ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

+46
M. Jagadeesan
krishnaamma
K.Senthil kumar
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
சசி
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
M.Jagadeesan
monikaa sri
சிவனாசான்
விமந்தனி
CHENATHAMIZHAN
கோம்ஸ் பாரதி கணபதி
M.Saranya
jesifer
M.M.SENTHIL
Ponmudi Manohar
Syed Sardar
ayyasamy ram
அனுராகவன்
myimamdeen
அசுரன்
yarlpavanan
பூவன்
கவிஞர் கே இனியவன்
sivarasan
ராஜு சரவணன்
nikky
sundaram77
Dr.சுந்தரராஜ் தயாளன்
முனைவர் ம.ரமேஷ்
balakarthik
mohu
mbalasaravanan
Aathira
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
THIYAAGOOHOOL
யினியவன்
ச. சந்திரசேகரன்
பாலாஜி
கேசவன்
சதாசிவம்
Dr.S.Soundarapandian
50 posters

Page 22 of 84 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 53 ... 84  Next

Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Dr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Last edited by Dr.S.Soundarapandian on Sat Sep 28, 2013 11:48 am; edited 7 times in total (Reason for editing : topic no.incorrect)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (154)

Post by Dr.S.Soundarapandian Sun Oct 27, 2013 1:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (154)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ஒன்பது + ஆயிரம்’ எப்படிப் புணரும் ?


விடை :-

“ஆயிரம் வரினே யின்னாஞ் சாரியை
ஆவயி  னொற்றிடை  மிகுத லில்லை !”  (குற்றியலு . 70)

ஒருபஃது + ஆயிரம் = ஒருபதினாயிரம்  (இன் – சாரியை ; சந்தி ஒற்று வரவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

இதில் , ‘ஃ’ கெடும் எனக் கூறப்படவில்லை ; ஆயினும் ,இதற்கு முந்தைய நூற்பாவில் (குற்றியலு . 69) , “நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்” என்பதை இங்கு இணைத்துக்கொள்ள வேண்டும் !

இருபஃது + ஆயிரம் = இருபதினாயிரம் (இன் – சாரியை; சந்தி ஒற்று வரவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

முப்பஃது + ஆயிரம் = முப்பதினாயிரம் (இன் – சாரியை; சந்தி ஒற்று வரவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

நாற்பஃது + ஆயிரம் = நாற்பதினாயிரம் (இன் – சாரியை; சந்தி ஒற்று வரவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஐம்பஃது + ஆயிரம் = ஐம்பதினாயிரம் (இன் – சாரியை; சந்தி ஒற்று வரவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

அறுபஃது + ஆயிரம் = அறுபதினாயிரம் (இன் – சாரியை; சந்தி ஒற்று வரவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

எழுபஃது + ஆயிரம் = எழுபதினாயிரம் (இன் – சாரியை; சந்தி ஒற்று வரவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

எண்பஃது + ஆயிரம் = எண்பதினாயிரம் (இன் – சாரியை; சந்தி ஒற்று வரவில்லை) (அல்வழிப் புணர்ச்சி).

நச்சினார்க்கினியர் உரையால் –

நூறு + ஒருபதினாயிரம் = நூற் றொருபதினாயிரம் (110 ,000) (அல்வழிப் புணர்ச்சி).

நூறாயிரம் + ஒருபத்தீராயிரம் = நூறாயிரத் தொருபத்தீராயிரம் (112,000) (அல்வழிப் புணர்ச்சி).

மேல் வரிசை  ‘எண்பஃது’ என்பதோடு நின்றுவிட்டதைக் கவனியுங்கள் !

எண்பஃது = 80
ஒன்பஃது = 9 !

80க்கு அடுத்துத் 90 வரவேண்டுமே தவிர 9 வரக்கூடாது ! எனவேதான் ‘எண்பஃது’ என்ற எண்ணுடன் அப் புணர்ச்சி வரிசை நிற்கிறது !


 ‘ஒருபஃது’ – அளவுப் பெயர்களுடன் புணரும்போது –

“அளவு நிறையு மாயிய  றிரியா” (குற்றியலு . 71)

அஃதாவது , அளவு , நிறைப் பெயர்கள் மேலே கூறப்பட்ட முறையில் , ‘இன்’ சாரியை பெற்றுப் புணரும் ! –

ஒருபஃது + கலம் = ஒருபதின் கலம் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + கலம் = இருபதின் கலம் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + சாடி = ஒருபதின் சாடி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + சாடி = இருபதின் சாடி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + தூதை = ஒருபதின் தூதை (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + தூதை = இருபதின் தூதை (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + பானை = ஒருபதின் பானை (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + பானை = இருபதின் பானை (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + நாழி = ஒருபதினாழி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + நாழி = இருபதினாழி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + மண்டை = ஒருபதின் மண்டை (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + மண்டை = இருபதின் மண்டை (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + வட்டி = ஒருபதின் வட்டி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + வட்டி = இருபதின் வட்டி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + அகல் = ஒருபதினகல் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + அகல் = இருபதினகல் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + உழக்கு = ஒருபதினுழக்கு (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + உழக்கு = இருபதினுழக்கு (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + கழஞ்சு = ஒருபதின் கழஞ்சு (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + கழஞ்சு = இருபதின் கழஞ்சு (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + தொடி = ஒருபதின் தொடி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + கலம் = இருபதின் தொடி (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

ஒருபஃது + பலம் = ஒருபதின் பலம் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
இருபஃது + பலம் = இருபதின் பலம் (இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)

இவற்றில் , ‘ஒருபதின் கலம்’ , ‘ஒருபதின் பலம்’ என வந்ததே அல்லாமல் , ‘ஒருபதிற் கலம்’ , ‘ஒருபதிற் பலம்’ என வரவில்லை என்பதைக் கவனியுங்கள் !

ஏனெனில் ,  ‘ஒருபதிற் கலம்’ என வல்லொற்று வந்தால் வேற்றுமைப் புணர்ச்சிப் பொருண்மை வருகிறது ! அல்வழிப் புணர்சியைத் தெளிவாகக் கொள்ளவே ‘ஒருபதின் கலம்’ என்று  நிற்கிறது !

மேல் நூற்பா (71) உரையில் , இளம்பூரணர் வருமாறு எழுதுகிறார் – “  ‘திரியா’ யென்றதனான் , ஒருபதிற்றுக் கலம் என்னும் முடிபிற்கு இன்னின்னகரம் இரட்டிய றகரமாகலும் , ஒருபதினாழி என்னும் முடிபின்கண் வருமொழி நகரம் திரிந்த வழி  நிலைமொழியின் நகரக் கேடும் கொள்க ! ”

இதன்படி –

ஒருபஃது + கலம்  →  இன் சாரியை → ஒருபஃது +இன் + கலம் → ஒருபதின் + கலம் → ‘ன்’ , ‘ற்ற்’ ஆதல் → ஒருபதிற்ற்கலம் → உகரச் சாரியை வரல் → ஒருபதிற்றுகலம் → ‘க்’சந்தி தோன்றல் → ஒருபதிற்றுக் கலம் !

ஒருபஃது + நாழி →   ‘இன்’சாரியை வரல் →  ஒருபதின் நாழி →  ‘நகரம் திரிந்தவழி’ → ஒருபதினாழி !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (155)

Post by Dr.S.Soundarapandian Tue Oct 29, 2013 9:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (155)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் அடுத்த நூற்பா ! :-

“முதனிலை  யெண்ணின்முன் வல்லெழுத்து வரினும்
ஞநம  தோன்றினும் யவவந்  தியையினும்
முதனிலை யியற்கை யென்மனார் புலவர்” (குற்றியலு . 72)

‘முதனிலை யெண்ணின் முன்’ -  ‘ஒன்று’ என்பதன் முன் ,

‘வல்லெழுத்து வரினும்’ -   க , ச , த , ப  ஆகிய எழுத்துகளை முதலாகக் கொண்ட  சொற்கள் வந்து புணர்ந்தாலும் ,

‘ஞ , ந , ம     தோன்றினும்’ -  ஞ , ந , ம  ஆகிய எழுத்துகளை முதலாகக் கொண்ட  சொற்கள் வந்து புணர்ந்தாலும் ,


‘ய ,வ  வந்து  இயையினும்’ -  ய , வ  ஆகிய எழுத்துகளை முதலாகக் கொண்ட  சொற்கள் வந்து புணர்ந்தாலும் ,

‘முதனிலை இயற்கை என்மனார் புலவர்’ -  ‘ஒன்று’ முதல் ‘ஒன்பது’ வரையான எண்கள் முன்பு எப்படித் திரிந்தும் திரியாமலும் (குற்றியலு . 32 , 33 , 38 , 51 , 63) புணர்ந்தனவோ , அந்த முறைப்படிப் புணரும் என்பார்கள் புலவர்கள் !

இதன்படி –
ஒன்று + கல் = ஒரு கல் (பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + சுனை = ஒரு சுனை  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + துடி = ஒரு துடி  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + பறை = ஒரு பறை  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + ஞாண் = ஒரு ஞாண்  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + நூல் = ஒரு நூல்  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + மணி = ஒரு மணி  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + யாழ் = ஓர் யாழ்  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்று + வட்டு = ஒரு வட்டு  (அல்வழிப் புணர்ச்சி)

தொல்காப்பியர் ‘ஒன்று’க்குத்தான் விதி சொன்னார் !

இளம்பூரணர் , “எனவே , வழிநிலை எண்ணாகிய இரண்டு முதலாகிய எண்கள் , அம் முதனிலை முடிபாகிய விகாரம் எய்தியும் , எய்தாது இயல்பாயும் முடியும்” என விளக்குகிறார் !

தொல்காப்பியச் ‘சூத்திரம்’ என்பது சுருக்கமாகத்தான் இருக்கும் ! அதற்கு விரிந்த பொருள் உண்டு என்பதை உரையாசிரியர்கள்தான் கூறவேண்டும் ! ஏனெனில் உரையாசிரியர்களுக்குத்தான் அந்தப் பரம்பரைக் கல்வி கிடைத்தது !

மேல் நூற்பாவிற்கு (72) , இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் வரைந்த உரைகளால்  அறியப்படும் புணர்ச்சிகளை வருமாறு பிரித்து எழுதலாம் ! :-

இரண்டு + கல் = இருகல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + கல் = இரண்டு கல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு + சுனை = இருசுனை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + சுனை = இரண்டு சுனை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு + துடி = இருதுடி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + துடி = இரண்டு துடி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு + பறை = இருபறை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + பறை = இரண்டு பறை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு + ஞாண் = இருஞாண் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + ஞாண் = இரண்டு ஞாண் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு + நூல் = இருநூல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + நூல் = இரண்டு நூல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு + மணி = இருமணி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + மணி = இரண்டு மணி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு + யாழ் = இருயாழ் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + யாழ் = இரண்டி யாழ் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு + வட்டு = இருவட்டு √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + வட்டு = இரண்டு வட்டு √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + கல் = முக்கல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + கல் = மூன்று கல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + சுனை = முச்சுனை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + சுனை = மூன்று சுனை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + துடி = முத்துடி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + துடி = மூன்று துடி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + பறை = முப்பறை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + பறை = மூன்று பறை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + ஞாண் = முஞ்ஞாண் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + ஞாண் = மூன்று ஞாண் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + நூல் = முந்நூல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + நூல் = மூன்று நூல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + மணி = மும்மணி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + மணி = மூன்று மணி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + யாழ் = முவ்வியாழ் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + யாழ் = மூன்றி யாழ் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + வட்டு = முவ்வட்டு √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + வட்டு = மூன்று வட்டு √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + கல் = நாற்கல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + கல் = நான்கு கல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + சுனை = நாற்சுனை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + சுனை = நான்கு சுனை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + துடி = நாற்றுடி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + துடி = நான்கு துடி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + பறை = நாற்பறை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + பறை = நான்கு பறை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + ஞாண் = நான்ஞாண் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + ஞாண் = நான்கு ஞாண் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + நூல் = நானூல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + நூல் = நான்கு நூல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + மணி = நான்மணி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + மணி = நான்கு மணி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + யாழ் = நால்யாழ் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + யாழ் = நான்கி யாழ் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + வட்டு = நால்வட்டு √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
நான்கு + வட்டு = நான்கு வட்டு √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + கல் = ஐங்கல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + கல் = ஐந்து கல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + சுனை = ஐஞ்சுனை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + சுனை = ஐந்து சுனை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + துடி = ஐந்துடி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + துடி = ஐந்து துடி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + பறை = ஐம்பறை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + பறை = ஐந்து பறை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + ஞாண் = ஐஞ்ஞாண் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + ஞாண் = ஐந்து ஞாண் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + நூல் = ஐந்நூல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + நூல் = ஐந்து நூல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + மணி = ஐம்மணி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + மணி = ஐந்து மணி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + யாழ் = ஐயாழ் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + யாழ் = ஐந்தி யாழ் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + வட்டு = ஐவட்டு √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + வட்டு = ஐந்து வட்டு √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + கல் = அறுகல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + கல் = ஆறு கல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + சுனை = அறுசுனை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + சுனை = ஆறு சுனை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + துடி = அறுதுடி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + துடி = ஆறு துடி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + பறை = அறுபறை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + பறை = ஆறு பறை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + ஞாண் = அறுஞாண் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + ஞாண் = ஆறு ஞாண் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + நூல் = அறுநூல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + நூல் = ஆறு நூல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + மணி  = அறுமணி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + மணி = ஆறு மணி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + யாழ் = அறுயாழ் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + யாழ் = ஆறி யாழ் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + வட்டு = அறுவட்டு √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + வட்டு = ஆறு வட்டு √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

‘ஏழு’ குற்றியலுகரச் சொல் இல்லாததால் , இங்கு பேசப்படவில்லை .

எட்டு + கல் = எண்கல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + கல் = எட்டுக் கல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + சுனை = எண்சுனை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + சுனை = எட்டுச் சுனை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + துடி = எண்டுடி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + துடி = எட்டுத் துடி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + பறை = எண்பறை √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + பறை = எட்டுப் பறை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + ஞாண் = எண்ஞாண் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + ஞாண் = எட்டு ஞாண் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + நூல் = எண்ணூல் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + நூல் = எட்டு நூல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + மணி  = எண்மணி √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + மணி = எட்டு மணி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + யாழ் = எண்யாழ் √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + யாழ் = எட்டியாழ் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + வட்டு = எண் வட்டு √(பகுதி திரிந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + வட்டு = எட்டு வட்டு √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

( ‘எட்டு’ , ‘எண்’ ஆனதற்கு விதி – குற்றியலு . 38)


ஒன்பது + கல் = ஒன்பது கல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + சுனை = ஒன்பது சுனை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + துடி = ஒன்பது துடி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + பறை = ஒன்பது பறை √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + ஞாண் = ஒன்பது ஞாண் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + நூல் = ஒன்பது நூல் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + மணி  = ஒன்பது மணி √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + யாழ் = ஒன்பதி யாழ் √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + வட்டு = ஒன்பது வட்டு √(பகுதி திரியவில்லை) (அல்வழிப் புணர்ச்சி)

‘இரண்டியாழ்’ ,‘ மூன்றியாழ்’ – என்றெல்லாம் வந்ததற்கு விதி : குற்றியலு . 5 (நாம் முன்பே பார்த்துள்ளோம்) .
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (156)

Post by Dr.S.Soundarapandian Fri Nov 01, 2013 10:06 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (156)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரச் சொற்களின் புணர்ச்சிகளைப் பார்த்துவருகிறோம் !

‘ஒன்று’ எனும் சொல்லின் புணர்ச்சிகளைப் பார்த்துள்ளோம் ! இங்கு மேலும் இச் சொல்லின் வேறு புணர்ச்சிகளைப் பார்ப்போம் !

‘ஒன்று’ எனும் சொல் , உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது , முதலில் ‘ஒன்று’ , ‘ஒரு’ ஆகிப் (குற்றியலு . 33) பின் , ‘ஒ’ , ‘ஓ’ ஆகிப் , பிறகு  ‘ஓர்’ ஆகும் (குற்றியலு . 73 ; இந்த நூற்பாவைப் பிறகு பார்ப்போம்)

இதன்படி –

ஓர் + அடை = ஓரடை   (அல்வழிப் புணர்ச்சி)

ஓர் + ஆடை =  ஓராடை  (அல்வழிப் புணர்ச்சி)

‘இரண்டு’ என்பது , முன்னே (குற்றியலு . 72) சொன்னது போல , ‘இரண்டு’ என ஆகி அதே நிலையுடனும் , ‘இரு’ என்ற திரிந்த நிலையுடனும் புணரும் !பிற எண்களும் இம் முறைப்படியே புணரும் !  –

இரு + அடை = இருவடை  √ (அல்வழிப் புணர்ச்சி)
இரு + ஆடை = இருவாடை √  (அல்வழிப் புணர்ச்சி)

இரண்டு + அடை = இரண்டடை √  (அல்வழிப் புணர்ச்சி)
இரண்டு + ஆடை = இரண்டாடை √  (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + அடை  = முவ்வடை  √  (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + ஆடை  = முவ்வாடை √  (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + அடை  = மூன்றடை  √  (அல்வழிப் புணர்ச்சி)
மூன்று + ஆடை  = மூன்றாடை √  (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + அடை  = நாலடை   √ (அல்வழிப் புணர்ச்சி)
நன்கு + ஆடை  = நாலாடை  √ (அல்வழிப் புணர்ச்சி)


நான்கு + அடை  = நான்கடை   (அல்வழிப் புணர்ச்சி)
நன்கு + ஆடை  = நான்காடை  (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + அடை  = ஐயடை  √  (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + ஆடை  = ஐயாடை √  (அல்வழிப் புணர்ச்சி)

ஐந்து + அடை  = ஐந்தடை  √  (அல்வழிப் புணர்ச்சி)
ஐந்து + ஆடை  = ஐந்தாடை √  (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + அடை  = அறடை  √  (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + ஆடை  = அறாடை  √ (அல்வழிப் புணர்ச்சி)

ஆறு + அடை  = ஆறடை  √  (அல்வழிப் புணர்ச்சி)
ஆறு + ஆடை  = ஆறாடை √  (அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + அடை  = எண்ணடை  √  (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + ஆடை  = எண்ணாடை √  (அல்வழிப் புணர்ச்சி)

எட்டு + அடை  = எட்டடை  √  (அல்வழிப் புணர்ச்சி)
எட்டு + ஆடை  = எட்டாடை  √ (அல்வழிப் புணர்ச்சி)

ஒன்பது + அடை  = ஒன்பதடை  √  (அல்வழிப் புணர்ச்சி)
ஒன்பது + ஆடை  = ஒன்பதாடை √  (அல்வழிப் புணர்ச்சி)

இந் நூற்பா உரையில் , இளம்பூரணர் , “யா முதல் மொழி ஓர் யாழ் என வரும் ” என்றார் !

அஃதாவது –

ஒன்று + யாழ் = ஓர் யாழ்  √ (அல்வழிப் புணர்ச்சி)
  = ஓரி யாழ்  × ( ‘ஒரு’ – குற்றியலுகரச் சொல் இல்லை என்பதால்)

மேலும் இளம்பூரணர் , “இரண்டு என்னும் எண்ணும் , மூன்று  என்னும் எண்ணும் செய்யுளகத்து ஈரசை முவசை எனவும் முதல் நீண்டு  வேறுபட முடியுமாறு கொள்க”! என்றார் !

அஃதாவது –

இரண்டு + அசை = இருவசை ×
        = இரண்டசை ×
       = ஈரசை √(அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + அசை = முவ்வசை ×
        = மூன்றசை ×
       = மூவசை √(அல்வழிப் புணர்ச்சி)

‘அவர்-கள்’ – இஃது , இரண்டசைச் சீர் ×
‘அவர்-கள்’ – இஃது , ஈரசைச் சீர் √

‘அவர்-களு- டன்’ – இது , மூன்றசைச் சீர் ×
‘அவர்-களு- டன்’ – இது , மூவசைச் சீர் √

தொடர்கிறார் இளம்பூரணர் – “முதனிலை நீளாதே நின்று உகரம் கெட்டு  ஒரடை , ஒராடை  , ஒர்யாழ் என வரும்  முடிபுங் கொள்க !”

அஃதாவது –

ஒன்று + அடை = ஓரடை √(அல்வழிப் புணர்ச்சி)
     = ஒரடை √(அல்வழிப் புணர்ச்சி)

ஒன்று + ஆடை = ஓராடை √(அல்வழிப் புணர்ச்சி)
     = ஒராடை √(அல்வழிப் புணர்ச்சி)

ஒன்று + யாழ் = ஓர்யாழ் √(அல்வழிப் புணர்ச்சி)
     = ஒர்யாழ் √(அல்வழிப் புணர்ச்சி)

மேற் புணர்ச்சிகளில் சில நம் காலத்திற்குத் தேவையில்லாமல் இருக்கலாம் ; ஆனால் மொழி ஆய்விற்கு , குறிப்பாக வரலாற்றிலக்கணத்திற்குத்  (Historical grammar)  தொல்காப்பியர்  மற்றும் இளம்பூரணர் காட்டும் புணர்ச்சி இலக்கணங்கள் மிக மிகத் தேவை !

 ‘இந்த  நூற்பாவைப் பிறகு பார்ப்போம்’ என்றோமல்லவா ? அதனை இப்போது பார்ப்போம் ! :-

 “அதனிலை  யுயிர்க்கும்  யாவரு  காலையும்
  முதனிலை  யொகர மோவா கும்மே
 ரகரத்  துகரந்  துவரக்  கெடுமே”  (குற்றியலு . 73 )

‘அதனிலை’ -  ‘ஒன்று’ முதல் ‘ஒன்பது’ வரை உள்ள சொற்கள் நிலைமொழியாக நிற்கும்போது ,

‘யாவரு காலையும்’ – முன் நூற்பாவில் (குற்றியலு . 72) சொல்லப்பட்ட க , ச , த , ப , ஞ  , ந , ம , ய , வ  எழுத்துகளைப் போல  ‘யா’ என்ற எழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது ,

‘முதனிலை ஒகரம் ஓவாகும்மே’ -  ‘ஒரு’ என்பதன்  ‘ஒ’  , ‘ஓ’ ஆகி , ‘ஓரு’ ஆகும் !

‘ஒகரத்து உகரம் துவரக் கெடுமே’ – ‘ஒரு’ , ‘ஓர்’ ஆகும் !

இதற்கான எடுத்துக்காட்டுகளையும் , அவற்றைத் தொடர்ந்த இளம்பூரணரின் கூடுதல் இலக்கணங்களையும்தான்  மேலே பர்த்தோம் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (157)

Post by Dr.S.Soundarapandian Sat Nov 02, 2013 5:22 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (157)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

தமிழகக் கல்வெட்டுகளிலும் , கணக்கு ஓலைச் சுவடிகளிலும்
, ‘மா’ என்ற அளவுப் பெயர் அடிக்கடி வரும் !

ஆகவே இதன் புணர்ச்சி பற்றிக் கூறத் தொல்காப்பியருக்கு ஒரு தேவை ஏற்பட்ட து ! இது ,தொல்கப்பியருக்கு முன்பே தமிழர்கள் ‘மா’ என்ற அளவைக் கைகொண்டார்கள் என்ற வரலாற்று உண்மையை நமக்குத் தெரிவிப்பது ஆகும் !

‘மா’வின் புணர்ச்சி பற்றிய தொல்காப்பியர் நூற்பா ! :-

“இரண்டுமுத  லொன்பா னிறுதி  முன்னர்
வழங்கியன்  மாவென் கிளவி  தோன்றின்
மகர  வளபொடு  நிகரலு  முரித்தே ”  (குற்றியலு . 74)

‘இரண்டு முதல்’  -  ‘இரண்டு’ என்னும்  எண்ணுப் பெயர் முதலாக ,

‘ஒன்பான் இறுதி முன்னர்’ -  ‘ஒன்பது’  எனும் சொல்வரை உள்ள சொற்களின் முன்பாக ,

‘வழங்கியன் மா என் கிளவி தோன்றின்’ -  குதிரை , மரம் முதலியவற்றைக் குறிக்கும்  ‘மா’ என்ற சொல்லை விட்டுவிட்டு , மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் ‘மா’ எனும் சொல் வந்து புணர்ந்தால் ,

‘மகரம் அளபொடு நிகரலும் உரித்தே’ -  குற்றியலு . 71இல்  ‘மண்டை’என்ற சொல்லோடு  ‘இரண்டு’ புணர்ந்தபோது  எப்படி  ‘இரண்டு’ , எனவும் ‘இரு’ எனவும் பகுதிச் சொல் ஆனதோ அதுபோல ஆகும் !

அஃதாவது –

இரண்டு + மா = இரண்டு மா √ (அல்வழிப் புணர்ச்சி)  
 = இரு மா √ (அல்வழிப் புணர்ச்சி)

மூன்று + மா = மூன்று மா √ (அல்வழிப் புணர்ச்சி)  
 = மும் மா √ (அல்வழிப் புணர்ச்சி)

நான்கு + மா = நான்குமா √ (அல்வழிப் புணர்ச்சி)  
 = நான் மா √ (அல்வழிப் புணர்ச்சி)  

ஐந்து + மா = ஐந்து மா √ (அல்வழிப் புணர்ச்சி)  
 = ஐம் மா √ (அல்வழிப் புணர்ச்சி)  

ஆறு + மா = ஆறு மா √ (அல்வழிப் புணர்ச்சி)  
 = அறு மா √ (அல்வழிப் புணர்ச்சி)  

ஏழு + மா = ஏழு மா √ (அல்வழிப் புணர்ச்சி)  
 = எழு மா √ (அல்வழிப் புணர்ச்சி)  

எட்டு + மா = எட்டு மா √ (அல்வழிப் புணர்ச்சி)  
 = எண் மா √ (அல்வழிப் புணர்ச்சி)  

ஒன்பது + மா = ஒன்பது மா √ (அல்வழிப் புணர்ச்சி)  
 = ஒன்பதின் மா √ (அல்வழிப் புணர்ச்சி)

மேல் நூற்பா ‘இரண்டு’ என்றுதான் தொடங்குகிறது ! ஆகவே , ‘ஒன்று’க்கு  இவ்விதி பொருந்தாது என ஆகிறது !

இதனை உணர்ந்துகொண்ட இளம்பூரணர் , “ஒன்றற்கு  ஒருமா என்னும் முடிபேயன்றி  ஒன்றுமா என்னும்  முடிபு  இல்லையாயிற்று” என்றர் !

அஃதாவது –

ஒன்று + மா = ஒன்று மா ×
          =  ஒரு மா √  (அல்வழிப் புணர்ச்சி)

மேலே ‘ஏழு’ விட்டுப் போனதைக் கவனியுங்கள் !

இதன் புணர்ச்சியை நச்சினார்க்கினியர் தருகிறார் ! :-

ஏழு + மா = ஏழ் மா ×
        = எழு மா √ (அல்வழிப் புணர்ச்சி)
      = ஏழு மா √ (அல்வழிப் புணர்ச்சி)

‘எழுமா’ப் புணர்ச்சிக்கு நச்சினார்க்கினியர் குற்றியலு . 94ஐக் காட்டுகிறார் என்பது அறியத்தக்கது !

மேல் ‘மா’ என்பது முகத்தல் அளவை , நிறுத்தல் அளவை , பரப்பு அளவை ஆகிய மூன்றிலும் வரக்கூடியவையே என இளம்பூரணர் , நசினார்க்கினியர் உரைகள் காட்டுகின்றன !

இளம்பூரணர்
, “அங்கே எங்கே பார்க்கிறீகள் ?  இங்கே இலக்கண வகுப்புக்கு வாருங்கள்” எனக் கூப்பிட்டு ஓர் இலக்கணம் கூறுகிறார் !
அதைக் கேட்போம் ! – “ மிக்க எண்ணோடு குறைந்த எண் வருங்கால் உம்மைத் தொகையாகவும் , குறைந்த எண்ணோடு  மிக்கது வரிற்  பண்புத் தொகையாகவும் முடித்தார் என்க ”!

அஃதாவது –

‘ நூற்றுப் பத்து மா’ = நூறு மாவும் பத்து மாவும் -  உம்மைத் தொகை (Conjunctival compound) !

‘இருநூறு மா’ = இரண்டாகிய நூறு மா – பண்புத் தொகை (Qualitative compound) !

கணக்கு நேர் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (158)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 03, 2013 11:02 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (158)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் நிற்கிறோம் !

‘ல்’ , ‘ன்’ ஆகிய ஈறுகளைக் கொண்ட சொற்களின் முன் ‘உம்’ , ‘கெழு’ ஆகிய சாரியைகள் புணர்வதைப் பேசுகிறார் தொல்காப்பியர் !

இது புள்ளிமயங்கியலில் வரவேண்டியதோ ? – எண்ணத் தோன்றுகிறது !

நச்சினார்க்கினியர் , “இது புள்ளி மயங்கியலுள் ஒழிந்துநின்ற செய்யுள் முடிபு கூறுகின்றது !” எனச் சரியாகத்தான் மதிப்பிட்டுள்ளார் !

ஆனால் ‘சூத்திரம் இடம் மாறி வந்துள்ளது’ என அவர் குறிப்பிடவில்லை !

குற்றியலுகரப் புணர்ச்சிகளைத் தெளிவாக்கச்  சில முற்றியலுகரங்களைக் கொண்ட  புணர்ச்சிகளைத் தொல்காப்பியர் காட்ட விரும்பினார் போலும் !

இதோ அந் நூற்பா ! :-

“லனவென  வரூஉம் புள்ளி யிறுதிமுன்
உம்முங்  கெழுவு  முளப்படப்  பிறவும்
அன்ன  மரபின்  மொழியிடைத்  தோன்றிச்
செய்யுட்  டொடர்வயின்  மெய்பெற  நிலையும்
வேற்றுமை  குறித்த  பொருள்வயி  னான”     (குற்றியலு . 75)  

இதற்கு இளம்பூரணரைப் பின்பற்றி வருமாறு உரை காணலாம் ! : -

‘ ல  ன    என  வரூஉம்  புள்ளி  இறுதி முன்’ -  ‘ல்’ , ‘ன்’  ஆகியவற்றை ஈறுகளாகக் கொண்ட  சொற்கள் முன் ,

‘உம்மும்  கெழுவும்  உளப்படப் பிறவும்’  -    ‘உம்’  , ‘கெழு’  ஆகிய  சாரியைகளும் , இவைபோன்ற சாரியைகளும் ,

‘அன்ன மரபின்  மொழியிடைத் தோன்றி’ -  ‘ல்’ , ‘ன்’  ஈறுகளைக் கொண்ட  சொற்களின் இடையே தோன்றி ,

‘செய்யுள் தொடர்வயின் மெய்பெற நிலையும்’ – பாடற் சீர்களில்  ‘ல்’ , ‘ன்’ மாறாது நிற்கும் !

‘வேற்றுமை குறித்த பொருள்வயி னான ’ -  வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் !

இதற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை , நச்சினார்க்கினியர் விளக்கத்தோடு ஆராய்ந்து வருமாறு  தரலாம் ! :-

 ‘வானவரி வில்லுந் திங்களும்’ -  வானவரி வில்லிடைத் திங்களும் = வான வில்லின்கண் உள்ள சந்திரனும் .
வில்லுந் திங்களும் – வேற்றுமைப் புணர்ச்சி .

வான வரி – வான வில் (Rainbow)

உம் -  ‘இடை’ என்ற 7ஆம் வேற்றுமைச் சொல்லுருபுப் பொருளில் வந்ததால் , ‘உம்’மை  இடைச்சொல் எனாது , சாரியை எனப்பட்டது !

சாரியைக்குப் பொருண்மை  (Semantic value) உண்டு என்ற மொழியியல் உண்மை இங்கு பெறப்படுகிறது !

‘கல் கெழு கானவர்’ -  கல்லைக் கெழுமிய கானவர் = கல்லை உடைய கானவர் .

கெழு -  ‘உடைய’ என்ற 6ஆம் வேற்றுமைச் சொல்லுருப்பொருளில் நிற்கும் சாரியை !

கல்கெழு கானவர் – வேற்றுமைப் புணர்ச்சி .

‘கெழு’ என்றே ஓர் உரிச்சொல் உள்ளதே ?  ஆதலால் இதனை ஏன் உரிச்சொல் என்று சொல்லக்கூடாது ?

நல்ல வினா !

‘கெழு’ என ஓர் உரிச்சொல்  (உரியியல் . 5) உள்ளது ! அதற்குப் பொருள் ‘நிறன்’ (நிறம்)  ! அந்தப் பொருள் இந்த எடுத்துக்காட்டுக்குப் பொருந்தாதே ! ஆகவே இங்கே ‘கெழு’ உரிச்சொல்லாக நிற்கவில்லை ; சாரியையாகவே நிற்கிறது !

‘கிழவனும் போன்ம்’ – கிழவனைப் போலும் .

‘உம்’ – இச் சாரியைக்கு ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமைப் பொருள் உள்ளது இங்கு !

‘கிழவனும் போன்ம்’  என்பதிலுள்ள உம்மை , உயர்வு சிறப்புப் பொருளில் இங்கு வரவில்லை என நச்சினார்க்கினியர் விளக்குகிறார் ! -  “இவ்வும்மை சிறப்பன்று” .

ல் , ன் -  ஆகிய ஈறுகளைக் கொண்ட சொற்களோடுதான் ‘கெழு’ என்ற சாரியை வருமா?

இதற்கு இளம்பூரணர் விடை கூறுகிறார்  - “பிற ஈற்றுள்ளும் இச் சாரியை பெற்று முடிவன கொள்க ; துறைகெழு மாந்தை , வளங்கெழு திருநகர் என வரும் ! ” .

‘துறை கெழு மாந்தை’ – நீர்த் துறைகளை உடைய மாந்தை நகர் . (துறை – என்ற பகுதியின் ஈறு திரியவில்லை)

‘வளங்கெழு  திருநகர் ’ -  வளம் உடைய திருநகர் .

(வளம் – என்ற பகுதியின் ‘ம்’ ஈறு திரிந்து ‘ங்’ ஆனது) .

மேலும் சில இலக்கண நுட்பங்களைக் கூறுகிறார் இளம்பூரணர் ! அவற்றை வருமாறு விளக்கலாம் !: -

பூ + கெழு + ஊரன் =  பூக்கே ழூரன் (வேற்றுமைப் புணர்ச்சி)

(க் – சந்தி ; ‘கெ’ , ‘கே  ஆனது  எகர நீட்சி ;  ‘ழு’வின் ‘உ’ கெட்டு ,  ‘ஊ’ சேர , ‘ழூ’ ஆனது)

வளம் + கெழு + திருநகர் =  வளங்கேழ் திருநகர்  (வேற்றுமைப் புனர்ச்சி) .

( ‘ம்’ , ‘ங்’ ஆகத் திரிந்தது ; ‘கெழு’விலுள்ள ‘கெ’ நீண்டது ; ‘கெழு’வின் ஈற்றுகரம் கெட்டது) .

இன்னொரு நுட்பமும் இளம்பூரணர் கூறுகிறார் – “இச் சாரியைப் பேற்றின்கண் ஈற்று வல்லெழுத்து வீழ்க்க ! ”

அஃதாவது –
வளங்கேழ் திருநகர் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
வளங்கேழ்த் திருநகர் ×  

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (159)

Post by Dr.S.Soundarapandian Wed Nov 06, 2013 8:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (159)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணர்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம் !

சில குறைச் சொற்களும்  (Defective words) , சில பண்புத் தொகைகளும் (Qualitative compounds) , சில வினைத்தொகைகளும் (Verb compounds) , தம் முன் தாம் வரும் சில எண்ணுப் பெயர்களும் மருவி நடப்பதால் , அவற்றை அப்படியே கொள்ளவேண்டும் !அவற்றின் புணர்ச்சி இலக்கணம் நமக்குத் தெளிவாகாது ! – சொல்பவர் தொல்காப்பியர் !

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு நல்கலாம் ! :-

குறைச் சொற்கள்
---------------------
(1)  ‘விண் விணைத்தது’ -   பொருள் விளக்கமாக இல்லை !

விண் – குறிப்புச் சொல் ; குறைச்சொல் .
  ‘கால் விண்விண் என்று தெறிக்கிறது’ , என்கிறோமல்லவா? அதே ‘விண்’தான் ! வலியை ஒருவகையில் குறிப்பால் தெரிவிக்கிறது அல்லவா ‘விண்’ ,அதனால்தான் அதனைக்  ‘குறிப்புச் சொல் ’ என்கிறோம் ! வேறு ஒன்றுமில்லை !

‘விண்ணென விசைத்தது’ = விண்ணென இசைத்தது – பொருள் தெளிவாகிறது !
‘விண்ணென’ என்பது , குறையாக ‘விண்’ என்று வந்ததால் , இது குறைச்சொல் !
எனவே –
    ‘விண்’ – மரூஉ !


  (2)  ‘ கார் கறுத்தது’ – பொருள் விளக்கமாக இல்லை !

கார் – தனியாக நிற்கும்போது ,பண்புச் சொல் ; தொடரில் குறைச் சொல் !
‘கார் எனக் கறுத்தது  ’- பொருள் தெளிவாகிறது !
எனவே –
    ‘கார்  ’ – மரூஉ !


(3) ‘ஒல் ஒலித்தது’ – பொருள் தெளிவில்லை !
ஒல் – இசையைக் குறிக்கும் , ‘இசைக்குறிப்புச் சொல்’ !
‘ஒல்லென ஒலித்தது’ – பொருளில் தெளிவு இருக்கிறது !
‘ஒல்லென ’ – என்று வரவேண்டியது ‘ஒல்’ என வந்ததால் , இது குறைச்சொல் !
எனவே –
   ‘ஒல்’ – மரூஉ !



பண்புத் தொகை  ( ‘பண்பு தொகு மொழி’)
---------------------
(4)  ‘கருஞ் சான்றான்’ – தெளிவான பண்புத் தொகையாக இல்லை !

ஏன் ?
இளம்பூரணர் கருத்துப்படி , ‘கரும்’ என்ற பண்புப் பெயர் , பாலைத் (ஆண்பாலை) தெரிவிக்கிறது ;ஆனால் இலக்கணப்படிப்  ‘பண்பு’ , பாலைத் தெரிவிக்காது !  
எனவே –
   ‘கருஞ் சான்றான்’ – மரூஉ !

வினைத் தொகை  ( ‘தொழில் தொகு மொழி’)
---------------------

(5)  ‘ கொல் யானை’ – பொருளில் தெளிவு இல்லை !

‘கொல்’ என்பது வினையைக்  (தொழிலை)காட்டுகிறது ! எனவே , வினை மறைந்து வருகிறது எனக் கூறமுடியாது ! ‘கொன்ற யானை’ என்று விரித்தால் , அதில் இறந்த காலம் சுட்டப்படுகிறது !  கொல்லும் யானையா ? கொன்ற யானையா? – தெளிவில்லை !

எனவே –
‘கொல்யானை’ – மரூஉ !

எண்ணுப் பெயர் தம் முன் தாம் வரல்
------------------------------------------------
(6)  ‘ஓரொன்று’ – பொருளில்  தெளிவில்லை !
‘ஓர் வீடு’ என்பதுபோல நின்றால் , ‘ஓர் ஒன்று’ என்பது ‘ஒன்று’ என்பதை மட்டும்தானே  குறிக்கும் ? எனவேதான் , தெளிவில்லை !
ஆனால் தொடரில்  , ‘ஓரொன்றாகக் கொடு’ என்றால் , பொருள் தெளிவாகிறது !
எனவே –
‘ஓரொன்று’ – தனியாக நிற்கும்போது , மரூஉ !

பிற
---------------
(7)  ‘முடியாதன உண்டான்’ – தெளிவில்லை !

‘முடியாதனவற்றை உண்டான் ’ – தெளிவாக இருக்கிறது !
‘முடியாதனவற்றை ’ ,  என்பதற்குப் பதிலாக ‘‘முடியாதன ’  என்று உள்ளதால் , இது குறைச் சொல் !
எனவே –
‘முடியாதன’ – மரூஉ !

(8) ‘கரியன்’ – பொருள் தெளிவில்லை !
ஏன் ?
‘கருமை + அன் ’ எனில் ,  ‘கருமையன் ’ என்றுதானே வரவேண்டும் ?

எனவே –
‘கரியன்’ – மரூஉ !

(9)   ‘கொள்ளெனக் கொண்டான் ’  - தெளிவில்லை !

‘கொள் என்று கொடுத்தான்’ – தெளிவு உள்ளது !
எனவே –
‘கொள்ளென’ – மரூஉ !

(10) ‘உண்டான்’ – மரூஉ !
எப்படி ?

‘உண் + ஆன் = உண்ணான் ’ என்றுதானே வரவேண்டும் ?
இடையிலே ‘ட்’ எப்படி வந்தது ?

“எப்படி வந்தது என்றால்  , புணர்ச்சிகளில்  பல நுட்பங்கள் உள்ளன ! நமக்கு மேலோட்டமாகத் தெரிந்த புணர்ச்சி இலக்கணத்தில் அமையவில்லையே என்று தலையைச் சொறிந்து கொண்டிருக்காதீர்கள் ! புணர்ச்சியி எழுத்துகள் மருவி வரும்போது – தழுவி வரும்போது இப்படியெல்லாம் வரவே செய்யும் ! அவற்றை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும் ! ” – இதுவே தொல்காப்பியர் கூறவந்தது !

இதோ தொல்காப்பியர் நூற்பா ! நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள் !  

“ உயிரும் புள்ளியு  மிறுதி யாகிக்
குறிப்பினும் பண்பினு மிசையினுந் தோன்றி
நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும்
உயர்திணை யஃறிணை  யாயிரு  மருங்கின்
ஐம்பா லறியும்  பண்புதொகு மொழியும்
செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின்
மெய்யொருங் கியலுந்  தொழிறொகு  மொழியும்
தம்மியல் கிளப்பிற்  றம்முற்  றாம்வரூஉம்
எண்ணின் றொகுதி யுளப்படப் பிறவும்
அன்னவை யெல்லா மருவின் பாத்திய
புணரிய  னிலையிடை யுணரத் தோன்றா ” (குற்றியலு . 76)

இளம்பூரணர் உரையைப் பின்பற்றி இதனை வருமாறு விளக்கலாம் ! –

‘உயிரும் புள்ளியும் இறுதியாகி’ – உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் ஈறாகக் கொண்ட  சொற்கள் ,

‘ குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி’ – குறிப்பாலும் , பண்பாலும் , இசையாலும் பொருள் உணர்த்திநிற்கும் ,

‘நெறிப்பட வாராக் குறைச் சொற்கிளவியும்’ – விதிமுறைக்குக் கட்டுப்படாத குறைச்சொற்கள் ,

‘செய்யும் , செய்த என்னும் கிளவியின் மெய்யொருங்கியலும் தொழில்தொகு மொழியும் ’ -  ‘செய்யும்’ , ‘செய்த’ என்ற பெயரெச்சச் சொற்களால் நடக்கும் , வினை மறைந்த வினைத்தொகைச் சொற்கள் ,

‘தம் இயல் கிளப்பின்’ – ஆகியவற்றின் இயல்புகளும் ,

‘தம் முன் தாம் வரும்  எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும்’ – ஓர் எண்ணின் முன் இன்னோர் எண்ணைப் புணர்த்துப் பெற்ற எண்களும் ,

‘மருவின் பாத்திய’ – வழக்கால் மருவி நடந்துள்ளன எனக் கொள்ளவேண்டும் !

‘புணரியல் நிலையிடை உணரத் தோன்றா’ – புணர்ச்சி இலக்கணப்படி அவற்றை நோக்கினால் , விளங்காது !    

இதற்கான எடுத்துக்காட்டுகளை மேலே பார்த்துவிட்டோம் !

மேலே , ‘கார் என’ என்று வரவேண்டியது , தொடரில் ‘கார்’ என்று மட்டும் வந்து பொருள் உணர்த்தியதால் அதைக்  ‘குறைச்சொல் ’ என்கிறோம் எனக் கண்டோமல்லவா? இக் குறைச்சொல்லைத்தான் இளம்பூரணர் ‘உரிச்சொல் ’என்று குறிக்கிறார் !  ‘உரிச்சொற்கள், வேர்ச்சொற்களே ’ என்ற கருத்து தவறானது என்பது இதனால் தெளிவாகிறதல்லவா? வேர்தான் உரி எனில் , ‘கார்’ எதனுடைய வேர் என்ற கேள்வி எழும் !

மேலும் , ‘கார்’ என்ற சொல் , ஒரு பெயர்ச்சொல்தான்  (Noun)! பெயர்ச்சொல் எப்படி உரிச்சொல் ஆகும் ?
வினா எழுகிறதல்லவா?
‘கார்’ தனியாக நின்றால் , அது பெயர்ச்சொல் ! ‘காரென’ என்று வரவேண்டிய இடத்தில் ‘கார்’ என்று மட்டும் நின்றால் , அப்போதுதான் அது ‘குறைச் சொல்’ அல்லது ‘உரிச்சொல்’ என்று அழைக்கப்படும் !

புணரியல் , உயிர் மயங்கியல் , புள்ளி மயங்கியல் என்று எழுத்ததிகாரத்தில் பல இடங்களில் சொற்புணர்ச்சிகளைக் கூறிய பின் , சொல்லதிகாரத்திற்குப் போகப் போகும் நிலையில் தொல்காப்பியர் இதனைக் கூறுகிறார் ! அதனால் இச் சூத்திரத்தைப்  ‘புறனடைச் சூத்திரம் ’ என்பர் !
 

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (160)

Post by Dr.S.Soundarapandian Sat Nov 09, 2013 12:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (160)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலியின் கடைசி நூற்பா ! : -

“கிளந்த வல்ல செய்யுளுட் டிரிநவும்
வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்
விளம்பிய வியற்கையின் வேறுபடத்   தோன்றின்
வழங்கியன்  மருங்கி  னுணர்ந்தன  ரொழுக்கல்
நன்மதி  நாட்டத்  தென்மனார்  புலவர்”  (குற்றியலு . 77)

‘கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்’ -  கூறிய புணர்ச்சி விதிகளுக்கு மாறாகச் செய்யுளில் வருவனவும் ,

‘வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்’ – பேச்சு வழக்கில் மருவி    வருவனவும் ,

‘விளம்பிய  இயற்கையின் வேறுபடத் தோன்றின்’ – நாம் பார்த்த புணர்ச்சி விதிகளுக்கு முரணாகத் தென்பட்டால் ,
‘நல்மதி நாட்டத்து வழக்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்’ – நல் அறிவு ஆராய்ச்சியால்  ஆய்ந்து , எப்படிக் கொள்ளலாம் என்று தெளிந்து அதன்படி கொள்க என்பர் புலவர் !  

இதற்கு இளம்பூரணர் தந்த  எடுத்துக்காட்டுகளை வருமாறு பிரித்தும் ஒப்பிட்டும்  விளக்கலாம் ! :-

நறவு + கண்ணி = நறவுக் கண்ணி  √  (வேற்றுமைப் புணர்ச்சி)
நறவு + கண்ணி = நறவங் கண்ணி  √  (அம்  சாரியை பெற்று    வேறுபட வந்தது )(வேற்றுமைப் புணர்ச்சி)
(நறவு – தேன்; நறவுக் கண்ணி  , நறவங் கண்ணி  - தேனுள்ள பூக்கண்ணி)

கள்ளி  + கோடு  = கள்ளிக் கோடு √  (வேற்றுமைப் புணர்ச்சி)
கள்ளி  + கோடு  = கள்ளியங் கோடு √   (அம்  சாரியை பெற்று    வேறுபட வந்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கள்ளி – கள்ளிச் செடி; கள்ளிக் கோடு, கள்ளியங் கோடு – கள்ளிச் செடியின் கிளை)

புன்னை  + கானல்  = புன்னைக் கானல் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
புன்னை  + கானல்  = புன்னையங் கானல் √ (அம் – சாரியை பெற்று    வேறுபட வந்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)
( கானால் – கடற்கரைச் சோலை ; புன்னைக் கானல் , புன்னையங் கானல் – கடற்கரைப் புன்னைச் சோலை )

பொன்  + திகிரி  = பொற் றிகிரி  √  (வேற்றுமைப் புணர்ச்சி)
பொன்  + திகிரி  = பொன்னந் திகிரி  √  (அம்  சாரியை பெற்று    வேறுபட வந்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)
( திகிரி – சக்கரம் ; பொற் றிகிரி , பொன்னந் திகிரி – பொன்னாலான சக்கரம் )

ஆரம்  + கண்ணி  = ஆரக் கண்ணி  √  (வேற்றுமைப் புணர்ச்சி)
ஆரம்  + கண்ணி  = ஆரங் கண்ணி  √   (அம்  சாரியை பெற்று    வேறுபட வந்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)
( ஆரம் – ஆர் மலர் ; ஆரக் கண்ணி , ஆரங் கண்ணி – ஆர் மலரால் ஆன கண்ணி )

கானல்  + பெருந்துறை  = கானற் பெருந்துறை  √  (வேற்றுமைப் புணர்ச்சி)
கானல்  + பெருந்துறை  = கானலம்  பெருந்துறை  √   (அம்  சாரியை பெற்று    வேறுபட வந்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கானல்  - கடலை ஒட்டிய கழிமுகம் ; துறை – நீர்த் துறை ; கானற் பெருந்துறை , கானலம்  பெருந்துறை – கழிமுகத் துறைகள் )

வெதிர்  + கால்  = வெதிர்க் கால்  √  (வேற்றுமைப் புணர்ச்சி)
வெதிர்  + கால்  = வெதிரத்துக்  கால்  √   (அத்துச் சாரியை பெற்று    வேறுபட வந்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வெதிர்  - மூங்கில் ; கால் – தண்டு ; வெதிர்க் கால், வெதிரத்துக்  கால் – மூங்கில் தண்டு)

முளா  + மா  = முளா மா  √  (அல்வழிப் புணர்ச்சி) ( ‘ஆமா ’ என வருதல் காண்க ; ஆமா – ஆவாகிய விலங்கு = பசு)
முளா  + மா  = முளவு மா  √   (உகரச்  சாரியை பெற்று    வேறுபட வந்தது ) (அல்வழிப் புணர்ச்சி)
(முளா  - முள்ளம் பன்றி ; முளா மா, முளவு மா – முள்ளம் பன்றியாகிய விலங்கு)

அகம்  + செவி  = அகச் செவி  √  (வேற்றுமைப் புணர்ச்சி)
அகம்  + செவி  = அஞ்செவி  √   (மரூஉ ) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அகம் – உள்ளே ; அகச் செவி ,  அஞ்செவி – உட் செவி)

அவ் + இடை = அவ்விடை  √ (அல்வழிப் புணர்ச்சி)
அவ் + இடை = ஆயிடை  √  (மரூஉ) (அல்வழிப் புணர்ச்சி)
(இடை – 7ஆம் வேற்றுமைச்  சொல்லுருபு)

தட + தோள் = தடந் தோள்  √ (அல்வழிப் புணர்ச்சி)
தட + தோள் = தடவுத் தோள்  √  (உகரச் சாரியை பெற்று வேறுபட வந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
(தட – உரிச்சொல் ; ‘அகலமான’ ; தடந் தோள் , தடவுத் தோள் – அகலமான தோள்)


தட + திரை = தடத்  திரை  √ (அல்வழிப் புணர்ச்சி)
தட + திரை = தடவுத் திரை  √  (உகரச் சாரியை பெற்று வேறுபட வந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
(தட – உரிச்சொல் ; ‘அகலமான’ ; தடத்  திரை , தடவுத் திரை – அகலமான திரை)

அரு மருந்து + அன்னான் = அருமருந் தன்னான்  √ (வேற்றுமைப் புணர்ச்சி)
அரு மருந்து + அன்னான் = அருமந்தான்  √  (மரூஉ)(வேற்றுமைப் புணர்ச்சி)
(அருமருந் தன்னான் , அருமந்தான் – அரிய மருந்து போன்றவன் )

சோழ + நாடு = சோழ நாடு  (வேற்றுமைப் புணர்ச்சி)
சோழ + நாடு = சோணாடு  (மரூஉ) (வேற்றுமைப் புணர்ச்சி)

மலை + நாடு = மலை நாடு  (வேற்றுமைப் புணர்ச்சி)
மலை + நாடு = மலாடு  (மரூஉ) (வேற்றுமைப் புணர்ச்சி)

பொது + இல் = பொதுவில்  (அல்வழிப் புணர்ச்சி)
பொது + இல் = பொதியில்  (மரூஉ) (அல்வழிப் புணர்ச்சி)
(பொதுவில் , பொதியில் – பொதுவாகிய இல்)

சாரியை முதலியன பெற்று ,ஏதாவது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கண  முறைப்படி வந்தவற்றை ‘வேறுபட வந்தது’ எனவும் , இலக்கணத்திலிருந்து மிக விலகிப் புணர்ந்தவற்றை  ‘மரூஉ’ எனவும் மேலே காட்டியுள்ளேன் !

இத்துடன் குற்றியலுகரப் புணரியல் முடிகிறது !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (161)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 10, 2013 9:08 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (161)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் பல புணர்ச்சி வித்தைகளைப் பார்த்தோம் !

இப்போது , ‘புணரியல்’ என்ற இயலைப் பார்க்கலாம் !

அஃதாவது ,  எழுத்ததிகாரத்தில்  பின்னோக்கிச் செல்கிறோம் !

எந்த இடத்தில் தொட்டாலும் நமக்கு இனிக்கவே செய்யும்  தமிழ் இலக்கணம் !

புணரியலில் , முதல் 7 நூற்பாக்களை நாம் முன்பே பார்த்துவிட்டோம் !

எனவே , நூற்பா எட்டிலிருந்து தொடங்குவோம் !

நூற்பா எண்கள் யாவும் , இளம்பூரணர் உரைப் பதிப்பில் தரப்பட்டவையாம் !
இப்போது நூற்பா ! :-

“நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும்
 அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய”   (புணரி . 8)

‘நிறுத்த சொல்’ – என்றதும் , ‘சொல்லைக் கூட நிறுத்துத் தருகிறார்களா ?’ எனக் கேட்காதீர்கள் !

‘நிறுத்த சொல்’ – நிலை மொழி .

‘குறித்துவரு கிளவி’ – வந்து புணரும் சொல் .

 இந்த இரண்டும் அடைகளோடு வந்தாலும் , புணர்ச்சி இலக்கணப்படிப் புணர்வதற்கு ஏற்றவையே என்பது நூற்பாக் கருத்து !

1 . பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத் தொன்று .
பதினாயிரம் -  ‘பதின்’ , அடைச் சொல்! நிலை மொழி !

இது , நிலைமொழி அடையொடு வருவதற்கு உதாரணம் !

2 . அயிரம் + ஒருபஃது = ஆயிரத் தொருபஃது .
ஒருபஃது – ‘ஒரு’ என்ற அடை பெற்ற வருமொழி !
இது , வருமொழி அடையொடு வருவதற்கு எடுத்துக்காட்டு !

3 . பதினாயிரம் + ஒருபஃது =  பதினாயிரத் தொருபஃது .
இது , நிலை மொழியும் , வருமொழியும் அடை பெற்று வந்தற்கு  உதாரணம் !

இந்த நூற்பாவின் தேவை என்ன ?

‘பதினாயிரம் ’  என்ற இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் , ஏற்கனவே ஒரு புணர்ச்சி உள்ளது ! அதனோடு , பிற சொல்லை அது ஏற்குமா? – ஐயம் எழுதல் இயல்பு !

எனவே இந்த ஐயத்தை நீக்குவதற்கே  நூற்பா !

இந் நூற்பாவிற்கு இளம்பூரணர் எழுதிய உரை நுணுக்கத்தால் , நாம் சில இலக்கண நுட்பங்களை அறிய முடிகிறது !

அஃதாவது –

‘அடை’ என்பது உவமத் தொகை அல்லது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாக இருக்கவேண்டும் ; வேறு தொகைகளாக இருக்கக் கூடாது !

மேல் எடுத்துக்காட்டுகளுக்கு இந்த இலக்கணம் எவ்வாறு பொருந்துகிறது? பார்ப்போம் ! : -

‘பதினாயிரத் தொன்று’ – இதில் ,
‘பதினாயிரம்’ – ‘பத்தாகிய ஆயிரம்’ என விரிவதால் , இது இருபெயரொட்டுப் பண்புத் தொகை !
‘பதினாயிரத் தொன்று’ – ‘பதினாயிரமும் ஒன்றும்’ என விரிவதால் , இது உம்மைத் தொகை !

ஆனால் ,  
‘கருங்குதிரை + ஓடிற்று  =  கருங்குதிரை ஓடிற்று ’ எனப் புணர்ந்தால் , இங்கே , ‘கருங்குதிரை’யை ‘அடையொடு தோன்றிய சொல்’ என்று சொல்லக்கூடாது !  ஏனெனில் , ‘கருங்குதிரை’ , பண்புத் தொகை ; ‘ஒரு சொல்’  (Single entity)!

செங்காந்தள் + வாங்கினான் = செங்காந்தள் வாங்கினான் . இதில் , ‘செங்காந்தள்’ அடையொடு தோன்றிய சொல் அல்ல ! ஏனெனில் , ‘செங்காந்தள்’ , பண்புத் தொகை ! இருபெயரொட்டுப் பண்புத்தொகை அல்ல !

வெள்ளைத் தொப்பி + வந்தாள் = வெள்ளைத் தொப்பி வந்தாள். இதில் ,  ‘வெள்ளைத் தொப்பி’ , அடையொடு தோன்றிய நிலைமொழி அல்ல ! ஏனெனில் , ‘வெள்ளைத் தொப்பி’ , அன்மொழித் தொகை ! ‘ஒரு சொல்’ !


வருபுனல் + குளிர்ந்தது = வருபுனல் குளிர்ந்தது .

இதில் , ‘வருபுனல்’ என்பதிலுள்ள ‘வரு’வை , அடை எனக் கூற முடியது ! ஏனெனில் , ‘வருபுனல்’ , வினைத் தொகை ! ‘ஒரு சொல்’ !

பால்வெள்ளை + தாள் = பால்வெள்ளைத் தாள் .

இதில்,  ‘பால்’ ,அடை அல்ல !  ‘பால் வெள்ளை’ என்பது , ‘பால் போன்ற வெள்ளை’ என விரிவதால் , உவமத் தொகை ! ‘ஒரு சொல்’ !

உண்ட சாத்தன் + வந்தான் =  உண்ட சாத்தன் வந்தான்   .
இதில் , ‘உண்ட’ என்பது , சாத்தனுக்கு அடை அல்ல !  ‘உண்ட சாத்தன் ’ , ‘ஒரு சொல்’ !  

இதைப்போன்றே ,
உண்டு சாத்தன் + வந்தான் =  உண்டு சாத்தன் வந்தான்   .
இதில் , ‘உண்டு’ என்பது , சாத்தனுக்கு அடை அல்ல !  ‘உண்டு சாத்தன் ’ , ‘ஒரு சொல்’ !  

இளம்பூரணரின் இந் நுட்பங்கள் புணர்ச்சி இலக்கணத்திற்குத்தான் பொருந்தும்  என்பதை அறிதல் வேண்டும் !

‘கருங் குதிரை’ - புணர்ச்சியில் ஈடுபடாது , இச் சொல் தனியாக நிற்குமானால் , ‘கரு’ என்பது குதிரைக்கு அடை (Adjective) தான் ! இதில் ஐயமில்லை !

ஆனால் , ‘கருங்குதிரை வந்தது’ என்ற புணர்ச்சியைப் பேசும்போதுதான் , ‘அடையடுத்த சொல் இப் புணர்ச்சியில் இல்லை ; ‘கருங்குதிரை’ ஒருசொல்தான் என்று கூறவந்தார் இளம்பூரணர் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (162)

Post by Dr.S.Soundarapandian Sun Nov 10, 2013 3:10 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (162)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மரூஉக்களைப் பற்றி நாம் குற்றியலுகரப் புணரியலில் பார்த்தது வசதியாகப் போயிற்று !

 புணரியலிலும் மரூஉ பற்றி ஒரு நூற்பா உள்ளது !

‘வெதிர்க்கால்’ என்பது ‘வெதிரத்துக் கால்’ என்று ‘அத்து’ச் சாரியை பெற்றுப் புணர்ந்தாலும் அதனையும் ‘மரூஉ’ என்றுதான் தொல்காப்பியர் பேசுகிறார் ! (குற்றியலு . 77 இளம். உரை) .

இதனை  ‘இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ ’எனலாம் !

இலக்கணக் குளறுபடி பெரிதாக இதில் இல்லை ! ஒரு சாரியை சேர்ந்துள்ளது ; அவ்வளவுதான் !

அதே நேரத்தில் , ‘அருமருந்தன்னான்’ என்பது , ‘அருமந்தான்’ என மருவும்போது , இதில் இலக்கணம் இல்லை ! சில எழுத்துகள் ஏன் காணாமற் போயின ? விடை இல்லை ! எனவே , இம் மரூஉ , ‘இலக்கண மில்லா மரூஉ’ எனப்படும் !
இப்படிப்பட்ட மரூஉக்களைத்தான் தொல்காப்பியர் ‘மருவின் தொகுதி’ என்கிறார் !

இந்த மருவின் தொகுதி தவிர , வேறுவகையான ஒரு மரூஉவும் உண்டு !

‘நாவின் நுனி’யை  , ‘நா நுனி’ என்றுதானே கூறவேண்டும் ?ஆனால் , ‘நுனி நா’ என்றுதானே வழங்குகிறது ?

இதைத்தான் , ‘மயங்கியல் மொழி’ என்றார் தொல்காப்பியர் !

‘நா நுனி’ என்பது , மாறிப் புணர்ந்து , ‘நுனி நா’ என்றாலும் , இதனையும் சொற்புணர்ச்சி என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் ! இதைத்தான் கூறவருகிறார் தொல்காப்பியர் ! :-

“மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
உரியவை உளவே புணர்நிலைச் சுட்டே”   (புணரி . 9)

நுனிநாக்கில் இருந்த ‘நுனி நா’ என்ற எடுத்துக்காட்டை மேலே பார்த்தோம் ! இதைப் போன்றே ,
‘கண்மீ’  (= கண்ணின் மேற்பகுதி)என்பது , ‘மீகண்’ என வந்துள்ளது !

’இல்முன்’ (= இல்லின் முன்பாக) என்பது , ‘முன்றில்’ என வந்துள்ளது !

‘நகர்ப்புறம்’ ( = நகரத்தின் புறப்பகுதி) என்பது , ‘புறநகர்’ என வந்துள்ளது !

மேலே ‘அருமருந்தன்னான்’ என்பதே ‘அருமந்தான்’ என வந்துள்ளது என்றோமல்லவா?

இந்த ‘அருமந்தான்’ என்பதே , ‘அருமாந்த’ என்று வழக்கில் வந்தது!

‘அருமாந்த பிள்ளை! இப்படிக் கஷ்டப்படுதே !’ – புலம்புவார்கள் பெண்கள் ! ‘அருமருந்தன்ன பிள்ளை’ என்பதே , முடிவில் ‘அருமாந்த பிள்ளை’ என மருவி உள்ளது !

மரூஉக்களைத் தமிழ் இலக்கணம் தன் பிடியில் எடுத்துக்கொண்டதைப் பார்த்தீர்களா? இதுதான் இலக்கணத்தின் பணி !

                                     ***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty தொடத் தொடத் தொல்காப்பியம் (163)

Post by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2013 9:05 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (163)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

புணர்ச்சியில் பெரும்பாலும் ஏற்படுவது , எழுத்து மிகுதல் , சாரியை தோன்றல் என்ற இரண்டே !

விள + கோடு = விளங்கோடு  ( ங் , மிகுந்தது  ) (வேற்றுமைப் புணர்ச்சி)

மக + கை = மகவின் கை (இன் , சாரியை வந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

விள + குறிது  =  விளக்குறிது  ( க் , தோன்றியது) (அல்வழிப் புணர்ச்சி)

பனை + குறை = பனையின் குறை  (இன் , சாரியை வந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

இவை இளம்பூரணர் காட்டுகளை அடிப்படையாகக் கொண்டவை !

மேலே , எழுத்து மிகுதலையும் , சாரியையும் தனித் தனியாகப் பார்த்தோம் !

ஒரே புணர்ச்சியிலேயே எழுத்தும் சாரியையும் மிகுமா ?

‘மிகுமே !’ – என்பவர் இளம்பூரணர் ! அவர் தந்த சான்றுகளை வருமாறு
பிரித்துக் காட்டலாம் ! :-

அவ் + கோடு = அவற்றுக் கோடு ( வற்றுச் சாரியை வந்தது ; க் , மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)  
( புள்ளி.83இல் , ‘சுட்டு முதலாகிய ..’ என்ற நூற்பாவில் , ‘அவற்றுக் கோடு’ பார்த்தோமே , அதை நினைவுபடுத்திக் கொள்க !)

கலம் + குறை = கலத்துக் குறை ( அத்துச் சாரியை வந்தது; க் , மிகுந்தது)(வேற்றுமைப் புணர்ச்சி)  

- இக் கருத்துகளைத் தாங்கிய தொல்காப்பிய நூற்பா வேண்டுமா? :-

“வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்
வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையும்
எழுத்தே சாரியை யாயிரு பண்பின்
ஒழுக்கல் வலிய புணருங் காலை”  (புணரி . 10)

எவ்வளவு அழகு பாருங்கள் !

புணர்ச்சி என்றால் வேறு ஒன்றும் இல்லை  அப்பா ! ஒன்று , எழுத்து கூடும் ! அல்லது சாரியை கூடும் ! அவ்வளவுதான் ! – எனத் தொல்காப்பியர் தன்
மாணவர்களுக்குக் கூறிய பாங்கைப் பாருங்கள் !

மேலே இளம்பூரணர் குறிப்பிட்ட ‘விள’ மரத்தைக் காண ஆசையா ?
                   
                    [You must be registered and logged in to see this image.]

                        Courtesy – GoGreenGuyz. com

இது நம்மூர் விளா மரம்தான் ! ‘Wood apple’  என்பது இதுவே ! இதன் தாவரவியல்
பெயர் - Limonia acidissima  .

விளாங்காய் விதை மேல் இருக்கும் பசையானது நகை செய்பவர்களுக்குப் பசையாகப் பயன்பட்டுள்ளது ! விளாம்பழத்துச் சதையானது சோப்புப்போல் வீட்டுப் பொருள்களைத் தூய்மைப் படுத்த அந் நாளில் பயன்பட்டதாக அறிகிறோம் !

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 22 Empty Re: தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 84 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 53 ... 84  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum