புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
156 Posts - 79%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
1 Post - 1%
Pampu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
321 Posts - 78%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
8 Posts - 2%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 34 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 34 of 84 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 59 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 20, 2014 11:16 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (267)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முன் ஆய்வில் , ‘ஆன் கோடு’ என்ற புணர்ச்சியைப் பார்த்தோமல்லவா?

ஆனால் தொல்காப்பியர் காலத்திலேயே புலவர்களால் ‘ஆன’ என்ற வடிவம் கையாளப்படிருந்தது !அதுவும் ஒரு புணர்ச்சியாக அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது ! எனவே அதனையும் உள்ளடக்கி அடுத்து ஒரு நூற்பா எழுதலானார் தொல்காப்பியர் ! :-

“ஆனொற்  றகரமொடு  நிலையிட   னுடைத்தே” (உயிர்மயங். 30)

( ஆனொற்று – ஆன் + ஒற்று ; ஆன் – பசு)

இதற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டு- ‘ஆன நெய்’ !

ஆன் + நெய் = ஆன் + அ+ நெய் = ஆன நெய் √ (அ சேர்ந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கே , வருமொழியின் முதல் எழுத்து மெல்லினம் (நெ) என்பதைக் கவனிக்க !

இதற்கான ஒரு சிறு விளக்கத்தை இளம்பூரணர் எழுதுகிறார் –

“  ‘இடனுடைத்து’  என்றதனான் , வன்கணம் ஒழிந்த கணத்து இம் முடிபெனக் கொள்க !”

இதன்படி ‘ஆன’ வடிவம் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொல் வந்து புணரும்போது
ஏற்படாது என்றாகிறது !

இளம்பூரணரால் நாம் பெறும் இலக்கணம் இது !

உரையை முடிக்கும்போது இளம்பூரணர் – “  ‘அகரமொடும்’  என்ற உம்மையான் , அகரமின்றி வருதலே பெரும்பான்மை எனக் கொள்க ! ” என்கிறார் .

‘அகரமொடும்’  - என்று இளம்பூரணர் எழுதியதைக் கவனிக்க !

மேலே நூற்பாவில் அப்படி இல்லையே ? நூற்பாவில் ’அகரமொடு’ என்றுதானே உள்ளது ?

இங்கே நாம் ஒரு தீர்ப்பைச் சொல்லியாக வேண்டும் ! இப்படிப்பட்ட ஆய்வுதான் ‘செம்பதிப்பு’ (Critical Edition) என்பதில் செய்யப்படுகிறது !

அஃதாவது-

‘அகரமொடு’ என் எழுதுவது தொல்காப்பியர் நோக்கமாக இருக்கமுடியாது ! ஏனெனில் , முன் (உயிர்மயங்.29) நூற்பாவில் ,  ‘னகரம் ஒற்றும்’ என்று கூறிவிட்டு , இப்போது ’அகரமொடு’ என்று கூறினால் அது முன்னுக்குப் பின் முரணாக அமையும் ! எனவே ‘அகரமொடு’ என்ற ஆட்சிதொல்காப்பியர் கருத்தல்ல என்பது தெளிவாகிறது ! ‘அகரமொடும்’ என்பதே தொல்காப்பியர் ஆட்சியாக இருக்கவேண்டும் என்பதும் தெளிவாகிறது !

அப்படியானால் நூற்பாவில் ‘அகரமொடும்’ என்று எழுதவேண்டியதுதானே ?

நூற்பாவில் அப்படி எழுத முடியது ! ஏனெனில் , அதற்கு அடுத்த சீரைப் பாருங்கள் ! அது
மெல்லின எழுத்தை முதலாகக் கொண்டது ! ஆகவே முன் சீரிலுள்ள ‘ம்’ , புணர்ச்சி விதிப்படி
மறையும் ! ஆகவே நூற்பாவில் கண்ட ‘அகரமொடு’ என்ற வடிவே சரியானது !

                                          ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 21, 2014 9:20 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (268)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஆன்’ என்ற பெயர்ச்சொல், வல்லெழுத்து அல்லாத பிற எழுத்துகளை முதலாகக் கொண்ட
சொற்களுடன் புணரும்போது, ‘ஆன’ என்றாகும் எனச் சற்றுமுன் பார்த்தோம் !
அடுத்த நூற்பாவிற்கும் ‘ஆன்’ தொடர்கிறது ! :-

“ஆன்முன்  வரூஉ  மீகார பகரம்
தான்மிகத்  தோன்றிக்  குறுகலு முரித்தே”  (உயிர்மயங். 31)

 ‘ஆன் முன் வரூஉம்  ஈகார பகரம்’ -  ‘ஆன்’ என்ற சொல்முன் வரக்கூடிய , ‘பீ ’ எனும் சொல் ,

‘தான்மிகத் தோன்றிக் குறுகலும்  உரித்தே’ -  ‘ப்’ என்பது இன்னொரு ‘ப்’பைப் பெற்று ,  ‘பீ ’ என்பது குறுகிப் ‘பி’ என ஆகும் !

ஆன் + பீ = ஆற்பீ  ×
ஆன் + பீ = ஆப்பி  √ (வேற்றுமைப் புணர்ச்சி)  

இவ்விடத்தில் இளம்பூரணர் , “ உம்மையான் ,   ஆன்பீ  என்பதே பெரும்பான்மை யெனக் கொள்க ”  என்றார் !

இதன்படி –
ஆன் + பீ = ஆப்பி √(வேற்றுமைப் புணர்ச்சி)  (சிறுபான்மை) (உயிர்மயங். 31)
ஆன் + பீ = ஆன்பீ √(வேற்றுமைப் புணர்ச்சி)  (பெரும்பான்மை) (உயிர்மயங். 31இளம்.உரை)

(ஆப்பீ – ஆவின் பீ - சாணம்)

 தொல்காப்பியர் , ‘ஆப்பி’ என்ற வடிவத்தை அங்கீகரித்திருப்பதக் கவனியுங்கள் !
மக்கள் நாவில் வழங்கும் சொல் இது !

எனவே , வழக்குச் சொற்களுக்குத் தமிழ் இலக்கணத்தில் இடமளித்துள்ள தொல்காப்பியக் கோட்பாடு (Theory of Tholkappiyam)  இங்கே தெளிவாகிறது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 22, 2014 9:55 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (269)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் , ‘ஆ’ஈற்றுச் சொற்களை ஆய்ந்துவருகிறார் தொல்காப்பியர் !

இந்த இறுதிக்கான கடைசிச் சூத்திரமே நாம் காணப்போவது !:-

“குறியத  னிறுதிச் சினைகெட வுகரம்
அறிய வருதல் செய்யுளு ளுரித்தே ” (உயிர்மயங். 32)

இதில் ‘செய்யுளுள் உரித்தே’ என்பது கவனிக்கத் தக்கது !

பாடல்களில் மட்டும் சிலவகையான புணர்ச்சிகள் வரும் ! இலக்கணத்தில் படித்ததற்கு மாறாக அவை இருக்கும் !
அவற்றை என்ன செய்தார்கள் இலக்கணிகள்? தவறு என்று கூறினார்களா?

அல்ல! ஏற்றுக்கொண்டார்கள் ! பாடல் ஓசைக்காக அப்படி வருகின்றன எனக் கண்டார்கள் ! அவற்றை உள்ளடக்கிப் பிறகு இலக்கணம் வகுக்கலானார்கள்! அப்படிப்பட்ட ஒரு சூத்திரமே நாம் மேலே கண்டது !

‘குறியதன் இறுதிச் சினை’ – குற்றெழுத்தை முதலிலே கொண்ட சொல்லின் ஈறாகவரக்கூடியது  ‘ஆ’ ; அதன் சினை ‘அ’ ,

‘கெட’ – கெட்டுப்போக ,

 ‘உகரம் அறிய வருதல் ’– அந்த இடத்தில் ‘உ’ வருவது ,

‘செய்யுளுள் உரித்தே’  - பாட்டுகளில் ஏற்கத்தக்கதே !

 மீனைக் குறிக்கும் ‘இறவு’ என்ற இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம் !

இறா -  இதில் குறியது, ‘இ’ .

இதன் இறுதி , ‘ஆ’.

‘ஆ’வின் சினை (உறுப்பு) , ‘அ’ .

இந்த ‘அ’ கெட்டு , அவ்விடத்தில் ‘உ’ வருவது –

இறா = இ + ற் + ஆ = இ + ற் + அ (அ , கெட்டது) → இ + ற் + அ + உ ( ‘அ’வுக்குப் பதில் ‘உ’ வந்தது) → இ+ ற் + அ + வ் + உ  (வ் – உடம்படு மெய்) = இறவு !

இளம்பூரணர் , இவ்விடத்தே இன்னொரு நுட்பமும் கூறுகிறார் ! –

“ அறிய  என்றதனான் , உகரம் பெறாது சினை கெடுதலும் கொள்க ; அரவணி கொடி  என வரும் ” !

இதன்படி –

அரா = அ + ர் + ஆ = அ+ ர் + அ  (ஈற்று ‘ஆ’வின் சினையாகிய ‘அ’ கெட்டது) = அர (கெட்ட ‘அ’வுக்குப் பதில் ‘உ’வரவில்லை)
அர + அணி = அரவணி (வ் – உடம்படு மெய்)  (வேற்றுமைப் புணர்ச்சி)
 
மேலே இளம்பூரணர் குறித்த ‘இறா’வைக் காண வேண்டுமா ?

[You must be registered and logged in to see this image.]

 Courtesy – en.wikipedia.org

இதுதான் இறா !

இதன் விலங்கியல் பெயர் – Penaeus monodon

இதன் ஆங்கிலப் பெயர் – Prawn

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 23, 2014 10:45 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (270)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் ‘ஆ’ ஈற்றுச் சொற்களைப் பார்த்துவந்தோம் !

இப்போது, ‘இ’ ஈற்றுச் சொற்களை எடுக்கிறார் தொல்காப்பியர் ! :-

   “இகர விறுதிப் பெயர்நிலை முன்னர்
   வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங். 33)

‘இகர இறுதிப் பெயர்நிலை’ – ‘இ’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள்,
‘முன்னர்’ – முன்பாக ,
‘வேற்றுமை ஆயின் ’ – வேற்றுமைப் புணர்ச்சியாயின் ,
‘வல்லெழுத்து மிகுமே’ -  வல்லொற்றுச் சந்தி தோன்றும் !

‘கிளி’ என்ற இகர ஈற்றுச் சொல்லை எடுத்துக்காட்டுக்குக் கொணர்கிறார் இளம்பூரணர் !
முன்னர் நாம் தொகை மரபை ஆய்ந்தபோது இதே ‘கிளி’ பறந்து வந்ததே நினைவிருக்கிறதா? அதை விரட்டிப் பிடிப்போம் !

அங்கே தொல்காப்பியர் பேசியது – அல்வழிப் புணர்ச்சி !

இங்கே தொல்காப்பியர் பேசுவது – வேற்றுமைப் புணர்ச்சி !

இரண்டையும் சேர்த்து வருமாறு தரலாம் ! :-

1.கிளி + குறிது = கிளி குறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  கிளி + குறிது = கிளிக் குறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
   கிளி + கால் = கிளிக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)

2.கிளி + சிறிது = கிளி சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  கிளி + சிறிது = கிளிச் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
   கிளி + சிறகு = கிளிச் சிறகு √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)


3.கிளி + தீது = கிளி தீது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  கிளி +  தீது = கிளித் தீது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
   கிளி + தலை = கிளித் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)

4.கிளி + பரிது = கிளி பரிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  கிளி +  பரிது = கிளிப் பரிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
   கிளி + புறம் = கிளிப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)

நச்சினார்கினியர் , கூடுதலாக ‘புலி’ , ‘நரி’ ஆகிய இரு இகர ஈற்றுச் சொற்களையும் சேர்க்கிறார் !
அவற்றப் பின்வருமாறு விளக்கித்  தரலாம் ! :-

1. புலி + குறிது = புலி குறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  புலி + குறிது = புலிக் குறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
 புலி + கால் = புலிக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)

2. புலி + சிறிது = புலி சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  புலி + சிறிது = புலிச் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
 புலி + சின்னம் = புலிச் சின்னம் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)


3. புலி + தீது = புலி தீது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  புலி +  தீது = புலித் தீது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  புலி + தலை = புலித் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)

4. புலி + பரிது = புலி பரிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  புலி +  பரிது = புலிப் பரிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  புலி + புறம் = புலிப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)

1.நரி + குறிது = நரி குறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  நரி + குறிது = நரிக் குறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
   நரி + கால் = நரிக் கால் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)

2. நரி + சிறிது = நரி சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  நரி + சிறிது = நரிச் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
 நரி + சின்னம் = நரிச் சின்னம் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)


3. நரி + தீது = நரி தீது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  நரி +  தீது = நரித் தீது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
   நரி + தலை = நரித் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)

4. நரி + பரிது = நரி பரிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
  நரி +  பரிது = நரிப் பரிது √ (அல்வழிப் புணர்ச்சி) (தொகை மரபு 16)
 நரி + புறம் = நரிப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 33)

மேலும் , நச்சினார்க்கினியர் , ஒரு கூடுதல் இலக்கணத்தை நல்குகிறார் ! :-

“இனிக் , ‘கிளிகுறுமை’  ,  ‘கிளிக்குறுமை’  எனக் குணம் பற்றி வந்த உறழ்ச்சி முடிபு, மேல்  ‘வல்லெழுத்து மிகினும்’ என்னும் சூத்திரத்து ,‘ஒல்வழி அறிதல்’ என்பதனாற் கொள்க ! ”.

நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டும் நூற்பா – உயிர்மயங். 45 !

நச்சர் கருத்துப்படி –
பண்புப் பெயர்கள் வந்து புணர்ந்தால் உறழ்ச்சி நடக்கும் !

1.கிளி + குறுமை = கிளிக் குறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
 கிளி + குறுமை = கிளி குறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

2.கிளி + சிறுமை = கிளிச் சிறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
  கிளி +  சிறுமை = கிளி சிறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

3.கிளி + தண்மை = கிளித் தண்மை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
 கிளி + தண்மை = கிளி தண்மை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

4.கிளி + பருமை = கிளிப் பருமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
 கிளி + பருமை = கிளி பருமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இளம்பூரணர் காலத்திற்குப் பின்னே வந்தவர் நச்சினார்க்கினியர் என்பதால் , சில கருத்துகளைக் கூடுதலாக நச்சரால் தரமுடிகிறது !

                                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 24, 2014 11:32 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (271)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘இனிமேல் கொண்டான்’ என்ற பொருளில் கூறவேண்டுமானால்,
இனி கொண்டன் – இது சரியா?
இனிக் கொண்டான் – இது சரியா?
தொல்காப்பிய விதி யாது ?

‘இ’ஈற்றுச் சொற்புணர்ச்சிகளில் அடுத்த நூற்பாவில் விடை உள்ளது ! :-

“இனிஅணி  யென்னுங் காலையு மிடனும்
வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன”  (உயிர்மயங். 34)

 ‘இனி அணி என்னும் காலையும் இடனும்’ – ‘இனி’ எனும் காலத்தை உணர்த்தும் இடைச்சொல்லும் , ‘அணி’ எனும் இடத்தை உணர்த்தும் இடைச்சொல்லும் ,

‘வினை எஞ்சு கிளவியும்’ – வினையெச்சச் சொல்லும்,

‘சுட்டும் அன்ன’ – சுட்டாகிய இடைச்சொல்லும் முன் நூற்பாவில் (உயிர்மயங். 33)
கூறியவாறே வல்லெழுத்துச் சந்தி பெறும் !

 1. இனி + கொண்டான் = இனி கொண்டான் ×
    இனி + கொண்டான் = இனிக் கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

    இனி + சென்றான் = இனி சென்றான் ×
    இனி + சென்றான் = இனிச் சென்றான் √  (அல்வழிப் புணர்ச்சி)

    இனி + தந்தான் = இனி தந்தான் ×
    இனி + தந்தான் = இனித் தந்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)

    இனி + போயினான் = இனி போயினான் ×
    இனி + போயினான் = இனிப் போயினான் √  (அல்வழிப் புணர்ச்சி)

                                     (இனி - இப்போது;  'இனிமேல்' என்ற பொருளில் தொல்காப்பியர் ஆளவில்லை !)

 2. அணி + கொண்டான் = அணி கொண்டான் ×
    அணி + கொண்டான் = அணிக் கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

    அணி + சென்றான் = அணி சென்றான் ×
    அணி + சென்றான் = அணிச் சென்றான் √  (அல்வழிப் புணர்ச்சி)

    அணி + தந்தான் = அணி தந்தான் ×
    அணி + தந்தான் = அணித் தந்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)

    அணி + போயினான் = அணி போயினான் ×
    அணி + போயினான் = அணிப் போயினான் √  (அல்வழிப் புணர்ச்சி)


 3. தேடி + கொண்டான் = தேடி கொண்டான் ×
    தேடி + கொண்டான் = தேடிக் கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி)

    தேடி + சென்றான் = தேடி சென்றான் ×
    தேடி + சென்றான் = தேடிச் சென்றான் √  (அல்வழிப் புணர்ச்சி)

   தேடி + தந்தான் = தேடி தந்தான் ×
    தேடி + தந்தான் = தேடித் தந்தான் √  (அல்வழிப் புணர்ச்சி)

    தேடி + போயினான் = தேடி போயினான் ×
    தேடி + போயினான் = தேடிப் போயினான் √  (அல்வழிப் புணர்ச்சி)

                                                (அணி - அருகே)


4.   இ  + கொற்றன் = ஈ கொற்றன் ×
     இ  + கொற்றன் = இக் கொற்றன் √(அல்வழிப் புணர்ச்சி)

     இ  + சாத்தன் = ஈ சாத்தன் ×
     இ  + சாத்தன் = இச் சாத்தன் √(அல்வழிப் புணர்ச்சி)

     இ  + தேவன் = ஈ தேவன் ×
     இ  + தேவன் = இத் தேவன் √(அல்வழிப் புணர்ச்சி)
   
    இ  + பூதன் = ஈ பூதன் ×
     இ  + பூதன் = இப் பூதன் √(அல்வழிப் புணர்ச்சி)

                      (இ - இந்த)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Ponmudi Manohar
Ponmudi Manohar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 23/07/2014

PostPonmudi Manohar Thu Jul 24, 2014 1:29 pm

அனைத்தும் பயன் தரும் கட்டுரைப் பதிவுகள் !

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 25, 2014 9:47 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (272)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீங்கள் ஒரு கவிஞர் ! ‘உப்பின்றி உணவில்லை’ என்பதற்குப் பதிலாக ‘உப்பின்று உணவில்லை ’ என எழுதுகிறீர்கள் எனக் கொள்வோம் ! அப்படி எழுதலாம் என்கிறார்
தொல்காப்பியர் ! :-

“இன்றி  யென்னும் வினையெஞ் சிறுதி
நின்ற விகர முகர மாதல்
தொன்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே” (உயிர்மயங். 35)

‘இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி’ -  ‘இன்றி’ எனும் வினையெச்சச் சொல்லின் ஈற்றில்,

‘நின்ற இகரம் ’ – இருக்கும் ‘இ’,

‘உகரம் ஆதல்’ – ‘உ’ ஆவது ,

‘தொன்றியல் மருங்கின் ’ – தொன்றுதொட்டுப் ,

‘செய்யுளுள் உரித்தே’ – பாடல்களில்  வரக்கூடியதே !

இன்றி – குறிப்பு வினையெச்சம் !

‘இன்றி’ , ‘இன்று’ ஆவதற்கு இளம்பூரணர் காட்டிய செய்யுள் வரி –

‘உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே’ .

இந்த அடி புறநானூற்றில் (124) வருவதாகும் !

இங்கு இளம்பூரணர் – “  நின்ற  என்றதனான் , முன் பெற்றுநின்ற வல்லெழுத்து வீழ்க்க ! ” என்றார் !

அவர் கூற்றின்படி –

உப்பின்றி  + புற்கை = உப்பின்றிப் புற்கை √ (அல்வழிப் புணர்ச்சி)
உப்பின்று  + புற்கை = உப்பின்றுப் புற்கை ×
உப்பின்று  + புற்கை = உப்பின்று புற்கை √ (அல்வழிப் புணர்ச்சி)

                                          (புற்கை - கஞ்சி)

 ‘இன்றி’ என்பது பாடலில் ‘இன்று’ என வரும் ! சரி !

அப்படியானால் , ‘அன்றி’ என்பதும் ‘அன்று’ என வருமா?

இதற்கு இளம்பூரணர் விடை கூறுகிறார் –

“ தொன்றியன் மருங்கு என்றதனால் , அன்றி என்பதும் செய்யுளுள் இம் முடிபிற்றாதல் கொள்க !”
இதற்கு அவரே ஓர் எடுத்துக்காட்டும் தருகிறார் -  ‘நாளன்று போகிப் புள்ளிடை நட்ப’ !

விளக்கிக் கூறுவதானால் –

நாளன்றி + போகி = நாளன்றிப் போகி √(அல்வழிப் புணர்ச்சி)
நாளன்று + போகி = நாளன்றுப் போகி ×
நாளன்று + போகி = நாளன்று போகி √(அல்வழிப் புணர்ச்சி)

நச்சர் தரும் இரு கூடுதல் எடுத்துக்காட்டுகளையும் வருமாறு விளக்கலாம் ! –

    1. இடனன்றி + துறத்தல் = இடனன்றித் துறத்தல்  √(அல்வழிப் புணர்ச்சி)
      இடனன்று + துறத்தல் = இடனன்றுத் துறத்தல்  ×
      இடனன்று + துறத்தல் = இடனன்று துறத்தல்  √(அல்வழிப் புணர்ச்சி)

  2. வாளன்றி + பிடியா = வாளன்றிப் பிடியா  √(அல்வழிப் புணர்ச்சி)
      வாளன்று + பிடியா = வாளன்றுப் பிடியா  ×
      வாளன்று + பிடியா = வாளன்று பிடியா  √(அல்வழிப் புணர்ச்சி)

கடைசியில் நச்சர் -  “முற்றியலிகரம் குற்றியலுகரமாகத் திரிந்தது !” என்கிறார் .

அஃதாவது-

இன்றி – ஈற்று இகரம் ‘முற்றியலிகரம்’

அன்றி – ஈற்று இகரம் ‘முற்றியலிகரம்’

இன்று – ஈற்று இகரம் ‘குற்றியலுகரம்’

அன்று – ஈற்று இகரம் ‘குற்றியலுகரம்’

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 27, 2014 9:54 am

பொன்முடி மனோகருக்கு நன்றி!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 27, 2014 9:59 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (273)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இ + கொற்றன் = இக் கொற்றன்

- இதற்கான இலக்கணத்தை முன்பு பார்த்தோம் !

இதில் வருமொழி முதல் எழுத்து வல்லெழுத்து !

அப்படியானால் , மெல்லெழுத்து , இடையெழுத்து , உயிரெழுத்து இவற்றை முதலாகக் கொண்ட சொல் வந்து புணர்ந்தால் ?

இதற்கு விடை கூறுகிறார் இப்போது ! :-

“சுட்டி  னியற்கை  முற்கிளந்  தற்றே”   (உயிர்மயங். 36)

இதன் பொருளை இளம்பூரணர் தந்துள்ளவாறே எழுதலாம் ! – “இகர வீற்றுச் சுட்டினது இயல்பு இயல்புகணம் வரும்வழியும் , உயிர்க்கணம் வரும்வழியும் , முன் அகர வீற்றுச் சுட்டிற்குச் சொல்லப்பட்ட  தன்மைத்தாம்”

அஃதாவது –

1 . சுட்டின்  முன் , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொல் வந்து புணர்ந்தால்,
சந்தியாக அந்த மெல்லெழுத்து மிகும் ! (உயிர்மயங். 3)

2 . சுட்டின்  முன் , இடையெழுத்தை முதலாகக் கொண்ட சொல் வந்து புணர்ந்தால்,
சந்தியாக  ‘வ்’ மிகும் ! (உயிர்மயங். 4)

3 . சுட்டின்  முன் , உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொல் வந்து புணர்ந்தால்,
சந்தியாக  ‘வ்’ மிகும் ! (உயிர்மயங். 5)

       4.செய்யுளில்  சுட்டின்  முன் , ‘வ்’ கெட்டுச் ,சுட்டு நீண்டு முடியும் ! (உயிர்மயங். 6)

 இவற்றின்படி -

1. இ + ஞானம் = இஞ்ஞானம் √ (அல்வழிப் புணர்ச்சி)
   இ + நூல் = இந்நூல் √ (அல்வழிப் புணர்ச்சி)
  இ + மணி = இம்மணி √ (அல்வழிப் புணர்ச்சி)

2 . இ + யாழ் = இவ்யாழ் √(அல்வழிப் புணர்ச்சி)
    இ + வட்டு = இவ்வட்டு √(அல்வழிப் புணர்ச்சி)

 3 . இ + அடை = இவ்வடை √(அல்வழிப் புணர்ச்சி)
       இ + ஆடை = இவ்வாடை √(அல்வழிப் புணர்ச்சி)
       இ + ஔவியம் = இவ்வௌவியம் √(அல்வழிப் புணர்ச்சி)

4 . இ + வயினான = ஈவயினான ( வ் , கெட்டது; இ,  ஈ அனது)

இங்கே சுட்டைப் பற்றிய ஒரு கருத்தை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும் !

இளம்பூரணர் ,  இந்த நூற்பா (உயிர்மயங்.36) உரையில், சுட்டைச் ‘சுட்டுப்பெயர்’ என்கிறார் !

இதே இளம்பூரணர் , வேறு நூற்பா (உயிர்மயங்.34) உரையில் , சுட்டை ‘இடைச்சொல்’ என்கிறார் !

இளம்பூரணர் , சுட்டைப் ‘பெயர்ச்சொல்’ என்றபோது (உயிர்மயங். 36), அதே நூற்பா உரையில் , நச்சினார்க்கினியர் , சுட்டை ‘இடைச்சொல்’ என்று குறிக்கிறார் !

ஆக ,  உரையாசிரியரிடத்தும் கருத்து வேறுபாடு!  உரையாசிரியர்களிடத்தும் கருத்து வேறுபாடு !

 ‘அ’ – இது  ஒரு சுட்டு !

இந்தச்  சுட்டு இடைச்சொல்லா ? பெயர்ச்சொல்லா?

மேலும் ஆய்வோம் !

‘ஆனா என்ற எழுத்துப் பெரிதாக உள்ளது’ என்றபொருளில் , ‘அப்பெரிது’ எனும்போது , இங்கே ‘அ’ – இடைச்சொல் அல்ல ! பெயர்ச்சொல் !

‘மாடு பெரிது’ , ‘வீடு பெரிது’ என்பவற்றை ஒப்பிட்டால் உங்களுக்கு  இது விளங்கும் !

இப்படிக் காணும்போது , தமிழில் பெயர்ச்சொல் , வினைச்சொல் , இடைச்சொல் , உரிச்சொல் என்று பொதுவாகப் பிரித்துக்கொண்டாலும் , எல்லாச் சொற்களையும் துல்லியமாக இந்தப் பிரிவுகளுக்குள் எல்லா இடத்தும் அடக்கிவிடமுடியாது என்ற உண்மையே நமக்குப் புலனாகிறது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 27, 2014 2:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (274)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முன்பு , தொகை மரபை ஆயும்போது ,

 ‘உழக்கு + ஆழாக்கு = உழக்கே யாழாக்கு ’ என வரும்  என்றும் , இடையே வந்த ‘ஏ’ ,  சாரியை எனவும் பார்த்தோம் !

உயிர்மயங்கியலில் நாம் ‘இ’ ஈற்றுச் சொற்களின் புணர்ச்சிகளைப் பார்த்துவருவதால், இந்த ஈற்று அளவுப் பெயரான ‘தூணி’ என்பதை எடுத்துப் பேசுகிறார் தொல்காப்பியர்! :-

“பதக்குமுன் வரினே  தூணிக்  கிளவி
 முதற்கிளந்  தெடுத்த  வேற்றுமை  யியற்றே”  (உயிர்மயங். 37)

‘பதக்கு முன் வரினே தூணிக் கிளவி’  -  ‘பதக்கு’ என்ற சொல்லின் முன்னர் , ‘தூணி’ எனும் சொல் நின்றால் ,

‘முதற்கிளந்து  எடுத்த  வேற்றுமை  இயற்றே ’  -  முன்பு உயிர்மயங்கியல் நூற்பா 33இல் வல்லெழுத்துச் சந்தி புணர்ச்சியில் வந்தது போல வல்லெழுத்து இடையே வரும் !

எடுத்துகாட்டைக் காணுமுன் , இளம்பூரணர் உரையைப் பார்ப்போம் ! –

“இஃது , இவ்வீற்று அல்வழிகளில் அளவுப் பெயருள் ஒன்றற்கு ,மேல் தொகை மரபினுள் எய்திய ‘ஏ’  என் சாரியை விலக்கி வேறு முடிபு கூறுதல் நுதலிற்று !”

அஃதாவது , தொகை மரபு நூற்பா22இல் , ‘உழக்கு + ஆழாக்கு = உழக்கே யாழாக்கு’ என்ற புணர்ச்சியைப் பார்த்தோம் ! நினைவிருக்கிறதா?

அங்கே இடையே வந்த ‘ஏ’ – சாரியை !

அப்படிப்பட்ட சாரியை, ‘தூணி’ என்ற சொல்லின் புணர்ச்சியில் வராது என்று கூறுகிறார் இளம்பூரணர் !

இப்போது எடுத்துக்காட்டைப் பார்ப்போம் ! :-

தூணி + பதக்கு =  தூணியே பதக்கு ×
தூணி + பதக்கு =  தூணிப் பதக்கு √ (அல்வழிப் புணர்ச்சி)

- இங்கே , ‘ப்’ சந்தியாக வந்துள்ளதல்லவா?

இதைத்தான் இளம்பூரணர் , ‘வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும்’ என்றார் !
அடுத்து இளம்பூரணர் – “இருதூணிப் பதக்கு  என அடையடுத்து வந்தவழியும் இவ்விதி கொள்க” என்கிறார் !

அஃதாவது?

அஃதாவது –
1 . இருதூணி + பதக்கு = இருதூணியே பதக்கு ×
  இருதூணி + பதக்கு = இருதூணிப் பதக்கு √ (உயிர்மயங்.37 இளம்.உரை)

  முத்தூணி + பதக்கு = முத்தூணியே பதக்கு ×
  முத்தூணி + பதக்கு = முத்தூணிப் பதக்கு √ (உயிர்மயங்.37 இளம்.உரை)

இளம்பூரணரைப் பின் தொடர்வோம் ! –

“  கிளந்தெடுத்த என்றதனால் , தூணி முன்னர்ப் பிற பொருட்பெயர் வந்தவழியும் ,ஆண்டுநிலைமொழி அடையடுத்து வந்த வழியும் , தன் முன்னர்த் தான் வந்த வழியும்  இம் முடிபு கொள்க !”
இதன்படி -
1. தூணி + கொள் = தூணியே கொள் ×
    தூணி + கொள் = தூணிக் கொள் √  (அல்வழிப் புணர்ச்சி)
         (தூணிக் கொள் – தூணி அளவுள்ள கொள்ளுத் தானியம்)

தூணி + சாமை = தூணியே சாமை ×
    தூணி + சாமை = தூணிச் சாமை √  (அல்வழிப் புணர்ச்சி)
         (தூணிச் சமை – தூணி அளவுள்ள சாமைத் தானியம்)

தூணி + தோரை = தூணியே தோரை ×
    தூணி + தோரை = தூணித் தோரை √  (அல்வழிப் புணர்ச்சி)
         (தூணித் தோரை – தூணி அளவுள்ள மலைநெல்)

தூணி + பாளிதம் = தூணியே பாளிதம் ×
    தூணி + பாளிதம் = தூணிப் பாளிதம் √  (அல்வழிப் புணர்ச்சி)
         (தூணிப் பாளிதம் – தூணி அளவுள்ள கண்டசருக்கரை எனும் கற்கண்டு)


2. இருதூணி + கொள் = இருதூணியே கொள் ×
    இருதூணி + கொள் = இருதூணிக் கொள் √  (அல்வழிப் புணர்ச்சி)
         (இருதூணிக் கொள் –இரண்டு  தூணிகள் அளவுள்ள கொள்ளுத் தானியம்)

இருதூணி + சாமை = இருதூணியே சாமை ×
    இருதூணி + சாமை = இருதூணிச் சாமை √  (அல்வழிப் புணர்ச்சி)
         (இருதூணிச் சமை – இரண்டு தூணிகள் அளவுள்ள சாமைத் தானியம்)

இருதூணி + தோரை = இருதூணியே தோரை ×
   இருதூணி + தோரை = இருதூணித் தோரை √  (அல்வழிப் புணர்ச்சி)
         (இருதூணித் தோரை – இரண்டு தூணிகள் அளவுள்ள மலைநெல்)

இருதூணி + பாளிதம் = இருதூணியே பாளிதம் ×
    இருதூணி + பாளிதம் = இருதூணிப் பாளிதம் √  (அல்வழிப் புணர்ச்சி)
         (இருதூணிப் பளிதம் – இரண்டு தூணிகள் அளவுள்ள கண்டசருக்கரை எனும்    
                                                  கற்கண்டு)

3. தூணி + தூணி = தூணியே தூணி ×
    தூணி + தூணி = தூணித் தூணி √  (அல்வழிப் புணர்ச்சி)
         (தூணித் தூணி – தூணியும் தூணியும்)

    தூணி + தூணி = தூணிக்குத்  தூணி √ (இக்கு - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
         (தூணிக்குத் தூணி – தூணியும் தூணியும்)

காணி + காணி = காணியே காணி ×
    காணி + காணி = காணிக் காணி √  (அல்வழிப் புணர்ச்சி)
         (காணிக் காணி – காணியும் காணியும்)
   காணி + காணி = காணிக்குக்  காணி √ (இக்கு - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
         (காணிக்குக் காணி – காணியும் காணியும்)

பூணி + பூணி = பூணியே பூணி ×
    பூணி + பூணி = பூணிப் பூணி √  (அல்வழிப் புணர்ச்சி)
         (பூணிப் பூணி –  நுகத்தடியில் பூட்டிய காளையும் காளயும்)
   காணி + காணி = காணிக்குக்  காணி √ (இக்கு - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
         (பூணிக்குப் பூணி – நுகத்தடியில் பூட்டிய காளையும் காளயும்)

தொடி + தொடி = தொடியே தொடி ×
தொடி + தொடி = தொடித் தொடி   √  (அல்வழிப் புணர்ச்சி)
         (தொடித் தொடி- தொடியும் தொடியும்)
தொடி + தொடி = தொடிக்குத்  தொடி √ (இக்கு - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
         (தொடிக்குத் தொடி – தொடியும் தொடியும்)


              (பதக்கு – இரண்டு மரக்கால் அளவு = 10 ¾ லிட்டர்
                தூணி – நான்கு மரக்கால் அளவு = 21 ½  லிட்டர்
                 தொடி – 35 கிராம்)

இளம்பூரணர் குறித்த சாமையைக் காண விருப்பமா?

[You must be registered and logged in to see this image.]
Courtesy -  milletrajamurugan.blogspot.com

[You must be registered and logged in to see this image.]
Courtesy - commons.wikimedia.org


இதுதான் சாமை !

இத தாவரவியல் பெயர் - Panicum Miliaceum

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 34 of 84 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 59 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக