Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14by ayyasamy ram Today at 11:15
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters
Page 31 of 84
Page 31 of 84 • 1 ... 17 ... 30, 31, 32 ... 57 ... 84
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Last edited by Dr.S.Soundarapandian on Sat 28 Sep 2013 - 13:18; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
தொடத் தொடத் தொல்காப்பியம் (239)
தொடத் தொடத் தொல்காப்பியம் (239)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
சென்ற ஆய்வுகளில் நாம் உருபியலைப் பார்த்து முடித்தோம் !
இப்போது அதற்கு அடுத்த இயலான உயிர் மயங்கியலைப் பார்க்கவுள்ளோம் !
‘உயிர் மயங்கியல்’ என்றால் என்ன ?
ஓர் உயிர் இன்னொரு உயிருக்காக மயங்கி நிற்பதா?
அல்ல !
உயிர் எழுத்தை ஈற்றிலே கொண்ட சொற்கள் (அவை பெயர்ச் சொற்களாகவோ , வினையெச்சங்களாகவோ இருக்கலாம் !), பெரும்பாலும் வல்லெழுத்துகளைமுதல் எழுத்தாகக்கொண்ட சொற்களுடன் எப்படிப் புணரும் என விதிகளைக் கூறுவது ! ‘பெரும்பாலும் வல்லெழுத்துகளை’ என்றதால் , சிறுபான்மை மெல்லெழுத்துகளையும் இடை எழுத்துகளையும் முதலாகக் கொண்ட சொற்களோடு ஏற்படும் புணர்ச்சிகளுக்கும் இந்த இயலில் விதிகள் உள்ளன !
மயங்குவது – புணர்வது .
முதல் நூற்பா ! :-
“அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின்
தத்த மொத்த வொற்றிடை மிகுமே” (உயிர்மயங்.1)
‘அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்’ - ‘அ’வை முதல் எழுத்தாகக் கொண்ட பெயர்ச் சொற்கள் முன்பாக ,
‘வேற்றுமை அல்வழிக் க ச த பத் தோன்றின்’ – அல்வழிப் புணர்ச்சியில் , வருசொற்கள் க ச த ப ஆகியவற்றை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வந்தால்,
‘தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே ! ’ - புணர்ச்சி இடையே வரும் முதல் எழுத்திற்கு இனமான ஒற்று மிகும் !
விள + குறிது = விள குறிது×
விள + குறிது = விளக் குறிது√ (க் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
விள + சிறிது = விள சிறிது×
விள + சிறிது = விளச் சிறிது (ச் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
விள + தீது = விள தீது×
விள + தீது = விளத் தீது√ (த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
விள + பெரிது = விள பெரிது×
விள + பெரிது = விளப் பெரிது (ப் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
விள – அகர ஈற்றுப் பெயர்ச் சொல்.
விள – விளா மரம் (Wood-apple).
மக + குறிது = மக குறிது ×
மக + குறிது = மகக் குறிது √(க் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மக + சிறிது = மக சிறிது ×
மக + சிறிது = மகச் சிறிது√ (ச் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மக + தீது = மக தீது ×
மக + தீது = மகத் தீது √(த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மக + பெரிது = மக பெரிது ×
மக + பெரிது = மகப் பெரிது √(ப் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மக – அகர ஈற்றுப் பெயர்ச் சொல்.
மக – மகவு – ஆண் அல்லது பெண்பிள்ளை.
“நிலை மொழியாகப் பெயர்ச்சொல் நிற்கும்போது சரி ! உரிச்சொல் , இடைச்சொல் நிற்கும்போது ?” – இளம்பூரணரிடம் மாணவர்கள் கேட்டனர் !
இளம்பூரணர் விடை ! :-
தட + கை = தடங்கை ×
தட + கை = தடக்கை √(க் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
தவ + கொண்டான் = தவங்கொண்டான்×
தவ + கொண்டான் = தவக்கொண்டான்√(க் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
தட + செவி = தடச்செவி×
தட + செவி = தடஞ்செவி√ (ஞ் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
தட + தோள் = தடத்தோள்×
தட + தோள் = தடந்தோள்√(ந் - மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
தட , தவ – இந்த நிலைமொழிகள் , அகரத்தை ஈறாகக் கொண்ட உரிச்சொற்கள்.
இனி இடைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு ! :-
மடவ மன்ற + தடவுநிலைக் கொன்றை = மடவ மன்றத் தடவுநிலைக் கொன்றை×
மடவ மன்ற + தடவுநிலைக் கொன்றை = மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை√(த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மன்ற – அகர ஈற்று இடைச்சொல் ; இது நிலைமொழியாக நின்று புணர்ந்தபோது ஒற்று மிகவில்லை !
இளம்பூரணரின் ‘மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை ’ எனும் அடி – குறுந்தொகை66 இல் உளது!
அ – அகரத்தைச் சுட்டும்போது எப்படிப் புணருமாம் ?
இளம்பூரணர் காட்டுகிறார் ! :-
அ + குறிது = அகுறிது×
அ + குறிது = அக்குறிது√(க் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + சிறிது = அசிறிது×
அ + சிறிது = அச்சிறிது√(ச் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + தீது = அதீது×
அ + தீது = அத்தீது√(த் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + பெரிது = அபெரிது×
அ + பெரிது = அப்பெரிது√(ப் - மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + யாது = அயாது ×
அ + யாது = அவ்யாது√ (இடையின எழுத்தாகிய ‘வ்’ மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + அழகிது = அஅழகிது ×
அ + அழகிது = அவ்வழகிது√ (வ் – உடம்படுமெய் மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கெல்லாம் , ‘அ’ – பெயர்ச்சொல் ! ( ‘அ’ என்ற சொல்லால் அகரமே சுட்டப்படுதல் காண்க !)
மயங்கியது – உயிரா நம் உடலா?
நீங்கள்தான் சொல்லவேண்டும் !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (240)

இப்போது உயிர்மயங்கியலில் இரண்டாம் நுற்பா ! :-
“வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியும்
எனவெ னெச்சமுஞ் சுட்டி னிறுதியும்
ஆங்க வென்னு முரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங் . 2)
‘வினையெஞ்சு கிளவியும்’ – வினையெச்சச் சொல்லும்,
‘உவமக் கிளவியும்’ - ‘போல’ என வரும் உவமச் சொல்லும்,
‘என என் எச்சமும்’ – ‘கொள்ளென’ என வரும் எச்சச் சொல்லும்,
‘சுட்டின் இறுதியும்’ - ‘அ’ என்பதுபோல வரும் சுட்டுச்சொல்லின் ஈறும்,
‘ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் ’ - ‘ஆங்க’ எனும் உரையசைச் சொல்லும்,
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே – முன் சூத்திரத்தில் சொன்னபடி , அல்வழிப் புணர்ச்சியில், வல்லெழுத்து மிகுதலைக் கொள்ளும் !
உண + கொண்டான் = உணகொண்டான் ×
உண + கொண்டான் = உணக் கொண்டான் √ (உண – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)
உண + சென்றான் = உணசென்றான் ×
உண + சென்றான் = உணச் சென்றான் √ (உண – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)
உண + தந்தான் = உண தந்தான் ×
உண + தந்தான் = உணத் தந்தான் √ (உண – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)
உண + போயினான் = உண போயினான் ×
உண + போயினான் = உணப் போயினான் √ (உண – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)
தின + கொண்டான் = தினகொண்டான் ×
தின + கொண்டான் = தினக் கொண்டான் √ (தின – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)
தின + சென்றான் = தின சென்றான் ×
தின + சென்றான் = தினச் சென்றான் √ (தின – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)
தின + தந்தான் = தின தந்தான் ×
தின + தந்தான் = தினத் தந்தான் √ (தின – வினையெச்சச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)
தின + போயினான் = தினப் போயினான் ×
தின + போயினான் = தினப் போயினான் √ (தின – வினையெச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)
புலிபோல + கொன்றான் = புலிபோல கொன்றான் ×
புலிபோல + கொன்றான் = புலிபோலக் கொன்றான் √(போல – உவமக் கிளவி) ( அல்வழிப் புணர்ச்சி)
கொள்ளென + கொண்டான் = கொள்ளென கொண்டான்×
கொள்ளென + கொண்டான் = கொள்ளெனக் கொண்டான்√( கொள்ளென – என என் எச்சச் சொல்)( அல்வழிப் புணர்ச்சி)
அ + கொற்றன் = அகொற்றன் ×
அ + கொற்றன் = அக் கொற்றன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி) ( அல்வழிப் புணர்ச்சி)
அ + சாத்தன் = அசாத்தன் ×
அ + சாத்தன் = அச் சாத்தன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி) ( அல்வழிப் புணர்ச்சி)
அ + தேவன் = அதேவன் ×
அ + தேவன் = அத் தேவன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி)( அல்வழிப் புணர்ச்சி)
அ + பூதன் = அபூதன் ×
அ + பூதன் = அப் பூதன் √ (அ- சுட்டுச் சொல்லின் இறுதி) ( அல்வழிப் புணர்ச்சி)
ஆங்க + கொண்டான் = ஆங்க கொண்டான் ×
ஆங்க + கொண்டான் = ஆங்கக் கொண்டான் √ (ஆங்க – உரையசைச் சொல்) ( அல்வழிப் புணர்ச்சி)
மேலைப் புணர்சிகளில் , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் என்பதைக் கவனிக்க !

தொடத் தொடத் தொல்காப்பியம் (241)

உயிர் மயங்கியலில் இப்போது மூன்றாம் நூற்பா ! :-
“சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்
ஒட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும் ” (உயிர்மயங் . 3)
- இது சுட்டுகள் – சுட்டு எழுத்துகள்- மெல்லின எழுத்துகளை முதலாகக்கொண்ட சொற்களுடன் புணர்வதைக் கூறுகிறது !
‘சுட்டின் முன்னர்’ – அ,இ,உ எனும் சுட்டு எழுத்துகள் முன்னால்,
‘ஞ ந ம த் தோன்றின்’ – ஞ,ந,ம எனும் மெல்லின எழுத்துகளை முதலாகக்கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ,
‘ஒட்டிய ஒற்று’ – தத்தமக்குப் பொருந்திய ஒற்று,
‘இடை மிகுதல் வேண்டும்’- இடையிலே மிக்கு வரும் !
அ+ ஞாலம் = அஞாலம் ×
அ+ ஞாலம் = அஞ்ஞாலம் √ (ஞ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ+ நூல் = அநூல் ×
அ+ நூல் = அந்நூல் √ (ந்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ+ மணி = அமணி ×
அ+ மணி = அம்மணி √ (ம்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
இ+ ஞாலம் = இஞாலம் ×
இ+ ஞாலம் = இஞ்ஞாலம் √ (ஞ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
இ+ நூல் = இநூல் ×
இ+ நூல் = இந்நூல் √ (ந்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
இ+ மணி = இமணி ×
இ+ மணி = இம்மணி √ (ம்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
உ+ ஞாலம் = உஞாலம் ×
உ+ ஞாலம் = உஞ்ஞாலம் √ (ஞ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
உ+ நூல் = உநூல் ×
உ+ நூல் = உந்நூல் √ (ந்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
உ+ மணி = உமணி ×
உ+ மணி = உம்மணி √ (ம்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கு நச்சினார்க்கினியர் ஒரு நுட்பம் கூறுகிறார் !-
அஃதாவது , ‘ஆனா நெளிந்தது’ என்று சொல்லவேண்டுமானால் ,
அ+ ஞெளிந்தது = அ ஞெளிந்தது ×
அ+ ஞெளிந்தது = அஞ்ஞெளிந்தது√ (அல்வழிப் புணர்ச்சி)
‘ஆனா நன்று’ எனக் கூறவேண்டுமானால்,
அ+ நன்று = அநன்று ×
அ+ நன்று = அந்நன்று √ (அல்வழிப் புணர்ச்சி)
‘ஆனா மாண்டது’ எனக் கூறவேண்டுமானால்,
அ+ மாண்டது = அமாண்டது ×
அ+ மாண்டது = அம்மாண்டது √ (அல்வழிப் புணர்ச்சி)

தொடத் தொடத் தொல்காப்பியம் (242)

சென்ற நூற்பாவில் , சுட்டெழுத்துகள் முன்னே மெல்லின எழுத்துகள் வந்தால் எப்படிப் புணரும் என்று தொல்காப்பியர் காட்டினார் !
இந்த நூற்பாவில், சுட்டுகளின் முன்னே இடையெழுத்துகள் வந்தால் எப்படிப் புணரும் என்று காட்டுகிறார் ! :-
“யவமுன் வரினே வகர மொற்றும்” (உயிர்மயங். 4)
‘ய வ முன் வரினே’ – சுட்டு எழுத்துகளின் முன்னே யகரத்தை முதலாகக்கொண்ட சொற்களும் , வகரத்தை முதலாகக் கொண்ட சொற்களும் புணரவந்தால் ,
‘வகரம் ஒற்றும்’ – வகர மெய்யெழுத்து இடையே தோன்றும் !
அ + யாழ் = அயாழ் ×
அ+ யாழ் = அவ்யாழ் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + வளை = அவளை ×
அ+ வளை = அவ்வளை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
இந்த நூற்பா உரையிலும் நச்சினார்க்கினியர் ஓர் இலக்கண நுட்பம் உரைக்கிறார் ! :-
“வருமொழி முற்கூறிய வதனான் , அகரம் தன்னை யுணர நின்றவழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும்”.
அஃதாவது-
‘அ’ என்ற எழுத்து வளைந்தது என்று சொல்லவேண்டுமாயின் –
அ + வளைந்தது = அவளைந்தது ×
அ + வளைந்தது = அவ்வளைந்தது √ (வ் - தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

தொடத் தொடத் தொல்காப்பியம் (243)

இந்த நூற்பாவில் , அகரச் சுட்டின் முன் , உயிரெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தாலும் , சந்தியாக , ‘வ்’தோன்றும் என்கிறார் !:-
“உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது” (உயிர்மயங். 5)
‘உயிர் வரினும்’ – அகரச் சுட்டின்முன் உயிர் எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தாலும் ,
‘ஆயியல் திரியாது’ – உயிர்மயங்கியல் நூற்பா 4இல் கூறிய முறைப்படி, ‘வ்’சந்தியாக வரும் !
நச்சரின் எடுத்துகட்டுகளை வருமாறு தரலாம் !:-
அ + அடை = அவடை ×
அ + அடை = அவ்வடை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + ஆடை = அவாடை ×
அ + அடை = அவ்வாடை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + இலை = அவிலை ×
அ + இலை = அவ்விலை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + ஈயம் = அவீயம் ×
அ + ஈயம் = அவ்வீயம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + உரல் = அவுரல் ×
அ + உரல் = அவ்வுரல் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + ஊர்தி = அவூர்தி ×
அ + ஊர்தி = அவ்வூர்தி √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + எழு = அவெழு ×
அ + எழு = அவ்வெழு √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + ஏணி = அவேணி ×
அ + ஏணி = அவ்வேணி √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + ஐயம் = அவையம் ×
அ + ஐயம் = அவ்வையம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + ஒழுக்கம் = அவொழுக்கம் ×
அ + ஒழுக்கம் = அவ்வொழுக்கம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + ஓடை = அவோடை ×
அ + ஓடை = அவ்வோடை √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
அ + ஔவியம் = அவவௌவியம் ×
அ + ஔவியம் = அவ்வௌவியம் √ (வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)
‘ஆனா அழகிது’ என்று சொல்ல-
அ+ அழகிது = அவழகிது ×
அ+ அழகிது = அவ்வழகிது √(வ்- தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

தொடத் தொடத் தொல்காப்பியம் (244)

தொல்காப்பியரிடத்தில் , “ அ+ இருதிணை= அவ்விரு திணை” என்றுதானே வரவேண்டும் ? ஆனால் உங்கள் நூலிலேயே ‘ஆயிருதிணை’ (சொல்.1) என வருகிறதே” என்று ஒரு மாணவன் கேட்டான் !
அதற்குத் தொல்காப்பியர் கூறிய விடை :-
“நீட வருதல் செய்யுளுள் உரித்தே” (உயிர்மயங் . 6)
இளம்பூரணர் தந்த சான்று –
அ+ இருதிணை = ஆயிருதிணை
இதனை அடுத்து, இளம்புரணர் எழுதுகிறார் –
“வருமொழி வரையாது கூறினமையின் , இம் முடிபு வன்கணம் ஒழிந்த கணம் எல்லாவற்றொடும் சென்றது; உதாரணம் பெற்றவழிக் கொள்க” .
தஞ்சை சரசுவதிமகால் நூல்நிலையத் தொல்காப்பிய வெளியீட்டில்(2009) இதற்கான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன :-
அ + ஐந்தெழுத்தும் = ஆவைந்தெழுத்தும் (தொல்.மொழிமரபு. 28)
அ + முப்பெயரும் = ஆமுப்பெயரும் (தொல்.உயிர்மயங். 27)
அ + வயின் = ஆவயின் (தொல். உயிர்மயங். 48)
செய்யுள் என்பது ஓசைக்குப் பதில் சொல்லவேண்டியது ! இலக்கணத்திற்கு மட்டும் பதில் சொன்னால் போதாது !
அதனால்தான் ‘செய்யுள்’ என்று வரும்போது இலக்கணம் நெகிழ்ந்து கொடுக்கிறது !

தொடத் தொடத் தொல்காப்பியம் (245)

‘சாகுமாறு குத்தினான்’ எனும் பொருளில், ‘சாவக் குத்தினான்’ என்று வரவேண்டியது, சிலபோது , ‘சாக் குத்தினான்’ என வருகிறதே - ஒரு மாணவனின் ஐயம் !
‘அப்படியும் வரலாம் ’ என்பது தொல்காப்பியர் விடை !:-
“சாவ வென்னுஞ் செயவெ னெச்சத்
திறுதி வகரம் கெடுதலு முரித்தே” (உயிர் மயங்.7)
(கெடுதலும் – இதிலுள்ள ‘உம்’, எதிர்மறை உம்மை)
‘சாவ என்னுஞ் செயவென் எச்சத்து’- ‘சாவ’ எனும் ‘செய’என் வினையெச்சத்து,
‘இறுதி வகரம் கெடுதலும் உரித்தே’ – ஈற்று ‘வ’ கெட்டுப்போதலும் உண்டு !
சாவ + குத்தினான் = சாவக் குத்தினான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + குத்தினான் = சாக் குத்தினான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + சீறினான் = சாவச் சீறினான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + சீறினான் = சாச் சீறினான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாச் சீறினான்- சாகுமாறு சீறினான்)
சாவ + தகர்த்தான் = சாவத் தகர்த்தான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + தகர்த்தான் = சாத் தகர்த்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாத் தகர்த்தான்- சாகுமாறு தகர்த்தான்)
சாவ + புடைத்தான் = சாவப் புடைத்தான் √ (அல்வழிப் புணர்ச்சி)
சாவ + புடைத்தான் = சாப் புடைத்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாப் புடைத்தான்- சாகுமாறு அடித்தான்)
நச்சினார்க்கினியர், ‘இயல்புக் கணத்தும் இந் நிலைமொழிக் கேடு கொள்க’
என்றார் !
வன்கணம் இல்லாத அந்தப் பிற கணங்களுக்கு நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !-
சாவ + ஞான்றான் = சாவஞான்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + ஞான்றான் = சாஞான்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாஞான்றான்- சாகுமாறு தூக்குப் போட்டுக்கொண்டான்)
சாவ + நீண்டான் = சாவநீண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + நீண்டான் = சாநீண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாநீண்டான்- சாகுமாறு நீண்டநாள் பட்டினி கிடந்தான்)
சாவ + மாண்டான் = சாவமாண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + மாண்டான் = சாமாண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாமாண்டான்- உயிரைப் போக்குமாறு மாண்டான்)
சாவ + யாத்தான் = சாவயாத்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + யாத்தான் = சாயாத்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாயாத்தான்- சாகுமாறு கட்டினான்)
சாவ + வீழ்ந்தான் = சாவவீழ்ந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
சாவ + வீழ்ந்தான் = சாவீழ்ந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(சாவீழ்ந்தான்- சாகுமாறு வீழ்ந்துபட்டான்)
சாவ + அடைந்தான் = சாவவடைந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)(வ்- உடம்படு மெய்)
சாவ +அடைந்தான் = சாவடைந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)( வ்- உடம்படு மெய்)
(சாவடைந்தான்- சாகுமாறு முடிவை அடைந்தான்)
‘அறிய வந்த’ என்பதை ‘அறிவந்த’ எனவும் , ‘செய்யத் தக்க’ என்பதைச் ‘செய்தக்க’
என்றும் புலவர்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால்தான் , மேல் தொல்காப்பிய இலக்கணத்தின் தேவை நமக்குப் புலனாகும் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (246)

வந்து போனான்
வந்துப் போனான் – எது சரி ?
வந்த பையன்
வந்தப் பையன் – எது சரி?
- இதற்கெல்லாம் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?
உள்ளது !
கீழே படியுங்கள் ! -
தொல்காப்பியர் சில சொற்களைப் பட்டியலிடுகிறார் ! பட்டியலிட்டு இவையெல்லாம் வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் முன் நின்றால் எப்படிப் புணரும் என்று காட்டுகிறார் !
அச் சொற்கள் !:-
1. அன்ன (உவம உருபு ஆகிய இஃது ஓர் இடைச்சொல்; ‘உவமக் கிளவி’ என்றும் இதனைக் குறிப்பர்.)
2 . அண்மை சுட்டிய விளி ( ‘ஊர’ என்பது ஓர் அண்மை விளி;இது பெயர்ச் சொல்)
3 . செய்ம்மன என்னும் தொழிலிறு சொல் ( ‘உண்மன’ என்பது இதற்கு
எடுத்துக்காட்டு; இது வினைச் சொல்; உண்மன - உண்ணும்)
4 . ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவி ( ‘செல்’ என்பது இதற்கு எடுத்துக்காட்டு; இது வியங்கோளாகிய வினைச்சொல்)
5 . செய்த என்னும் பெயரெஞ்சு கிளவி ( ‘உண்ட’ என்பது இதற்கு எடுத்துக்காட்டு;
இது பெயரெச்சச் சொல்; ‘பெயரெச்சமாகிய வினைச் சொல் ’ எனவும் கூறுவர் )
6 . செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவி ( ‘உண்ணிய சென்றான்’ என்பது இதற்கு எடுத்துக்காட்டு; உண்ணிய சென்றான் -உண்பதற்காகச் சென்றான்; இது வினையெச்சச் சொல்)
7 . அம்ம என்னும் உரைப்பொருள் கிளவி (உரை அசையாக வரும் ‘அம்ம’ எனும்சொல்; இது இடைச்சொல்.)
8 . பலவற்று இறுதிப் பெயர்க்கொடை ( ‘பல’எனும் பெயர்ச்சொல் ; பெயர்க்கொடை - பெயர்ச்சொல்)
- இப் பட்டியல்தான் தொல்காப்பியர் தருவது !
இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் அடிப்படையில் கீழ்வரும் விளக்கங்களைத் தரலாம் !:-
1 . பொன் அன்ன + குதிரை= பொன் அன்னக் குதிரை ×
பொன் அன்ன + குதிரை= பொன் அன்ன குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
பொன் அன்ன + செந்நாய்= பொன் அன்னச் செந்நாய் ×
பொன் அன்ன + செந்நாய் = பொன் அன்ன செந்நாய் √ (இயல்பாய்
முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
பொன் அன்ன + தகர்= பொன் அன்னத் தகர் ×
பொன் அன்ன + தகர் = பொன் அன்ன தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
பொன் அன்ன + பன்றி= பொன் அன்னப் பன்றி ×
பொன் அன்ன + பன்றி = பொன் அன்ன பன்றி √ (இயல்பாய்
முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
2 . ஊர + கொள் = ஊரக் கொள் ×
ஊர + கொள் = ஊர கொள் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
ஊர + செல் = ஊரச் செல் ×
ஊர + செல்= ஊர செல் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
ஊர + தா = ஊரத் தா ×
ஊர + தா= ஊர தா√ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
ஊர + போ = ஊரப் போ ×
ஊர + போ = ஊர போ √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
3 . உண்மன + குதிரை = உண்மனக் குதிரை ×
உண்மன+ குதிரை = உண்மன குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்மன + செந்நாய் = உண்மனச் செந்நாய் ×
உண்மன+ செந்நாய்= உண்மன செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்மன + தகர் = உண்மனத் தகர்×
உண்மன+ தகர் = உண்மன தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்மன + பன்றி = உண்மனப் பன்றி ×
உண்மன+ பன்றி = உண்மன பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
4 . செல்க + குதிரை = செல்கக் குதிரை ×
செல்க + குதிரை = செல்க குதிரை √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
செல்க + செந்நாய் = செல்கச் செந்நாய் ×
செல்க + செந்நாய் = செல்க செந்நாய் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
செல்க + தகர் = செல்கத் தகர் ×
செல்க + தகர் = செல்க தகர் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
செல்க + பன்றி = செல்கப் பன்றி ×
செல்க + பன்றி = செல்க பன்றி √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
5 . உண்ட + குதிரை = உண்டக் குதிரை ×
உண்ட+ குதிரை = உண்ட குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்ட + செந்நாய் = உண்டச் செந்நாய் ×
உண்ட+ செந்நாய் = உண்ட செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்ட + தகர் = உண்டத் தகர் ×
உண்ட+ தகர் = உண்ட தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்ட + பன்றி = உண்டப் பன்றி ×
உண்ட+ பன்றி = உண்ட பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்ணாத + குதிரை = உண்ணாதக் குதிரை ×
உண்ணாத+ குதிரை = உண்ணாத குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்ணாத + செந்நாய் = உண்ணாதச் செந்நாய் ×
உண்ணாத+ செந்நாய் = உண்ணாத செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்ணாத + தகர் = உண்ணாதத் தகர் ×
உண்ணாத+ தகர்= உண்ணாத தகர்√ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்ணாத + பன்றி = உண்ணாதப் பன்றி ×
உண்ணாத+ பன்றி = உண்ணாத பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
நல்ல + குதிரை = நல்லக் குதிரை ×
நல்ல+ குதிரை = நல்ல குதிரை √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
நல்ல + செந்நாய் = நல்லச் செந்நாய் ×
நல்ல+ செந்நாய் = நல்ல செந்நாய் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
நல்ல + தகர் = நல்லத் தகர் ×
நல்ல+ தகர்= நல்ல தகர் √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
நல்ல + பன்றி = நல்லப் பன்றி ×
நல்ல+ பன்றி = நல்ல பன்றி √ (இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
6 . உண்ணிய + கொண்டான் = உண்ணியக் கொண்டான் ×
உண்ணிய + கொண்டான் = உண்ணிய கொண்டான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்ணிய + சென்றான் = உண்ணியச் சென்றான் ×
உண்ணிய + சென்றான் = உண்ணிய சென்றான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்ணிய + தந்தான் = உண்ணியத் தந்தான் ×
உண்ணிய + தந்தான் = உண்ணிய தந்தான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
உண்ணிய + போயினான் = உண்ணியப் போயினான் ×
உண்ணிய + போயினான் = உண்ணிய போயினான் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
7 . அம்ம + கொற்றா = அம்மக் கொற்றா ×
அம்ம + கொற்றா = அம்ம கொற்றா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
அம்ம + சாத்தா = அம்மச் சாத்தா ×
அம்ம + சாத்தா = அம்ம சாத்தா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
அம்ம + தேவா = அம்மத் தேவா ×
அம்ம + தேவா = அம்ம தேவா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
அம்ம + பூதா = அம்மப் பூதா ×
அம்ம + பூதா = அம்ம பூதா √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
8 . பல + குதிரை = பலக் குதிரை ×
பல + குதிரை = பல குதிரை √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
பல + செந்நாய் = பலச் செந்நாய் ×
பல + செந்நாய் = பல செந்நாய் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
பல + தகர் = பலத் தகர் ×
பல + தகர் = பல தகர் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
பல + பன்றி = பலப் பன்றி ×
பல + பன்றி= பல பன்றி √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
சில + குதிரை = சிலக் குதிரை ×
சில + குதிரை = சில குதிரை √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
சில + செந்நாய் = சிலச் செந்நாய் ×
சில + செந்நாய் = சில செந்நாய் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
சில + தகர் = சிலத் தகர் ×
சில + தகர் = சில தகர் √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
சில + பன்றி = சிலப் பன்றி ×
சில + பன்றி= சில பன்றி √(இயல்பாய் முடிந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
தொல்காப்பியர் தந்த எட்டு வகைச் சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் சரியாயிற்றா ?
தொல்காப்பியர் தந்த அந்த எட்டுவகைச் சொற்கள் கொண்ட நூற்பா இதோ ! :-
“ அன்ன வென்னு முவமக் கிளவியும்
அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்
செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும்
ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்
செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியும்
செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியும்
அம்ம வென்னு முரைப்பொருட் கிளவியும்
பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட
அன்றி யனைத்து மியல்பென மொழிப” (உயிர் மயங் . 8)
என்ன?
தொடக்கத்தில் நாம் பார்த்த வினாக்களுக்கு விடை கிடைத்ததா?
விடை-
வந்து போனான் √
வந்துப் போனான் ×
வந்த பையன்√
வந்தப் பையன் ×

Last edited by Dr.S.Soundarapandian on Thu 26 Jun 2014 - 19:23; edited 1 time in total (Reason for editing : spacing)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (247)
தொடத் தொடத் தொல்காப்பியம் (247)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
வாழிய அருணாசலம் !
வாழி அருணாசலம் !
- எது சரி ?
இரண்டுமெ சரிதான் என்கிறார் தொல்காப்பியர் ! :-
“வாழிய வென்னுஞ் சேயென் கிளவி
இறுதி யகரங் கெடுதலு முரித்தே” (உயிர் மயங்.9)
‘வாழிய வென்னும் சேயென் கிளவி’- ‘வாழி’ என்ற ஏவல் அல்லாது , வியங்கோளில் ‘வாழிய’ என்றுகூறும் சொல்லானது ,
‘இறுதி யகரங் கெடுதலும் உரித்தே ’ – வல்லெழுத்தை முதலாக உடைய சொல் வந்து புணரும்போது, தனது இறுதி ‘ய’வைக் கெடுக்கும் !
வாழிய + கொற்றா = வாழியக் கொற்றா ×
வாழிய + கொற்றா = வாழிய கொற்றா √ (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + கொற்றா = வாழி கொற்றா √ (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + சாத்தா = வாழியச் சாத்தா ×
வாழிய + சாத்தா = வாழிய சாத்தா √ (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + சாத்தா = வாழி கொற்றா √ (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + தேவா= வாழியத் தேவா ×
வாழிய + தேவா= வாழிய தேவா √ (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + தேவா = வாழி கொற்றா √ (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + பூதா = வாழியப் பூதா ×
வாழிய + பூதா = வாழிய பூதா √ (இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + சாத்தா = வாழி பூதா √ (இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
மேலே , வருசொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாக உடையன என்பதைப் பர்க்க மறவாதீர் !
இளம்பூரணர் , மெல்லின, இடையின , உயிர் எழுத்துகளை முதலாக உடைய சொற்களுக்கும் இது பொருந்தும் என்று கூறி எடுத்துக்காட்டு ஒன்றைத் தருகிறார் ; அதன்படி -
வாழிய + ஞெள்ளா = வாழியஞ்ஞெள்ளா×
வாழிய + ஞெள்ளா = வாழிய ஞெள்ளா√(இறுதி ‘ய’கெடாது வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வாழிய + ஞெள்ளா = வாழி ஞெள்ளா√(இறுதி ‘ய’கெட்டு வந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
நூற்பாவில் ‘சேயென்’ என்று ஒரு சீர் வந்தது அல்லவா?
இதில் பல தகராறுகள் ! -
‘சேயஎன்’ – இளம்பூரணர் பாடம்
‘சேயஎன்’ – நச்சினார்க்கினியர் பாடம்
‘சேயென்’ – மகாலிங்கையர் பாடம்
‘சேயென்’ – கணேசய்யர் பாடம்
‘சேயென்’ – சுப்பிரமணிய சாத்திரியார் பாடம்
‘செய்யிய’ – வேங்கடராஜுலு ரெட்டியார் பாடம்
‘செய்கென்’ – பலசுந்தரனார் பாடம்
‘சேயென்’ – மு.சண்முகம் பிள்ளை பாடம்
‘சேயென்’ – சொ.சிங்காரவேலன் பாடம்
‘செய்கவென்’ – தி.வே.கோபாலையர் பாடம்
‘செய்வென்’ – திருவனந்தபுரம் பாடம்
‘செயஎன்’ – தமிழண்ணல் பாடம்
‘செயவென்’ – ச.வே.சுப்பிரமணியன் பாடம்
‘சேயென்’ – என்பதே நூற்பா ஓசைக்கு ஒத்து வருவதால் , இப்போதைக்கு, இப்பாடம் இங்கு கொள்ளப்பட்டுள்ளது !
மேலே பல பாடங்களைப் பார்த்தோமல்லவா? இன்னும் பல பதிப்புகளை நாம் காணவேண்டியுள்ளது !
இவ்வாறு அனைத்துப் பதிப்புகள் மட்டுமல்லாது , அனைத்துச் சுவடிகளையும் (Manuscripts)ஆராய்ந்து , அலசிப் பார்த்து , நீண்ட ஆய்வு நடத்தி, அதன்பின் நாம் ஒரு பாடத்தை நிர்ணயிப்பதே சரியான முறையாகும்! இதனைத்தான் செம்பதிப்பு (Critical edition) என்கிறோம்!

தொடத் தொடத் தொல்காப்பியம் (248)

முன் ஆய்வில் , ‘அம்ம + கொற்றா = அம்ம கொற்றா’ என்று இயல்பாகப் புணரும் எனக் கண்டோம் !
இந்த நூற்பாவில் அது தொடர்பாக என்ன கூறுகிறார் என்று பார்ப்போமே? :-
“உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்” (உயிர்மயங் . 10)
‘உரைப்பொருள் கிளவி’ – உரை அசைச் சொல்லாகிய ‘அம்ம’ என்பது,
‘நீட்டமும் வரையார்’ – ‘அம்மா’ என்று நீளுதலையும் நீக்கமாட்டார்கள் !
அம்ம + கொற்றா = அம்மக் கொற்றா ×
அம்ம + கொற்றா = அம்ம கொற்றா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + கொற்றா = அம்மா கொற்றா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
(இங்கே ‘அம்மா’ என்பது தாயைக் குறிக்காது; பொருளற்ற ஓர் அசைதான் ! )
அம்ம + சாத்தா = அம்மச் சாத்தா ×
அம்ம + சாத்தா = அம்ம சாத்தா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + கொற்றா = அம்மா சாத்தா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + தேவா = அம்மத் தேவா ×
அம்ம + தேவா = அம்ம தேவா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + தேவா = அம்மா தேவா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + பூதா = அம்மப் பூதா ×
அம்ம + பூதா= அம்ம பூதா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + பூதா = அம்மா பூதா √ (இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
தொல்காப்பிய நூற்பா , வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் வந்து புணர்வதற்கே !
ஆனால் இளம்பூரணர், வேறு இன எழுத்தை முதலாக உடை சில சொற்களுக்கும் இது பொருந்தும் என்று கூறி , ஓர் எடுத்துக்காட்டைத் தருகிறார்!:-
அதனை வருமாறு விளக்கிக் கூறலாம் :-
அம்ம + ஞெள்ளா= அம்மஞ் ஞெள்ளா ×
அம்ம + ஞெள்ளா= அம்ம ஞெள்ளா √(இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
அம்ம + ஞெள்ளா= அம்மா ஞெள்ளா √(இயல்பாகப் புணர்ந்தது) (அல்வழிப்
புணர்ச்சி)
‘உரையசை’ என்பதை விளங்கிக்கொள்வது கடினமாக உள்ளதா?
சிலர் பேசும்போது , “இந்தாப்பா , காலை 8 மணிக்கெல்லாம் வந்திடணும்!” என்கிறார்கள் அல்லவா? அப்போது ‘இந்தாப்பா’ எனக் கூறி எதையாவது கையில் கொடுக்கிறார்களா? இல்லையே? ‘இந்தாப்பா’ என்பதற்குப் பொருள் இல்லையல்லவா? இதுதான் ‘உரை அசை’ !
எனவே ‘உரையசை’ என்பது பாடலில்தான் வரும் என்று கருதவேண்டாம் ! அது பேச்சு வழக்கிலும் வரும் !

Similar topics
» 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!
» ஒதுக்கப்பட்ட தொல்காப்பியம்
» தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்
» தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்
» தொல்காப்பியம் பாடும் 3 வயதுக்குழந்தை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum