ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 24 of 84 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 54 ... 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 24, 2013 9:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (175)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘அம்’ பற்றி மேலும் ஒரு நூற்பா ! :-

“மென்மையு மிடைமையும் வரூஉங் காலை
இன்மை  வேண்டு மென்மனார் புலவர்”  (புணரி . 28)

‘மென்மையும்  இடைமையும் வரூஉம் காலை’ -  மெல்லின எழுத்துகளையும் இடையின எழுத்துகளையும் முதலாகக் கொண்ட  சொற்கள் வந்து புணரும்போது ,

‘இன்மை வேண்டும்’ -  ‘அம்’மின் இறுதியாகிய  ‘ம்’ கெடும் !

இதற்கிணங்க –

புளி + அம் + ஞெரி =  புளிய ஞெரி  (ய் , உடம்படு மெய் ;  ம் , கெட்டது)  (வேற்றுமைப் புணர்ச்சி)
 
புளி + அம் + நுனி =  புளிய நுனி  (ய் , உடம்படு மெய் ;   ம் , கெட்டது)  (வேற்றுமைப் புணர்ச்சி)

புளி + அம் + முரி =  புளிய முரி  (ய் , உடம்படு மெய் ;   ம் , கெட்டது)  (வேற்றுமைப் புணர்ச்சி)

புளி + அம் + யாழ் =  புளிய யாழ்  (ய் , உடம்படு மெய் ;   ம் , கெட்டது)  (வேற்றுமைப் புணர்ச்சி)

புளி + அம் + வட்டு =  புளிய வட்டு  (ய் , உடம்படு மெய் ;   ம் , கெட்டது)  (வேற்றுமைப் புணர்ச்சி)

ஞெரி , முரி – இரண்டுக்கும்  துண்டு (piece) என்பது பொருள்!


மெல்லெழுத்தையும் இடையெழுத்தையும் தலையிலே கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்கு எடுத்துக்கட்டுகள் மேலே கண்டவை !

இளம்பூரணர் உயிர் எழுத்தை முதலாகக் கொண்ட  சில சொற்கள் வந்து புணரும்போதும் இதே விதியைக் கொள்ளலாம் என அனுமதிக்கிறார் !  ‘புளிய விலை’ – அவர் தந்த எடுத்துக்காட்டு !

இதன்படி-

புளி + அம் + இலை = புளிய விலை (ய் , உடம்படு மெய் ; ம் , கெட்டது ; வ் , உடம்படு மெய்)

‘புளிய விலை’ – என்ற முடிவைக் கொண்டாரல்லவா இளம்பூரணர் ? இதனை அவர்  ‘உரையிற் கோடல்’ என்ற உத்தியால் கொண்டதாகத் தெரிவிக்கிறார் !

உரையிற் கோடல் – உரையில் கொள்ளுதல் .  

மூல நூற்பாவில் ஆசிரியன் சில விதிகளைச் சொன்னாலும் , உரை எழுதும் உரையாசிரியருக்கு என்று சில உரிமைகள் (Licence)  உண்டு ! அந்த உரிமைகள் இல்லாவிட்டால் உரையாசிரியனால் சிறந்த உரையைத் தர இயலாது ! மாணவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடை கூற இயலாது !

இதனை ஏற்பதற்குக் கடினமாக உள்ளதா?

‘பையை எடுத்துக்கொண்டு போய் அவரைக்காய் வாங்கி வாருங்கள் !’ என்று மனைவி கூறினாள் ! கணவன் பையை எடுத்துச்செல்ல மறந்துவிட்டான் ! அவரைக்கய் வாங்கிய பிறகுதான் அது நினைவுக்கு வந்தது ! என்ன செய்தார் அவர்? சடக்கென்று மேல் துண்டில் பிடித்து ஒரு முடிச்சாகக் கட்டிக்கொண்டு வந்துவிட்டார் !  

மனைவி சொன்னது – விதி !

கணவர் செய்தது – ‘உரையிற் கோடல்’ !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Tue Nov 26, 2013 7:52 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் -173 க்குப் பின் வந்துள்ள  175 ஐ , 174 என்று கொள்ளவும் . 175 பின் தொடர்கிறது.


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (175)

Post by Dr.S.Soundarapandian Wed Nov 27, 2013 10:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (175)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அடுத்தது ‘இன்’ !  :-

“இன்னென  வரூஉம்  வேற்றுமை  யுருபிற்
கின்னென்  சாரியை  யின்மை வேண்டும்” !   (புணரி . 29)

‘இன் என வரும் வேற்றுமை உருபிற்கு’ -  ‘இன்’  எனும் 5ஆம் வேற்றுமை உருபு வந்து  புணர்ந்தால் ,

‘இன் என் சாரியை இன்மை வேண்டும்’ -  ‘இன்’ சாரியை கெடும் !

விள + இன் + இன் =  விளவின்  ( இன் – சாரியை கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)

பலா + இன் + இன் =  பலாவின்  ( இன் – சாரியை கெட்டது) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஆயினும் , இளம்பூரணர் , சில இடங்களில் இந்த விதிக்கு  முரணாகவும்  புணர்ச்சி  ஏற்படுவதுண்டு எனக் கூறி , அதற்குப் , ‘பாம்பினிற் கடிது தேள்’  என்று எடுத்துக்காட்டும் சொன்னார் !

பாம்பு + இன் + இன் + கடிது  =  பாம்பினிற் கடிது  (இன் – சாரியை கெடவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இதன் பின் , எல்லாச் சாரியைகளுக்கும் பொருந்துமாறு ஒரு விதியை முன் வைக்கிறார் தொல்காப்பியர் ! : -

பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
வேற்றுமை யுருபு  நிலைபெறு வழியும்
தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்
ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச்
சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா
திடைநின்  றியலுஞ் சாரியை யியற்கை
உடைமையு மின்மையு மொடுவயி  னொக்கும்  (புணரி . 30)


‘பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப’ – பெயர்ச்சொல்லும் , வினைச்சொல்லும் புணரும்போதும் , பெயர்ச்சொல்லும் பெயர்ச்சொல்லும் புணரும்போதும் ,

‘வேற்றுமை உருபு நிலைபெறு வழியும்’ -  வேற்றுமை உருபானது நின்று வெளிப்படத் தோன்றுவது உண்டு ;

‘தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்’ – அப்படி  வெளிப்படையாகத் தோன்றாது மறைதலும் உண்டு ;

‘ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி’ -  சாரியை வரவேண்டும் என்ற விதி , மரபு , இருந்தால் மட்டும் அதற்கு இயைய ,  
‘சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா
இடை நின்று இயலும் சாரியை இயற்கை’ -  சாரியை பெறும் சொற்களைப் பிரித்தால் , சாரியையானது நடுவே நிற்கும் ;

‘உடைமையும் இன்மையும் ஒடு வயின் ஒக்கும்’ -  ‘ஒடு’ வேற்றுமை உருபு புணரும்போது , ‘இன்’ சாரியை வரவும் செய்யும் , வராமலும் இருக்கும் !

இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! : -

1 . பெயரும் தொழிலும் சாரியை பெற்றுப் புணர்ந்தது –

விள + இன் + ஐ  + குறைத்தான் =  விளவினைக் குறைத்தான்  (வேற்றுமைப் புணர்ச்சி)
விள – பெயர் ; இன் – சாரியை ; ஐ – 2ஆம் வேற்றுமை உருபு ; குறைத்தான் – தொழில் (வினை)  


விள + இன் + ஐ  + கொண்டவன் =  விளவினைக் கொண்டவன்  (வேற்றுமைப் புணர்ச்சி)
விள – பெயர் ; இன் – சாரியை ; ஐ – 2ஆம் வேற்றுமை உருபு ; கொண்டவன் – வினையாலணையும் பெயர் .

2 . பெயரும் வினையும் சாரியை பெற்று , வேற்றுமை உருபு பெறாததற்கு –

நிலா + அத்து  + கொண்டான் =  நிலாவத்துக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)
நிலா – பெயர் ; கொண்டான் – வினை ; அத்து – சாரியை ;   வேற்றுமை உருபு வெளிப்பட  வரவில்லை .

3 . பெயரும் பெயரும் சாரியை பெற்று , வேற்றுமை உருபு பெறாததற்கு –
நிலா + அத்து  + கொண்டவன் =  நிலாவத்துக் கொண்டவன் (வேற்றுமைப் புணர்ச்சி)
நிலா – பெயர் ; கொண்டவன் – வினையாலணையும் பெயர் ; அத்து – சாரியை ;   வேற்றுமை உருபு வெளிப்பட  வரவில்லை .

4 . சாரியை பெறும் வழக்கு இல்லாத நிலையில்  , அதைப் பெறாது வருவதற்கு எடுத்துக்காட்டு –

நிலா + கதிர் = நிலாக் கதிர்  (சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)
நிலா + முற்றம் = நிலா முற்றம்  (சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)

5 . சாரியை பெரும்பாலும் நடுவிலேதான் வருமெனினும் , இறுதியிலே வருவதும் உண்டு –

எல்லா + நம் + ஐ + உம் = எல்லா நம்மையும்

  ஈற்று உம்மையை  ‘இது முற்றும்மை ; சாரியை இல்லை’ என்று சிலர் கருதியுளர் !

இளம்பூரணர் மட்டுமல்ல , நச்சினார்க்கினியரும் ஈற்று ‘உம்’மையைச் சாரியை என்றுதான் கொண்டார் ! அவர்கள் கொண்டது சரிதான் !

சாரியையா ? முற்றும்மையா ? தீர்மானிப்பது எப்படி ?
பயிலக்கூடிய தொடர்தான் தீர்மானிக்கும் !

‘எல்லாநம்மையும்  விசாரித்தனர்’ –  முதல் உம்மை, எச்ச உம்மை ! ( ‘பிறரையும் விசாரித்தனர்’ என்ற பொருள் வருவதைக் கவனிக்க) .

‘நாற்பது பேர் இருக்கிறோம்; எல்லா நம்மையும் அழைத்துள்ளனர்’ – உம்மை , முற்றும்மை .

‘மற்றவர்களை அழைக்காவிட்டலும் எல்லா நம்மையும் அழைப்பார்’ – இரண்டாம் உம்மை , சாரியை !

6 . ‘ஒடு’ உருபு புணரும்போது சாரியை வரலாம் , வராமலும் போகலாம் –
பூ + இன் + ஒடு = பூவினொடு  (வ் , உடம்படுமெய் ; இன்  சாரியை வந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ +  ஒடு = பூவொடு  (வ் , உடம்படு மெய் ; இன்  சாரியை வரவில்லை) (வேற்றுமைப் புணர்ச்சி)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (176)

Post by Dr.S.Soundarapandian Sat Nov 30, 2013 12:21 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (176)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அடுத்து , ‘அத்து’ச் சாரியை பற்றியும் ‘வற்று’ச் சாரியை பற்றியும் ஒரு நூற்பாவில் விளக்குகிறார் ! :-

“அத்தே வற்றே  யாயிரு  மொழிமேல்
ஒற்றுமெய்  கெடுத றெற்றென் றற்றே
அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே ” (புணரி . 31)

‘அத்தே வற்றே  ஆயிரு மொழிமேல்’ -  ‘அத்து’ , ‘வற்று’ ஆகிய சாரியைகளின் முன் ,

‘ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்று’ -  வந்த மெய்யும் , மெய் மீது உயிரிருந்தால் மெய்யும் அந்த உயிரும் கெடும் !

‘அவற்று முன் வல்லெழுத்து மிகுமே’ -  இந்த இரு சாரியைகளின் முன் ,  வல்லெழுத்துச் சந்தி எழுத்து வரும் !

இதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் , விரிவாக ! –

கலம் + அத்து + குறை = கலத்துக் குறை (ம் – கெட்டது , க் - சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)

அவை + வற்று + கோடு = அவற்றுக் கோடு (வை – கெட்டது , க்- சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே வந்த ‘கலம்’ என்பதன் விகாரம் ‘கலன்’ ; இக்  ‘கலன் ’ நிலைமொழியாக வந்தாலும் , அப்போதும் ‘கலன் + அத்து + குறை  =  கலத்துக் குறை’  என்றுதான் ஆகும் என்கிறார் இளம்பூரணர் !

‘அத்து’ச் சரியைப் புணர்ச்சியில் , நிலைமொழி ஈறு கெடாமையும் உண்டு என்கிறார் இளம்பூரணர் ! :-

வெயில் + அத்து + கொண்டான் = வெயிலத்துக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)

(நிலை மொழியின் ‘ல்’ கெடவில்லை; ‘அ’வுடன் சேர்ந்து ‘ல’ ஆகியுள்ளது)

விண் + அத்து + கொண்டான் = விண்ணத்துக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)

(நிலை மொழியின் ‘ண்’ கெடவில்லை; இரட்டித்து , ‘அ’வுடன் சேர்ந்து ‘ண’ ஆகியுள்ளது)

’அத்தின் அகரம் அகரமுனை இல்லை’ (புணரி . 23) என்று முன் நாம் பார்த்த நூற்பாவுக்கு மேலும் ஓர் ஒட்டுச் செய்தியை இளம்பூரணர் தருகிறார் !
அஃதாவது ,
‘அ’ என்ற எழுத்தின் முன்னால் ‘அத்து’ வரும்போதுதான் அத்தின் ‘அ’ கெடும் என்பதில்லை !  வேறு உயிர் ஈற்றின் முன்னும்  அத்தின் ‘அ’ கெடும் என்கிறார் இளம்பூரணர் ! அதற்கு அவரின் எடுத்துக்காட்டு -  ‘அண்ணாத் தேரி’ !

அண்ணா + அத்து + தேரி = அண்ணாத் தேரி  (வேற்றுமைப் புணர்ச்சி)

‘அண்ணா’வின் ஈறு ‘ஆ’ ; இதன் முன் ‘அத்து’ வந்தாலும் , அத்தின் ‘அ’ கெட்டதைக் காணலாம் !

அண்ணா – ஓர் ஊரின் பெயராக இருக்கலாம்  என எழுதியுள்ளனர்.

தேரி – மணல் குன்று (Sand hill)

அண்ணாத் தேரி – அண்ணா என்ற ஊரிலுள்ள மணற் குன்று .

‘அத்து’ என்பதிலுள்ள ‘அ’ , நிலைமொழி ஈறான ‘அ’ முன் கெடும் என்று பார்த்தோம் !

அப்படிக் கெடாது வரும் இடங்களும் உள ; ஏமாந்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கிறார் இளம்பூரணர் ! அவர் தந்த சான்று –  ‘விளவத்துக் கண்’ .

விள + அத்து + கண் = விளவத்துக் கண்  (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கு , நிலைமொழி ஈறு ‘அ’தான் ! தொல்காப்பிய விதிப்படி (புணரி ,23) , இந்த ‘அ’முன் , அத்தின் ‘அ’ கெடவேண்டும் ! ஆனால் கெடாமல் , வகர உடம்படுமெய் பெற்று , விளவத்துக் கண் என்று வந்துள்ளது !

‘விள’ -  இச் சொல் குழப்பத்தைத் தரும் !

‘விள’ , மரத்தையும் , ஊர்ப்பெயரையும் குறிக்கும் ! இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும் !

 விள மரம் எப்படி இருக்கும் என்று படத்துடன் முன் கட்டுரை ஒன்றில் நாம் பார்த்துள்ளோம் !

‘விள’ என்பது ஊரையும் குறிக்குமா? – ஐயமா?

விளவங்கோடு – இருக்கிறதே ?  

இப்படியெல்லாம் , இளம்பூரணர் , இலக்கணத்தை வாரி வழங்குவதால்தான் , ‘தொல்காப்பியம்’ என்பதுபோல , இளம்பூரணர் உரையை ‘இளம்பூரணம்’ என்கிறோம் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (177)

Post by Dr.S.Soundarapandian Tue Dec 03, 2013 8:39 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (177)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இப்போது , எழுத்துச் சாரியை ! : -

“காரமுங் கரமுங் கானொடு சிவணி
நேரத் தோன்று மெழுத்தின் சாரியை”  (புணரி . 32)

அஃதாவது –

‘காரமும் கரமும் கானொடு சிவணி  - ‘காரம்’ , ‘கரம்’ , ‘கான்’ ஆகியன ,

‘நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை’ – எழுத்துச் சாரியைகளாக வரும் !

இதற்கு எடுத்துக்காட்டு எதுவும் தரவில்லை ! – இளம்பூரணரும் தரவில்லை , நச்சினார்க்கினியரும் தரவில்லை !

எல்லோருக்கும் தெரிந்ததுதான் என விட்டிருப்பர் !


 ‘ஆகாரம் ’ -   ‘ஆ ’வைக் குறிக்கும் !

இங்கே ‘காரம்’  , எழுத்துச் சாரியை !


 ‘மகரம் ’ -   ‘ம ’வைக் குறிக்கும் !

இங்கே ‘கரம்’  , எழுத்துச் சாரியை !


 ‘ணஃகான் ’ -   ‘ண ’வைக் குறிக்கும் !

இங்கே ‘கான்’  , எழுத்துச் சாரியை ! (ஃ - சந்தி)


‘அஃகேனம் ’ -   ‘ஃ ’எழுத்தைக் குறிக்கும் ! (ஃ , க் - சந்திகள்)


இங்கே ‘ஏனம்’  , எழுத்துச் சாரியை !


இளம்பூரணர் , தம் உரையில் , ‘ஆனம்’ , ‘ஏனம்’ , ‘ஓனம்’ என்ற மூன்று எழுத்துச் சாரியைகளைத் தெரிவிக்கிறார் ! எடுத்துக்காட்டுகளைச் சொல்லவில்லை !

இம் மூன்றில் ‘ஏனம்’ சாரியை பற்றி மேலே பார்த்துவிட்டோம் ! மீதி இரண்டு சாரியைகள் மேலாய்வுக்கு உரியனவாக உள்ளன!

‘ஆனம்’  ‘அ’வையும் , ‘ஓனம்’ ‘ஒ’வையும் குறித்திருக்கலாம் என்று ஒரு கருத்து உண்டு !

நன்னூலில் (126) , ‘அ’ ஓர் எழுத்துச் சாரியை எனக் கூறப்பட்டுள்ளது !

அஃதாவது , க்  , ச் , ட் , த் , ப் , ற்  - ஆகிய மெய்களைக் குறிக்க இலக்கணத்தில் ‘க ச ட த ப ற  மெல்லினமாம்’   என்றுதானே எழுதுகிறார்கள்? அப்போ அங்கே ‘அ’ எனும் சாரியை சேர்த்துத்தானே ( க் + அ = க , என்றாங்கு) கூறுகிறார்கள்? இதைத்தான் நன்னூல் கூறுகிறது !

இங்கே , இராமாநுசர் (நன் . 126) கருத்து குறிப்பிடத் தக்கது !அதை வருமாறு விளக்கலாம் ! :-

1 .‘அ’வைக் குறிக்க ‘ஆன’ என உச்சரிக்கப்பட்டது ; எழுத்துச் சாரியை – ‘ஆன’ !

2 .‘எ’யைக் குறிக்க ‘ஏன’ என உச்சரிக்கப்பட்டது ; எழுத்துச் சாரியை – ‘ஏன’ !

3 .‘ஒ’வைக் குறிக்க ‘ஓன’ என உச்சரிக்கப்பட்டது ; எழுத்துச் சாரியை – ‘ஓன’ !

4 .‘ஐ’வைக் குறிக்க ‘ஐயன’ என உச்சரிக்கப்பட்டது ; எழுத்துச் சாரியை – ‘அன’ !

5 .‘ஔ’வைக் குறிக்க ‘ஔவன’ என உச்சரிக்கப்பட்டது ; எழுத்துச் சாரியை – ‘அன’ ! (வ்-உடம்படு மெய்)

இலக்கண நூற்களில் , ‘ககர இகரம்’ என்றால் ‘கி’ ஆகும் ! இங்கே வந்துள்ள ‘கர’ , ‘கரம்’ என்பதன் திரிபுதான் !  இரண்டும் எழுத்துச் சாரியைகள்தான் !

இதே போலத்தான் ‘மகர உகரம்’ – ‘மு’ !

‘பகர உகரம்’ – ‘பு’ !

‘பகர ஊகாரம்’ – ‘பூ’ !
- இப்படியே பிற எழுத்துகளுக்கும் ஒட்டிக் கொள்க!

இலக்கணங்களில் ‘உப்பகாரம்’ என்பது – ‘பு’!
‘பவ்வீ’ என்பது – ‘பீ ’
‘உச்சகாரம்’ என்பது – ‘சு’!

இங்கு  எழுத்துச்சாரியை , சொற்சாரியை ஆகிய இரு கலைச் சொற்களை (Technical terms) நான் விளக்கவேண்டும் !
எழுத்துச் சாரியை வேறு , ஓர் எழுத்து சாரியையாக வருவது வேறு !

ஆன் – இதில் ஒரே ஒரு எழுத்தாகிய  ‘ன்’ சாரியையாக வந்துள்ளது ; இஃது எழுத்துச் சாரியை அல்ல; சொற்சாரியை !

பண்ணுவாள் – இதன் நடுவே ஒரே ஒரு எழுத்தாகிய  ‘உ’ சாரியையாக வந்துள்ளது ; இஃது எழுத்துச் சாரியை அல்ல; சொற்சாரியை !

எழுத்தைக் குறிக்கப் பயன்பட்டால்தான் அச் சாரியை எழுத்துச் சாரியை !

  இதுவரை நாம் பார்த்தவை எழுத்துத் தமிழுக்கானவை !

இனிப் பேச்சுத் தமிழில் எப்படி உச்சரிக்கிறோம் ?

‘அ’வை , ‘ஆனா’ என்றுதானே கூறுகிறோம்?  இங்கே எழுத்துச் சாரியை – ‘ஆனா’ !

‘ஆ’வை , ‘ஆவன்னா’ என்றுதானே கூறுகிறோம்?  இங்கே எழுத்துச் சாரியை – ‘அன்னா’
! (வ்- உடம்படு மெய்) .

‘க’வைக் , ‘கானா’ என்றுதானே கூறுகிறோம்?  இங்கே எழுத்துச் சாரியை – ‘ஆனா’ !

‘கா’வைக் , ‘காவன்னா’ என்றுதானே கூறுகிறோம்?  இங்கே எழுத்துச் சாரியை – ‘அன்னா’ !
(வ் – உடம்படு மெய்)
- இவை மேலாய்வுக்கு உரியனவே !


மொழியியலில் சாரியையை Empty morph குறிப்பர் !


***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (178)

Post by Dr.S.Soundarapandian Thu Dec 05, 2013 9:36 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (178)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

எழுத்துச் சாரியை தொடர்கிறது ! :-

”கரமுங் கானு நெட்டெழுத் திலவே” (புணரி . 33)

அஃதாவது –

கரம்’ எனும் எழுத்துச் சாரியை , குறில் எழுத்துகளைக் குறிக்கவே வரும் ! நெடில் எழுத்துகளைக் குறிக்க வராது ! :-

அகரம் √
ஆகரம் ×

இகரம் √
ஈகரம் ×


தகரம் √
தாகரம் ×

இதைப் போலவே , ‘கான்’ சாரியையும் குறில் எழுத்துகளைக் குறிக்கவே வரும் ! நெடில்களைக் குறிக்க வராது !

மஃகான் √  -    ‘கான்’ எனும் எழுத்துச் சாரியை ‘ம’ எனும் குறிலைக் குறித்தது !
மாஃகான் ×


னஃகான் √   ‘கான்’ எனும் எழுத்துச் சாரியை ‘ன’ எனும் குறிலைக் குறித்தது !
னாஃகான் ×

‘கரம்’ எனும் எழுத்துச் சாரியை குறில் எழுத்துகளுக்கே வரும் என மேலே பார்த்தோம் !

இதைக் கொண்டு  ‘காரம்’  எனும் எழுத்துச் சாரியை நெடில் எழுத்துகளுக்கும் வரும் என்று ஒரு துணை விதியைத் தருகிறார் – இளம்பூரணர் !  -  

ஊகாரம் √    -   ‘காரம்’ எனும் எழுத்துச் சாரியை ,  ‘ஊ’ எனும் நெடிலைக் குறித்தது !
ஊகரம் ×


ஈகாரம் √    -   ‘காரம்’ எனும் எழுத்துச் சாரியை ,  ‘ஈ’ எனும் நெடிலைக் குறித்தது !
ஈகரம் ×

எழுத்துச் சாரியை பற்றித் தொல்காப்பியர் இன்னும் –

“வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய” (புணரி . 34)

‘வரன் முறை மூன்றும்’ – முன் நூற்பாவில்  (புணரி . 32)  ,  ‘கரம்’ , ‘காரம்’ , ‘கான்’  ஆகிய மூன்று சாரியைகள் கூறப்பட்டன ; இந்த மூன்றும் ,

‘குற்றெழுத்துடைய’ – குறில் எழுத்துகளைக் குறிக்க வரும் !

அஃதாவது-

1 . அகாரம் √
    அகரம்√
    அஃகான் √  (ஃ - சந்தி)


2 . லகாரம் √
    லகரம்√
    லஃகான் √

என வரும் !

அடுத்ததாகக் ‘கான்’ சாரியை பற்றி ஒரு விதிவிலக்கு ! –

“ஐகார  ஔகாரங்  கானொடுந் தோன்றும்” (புணரி . 35 )


அஃதாவது –

ஐ , ஔ – ஆகிய எழுத்துகள் நெடிலாக இருந்தாலும் இவற்றுக்குக் ‘கான்’ சரியை வருவது உண்டு ! –

ஐகான் √

ஔகான்   √

‘அகரம்’ , ‘மகரம்’ , ‘அகாரம்’ , ‘மகாரம்’  என்றெல்லாம் சாரியைகள் எழுதுகிறோமல்லவா?
இவைகள் எல்லாம் பெயர்களே (Nouns) !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (179)

Post by Dr.S.Soundarapandian Sat Dec 07, 2013 10:14 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (179)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

நிலைமொழி ஈறு புள்ளி எழுத்தாக (மெய்யெழுத்தாக) இருந்து , வருமொழி முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் , அது , அம் மெய் மீது ஏறிக்கொள்ளும் !

சொன்னார் தொல்கப்பியர் ! : -

“புள்ளி  யீற்றுமு  னுயிர்தனித்  தியலாது
மெய்யொடுஞ் சிவணு  மவ்வியல் கெடுத்தே” (புணரி . 36)

இதன்படி-

ஆல் + அடை = ஆலடை  (வேற்றுமைப் புணர்ச்சி)

வேறு சில –
யார் + அங்கே = யாரங்கே ?
வாள் + ஒடிந்தது = வாளொடிந்தது !
கால் + அழகு = காலழகு !

இளம்பூரணர் மேலும் சில துணை இலக்கணங்களைத் தருகிறார் ! : -

1 . “இயல் பல்லாத புள்ளி முன் உயிர் வந்தாலும் இவ்விதி கொள்க ! ‘ அதனை ’  எனவும் ‘நாடுரி’ எனவும் வரும் !”  

இதனை விளக்கினால் –

(அ) அது + அன் + ஐ = அதனை (வேற்றுமைப் புணர்ச்சி)

(இங்கே , ‘அ’ எனும் உயிர் , ‘த்’ எனும் இயல்பல்லாத  புள்ளி மீது ஏறிக்கொண்டது!)

இயல்பல்லாத புள்ளி என்றால் ?

அது + அன் + ஐ →  அத் + அன் + ஐ = அதனை !

           இதுதானே புணர்ந்த முறை ?
             
 இதில் , ‘த்’ , புணர்ச்சி வகையால்தானே வந்தது? இதுதான் இயல்பல்லாத  புள்ளி !
இவ்வாறு , நிலைமொழியில் இல்லாத புள்ளி , புணர்ச்சிச் செயலால் வந்தால் அப் புள்ளியை ‘இயல் பல்லாத புள்ளி’ எனபர் !

(ஆ)  நாழி + உரி = நாடுரி

இங்கும் ‘உ’ , இயல்பல்லாத புள்ளி மீதுதான் ஏறியது!

எப்படி?

நாழி + உரி   → நாட் + உரி = நாடுரி !

மேலே சொன்னதுபோல , ‘ட்’ என்பது , இயல்பல்லாத புள்ளி ஆகிறதல்லவா?

இளம்பூரணரால் கூறப்பட்ட இன்னொரு நுட்பம் ! :-

(2)  “குற்றியலுகரத்தின் முன்னும் இவ்விதி கொள்க !”

இதற்கு அவரின் எடுத்துக்காட்டு , ‘நாகரிது’!
அஃதாவது –

நாகு + அரிது = நாகரிது (அல்வழிப் புணர்ச்சி)

‘நாடு ’ என்பதிலுள்ள ‘உ’ , நெடில்தொடர்க் குற்றியலுகரம் !

மெய் மீது , உயிர் ஏறி , உயிர்மெய் ஆவது பற்றி மேலே பார்த்தோம் !

அடுத்து , உயிர்மெய்யிலிருந்து , உயிர் பிரிந்தால் , மெய் தனது பழைய உருவத்திற்கு வந்துவிடும் என்கிறார் தொல்காப்பியர்! :-

“மெய்யுயிர் நீங்கிற்  றன்னுரு வாகும்” !  (புணரி . 37)

அதனை → அதன் + ஐ

இதில் , ‘அதனை’ என்பதன் ‘னை’யிலிருந்து ‘ஐ’யைக் கழற்றிவிட்டால் , ‘ன்’ என்ற தன்னுரு  வந்ததைக் காணலாம் !

உயிர் மீது மெய் ஏறுதலும் , உயிர்மெய் , உயிர் + மெய் என்று பிரிவதும் அடிப்படையான புணர்ச்சி விதிகளாகும் !

இந்தக் காரணத்தால்தான் தொல்காப்பியர் இந் நூற்பாக்களைப் புணரியலில் வைத்துள்ளார் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (180)

Post by Dr.S.Soundarapandian Wed Dec 11, 2013 10:47 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (180)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

இப்போது உடம்படுமெய்  (Conjunctive consonant) ! :-

“எல்லா  மொழிக்கு முயிர்வரு வழியே
உடம்படு மெய்யி  னுருபுகொளல் வரையார்”  (புணரி . 38)

‘எல்லா மொழிக்கும்’ -  ‘மூவகைப்பட்ட மொழிக்கும்’ ; அஃதாவது , தனி உயிரெழுத்து , உயிர்மெய் எழுத்து , மெய்யெழுத்து ஆகியவற்றை  ஈற்றிலே கொண்ட சொற்கள் நிலைமொழியாக வரும்போது ,

‘உயிர் வரும் வழியே’ -  வருமொழி முதல் எழுத்து , உயிரெழுத்து ஆகும்போது ,

‘உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார் ’  - இடையே மெய் என்ற வடிவம் வருவதை நீக்கமாட்டார்கள் !

எடுத்துக்காட்டுகள் -  ‘புளியங்கோடு’ , ‘குரீஇ யோப்பினான்’ , ‘விண்வத்துக் கொட்கும்’ .

அஃதாவது-

புளி + அம் + கோடு = புளியங்கோடு  (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
நிலைமொழி ஈற்றில் உயிர்மெய் நின்றதைக் கவனிக்க !

குரீஇ + ஓப்பினான் = குரீஇ யோப்பினான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஓப்புதல் – விரட்டுதல் .
நிலைமொழி ஈற்றிலே தனி உயிர் நின்றதைக் கவனிக்க !

இங்கே இளம்பூரணர் தம் மாணவர்களுக்கு ஒரு வகுப்பு எடுக்கிறார் ! அதனை எட்டிப் பார்ப்போம் ! :-

“உடம்படு மெய்யாவன யகரமும் வகரமும் எனக் கொள்க! இகர வீறும் , ஈகார வீறும் , ஐகார வீறும் யகரவுடம்படு மெய் கொள்வன ! அல்லன வெல்லாம் வகரமெய் கொள்வன ! ”  

இந்தக் குறிப்பைக் கொண்டுதான் நன்னூலார் , “இ ஈ ஐ வழி யவ்வும் ...” என விதி வகுத்தார் !

 ‘நன்னூலுக்கு முன்னோடி இளம்பூரணர் உரை’ என்பதற்கு இந்த இடம் நல்ல சான்று !  

அவ் வகுப்பில் மேலும் இளம்பூரணர் , “விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம்படு மெய் கொள்க ! மரவடி , ஆயிருதிணை என வரும் !” என்றார் .

அஃதாவது –

மரம் + அடி →  மர + அடி = மரவடி (வ் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

‘மரம்’ என்பது மாறி ‘மர’ என விகாரப்பட்ட மொழியாக நின்றாலும் , ஆண்டும் உடம்படுமெய் விதி செல்லும் என்பதே இளம்பூரணர் நுணுக்கம் !

அ + இரு + திணை → ஆ + இரு + திணை = ஆயிரு திணை  (ய் – உடம்படு மெய்) (அல்வழிப் புணர்ச்சி)

‘அ’ என்ற நிலைமொழி , ‘ஆ’  என விகாரப்பட்டு நின்றது ; நின்றாலும் உடம்படுமெய்  , ‘ய்’ வந்ததைக் கவனிக்க !

‘ஆ’ முன் ‘ய்’ , ‘வ்’ இரண்டுமே உடம்படுமெய்யாக வரும் என்பதை இங்கு குறிக்கலாம் !

தம் வகுப்பை முடிக்கு முன் ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார் இளம்பூரணர் !

என்ன குண்டு அது ?

“வரையார் என்றதனால் , உடம்படு மெய் கோடல் ஒருதலை அன்று என்பது கொள்ளப்படும் !  ‘கிளி அரிது’ , ‘மூங்கா இல்லை’ என வரும் !  ” – இதுவே அக் குண்டு !

இதன் பொருள் ?

“உடம்படு மெய் விதியைப் படித்தோம் என்பதற்காக , கண்ணை மூடிக்கொண்டு , எந்த இடம் என்று பார்க்காமல் , நிலைமொழி ஈற்றில் உயிர் , வருமொழி முதலில் உயிர் வருகின்றன என்பதற்காக உடம்படு மெய்யைத் தூக்கிப்போட்டுவிடாதீர்கள் !   ” – இதுதான் இளம்பூரணர் சொல்ல வந்தது !

கிளி + அரிது = கிளி அரிது √  (அல்வழிப் புணர்ச்சி)
  = = கிளி யரிது ×

மூங்கா + இல்லை = மூங்கா இல்லை √  (அல்வழிப் புணர்ச்சி)
        = மூங்கா யில்லை ×

மூங்கா – கீரி  (Mongoose) ; ஆந்தையையும் இச் சொல் குறிக்கும் .

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (181)

Post by Dr.S.Soundarapandian Sat Dec 14, 2013 10:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (181)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

ஒரு சொல்லை இப்படியும் பிரிக்கலாம் , அப்படியும் பிரிக்கலாம் என்ற நிலை வருமா?

வரும் என்கிறார் தொல்காப்பியர் !

அப்படி வரும்போது , உச்சரிக்கும் ஓசையாலும் சொல்லும் நோக்கத்தாலும் , புணர்ச்சியைத் தெரிந்துகொள்ளவேண்டும்  என்கிறார் அவர் !

“எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி
இசையிற்  றிரித  னிலைஇய பண்பே ” (புணரி . 39)

‘எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி’ – இரு வகையாகப் பிரித்தாலும் புணர்ந்தபின் எழுத்துகளின் சேர்க்கையில் ஒரு மாற்றமும் தென்படாத வகையில் புணர்ச்சிச் சொல் வந்தால் ,

‘இசையில் திரிதல் நிலைஇய பண்பே’ – அச் சொல்லை உச்சரிக்கும் ஓசை அமைப்பைக் கொண்டு பொருளை உணர்ந்துகொள்ள வேண்டும் !

நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-

1 . செம்பைப் பற்றிப் பேச்சு இருந்தால் ,
‘செம்பு + ஒன்பதின் றொடி ’  (வேற்றுமைப் புணர்ச்சி)எனப் பிரிக்கவேண்டும் !

உச்சரிப்பில் , ‘செம்பு’க்கு அழுத்தம் இருக்கும் !
‘செம்பில் ஒன்பது தொடி ’ என்பது பொருள் !


பொன் பற்றிப் பேச்சு இருந்தால் ,
‘செம்பொன் + பதின்றொடி ’ ’  (வேற்றுமைப் புணர்ச்சி)என்று பிரிக்கவேண்டும் !

இங்கு , ‘செம்பொன்’ மீது அழுத்தம் இருக்கும் !
‘செம்பொன்னில் பத்துத் தொடி நிறை’ என்பது பொருள் !


2 . சிவப்பு நிறப் பருத்தி பற்றிய பேச்சானால் ,
‘செம் + பருத்தி ’ (அல்வழிப் புணர்ச்சி)என்று பிரியும் !
ஓசை , ‘பருத்தி’ மீது கூடுதலாக இருக்கும் !

பேச்சு , செம்பைப் பற்றி இருந்தால் ,

‘செம்பு + அருத்தி ’ (வேற்றுமைப் புணர்ச்சி) என ஆகும் !
ஓசை ‘செம்பு’ மீது  விழும் !

செம்பு அருத்தி = செம்பின் மீது ஆசை .

3 . செய்தி , ‘பரம்பு’ பற்றி இருப்பின் ,
‘குறும் + பரம்பு ’ என்று  ஆகும் !
ஓசை , ‘பரம்பு ’ மீது வரும் !

குறும் பரம்பு –உழுத வயலைச் சமப்படுத்தும் குட்டையான பலகை .

கருத்து , ‘குறும்பர்’ பற்றி அமைந்தால் ,
குறும்பர் + அம்பு’ என ஆகும் !
ஓசை ‘குறும்பர் ’ மீது வரும் !
குறும்பர் அம்பு – குறும்பர் பயன்படுத்தும் அம்பு .
 
4 .  ‘நாகன்றேவன் போத்து’ எனில்,
‘நாகன்தேவன் + போத்து ’ (வேற்றுமைப் புணர்ச்சி) எனப் பிரிப்பது ஒரு முறை !

‘நாகன் என்ற பெயருள்ள ஒரு தேவன் வைத்திருந்த எருமை’ என்று பொருள்!
ஓசை, ‘நாகன்’ மீது அமையும் !

ஓசை , ‘நாகன் தேவன்’ மீது சமமாக விழுந்தால் , ‘நாகனும் தேவனும் வைத்திருந்த எருமை’ என்று பொருள் வரும் ! இங்கும் வேற்றுமைப் புணர்ச்சியே !

5 .  ‘தாமரைக்கணியார்’ என்பதை ,
‘தாம் + அரைக்கணியார் ’ (அல்வழிப் புணர்ச்சி)என்று பிரிக்கலாம் !
இங்கு , ஓசை ‘அரைக்கணியார்’ மீது படும் !
அரைக்கணியார் – அரைக்கு + அணியார் = இடுப்பில் ஆடை அணியார் ! (வேற்றுமைப் புணர்ச்சி)

‘தாமரைக்கு + அணியார்
’ (வேற்றுமைப் புணர்ச்சி)
எனவும் பிரிக்கலாம் !

‘தாமரை மலருக்கு அண்மையில் வைத்துக் கருத்தக்கவர் (தாமரை போன்றவர்)’ என்பது பொருள் !

6 .  ‘குன்றேறாமா’ என்பதைக் ,

‘குன்றேறா + மா
’ (அல்வழிப் புணர்ச்சி) என்றும் பிரிக்கலாம் !
‘குன்றில் ஏறாத குதிரை’ என்பது பொருள் !
ஓசை அழுத்தம் ‘குன்றேறா’ என்பது மீது !
‘குன்றேறா ’ - தனியாக நிற்கும்போது, வேற்றுமைப் புணர்ச்சி !


குன்றேறு +ஆமா’ (அல்வழிப் புணர்ச்சி) என்றும் பிரிக்கலாம் !
‘குன்றில் ஏறும் பசுவாகிய விலங்கு ’ எனப் பொருள்படும் !
ஓசை அழுத்தம் ‘குன்றேறு’ என்பது மீது !
‘குன்றேறு ’ - தனியாக நிற்கும்போது, வேற்றுமைப் புணர்ச்சி !


மேல் 6 வகைகளுக்கான சூத்திரத்தை மேலே பார்த்தோம் ! (புணரி . 39) .

இதில் நிறைவு ஏற்படவில்லை தொல்காப்பியருக்கு !

இன்னொரு சூத்திரம் எழுதினார் ! :-

“அவைதாம்
முன்னப் பொருள புணர்ச்சி வாயின்
இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே” (புணரி . 40)

‘முன்னப் பொருள புணர்ச்சி வாயின்’ – புணர்ச்சியான சொற்களில் காணப்படும் பொருள் குறிப்பே இன்றியமையாதது !
‘இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே’ – இப்படித்தான் பிரிக்கவேண்டும் என எழுத்து வரிசையை வைத்துச் சொல்லமுடியாது !
எடுத்துக்காட்டுகளை மேலே பார்த்துவிட்டோம் !

பொருளின் தன்மைக்கு ஏற்பச் சொற்களை நாம்தான் பிரித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும் !உச்சரிக்கும் ஓசையும் சொற்பிரிப்புக்கு உதவும் என்பதை மேலே கண்டோம் !

இத்துடன் புணரியல் முடிகிறது !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (182)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 16, 2013 8:28 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (182)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

புணரியலை நம் ஆய்வு எண் 181இல் முடித்தோம் !

புணரியலுக்கு அடுத்த இயல் ‘தொகை மரபு’ !

‘தொகை மரபு’ , தொல்காப்பியத்தில் 5ஆம் இயல் !

‘தொகை மரபு’ என்றால் என்ன?

‘வினைத்தொகை முதலிய தொகைகளைக் கூறுவதால் தொகை மரபு’ என்று தவறாக நினைக்கின்றனர் !

தொகைகளைக் கூறும் இயல் அல்ல இது !

இன்னின்ன  எழுத்து சொல்லின் ஈற்றில் வந்தால் , புணர்ச்சி விதி இது என்று தொகுத்துக் கூறுவதால் , ‘தொகை மரபு’ என்று பெயர் ! இதனை, “இருபத்து நான்கு ஈற்றிலும் விரிந்து முடிவனவற்றை யெல்லாம் தொகுத்து முடித்தலின் தொகை மரபு எனப்பட்டது” என்ற இளம்பூரணர் வாக்கால் அறியலாம் !

தொகை மரபின் முதல் நூற்பா ! :-

“கசதப முதலிய மொழிமேற் றோன்று
மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான்
ஙஞந  மவென்னு மொற்றா கும்மே
அன்ன மரபின் மொழிவயி னான”  (தொகை . 1)

‘க ச த ப  முதலிய  மொழிமேல்’ -  வருமொழியின் முதல் எழுத்துகள் க , ச , த , ப என்று இருந்தால் ,
‘தோன்றும் மெல்லெழுத்து இயற்கை’ – அப் புணர்ச்சியில் , மெல்லின எழுத்து உருவாகும் !
 ‘சொல்லிய முறையான்  ங ஞ ந ம என்னும் ஒற்றாகும்மே’ – அப்படித் தோன்றும் மெல்லின எழுத்துகள்  ங் , ஞ் , ந் , ம் ஆகும் ,
‘அன்ன மரபின் மொழிவயினான ’ – தமிழ் இனஎழுத்து  மரபுப்படி  !

இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-

1 . விள + கோடு = விளங் கோடு  (வேற்றுமைப் புணர்ச்சி) (வருமொழி முதல் ‘க்’கின் இனம் ‘ங்’ தோன்றியது)

விளங் கோடு – ‘விள ’ மரத்தின் கிளை .

இங்கு , நிலைமொழியின் ஈறு , உயிர் ஈறு என்பதை நோக்கிக்கொள்க !

2 . விள + செதிள்= விளஞ் செதிள்  (வேற்றுமைப் புணர்ச்சி) (வருமொழி முதல் ‘ச்’சின் இனம் ‘ஞ்’ தோன்றியது)

விளஞ் செதிள் – ‘விள ’ மரத்தின் பட்டை .

இங்கும் , நிலைமொழியின் ஈறு , உயிர் ஈறு என்பதை நோக்கிக்கொள்க !

இவ்வாறே –

3 . விள + தோல்= விளந் தோல்  (வேற்றுமைப் புணர்ச்சி) (வருமொழி முதல் ‘த்’தின் இனம் ‘ந்’ தோன்றியது)

விளந் தோல் – ‘விள ’ மரத்தின் தோல் .


4 . விள + பூ= விளம் பூ  (வேற்றுமைப் புணர்ச்சி) (வருமொழி முதல் ‘ப்’பின் இனம் ‘ம்’ தோன்றியது)

விளம் பூ – ‘விள ’ மரத்தின் பூ .

5 . மரம் + குறிது = மரங் குறிது (அல்வழிப் புணர்ச்சி) (வருமொழி முதல் ‘க்’கின் இனம் ‘ங்’ தோன்றியது)

6 . மரம் + சிறிது = மரஞ் சிறிது (அல்வழிப் புணர்ச்சி) (வருமொழி முதல் ‘ச்’சின் இனம் ‘ஞ்’ தோன்றியது)

7. மரம் + தீது = மரந் தீது (அல்வழிப் புணர்ச்சி) (வருமொழி முதல் ‘த்’தின் இனம் ‘ந்’ தோன்றியது)

8 . மரம் + பெரிது = மரம் பெரிது (அல்வழிப் புணர்ச்சி) (வருமொழி முதல் ‘ப்’பின் இனம்  ‘ம்’நிலைபெற்றது)

இங்கே ஒரு விதி விலக்கு ! கூறுபவர் இளம்பூரணர்!

விள + குறுமை = விளங் குறுமை ×
விள + குறுமை = விளக் குறுமை √   (வேற்றுமைப் புணர்ச்சி) (வருமொழி முதல் ‘க்’கே சந்தியாக வந்தது.)
‘விளங்கோடு ’ வந்ததுபோல , ‘விளங்குறுமை’ வரவில்லை பாருங்கள் !

இதில் என்ன மொழி நுட்பம் உள்ளது ?

என்னவெனில் , ‘குறுமை’புலவர்களால் உருவாக்கப்பட்ட சொல் ! அதனால் ‘ விள ’ என்பதோடு , ஐயம் ஏற்படாத வகையில் ‘விளக்குறுமை’ என ஆணி அடித்தாற்போல அமைத்துள்ளனர் !

ஆம் ! தமிழ்ச் சொற்களில் மக்களால் உருவாக்கப்பட்டவை , புலவர்களால் உருவாக்கப்பட்டவை என இரு வகைகளை நம்மால் பகுக்க முடியும் !
***  


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 24 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 84 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 54 ... 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum