ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 41 of 84 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 62 ... 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Oct 06, 2014 1:10 pm

நன்றி சரண்யா !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (320)

Post by Dr.S.Soundarapandian Sun Oct 26, 2014 4:51 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (320)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் நிற்கிறோம் !

இவ்வியலில் ‘ஐ’ ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணரும் எனப் பார்த்துவருகிறோம் !

இப்போது ‘மழை’ என்ற ‘ஐ’ஈற்றுச் சொல் ! –

“மழையென் கிளவி வளியிய நிலையும்” (உயிர்மயங். 85)

தொல்காப்பியர் தம் இலக்கண நூலை எவ்வளவு சுவையாக மாணவர்களுக்குச் சொல்லவேண்டுமோ அவ்வளவு சுவையாகச் சொல்கிறார் !

இஃது ஓர் இலக்கணக் கோட்பாடு ! தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாடு !

‘மழை’ எப்படிப் புணரும் என்று கேட்டால், ‘வளி’ புணர்வது போலப் புணரும் என்கிறார் ! வளி = காற்று !

உயிர்மயங்கியல் நூற்பா 40இல் , ‘வளி’ என்ற இகர ஈற்றுச் சொல் , ‘அத்து’ , ‘இன்’ ஆகிய சாரியைகளைப் பெற்றுப் புணரும் என்பதை நாம் முன்பே ஆய்ந்துள்ளோம் ! அதனை இங்குக் கொணர்க !-

(1) மழை + கொண்டான் = மழைக் கொண்டான் ×
மழை + கொண்டான் = மழைக்குக் கொண்டான் ×
மழை + கொண்டான் = மழையத்துக் கொண்டான் √ (அத்து - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
மழை + கொண்டான் = மழையிற் கொண்டான் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(மழையத்துக் கொண்டான், மழையிற் கொண்டான் – மழை பெய்யும்போது பெற்றான்)

(2) மழை + சென்றான் = மழைச் சென்றான் ×
மழை + சென்றான் = மழைக்குச் சென்றான் ×
மழை + சென்றான் = மழையத்துச் சென்றான் √ (அத்து - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
மழை + சென்றான் = மழையிற் சென்றான் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(மழையத்துச் சென்றான், மழையிற் சென்றான் – மழை பெய்யும் காலத்தில் போனான்)

(3) மழை + தந்தான் = மழைத் தந்தான் ×
மழை + தந்தான் = மழைக்குத் தந்தான் ×
மழை + தந்தான் = மழையத்துத் தந்தான் √ (அத்து - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
மழை + தந்தான் = மழையிற் றந்தான் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(மழையத்துத் தந்தான், மழையிற் றந்தான் – மழை பெய்யும் காலத்தில் பெற்றான்)


(4) மழை + போயினான் = மழைப் போயினான் ×
மழை + போயினான் = மழைக்குப் போயினான் ×
மழை + போயினான் = மழையத்துப் போயினான் √ (அத்து - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
மழை + போயினான் = மழையிற் போயினான் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(மழையத்துப் போயினான், மழையிற் போயினான் – மழை பெய்யும்போது போனான்)

மேல் எடுத்துக்காட்டுகளில் , வருமொழி முதல் எழுத்து வல்லெழுத்தாக இருப்பதைக் கவனியுங்கள் !

ஆனால் , இந்தத் தொல்காப்பிய விதி உயிர், இடை, மெல் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருசொற்களுக்கும் பொருந்தும் என்கிறார் நச்சினார்க்கினியர் !

இதன்படி –

(5) மழை + ஞான்றான் = மழைஞ் ஞான்றான் ×
மழை + ஞான்றான் = மழைக்கு ஞான்றான் ×
மழை + ஞான்றான் = மழையத்து ஞான்றான் (அத்து – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
மழை + ஞான்றான் = மழையின் ஞான்றான் (இன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

(6) மழை + மாட்டினான் = மழைம் மாட்டினான் ×
மழை + மாட்டினான் = மழைக்கு மாட்டினான் ×
மழை + மாட்டினான் = மழையத்து மாட்டினான் (அத்து – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
மழை + மாட்டினான் = மழையின் மாட்டினான் (இன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

(7) மழை + வந்தான் = மழை வந்தான் ×
மழை + வந்தான் = மழைக்கு வந்தான் ×
மழை + வந்தான் = மழையத்து வந்தான் (அத்து – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
மழை + வந்தான் = மழையின் வந்தான் (இன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

(8) மழை + அடைந்தான் = மழை யடைந்தான் ×
மழை + அடைந்தான் = மழைக்கு அடைந்தான் ×
மழை + அடைந்தான் = மழையத்து அடைந்தான் (அத்து – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
மழை + அடைந்தான் = மழையின் அடைந்தான் (இன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

                                                                                           ***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by கோம்ஸ் பாரதி கணபதி Thu Oct 30, 2014 7:16 pm

எங்கிருந்தேன் இத்தனை நாளாய், ஐயனே
ஏங்கிக் கிடந்தேன், ஏழையேன், என் தமிழ்
இலக்கணத்தை உள் வாங்கி, உணர்த்த
வல்லார் ஒருவர் இலையே என!

கூடல் நகர் கொண்டவா, பாண்டியனே
உந்தன் 'நூலகம்' கண்டு நான் வண்டென
உண்டு வந்தேன், இன்று தொல்காப்பியக்
கடலினைக் கண்டேன், அமெரிக்க
மண் வாழ் இம்மழலை உன் திசை நோக்கித்
தொழுது கொண்டேன்!
நன்றி - கோம்ஸ் பாரதி கணபதி
Gomes Barathi Ganapathi Tennessee USA
கோம்ஸ் பாரதி கணபதி
கோம்ஸ் பாரதி கணபதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (321)

Post by Dr.S.Soundarapandian Sat Nov 01, 2014 7:26 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (321)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஐ’ ஈறு தொடர்கிறது !

இப்போது ‘வேட்கை’ எனும் ‘ஐ’ஈற்றுச் சொல் !
-
“செய்யுண் மருங்கின் வேட்கை யென்னும்
ஐயெ னிறுதி யவாமுன் வரினே
மெய்யொடுங் கெடுத லென்மனார் புலவர்
டகாரம்  ணகார மாதல் வேண்டும் ” (உயிர்மயங். 86)

‘செய்யுள்  மருங்கின் வேட்கை என்னும்’ -  செய்யுளில் ‘வேட்கை’ என்ற சொல்லானது,
‘ஐ - என் இறுதி அவா முன் வரினே ’ – ‘வேட்கை’ எனும் சொல்லிலுள்ள ‘ஐ’ முன்பாக , ‘அவா’ என்ற சொல் வந்து புணரும்போது,
‘மெய்யொடும் கெடுதல்  என்மனார் புலவர்’ – ‘கை’ கெடும் என்பார்கள் புலவர்கள் !
‘டகாரம்  ணகாரம்  ஆதல் வேண்டும்’ – அப்போது ‘ட்’ , ‘ண்’ ஆகும் !

வேட்கை + அவா = வேணவா (செய்யுளில் மட்டும்) (அல்வழிப் புணர்ச்சி)

இங்கே இளம்பூரணர் உரை – “ ‘வேணவா நலிய வெய்ய வுயிரா’என வரும். இதனை உம்மைத் தொகையாகக் கொள்க .
‘அவா’ வென்பது அவ்வேட்கையின் மிகுதி”.

‘வேட்கையும் அவாவும்’ என்பதே , ‘வேணவா’ என்பதன் பொருள் .

மேலும் இளம்பூரணர் – “அவ்வல்வழியை வேற்றுமை முடிபிற்கு முன் கூறாததனால்  விச்சாவாதி என்றாற்போல வரும் உம்மைத் தொகை அல்வழி முடிபும் , பாறாங்கல் என இருபெயரொட்டு அல்வழி முடிபும் கொள்க” என்கிறார் !

உயிர்மயங்கியல் நூற்பா 82இல் , ‘விச்சாவாதி’ யை வேற்றுமைப் புணர்ச்சி என்றார் இளம்பூரணர் ; அதே இளம்பூரணர் , நமது இந்த நூற்பாவில் (உயிர்மயங்.86 ) இதே ‘விச்சாவாதி’யை அல்வழிப் புணர்ச்சி என்கிறார் !

எது சரி?

இரண்டுமே சரிதான் !

‘வித்தையால் ஆன வாதி’ என்ற பொருளில் -  வேற்றுமைப் புணர்ச்சி !

‘வித்தையும் வாதியும்’ என்ற பொருளில் -  அல்வழிப் புணர்ச்சி !

ஆகவே சிலர் எழுதியுள்ளதுபோல இளம்பூரணர் உரையில் இடைச்செருகல் (Interpolation) எதுவும் இங்கு ஏற்படவில்லை !

வித்தை – கல்வி

வாதி – வாதிடுவோன்

‘வித்தை’ என்ற தமிழ்ச் சொல்தான் ‘வித்யா’ ஆனது !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (322)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 02, 2014 9:25 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (322)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது தொல்காப்பியர் ‘ஏ’ ஈறு முடிந்துவிட்டதால் , ‘ஓ’ ஈற்றுச் சொற்களை எடுத்துக்கொள்கிறார் !-

“ஓகார விறுதி யேகார வியற்றே” (உயிர்மயங் . 87)

‘ஓகார  இறுதி’ -  ‘ஓ’வை ஈற்றிலே கொண்ட பெயர்ச்சொற்கள் ,
‘ஏகார இயற்றே’ – ‘ஏ’ ஈற்றுப் பெயர்ச் சொற்கள் போலப் புணரும் !

புதிர் போடுகிறார் தொல்காப்பியர் பாருங்கள் !

இந்தப் புதிரில் ஓர் இலக்கியச் சுவை இருந்தாலும், தொல்காப்பியர் நோக்கம் அதுவன்று !
தொல்காப்பியரின் நோக்கம் நூலை மனப்பாடம் செய்ய ஏதுவாக்குவதுதான் !

சரி!

‘ஏ’ ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணரும் ?

நாம் முன்பே உயிர்மயங்கியல் நூற்பா 72இல் , ‘சே + கடிது = சேக்கடிது’ என்று பார்த்துள்ளோம் ! அதனை இங்கு கொணர்க!
அஃதாவது , வல்லொற்றுச் சந்தி புணர்ச்சியில்  வரும் என்பதே செய்தி !

1 . ஓ + கடிது = ஓகடிது ×
ஓ + கடிது = ஓக்கடிது √(அல்வழிப் புணர்ச்சி)
   (ஓ – மதகு நீரைத் தாங்கும் பலகை ; ஓக்கடிது – மதகு நீரைத் தாங்கும் பலகை கடுமையானது)

2. ஓ + சிறிது = ஓசிறிது×
ஓ + சிறிது = ஓச்சிறிது√ (அல்வழிப் புணர்ச்சி)
   ( ஓச்சிறிது – மதகு நீரைத் தாங்கும் பலகை சிறியது)

3. ஓ + தீது = ஓதீது×
ஓ + தீது = ஓத்தீது √(அல்வழிப் புணர்ச்சி)
   ( ஓத்தீது – மதகு நீரைத் தாங்கும் பலகை தீயது)

4. ஓ + பெரிது = ஓபெரிது
ஓ + பெரிது = ஓப்பெரிது (அல்வழிப் புணர்ச்சி)
   ( ஓப்பெரிது – மதகு நீரைத் தாங்கும் பலகை பெரியது)

இவை இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் !

இனி நாம் சில எடுத்துக்காட்டுகளைத் தரலாம் ! –

5. சோ + கடிது = சோகடிது×
சோ + கடிது = சோக்கடிது√  (அல்வழிப் புணர்ச்சி)
( சோ – அரண் ; சோக்கடிது – அரண் கடிது)

6. சோ + சிறிது = சோசிறிது×
சோ + சிறிது = சோச்சிறிது√  (அல்வழிப் புணர்ச்சி)
(  சோச்சிறிது – அரண் சிறிது)

7. சோ + பெரிது = சோபெரிது×
சோ + பெரிது = சோப்பெரிது√  (அல்வழிப் புணர்ச்சி)
(  சோப்பெரிது – அரண் பெரிது)

8. சோ + தீது = சோதீது×
சோ + தீது = சோத்தீது√  (அல்வழிப் புணர்ச்சி)
(  சோத்தீது – அரண் தீது)

 ‘ஓ’ ஈற்றுச் சொற்கள் யாவும் பெயர்ச்சொற்கள் என்பதையும் , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் என்பதையும் கவனிக்க !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (323)

Post by Dr.S.Soundarapandian Tue Nov 04, 2014 5:16 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (323)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஓ’ ஈற்றுப் பெயர்ச் சொல் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொல்லுடன் புணரும்போது , சந்தியில் வல்லெழுத்து மிகும் எனப் பார்த்தோமல்லவா?

‘இப்படி எல்லா ஓகாரச் சொல்லும் புணரும் என எதிர்பார்க்காதீர்கள் ! அதற்கு மாறாகப் புணரும் இடங்களை நன் காட்டுகிறேன் !’ எனக் கூறுவதுபோல அடுத்த நூற்பாவை அமைக்கிறார் ! :-

“மாறுகொ ளெச்சமும் வினாவு மையமும்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்” (உயிர்மயங். 88)

‘மாறுகொள் எச்சமும்’ – எதிர்மறை எச்சப் பொருள்தரும்  ‘ஓ’ ஈற்றையுடைய பெயர்ச் சொல்லும்,
‘வினாவும்’ – வினாப் பொருள்தரும்  ‘ஓ’ ஈற்றையுடைய பெயர்ச் சொல்லும்,
‘ஐயமும்’ – ஐயப் பொருள்தரும்  ‘ஓ’ ஈற்றையுடைய பெயர்ச் சொல்லும்,
‘கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்’ – முன் நூற்பாவில் கூறிய வல்லெழுத்துச் சந்தி வராது, இயற்கையாகப் புணரும் !

1. யானோ + கொண்டேன் = யானோக் கொண்டேன் ×
யானோ + கொண்டேன் = யானோ கொண்டேன் √ (அல்வழிப் புணர்ச்சி)

( ‘யானோ? ’ என்றால் , ‘யானில்லை’ என்ற எதிர்மறைப் பொருள் தோன்றுவது காண்க !
இதுதான் ‘மாறுகொள் எச்சம்’!)

2. நீயோ + கொண்டாய் = நீயோக் கொண்டாய் ×
நீயோ + கொண்டாய் = நீயோ கொண்டாய் √ (அல்வழிப் புணர்ச்சி)

3. பத்தோ + பதினொன்றோ = பத்தோப் பதினொன்றோ ×
பத்தோ + பதினொன்றோ = பத்தோ  பதினொன்றோ √ (அல்வழிப் புணர்ச்சி)

இனி , இளம்பூரணர் உரையால் அறியலாகும் சில இலக்கண நுட்பங்கள் !-

4. அவனோ+ கொண்டான் = அவனோக் கொண்டான்  ×
அவனோ+ கொண்டான் = அவனோ கொண்டான்  √ (அல்வழிப் புணர்ச்சி)
( ‘அவனோ கொண்டான் ?’ எனக் கேட்டால் , ‘இல்லை, அவனைத் தவிர
மற்றவர்கள் எல்லோரும் கொண்டனர்’ என்ற விடை கிட்டும் ; அவனைப் பிரித்துக் கூறுவதால் ,
 ஈற்று ஓகாரம் ‘பிரிநிலை ஓகாரம் !’)

5. நன்றோ+ தீதோ + அன்று = நன்றோத் தீதோ வன்று  ×
நன்றோ+ தீதோ + அன்று = நன்றோ தீதோ வன்று √  (அல்வழிப் புணர்ச்சி)
( ‘நன்றோ தீதோ அன்று’ எனக் கூறினால் , ‘ நன்றுமில்லை தீதுமில்லை ‘
என்பது பொருள் !  கருத்தை ஐயத்திற்கு இடமில்லாமல் தெரியக் கூறுவதால்  இங்கே வந்த
ஓகாரம்  ‘தெரிநிலை ஓகாரம் ’!)

6. ஓ+ கொண்டான் = ஓஒக் கொண்டான்  ×
ஓ+ கொண்டான் = ஓஒ கொண்டான்  √  (அல்வழிப் புணர்ச்சி)
( ‘ஓஒ கொண்டான்’  எனக் கூறினால் , கொண்ட அவனுடைய செயலைச் சிறப்பித்துக்கூற ‘ஓ’ எனும் இடைச்சொல் பயன்பட்டுள்ளதால் இங்கே வந்த
ஓகாரம்  ‘சிறப்பு ஓகாரம் ’!  ‘ஓ’வின் பின் வந்த ‘ஒ’ அளபெடை; ஈறு ‘ஓ’தான் !)

7. களிறென்கோ + கொய்யுடைய மாவென்கோ = களிறென்கோக்  கொய்யுடைய மாவென்கோ ×

களிறென்கோ + கொய்யுடைய மாவென்கோ = களிறென்கோ  கொய்யுடைய மாவென்கோ√  
(அல்வழிப் புணர்ச்சி)

( களிறு என்கோ மா என்கோ – இங்கு ‘களிறு என்பேனா ? குதிரை என்பேனா?
என்று அடுக்கிக் கூறுவதற்கு ‘ஓ’ பயன்படுவதால் இந்த ஓகாரத்தை ‘எண்ணோகாரம்’ என்பர் !)

8. யானோ + தேறேன் = யானோத் தேறேன் ×
யானோ + தேறேன் = யானோ தேறேன் √ (அல்வழிப் புணர்ச்சி)  
( ‘யானோ தேறேன்’ எனில் ,  ‘யான் தேறேன்’ என்பதே பொருள் ! ஈற்று ‘ஓ’ அசைதான்!
இதனால் , இங்கு வந்த ‘ஓ’  ‘ஈற்றசை’ எனபடும் !)  

ஓ ! ஓ-வில் இவ்வளவு உள்ளதா?  

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (324)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 16, 2014 2:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (324)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘சிறுமி சாப்பிடுவதற்கா கேட்கிறாள்?’ – எனில் , ‘இல்லை , பிச்சுப் பிச்சு விளையாடக் கேட்கிறாள்!’ என்பது பொருள் !
இல்லையா?

‘சாப்பிடுவதற்கா?’ என்ற நமது நடையைப் பின்னோக்கிக் கொண்டுபோங்கள் !

‘சாப்பிடுவதற்கோ?’ என்பது வரும் !

இங்கு வந்த ‘ஓ’ தான் ‘ஒழியிசை ஓகாரம்’!

அஃதாவது, ‘ஓ’வை உச்சரிக்கும் ஓசையால் ஓர் எதிமறைப் பொருள் தோன்றும் !

இந்த ஒழியிசை ஓகாரம் புணர்ச்சியில் எப்படி வரும் ? –

“ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற் றியற்றே” (உயிர்மயங். 89)

அஃதாவது –

‘யானோ + கொண்டேன்’ என்று , சந்தி வராமல், ‘ஓ’ எனும் இடைச்சொல்லை ஈற்றிலே பெற்ற சொல் புணர்ந்ததுபோல ஒழியிசை ஓகாரத்தை ஈற்றிலே பெற்ற சொல்லும் இயல்பாகப் புணரும் !

1. கொளலோ + கொண்டான் = கொளலோக் கொண்டான் ×
கொளலோ + கொண்டான் = கொளலோ கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)
(கொளலோ கொண்டான் ? – கொள்ளுதலோ செய்தான் ? ; ‘கொள்ளவில்லை’ என்ற
பொருள் தோன்றுதல் காண்க !)

2. செலலோ + சென்றான் = செலலோச் சென்றான் ×
செலலோ + சென்றான் = செலலோ சென்றான் √  (அல்வழிப் புணர்ச்சி)
(செல்லோ சென்றான்? – செல்லுதலோ செய்தான் ? ; ‘செல்லவில்லை’ என்ற
பொருள் தோன்றுதல் காண்க !)

3. தரலோ + தந்தான் = தரலோத் தந்தான் ×
தரலோ + தந்தான் = தரலோ தந்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)
(தரலோ தந்தான்? – தருதலோ செய்தான் ?  ; ‘தரவில்லை’ என்ற
பொருள் தோன்றுதல் காண்க !)

4. போதலோ + போயினான் = போதலோப் போயினான் ×
போதலோ + = போதலோ  = போயினான் √  (அல்வழிப் புணர்ச்சி)
(போதலோ போயினான்? – போதலோ செய்தான் ?  ; ‘போகவில்லை’ என்ற
பொருள் தோன்றுதல் காண்க !)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (325)

Post by Dr.S.Soundarapandian Sat Nov 22, 2014 1:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (325)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அல்வழிப் புணர்ச்சியில் , ‘ஓ’ எனும் சொல் , வல்லொற்றுப் பெற்று, ‘ஓ+கடிது = ஓக்கடிது’ எனப் புணரும் என்று முன்பே (உயிர்மயங். 87)பார்த்தோம் !

இதே பாங்கில் , வேற்றுமைப் புணர்சியிலும் ,‘ஓ’எனும் சொல், வல்லொற்று ப் பெற்றுப் புணரும்; ஆனால் அங்கு ‘ஒ’ இடையே வரும் என்று காட்டுகிறார் தொல்காப்பியர் ! –

“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே
ஒகரம் வருத லாவயி னான” (உயிர்மயங். 90)

1. ஓ + கடுமை = ஓஒக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி) (புணர்சியிடையே ஒகரம் வந்துள்ளதைக் காண்க !)

(ஓஒக் கடுமை - மதகு நீரைத் தாங்கும் பலகை கடுமையானது)

2. ஓ + சிறுமை = ஓஒச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஓஒச் சிறுமை - மதகு நீரைத் தாங்கும் பலகை சிறுமையானது)

3. ஓ + தீமை = ஓஒத் தீமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஓஒத் தீமை - மதகு நீரைத் தாங்கும் பலகை தீமையானது)

4. ஓ + பெருமை = ஓஒப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஓஒப் பெருமை - மதகு நீரைத் தாங்கும் பலகை பெருமையானது)

‘ஓ’ எனும் ஓரெழுத்துச் சொல் , நம்மைச் சுற்றிச் சுற்றி எப்படி வலை பிண்ணுகிறது
பாருங்கள் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (325)

Post by Dr.S.Soundarapandian Sat Nov 22, 2014 1:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (325)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அல்வழிப் புணர்ச்சியில் , ‘ஓ’ எனும் சொல் , வல்லொற்றுப் பெற்று, ‘ஓ+கடிது = ஓக்கடிது’ எனப் புணரும் என்று முன்பே (உயிர்மயங். 87)பார்த்தோம் !

இதே பாங்கில் , வேற்றுமைப் புணர்சியிலும் ,‘ஓ’எனும் சொல், வல்லொற்று ப் பெற்றுப் புணரும்; ஆனால் அங்கு ‘ஒ’ இடையே வரும் என்று காட்டுகிறார் தொல்காப்பியர் ! –

“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே
ஒகரம் வருத லாவயி னான” (உயிர்மயங். 90)

1. ஓ + கடுமை = ஓஒக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி) (புணர்சியிடையே ஒகரம் வந்துள்ளதைக் காண்க !)

(ஓஒக் கடுமை - மதகு நீரைத் தாங்கும் பலகை கடுமையானது)

2. ஓ + சிறுமை = ஓஒச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஓஒச் சிறுமை - மதகு நீரைத் தாங்கும் பலகை சிறுமையானது)

3. ஓ + தீமை = ஓஒத் தீமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஓஒத் தீமை - மதகு நீரைத் தாங்கும் பலகை தீமையானது)

4. ஓ + பெருமை = ஓஒப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஓஒப் பெருமை - மதகு நீரைத் தாங்கும் பலகை பெருமையானது)

‘ஓ’ எனும் ஓரெழுத்துச் சொல் , நம்மைச் சுற்றிச் சுற்றி எப்படி வலை பிண்ணுகிறது
பாருங்கள் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (326)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 23, 2014 10:13 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (326)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

   ‘ஓ’ ஈற்றுச் சொல்லில் நிற்கிறோம் !

எந்த ‘ஓ’ ஈற்றுச் சொல்?

கோ- இதுதான் நாம் பார்க்கப் போகும் ‘ஓ’ஈற்றுச் சொல் !

இது வருமாறு புணரும்-

“இல்லொடு கிளப்பி  னியற்கை யாகும்” (உயிர்மயங். 91)

கோ + இல் = கோவில் (வேற்றுமைப் புணர்ச்சி)

சில இளம்பூரணர் உரைப் பதிப்புகளில் ‘கோவில்’ என்றும் , நச்சர் உரைப் பதிப்புகளில் ‘கோயில்’ என்றும் காணப்படுகிறது !
சரசுவதிமகால் பதிப்பில் (2009) , இளம்பூரணர் உரையாகவும் ‘கோவில்’ என்பதே தரப்பட்டுள்ளது !
ஆனால் , உடம்படுமெய் விதிப்படி , ‘கோவில்’ என்பதே சரியானது ! இதுவே இங்கு கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இப்போது ஈடுபட்டுவரும் செம்பதிப்பு (Critical edition) முறையில் ஆய்வுசெய்த பிறகே இந்த ஆய்வு முழுமை அடையும் ! செம்பதிப்பின் தேவையும் (Necessity for Critical Edition) இதனால் உணரப்படும் !

நாம் மேலே பார்த்த ‘கோ’ என்ற சொல் உயர்திணையா ? அஃறிணையா ?

கோ - உயர்திணைப் பொருளில் வந்துள்ள அஃறிணைப் பெயர்ச் சொல் !

‘வேந்து’ என்பது உயர்திணைப் பொருளில் வந்துள்ள இன்னொரு அஃறிணைப் பெயர்ச் சொல் !

‘ஒற்று’ என்பதும்  உயர்திணைப் பொருளில் வந்துள்ள அஃறிணைப் பெயர்ச் சொல்தான் !

தமிழ்தான் எத்தனை அதிசயங்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டுள்ளது !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 41 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 41 of 84 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 62 ... 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum