புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 56 of 84 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 70 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 4:48 pm

மிக அருமையான பதிவு ஐயா




[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:30 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 103459460 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 56 1571444738

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 17, 2015 7:05 pm

நன்றி ஹரிபிரசாத் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 17, 2015 7:06 pm

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 17, 2015 7:10 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (398)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ‘ட்’ , ‘ண்’ ஆகிய இரு எழுத்தொலிகள் பிறக்கும் வகையைத் தொல்காப்பியர் உரைக்கிறார் ! –
“டகார ணகார நுனிநா வண்ணம்” (பிறப் . 9)
‘டகாரம்  ணகாரம்’ -  ‘ட்’ , ‘ண்’ ஆகிய இரு மெய்களும் ,
‘நுனிநா  அண்ணம்’ – நுனிநாக்கானது , நுனி அண்ணத்தைத் தொடப் பிறக்கும் !

  ‘ட்’ – ஆனது , நுனிநாக்கைச் சற்று மேல் நோக்கி வளைத்து , அண்ணத்தின் நுனிப்பகுதியைத் தொட்டு நிற்கும்போது , ‘ட்’ பிறக்கும் ! வளைந்த நாக்கானது நுனி அண்ணத்தைத்  தொட்டு அங்கே சிறிது நேரம் நிற்பதை நீங்கள் உச்சரித்துத் தெரிந்துகொள்ளுங்கள் ! இதைத்தான் நிறுத்தொலி (Stop) என்கிறார்கள்!

நாக்கு வளைவதால் , ‘நாமடி ஒலி’ (Retroflex) என்று  ‘ட்’டைச் சுட்டுவர்!

‘ட்’ டை உச்சரிக்கும்போது குரல்வளையில்  அதிர்வு (Vibration) எதுவும் ஏற்படாது ! எனவே ‘ட்’டை , அதிர்விலா ஒலி (Voiceless sound) என்பர் !

முன் அண்ணத்தில் ‘ட்’ , ‘ண்’ ஆகியன பிறக்கும் எனத் தொல்காப்பியர் பொதுவாகச் சொன்னாலும் , மொழியியலார் அண்ணத்து இடத்தில் நுட்பமான வேறுபாட்டைச் சொல்லுகின்றனர் !

‘ட்’டானது பிறக்கும் இடத்தை முன் அண்ணம் (Front palate) எனவும் , ‘ண்’ணானது பிறக்கும் இடத்தை அண்ணம் (Palate) எனவும் எழுதுகிறார்கள் !

பல்லிலிருந்து மேல்நோக்கிப் போகும்போது ,
1 . பல்லை ஒட்டிய சதைப் பகுதியைப் ‘பின் பல்’ (Back dental)  எனவும் ,
2 . ‘பின் பல்’ பகுதிக்குச்  சற்று மேலே உள்ள பகுதிக்குக் , ‘கீழ்நுனி அண்ணம்’ ( Alveo palate) எனவும்,
3 . ‘கீழ்நுனி அண்ணம்’  என்ற பகுதிக்குச்  சற்று மேலே உள்ள அண்ணத்திற்கு , ‘முன் அண்ணம்’  ( Front palate) எனவும்,
4 . ‘முன் அண்ண’ப் பகுதிக்குச் சற்று மேலே உள்ள அண்ணத்தை ‘அண்ணம்’ (Palate)எனவும் ,
5 . அண்ணப் பகுதிக்கு மேலே உள்ள பகுதியை நடு அண்ணம் (Mid palate)
எனவும் ,
6 . அண்ணத்தின் பிற்பகுதியைப் (தொண்டைக் குழிக்கு மேலே உள்ள பகுதி) ‘பின் அண்ணம்’ (Velar) எனவும் குறிக்கின்றனர் !

‘ட்’டைக் குறில் (Short) என்றும் , ‘ட்ட்’டை நெடில் என்றும் (Long) கூறும் மரபும் உண்டு !

இவற்றை ஒன்றாகச் சேர்த்து, ‘ட்’டின் பிறப்பை , ‘முன் அண்ண நாமடி அதிர்விலாக் குறில் நிறுத்தொலி ’ (Front palatal voiceless retroflex short stop) என்பர் !

‘ட்ட்’டின் பிறப்பை , ‘முன் அண்ண நாமடி அதிர்விலா நெடில் நிறுத்தொலி ’ (Front palatal voiceless retroflex long stop) என்பர் !

‘ட’வின் பிறப்பை , ‘முன் அண்ண நாமடி அதிர்விலா வெடிப்பொலி ’ (Front palatal voiceless retroflex plosive) என்பர் !

‘ண்’ணைப் பொறுத்தவரை , உச்சரிக்கும்போது காற்றானது மூக்கு வழியாகச் செல்வதால் , இதனை ‘மூக்கொலி’ (Nasal) என்பர் !

‘ண்’ணின் பிறப்பிடம் , அண்ணத்தில் (Palate) ஆகும் !

‘ண்’ணை உச்சரிக்க நாக்கை மேல்நோக்கி வளைக்கவேண்டும் !

‘ண்’ணை உச்சரிக்கும்போது , குரல் நாண்  (Vocal cord)சிறிது அதிர்கிறது (vibrates)!

  ‘ண்’ணைக் குறில் என்றும் ,  ‘ண்ண்’ணை நெடில் என்றும் குறிப்பர் !

 ‘ண்’ணும் மூக்கொலிதான் , ‘ண’வும் மூக்கொலிதான் !

இவற்றை ஒன்றாக்கி , ‘ண்’ணின் பிறப்பை , ‘அண்ண நாமடி அதிர்வுடைக் குறில் மூக்கொலி’ (Palatal voiced retroflex short nasal) என்பர் !

        ‘ண்ண்’ணின் பிறப்பை , ‘அண்ண நாமடி அதிர்வுடை நெடில் மூக்கொலி’ (Palatal voiced retroflex short nasal) என்பர் !

பொதுவாக , ‘ட்’ டுக்கு மேலேதான் ‘ண்’ ஒலிக்கிறது என்பதை நாம் உச்சரித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 8:22 pm

தங்களின் பதிவு அருமை நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 28, 2015 3:32 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (399)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியத்தின் பிறப்பியலில் நிற்கிறோம் !

சற்று முன்பு , மூன்று வகையான பிறப்பு முறைகளை அவர் சொன்னார் ! –
1 . பின் நாக்குப், பின் அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (க் , ங்)
2 . நடு நாக்கு, நடு அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ச் , ஞ்)
3 . நுனி நாக்கு, நுனி அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ட் , ண்)

இவற்றைத் தொகுத்து அடுத்த நூற்பாவை எழுதுகிறார் ! –
“அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின” (பிறப் . 10)

‘அவ் ஆறு எழுத்து’ – அந்த ஆறு எழுத்துகளாகிய  க் , ங் , ச் , ஞ் , ட் , ண் ஆகியன ,  
‘மூவகைப் பிறப்பின’ – மூன்று வகைப் பிறப்பால் வருவன!

மூன்று வகைப் பிறப்பை மேலே பார்த்தோம் !

இப்போது பார்த்த இந்த ஆறு வல்லெழுத்துகளும் பிறக்கும் இடத்தைத்தான் மூன்று வகை என்றார் தொல்காப்பியர் !

இவற்றுக்குக் காரணமான காற்று (வளி) எங்கிருந்து வருகின்றது ?

இதற்கான விடை நாம் பிறப்பியலில் பார்த்த முதல் நூற்பாவில் உள்ளது !

இதன் அடிப்படையில் நெஞ்சில் நிலைபெறும்  வளி, வல்லெழுத்திற்குக் காரணம்  என்பது பெறப்படும் !

இனி , த் , ந் ஆகியவற்றின் பிறப்புப்  பற்றித் தொல்காப்பியர் கூறுவதை நோக்குவோம் !-
“அண்ண நண்ணிய பன்முதன் மருங்கின்
நாநுனி  பரந்து மெய்யுற வொற்றத்
தாமினிது பிறக்குந் தகார நகாரம்”  (பிறப். 11)

‘அண்ணம்  நண்ணிய பல் முதல் மருங்கின்’ -  அண்ணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் பல்லின் மேற்புறத்தை,
‘நா நுனி  பரந்து மெய்யுற  ஒற்றத்’ – நுனி நாக்கானதுவிரிந்து ஒற்றிநிற்க ,
‘தாம் இனிது பிறக்கும்  தகார நகாரம்’ -  ‘த்’ , ‘ந்’ ஆகியன பிறக்கும் !

மொழியியலாரின் நுணுக்க ஆய்வின்படி , இந்த இரு எழுத்துகளுமே  ‘பின் பல் ஒலி’ (Back dental) எனப்படும் ! Alveolar என்பதும் இதுவே !

‘பின் பல் ஒலி’ என்பதும் ‘அண்பல் ஒலி’ என்பதும் ஒன்றே !

‘த்’தை உச்சரிக்கும்போது குரல் நாண் அதிராது (Voiceless)!

 ‘த்’தை உச்சரிக்கும்போது ஒலியில்  ஒரு நிறுத்தம் (Stop) ஏற்படும் !

‘த’வை உச்சரிக்குபோது ஒலியில்  ஒரு விடுதல் – வெடிப்பு  (Plosive) ஏற்படும் !

‘த்’தைக் குறில் எனவும் , ‘த்த்’தை நெடில் எனவும் குறிப்பர் !

‘பதம்’ எனும்போது ‘த்’வருவதைக் காண்க!

‘புத்தகம்’ எனும்போது ‘த்த்’ வருவது காண்க!

இவற்றின் அடிப்படையில் , ‘த்’தை ,  ‘அண்பல் ஒலிப்பிலா குறில் நிறுத்தொலி’(Back dental voiceless  stop short) எனவும் ,

‘த்த்’தைப்,  ‘அண்பல் ஒலிப்பிலா நெடில் நிறுத்தொலி’(Back dental voiceless  stop long) எனவும் ,
‘த’வைப்  ‘அண்பல் ஒலிப்பிலா குறில் வெடிப்பொலி ’ (Back dental voiceless  short plosive) எனவும் ,
‘தா’வைப்  ‘அண்பல் ஒலிப்பிலா நெடில் வெடிப்பொலி ’ (Back dental voiceless long  plosive) எனவும் , குறிக்கலாம் !

‘ந்’தை உச்சரிக்கும்போது குரல் நாண் அதிரும் (Voiced)!

 ‘ந்’தை உச்சரிக்கும்போது மூக்கு ஒலி (Nasal) ஏற்படுகிறது !

‘ந’வை உச்சரிக்கும்போதும் மூக்கொலியே ஏற்படும் !

‘ந்’தைக் குறில் எனவும் , ‘ந்ந்’தை நெடில் எனவும் குறிப்பர் !

‘நம்’ எனும்போது ‘ந்’வருவதைக் காண்க! (முதலி ‘ந்’ வந்து , பிறகு ‘அ’ சேர்ந்து ‘ந்’ வருகிறது !)

‘இந்நாள்’ எனும்போது ‘ந்ந்’ வருவது காண்க!
       
        இவற்றின் அடிப்படையில் , ‘ந்’தைப் ,  ‘அண்பல் ஒலிப்புடைக்   குறில் மூக்கொலி’(Back dental voiced  nasal short) எனவும் ,

            ‘ந்ந்’தைப்,  ‘அண்பல் ஒலிப்புடை நெடில்  மூக்கொலி’(Back dental voiced   nasal long) எனவும் , கூறலாம்!
       
           த் , த , தா , தி , தீ, து , தூ , தெ , தே , தை , தொ , தோ , தௌ – ஆகிய 13 தகர எழுத்துகளுமே  ‘அண்பல் ’ (Back dental) ஒலியாகவே பிறக்கின்றன !

          ந் ,   ந , நா , நி , நீ , நு , நூ ,  நெ , நே , நை , நொ , நோ ,நௌ  - ஆகிய 13 நகர ஒலிகளுமே  அண்பல் ஒலிகளே !

இவற்றை உச்சரித்துப் பார்த்துச் சரிபார்த்துக் கொள்ளலாம் !

ஒலிப்பைப் பொறுத்தவரை எந்தப் புத்தகத்தையும் விட உங்கள் நாக்கைப் பின்பற்றுங்கள் !

நாம் முன்னே கண்டதுபோல ,தொல்காப்பியரின் கருத்துப்படி, வல்லெழுத்தாகிய  த் , த , தா, தி , தீ , து, தூ ,தெ , தே , தை , தொ , தோ , தௌ ஆகிய  13 வல்லெழுத்துகளுக்குமே காற்றானது , நெஞ்சில் நிலைகொண்ட காற்றே !

தொல்காப்பியரின் கருத்துப்படி, மெல்லெழுத்தாகிய  ந் , ந , நா, நி , நீ , நு, நூ ,நெ , நே , நை , நொ , நோ , நௌ ஆகிய  13  மெல்லெழுத்துகளுக்குமே காற்றானது , மூக்கில் உலாவும் காற்றே !

தொல்காப்பியர் கூறிய அடிப்படை இன்றும் பொருந்திவருவதை நாம் நோக்கவேண்டும் !

இதுவே தொல்காப்பியத்தின் நிலைபேற்று இரகசியம்  (Secret of perpetuality of Tholkappiyam)!

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 4:58 pm

த்,ந், ஒலி , இதன் உயிர் மெய் எழுத்தின் ஒலிகள் பற்றி பதிவுக்கு நன்றி ஐயா.
Dr.S.Soundarapandian wrote:
தொல்காப்பியத்தின் பிறப்பியலில் நிற்கிறோம் !
சற்று முன்பு , மூன்று வகையான பிறப்பு முறைகளை அவர் சொன்னார் ! –
1 . பின் நாக்குப், பின் அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (க் , ங்)
2 . நடு நாக்கு, நடு அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ச் , ஞ்)
3 . நுனி நாக்கு, நுனி அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ட் , ண்)
[You must be registered and logged in to see this link.]

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 29, 2015 10:30 am

நன்றி பழ. முத்துராமலிங்கம் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 29, 2015 10:33 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (400)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது ,  ‘ற்’ , ‘ன்’ ! –
“அணரி நுனிநா வண்ண மொற்ற
 றஃகா  னஃகா  னாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 12)

‘அணரி நுனிநா வண்ணம்  ஒற்ற’ – மேல் நோக்கிச் சென்று , நாக்கின் நுனியானது கீழ் நுனி அண்ணத்தை ஒட்ட ,
‘றஃகான்  னஃகான்  ஆயிரண்டும் பிறக்கும்’-  ‘ற்’ , ‘ன்’ என்ற இரண்டும் பிறக்கும் !

கீழ் நுனி அண்ணம் – Alveo palate

கீழ் நுனி அண்ணத்தை நுனி நாக்கு சென்று ஒற்றப்  பிறப்பது – Alveo palatal

‘ற்’றை (itr) உச்சரிக்கும் போது , குரல் நாண் அதிர்வதில்லை !
எனவே , ‘ற்’  -  Voiceless

‘ற்’ என்று உச்சரிக்கும் போது அங்கே ஒரு ஒலி நிறுத்தம் ஏற்படுகிறது !
எனவே , ‘ற்’ – Stop

‘ற்’ றைக் குறில் எனவும் , ‘ற்றை’ நெடில் எனவும் கூறுவர் !
எனவே , ‘ற்’ – Short
‘ற்ற்’ – Long

இவற்றை ஒன்றாகச் சேர்த்தால் ‘ற்’றின் பிறப்பு – கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் நிறுத்தொலி  (Alveo palatal voiceless short stop)

‘ற்’றின் பிறப்பில் ஒரு நுணுக்கம் உள்ளது !

‘இற்’ (itr) – Stop (நிறுத்தொலி) ; அதிர்விலா ஒலி (Voiceless)
 ‘இற்ற்’ (iRR) – Trill (நடுங்கொலி) ; அதிர்வுடை ஒலி (Voiced)

‘ற்’றிலிருந்து ‘ற’வுக்குப் போகும்போது , அது வெடிப்பொலியாகிறது !

எனவே ‘ற’ - கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் வெடிப்பொலி  (Alveo palatal voiceless short  plosive)

ற , றா , றி , றீ , று , றூ , றெ , றே , றை , றொ , றோ , றௌ – 12 உயிர் மெய்களும் கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் வெடிப்பொலிகளே   (Alveo palatal voiceless   plosive)!

இப்போது ‘ன்’ !

‘ன்’னை  உச்சரிக்கும் போது , குரல் நாண் அதிர்கிறது !
எனவே , ‘ன்’  -  Voiced

‘ன்’ என்று உச்சரிக்கும் போது அங்கே ஒரு மூக்கொலி  ஏற்படுகிறது !
எனவே , ‘ன்’ – Nasal

‘ன்’னைக் குறில் எனவும் , ‘ன்னை’ நெடில் எனவும் கூறுவர் !
எனவே , ‘ன்’ – Short
‘ன்ன்’ – Long

இவற்றை ஒன்றாகச் சேர்த்தால் ‘ன்’னின் பிறப்பு – கீழ்நுனி அண்ண ஒலிப்புடைக்  குறில் மூக்கொலி  (Alveo palatal voiced short nasal)

ன , னா , னி , னீ , னு , னூ ,னெ , னே , னை , னொ , னோ , னௌ – 12 னகரங்களுமே கீழ்நுனி அண்ண ஒலிப்புடைக்   மூக்கொலிகளே   (Alveo palatal voiced  nasal).

‘ற்’ முதல் ‘றௌ’ வரையான  வல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று நெஞ்சில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!

‘ன்’ முதல் ‘னௌ’ வரையான மெல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று மூக்கில்  நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 56 of 84 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 70 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக