ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 52 of 84 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 68 ... 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (384)

Post by Dr.S.Soundarapandian Wed Jul 01, 2015 10:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (384)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஒ’ ஈறு சொல்லின் ஈற்றில் தனியாக வருவதை முன்பே (மொழி . 36) பார்த்தோம்!

இந்த ‘ஒ’ , வேறு எந்த மெய்யோடு சேர்ந்து சொல்லுக்கு ஈறாக வரும் ?

இதோ நூற்பா! –
“ஒவ்வும்  அற்றே நவ்வலங் கடையே” (மொழி . 39)

‘ந அலங்கடையே’ – ‘ந்’ தைத் தவிர்த்து’
‘ஒவ்வும் அற்றே’ – வேறு எந்த மெய்யோடும் சேர்ந்து ‘ஒ’ , சொல்லுக்கு ஈற்றிலே வராது !

‘ந்’துடன் சேர்ந்து , ‘ஒ’வானது சொல்லின் ஈற்றிலே வருமென்றால் அது எந்தச் சொல் ?

இளம்பூரணர் விடை –
1 . நொ
இங்கே  ‘ந்’ துடன் ‘ஒ’ சேர்ந்து ஒரு தனிச் சொல்லாக வந்துள்ளது !
நொ (பெயர்ச் சொல்) = துன்பம்

அடுத்த  நூற்பா –
 “ஏஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை” (மொழி . 40)

முன்னே பார்த்தபடி  (மொழி . 36) ‘ஏ’ ,’ஓ’ தனியாக நின்று சொல்லின் ஈறாகும் !

இப்போது கூடுதல் செய்தியாக , ‘ஞே’ , ‘ஞோ’என்ற இரு எழுத்துகளைத்  தவிர , மற்ற மெய்கள் மீது ஏறிய ’ஏ’ , ‘ஓ’ ஆகியன சொல்லின் ஈறாக வரும் என்கிறார் தொல்காப்பியர் !

இந் நூற்பாவிற்கு நச்சர்தான் எடுத்துக்காட்டுகளைக் கூறியுள்ளார் ! அவை !:
1 . உரிஞ
2. உரிஞா
3 .உரிஞி
4. உரிஞீ
5. உரிஞு
6. உரிஞூ

நச்சர் இவ்விடத்தில் , “இவை எச்சமும் வினைப் பெயரும் பற்றி வரும்” என்றார் !

வினைப் பெயர் – தொழிற்பெயர்.

சரசுவதிமகால் வெளியீட்டில் (2007), ‘ உரிஞு தவிர ஏனைய முறையே , ‘செய’ , ‘செய்யா’ ,  ‘செய்து’ ,  ’செய்யூ’ என்னும் வாய்பாட்டின’ எனக் கூறப்பட்டுள்ளது பொருத்தமே !

அஃதாவது –
1 . உரிஞ – ‘செய’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்க்க)
2 . உரிஞா – ‘செய்யா’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்க்கா)
3 . உரிஞி – ‘செய்து’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்த்து)
4 . உரிஞூ – ‘செய்யூ’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்த்தூ)
4 . உரிஞு – தொழிற்பெயர் (= தேய்த்தல்)
-----------------------------------------------------------------------------


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (385) -முனைவர் சு.சௌந்தரபாண்டியன் மொழிமரபில் , அடுத்து, ‘நு’ , ‘நூ’ , ‘வு’ , ‘வூ’ ஆகியன சொல்லின் ஈற்றிலே வருமா? – என்ற வினாவுக்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர் ! – “உஊ கார நவவொடு நவிலா” (மொழி. 41) அஃதாவது – நு , நூ , வ

Post by Dr.S.Soundarapandian Sat Jul 04, 2015 1:00 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (385)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , அடுத்து, ‘நு’ , ‘நூ’ , ‘வு’ , ‘வூ’ ஆகியன சொல்லின் ஈற்றிலே வருமா? – என்ற   வினாவுக்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர் ! –

“உஊ  கார  நவவொடு  நவிலா” (மொழி. 41)

அஃதாவது –
நு , நூ  , வு , வூ – இந்த நான்கும் சொல்லுக்கு ஈற்றிலே வாரா !

இங்கே இளம்பூரணர் , “நவிலா  என்றதனால் சிறுபான்மை நொவ்வும் கவ்வும் என வகாரத்தோடு ஈறாதல் கொள்க  என எழுதுகிறார் !”

இதன்படி ,
1 . நொவ்வு – இதில் , ‘வு’ ஈறாகி வருகிறது !
(நொவ்வு  = மெலிவு ) ; நொவ்வு – பெயர்ச்சொல்.

2 . கவ்வு – இதிலும் , ‘வு’ ஈறாகி வருகிறது !
(கவ்வு  = கவட்டை ) ; கவ்வு – பெயர்ச்சொல்.

இவ்வாறு , உரையாசிரியர்கள் , மூலத்திற்கு விதி விலக்காக எழுதுவது எதைக்காட்டுகிறது ?

இடைச் செருகலையா?

அல்ல !

இரண்டு உண்மைகளைக் காட்டுகிறது !-

1 . தொல்காப்பியரின் விதிகள், அவர் காலத்துத் தமிழ்ச் சொற்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சேர்த்துப் பார்த்து எழுதப்பட்டவை அல்ல !

கணிப்பொறி வசதிகள் இருக்கும் இந்நாளிலேயே தமிழ்ச் சொற்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்து ஆராய்வது துன்பமாக இருக்கும்போது, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை எவ்வாறிருக்கும் எனப் பார்த்துக்கொள்ளுங்கள் !

எனவேதான் உரையாசிரிகள் பார்வைக்கு வரும் ‘சிறுபான்மை விதிவிலக்குகளை’ அவர்கள் கூறுகிறார்கள் !

2 . உரையாசிரியர்கள் காலத்தில் புதிதாகச் சேர்ந்த சொற்களை  ஒதுக்காமல், அவற்றையும் தொல்காப்பிய விதிக்குள் அடக்கும் முயற்சியையும் உரையாசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர் !
‘இதை நானாகச் செய்யவில்லை , தொல்காப்பிய நூற்பாவின் இந்தச் சொல்லுக்கு உள்ளே புகுந்துகொண்டு என்னால் இதைக்கூறமுடிகிறது’ எனும் தொனியில், ‘நவிலா என்றதனால்’ என்ற பாங்கில் , தொல்காப்பிய நூற்பாச் சொல் ஒன்றைப் பிடித்துக்கொண்டு , அதில் சிறிது இடம் உண்டாக்கிக் கொண்டு, உரையாசிரியர்கள் காலச் சொற்களுக்கு இலக்கண அமைதி தேடியுள்ளனர் !

உரையாசிரியர்தம் உரைக்கோட்பாடு இது !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (386)

Post by Dr.S.Soundarapandian Sun Jul 19, 2015 4:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (386)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , அடுத்த நூற்பா :-

“உச்ச கார மிருமொழிக் குறித்தே” (மொழி. 42)

‘உச்சகாரம் ’- சு
‘இருமொழிக் குறித்தே’ – இரு எழுத்துச் சொற்களுக்கு மட்டும் ஈறாக வரும் !

1 . உசு  (உளு எனப்படும் மரப் புழு - Woodworm)

2 . முசு  (குரங்கில் ஒரு வகை)

இவ்விடத்தில் இளம்பூரணர் – “பசு வென்பது  ஆரியச் சிதைவு” என்கிறார் !
‘ஆரியச் சிதைவு’ என்றவுடன் ஆரியர்கள் கொண்டுவந்த சொல் – என எடுத்துக்கொள்ளக் கூடாது !
‘ஆரியம்’ என்பது, தமிழ் மண் தொடர்பானதுதான் !

இதுபற்றி எனது புராண ஆய்வுகளில் நான் ஆய்ந்துள்ளேன் ! அவற்றை மீண்டும் இங்கே விவரிக்க வேண்டியதில்லை !

‘பசு’ என்பது தூய தமிழ்ச்சொல்தான் எனவும் என் முன் நூற்களில் நிறுவியுள்ளேன் !

தொல்காப்பியர் , ஈரெழுத்துச் சொற்களில் மட்டுந்தான் ஈறாகச் ‘சு’ வரும் என்கிறாரே ,  ‘சு’வை ஈற்றிலே கொண்ட தமிழ்ச் சொற்கள் ‘கச்சு’ , ‘குச்சு’ என்றெல்லாம் உள்ளனவே ! – ஐயம் வரலாம் !

நச்சினார்க்கினியர் இதற்கு விடை கூறுகிறார் ! –

“கச்சு , குச்சு என்றாற் போல்வன குற்றுகரம்”

அஃதாவது – ‘கச்சு’ என்ற சொல்லில் உள்ள ஈற்று உகரம்  குற்றியலுகரம் ; எனவே இந்த ஈற்றுகரம் ‘உச்சகாரம்’ என்ற கணக்கில் வராது ! ஈற்றிலே நிற்கும் முற்றியலுகரம் பற்றித்தான் தொல்காப்பியர் பேசுகிறார் !

இங்கே நச்சர் தம் உரையில் கூடுதல் விளக்கம் ஒன்று தருகிறார்! -

அஃதாவது-  ‘ச்’ மீது ஏறிய ‘உ’ (சு) ஈறாக நிற்பதற்குத்தான் ‘இரண்டெழுத்துச் சொல்லாக இருக்கவேண்டும்’ என்ற விதியைத் தொல்காப்பியர் விதித்தார் ! வேறு உயிர்கள் ஏறிய ‘ச்’ ஈறாக வருவதற்கு அவர் விதி கூறவில்லை என்று குறிப்பிட்டுச் சில எடுத்துக்காட்டுகளை நச்சர் தருகிறார் –
1 . கச்சை – இங்கு ‘ஐ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
கச்சை – பெயர்ச் சொல்

2 . துஞ்ச – இங்கு ‘அ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
துஞ்ச – எச்சச் சொல்

3 .எஞ்சா – இங்கு ‘ஆ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
எஞ்சா – எச்சச் சொல்

4 .எஞ்சி – இங்கு ‘இ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
எஞ்சி – எச்சச் சொல்

5 .அச்சோ – இங்கு ‘ஓ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
அச்சோ –  வியப்புச் சொல்

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by M.Jagadeesan Sun Jul 19, 2015 5:22 pm

" பசு " தூய தமிழ்ச் சொல் என்பது வியப்பைத் தருகிறது .

" ஆ " என்ற சொல்லே திருக்குறளிலும் , சிலப்பதிகாரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது .

பசு + பால் = பசுப்பால் என்பது சரியா அல்லது
பசு + பால் = பசும்பால் என்பது சரியா ?

ஆ + பால் = ஆப்பால் என்பது சரியா அல்லது
ஆ + பால் = ஆவின்பால் என்பது சரியா ?

விளக்கம் தரவும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (387)

Post by Dr.S.Soundarapandian Sun Jul 26, 2015 9:13 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (387)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொற்களின் ஈறுகளில் எந்தெந்த எழுத்துகள் வரலாம் என்று மொழிமரபில் கூறிக்கொண்டு வருகிறார் தொல்காப்பியர் !

இப்போது – ‘பு’ :
“உப்ப கார மொன்றென மொழிப
இருவயி னிலையும் பொருட்டா  கும்மே” (மொழி. 43)

‘உப்பகாரம்’ – பு எனும் எழுத்து ,
‘ஒன்று என மொழிப’ – சொல்லின் ஈற்றிலே வருவது ஒரே ஒரு சொல்லில் மட்டும் என்பார்கள் ;
‘இருவயின்  நிலையும் பொருட்டா  கும்மே’- அச் சொல்லானது , தன்வினையிலும் வரும் பிறவினையிலும் வரும் !

இளம்பூரணர் காட்டிய எடுத்துக் காட்டு – ‘தபு’

‘தபு’ – இது தன்வினையில் வரும்போது ‘நீ சா’ என்று பொருளாகும் !

‘தபு’ – இது பிறவினையில் வரும்போது ‘நீ ஒன்றனைச் சாவி’ என்று பொருளாகும் !

இங்கே ‘சாவி’ என்பது ‘பூட்டைத் திறக்கும் சாவி ’அல்ல  !

சாவி = சாகச் செய் ; கொல்லு

சொல் ஒன்று ! பொருள் வேறு !

இளம்பூரணர் உரைப்படி – ‘படுத்துச் சொன்னால்  நீ சா’ என்பது பொருளாகும் !

‘படுத்துச் சொல்வது’ என்றால், பாயை விரித்து அதில் படுத்துக்கொண்டு சொல்வது அல்ல !

மெதுவாக, அடிநிலை ஒலிப்பில் உச்சரித்தால் – அது படுத்துச் சொல்வது !

‘தபு’ – இதனை மெதுவாக, அடிநிலை ஒலிப்பில் உச்சரித்தால் , அப்போது அதன் பொருள் ‘நீ சா’ என்பது பொருள் !

சற்று உரக்க , மேல்நிலை ஒலிப்பில் உச்சரித்தால் – அது எடுத்துச் சொல்வது !

இளம்பூரணர் உரைப்படி , ‘தபு’ என்ற சொல்லை, எடுத்துச் சொன்னால் , ‘சாவி’ என்பது பொருள் !

‘தபு’ என்பதற்கு ‘நீ சா’ என்பது பொருளாகும் போது – அது ‘தன்வினை’ (Active voice).
‘தபு’ என்பதற்குs ‘ சாவி’ என்பது பொருளாகும் போது – அது ‘பிறவினை’ (Passive voice).

எனவே இந்த நமது ஆய்வால் , தொல்காப்பியர், தன்வினை , பிறவினைகளைக் கூறவில்லை என்ற வாதம் அடிபட்டுப் போகிறது !

தொல்காப்பியருக்கு முன்னரே தமிழில் தன்வினை , பிறவினைகள் இருந்துள்ளன என மதிப்பிடவேண்டும் !

சிலர் , ‘தமிழுக்குத் தன்வினை பிறவினைகளைத் தந்ததே ஆங்கிலம்தான்’ என்றுகூட எழுதியுள்ளார்கள் ! முழுத் தவறு அது !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Sun Jul 26, 2015 9:25 pm

எம். ஜெகதீசன் அவர்களே !
தங்களின் ஆய்வு மனம் வரவேற்கத் தக்கது !
நன்றி !
1 .தமிழ்த் தொன்னூல்களில் ஒரு சொல் இடம்பெறவில்லையானால் அதனை ‘வடசொல்’என்று ஒதுக்கிவிடும் போக்கு தீயது ! தவறானது !

2 . ‘பசுப்பால்’ என்பதே , புணர்ச்சி இலக்கணப்படி சரியானது !

3 . ‘பசும்பால்’ என்பது மெலித்தல் விகாரமாக , மக்கள் நாவில் வந்தது ! அதனை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை !

4 . ‘ஆப் பால்’ - என்பது புணர்ச்சி இலக்கணப்படி சரியானதுதான் !

5 . ‘ஆவின் பால்’ - என்பதன் நடுவே ‘இன்’ சாரியை சேர்ந்துள்ளது ! இதுவும் இலக்கணப்படி சரியானதுதான் ! மக்கள் நாவில் புழங்க இந்தச் சாரியை தேவைப்பட்டது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by M.Jagadeesan Sun Jul 26, 2015 10:11 pm

தங்கள் விளக்கத்திற்கு மிக்கநன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (388)

Post by Dr.S.Soundarapandian Sun Aug 09, 2015 7:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (388)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் அடுத்தது –
“எஞ்சுதல் எல்லாம் எஞ்சுதல் இலவே” (மொழி. 77)

‘எஞ்சுதல் எல்லாம்’ – சொல்லுக்கு ஈற்றிலே வராது என்று குறிப்பிடப்பட்ட உயிர்மெய்கள் எல்லாம் ,
‘எஞ்சுதல் இலவே’ – அந்த எழுத்துகளைச் சுட்டிச் சொல்லும்போது ஈறாக வருவதற்குத் தடை இல்லை !

சொல்லுக்கு ஈற்றிலே வராது என்று குறிப்பிடப்பட்ட உயிர்மெய்கள் : -
1 . ஙௌ

2 . கெ

3 . கொ

4 . ஞே

5 . ஞோ

6 . நு

7 . நூ

8 . வு

9 . வூ

இளம்பூரணர் உரைப்படி, மேல் எழுத்துகள் தம்மைக் குறிக்கும்போது கீழ்வருமாறு சொல்லுக்கு ஈறாகும் ! –

1 . ஙௌக் களைந்தார்  (= ஙௌ எனும் எழுத்தை நீக்கினார்)

2 . கெக் களைந்தார்  

3 . கொக் களைந்தார்  

4 . ஞேக் களைந்தார்  

5 . ஞோக் களைந்தார்  

6 . நுக் களைந்தார்  

7 . நூக் களைந்தார்  

8 . வுக் களைந்தார்  

9 . வூக் களைந்தார்  

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (389)

Post by Dr.S.Soundarapandian Sun Sep 06, 2015 5:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (389)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த நூற்பா , மொழிமரபில் –
“ஞணநம  னயரல வழள  வென்னும்
அப்பதி  னொன்றே புள்ளி யிறுதி ” (மொழி. 45)

‘ஞணநம  னயரல வழள  என்னும்’ – ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள்
‘அப்பதி  னொன்றே ’ - ஆகிய பதினோரு மெய்களும்,
‘புள்ளி யிறுதி’ – புள்ளி எழுத்துகளாய்ச் சொற்களின் ஈற்றிலே வரும் !

இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் –
1 . உரிஞ்

2 . மண்

3 . பொருந்

4 . திரும்

5 . பொன்

6 . வேய்

7 . வேர்

8 . வேல்

9 . தெவ்

10 .வீழ்

11. வேள்

‘பொருந்’ என்ற சொல்லைப் பார்த்தோமல்லவா?

இந்தச் சொல்லோடு ‘வெரிந்’ என்ற சொல்லைச் சேர்த்து ஆக மொத்தம் தமிழில் இந்த இரண்டு சொற்களில் மட்டுமே ‘ந்’ ஈறாக வரும் என்கிறது அடுத்த நூற்பா!-

“உச்ச காரமொடு நகாரஞ் சிவணும்” (மொழி . 46)

மொழி மரபு நூற்பா 42இல், ‘உசு’ , ‘முசு’ ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்கள் மட்டுமே ‘சு’வை ஈறாகக் கொண்டு தமிழில் வரும் எனப் பார்த்தோம் !அதைத்தான் தொல்காப்பியர் ‘உச்ச காரமொடு’ என்று பேசுகிறார் !

அஃதாவது , ‘சு’ ஈறு எப்படி இருசொற்களில் மட்டும் வருமோ,  அதைப் போலவே ‘ந்’ ஈறும் இரு சொற்களில் மட்டுந்தான் வரும் என்பது கருத்து !

இலட்சக் கணக்கான தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது இரண்டில்தான் இப்படி வரும் என்று அந்தக் காலத்திலேயே தொல்காப்பியரால் கூறமுடிந்துள்ளது நமக்கு வியப்பைத் தருகிறது !

பழந்தமிழ்க் கல்விமுறையின் சிறப்பை இஃது ஓதுகிறது !
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by M.Jagadeesan Sun Sep 06, 2015 5:18 pm

உசு ,முசு இவற்றுடன் " பசு " என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாமா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 52 of 84 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 68 ... 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum