புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
49 Posts - 30%
i6appar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
49 Posts - 30%
i6appar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 36 of 84 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 60 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 03, 2014 9:40 am

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 3838410834 
-
[You must be registered and logged in to see this image.]

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 04, 2014 9:35 am

                         தொடத் தொடத் தொல்காப்பியம் (282)
                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                 ‘இ’ஈற்று நாள் பெயரின் புணர்ச்சிகளைக் காட்டிய தொல்காப்பியர் , அதே ‘இ’ ஈற்றுத் திங்கள் பெயர் எப்படிப் புணரும் என அடுத்துக்காட்டுகிறார் ! :-
 
         “திங்கள் முன்வரி  னிக்கே சாரியை” (உயிர்மயங். 46)
 
 ‘திங்கள் முன்வரின்’ -  ‘இ’ஈற்று மாதப் பெயர் நிலைமொழியாக வந்தால் ,
 
‘இக்கே சாரியை’ – வேற்றுமைப் புணர்ச்சியில் ‘இக்கு’ சாரியை ஆக வரும் !

 இந் நூற்பாவில் , வருசொல் பெயரா ? வினையா?

 விடைக்கு முன் நூற்பாவைப் பார்க்கவேண்டும் !

முன் நூற்பாவில், ‘தொழில் நிலைக் கிளவிக்கு ஆன் இடை வருதல் ஐயம் இன்று’ (உயிர்மயங்.45) என்று சொன்னதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் !
 
எனவே அதனை அடுத்து வந்த நூற்பாவில்  கூறப்படும் வருமொழியும் வினைசொல்லாகாவே இருத்தல் வேண்டும் !

இதுதான் தொல்காப்பிய உரைமரபு என்பது !
 
 எடுத்துகாட்டுகளை வருமாறு விளக்கித் தரலாம் ! :-
 
  1.ஆடி + கொண்டான் = ஆடியாற் கொண்டான் ×
     ஆடி + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான் √  (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
                                                                                             
            (ஆடிக்குக் கொண்டான் – ஆடிமாதத்தில் பெற்றான்)
 
 
  2.ஆடி + சென்றான் = ஆடியாற் சென்றான் ×
     ஆடி + சென்றான் = ஆடிக்குச் சென்றான் √  (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
                                                (ஆடிக்குச் சென்றான் – ஆடிமாதத்தில் சென்றான்) 
 
 
  3.ஆடி + தந்தான் = ஆடியாற் றந்தான் ×
     ஆடி + தந்தான் = ஆடிக்குத் தந்தான் √  (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
                                                                                            
                                                (ஆடிக்குத் தந்தான் – ஆடிமாதத்தில் தந்தான்)
 
 
  4.ஆடி + போயினான் = ஆடியாற் போயினான் ×
     ஆடி + போயினான் = ஆடிக்குப் போயினான் √  (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
            (ஆடிக்குப் போயினான் – ஆடிமாதத்தில் போனான்)
 
            மேலை எடுத்துக்காட்டுகளில், வருமொழிகள் யாவும் வினைகளாகவே இருப்பதைக் காண்க!


                 அதுமட்டுமல்ல ! அவை எல்லாம் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட  சொற்களாகவும் இருப்பதைக் கவனிக்க !
 


                                                                   ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 05, 2014 9:33 am

                                                    தொடத் தொடத் தொல்காப்பியம் (283)


                         -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
        உயிர் மயங்கியலில் ‘இ’ ஈற்றுச் சொற்களை முடித்துக்கொண்டு , ‘ஈ’ஈற்றுச் சொற்களுக்குச் செல்கிறார் தொல்காப்பியர் ! :-
 
        “ ஈகார விறுதி யாகார வியற்றே”  (உயிர்மயங். 47)
 
        ‘ஈகார இறுதி’ -  ‘ஈ’ ஈற்றுச் சொற்களின் ஈறுகள்,
         ‘ஆகார இயற்றே’ -  ‘ஆ’ஈற்றுச் சொற்களின் இறுதிகளைப்போலப் புணரும் !
 
         ‘ஆ’ ஈற்றுச் சொற்கள்  எப்படிப் புணர்ந்தன ?
        
        ‘தாரா + கடிது = தாராக் கடிது’ (உயிர்மயங். 19), என்று பார்த்தோமே ? மறந்துவிட்டீர்களா?
 
        இதே முறையில் –


       1.தீ + கடிது = தீ கடிது ×
          தீ + கடிது = தீக் கடிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
       2.தீ + சிறிது = தீ சிறிது ×
          தீ + சிறிது = தீச் சிறிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
       3. தீ + தீது = தீ தீது ×
           தீ + தீது = தீத் தீது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
      4.தீ + பெரிது = தீ பெரிது ×
          தீ + பெரிது = தீப் பெரிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
         ‘ஈ’ ஈற்றுச் சொல்லாக இளம்பூரணர் ‘தீ’ யைக் கையில் எடுக்க , நச்சினார்க்கினியர் , ‘ஈ’யைச் சுட்டுகிறார் ! :-
 
    5.   ஈ + கடிது = ஈ கடிது ×
           ஈ + கடிது = ஈக் கடிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
    6.   ஈ + சிறிது = ஈ சிறிது ×
          ஈ + சிறிது = ஈச் சிறிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
    7.  ஈ + தீது = ஈ தீது ×
          ஈ + தீது = ஈத் தீது √         (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
    8.  ஈ + பெரிது = ஈ பெரிது ×
          ஈ + பெரிது = ஈப் பெரிது √  (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
 
             மேலை இருவர் எடுத்துக்காட்டுகளிலுமே வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள்தாம் வருசொற்கள் என்பதைக்              கவனிக்க !
 
              மேலும் , ‘தீ’யில் , ஈறு (த் + ஈ)மட்டுமே ‘ஈ’ ! ஆனால் ஓரெழுத்து ஒருமொழியான ‘ஈ’யில் சொல்லும் அதுவே , ஈறும் அதுவே என்பதையும் கவனிக்க !
 


                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 06, 2014 9:06 am

                                               தொடத் தொடத் தொல்காப்பியம் (284)


                                   -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
             நீ குட்டையானவன்
             நீக் குட்டையானவன்     
-           
              - இவற்றில் எது சரியானது ?
 
 இதற்குத் தொல்காப்பிய விதி யாது ?
 
இதுதான் தொல்காப்பிய விதி ! :-
 
 “நீயென் பெயரு மிடக்கர்ப் பெயரும்
  மீயென மரீஇய  விடம்வரை கிளவியும்
 ஆவயின் வல்லெழுத்  தியற்கை யாகும்”  (உயிர்மயங். 48)
 
 ‘நீ என் பெயரும்’ -  ‘நீ’ என்ற ‘ஈ’ ஈற்றுப் பெயரும் ,


‘இடக்கர்ப் பெயரும்’ -   இடக்கர் அடக்கலாக வரும் ‘பீ’ எனும் ‘ஈ’ஈற்றுச் சொல்லும் ,


‘மீ  என மரீஇய இடம் வரை கிளவியும்’ -  மரூஉச் சொல்லாய் நின்று, இடத்தை
                                                                உணர்த்தும்  ‘மீ’ என்ற ‘ஈ’ ஈற்றுச் சொல்லும்,


 ‘ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் ’- புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி    
                                                                    பெறாது , இயற்கையாக முடியும் !
 
           இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-
 
           1. நீ + குறியை = நீக் குறியை ×
              நீ + குறியை = நீ குறியை √  (அல்வழிப் புணர்ச்சி)
                                (நீ குறியை – நீ குட்டையானவன்)
 
          
              நீ + சிறியை = நீச் சிறியை ×
              நீ + சிறியை = நீ சிறியை √  (அல்வழிப் புணர்ச்சி)
                                (நீ சிறியை – நீ சிறியவன்)
 
 
              நீ + தீயை = நீத் தீயை ×
              நீ + தீயை = நீ தீயை √  (அல்வழிப் புணர்ச்சி)
                                (நீ தீயை – நீ தீயவன்)
 
           நீ + பெரியை = நீப் பெரியை ×
           நீ + பெரியை = நீ பெரியை √  (அல்வழிப் புணர்ச்சி)
                                (நீ பெரியை – நீ பெரியவன்)
 
       
 2 .  பீ + குறிது = பீக் குறிது ×
       பீ + குறிது = பீ குறிது √   (அல்வழிப் புணர்ச்சி)
 
     பீ + சிறிது = பீச் சிறிது ×
     பீ + சிறிது = பீ சிறிது √   (அல்வழிப் புணர்ச்சி)
 
     பீ + தீது = பீத் தீது ×
     பீ + தீது = பீ தீது √   (அல்வழிப் புணர்ச்சி)
 
      பீ + பெரிது = பீப் பெரிது ×
      பீ + பெரிது = பீ பெரிது √   (அல்வழிப் புணர்ச்சி)
 
 
3 . மீ + கண் = மீக் கண் ×
    மீ + கண் = மீ கண் √  (வேற்றுமைப் புணர்ச்சி )
 
    மீ + செவி = மீச் செவி ×
    மீ + செவி = மீ செவி √  (வேற்றுமைப் புணர்ச்சி )
 
     மீ + தலை = மீத் தலை ×
     மீ + தலை = மீ தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி )
 
     மீ + புறம் = மீப் புறம் ×
     மீ + புறம் = மீ புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி )
 
 
      நூற்பாவில் , ‘மீ என மரீஇய’ – என்று வந்ததல்லவா?
 
    எந்தச் சொல் ‘மீ’ என்று மருவியதாம் ?
      
      நச்சர் விடை கூறியுள்ளார் !
 
   குற்றியலுகரப் புணரியல் நூற்பா 27இல் விடை கூறியுள்ளார் !
 
   நச்சரின் கருத்துப்படி –
 
 ‘மேற்கு’ என்ற சொல்லே ‘மீ’ என மருவி வந்தது !
 


                         ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 07, 2014 11:31 am

                                         தொடத் தொடத் தொல்காப்பியம் (285)
                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                சற்றுமுன் ‘மீ + கண் = மீகண்’ என்ற விதியைத் தொல்காப்பியர் கூறக் கேட்டோம் !
 
உடனே அதே கையோடு இதற்கு விதிவிலக்காச் சில சொற்களும் உள என்று இன்னொரு நூற்பாவைத் தருகிறார் தொல்காப்பியர் ! :-
 
 “இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம்
  உடனிலை மொழியு முளவென மொழிப”  (உயிர்மயங். 49)
 
 ‘இடம்வரை கிளவிமுன்’ – இட்த்தைக் குறிக்கும் சொல்லான ‘மீ’ என்பதன் முன் ,
 
‘வல்லெழுத்து மிகூஉம்’ – சந்தியாக வல்லெழுத்து வரக்கூடிய ,
  ‘ உடனிலை மொழியும்  உளவென மொழிப’ – இசந்து நிற்றலை உடைய சொற்களும் உள்ளன !
 
1 .  மீ + கோள் = மீகோள் ×
      மீ + கோள் = மீக்கோள்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
                                (மீக்கோள் – உடலின் மீது கொள்ளப்படுவது)
 
2 .  மீ + பல் = மீபல் ×
      மீ + பல் = மீப் பல்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
                                (மீப்பல் –பல்லின் மேற்பகுதி )
 
 
3 .  மீ + பாய் = மீபாய் ×
     மீ + பாய் = மீப் பாய்√  (வேற்றுமைப் புணர்ச்சி)
                                (மீப்பாய் – பாயின் மேற்பகுதி )
 
  ‘மீக்கோள் ’ என்பது ஆசாரக்கோவையிலும் (பாடல் 31) , ‘மீப்பாய்’ என்பது புநானூற்றிலும் (பாடல் 30) வந்துள்ளதாக எழுதியுள்ளனர் .
 
 உரையின் இறுதியில் இளம்பூரணர் ஏதோ சொல்ல வருகிறார் கேட்போமே ! –
 
 “ உடனிலை என்றதனான் , ‘மீங்குழி’ , ‘மீந்தோல்’ என மெல்லெழுத்துப் பெற்று முடிவனவும் கொள்க !”
 
 அஃதாவது-
 
4 . மீ + குழி = மீக் குழி ×
     மீ + குழி = மீங் குழி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
                                (மீங் குழி – குழியின் மேற்பகுதி )
 
5 . மீ + தோல் = மீத் தோல் ×
     மீ + தோல் = மீந் தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
                                (மீந் தோல் – தோலின் மேற்பகுதி )
 
  ‘மீக் குழி’ , ‘மீத் தோல்’ என்றெல்லாம் ஏன் வரவில்லை ?
 
 ‘மீக் குழி’ எனில் , ‘சிறு குழி’ , ‘பெருங்குழி’ என்பதுபோலக் குழியின் அளவைக் குறித்துவிடும் ! எனவேதான்,  இப் பொருள் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் ,  ‘மீங் குழி’ என வருகிறது ! அப்போதுதான் , ‘குழியின் மேற்பகுதி’ என்ற பொருள் தெளிவாக நிற்கும் !
 
 இதைப்போலவே ‘மீத்தோல்’ எனில் ‘ஆட்டுத்தோல்’ , ‘மாட்டுத்தோல்’ என்பதுபோல் ஏதோ ஒரு விலங்கின் தோல் என்ற பொருள் வந்துவிடும் ! இதைத் தவிர்ப்பதற்கே , ‘மீந்தோல்’ எனப் புணர்ச்சி ஏற்படுகிறது ! அப்போதுதான் , ‘தோலின் மேற்பகுதி’ என்ற தெளிவான பொருள் நமக்குக் கிட்டும் !
 
  தமிழ்ப் புணர்ச்சியில் , பொருள் மதிப்பே (Semantic value ) இன்றியமையாதது !
 மரபிலக்கணமும் , மொழியியலும் (Linguistics) மோதிக்கொள்ளும் இடம் இதுவே !
  
“இடத்திற்கேற்றவாறு ஒவ்வொன்றைச் சொல்லுகிறீர்களே ! இதுவும் இதுவும் சேர்ந்தால் இப்படித்தான் வரும் என்று ஏதாவது ஒன்றை மட்டும் சொல்லுங்கள் ! ” – என்று மொழியியலார் கேட்கின்றனர் !
   
  மொழியியலார் கேட்பதுபோல நடக்காது என்பது நம் மேலை ஆய்விலேயே தெளிவாகிவிட்டது !


                                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Aug 07, 2014 12:18 pm

சௌந்தராஜன் சார் .. எனக்கி உங்க தொல்காப்பியம் மண்டையில் ஏறமாட்டாங்கிது... நிறைய கவனம் சொலுத்தினால் ஏறும் ன்னு நினைக்கிறேன்.. வேறு ஏதாவது இலகு வழியிருந்தால் அறியத்தாருங்கள்...

 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 36 1571444738 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 08, 2014 9:29 am

ஜெசிபர் ! உங்கள் அக்கறை பாராட்டத்தக்கது !

தொடக்கத்திலிருந்து எனது தொல்காப்பியத் தொடரைப் படித்தால் எளிதாக விளங்கும் ! நானே பச்சைக் குழந்தைக்குக் கூறுவதுபோலத்தான்  கூறிவருகிறேன் ! 
ஆகவே வேறு இலகு வழி இல்லை !

நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 08, 2014 9:33 am

 
                                            தொடத் தொடத் தொல்காப்பியம் (286)
                                      -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
   உயிர்மயங்கியலில் ‘ஈ’ ஈற்றுச் சொற்களைப் பார்த்துவருகிறோம் !
 
 இப்போது , தெளிவான வேற்றுமைச் சொற்களைக் கூறப் புகுகிறார் தொல்காப்பியர் ! –
 
 “வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே” (உயிர்மயங். 50)
 
 ‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் பொருள் புணர்ச்சிக்கண்ணும் ,
 
‘அதனோர் அற்றே’ – ஆகார ஈற்றுப் புணர்ச்சிக்கு முன்பு கூறியது போலச் சந்தி பெறும் !


 ஆகார ஈற்றுப் புணர்ச்சிக்கு முன்பு என்ன கூறினார் ?
 
 உயிர்மயங்கியல் நூற்பா 23இல் ,  ‘தாரா + கால் = தாராக் கால் ’ என வல்லெழுத்துச் சந்தி வந்த விதியைப் பார்த்தோமல்லவா? அதைத்தான் இங்கே குறிப்பிடுகிறார் !
 
ஆக –


1 . ஈ + கால் = ஈகால் ×
     ஈ + கால் = ஈங்கால் ×
     ஈ + கால் = ஈக்கால் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (ஈக்கால் – ஈயின் கால்)
 
2 . ஈ + சிறகு = ஈசிறகு ×
     ஈ + சிறகு = ஈங்சிறகு ×
     ஈ + கால் = ஈச்சிறகு √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (ஈச்சிறகு – ஈயின் இறக்கை)
 
3 . ஈ + தலை = ஈதலை ×
     ஈ + தலை = ஈந்தலை ×
     ஈ + தலை = ஈத்தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (ஈத்தலை – ஈயின் தலை)
 
4 . ஈ + புறம் = ஈபுறம் ×
     ஈ + புறம் = ஈம்புறம் ×
     ஈ + புறம் = ஈப்புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (ஈப்புறம் – ஈயின் முதுகுப் பகுதி)
 
 வழக்கம் போல் நச்சினார்க்கினியர்,  ‘ஈ’ ஈற்றுச் சொல் ஒன்றைக் கூடுதலாகக் காட்டுகிறார் !-
 
 5 . தீ + கடுமை = தீகடுமை ×
     தீ + கடுமை = தீங்கடுமை ×
      தீ + கடுமை = தீக்கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (தீக்கடுமை – தீயின் கடுமை)
 
6 . தீ + சிறுமை = தீசிறுமை ×
     தீ + சிறுமை = தீஞ்சிறுமை ×
      தீ + சிறுமை = தீச்சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (தீச்சிறுமை – தீயின் சிறுமை)
 
7 . தீ + தீமை = தீதீமை ×
     தீ + தீமை = தீந்தீமை ×
      தீ + தீமை = தீத்தீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
               (தீத்தீமை – தீயின் தீமை)
 
8 . தீ + பெருமை = தீபெருமை ×
     தீ + பெருமை = தீம்பெருமை ×
      தீ + பெருமை = தீப்பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
                (தீப்பெருமை – தீயின் பெருமை)
 

                                                            ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Aug 08, 2014 8:27 pm

நன்றி ஐயா...........அப்படியே செய்கிறேன்....

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 09, 2014 1:12 pm

                                                      தொடத் தொடத் தொல்காப்பியம் (287)
                                      -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
             ‘ஈ’ ஈற்றுச் சொல் தொடர்கிறது !
            
              இப்போது – ‘நீ’  !
 
              ‘உனது கை’ என்ற பொருளில் கூறவேண்டுமானால் ,
 
             நீ + கை = நின கை     
             நீ + கை = நிற் கை     
             நீ + கை = நினக் கை  
             நீ + கை = நின் கை
                                                            
                  - இவற்றில் எது சரி ?
 
            தொல்காப்பிய விதியைப் பார்ப்போமே ! –
         
               “நீயெ னொருபெய ருருபிய  னிலையும்
               ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும் !”  (உயிர்மயங். 51)
 
             ‘நீ என் ஒரு பெயர்’ -  ‘நீ’ எனும் பெயர்ச்சொல் ,
             
            ‘உருபியல் நிலையும்’ -  உருபு புணரியல் நூற்பா 7இல், ‘நீ’ என்பது , ‘நின்’ ஆனது போல ஆகும்;
           
           ‘ஆவயின் வல்லெழுத்து இயற்கை யாகும்’ – அங்கு வருமொழியின் வல்லெழுத்தானது , சந்தி பெறாமல் , இயற்கையகப் புணரும் !


          1.   நீ + கை = நின கை ×        
                நீ + கை = நிற் கை ×
                நீ + கை = நினக் கை ×      
               நீ + கை = நின் கை   (வேற்றுமைப் புணர்ச்சி)
 
            2 .நீ + செவி = நின செவி ×   
                நீ + செவி = நிற் செவி ×    
                நீ + செவி = நினச் செவி × 
                நீ + செவி = நின் செவி   (வேற்றுமைப் புணர்ச்சி)
 
            3 .நீ + தலை = நின தலை ×   
                நீ + தலை = நிற் றலை ×    
                நீ + தலை = நினத் தலை × 
                நீ + தலை = நின் தலை   (வேற்றுமைப் புணர்ச்சி)
 
            4 .நீ + புறம் = நின புறம் ×     
                நீ + புறம் = நிற் புறம் ×      (ஆனால் பாடலில் இவ்வடிவம் கொள்ளப்பட்டுள்ளது; ‘நிற்புறம் காப்ப’)
                நீ + புறம் = நினப் புறம் ×  
                நீ + புறம் = நின் புறம்   (வேற்றுமைப் புணர்ச்சி)


                                                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 36 of 84 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 60 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக