புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 29 of 84 •
Page 29 of 84 • 1 ... 16 ... 28, 29, 30 ... 56 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

தொடத் தொடத் தொல்காப்பியம் (219)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியரின் அடுத்த நூற்பா !:-
“ஞநவென் புள்ளிக் கின்னே சாரியை” (உருபு . 10)
‘ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை’ – ‘ஞ்’ , ‘ந்’ ஆகிய எழுத்துகளை ஈற்றிலே கொண்ட பெயர்ச் சொற்கள் , வேற்றுமை உருபோடு புணர்ந்தால் , ‘இன்’சாரியை வரும் !
உரிஞ் + ஐ = உரிஞ் + இன் + ஐ = உரிஞினை (இன் – சாரியை ; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)
உரிஞ் + ஒடு = உரிஞ் + இன் + ஒடு = உரிஞினொடு (இன் – சாரியை ; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)
பொருந் + ஐ = பொருந் + இன் + ஐ = பொருநினை (இன் – சாரியை ; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)
பொருந் + ஒடு = பொருந் + இன் + ஒடு = பொருநினொடு (இன் – சாரியை ; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)
அடுத்து ‘வற்று’ச் சாரியை ! :-
“சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும்
கெட்ட இறுதி இயல்திரிபு இன்றே” (உருபு . 11)
‘சுட்டு முதல் வகரம்’ – அவ் , இவ் , உவ் ,
‘ ஐயும் மெய்யும் ’ – ‘வை’ (வ – வகரம் ; மெய் – வ் ; ஐயும் மெய்யும் - வை)
‘கெட்ட இறுதி’ - ‘அவை’ என்ற சொல்லின் முன் ,வேற்றுமை உருபு வரும்போது , கெட்ட ஈறு ‘வை’ ,
‘இயல் திரிபு இன்றே’ - போல , ‘வற்று’ச் சாரியை பெற்றுப் புணர்வது தப்பாது!
அவ் + ஐ = அவ் + வற்று + ஐ = அவற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)
இவ் + ஐ = இவ் + வற்று + ஐ = இவற்றை(வேற்றுமைப் புணர்ச்சி)
உவ் + ஐ = உவ் + வற்று + ஐ = உவற்றை(வேற்றுமைப் புணர்ச்சி)
அவ் + ஒடு = அவ் + வற்று + ஒடு = அவற்றொடு(வேற்றுமைப் புணர்ச்சி)
இவ் + ஒடு = இவ் + வற்று + ஒடு = இவற்றொடு(வேற்றுமைப் புணர்ச்சி)
உவ் + ஒடு = உவ் + வற்று + ஒடு = உவற்றொடு(வேற்றுமைப் புணர்ச்சி)
அது சரி ! மேல் தொல்காப்பிய நூற்பாவில்(உருபு . 11), ‘வற்று’ கூறப்படவில்லையே , அஃது எங்கிருந்து வந்தது ?
இதே உருபியல் நூற்பா ஐந்திலிருந்து ( “சுட்டுமுத …’’ )வந்தது !
மேல் எடுத்துக்காட்டுகளை ‘வற்று ’ச் சாரியை இல்லாமல் பார்த்தால்தான் ‘வற்று’ச் சாரியையின் இன்றியமையாமை நமக்குப் புலனாகும் ! –
அவ் + ஒடு = அவ்வொடு
இவ் + ஒடு = இவ்வொடு
உவ் + ஒடு = உவ்வொடு
‘அவ்வொடு’ , என்பதற்கும் ‘அவற்றொடும்’ என்பதற்கும் வேறுபாடு உண்டன்றோ?
‘அவொடு’ என்றால் பொருளே இல்லையே?
எனவே , சாரியை என்பது ஓசை நீட்சிக்காக மட்டுமன்றிப் பொருள் இயைபுக்காகவும் வருகிறது என்ற பொருண்மை (Concept) திரள்கிறதல்லவா?
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (220)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘அவ்’ , ‘இவ்’ , ‘உவ்’ ஆகிய சுட்டுப் பெயர்ச் சொற்கள், வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது ‘வற்று’ச் சாரியை பெறுதலை முன் ஆய்வில் பார்த்தோம் !
இப்போது , சுட்டுப்பெயர்கள் அல்லாத ‘வ்’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள் ,வேற்றுமை உருபுகளுடன் புணருமாற்றைக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-
“ ஏனை வகர மின்னொடு சிவணும்” (உருபு . 12)
தெவ் – சுட்டுப் பெயர் அல்லாத ‘வ்’ ஈற்றுப் பெயர்ச்சொல்.
தெவ் - பகை .
தெவ் + ஐ = தெவ் + இன் + ஐ = தெவ்வினை (இன் – சாரியை ; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)
தெவ் + ஒடு = தெவ் + இன் + ஒடு = தெவ்வினொடு (இன் – சாரியை ; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)
இங்கே , இளம்பூரணர் ஒரு நுணுக்கத்தைக் கூறுகிறார் !
“மற்று இது உரிச்சொல் லன்றோ வெனின் , உரிச்சொல்லே யெனினும் படுத்த லோசையாற் பெயராயிற் ரென்க” !
‘தெவ்’ என்று ஓர் உரிச்சொல் இருக்கிறது ! உரியியல் நூற்பா 48இல் இஃது உரிசொல்லாகவே வருகிறது ! அப்படி இருக்கும்போது , பெயர்சொல்லாவது எப்படி?
இதற்கு விடையைத்தான் மேலே இளம்பூரணர் கூறினார் !
அஃதாவது – படுத்துச் சொன்னால் ‘தெவ்’ – பெயர்ச்சொல் !
எடுத்துச் சொன்னால் ‘தெவ்’ – உரிச்சொல் !
சரி ! எப்படிப் படுத்துச் சொல்வது ?
பாய்விரித்துப் படுத்துக்கொண்டு சொல்லவேண்டுமா?
அல்ல!
இயல்பான ஒலியில், காற்றானது இதழ் மட்டத்தில் செல்வது போல உச்சரித்தால் – படுத்துச் சொல்வது !
சற்று உரத்த ஒலியில் , காற்றானது இதழ் மட்டத்திற்கு மேலே செல்வதுபோல ஒலித்தால் – எடுத்துச் சொல்வது !
ஒரே சொல் ! உச்சரிப்பு முறை இரண்டு !
ஓர் உச்சரிப்பில் அது பெயர்! இன்னோர் உச்சரிப்பில் அஃது பெயர் !
தொட்ட இடமெல்லாம் தொல்காப்பியம் இனிக்கிறது !

தொடத் தொடத் தொல்காப்பியம் (221)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அடுத்து ‘ம்’ஈற்றுச் சொற்கள் , வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது , என்ன சாரியை இடையே வரும் எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! : -
“மஃகான் புள்ளிமு னத்தே சாரியை” (உருபு . 13)
மரம் + ஐ = மரமை ×
மரம் + ஐ = மரம் + அத்து + ஐ = மரத்தை √ (அத்து – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
மரம் + ஒடு = மரமொடு ×
மரம் + ஒடு = மரம் + அத்து + ஒடு = மரத்தொடு √ (அத்து – சாரியை; மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
மரம் + ஆல் = மரமால் ×
மரம் + ஆல் = மரம் + அத்து + ஆல் = மரத்தால் √ (அத்து – சாரியை ; மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
மரம் + கண் = மரக்கண் ×
மரம் + கண் = மரம் + அத்து + கண் = மரத்துக்கண் √ (அத்து – சாரியை ; ஏழாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)
அது சரி !
‘அத்து’ என்பதன் ‘அ’ எப்படிக் கெடுகிறது ? அதற்கு என்ன விதி ?
புணரியல் நூற்பா 31 இல் விதி உள்ளது !
“அத்தே வற்றே …” என்ற அந்த நூற்பாவை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம் ! அதை இங்கு இணைக்க!

தொடத் தொடத் தொல்காப்பியம் (222)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ம்’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரவேண்டுமானால் ‘அத்து’ச் சாரியை பெறும் என்று தொல்காப்பியர் சொன்னதைப் படித்தோம் !
சொன்ன அதே வேகத்தில் “அதற்காக எல்லாச் சொற்களுக்கும் இதுதான் கணக்கு என்று எடுத்துக்கொள்ளாதீர்கள் !” என்று அறிவுரை கூறுகிறார் அவர் ! :-
“இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே” (உருபு . 14)
அஃதாவது , ‘இன்’சாரியையும் வரும் என்கிறார் !
உரும் + ஐ = உருமை ×
உரும் + அத்து + ஐ = உருமத்தை ×
உரும் + இன் + ஐ = உருமினை √(இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உரும் + ஒடு = உருமொடு ×
உரும் + அத்து + ஒடு = உருமத்தொடு ×
உரும் + இன் + ஒடு = உருமினொடு √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
நூற்பாவில் , ‘மொழியுமார்’ என்று வந்ததல்லவா?
மொழியும் + ஆர் = மொழியுமார்
ஆர் – அசைநிலை .

தொடத் தொடத் தொல்காப்பியம் (223)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ம்’ ஈற்றுச் சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரவேண்டுமானால் ‘அத்து’ச் சாரியை வரும் (உருபு . 13) , ‘இன்’ சரியை வரும் (உருபு . 14) என்றெல்லாம் காட்டினார் தொல்காப்பியர் !
அப்படியானால் , ‘நும் ’ என்பதும் ‘ம்’ஈற்றோடுதான் உள்ளது; இதுவும் அச் சாரியைகளையே பெறுமா? – ஒரு மாணவன் கேட்டான் !
‘அப்படியல்ல ! அதற்கு வேறு விதி!’ என்று அதற்கு ஒரு நூற்பா எழுதுகிறார் தொல்காப்பியர் :-
“நும்மெ னிறுதி யியற்கை யாகும்” (உருபு . 15)
‘நும் என் இறுதி’ – ‘நும்’ எனும் பெயர்சொல்லின் ஈறு , அஃதாவது ‘ம்’ ,
‘இயற்கை ஆகும்’ – இயற்கையாகப் புணரும் ! அஃதாவது , ‘அத்து’, ‘இன்’சாரிகளைப் பெறா !
நும் + ஐ = நும்மத்தை × (அத்து -சாரியை)
நும் + ஐ = நும்மினை × (இன் - சாரியை)
நும் + ஐ = நும்மை √ (சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)
நும் + ஒடு = நும்மத்தொடு × (அத்து -சாரியை)
நும் + ஒடு = நும்மினொடு × (இன் - சாரியை)
நும் + ஒடு = நும்மொடு √ (சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இந்தச் சாரியைதான் எவ்வளவு வித்தை காட்டுகிறது?

தொடத் தொடத் தொல்காப்பியம் (224)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ம்’ ஈற்றுப் பெயர்ச் சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது எந்தச் சாரியை வரும் என்று விரிவாகப் பேசிவருகிறார் தொல்காப்பியர் ! பார்ப்போம் கீழ்வரும் நூற்பாவில் என்ன வித்தை காட்டுகிறார் அவர் என்று ! : -
”தாம்நா மென்னு மகர விறுதியும்
யமெ னிறுதியு மதனோ ரன்ன
ஆஎ ஆகும் யாமெ னிறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்
ஏனை யிரண்டு நெடுமுதல் குறுகும் ” (உருபு . 16)
‘தாம் நாம் என்னும் மகர விறுதியும்,
யாம் என் இறுதியும்’ – ‘தாம்’ , ‘நாம்’ , ‘யாம்’ என்ற மகர ஈற்றுச் சொற்கள் ,
‘அதனோர் அன்ன ’ - ‘நும்’ ஈற்றுச் சொல் , ‘அத்து’, ‘இன்’ ஆகிய சாரியைகள் பெறாதது போலவே , இவையும் பெறா !
‘ஆ , எ ஆகும் , ‘யாம்’ என் இறுதி ஆ வயின் யகர மெய் கெடுதல் வேண்டும்’ - ‘யாம்’ என்ற சொல்லின் முதல் ‘ஆ’ , ‘எ’ ஆகும் ! ‘ய்’ , கெடும் !
‘ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்’ – ‘தாம்’ , ‘நாம்’ எனும் சொற்களின் முதல் சொற்களான ‘தா’ , ‘நா’ ஆகியன ‘த’ , ‘ந’ எனக் குறுகும் !
தாம் + ஐ = தாமத்தை ×
தாம் + ஐ = தாமினை ×
தாம் + ஐ = தம்மை √
தாம் + ஒடு = தாமத்தொடு ×
தாம் + ஒடு = தாமொடு ×
தாம் + ஒடு = தம்மொடு √
நாம் + ஐ = நாமத்தை ×
நாம் + ஐ = நாமினை ×
நாம் + ஐ = நம்மை √
நாம் + ஒடு = நாமத்தொடு ×
நாம் + ஒடு = நாமொடு ×
நாம் + ஒடு = நம்மொடு √
எம் + ஐ = எம்மத்தை ×
எம் + ஐ = எம்மினை ×
எம் + ஐ = எம்மை √
எம் + ஒடு = எம்மத்தொடு ×
எம் + ஒடு = எம்மினொடு ×
எம் + ஒடு = எம்மொடு √
தொல்காப்பியர் , ஒரு நூற்பாக் கருத்தானது மாறுபடும் இடங்களை வெகு துல்லியமாக அறிந்து , அவற்றுக்கேற்ப வேறு சரியான விதிகளை மறக்காமல் தருவதைக் கோட்பாடாகக் கொண்டுள்ளார் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (225)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘எல்லாம்’ எனும் பெயர்ச்சொல்லை எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் ! :-
“எல்லா மென்னு மிறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையு மிறுதி யான” (உருபு . 17)
‘எல்லாம் எனும் இறுதி முன்னர்’ – ‘எல்லாம்’ எனும் பெயர்ச்சொல்லின் ஈற்றெழுத்தாகிய ‘ம்’ முன்பாக வேற்றுமை உருபு புணர வரும்போது,
‘வற்றென் சாரியை முற்றத் தோன்றும்’ – ‘வற்று’ச் சாரியை முழுவதுமாகத் தோன்றும் !
‘உம்மை நிலையும் இறுதி யான’ – வற்றுச் சாரியை புணர்ந்த பின்னர் ‘உம்’ சாரியை இறுதியிலே வரும் !
எல்லாம் + ஐ = எல்லாவத்தை ×
எல்லாம் + ஐ = எல்லாமினை ×
எல்லாம் + ஐ = எல்லா + வற்று + ஐ + உம் = எல்லாவற்றையும் √ (வற்று – சாரியை ; உம் - சாரியை)
இங்கே இடையிலே சாரியை வந்ததோடு , ஈற்றிலும் ஒரு சாரியை வந்ததைக் கவனியுங்கள் !
‘எல்லாம்’ என்று சொல்லிலேயே , ‘இத்தனை’ என்பது தெளிவாகிவிட்ட நிலையில் ஈற்றிலே வந்த உம்மை , முற்றும்மை எனப்படாது , சாரியை எனப்பட்டுள்ளது !இதனைப் போன்றே -
எல்லாம் +ஒடு = எல்லாவற்றொடும் √ (வற்று , உம் - சாரியைகள்)
எல்லாம் +கு = எல்லாவற்றுக்கும் √ (வற்று , உம் - சாரியைகள்)
எல்லாம் +இன் = எல்லாவற்றினும் √ (வற்று , உம் - சாரியைகள்)

தொடத் தொடத் தொல்காப்பியம் (226)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘எல்லாம்’ என்னும் பெயர்ச்சொல்லின் புணர்ச்சிபற்றிப் பார்த்தோம் !
அந்த ‘எல்லாம்’ என்ற பெயர்ச்சொல் உயர்திணையைக் குறித்தால் என்ன ஆகும் ?
தொல்காப்பியர் விடை ! :-
“உயர்திணை யாயி னம்மிடை வருமே” (உருபு . 18)
அஃதாவது – ‘எல்லாம்’ என்ற சொல் உயர்திணைச் சொல்லானால் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது ‘நம்’ எனும் சாரியை இடையே வரும் என்கிறார் !
எல்லாம் + ஐ = எல்லாமையும் ×
எல்லாம் + ஐ = எல்லாவத்தை ×
எல்லாம் + ஐ = எல்லாமினை ×
எல்லாம் + ஐ = எல்லாம் + நம் + ஐ + உம் = எல்லா நம்மையும் √( நம் – சாரியை ; உம் - சாரியை)
எல்லாம் + ஒடு = எல்லாவொடும் ×
எல்லாம் + ஒடு = எல்லாவத்தொடு ×
எல்லாம் + ஒடு = எல்லாமினொடு ×
எல்லாம் + ஒடு = எல்லாம் + நம் + ஒடு + உம் = எல்லா நம்மொடும் √( நம் – சாரியை ; உம் - சாரியை)
சாரியைகளில் நம் கவனம் இருக்கும்போது , ‘பகுதிச் சொல்லிலும் கவனம் தேவை’ என்று தொல்காப்பியர் அறைவதை நோக்குவீர் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (227)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ம்’ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , சாரியை பெற்று வேற்றுமை உருபுகளுடன் புணரும் வகைகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !
தொடர்ந்து ஏதோ ஒரு பெரிய நூற்பாவுடன் வருகிறார் , வாருங்கள் பார்க்கலாம் ! :-
“எல்லாரு மன்னும் படர்க்கை யிறுதியும்
எல்லீரு மென்னு முன்னிலை யிறுதியும்
ஒற்று முகரமுங் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையு மிறுதி யான
தம்மிடை வரூஉம் படர்க்கை மேன
நும்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே !” (உருபு . 19)
‘எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்
எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும் ’ - ‘எல்லாரும்’ என்ற படர்க்கைப் பெயர்ச்சொல்லின் ஈறாகிய ‘ம்’ ; ‘எல்லீரும்’ என்ற முன்னிலைப் பெயர்ச்சொல்லின் ஈறாகிய ‘ம்’;
‘ஒற்றும் உகரமும் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி’ - ஒற்றாகிய ‘ம்’ கெடும் ; ‘ரு’விலுள்ள ‘உ’ கெட்டு,‘ர்’ கெடாது நிற்கும் !
‘தம்மிடை வரூஉம் படர்க்கை மேன’ - அப்போது ‘தம்’ சாரியை இடையே தோன்றும் , படர்க்கைப் பெயர்ச்சொல்லைப் பொறுத்தவரை !
‘‘நும்மிடை வரூஉம் முன்னிலை மொழிக்கே’ - அப்போது ‘நும்’ சாரியை இடையே தோன்றும் , முன்னிலைப் பெயர்ச்சொல்லைப் பொறுத்தவரை !
‘உம்மை நிலையும் இறுதி யான’ - புணர்ச்சி இறுதியில் ‘உம்’ சாரியை வரும் !
எல்லாரும் + ஐ = எல்லாருமை ×
எல்லாரும் + ஐ = எல்லாருமினை ×
எல்லாரும் + ஐ = எல்லார் + தம் + ஐ + உம் = எல்லார் தம்மையும் √ (தம் – சாரியை ; ‘உம்’சாரியை)
எல்லாரும் + ஒடு = எல்லாருமொடு ×
எல்லாரும் + ஒடு = எல்லாருமினொடு ×
எல்லாரும் + ஒடு = எல்லார் + தம் + ஒடு + உம் = எல்லார் தம்மொடும் √ (தம் – சாரியை ; ‘உம்’சாரியை)
எல்லீரும் + ஐ = எல்லீருமை ×
எல்லீரும் + ஐ = எல்லீருமினை ×
எல்லீரும் + ஐ = எல்லீர் + நும் + ஐ + உம் = எல்லீர் நும்மையும் √ (நும் – சாரியை ; ‘உம்’சாரியை)
எல்லீரும் + ஒடு = எல்லீருமொடு ×
எல்லீரும் + ஒடு = எல்லீருமினொடு ×
எல்லீரும் + ஒடு = எல்லீர் + நும் + ஒடு + உம் = எல்லீர் நும்மொடும் √ (நும் – சாரியை ; ‘உம்’சாரியை)
இவ்விடத்தில் , இளம்பூரணர் ‘சில ரகர ஈற்றுச் சொற்களுக்கும் இவ்விதி பொருந்தும் ’என்கிறார் ! : -
கரியார் + தம் + ஐ + உம் = கரியார் தம்மையும் √ (தம் , உம் - சாரியைகள் )
கரியார் – படர்க்கைப் பெயர்ச்சொல்.
சான்றீர் + நும் + ஐ + உம் = சான்றீர் நும்மையும் √ (நும் , உம் - சாரியைகள் )
சான்றீர் – முன்னிலைப் பெயர்ச்சொல் .
நூற்பாவில் ‘மேன’ என்று வந்ததல்லவா?
மேல் → மேன் (திரிபு)
மேன் → மேன (அகரச் சாரியை புணர்ந்தது) !

தொடத் தொடத் தொல்காப்பியம் (228)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
ஒரு வழியாக மகர ஈற்றுச் சொற்கள் முடிந்தன!
இப்போது னகர ஈற்றுச் சொற்கள் ! :-
“தான்யா னென்னு மாயீ ரிறுதியும்
மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே” (உருபு . 19)
‘தான் யான் என்னும் ஆயீர் இறுதியும்’ – ‘தான்’ , ‘யான்’ என்பனவற்றின் ‘ன்’ இறுதியானது,
‘மேல் முப் பெயரொடும்’ – உருபியல் நூற்பா 16இல் ( ‘தாம் நாம் …’) கூறப்பட்ட ‘தாம்’ ‘நாம்’ ‘யாம்’ என்ற மூன்று பெயர்ச் சொற்களைப் போலவே,
‘வேறுபாடு இல்லை !’ - வேறுபாடு இல்லாது புணரும் !
அஃதாவது – ‘தாம்’ என்பது ‘தம்’ எனக் குறுகியது போலவே , ‘தான்’ என்பதும் ‘தன்’ ஆகும் ! ‘யாம்’ என்பது ‘எம்’ ஆனது போலவே , ‘யான்’ என்பது ‘என்’ ஆகும் !
தான் + ஐ = தானை ×
தான் + ஐ = தானினை ×
தான் + ஐ = தன்னை √
தான் + ஒடு = தானொடு ×
தான் + ஒடு = தானினொடு ×
தான் + ஒடு = தன்னொடு ×
யான் + ஐ = யானை ×
யான் + ஐ = யானினை ×
யான் + ஐ = என்னை √
யான் + ஒடு = யானொடு ×
யான் + ஒடு = யானினொடு ×
யான் + ஒடு = என்னொடு ×
மேல் நூற்பாவில் ‘ஈரிறுதியும்’ என வந்ததல்லவா?
‘ இரு ’ என்ற சொல் முன் , ‘இறுதி’ எனும் உயிர் எழுத்தை முதலாகக் கொண்ட சொல் வருவதால் , ‘இரு’ , ‘ஈர்’ ஆனது ! ( இங்கே ஒரு , ஓர் மாற்றத்தை ஒப்பிடுக ! )

- Sponsored content
Page 29 of 84 • 1 ... 16 ... 28, 29, 30 ... 56 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 84