’ என்பதும் இந்த வரிசையில் சேரும் !
ஏனெனில் ,
ஆ = பசு ; பெண் எருமை , பெண் மான் , விதம் (manner) !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (441)
தொடத் தொடத் தொல்காப்பியம் (441)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்’ பற்றிச் சற்றுமுன்பு பார்த்தோம் !
வினை வேறுபடுவதோடு , இன்னும் சில அடையாளங்களை வைத்தும் , ‘வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்’லுக்குப் பொருளை நாம் தெளிவாக உணரலாம் என்கிறார் அடுத்த நூற்பாவில் தொல்காப்பியர்! –
“அவற்றுள்
வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்
தேறத் தோன்றும் பொருள்தரி நிலையே” (கிளவி . 53)
அஃதாவது -
1. வினை வேறுபடுதல்
2. இனத்தைக் காண்டல்
3. சார்பை நோக்கல்
- ஆகிய மூன்றைக் கொண்டு, வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல்லுக்கு நாம் பொருளை நன்கு அறிந்துகொள்ளலாம் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் இவற்றை விளக்கலாம் !
1. வினை வேறுபடுதல்
‘மாப் பூத்தது’ - இங்கே ‘பூத்தது’ என்ற வினை மூலம், நாம் என்ன உணர்கிறோம் ?
‘மா’ என்பது பலபொருள் ஒருசொல்லாயினும் , அது குதிரையையோ, விலங்கையோ, வண்டையோ குறிக்கவில்லை; மாமரத்தை மட்டுமே குறித்தது என உணர்கிறோம் ! ஏனெனில் குதிரையோ , ஏனைய விலங்கோ, வண்டோ பூப்பதில்லை !
2 . இனத்தைக் காண்டல்
‘மாவும் மருதும் ஓங்கின’ – இங்கே வந்துள்ள பலபொருள் ஒருசொல்லாகிய ‘மா’வும் மரத்தையே குறிக்கும் என அறிகிறோம் ?
எப்படி?
அருகில் சொல்லைப் பாருங்கள் ; மருது ! மருது , ஒரு மரம் என்பது நமக்குத் தெரியும் ; எனவே அதன் இனமான இன்னொரு மரமாகத்தான் ‘மா’ இருக்கவேண்டும் எனத் தெளிகிறோம் ! மேலும் ‘ஓங்கின’ என்பதும் மரத்திற்கே பொருந்துகிறது !
3 . சார்பை நோக்கல்
‘கவசம் புக்குநின்று மாக்கொணா’ – இதில் உள்ள ‘மா’ , குதிரையைக் குறிக்கும் .
எப்படி?
கவசத்தை அணிவித்து மாவக் கொண்டுவா என்றால் , ‘மா’ என்பது மரமாகவோ , வண்டாகவோ, ஏனைய விலங்காகவோ இருக்க முடியாதல்லவா?
இதனால் , சார்ந்துவரக்கூடிய கருத்தை ஒட்டி, நாம் பலபொருள் ஒருசொல்லின் பொருளை நாம் தெளியலாம் என ஏற்படுகிறதல்லவா?
சேனாவரையரை ஒட்டி நாம் வேறு சில எடுத்துக்காட்டுகளை நினைக்கலாமே?
1 . வினை வேறுபாடு
‘கொடி’ – இது ஒரு பலபொருள் ஒரு சொல் !
தாவரக் கொடி, துணிக் கொடி, துணி காயப்போடும் கம்பி முதலிய சில பொருள்கள் இதற்கு உண்டு !
ஆனால், ‘கொடி கிழிந்தது’ என்றால் , ‘கொடி’ என்பது கட்சிக்கொடியையே குறிக்கிறது ; இல்லையா?
இதுதான் வினை வேறுபாட்டால் தெளிவது !
2 . இனம்
‘கொடி மரத்தைச் சுற்றி மேலேறியது’- இங்கே , ‘கொடி’ , தாவரக் கொடியைக் குறிக்கிறது ! கொடியாகிய தாவரம் அதன் இனமான மரத்தோடு பேசப்பட்டுள்ளதால் , ‘கொடி’யெனும் பலபொருள் ஒருசொல்லின் பொருள் தெளிவாகிறது !
3 . சார்பு
‘கொடியில் காயப்போட்ட வேட்டியை எடுத்துவா’- இங்கே ‘கொடி’ என்பது , துணிகாயப்போடும் கொடி என்று நமக்குத் தெளிவாகிவிடுகிறது இல்லையா?
இதுதான் ‘சார்பால் பொருள் விளங்குவது’ !

தொடத் தொடத் தொல்காப்பியம் (442)
தொடத் தொடத் தொல்காப்பியம் (442)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘கால்’ – இதுவும் பலபொருள் ஒரு சொல்தான் !
கால் = பந்தல் கால் ; மனிதன் கால் ; ¼
இப்போது , ‘கால் வீழ்ந்தது’ என்றால் , நாம் என்ன விளங்கிக்கொள்ள முடியும் ?
பந்தல் கால் விழுந்ததா? மனிதன் கால் விழுந்ததா?
இந்த மாதிரிக் குழப்பம் வரும்போது , ‘சொல்லும் சொல்லை வெளிப்படையாக இன்னது எனச் சொல்லிவிடுங்கள்’ என்று உத்தரவு போடுகிறார் தொல்காப்பியர் ! –
“ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்
வினைவே றுபடாப் பலபொரு ளொருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங்கு இயலும் ” (கிளவி . 54)
‘ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்
வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல் ’ - ஒரே வினையைக் கொண்டு நடக்கும் பலபொருள் ஒரு சொல்லை ,
‘நினையும் காலைக் கிளந்தாங்கு இயலும்’ - ஆராய்ந்தால் , வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் !
‘கால்’ என்ற சொல்லுக்கு வருவோம் !
‘மனிதன் கால் வீழ்ந்தது’ ; ’பந்தல் கால் வீழ்ந்தது ‘- இப்படி வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் குழப்பம் இல்லை !
இதைத்தான் மேல் நூற்பாவில் சொன்னார் தொல்காப்பியர்!
சேனாவரையர் எடுத்துக்காட்டுகள் –
1 . ‘மாமரம் வீழ்ந்தது’ ; ‘விலங்குமா வீழ்ந்தது’
முதல் ‘மா’ = மாமரததைக் குறிக்கும்
இரண்டாம் ‘மா’ = விலங்கினத்தைக் குறிக்கும்
இதனைத் தொடர்ந்து ஒரு நூற்பாவை எழுதுகிறார் தொல்காப்பியர் ; அதையும் இங்கே பார்ப்போம் ! –
“குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி” (கிளவி. 55)
அஃதாவது –
பொருள் வேறுபாட்டைக் கூறக் கருதியவன் ( ‘குறித்தோன்’) , அதனைத் தெளிவாக - வெளிப்படையாச் சொல்லவேண்டும் !
சேனாவரையர் எடுத்துக்காட்டை விளக்குவதானால் –
அரிதாரமும் சந்தனமும் வருமே நீர் - என்றால் என்ன விளங்குகிறது ?
ஒன்றும் விளங்கவில்லை !
அரிதாரமும் சந்தனமும் தனித்தனியாக நீரில் அடித்து வரப்படுகிறதா?
- தெளிவில்லை !
‘அரிதாரமும் சந்தனமும் கலந்தது போல வருமே நீர்’ – இப்படிச் சொன்னால், ‘சரி ! இரண்டும் கலந்தது போல நிறமும் மணமும் கொண்டு வருகிறது நீர்’ என்பது தெளிவாகிவிடுகிறது !
இந்த இரண்டாம் நூற்பா பலபொருள் ஒருசொல் பற்றியதல்ல எனபதைக் கவனிக்க !

ஐயா !
எளிதில் தொல்காப்பியம் புரிந்துகொள்ள புலியூர்க்கேசிகன் உரை நன்று என்று சொல்கிறார்களே !
தங்கள் கருத்தென்னவோ ?
எளிதில் தொல்காப்பியம் புரிந்துகொள்ள புலியூர்க்கேசிகன் உரை நன்று என்று சொல்கிறார்களே !
தங்கள் கருத்தென்னவோ ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
நன்றி ஜெகதீசன் அவர்களே !
தாராளமாகப் புலியூர்க் கேசிகன் உரையைப் படிக்கலாமே ?
ஒவ்வொரு நூலிலும் உங்களுக்குப் புதுச்செய்தி கிடைக்கும் !
தாராளமாகப் புலியூர்க் கேசிகன் உரையைப் படிக்கலாமே ?
ஒவ்வொரு நூலிலும் உங்களுக்குப் புதுச்செய்தி கிடைக்கும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (443)
தொடத் தொடத் தொல்காப்பியம் (443)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குழுக் கூடியது - என்கிறோம் !
குழுவில் உள்ளோர் உயர்திணையைச் சேர்ந்தவர்கள் ! ஆனால் ‘கூடியது’ என அஃறிணை முடிவு கொடுத்துக் கூறுகிறோம் !
இதற்குத் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?
உள்ளது !
அந்த விதியைத்தான் பார்க்கப் போகிறோம் ! –
“குடிமை யாண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை விருந்தே குழுவே
பெண்மை யரசே மகவே குழவி
தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொ லென்று
ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
முன்னத்தி னுணருங் கிளவி எல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையின வாயினும்
அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும் ” (கிளவி. 56)
இந்த நூற்பாவில் தொல்காப்பியர் 18 சொற்களைப் பட்டியல் போடுகிறார் ! –
1.குடிமை
2.ஆண்மை
3. இளமை
4 .மூப்பு
5 . அடிமை
6 . வன்மை
7 . விருந்து
8 . குழு
9 . பெண்மை
10 . அரசு
11 . மகவு
12 .குழவி
13 . தன்மை திரிபெயர்
14 . உறுப்பின் கிளவி
15 . காதல்
16 . சிறப்பு
17 . செறற்சொல்
18 . விறற்சொல்
இந்தப் 18 சொற்களுமே உயர்திணைப் பொருள் மேல் நின்றாலும் , அஃறிணை முடிவு கொள்ளலாம் என்கிறார் தொல்காப்பியர் !
‘உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்’ – உயர்திணைப் பொருள்மேல் நின்றாலும் ,
‘அஃறிணை மருங்கிற் கிளந்தாங்கு இயலும்’ – அஃறிணை முடிவு கொடுத்துக் கூறலாம் !
இப் பதினெட்டுக்கும் எடுத்துக்காட்டுகளை , இளம்பூரணர் , நச்சர் , தெய்வச் சிலையார் உரைகளின்படி வருமாறு தரலாம் ! –
1. ‘அவர்க்குக் குடிமை நன்று’
2. ‘அவர்க்கு ஆண்மை நன்று’
3. ‘அவர்க்கு இளமை நன்று’
4 . ‘அவர்க்கு மூப்பு நன்று’
5 . ‘அவர்க்கு அடிமை நன்று’
6 . ‘அரசன் வன்மை நன்று’
7 . ‘விருந்து வந்தது’
8 . ‘ அக் குழு நன்று “
9 . ‘பெண்மை நன்று ‘
10 . ‘அரசு நிலைத்தது’
11 . ‘மக நலிந்தது’
12 . ‘குழவி அழுதது’
13 . ‘அலி வந்தது’ – இது தன்மை திரிபெயர்
14 . ‘குருடு வந்தது’ – இஃது உறுப்பின் கிளவி
15 . ‘ என் பாவை வந்தது’ - காதல்
16 . ‘என் கண் வந்தது ’ - சிறப்பு
17 . ‘கெழீஇயிலி வந்தது’ - இது செறற்சொல்
18 . ‘சிங்கம் வந்தது’ – இது விறற்சொல்
தன்மை திரிபெயர் – ஆண் , பெண் தன்மையிலிருந்து திரிந்த பெயர் ; அலி.
கெழீஇயிலி – பிறரோடு பழகுவதற்குத் தகுதியில்லாதவன்.
செறல் – வெகுளி ; கோபம்
செறற்சொல் – சினச் சொல் ; ஏசும் சொல்
விறற்சொல் – வீரியச் சொல் ; வீரனைச் ‘சிங்கம் வந்தது’ எனல் .
நூற்பாவிலுள்ள ‘முன்னம்’ என்பது ‘குறிப்பு’ என்பதைக் குறிக்கும்.
என்ன குறிப்பு ?
பேசுவோனது குறிப்பு !
அஃதாவது –
‘இளமை’ , ‘மூப்பு’ முதலியன உயர்திணைக்கும் அஃறிணக்கும் பொதுவான சொற்களே !
ஆனால் பேசுவோன் உயர்திணையைக் கருத்தில் கொண்டு பேசும்போது , அச் சொற்களை உயர்திணைப் பண்புள்ளவையாக நாம் கருத வேண்டும்!
மேல் நூற்பாவிலுள்ள 18 சொற்களை மட்டும்தான் அஃறிணை முடிவு கொடுதுக் கூறலாம் என எடுத்துக்கொள்ளக்கூடாது !
சேனாவரையர் வேறு சொற்களையும் எடுத்துக்கொள்வது பற்றி –
“அன்ன பிறவும் என்றதனான் வேந்து , வேள் , குரிசில் , அமைச்சு , புரோசு என்னும் தொடக்கத்தனவும் கொள்க !” என்கிறார் !
புரோசு – புரோகிதன்

Similar topics
» 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!
» ஒதுக்கப்பட்ட தொல்காப்பியம்
» தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்
» தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்
» தொல்காப்பியம் பாடும் 3 வயதுக்குழந்தை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum