Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters
Page 26 of 84
Page 26 of 84 • 1 ... 14 ... 25, 26, 27 ... 55 ... 84
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
தொடத் தொடத் தொல்காப்பியம் (193)
தொடத் தொடத் தொல்காப்பியம் (193)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
செயப்பாட்டுவினை பழந் தமிழில் உண்டா?
‘இல்லை’ என்று மொழியியலாளர் சிலர் எழுதியுள்ளனர் !
அது தவறு என்பதற்குத் தொல்காப்பியமே ஆதாரம் !
நாம் கீழே பார்க்கப்போகும் நூற்பாவில் அந்த ஆதாரம் உள்ளது ! :-
“புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால்
தம்மி னாகிய தொழிற்சொல் முன்வரின்
மெய்ம்மை யாகலு முறழத் தோன்றலும்
அம்முறை யிரண்டு முரியவை யுளவே
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் ” (தொகை . 14)
‘புள்ளி இறுதி உயிர் இறு கிளவியும்’ – மெய்யெழுத்தையும் உயிர் எழுத்தையும் ஈற்றிலே கொண்ட சொற்கள் முன்பு ,
‘தம்மின் ஆகிய தொழிற் சொல் முன் வரின்’ – ‘படுதல்’ என்பதைப் பெற்ற வினைச் சொற்கள் வந்தால் ,
‘வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால் மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும் அம்முறை இரண்டும் உரியவை உளவே’ – வல்லெழுத்துச் சந்தி பெற்றும் பெறாதும் வரக்கூடிய அந்த இரு முறைகளும் உள்ளன ,
‘வேற்றுமை மருங்கில் போற்ற வேண்டும்’ – வேற்றுமைப் புணர்ச்சிகளில் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை வருமாறு விரிக்கலாம் ! :-
நாய் + கோட்பட்டான் = நாய்கோட் பட்டான் (வேற்றுமைப் புணர்சி) (இயல்புப் புணர்ச்சி)
நாய் + சாரப் பட்டான் = நாய்சாரப் பட்டான் (வேற்றுமைப் புணர்சி) (இயல்புப் புணர்ச்சி)
நாய் + தீண்டப் பட்டான் = நாய்தீண்டப் பட்டான் (வேற்றுமைப் புணர்சி) (இயல்புப் புணர்ச்சி)
நாய் + பாயப் பட்டான் = நாய்பாயப் பட்டான் (வேற்றுமைப் புணர்சி)(இயல்புப் புணர்ச்சி)
புலி + கோட்பட்டான் = புலிகோட் பட்டான் (வேற்றுமைப் புணர்சி) (இயல்புப் புணர்ச்சி)
புலி + சாரப் பட்டான் = புலி சாரப் பட்டான் (வேற்றுமைப் புணர்சி)
(இயல்புப் புணர்ச்சி)
புலி + தீண்டப் பட்டான் = புலி தீண்டப் பட்டான் (வேற்றுமைப் புணர்சி)
(இயல்புப் புணர்ச்சி)
புலி + பாயப் பட்டான் = புலி பாயப் பட்டான் (வேற்றுமைப் புணர்சி) (இயல்புப் புணர்ச்சி)
ஆனால் செயப்பாட்டு வினைப் புணர்ச்சிகளிலும் உறழ்ச்சி உண்டு என்கிறார் இளம்பூரணர் !
சூர் + கோட்பட்டான் = சூர்கோட் பட்டான் √(வேற்றுமைப் புணர்சி)
(இயல்புப் புணர்ச்சி)
சூர் + கோட்பட்டான் = சூர்க்கோட் பட்டான் √(வேற்றுமைப் புணர்சி)
(தோன்றல் புணர்ச்சி)
வளி + கோட்பட்டான் = வளிகோட் பட்டான் √(வேற்றுமைப் புணர்சி)
(இயல்புப் புணர்ச்சி)
வளி + கோட்பட்டான் = வளிக்கோட் பட்டான் √(வேற்றுமைப் புணர்சி)
(தோன்றல் புணர்ச்சி)
(வளி - காற்று)
‘நாய்’ , ‘சூர்’ ஆகியன புல்ளி ஈறு பெற்ற சொற்கள் ; ‘புலி’ , ‘வளி’ ஆகியன உயிர் ஈறு பெற்ற சொற்கள் . இவை ‘புள்ளி இறுதியும் உயிரிறு கிளவியும்’ என்ற தொல்காப்பியர் விதிக்கு இயைய அமைந்துள்ளன என்பதைக் கவனியுங்கள் !
‘பேய் கோட்பட்டான்’ – பற்றிப் பார்த்தோமல்லவா?
இதற்கு ஒரு விதி விலக்குக் காட்டுகிறார் இளம்பூரணர் ! அதன்படி –
பேய் + கோட்பட்டான் = பேஎய்கோட் பட்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (எ – அளபெடை)
பேய் + கோட்பட்டான் = பேஎய்க்கோட் பட்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (எ – அளபெடை; க்- சந்தி)
இன்னும் , இளம்பூரணர் தரும் கூடுதல் செய்தியால் , கீழ்வரும் வகைகளையும்
பெறுகிறோம் ! :-
பாம்பு + கோட்பட்டான் = பாம்புகோட் பட்டான் √ வேற்றுமைப் புணர்சி)
(இயல்புப் புணர்ச்சி)
பாம்பு + கோட்பட்டான் = பாப்புக்கோட் பட்டான் √ வேற்றுமைப் புணர்சி)
(நிலைமொழியான ‘பாம்பு’ என்பதிலுள்ள ‘ம்’ , ‘ப்’ஆனதைக் கவனிக்க!)
‘தீண்டப் பட்டான்’ , ‘பாயப் பட்டான்’ என்ற தொடர்களால் , பழந்தமிழில் செயப்பாட்டுவினை வடிவம் இருந்தமை தெளிவாகிறதல்லவா?
இவற்றில் வந்த ‘படு’ என்பது துணை வினை (Auxiliary verb) எனப்படும்!
அது சரி !
‘உறழ்ச்சி’ ஏன் ஏற்படுகிறது ?
உறழ்ச்சி ஏற்படும் சில காரணங்களில் ஒரு காரணம் –
மக்கள் வழக்குக்கும் புலவர் வழக்குக்கும் உள்ள இடைவெளியானது உறழ்ச்சிகளுக்கு வித்திடுகிறது !
நாய் கோட்பட்டான் , புலி கோட்பட்டான் – இவற்றில் உறழ்ச்சி இல்லை !
ஏன் ?
ஏனெனில் , மக்களாலும் புலவர்களாலும் இவை ஒருசேர வழங்கப்பட்டு , ‘நாய் கோட்படு’ என்பது பகுதியக நின்றதுதான் காரணம் !
இதே முறையில் , ‘சூர்கோட் பட்டான்’ என்பது மக்கள் வழக்காகப் பரவவில்லை ! ; ‘சூர்’ என்ற அருஞ்சொல் , மக்கள் பயன்படுத்தும் சொல் அல்ல ! புலவர்கள் பயன்படுத்தும் சொல்! ‘சூர்’ என்றால் ‘கொடுந் தெய்வம்’ (Malign deity) என்பது பொருள் ! எனவே , ‘சூர்க் கோட்பட்டான்’ என்ற வடிவே சரியானது என்ற ஒரு கருத்தைப் புலவர்கள் தெரிவித்துள்ளனர் ! அதனால் ‘உறழ்ச்சி’! இங்கே பகுதி ‘சூர்’ !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (194)

வேற்றுமைப் புணர்ச்சியில் , இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி விதிகளை உயிர்
மயங்கியல் , புள்ளி மயங்கியல் முதலான இயல்களில் தொல்காப்பியர் கூறுகிறார் . நாம் பார்த்துவரும் தொகை மரபில் அவ்வியல்களில் கூறுவனவற்றைத் தொகுத்துக்கூறுகிறார் ; அத்துடன் தொகை மரபில் சில விதிவிலக்குகளையும் தெரிவிக்கிறார் அவர் !
சான்றாக , வேற்றுமைப் புணர்சியில் , “மரப்பெயர்க் கிளவிக்கு வல்லெழுத்து மிகுமே”
(உயிர் மயங் . 15) எனக்கூறி , ‘விள + கோடு = விளங் கோடு ’என்ற புணர்ச்சிக்கு வழிவகுத்தார் தொல்காப்பியர் !
அப்படியானால் , விள + குறைத்தான் = விளங் குறைத்தான் ’ என்று , வேற்றுமைப் புணர்ச்சியில் , வருமா?
நியாயமான கேள்விதானே?
இதுபோன்ற வினாக்களுக்கு , இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியைப் பொறுத்தவரை,
தொகுத்துக் கூறுவதுதான் கீழ்வரும் நூற்பா ! :-
“மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும்
வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும்
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
உயிர்மிக வருவழி யுயிர்கெட வருதலுஞ்
சாரியை உளவழிச் சாரியை கெடுதலுஞ்
சாரியை யுளவழித் தன்னுருபு நிலையலுஞ்
சாரியை யியற்கை யுறழத் தோன்றலும்
உயர்திணை மருங்கி னொழியாது வருதலும்
அஃறிணை விரவுப்பெயர்க் கவ்விய நிலையலும்
மெய்பிறி தாகிடத் தியற்கை யாகலும்
அன்ன பிறவுந் தன்னியன் மருங்கின்
மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப ! ” (தொகை . 15)
‘மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் ’ - ‘விளக்குறைத்தான் ’ என்பது , மெல்லெழுத்து வரவேண்டிய புணர்ச்சியில் , அவ்விதம் வராது , வல்லெழுத்துச் சந்தி
பெற்றுள்ளது; எடுத்துக்காட்டை மேலே பார்த்தோம் !
‘வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் ‘ – ‘மகர இறுதி வேற்றுமை யாயின்,
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே ! ’ (புள்ளிமயங் . 15) என்று தொல்காப்பியர்
கூறியுள்ளார் !
அப்படியானால் , வல்லெழுத்துச் சந்தி பெற்று , ‘மரம்’ என்ற சொல்லும் , இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘மரம் + குறைத்தான் = மரக் குறைத்தான்’ எனப் புணருமா?
இந்த ஐயத்தைப் போக்குகிறார் தொல்காப்பியர் !
அஃதாவது –
மரம் + குறைத்தான் = மரங் குறைத்தான் √ (ஐகார வேற்றுமைப் புணர்ச்சி) , என வரும் !
‘இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் ’ - ‘தாய் என் கிளவி இயற்கை ஆகும்’
(புள்ளி . 63) என்று சூத்திரம் ஓதித் ’தாய் + கை = தாய் கை’ என்று வேற்றுமைப் புணர்ச்சி விதி கூறினார் தொல்காப்பியர் ! இங்கு , அதற்கு விதிவிலக்குக் கூறுகிறார் அவர் !
அஃதாவது , ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் வரவேண்டியது –
தாய் + கொலை = தாய்க் கொலை √
தாய் + கொலை = தாய் கொலை ×
மிகற்கை – ஒற்று மிகுதல் .
‘உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் ’ - குற்றெழுத்தின் பின்னே ஆகாரம் வந்தால் ,
வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘அ’ இடையே தோன்றும் (உயிர் மயங் . 24)என ஒரு விதி கூறினார் தொல்காப்பியர் ! ‘பலா + கோடு = பலாஅக் கோடு ’ என வரும் !
ஆனால் ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் வரவேண்டியது கீழ் வருமாறு என்கிறார் தொல்காப்பியர் ! _
பலா + குறைத்தான் = பலாஅக் குறைத்தான் ×
பலா + குறைத்தான் = பலாக் குறைத்தான் √
‘சாரியை உளவழிச் சாரியை கெடுதலுஞ் , ‘சாரியை உளவழித் தன்னுருபு நிலையலும் ’ -
- ‘வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்’ (குற்றியலு .15) என விதி கூறி ,
வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘வண்டு + கால் = வண்டின்
கால்’ என்ற புணர்சிக்கு அடிகோலினார் தொல்காப்பியர் !
ஆனால் , ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் அப்படி இன் சாரியை வரலாம் , வராமலும் இருக்கலாம் என்கிறார் தொல்காப்பியர்!
அஃதாவது இப்படி வரும் என்கிறார் , ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் ! :-
வண்டு + கொணர்ந்தான் = வண்டு கொணர்ந்தான் √
வண்டு + கொணர்ந்தான் = வண்டினைக் கொணர்ந்தான் √
‘சாரியை இயற்கை உறழத் தோன்றலும்’ – வேற்றுமைப் புணர்ச்சியில் ‘புளி’ என்ற
இகர ஈற்றுச் சொல் புணரும்போது , ‘புளி + கோடு = புளியங் கோடு’ என ‘அம்’ சாரியை பெற்றுப் புணர்வதற்கு விதி கூறினார் தொல்காப்பியர் – ‘புளிமரக் கிளவிக்கு அம்மே
சாரியை’ (உயிர் மயங் . 42)!
அனால் ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் , இயல்பாகவும் , சந்தி பெற்றும் புணரும்
என இங்கே பேசுகிறார் !
இதன்படி –
புளி + குறைத்தான் = புளி குறைத்தான் √
புளி + குறைத்தான் = புளிக் குறைத்தான் √ என உறழும் என்கிறார்
தொல்காப்பியர் !
இதைப் போலவே , ‘ஆல்’ எனும் சொல்லும் , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘அம்’
சாரியை பெறும் (புள்ளி மயங் . 80) என்றார் தொல்காப்பியர் !
ஆனால் ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் , இயல்பாகவும் , நிலை மொழி ஈற்றெழுத்து
திரிந்தும் இருவகையாக வரும் என்று இங்கே நுவல்கிறார் !
இதன்படி –
ஆல் + குறைத்தான் = ஆல் குறைத்தான் √
ஆல் + குறைத்தான் = ஆற் குறைத்தான் √
‘உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்’ – வேற்றுமைப் புணர்ச்சியில் உயிர்
எழுத்தை ஈறாகக் கொண்ட உயர்திணைப் பெயரானது , இயல்பாகப் புணரும்
(தொகை . 11) என்றார் தொல்காப்பியர் !
ஆனால் ஐகார வேற்றுமையில் , ’ஐ ’ வெளிப்படையாக வரும் என இங்கே பேசுகிறார் !
இதன்படி –
நம்பி + கொணர்ந்தான் = நம்பியைக் கொணர்ந்தான் √ என ஆகும் !
‘அஃறிணை விரவுப்பெயர்க் கவ்வியல் நிலையலும் ’ – உருபியலில் (நூ . 30) , ‘புள்ளி
இறுதியு ..’ என்ற நூற்பாவில் , மெய்யெழுத்தை ஈற்றிலே கொண்ட சொல்லானது , வேற்றுமைப் புணர்ச்சியில் , சாரியை பெற்றும் பெறாதும் ‘மன்ணினை’ , ‘மண்ணை’
என்று புணரும் என்றார் !
ஆனால் ஐகார ஈற்றுப் புணர்ச்சியில் , விரவுப் பெயருக்குச் ,சாரியை வரும் என்கிறார் தொல்காப்பியர் !
இதன்படி –
கொற்றன் +ஐ + கொணர்ந்தான் = கொற்றனைக் கொணர்ந்தான்
என வரும் !
இங்கே ‘கொற்றன்’ என்பது ஓர் ஆளையும் குறிக்கலாம் ; மாட்டையும்
குறிக்கலாம் !
‘மெய்பிறிதாகு இடத்து இயற்கை ஆகலும்’ - ‘ண்’ஈற்றுச் சொற்கள் , வேற்றுமைப்
பொருளில் புணரும்போது , ‘ண்’ ஆனது ‘ட்’ ஆக மாறும் (புள்ளி . 7) என்றார்
தொல்காப்பியர் !
ஆனால் , இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘ண்’ ஆனது ‘ட்’ ஆகாமல்
இயற்கையாக வரும் என்கிறார் !
இதன்படி –
மண் + கொணர்ந்தான் = மண் கொணர்ந்தான் √
மண் + கொணர்ந்தான் = மட் கொணர்ந்தான் ×
தொல்காப்பியரின் இக் கருத்துகளின் பின் இளம்பூரணர் , ‘கழி குறைத்தான்’ , ‘பனை பிளந்தான்’ என்ற இரு எடுத்துக்காட்டுகளை முன் வைக்கிறார் !
இவற்றை விளக்கலாம் !
(1)உயிர் மயங்கியலில் (நூ . 33) , “இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் , வேற்றுமை
யாயின் வல்லெழுத்து மிகுமே” என்றார் ! அஃதாவது , ‘கிளி + கால் = கிளிக்கால்’ என
வரும் !
ஆனால் ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் ,
கழி + குறைத்தான் = கழி குறைத்தான் √
கழி + குறைத்தான் = கழிக் குறைத்தான் × என்றே வரும் என்கிறார் அவர் !
(2) அதே உயிர் மயங்கியலில் (நூ .78) , “ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் , வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே” என்றார் தொல்காப்பியர் ! அஃதாவது , ‘யானை + கோடு = யானைக் கோடு’ என வேற்றுமை ப் புணர்ச்சியில் வரும் !
ஆனால் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் ,
பனை + பிளந்தான் = பனை பிளந்தான் √
பனை + பிளந்தான் = பனைப் பிளந்தான் × என வரும் என்கிறார் இங்கு !
இந்த இரண்டு நுட்பங்கள் தவிர வேறு சில புணர்ச்சிகளையும் நமக்குக் காட்டுகிறார் இளம்பூரணர் _
1 . ‘அவரைக் கண்டு’ என்ற பொருளில் ‘அவர்க் கண்டு’ என எழுதலாம் !
2 . ‘மகனைப் பெற்றான்’ எனும் பொருளில் ‘மகற் பெற்றான்’ என எழுதலாம் !
3 . ‘மகளைப் பெற்றான்’ எனும் பொருளில் ‘மகட் பெற்றான்’ என எழுதலாம் !
4 . மை + கொணர்ந்தான் = மை கொணர்ந்தான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
மை + கொணர்ந்தான் = மைக் கொணர்ந்தான் √(வேற்றுமைப் புணர்ச்சி)
5 . வில் + கோள் = வில் கோள் √(வேற்றுமைப் புணர்ச்சி)
வில் + கோள் = விற் கோள் √(வேற்றுமைப் புணர்ச்சி)
6 . கடு + குறைத்தான் = கடுக் குறைத்தான் √(வேற்றுமைப் புணர்ச்சி)
7 . செப்பு + கொணர்ந்தான் = செப்புக் கொணர்ந்தான் √(வேற்றுமைப் புணர்ச்சி)
8 . “மகர இறுதி வேற்றுமை யாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே” (புள்ளி . 15) என்ற நூற்பாப் படி ‘மரம் + கால் = மரக் கால்’ என ஆகும் ! அஃதாவது ‘ம்’ , கெட்டு ‘க்’ ஆகும் !
ஆனால் ஐகார வேற்றுமைப் புணர்ச்சியில் அவ்விதம் வராமையை இளம்பூரணர் காட்டுகிறார் -
புலம் + புக்கனனே = புலம் புக்கனனே √
புலம் + புக்கனனே = புலப் புக்கனனே ×
இவை , தொல்காப்பியரும் இளம்பூரணரும் தரும் புணர்ச்சி
நுட்பங்கள் ! தமிழுக்கு அடிப்படையானவை !மொழியியலில் Marpho phonemic changes
என்று இதனைத்தான் குறிப்பிடுகின்றனர் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (195)

ஆய்வு எண் 194இல் வேற்றுமைப் புணர்ச்சிகளையே பார்த்தோம் !
அடுத்ததாக அல்வழிப் புணர்ச்சிகளைத் தருகிறார் தொல்காப்பியர் ! :-
“வேற்றுமை யல்வழி இஐ யென்னும்
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைஇய
அவைதாம்
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவு மென்மனார் புலவர் ” (தொகை . 16)
அஃதாவது – ‘பருத்தி ’ என்ற இகர ஈற்றுச் சொல்லையும் , ’தினை ’ என்ற ஐகார ஈற்றுச் சொற்களையும் எடுத்துக்கொண்டால் , அல்வழியில் , எப்படிப் புணரும் ?
இதுதான் இப்போது கேள்வி !
இதற்கு விடைதான் மேலே பார்த்த சூத்திரம் !
“சில சொற்கள் இயல்பாகப் புணரும் , சில சொற்கள் வல்லொற்றுப் பெற்றுப் புணரும் ,
சில சொற்கள் இயல்பாகவும் வல்லொற்றுப் பெற்றும் புணரும் !” - இதுதான் தொல்காப்பியரின் விடை !
தலை சுற்றுகிறதா?
எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் உங்களுக்கு விளங்கும் !
-
1 . பருத்தி + குறிது = பருத்திக் குறிது ×
பருத்தி + குறிது = பருத்தி குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
2 . பருத்தி + சிறிது = பருத்திச் சிறிது ×
பருத்தி + சிறிது = பருத்தி சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
3 . பருத்தி + தீது = பருத்தித் தீது ×
பருத்தி + தீது = பருத்தி தீது √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
4 . பருத்தி + பெரிது = பருத்திப் பெரிது ×
பருத்தி + பெரிது = பருத்தி பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
5 . கரை + குறிது = கரைக் குறிது ×
கரை + குறிது = கரை குறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
6 . கரை + சிறிது = கரைச் சிறிது ×
கரை + சிறிது = கரை சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
7 . கரை + தீது = கரைத் தீது ×
கரை + தீது = கரை தீது √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
8 . கரை + பெரிது = கரைப் பெரிது ×
கரை + பெரிது = கரை பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
9 . அலி + கொற்றன் = அலிக் கொற்றன் √(அல்வழிப் புணர்ச்சி) (மிகுதிப் புணர்ச்சி)
10 . புலி + கொற்றன் = புலிக் கொற்றன் (அல்வழிப் புணர்ச்சி) (மிகுதிப் புணர்ச்சி)
11 . கிளி + குறிது = கிளி குறிது √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
12 . கிளி + குறிது = கிளிக் குறிது √(அல்வழிப் புணர்ச்சி) (மிகுதிப் புணர்ச்சி)
13 . தினை + குறிது = தினை குறிது √(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி)
14 . தினை + குறிது = தினைக் குறிது √(அல்வழிப் புணர்ச்சி) (மிகுதிப் புணர்ச்சி)
15 . தில் + சொல் = தில்லைச் சொல் √ (அல்வழிப் புணர்ச்சி) (ஐ – சாரியை ; தில் - இடைச்சொல்) (மிகுதிப் புணர்ச்சி)
16 . மன் + சொல் = மன்னைச் சொல் √ (அல்வழிப் புணர்ச்சி) (ஐ – சாரியை ; மன் – இடைச் சொல்) (மிகுதிப் புணர்ச்சி)
17 . கடி + கா = கடிகா √(அல்வழிப் புணர்ச்சி) (கடி - உரிச்சொல்)(இயல்புப் புணர்ச்சி)
(கடி கா – கடிதாகிய தோட்டம்)
18 . பணை + தோள்= பணைத் தோள் √(அல்வழிப் புணர்ச்சி) (பணை - உரிச்சொல்)(மிகுதிப் புணர்ச்சி)
(பணைத் தோள் – பருத்ததாகிய தோள்)
11, 12 ,13 , 14 – ஆகியவற்றில் இயல்புப் புணர்ச்சியும் மிகுதிப் புணர்ச்சியும் அனுமதிக்கப்பட்டுள்ளது அல்லவா? இதுதான் ‘உறழ்ச்சி’ !

தொடத் தொடத் தொல்காப்பியம் (196)

முன் ஆய்வில் ’பருத்தி’ என்ற இகர ஈற்றுசொல் , ‘தினை’ என்ற
ஐகார ஈற்றுச் சொல் ஆகியவற்றின் புணர்ச்சி வகைகளைப் பார்த்தோம் !
அடுத்ததாகவும் இதே இரண்டு ஈறுகளைக் கொண்ட சொற்களைப்பற்றிப் பேச
வேண்டியுள்ளது தொல்காப்பியருக்கு !
தொல்காப்பியர் இந்த இரு ஈறுகளைப்பற்றிக் கூறுவதைக் கேட்போமே? :-
“சுட்டுமுத லாகிய விகர விறுதியும்
எகரமுதல் வினாவி னிகர விறுதியுஞ்
சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும்
யாவென் வினாவி னையெ னிறுதியும்
வல்லெழுத்து மிகுநவு முறழா குநவுஞ்
சொல்லிய மருங்கி னுளவென மொழிப ” (தொகை . 17)
‘சுட்டுமுதல் ஆகிய இகர இறுதியும் ’ - ‘அதோளி’ , ‘இதோளி’ , ‘உதோளி’ ஆகிய
சொற்களும் ,
‘எகரமுதல் வினாவின் இகர இறுதியும் ’ - ‘எதோளி’ என்ற சொல்லும்,
‘சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும் ’ - ‘ஆண்டை’ , ‘ஈண்டை’ ‘ஊண்டை’ ஆகிய சொற்களும் ,
‘யாவென் வினாவின் ஐயென் இறுதியும் ’ - ‘யாண்டை’ எனும் சொல்லும் ,
‘வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் ,
சொல்லிய மருங்கின் உளவென மொழிப ’ - அல்வழிப் புணர்ச்சிகளில் , வல்லெழுத்துச்
சந்தி பெற்றுப் புணர்வதும் , வல்லெழுத்துச் சந்தி பெற்றும் பெறாமல் புணர்வதுமான
இரு வகைகள் உள்ளன !
அ ,இ , உ – மூன்றும் சுட்டு எழுத்துகள் என்பதையும் , எ – வினா எழுத்து என்பதையும் மறவாதீர் !
சுட்டுச் சினை எழுத்துகள் – அ, இ ,உ
இவை நீடிய எழுத்துகள் – ஆ , ஈ , ஊ
அதோளி – அங்கே
இதோளி – இங்கே
உதோளி – இரண்டுக்கும் நடுவே
எதோளி – எங்கே ?
மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விவரிக்கலாம் ! :-
1 . அதோளி + கொண்டான் = அதோளிக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
அதோளி + கொண்டான் = அதோளி கொண்டான் ×
2. இதோளி + கொண்டான் = இதோளிக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
இதோளி + கொண்டான் = இதோளி கொண்டான் ×
3 . உதோளி + கொண்டான் = உதோளிக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
உதோளி + கொண்டான் = உதோளி கொண்டான் ×
4 . எதோளி + கொண்டான் = எதோளிக் கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
எதோளி + கொண்டான் = எதோளி கொண்டான் ×
5 . அதோளி + சென்றான் = அதோளிச் சென்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
அதோளி + சென்றான் = அதோளி சென்றான் ×
6. இதோளி + சென்றான் = இதோளிச் சென்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
இதோளி + சென்றான் = இதோளி சென்றான் ×
7. உதோளி + சென்றான் = உதோளிச் சென்றான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
உதோளி + சென்றான் = உதோளி சென்றான் ×
8 . எதோளி + சென்றான் = எதோளிச் சென்றான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
எதோளி + சென்றான் = எதோளி சென்றான் ×
9 . அதோளி + தந்தான் = அதோளித் தந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
அதோளி + தந்தான் = அதோளி தந்தான் ×
10. இதோளி + தந்தான் = இதோளித் தந்தான் √ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
இதோளி + தந்தான் = இதோளி தந்தான் ×
11 . உதோளி + தந்தான் = உதோளித் தந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
உதோளி + தந்தான் = உதோளி தந்தான் ×
12. எதோளி + தந்தான் = எதோளித் தந்தான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
எதோளி + தந்தான் = எதோளி தந்தான் ×
13 . அதோளி + போயினான் = அதோளிப் போயினான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
அதோளி + போயினான் = அதோளி போயினான் ×
14. இதோளி + போயினான் = இதோளிப் போயினான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
இதோளி + போயினான் = இதோளி போயினான் ×
15 . உதோளி + போயினான் = உதோளிப் போயினான்√(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
உதோளி + போயினான் = உதோளி போயினான் ×
16. எதோளி + போயினான் = எதோளிப் போயினான் √(அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
எதோளி + போயினான் = எதோளி போயினான் ×
17 . ஆண்டை + கொண்டான் = ஆண்டைக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
ஆண்டை + கொண்டான் = ஆண்டை கொண்டான் ×
18. ஈண்டை + கொண்டான் = ஈண்டைக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
ஈண்டை + கொண்டான் = ஈண்டை கொண்டான் ×
19 . ஊண்டை + கொண்டான் = ஊண்டைக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
ஊண்டை + கொண்டான் = ஊண்டை கொண்டான் ×
20 . யாண்டை + கொண்டான் = யாண்டைக் கொண்டான்√ (அல்வழிப் புணர்ச்சி)
(வல்லெழுத்துச் சந்தி பெற்றது)
யாண்டை + கொண்டான் = யாண்டை கொண்டான் ×
மேல் இருபதும் வல்லெழுத்து மிகுந்து வந்த புணர்ச்சிகள் !
வல்லெழுத்து மிகுந்தும் மிகாமலும் வரக்கூடிய உறழ்ச்சிப் புணர்ச்சிகளை வருமாறு விரித்துக் காட்டலாம் ! :-
21 . அவ்வழி + கொண்டான் = அவ்வழி கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
அவ்வழி + கொண்டான் = அவ்வழிக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
22 . இவ்வழி + கொண்டான் = இவ்வழி கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
இவ்வழி + கொண்டான் = இவ்வழிக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
23. உவ்வழி + கொண்டான் = உவ்வழி கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
உவ்வழி + கொண்டான் = உவ்வழிக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
24 . எவ்வழி + கொண்டான் = எவ்வழி கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
எவ்வழி + கொண்டான் = எவ்வழிக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
25 . ஆங்கவை + கொண்டான் = ஆங்கவை கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
ஆங்கவை + கொண்டான் = ஆங்கவைக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
26 . ஈங்கிவை + கொண்டான் = ஈங்கிவை கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
ஈங்கிவை + கொண்டான் = ஈங்கிவைக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
27. ஊங்கவை + கொண்டான் = ஊங்கவை கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
ஊங்கவை + கொண்டான் = ஊங்கவைக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
28 . யாங்கவை + கொண்டான் = யாங்கவை கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
யாங்கவை + கொண்டான் = யாங்கவைக் கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
29 . பண்டை + சான்றார் = பண்டைச் சான்றார் (அல்வழிப் புணர்ச்சி)
30 . ஒரு திங்கள் + குழவி = ஒரு திங்களைக் குளவி (அல்வழிப் புணர்ச்சி)
29 , 30 – ஆகியவற்றைப் பொறுத்தவரை , ‘பண்டைய காலத்தவராகிய சான்றார்’ , ‘ஒரு திங்கள் ஆகிய குழவி’ என்று விரிக்கவேண்டும் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (197)

தாள் + சுவடி = தாட் சுவடி (வேற்றுமைப் புணர்ச்சி)
நூல் + கண்டு = நூற் கண்டு(வேற்றுமைப் புணர்ச்சி)
பால் + சோறு = பாற் சோறு (வேற்றுமைப் புணர்ச்சி)
மண் + கலம் = மட் கலம்(வேற்றுமைப் புணர்ச்சி)
பல் + பசை = பற் பசை (வேற்றுமைப் புணர்ச்சி)
கண் + ஆடி = கண்ணாடி (வேற்றுமைப் புணர்ச்சி)
கண் + அகலம் = கண்ணகலம் (வேற்றுமைப் புணர்ச்சி)
- இப் புணர்ச்சிகளுக்கெல்லாம் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா?
உள்ளது ! அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம் ! :-
“நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலுங்
குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும்
அறியத் தோன்றிய நெறியிய லென்ப” (தொகை . 18)
‘நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும்’ – நெட்டெழுத்தின் முன்னே வரும் மெய்யானது கெட்டுப்போதலும் ,
‘குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட்டலும் ’ – குற்றெழுத்தின் அருகே நிற்கும் மெய்யெழுத்தானது இரட்டித்து வருதலும் ,
‘அறியத் தோன்றிய நெறியியல் என்ப’ – தொன்றுதொட்டு அறியப்படும் முறையாகும் !
அஃதாவது –
கோல் + தீது = கோறீது (அல்வழிப் புணர்ச்சி) (நெட்டெழுத்தை அடுத்துள்ள மெய்யான ‘ல்’ கெட்டதைக் காண்க !)
கோல் + நன்று = கோனன்று (அல்வழிப் புணர்ச்சி) (நெட்டெழுத்தை அடுத்துள்ள மெய்யான ‘ல்’ கெட்டதைக் காண்க !)
தம் + ஐ = தம்மை (வேற்றுமைப் புணர்ச்சி) (குற்றெழுத்தை அடுத்துள்ள மெய்யான ‘ம்’ இரட்டித்ததைக் காண்க !)
நம் + ஐ = நம்மை (வேற்றுமைப் புணர்ச்சி) (குற்றெழுத்தை அடுத்துள்ள மெய்யான ‘ம்’ இரட்டித்ததைக் காண்க !)
(தாம் , நாம் – இவையே குறுகித் ‘தம்’ , ‘நம்’ ஆயின என்பவர் இளம்பூரணர் !)
இங்கே நச்சினார்க்கினியர் ஏதோ சொல்கிறார் கேட்போம் ! –
‘ ‘த’ , ‘ந’ ஆகிய எழுத்துகளை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் , அப்போது நிலைமொழி நெட்டெழுத்தின் பின்னே வரும் ஒற்றெழுத்து கெட்டும் வரும் கெடாதும் வரும் ! ’
இவ்விளத்திற்கு அவர் (நச்சினார்க்கினியர்) தரும் சன்றுகள் –
தேன் + தீது = தேன் றீது (அல்வழிப் புணர்ச்சி) (நிலைமொழியை அடுத்த ஒற்றெழுத்து ‘ன்’ கெடாததைக் காண்க ! )
நாண் + தீது = நண் டீது (அல்வழிப் புணர்ச்சி) (நிலைமொழியை அடுத்த ஒற்றெழுத்து ‘ண்’ கெடாததைக் காண்க ! )
தேன் + நன்மை = தேனன்மை (அல்வழிப் புணர்ச்சி) (நிலைமொழியை அடுத்த ஒற்றெழுத்து ‘ன்’ கெட்டதைக் காண்க ! )
நாண் + நன்மை = நாணன்மை (அல்வழிப் புணர்ச்சி) (நிலைமொழியை அடுத்த ஒற்றெழுத்து ‘ண்’ கெட்டதைக் காண்க ! )
அடுத்து , இளம்பூரணர் இன்னொரு நுணுக்கம் சொல்கிறார் – ‘நிலைமொழியின் ஈற்று மெய்யெழுத்துதான் இரட்டும் என்று நினைக்காதீர்கள் ! புணர்ச்சி இலக்கணத்தால் வந்துசேரும் மெய்யெழுத்தும்கூட இரட்டும் !’
இதற்கு அவர் (இளம்பூரணர்) தந்த காட்டு –
அ+ அடை = அவ்வடை (அல்வழிப் புணர்ச்சி)
இங்கே ‘வ்வ்’ என்ற இரட்டல் வந்துள்ளதல்லவா? அஃது எப்படி வந்தது ?
அ + அடை = அவ் + அடை (இதற்கு இலக்கணம் – உயிர்மயங்கியல் நூற்பா 4 – ‘யவமுன் வரினே வகர மொற்றும்!’)
அவ் + அடை = அவ்வடை ! (புணர்ச்சி இலக்கணத்தால் வந்த ‘வ்’இரட்டியதைக் காண்க !)
‘அ+ அடை = அவ்வடை ’ ஆனதில் , இடையே வந்த ‘வ்’வை உடம்படுமெய் என்று கருதுதல் கூடாது !

தொடத் தொடத் தொல்காப்பியம் (198)

முன் ஆய்வில் , ‘தாம்’ என்பது குறுகித் ‘தம்’ ஆனால் , அது ‘ஐ’யுடன் சேரும்போது
‘தம்மை’ என்று , ‘ம்ம்’இரட்டல் ஏற்படும் எனப் பார்த்தோம் !
‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமைக்குப் பொருந்தும் இந் நியாயம் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபுக்கும் ‘கு’ எனும் நான்காம் வேற்றுமை உருபுக்கும் பொருந்தாது என்று அடுத்துக் கூறவருகிறார் தொல்காப்பியர் ! : -
“ஆற னுருபினு நான்க னுருபினுங்
கூறிய குற்றொற் றிரட்ட லில்லை
ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும்
நெடுமுதல் குறுகு மொழிமுன் னான” (தொகை . 19)
‘நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான’ – நிலைமொழியானது நெடிலாயிருந்து
குறுகினால்,
‘ஆறன் உருபினும் நான்கன் உருபினும்’ – ஆறாம் வேற்றுமை உருபு மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகள் வந்து புணரும்போது ,
‘கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை’ – முன் நூற்பாவில் (தொகை . 18) கூறப்பட்டதுபோல நிலைமொழி ஈற்று மெய் இரட்டாது !
‘ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்’ – நிலைமொழி ஈற்று மெய்யோடு ‘அ’ சேரும் !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு தரலாம் ! :-
1 . தாம் → நெடுமுதல் குறுகித் → தம் → ‘அ ’ சேரும்போது → தம் +அ →தம → ஆறாம் வேற்றுமை உருபு சேரும்போது → தம + அது → தமது √
தம் + அது → தம்மது × ( ‘ம்’ இரட்டியதால், தவறு எனக் கூற முடிகிறது !)
2 . தாம் → நெடுமுதல் குறுகித் → தம் → ‘அ ’ சேரும்போது → தம் +அ →தம → நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது → தம + கு → தமக்கு √ ( க் - சந்தி)
தம் + கு → தம்மக்கு × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
3 . நாம் → நெடுமுதல் குறுகி → நம் → ‘அ ’ சேரும்போது → நம் +அ →நம → ஆறாம் வேற்றுமை உருபு சேரும்போது → நம + அது → நமது √
நம் + அது → நம்மது × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
4. நாம் → நெடுமுதல் குறுகி → நம் → ‘அ ’ சேரும்போது → நம் +அ →நம → நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது → நம + கு → நமக்கு √ ( க் - சந்தி)
நம் + கு → நம்மக்கு × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
அது சரி !
நெடுமுதல் குறுகாத சாரியைகள் – ‘தம்’ , ‘நம்’ ஆகியவை புணர்ந்தாலும் இதே விதிதானா? – வினா!
‘இதே விதிதான் ’ என்கிறார் இளம்பூரணர் !
எடுத்துக்காட்டுகளுடன் இதனைக் கீழே விளக்கலாம் ! –
1 . எல்லார்+தம் + அது = எல்லார் + தம + அது = எல்லார் தமது √
எல்லார் + தம் + அது = எல்லார் தம்மது × ( ‘ம்’ இரட்டியதால் தவறு எனக் கூற முடிகிறது)
2. எல்லார்+நம் + அது = எல்லார் + நம + அது = எல்லார் நமது √
எல்லார் + நம் + அது = எல்லார் நம்மது × ( ‘ம்’ இரட்டியதால் தவறு எனக் கூற முடிகிறது)

தொடத் தொடத் தொல்காப்பியம் (199)

“தமக்கு , நமக்கு – என்றெல்லாம் புணர்ச்சிகள் வரும் என்றீர்களே , அப்படியானால்
நுமக்கு , நுமது என வருமா? இல்லை நும்மக்கு , நும்மது என்று வருமா?” – ஒரு
மாணவன் தொல்காப்பியரைக் கேட்டிருக்கிறான் !
அவனுக்கு விடை கூற அடுத்த நூற்பா! :-
“நும்மெ னிறுதியு மந்நிலை திரியாது ! ” (தொகை . 20)
அஃதாவது , முன் நூற்பாவில் (தொகை .19) கூறியபடி ,நிலைமொழி ஈற்றிலே குற்றெழுத்து இரட்டாமல் வரும் , ‘அது’ , ‘கு’ ஆகிய
வேற்றுமை உருபுகள் புணரும்போது !
எடுத்துக்காட்டுகள் –
1 . நும் → ‘அ ’ சேரும்போது → நும் +அ →நும → ஆறாம் வேற்றுமை உருபு சேரும்போது → நும + அது → நுமது √
நும் + அது → நும்மது × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
2. நும் → ‘அ ’ சேரும்போது → நும் +அ →நும → நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது → நும + கு → நுமக்கு √ ( க் - சந்தி)
நும் + கு → நும்மக்கு × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)

தொடத் தொடத் தொல்காப்பியம் (200)

தொகை மரபில் நாம் நின்று விளையாடுகிறோம் !
அடுத்த நூற்பா! :-
“உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமு முயிரும் வருவழி யியற்கை” (தொகை . 21)
‘உகரமொடு புணரும் புள்ளி இறுதி’ - ‘உருஞு ’ , ‘பொருநு’ என்ற சொற்கள் ,
‘யகரமும் உயிரும் வருவழி ’ – யகரத்தையும் உயிர் எழுத்துகளையும் முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது ,
‘இயற்கை’ - இயற்கையாக, அஃதாவது , ‘உரிஞ்’ , ‘பொருந்’ என்ற வடிவங்களில் நின்றே புணரும் !
நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-
உரிஞ் + யானா = உரிஞ் யானா (அல்வழிப் புணர்ச்சி)
உரிஞ் + அனந்தா = உரிஞனந்தா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி ; மெய் மீது உயிர் ஏறுதலும் இயல்புப் புணர்ச்சியே !)
உரிஞ் + ஆதா = உரிஞாதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + இகலா = உரிஞிகலா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஈந்தா = உரிஞீந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + உழுந்தா = உரிஞுழுந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஊரா = உரிஞூரா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + எயினா = உரிஞெயினா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஏறா = உரிஞேறா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஐயா = உரிஞையா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஒழுக்கா = உரிஞொழுக்கா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஓதா = உரிஞோதா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஔவியா = உரிஞௌவியா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
(உரிஞ் – தேய் )
பொருந் + யானா = பொருந் யானா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + அனந்தா = பொருநனந்தா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஆதா = பொருநாதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + இகலா = பொருநிகலா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஈந்தா = பொருநீந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + உழுந்தா = பொருநுழுந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஊரா = பொருநூரா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + எயினா = பொருநெயினா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஏறா = பொருநேறா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஐயா = பொருநையா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஒழுக்கா = பொருநொழுக்கா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஓதா = பொருநோதா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஔவியா = பொருநௌவியா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
(பொருந் – போரிடு )
அனந்தனை ‘அனந்தா’ , ஆதனை ‘ஆதா’ , இகலனை ‘இகலா’ , ஈந்தனை ‘ஈந்தா’ ,
உழுந்தனை ‘உழுந்தா’ , ஊரனை ‘ஊரா’ , எயினனை ‘எயினா’ , ஏறனை ‘ஏறா’ , ஐயனை ‘ஐயா’ , ஒழுக்கனை ‘ஒழுக்கா’ , ஓதனை ‘ஓதா’ , ஔவியனை ‘ஔவியா’ என்று விளிக்கப்பட்டுள்ளன !
பழந் தமிழகத்தில் மக்களின் பெயர்கள் (Names of Ancient Tamils)எவ்வாறு அமைந்திருந்தன என்பதைக் கண்ணுறும் அரிய இடம் இது !
“ஞநமவ என்னும் புள்ளி இறுதியும் , … முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே ”
(தொகை . 10) எனும் சூத்திரத்தில் முன்னிலை மொழிக்கண் ‘உரிஞ்’ , ‘பொருந்’ ஆகியன இயல்பாக வருவதற்குத் தடை உள்ளதா?
இல்லை !
இயல்பாயும் உறழ்ச்சியாயும் வருவதற்கே ஆண்டுத் தடை உள்ளது ! இயல்பாக மட்டும் வருவதை இங்கு சொல்லியுள்ளார் தொல்காப்பியர் !

தொடத் தொடத் தொல்காப்பியம் (201)

தொல்காப்பியம் எப்போதுமே வாழ்க்கையை ஒட்டியே செல்லும் !
இதுதான் தொல்காப்பியத்தின் தனிச் சிறப்பு !
புணர்ச்சிகள் பற்றிப் பேசிவந்த தொல்காப்பியர் மக்களை மறக்காமல் எடைப் பெயர் முதலியவற்றையும் பேசுகிறார் ! : -
“உயிரும் புள்ளியு மிறுதியாகி
அளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந்
தத்தங் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வரூஉங் காலந் தோன்றின்
ஒத்த தென்ப வேயென் சாரியை” (தொகை . 22)
‘உயிரும் புள்ளியும் இறுதி ஆகி’ – நிலைமொழி ஈறு உயிரெழுத்தாகவோ மெய்யெழுத்தாகவோ இருந்தால்,
‘அளவு நிறையும் எண்ணும் சுட்டி’ - அவை அளவு , நிறை , எண் ஆகியவற்றைக் குறித்துநின்றால்,
‘உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்’ – அப்படி வரும் சொற்கள் எல்லாம் ‘
‘தத்தம் கிளவி தம் அகப்பட்ட முத்தை வரூஉம் காலம் தோன்றின்’ - தன்னை விடக் குறைந்த அளவைக் குறிக்கும்
சொல்லுடன் புணர நேர்ந்தால் ,
‘ஒத்த தென்ப ஏ என் சாரியை’ – புணர்ச்சி இடையே சாரியை ‘ஏ’ தோன்றும் !
‘முந்தை’ என்பது , ‘தத்தம்’ என்ற எதுகை நோக்கி ‘முத்தை ’
ஆனது !
இலக்கியங்களில் மட்டுமின்றி இலக்கணங்களிலும் எதுகை எப்படிப் பேணப்படுகிறது பாருங்கள் !
‘முந்தை’ என்றால் ஓர் அளவுக்கு முன்னுள்ள குறைந்த அளவு !
‘அடி’ க்கு முந்தை ‘அங்குலம்’ !
‘படி’க்கு முந்தை ‘ஆழாக்கு ’ !
சுருங்கச் சொன்னால் ஒரு பெரிய அளவுக்கு முன்னுள்ள சின்ன அளவே ‘முந்தை’ !
முந்தி நிற்பதால் , முந்தை !
ஒரு கலைச்சொல்லைப் (Technical term)பழந் தமிழர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் பாருங்கள்!
தொல்காப்பியரின் சொல்லாக்கக் கோட்பாடு இங்கே தெளிவாகிறது !
‘அகப்பட்ட’ என்ற சொல்லும் கருதத்தக்கது !
‘இந்த நான்கெல்லைக்குள் அகப்பட்ட மாவடை மரவடை உள்பட’ – என்று கல்வெட்டுகளில் அடிக்கடி வரும் !
இந்தச் சொல் தொல்காப்பியர் காலச் சொல் என்பது இன்று தெளிவாகிறது !
மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தந்த காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-
1 . உழக்கு + ஆழாக்கு = உழக்கே யாழாக்கு (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
2 . கலன் + பதக்கு = கலனே பதக்கு (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘உழக்கு’ , ‘கலன்’ இரண்டும் முகத்தல்அளவுப் பெயர்கள் !
‘கலன்’ என்பதும் ‘கலம்’ என்பதும் ஒன்றுதான்!
3 . தொடி + கஃசு = தொடியே கஃசு (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
4 . கொள் + ஐயவி = கொள்ளே ஐயவி (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘தொடி’ , ‘ஐயவி’ இரண்டும் எடைப் பெயர்கள் !
5 . காணி + முந்திரிகை = காணியே முந்திரிகை (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
6 . கால் + காணி = காலே காணி (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘காணி’ , ‘கால்’ – எண்ணுப் பெயர்கள் !
‘முந்திரி’ என்பதும் ‘முந்திரிகை’ என்பதும் ஒன்றுதான் !
வழக்கம் போல ஒரு விதிவிலக்கையும் இளம்பூரணர் நமக்காகச் சொல்கிறார் !-
குறுணி + நானாழி = குறுணி நானாழி ((அல்வழிப் புணர்ச்சி) (சாரியை வரவில்லை என்பதைக் கவனியுங்கள்!)
மேலே இளம்பூரணர் காலத்தில் இருந்த அளவுகளை இன்றைய முறையில் வருமாறு தரலாம் ! :-
ஒரு ஆழாக்கு = 168 மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
1 நாழி= 1344 மி.லிட். (1 லிட்டரும் 344 மில்லி லிட்டரும்)
1 குறுணி = 10752 மி.லிட். (10 லிட்டரும் 752 மில்லி லிட்டரும்)
1 காணி = 1/80
1 முந்திரி =1/320

தொடத் தொடத் தொல்காப்பியம் (202)

சென்ற ஆய்வில் ‘உழக்கே ஆழாக்கு’ என்று சாரியை ‘ஏ’ பெற்ற புணர்ச்சி விதியைப் பார்த்தோம் !
ஒரு மாணவனுக்கு ஐயம் வந்தது !
‘அப்படியானால் , ‘உழக்கே அரை’ என்று வருமா? ’ – கேட்டான் !
‘வராது !’ என்ற தொல்காப்பியர் அதற்குத் தனி விதி எழுதினார் ! :-
“அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப்
புரைவ தன்றாற் சாரியை யியற்கை” (தொகை . 23)
பால்வரை கிளவி – பொருளின் பகுதியை (கூற்றை) உணர்த்தும் சொல் ! ‘அரை’ , ‘கால்’ போன்றன பால்வரை கிளவிகளே ! ‘பாலது ஆணை’ என்றால் ‘ஊழ்வினை’ ! பொருள் வேறுபாட்டை அறிந்துகொள்க !
மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் –
1 . உழக்கு + அரை = உழக்கே யரை ×
உழக்கு + அரை = உழக்கரை √ (அல்வழிப் புணர்ச்சி)
2 . தொடி + அரை = தொடியே யரை ×
தொடி + அரை = தொடியரை √ (அல்வழிப் புணர்ச்சி)
3 . ஒன்று + அரை = ஒன்றே யரை×
ஒன்று + அரை = ஒன்றரை√ (அல்வழிப் புணர்ச்சி)
இதே நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் கூடுதலாகச் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறார் ! அவற்றையும் காண்போமே ! -
1 . செவிடு + அரை = செவிடே யரை ×
செவிடு + அரை = செவிடரை √
செவிடு + அரை = செவிட்டரை√ (அல்வழிப் புணர்ச்சி)
2 . மூவுழக்கு + அரை = மூவுழக்கே யரை ×
மூவுழக்கு + அரை = மூவுழக்கரை √ (அல்வழிப் புணர்ச்சி)
3 . கஃசு + அரை = கஃசே யரை ×
கஃசு + அரை = கஃசரை √ (அல்வழிப் புணர்ச்சி)
4 . பத்து + அரை = பத்தே யரை ×
பத்து + அரை = பத்தரை √ (அல்வழிப் புணர்ச்சி)
5 . கலம் + அரை = கலமே யரை ×
கலம் + அரை = கலவரை √ (அல்வழிப் புணர்ச்சி)
‘பத்தரை ’மாற்றுத் தங்கம் தமிழ்ப் புணர்ச்சி !

Similar topics
» 21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம்!
» ஒதுக்கப்பட்ட தொல்காப்பியம்
» தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்
» தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்
» தொல்காப்பியம் பாடும் 3 வயதுக்குழந்தை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum