புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 62 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 62 of 84 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 73 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 29, 2016 6:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (418)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில்  நூற்பா 5 முதல் 9வரை மொத்தம் 11 ஈறுகளைப் பார்த்துள்ளோம் !

இவற்றைத் தொகுத்து இப்போது கூறுகிறார் –
“இருதிணை மருங்கின் ஐம்பா லறிய
 ஈற்றுநின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்
தோற்றம் தாமே வினையொடு வருமே”  (கிளவி. 10)

‘இருதிணை மருங்கின்’ – உயர்திணை , அஃறிணை ஆகிய இரண்டு திணைச் சொற்களையும்,
‘ஐம்பால் அறிய’ – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால் , பலவின்பால் என்ற ஐந்து பால்  சொற்களையும் காட்டக்கூடிய ,
‘  ஈற்றுநின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்’ – தகுந்த ஈற்றெழுத்துக் கொண்ட சொற்கள் ,
‘தோற்றம் தாமே வினையொடு வருமே”  ’ – வினைச் சொற்களாக நிற்கும் !

முதலில் இந்தப் பதினோரு  ஈறுகள் யாவை எனப் பார்ப்போம் ! –

1. னகார ஈறு

இதில், ‘அன்’ , ‘ஆன்’ என்ற இரண்டு ஈறுகளும் அடங்கும்!
நாம் மேலே பார்த்த நூற்பா 5 இதற்குச் சான்று !

2. ளகார ஈறு

இதில், ‘அள்’ , ‘ஆள்’ என்ற இரண்டு ஈறுகளும் அடங்கும்!
நாம் மேலே பார்த்த நூற்பா 6 இதற்குச் சான்று !

3. ரகார ஈறு

இதில், ‘அர்’ , ‘ஆர்’ என்ற இரண்டு ஈறுகளும் அடங்கும்!
நாம் மேலே பார்த்த நூற்பா 7 இதற்குச் சான்று !

4. பகர ஈறு

’ப’ ஈறு இதுவாகும்!
நாம் மேலே பார்த்த நூற்பா 7 இதற்குச் சான்று !

5. மார் ஈறு

‘மார்’ ஈறு இதுவாகும்!
நாம் மேலே பார்த்த நூற்பா 7 இதற்குச் சான்று !

6. துவ்வீறு

‘து’ ஈறு இதுவாகும் !
நாம் மேலே பார்த்த நூற்பா 8 இதற்குச் சான்று !

7. றுவ்வீறு

’று’ ஈறு இதுவாகும் !
நாம் மேலே பார்த்த நூற்பா 8 இதற்குச் சான்று !

8. டுவ்வீறு

‘டு’ ஈறு இதுவாகும் !
நாம் மேலே பார்த்த நூற்பா 8 இதற்குச் சான்று !

9. அவ்வீறு

‘அ’ ஈறு இதுவாகும்!
நாம் மேலே பார்த்த நூற்பா 9 இதற்குச் சான்று !

10. ஆவீறு

‘ஆ’ ஈறு இதுவாகும் !
நாம் மேலே பார்த்த நூற்பா 9 இதற்குச் சான்று !

11. வவ்வீறு

‘வ’ ஈறு இதுவாகும் !
நாம் மேலே பார்த்த நூற்பா 9 இதற்குச் சான்று !

இப்போது, மேல் தொல்காப்பியர் குறித்த  ‘11 ஈறுகள்’ என்பதற்குக் கணக்குச் சரியாயிற்றா?

மேல் நூற்பாக்கள்  5-9 ஆகியவற்றின் கீழே நாம் வினைகளில் ஈறுகள் வந்துள்ளதைப் பார்த்துவிட்டபடியால் இங்கு எடுத்துக்காட்டுகள் தரப்படவில்லை !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 29, 2016 6:51 pm

PostDr.S.Soundarapandian Sun Mar 13, 2016 8:22 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (419)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் அடுத்தது –
 “வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
பெயரிற்  றோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல்  கூடா தம்மர  பினவே”  (கிளவி.11)

‘வினையில்  தோன்றும் பாலறி கிளவியும்’ – வினைச் சொல்லாக வரும் பாலை உணர்த்தி நிற்கும் சொல்லும்,
 ‘பெயரில்  தோன்றும் பாலறி கிளவியும்’ – பெயர்ச் சொல்லாக வரும் பாலை உணர்த்தி நிற்கும் சொல்லும்,
‘மயங்கல்  கூடா தம்மர  பினவே’ – ஒன்றோடொன்று மயங்கக் கூடாது ;  தம் மரபுப்படி வரவேண்டும் !

சேனாவரையர் உரைப்படி , கீழ்வரும் எடுத்துக்காட்டுகளைத் தரலாம் ! –

1. அவன் வந்தான் √- (உயர் திணை , ஆண்பால் , படர்க்கை இடம், இறந்த காலம்)
2. அவள் வந்தாள் √- (உயர் திணை , பெண்பால் , படர்க்கை இடம், இறந்த காலம்)
3. அவர் வந்தார் √- (உயர் திணை , பலர்பால் , படர்க்கை இடம், இறந்த காலம்)
4. அது வந்தது √- (அஃறிணை , ஒன்றன்பால் , படர்க்கை இடம், இறந்த காலம்)
5. அவை வந்தன √- (அஃறிணை , பலவின்பால் , படர்க்கை இடம், இறந்த காலம்)
6. நெருநல் வந்தான் √- (உயர் திணை , ஆண்பால் , படர்க்கை இடம், இறந்த காலம்)
(நெருநல் - நேற்று)

கீழ் வருவன வழு எனச் சேனாவரையர் காட்டுகிறார் !-
1. அவன் வந்தது × (திணை, பால் - தவறு )
2. அவன் வந்தாள்×( பால் - தவறு )
3. யான் வந்தான் ×(இடம் - தவறு )
4. நாளை வந்தான் ×(காலம் - தவறு )

மேல் தொல்காப்பிய விதியைக் கீழ்வரும் தொடர் இலக்கணத்திற்கும் கொள்ளவேண்டும் என்கிறார் சேனாவரையர் !-
1. யான் வந்தேன் √
2. யாம் வந்தேம்  √
3. நீ வந்தாய்  √
4. நீயிர் வந்தீர்  √

கீழ் வருவன பிழை என்றும் சேனாவரையர் குறிக்கிறார் !-
1. யான் வந்தேம் ×
2. நீயிர் வந்தாய் ×

இந்த நூற்பா உரையில், தெய்வச்சிலையார் நமக்குச் சில வழு உள்ள தொடர்களைக் காட்டுகிறார் ! –

1. அவன் உண்டது× (திணை வழூஉ)
2. அவன் உண்டனள்× (பால் வழூஉ)
3. நீ உண்டனன் × (இட  வழூஉ)
4. நாளை உண்டேன்× (கால வழூஉ)
5. அவன் மேய்ந்தான் × (மரபு வழூஉ)

தெய்வச் சிலையார் வழுக்கள் இத்தனை எனத் தெரிவிக்கிறார் !-
1. திணை வழூஉ -   12
2. பால் வழூஉ -   8
3. இட வழூஉ -   6
4. கால வழூஉ – 6
5. மரபு வழூஉ – ‘வரம்பு இல’!

இவற்றுக்குக் கணக்கு ?

இதோ கணக்கு! :-
1. திணை வழூஉ -   12 :
1. அவன் வந்தது × ( ‘அவன்’ உயர் திணையாயும் , ‘வந்தது’ அஃறிணையாயும் உள்ளதைக் கவனிக்க ! இதுவே திணை வழூஉ என்பது !)
2. அவன் வந்தன ×
3. அவள் வந்தது ×
4. அவள் வந்தன  ×
5. அவர் வந்தது  ×
6. அவர் வந்தன ×
7. அது வந்தான்  ×
8. அவை வந்தான் ×
9. அது வந்தாள் ×
10. அவை வந்தாள் ×
11. அது வந்தார் ×
12. அவை வந்தார் ×

2.பால் வழூஉ 8:-
1.அவன் வந்தாள்  × ( ‘அவன்’ ஆண்பாலாயும் , ‘அவள்’ பெண்பாலாயும் உள்ளதைக் கவனிக்க ! இதுவே பால் வழூஉ என்பது !)
2. அவன் வந்தார் ×
3. அவள் வந்தான்  ×
4.அவள் வந்தார் ×
5.அவர் வந்தான் ×
6.அவர் வந்தாள் ×
7.அது வந்தன ×
8.அவை வந்தது ×

3. இட வழூஉ -   6 :-
1.உண்டேன் நீ × ( ‘உண்டேன்’ தன்மை இடம் என்பதையும் , ‘நீ’ முன்னிலை இடம் என்பதையும் கவனிக்க ! இதுவே இடவழூஉ !)
2.உண்டேன் அவன்×
3.உண்டாய் யான்×
4.உண்டாய் அவன் ×
5.உண்டான் யான்×
6.உண்டான் நீ×

4.கால வழூஉ – 6:-
1.நேற்று உண்பேன்× ( ‘நேற்று’ என்பது இறந்தகாலச் சொல் என்பதையும், ‘உண்பேன்’ என்பது எதிர்காலச் சொல் என்பதையும் கவனிக்க!இதுவே கால வழூஉ என்பது !)
2.நேற்று உண்கிறேன்×
3. நேற்றுச் சாகிறான்×
4. நேற்றுச் சாவான் ×
5.நாளை உண்டேன்×
6. நாளை உண்டுகொண்டிருக்கிறேன்×

‘மரபு வழு’ எப்படி இருக்கும் ?:-
1. இடையன் யானை மேய்த்தான் ×
2. பாகன் யானை மேய்த்தான் √
3. பாகன் யாடு மேய்த்தான் ×
4. இடையன் யாடு மேய்த்தான் √

( ‘யாடு’ என்றால் பயப்படாதீர்கள் ! ‘ஆடு’தான் !)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 19, 2016 6:51 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (420)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேல் தொல்காப்பிய ஆய்வு எண் 413இல்  ‘பேடி’ என்ற சொல், உயர்திணைப் பெண்பாற்  சொல்லாக வரும் எனப் பார்த்தோம் !

இதனை வரும் நூற்பாவில் உறுதிப்படுத்துகிறார் தொல்காப்பியர் !:
“ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி
ஆண்மையறி சொற்கு ஆகிடன் இன்றே” (கிளவி.12)

‘ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி’-  ‘பேடி’ என்ற சொல்,
‘ஆண்மை அறிசொற்கு’ – ஆண் தன்மையை அறியும் வகையில்,
‘ஆகிடன் இன்றே’ – ஆகி வராது !

அஃதாவது-
பேடி வந்தான் ×
பேடி வந்தாள்  √

கல்லாடனார் உரைப்படி –
பேடியர் வந்தார் √

இதன் பின் நூற்பாக்கள் 13 முதல் 16 வரை நாம் ஏற்கனவே ஆய்ந்துள்ளோம் ! ஆகவே இப்போது கிளவியாக்கத்தில் நூற்பா 17 !:-
“தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
 பகுதிக் கிளவி வரைநிலை இலவே” (கிளவி. 17)

‘தகுதியும்’ – நேரடியான சொல்லைத் தவிர்த்த, கேட்போருக்கு மனத் துன்பம் வராத ,தகுதியான சொல்லும்,
‘வழக்கும்’ – ஒரு மரபாக , ஒரு சொல்லுக்கு வரும் வேறு சொல்லும்,
‘தழீஇயின ஒழுகும்’ – தழுவி ஒழுகும்படியான சொல்,
‘பகுதிக் கிளவி’ – இலக்கணத்தோடு நேரே பொருந்தாவிடினும், இலக்கணத்தைச் சார்ந்ததாக,
‘வரைநிலை இலவே’ – தவிர்க்கப் படாது ஏற்றுக்கொள்ளப்படும்!

கல்லாடர் உரைப்படி ,
‘தகுதி’ மொத்தம் மூன்று வகை ! –
1. மங்கல மரபு
2. இடக்கர் அடக்கல்
3. குழூஉக்  குறி

‘சுடுகாடு’ எனச் சொல்வது அமங்கலமாக உள்ளது என்று கருதிய பழந்தமிழர் , ‘நன்காடு’ என்றனர் ! – இதுதான் ‘மங்கல மரபு’ !

    ‘மலங் கழுவினேன்’ என்று நான்குபேர் நடுவே சொல்வது நன்றாக இராது எனக் கருதிய பழந்தமிழர் ‘கால் கழுவினேன்’ என்றனர் ! – இதுதான் இடக்கர் அடக்கல் !

அஃதாவது, மற்றவர் முன்னிலையில் கூறக்கூடாத சொல்தான் ‘இடக்கர்’ !

இடக்கர்= அவையல் கிளவி ; அவைக்கு அல்லாத கிளவி.

இடக்கரான சொல்லை அடக்கிக் கூறுவது - இடக்கர் அடக்கல் !

ஒரு குழுவார்க்கு மட்டும் புரிவதுபோலக் கூறுவது ‘குழூஉக்குறி !’

‘குழூஉக்குறி ’க்கு  உரையாசிரியர்கள் , ‘வண்ணக்கன் காணத்தை நீலம் என்பது ’என உரை எழுதினர் !

வண்ணக்கன் யார்?
அந்தக் காலத்தில் நாணயத்தைப் பரிசோதிப்பவர்கள் எனத் தனியாக இருந்தனர் ! அவர்கள்தாம் ‘வண்ணக்கர்’!

காணம் ?
காணம் = பொற்காசு

வண்ணக்கர் காணத்தை ஏன் நீலம் என்றனர் ?

தெரியாது ! அவர்களுக்கு மட்டும் புரிந்தால்போதும் என்று மிகப் பழக்காலத்தில் ‘நீலம்’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர் ! அவ்வளவுதான் ! அதனால்தான் ‘குறி’! ‘குறிக்கப்பட்டது’; அவ்வளவுதான் !

கல்லாடர் உரைப்படி ,
‘வழக்கு’ மொத்தம் இரண்டு வகை ! –
1.இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ
2.மரூஉ

‘இல்முன்’ என்பதை ‘முன்றில்’ என்றால் அஃது இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ ! இதற்கு விதி தொல்காப்பியத்தில் உள்ளது  (புள்ளிமயங். 60)!

‘மரூஉ’ என்பது இலக்கணத்தொடு பொருந்தாதது!
‘மலயமான் நாடு’ என்பதை ‘மலாடு’ எனக் கூறுவது ‘மரூஉ’ !

ஒரு முதியவர் ,சாப்பிடும்போது ‘சாம்பாரில் உப்பு நல்லா இருக்கு !’ என்றார் !
அருகே இருந்தவர் ‘நல்லா இருந்தா சாப்பிடவேண்டியதுதானே?’என்றார்! ; அதற்கு முதியவர் ‘இல்லீங்க! நல்லா இருக்குன்னா ரொம்ப இருக்குன்னு அர்த்தம்’ என விளக்கினார் ! – இதுதான் ‘மங்கல மரபு’!

கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்பதைக், ‘கூட்டத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்!’ என்று பெரியவர்கள் கூறுவதுண்டு !

நமது இன்றைய வாழ்க்கையொடு பொருந்தியதுதான் தொல்காப்பியம் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 20, 2016 3:21 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (421)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் அடுத்தது –
“இனச்சுட்  டில்லாப்  பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா  றல்ல செய்யு ளாறே ” (கிளவி. 18)

‘இனச்சுட்டு  இல்லா  ’ – இனத்தைக் குறிக்கும் வேறு ஒரு சொல் இல்லாத ,
‘பண்புகொள் பெயர்க்கொடை’ – அந்தப் பண்புப் பெயரைக் கொடுத்துக் கூறுவது,
‘வழக்காறல்ல  செய்யுளாறே’ – பேச்சிலோ உரைநடையிலோ  வழக்கு அல்ல; செய்யுள் வழக்கே !

இனச் சுட்டு என்றால் என்ன?
‘ வெள்ளை’ – இதன் இனச் சுட்டு ’கருமை’ !
‘பெரிய’ – இதன் இனச் சுட்டு ‘சிறிய’
வெள்ளை , பெரிய , ஆகிய சொற்களுக்கு இனச் சுட்டு உள்ளன!
ஆகவே , ‘வெள்ளைத் தாள்’ என்று வழக்கில் சொல்லத் தடை இல்லை !  ‘கருமையான தாள்’ என்று உலகில் உள்ளதா? என்று எவரும் கேட்க முடியாது! கருமையான தாள்  உள்ளதே!
‘பெரிய சட்டி’ என்று வழக்கில் சொல்லத் தடை  இல்லை ! ஏனெனில்,  ‘சிறிய சட்டி’ என்று உலகில் உள்ளதா? என்று எவரும் கேட்க முடியாது !

ஆனால் பாட்டில் (செய்யுளில்) , இனச் சுட்டு இல்லாத பண்புப் பெயரைக் கொடுத்துச் சொல்லமைக்கலாம் !

 ‘செஞ்ஞாயிறு’ என்று புறநானூற்றில் (பா.38:7) வந்துள்ளது !

அப்படியானால் ‘கரு ஞாயிறு’ என உலகில் உள்ளதா? என்று கேட்டால் , ‘இல்லை’ என்றுதான் கூறுவோம் ! அப்படியானால் பாடலில் எப்படி வருகிறது ?

இந்த வினாவுக்கு விடைதான் நாம் மேலே பார்த்த விதி !

அஃதாவது , பாடலில் அப்படி வரலாம் ! இதுதான் தமிழ் மரபு !

இதே புறநானூற்றுப் பாட்டில் (பா.38:8)  ‘வெண்திங்கள்’ என்றும் வருகிறது !
‘கருந் திங்கள்’ என ஒன்று இல்லையாயினும் , பாட்டு ஆதலால் , இதனைத் தமிழ் ஏற்றுக்கொள்கிறது!

இங்கே உரையாசிரியர்கள் ஒரு வினாவை எழுப்பி அதற்கு விடையையும் கூறுகின்றனர் !

அதனை வருமாறு விளக்கலாம் !

அஃதாவது , ‘செம்போத்து’ என்று குறிக்கிறோம் !
‘கரும்போத்து’ என ஒன்று இல்லையே? வழக்கில்தானே ‘செம்போத்து’என்கிறோம் ? இது சரியா? – இது வினா.

‘போத்து’ எனத் தனியாக இப் பறவை சுட்டப்படுவதில்லை ! ‘செம்’ என்பது பண்பு அடை அல்ல (not an adjective)! பறவையின் பெயரே ‘செம்போத்து’ என்பதுதான் ! எனவே இதில் தவறில்லை ! – இது விடை !

  ‘கொடை’ என்றொரு சொல்லை மேலே பார்த்தோம் !
  ‘கொடை’ என்பதை ‘இவர் 10000 ரூபாய் நன்கொடை கொடுத்தார்’ என்பது போன்ற பொருளில் பார்க்கக் கூடாது !

கொடை = கொடுத்தல்; தொழிற்பெயர் (Verbal noun)
 ‘பண்புப் பெயரைக் கொடுத்துக் கூறுதல்’ என்ற அடிப்படையில்  ‘கொடை’ ஆளப்பட்டுள்ளது !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 20, 2016 5:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (422)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கீழ் வரும் தொடர்களைப் பாருங்கள் !-
- ஒருவனா ஒருத்தியா வந்தது
- ஒருவனா ஒருத்தியா வந்தவள்
- ஒருவனா ஒருத்தியா வந்தவன்
- இவற்றில் எது சரி?

தொல்காப்பியத்தில் இதற்கு விதி உள்ளது !-
“பால்மயக் குற்ற ஐயக் கிளவி
தானறி பொருள்வயின் பன்மை கூறல்” (கிளவி.23 )

‘தானறி பொருள்வயின்’ – திணையானது தெரிந்தபோது,
‘பால்மயக் குற்ற ஐயக் கிளவி’ – ஆண்பாலா ? பெண்பாலா?ஒன்றன்பாலா? பலர்பாலா? பலவின்பாலா? என்றாங்கு பால் முடிப்புச் சொல்லில்  மயக்கம் வரும்போது ,
‘பன்மை கூறல்’ - பன்மையால் கூறுக!

இந்த விதியைக் கையில் வைத்துக்கொண்டு மேலே நமக்கு வந்த ஐயத்தைக் களையலாம் !-
- ஒருவனா ஒருத்தியா வந்தது ×
- ஒருவனா ஒருத்தியா வந்தவள் ×
- ஒருவனா ஒருத்தியா வந்தவன் ×
- ஒருவனா ஒருத்தியா வந்தவர்√

இதே முறையில் -
1. ஒருவனா பலரா இதை உடைத்தது ×
        ஒருவனா பலரா இதை உடைத்தவர் √

2. ஒருத்தியா பலரா இங்கு  சிரித்தது ×
          ஒருத்தியா பலரா இங்கு  சிரித்தவள் ×
           ஒருத்தியா பலரா இங்கு  சிரித்தவர் √

ஒரு காட்டில் ஒரு மண்டை ஓடு கிடந்தது ! அதைப்  பார்த்தான் ஒருவன்! அவனுக்கு அந்த மண்டை ஓடு ஆணுடையதா? பெண்ணுடையதா? என்ற ஐயம் !இரண்டில் ஒன்றாகத்தானே இருக்கவேண்டும் ?

அவன் எப்படிச் சொல்லவேண்டும் ?

ஆணுடையதா? பெண்ணுடையதா? இங்கு கிடக்கும் இவன் தலை ×
ஆணுடையதா? பெண்ணுடையதா? இங்கு கிடக்கும் இவள் தலை ×
ஆணுடையதா? பெண்ணுடையதா? இங்கு கிடக்கும் மக்கள் தலை √

இந்த எடுத்துக்காட்டுக்கு மூலம்  ஒரு பழைய உரையில் உள்ளது !

பெயர் தெரியாத உரை ஆசிரியர் எழுதிய உரையைப்  ‘பழைய உரை’ அல்லது  ‘ஒருவர் உரை’ என்று போடுவார்கள் !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 09, 2016 3:34 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (423)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எதிரே நிற்பது,  தூணா ?  ஆளா? – மங்கியதோர் மாலையில் ஒருவருக்குக் குழப்பம் !

அவர் எப்படிச் சொல்லவேண்டுமாம்?

‘தூணா  ஆளா காணப்படும் உருவம் !’ -  எனக் கூறவேண்டும் !

‘உருவம்’ – இப் பெயர்ச் சொல்  ‘தூண்’ எனும் அஃறிணைச் சொல்லுக்கும் , ‘ஆள்’ என்ற உயர்திணைச் சொல்லுக்கும் பொதுவானது !

உருவம் =  உருவு +அம்  (அம் - சாரியை)

தொல்காப்பியர்,  ‘அம்’ சாரியையைத் தவிர்த்து  ‘உருவு’ என்ற சொல்லையே போடுவதைக் கவனியுங்கள் !

நூற்பாவைப் பாருங்கள் !-
“உருவுஎன  மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்
இருவீற்றும் உரித்தே  சுட்டுங் காலை  ”  (கிளவி. 24)

‘உருவுஎன  மொழியினும்’ -   (திணை ஐயம் தோன்றியபோது ) ஒரு வடிவத்தைச் சொல்லவேண்டுமாயினும்,
‘அஃறிணைப் பிரிப்பினும்’ – அஃறிணையை ஒன்று பல எனப் பிரித்துச் சொல்லவேண்டுமாயினும்,
‘இரு வீற்றும்’ – இரு தொடர்களின் இறுதியிலும் ,
‘உரித்தே சுட்டுங் காலை’ – மேல் நூற்பாவில் சொன்னதுபோலவே,  பொதுச்சொல்லை ஆளவேண்டும் !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டு –

குற்றிகொல்லோ  மகன் கொல்லோ தோன்றுகின்ற உருவு ?

குற்றி – மரத் தடி (log)

 ‘மகன்’ என்றதும் ‘அவனின் அப்பா பெயர் என்ன ?’ என்று கேட்காதீர்கள் !

மகன் – ஆண் (male person)

‘குற்றி கொல்லோ  மகன் கொல்லோ’  - இதிலுள்ள  ஐயம் திணை ஐயம்!

திணை ஐயம் – உயர் திணையா? அஃறிணையா ? என்ற ஐயம் !

இங்கு ,
குற்றி – அஃறிணைச் சொல்
மகன் – உயர்திணைச் சொல்

இளம்பூரணரின் அடுத்த எடுத்துக்காட்டு –

ஒன்றுகொல்லோ? பலகொல்லோ? செய் புக்க பெற்றம் !

இதன் பொருள் – ஒன்றா ? பலவா? வயலில் புகுந்த பசு!
பெற்றம் – பசு

ஒன்றா ? பலவா? வயலில் புகுந்த பசு! – இங்கே வந்த ஐயம் , பால் ஐயம் !

ஒன்று ; பல – இரு சொற்களுமே அஃறிணைச்   சொற்கள்தாம் !

ஒன்று – ஒன்றன்பாற் பெயர்ச்சொல்

பல - பலவின்பாற் பெயர்ச்சொல்

சரி !

சண்டை ஓய்ந்துவிட்டது !

1.  ‘குற்றியா மகனா ’ என்பதில் , ‘குற்றி’ என்பது தீர்மானமாயிற்று !

இப்போது எப்படிச் சொல்வது ?

தொல்காப்பியத்தின்படி –
          மகனல்லன் குற்றி √

2. ‘மகன்’ எனத்  தீர்மானமானால்?

தொல்காப்பியத்தின்படி –
 குற்றியன்று மகன் √

3 . ஆணா ? பெண்ணா ? – இதில் ஐயம் நீங்கி,
‘ஆண்’ என்று தீர்மானமானால் –

பெண் அல்லள்  ஆண் √

‘பெண்’ என்று தீர்மானமானால் –
ஆண் அல்லன் பெண் √

4. ஒன்றா? பலவா? – இதில் ஐயம் நீங்கி,
‘ஒன்று’ என்று தீர்மானமானால் –
பல அல்ல  ஒன்று √

‘பல’ என்று தீர்மானமானால் –
ஒன்று அன்று  பல √

இவற்றுக்கு நூற்பா !-
“தன்மை சுட்டலு முரித்தென மொழிப
 அன்மைக் கிளவி வேறிடத் தான” (கிளவி. 25)

‘தன்மை சுட்டலு முரித்தென மொழிப’ – பொருளின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தல் உரியதாகும்,
‘அன்மைக் கிளவி வேறிடத் தான’ -  அல்லாத தன்மையைக் குறிக்கும்சொல்லை  , எது இல்லையோ அதனோடு சேர்த்துச் சொல்லவேண்டும் !

அன்மைக் கிளவி – அல்லாததைக் குறிக்கும் சொல் !
‘பல அல்ல’ – இதில் அன்மைக் கிளவி , ‘அல்ல’!
‘குற்றி அன்று’ – இதில் அன்மைக் கிளவி ‘அன்று’
‘பெண் அல்லள்’ – இதில் அன்மைக் கிளவி ‘அல்லள்’ !

அல்லல் நீங்கிற்றா?
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 11, 2016 6:50 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (424)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்க  நூற்பாக்கள் 26 முதல் 30 வரை முன்பே இத் தொல்காப்பிய வரிசையில் எழுதப்பட்டுவிட்டதால்  இப்போது 31ஆவது நூற்பா ! :-

“யாதெவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத்  தோன்றும் ” (கிளவி. 31)

‘யாது , எவன் என்னும் ஆ  இரு கிளவியும்’ -  ‘யாது?’, ‘எவன்?’  எனும் அந்த இரு சொற்களும்,
‘அறியாப் பொருள்வயின் செறியத்  தோன்றும்’ – கேட்பவன் அறியாது, அறிவதற்காகக் கேட்கும்போது  ஆளப்படவேண்டும் !

எதிரே நிற்பவர்   இந்தியரா ? இலங்கைக்காரரா? எந்த நாட்டுக்காரர்? – இதை அறியவேண்டும் !

நிச்சயம் அவர் ஏதாவது ஒரு நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் !

விடையில்  ஏதாவது ஒரு நாடுதான் வரும் !

எனவே , கேட்போன் எப்படிக் கேட்கவேண்டுமாம் ?

உன் நாடு எது? ×
உன் நாடு யாது ? √

யாது – அஃறிணை ஒன்றன்பாலில் வரும்  வினாப்பெயர்.

‘எது?’ – இவ் வினாவில் உள்ள பிழை யாது?

இரண்டு மூன்று நாடுகள் அவனது நாடாக இருக்கமுடியாது! அப்படி இருந்தால்தான் ‘அவற்றில் எது?’ என்ற பொருளில் ‘எது?’ ஆளப்படலாம் !

ஒருவன் கையில் பை வைத்திருக்கிறான் !

அதில் சில பொருட்களைப் போட்டு வைத்திருக்கிறான் !

அப்போது அவனிடம் எப்படிக் கேட்கவேண்டுமாம்?  

உன் பையில் உள்ளது யாது ? ×

உன் பையில் உள்ளது எவன் ? √ (இந்தக் கால நடையில் சொல்வதானால் , உன் பையில் உள்ளது என்ன ? √)

ஏனெனில்,
எவன்? – அஃறிணை ஒன்றன்பாலிலும் , பலவின் பாலிலும் வரும் வினாப் பெயர்.
என்ன? - அஃறிணை ஒன்றன்பாலிலும் , பலவின் பாலிலும் வரும் வினாப் பெயர்.

அந்தப் பையில் ஒரு பொருளும் இருக்கலாம் , பல பொருட்களும் இருக்கலா மல்லவா?

எனவேதான் ஒன்றன்பாலுக்கும் பலவின்பாலுக்கும் பொருந்தும் வினாப் பெயரே வரவேண்டும் என்கிறார் தொல்காப்பியர் !

வினாப்பெயர் – மேலே குறித்த இதனை,  மொழியியலார்  Pronoun என்கின்றனர் ! தமிழில் இதனைப்  ‘பதிலிடு பெயர்’, ‘பிரதிப் பெயர்’ என்றெல்லாம் எழுதுவர் !

தொல்காப்பியர் கால ‘எவன்?’ என்பதிலிருந்தே , ‘என்?’ , ‘என்னை?’ , ‘என்ன?’ என்பனவெல்லாம் தோன்றின என ஆய்ந்துளர்!

சரி!

நாலைந்து பொருட்கள் ஓரிடத்தில் இருக்கின்றன !

உங்களுக்கு அதில் உள்ள ஒரு பொருள் இன்னது என்று தெரிகிறது ! ஆனால் சிறு ஐயம்!

இப்படிப்பட்ட நிலையில் எப்படிச் சொல்லவேண்டுமாம்?

உங்களுக்குத் தெரிந்த அந்தப் பொருள் கருங்காலிக் கட்டையானால் ,
இவற்றில் கருங்காலி எது? ×
இவற்றில் கருங்காலி  யாது? √

இதற்கு நூற்பா:-

   “அவற்றுள்
   யாதென வரூஉம் வினாவின் கிளவி
    அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்
    தெரிந்த கிளவி ஆதலு முரித்தே”  (கிளவி. 32)

‘    யாது என வரூஉம் வினாவின் கிளவி’ -  ‘யாது?’  எனும் வினாச் சொல்,
‘அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்’ – அறிந்த பொருளானாலும் ஐயம் தீர்வதற்காக,
‘தெரிந்த கிளவி ஆதலும்  உரித்தே’ – ஆள்வதற்கான சொல் ஆதல் உரியது!

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 62 of 84 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 73 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக