ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 57 of 84 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 70 ... 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 11:04 am

தங்களின் உழைப்பு இந்த படைப்பில் தெரிகிறது,நன்றி ஐயா.
Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (400)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ற்’ முதல் ‘றௌ’ வரையான  வல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று நெஞ்சில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
‘ன்’ முதல் ‘னௌ’ வரையான மெல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று மூக்கில்  நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by சசி Sun Nov 29, 2015 3:03 pm

அருமையான பதிவு. நன்கு ஆழ்ந்து படிக்க புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக தங்கள் பதிவு அமைந்து உள்ளது. நன்றி ஐயா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Fri Dec 11, 2015 7:01 pm

நன்றி சசி அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (401)

Post by Dr.S.Soundarapandian Fri Dec 11, 2015 7:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (401)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் , இப்போது தொல்காப்பியர் , ‘ர்’ , ‘ழ்’ஆகிய எழுத்தொலிகள் பிறக்கும் வகையைச் சொல்லுகிறார் !:-
“நுனிநா  வணரி  யண்ணம் வருட
ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 13)

‘நுனி நா அணரி’ – நுனி நாக்கானது மேல் நோக்கிச் சென்று ,
‘அண்ணம் வருட’ – அண்ணத்தை வருடிக் கொடுக்க,
‘ரகாரம் ழகாரம்’ – ‘ர்’ , ‘ழ்’,
‘ஆ  இரண்டும் பிறக்கும்’ – என்ற அந்த இரு எழுத்துகளும் பிறக்கும் !

நாக்கானது அண்ணத்தை வருடும்போது பிறக்கும் ஒலியை , மொழியியலில் , வருடொலி (Flap) என்பர் !

தொல்காப்பியர் இங்கே குறிக்கும் அண்ணத்தை மொழியியலில் , அண்ணம் (Palate ) என்றே சுட்டுகின்றனர் என்பது கவனிக்கத் தக்கது !

தொல்காப்பியர் கூறுவதுபோலவே இன்றைய மொழியியலாரும் , ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றை வருடொலி (Flap) என்றுதான் எழுதுகின்றனர் !

இந்த இரு எழுத்துகளையும் உச்சரித்துப் பார்த்தால் ‘வருடொலி’  என்ன என்பது உங்களுக்குப் புரியும் ; வேறொன்றுமில்லை !

‘ர்’ரின் பிறப்பைக் குறில் (Short) என்பர் !
‘ர்ர்’ரின் பிறப்பை நெடில் (Long) என்பர்!
 ‘கார்’ என்ற சொல்லில் ‘ர்’வருவதைக் காண்க!
‘சுர்ரென்று’ – என்பதில் ‘ர்ர்’ வருவதைக் காண்க!
‘ர்’ பிறக்கும்போது , குரல் நாண் அதிர்வதைக் கவனியுங்கள் !

இதனால் , ‘ர்’ரின் ஒலியை ,  ‘அண்ணஅதிர்வுடை க் குறில் வருடொலி’ (Palatal voiced flap short) எனலாம் !

இதைப் போலவே , ‘ழ்’ பிறக்கும்போதும் குரல் நாண் அதிர்கிறது (Vibrates)!
‘ழ்’ழை உச்சரிக்க வேண்டுமானால் , நாக்கை மேற்புறமாக மடிக்கவேண்டும் !இவ்வாறு மடிப்பதைத்தான் ’நாமடி’ (Retroflex ) என்கின்றனர் !

‘ழ்’ழைக் குறில் எனவும் , ‘ழ்ழ்’ழை நெடில் எனவும் கூறுவர் !
‘வாழ்க்கை’ – இங்கு ‘ழ்’ வருவதைக் காண்க !

எனவே , ‘ழ்’ழை , ’அண்ண அதிர்வுடை நாமடிக் குறில் வருடொலி ‘ (Palatal voiced retroflex  flap short) எனலாம் !
 ‘ழ்ழ்’ழை , ’அண்ண அதிர்வுடை நாமடி நெடில் வருடொலி ‘ (Palatal voiced retroflex  flap long) எனலாம் !

ர் , ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ , ரௌ  - ஆகிய 13  ரகர எழுத்துகளுமே ,  

‘அண்ணஅதிர்வுடை  வருடொலி’ (Palatal voiced flap ) யாகப் பிறக்கின்றன எனலாம் !

ழ் , ழ , ழா , ழி , ழீ , ழு , ழூ , ழெ , ழே , ழை , ழொ , ழோ , ழௌ - ஆகிய 13  ழகர எழுத்துகளுமே ,  ‘அண்ணஅதிர்வுடை  நாமடி  வருடொலி’ (Palatal  retroflex voiced flap ) யாகப் பிறக்கின்றன எனலாம் !

13  ரகரங்களுக்கும் உரிய காற்றானது மிடற்றில் (கண்டத்தில்) (Pharynx)நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்தாகும் (பிறப் . 1) !

இதைப்போன்றே 13 ழகரங்களுக்கு உரிய காற்றானது அதே மிடற்றில் நின்றாடும் காற்றே என்பதும் அவர்  கருத்தாகும் (பிறப் . 1) !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (402)

Post by Dr.S.Soundarapandian Sun Dec 13, 2015 6:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (402)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ‘ல்’ , ‘ள்’ ஆகியவற்றின் பிறப்பு !-

“நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற
ஆவயி  னண்ண மொற்றவும் வருடவும்
லகார  ளகார மாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 14)

 ‘நாவிளிம்பு வீங்கி அண்பல்  முதல்உற’ -  நுனி நாக்கின் இரு பக்கங்களும் உப்பி , கீழ் நுனி அண்ணத்தைச் சேர்ந்து ,  
‘ஆவயின்   அண்ணம் ஒற்றவும் வருடவும்’ – தொடவும் , வருடிக் கொடுக்கவும்,
‘லகாரம்   ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்’ – ‘ல்’ , ‘ள்’ஆகியன பிறக்கும் !

தொல்காப்பியர் ‘அண்பல்’ என்றதை, நாம் ‘Alveo palatal’ என்கிறோம்  !

தொல்காப்பியர் ‘ஒற்றவும்’ என்பதை, நாம் ‘Lateral continuant’ என்கிறோம் !

‘ல்’லை உச்சரிக்கும்போது , தொண்டையில் உள்ள குரல் நாண்(Vocal cord) அதிர்கிறது ! எனவே , ‘ல்’லை ‘அதிர்வுடை ஒலி’ (Voiced) என்கிறோம் !

‘ல்’ லைக் குறில் என்றும் , ‘ல்ல்’லை நெடில் என்றும் கூறுவர் !

வலை – இதில் உள்ளது குறில் ‘ல்’ !

பல்லி – இதில் உள்ளது நெடில் ‘ல்ல்’ !

இவற்றைத் தொகுத்து , ‘ல்’லின் பிறப்பை ,   அண்பல் அதிர்வுடைக் குறில் தொடர் மருங்கொலி (Alveo palatal voiced short lateral continuant) எனலாம் !

‘ல்ல்’லின் பிறப்பை -    அண்பல் அதிர்வுடைக் நெடில் தொடர் மருங்கொலி (Alveo palatal voiced long lateral continuant) எனலாம் !

ல் , ல , லா ,லி ,லீ , லு , லூ , லெ , லே , லை , லொ , லோ , லௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடைக்  தொடர் மருங்கொலியாகவே (Alveo palatal voiced  lateral continuant) பிறக்கின்றன எனலாம் !

தொல்காப்பியர் ‘வருடவும்’ என்பதை, நாம் ‘Flap’ என்கிறோம் !

‘ள்’ளை உச்சரிக்கும்போது , தொண்டையில் உள்ள குரல் நாண்(Vocal cord) அதிர்கிறது ! எனவே , ‘ள்’ளை ‘அதிர்வுடை ஒலி’ (Voiced) என்கிறோம் !

‘ள்’ளை உச்சரிக்கும்போது , நாவானது மேல் நோக்கி மடிகிறது !

எனவே , ‘ள்’ளை ‘நாமடி ஒலி’ (Retroflex sound) என்பர் !

‘ள்’ளைக் குறில் என்றும் , ‘ள்ளை’ளை நெடில் என்றும் கூறுவர் !

வளை – இதில் உள்ளது குறில் ‘ள்’ !

பள்ளி – இதில் உள்ளது நெடில் ‘ள்ள்’ !

இவற்றைத் தொகுத்து , ‘ள்’ளின் பிறப்பை ,   அண்பல் அதிர்வுடை நாமடிக் குறில் வருடொலி (Alveo palatal  retroflex voiced short flap) எனலாம் !

‘ள்ள்’ளின் பிறப்பை -    அண்பல் அதிர்வுடை நாமடி  நெடில்  வருடொலி (Alveo palatal retroflex voiced long flap) எனலாம் !

ள் , ள , ளா ,ளி ,ளீ , ளு ,ளூ , ளெ , ளே , ளை , ளொ , ளோ , ளௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடை  வருடொலியாகவே (Alveo palatal retroflex  voiced  flap) பிறக்கின்றன எனலாம் !
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:26 pm

Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (402)
ல் , ல , லா ,லி ,லீ , லு , லூ , லெ , லே , லை , லொ , லோ , லௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடைக்  தொடர் மருங்கொலியாகவே (Alveo palatal voiced  lateral continuant) பிறக்கின்றன எனலாம் !

ள் , ள , ளா ,ளி ,ளீ , ளு ,ளூ , ளெ , ளே , ளை , ளொ , ளோ , ளௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடை  வருடொலியாகவே (Alveo palatal retroflex  voiced  flap) பிறக்கின்றன எனலாம் !
***
[You must be registered and logged in to see this link.]
அருமையான விளக்கம் ,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 7:35 pm

Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (401)
இதனால் , ‘ர்’ரின் ஒலியை ,  ‘அண்ணஅதிர்வுடை க் குறில் வருடொலி’ (Palatal voiced flap short) எனலாம் !

இதைப் போலவே , ‘ழ்’ பிறக்கும்போதும் குரல் நாண் அதிர்கிறது (Vibrates)!
‘ழ்’ழை உச்சரிக்க வேண்டுமானால் , நாக்கை மேற்புறமாக மடிக்கவேண்டும் !இவ்வாறு மடிப்பதைத்தான் ’நாமடி’ (Retroflex ) என்கின்றனர் !
[You must be registered and logged in to see this link.]
தொல்காப்பியத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் கொடுத்த விளக்கம் அற்புதம்
பிரமிப்பு ,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (403)

Post by Dr.S.Soundarapandian Thu Dec 17, 2015 6:30 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (403)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் இப்போது ‘ப்’ , ‘ம்’ ஆகிய ஒலிகள் பிறப்பதைக் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-
“இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்” (பிறப். 15)

‘இதழ் இயைந்து’ – கீழ் உதடும் மேல் உதடும் சேர்ந்து ,
‘பிறக்கும் பகாரம் மகாரம்’ -  ‘ப்’ , ‘ம்’ ஆகியன பிறக்கும் !
‘ப்’ ஆனது இரு உதடுகள் சேரப் பிறக்கிறது என்று தொல்காப்பியர் சொல்லியதைத்தான் ‘Bilabial’ என்கிறார்கள்!

‘ப்’பை ஒலிக்கும்போது , குரல் நாண் அதிர்வதில்லை ! எனவே ‘ப்’பை ஒலிப்பிலாதது (Voiceless) என்கின்றனர் !

‘ப்’பை ஒலிக்கும்போது ‘இப்’ என்று  ஒரு நிறுத்தம் ஏற்படுவதைக் கவனியுங்கள் !
இதனால்தான் , ‘ப்’பை நிறுத்தொலி (Stop) என்கின்றனர் !

‘ப்’பைக் குறில் (Short)என்றும் , ‘ப்ப்’பை நெடில் (Long) என்றும் கூறுவர் !

  படம் – இதில் உள்ளது குறில் ‘ப்’.
கப்பம் – இதில் உள்ளது நெடில் ‘ப்’.

இவற்றைத் தொகுத்து , ‘ப்’பின் பிறப்பை ,  ஈரிதழ் ஒலிப்பிலா குறில் நிறுத்தொலி(Bilabial voiceless short stop) எனலாம் !

‘ப்ப்’பின் பிறப்பை ,  ஈரிதழ் ஒலிப்பிலா நெடில் நிறுத்தொலி(Bilabial voiceless long stop) எனலாம் !

‘ப்’பை உச்சரித்து அதிலிருந்து  ‘ப’வுக்குப் போகும்போது , நிறுத்த ஒலி விடுபடுகிறது ! இந்த விடுபடும் ஒலிதான் ‘வெடிப்பொலி’ (Plosive) எனப்படுகிறது !

ப , பா , பி , பீ ,பு , பூ, பெ , பே , பை , பொ , போ , பௌ – இப் பன்னிரு எழுத்தொலிகளுமே, ஈரிதழ் ஒலிப்பிலா வெடிப்பொலிகள்(Bilabial voiceless plosives)எனப்படும் !

இப்போது ‘ம்’மைக் காண்போம் !

‘ம்’ ஆனது  ‘ப்’பைப் போன்றே ஈரிதழ் (Bilabial )  ஒலி ஆகும்!

‘ம்’மை ஒலிக்கும்போது , குரல் நாண் அதிர்கிறது ! எனவே ‘ம்’மை ஒலிப்புடை  (Voiced)  ஒலி என்கின்றனர் !

‘ம்’மை ஒலிக்கும்போது  அவ்வோசை மூக்கு வழியாகப் போகிறது !

இதனால்தான் , ‘ம்’மை மூக்கொலி (Nasal) என்கின்றனர் !

‘ம்’மைக் குறில் (Short)என்றும் , ‘ம்ம்’மை நெடில் (Long) என்றும் கூறுவர் !

  மடல் – இதில் உள்ளது குறில் ‘ம்’.
கம்மல் – இதில் உள்ளது நெடில் ‘ம்ம்’.

இவற்றைத் தொகுத்து , ‘ம்’பின் பிறப்பை ,  ஈரிதழ் ஒலிப்புடைக் குறில் மூக்கொலி(Bilabial voiced  short nasal) எனலாம் !

‘ம்ம்’மின் பிறப்பை ,  ஈரிதழ் ஒலிப்புடை நெடில் மூக்கொலி(Bilabial voiced long nasal) எனலாம் !

‘ம்’மை உச்சரித்து அதிலிருந்து  ‘ம’வுக்குப் போகும்போதும் , மூக்கு ஒலிதான்(Nasal) ஏற்படுகிறது ! வெடிப்பொலி ஏற்படுவதில்லை !

ம் , ம , மா ,மி , மீ , மு , மூ , மெ , மே , மை , மொ , மோ , மௌ - இப் பதின்மூன்று எழுத்தொலிகளுமே, ஈரிதழ் ஒலிப்புடை  மூக்கொலிகள்(Bilabial voiced nasals)எனப்படும் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (404)

Post by Dr.S.Soundarapandian Sat Dec 19, 2015 11:23 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (404)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் தொல்காப்பியர் இப்போது ‘வ்’ வின்  பிறப்பை ஓதுகிறார் ! –
“பல்லித  ழியைய வகாரம் பிறக்கும்” (பிறப். 16)

‘பல் இதழ் இயைய’ – பல்லும் இதழும் சேர ,
‘வகாரம் பிறக்கும்’   - ‘வ்’  பிறக்கும் !

பல்லும் இதழும் சேர்ந்து பிறக்கும் ஒலியை , மொழியியலில்  ‘பல்லிதழ் ஒலி’(Labio dental sound) என்பர் !

‘வ்’வை உச்சரித்துப் பார்த்தால் , மேற்பல் வரிசையோடு கீழ் உதடு , சிறிது உள் மடிப்புடன் , அழுந்துவதைப் பார்க்கலாம் !

‘வ்’வை ஒலிக்கும்போது , குரல் நாண் அதிர்கிறது!

எனவே , ‘வ்’வை ஒலிப்புடை ஒலி (Voiced) என்பர் !

 ‘வ்’வை ஒலிக்கும்போது , சிறிது நேரம் உதடும் பல்லும் தொட்டுக்கொண்டபடி நிற்கிறது
!

எனவே , ‘வ்’வைத் தொடரொலி (Continuant)என்பர் !

‘வ்’வைக் குறில் (Short) என்றும் , ‘வ்வ்’வை நெடில் (Long) எனவும் கூறுப.

இவற்றைத் தொகுத்து , ‘வ்’வின் பிறப்பை ,  ‘பல்லிதழ் ஒலிப்புடைக்  குறில் தொடரொலி’ (Labio dental voiced short continuant) எனலாம் !

‘வ்வ்’வின் பிறப்பை ,  ‘பல்லிதழ் ஒலிப்புடை நெடில் தொடரொலி’ (Labio dental voiced long continuant) எனலாம் !

வ் , வ , வா , வி , வீ , வு , வூ , வெ ,வே ,  வை , வொ , வோ , வௌ – ஆகிய 13 எழுத்துகளும் ,  ‘பல்லிதழ் ஒலிப்புடைத்  தொடரொலி’ (Labio dental voiced  continuant) ஆகும் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:19 pm

Dr.S.Soundarapandian wrote:
பிறப்பியலில் தொல்காப்பியர் இப்போது ‘வ்’ வின்  பிறப்பை ஓதுகிறார் ! –
“பல்லித  ழியைய வகாரம் பிறக்கும்” (பிறப். 16)
பல் இதழ் இயைய’ – பல்லும் இதழும் சேர ,
‘வகாரம் பிறக்கும்’   - ‘வ்’  பிறக்கும் !
***
[You must be registered and logged in to see this link.]
வகாரம் பற்றிய அரிய தகவலுக்கு நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 57 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 57 of 84 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 70 ... 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum